திங்கள், 4 பிப்ரவரி, 2019

அமாவசை சாஸ்த்திரம் பற்றி சுவாரஸ்யமான தமிழன் கதை

அமாவசை சாஸ்த்திரம் பற்றி சுவாரஸ்யமான தமிழன் கதை

திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் தனித்துள்ள அரசமரத்தை சிவ பஞ்சாட்சரம் ( நமசிவய ) சொல்லியபடி 108 முறைகள் வலம் வரவேண்டும்
என்பது குருசிஷ்ய அனுபவ சாஸ்திரம் சொல்லும் ரகசிய வழிபாட்டு முறை.
ஏன் ?
என்ன காரணம் ?
ஒரு நாட்டின் மன்னனுக்கு திடீர் என்று ஒரு இனம் காண முடியாத நோய் தாக்கியது.
எல்லா வைத்தியர்களும் வந்து பார்த்தார்கள்., முடிவில் அரண்மனை வைத்தியர் வந்தார்.
ஆனால் நோய் என்ன என்பதையே கண்டுபிடிக்க முடியவில்லை.
நோயை அறியாமல் மருந்து கொடுக்க முடியவில்லை.
மன்னர் நாளுக்கு நாள் உடல் தளர்ந்து மெலிந்து உருக்குலைந்து போனார்.
அப்போது மந்திரி.,
மன்னா., ராஜகுருவை அழையுங்களேன் அவரிடம் கேட்போம் என்றார்.
மன்னரும் சரி என்று ராஜ குருவை வரவழைக்க ஏற்பாடுகள் செய்தார்.
ராஜகுரு வந்தார். மன்னனைப் பார்த்தார்.
சில நொடிகள் கண்களை மூடி த்யானித்தார்.
மந்திரியை அழைத்தார்.
அவரிடம் ராஜகுரு.,
மந்திரி., இவ்வூரில் உள்ள சலவை தொழிலாளியின் மனைவியை அழைத்து வாருங்கள் என்றார்.
உடனே மந்திரி பணியாட்களை விட்டு அழைத்து வரச் செய்தார்.
மிகவும் பயந்து போய் வந்தாள் அந்த பெண்மணி.
அய்யா., நாங்கள் ஏதும் தவறு செய்ய வில்லையே என்றாள் அவள்.
அம்மா பயப்படாதே., உள்ளே வா என்றழைத்தார் ராஜகுரு.
தைரியம் சொல்லி அவளை அழைத்துக்கொண்டு ராஜா இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்ற ராஜகுரு., மகாராஜாவைக் காண்பித்து., அம்மா நீங்கள் ராஜாவைப்பார்த்து மகாராஜா கவலைப்படாதீர்கள் நீங்கள் விரைவில் குணமாகி விடுவீர்கள் என்று சொல்லுங்கள் என்று கூறினார்.
பயந்து கொண்டே ராஜகுரு சொன்ன அந்த வார்த்தைகளை அப்படியே கூறினாள் அந்த பெண்மணி.
சரியம்மா நீ போகலாம் என்று சொல்லி அந்த பெண்ணை நிறைய சன்மானங்களோடு அனுப்பி வைத்தார் ராஜகுரு.
அடுத்து வந்த சில நாட்களிலேயே மகாராஜா நலமாகி உடல் தேறினார். பழைய நிலையை அடைந்தார்.
எப்படி இது..?
பலவிதமான மருந்துகளால் தீராத எனது நோய் எப்படி குணமானது சொல்லுங்கள் என ராஜகுருவை வேண்டி கேட்டுக் கொண்டார் மகாராஜா.
மகாராஜா.,
திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வருபவர்களின் வாக்குவன்மை மிகவும் அதிகமாக மேம்படும்., ஆன்ம பலமும் பெருகும். இது அவர்களுக்கு இயற்கைதரும் மிக உயர்ந்த சன்மானம்.
ஆனால் நான் ஞானதிருஷ்டியில் பார்த்ததில் உங்கள் நாட்டில் இந்த பெண்மணி ஒருத்திதான் அவ்வாறு செய்திருந்தாள்.
ஆனால் அதன் பலனை அவள் அறிந்திருக்கவில்லை. அவள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக வலம் வந்திருந்தாள்.
அதனால்தான் அவளை வைத்தே உங்களுக்கு வைத்தியம் செய்தேன்.
மன்னா.,
முதன் முதலில் நாம் ஒரு சலவைத்தொழிலாளியை வைத்து இதை செய்ததால் பின் வரும் காலங்களில் யாரேனும் இதனை கடை பிடிப்பார்களேயானால்., அதாவது
அவர்கள் திங்கள் கிழமையில் வரும் அமாவாசையில் அரசமரத்தை பஞ்சாட்சரம் சொல்லியபடி 108 முறைகள் வலம் வந்தபின் ஆசீர்வாதம் வாங்கிக் கொள்ளவேண்டும்.
அவ்வாறு வாங்கிக்கொண்டால் அவர்களின் வாக்குவன்மையும் ஆன்ம பலமும் அதிகரிக்கும்.,
அதனால் பல உயிர்கள் காக்கப்படலாம்.
நாம் வளர்க்கும் உயிர் ஆபத்தில் இருக்கும் ஆடுகள் மாடுகள் முன்பாக நின்று “பயம் வேண்டாம் நீ பிழைத்துக்கொள்வாய்” என்று சொல்லி அந்த உயிரையும் காக்கலாம்.
ஆனால் இதனை பொதுநலத்திற்காக மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
என்று சொல்லி முடித்தார்.
இப்போது நீங்கள் தயாரா..?
வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திங்கள்கிழமை அமாவாசை வருகின்றது
இந்த நேரத்திற்குள் நீங்கள் வலம் வரலாம்.
கவனிக்க வேண்டியவை.
*வேப்பமரம் இல்லாத தனித்த அரசமரம் (விநாயகர் இருக்கலாம்) இருக்குமிடத்தை கண்டுபிடியுங்கள்.,* வலம் வருவதற்கு தயாராகுங்கள்.
நீங்கள் வாக்குவன்மையும்., ஆன்மபலம் பெறவும்., உங்களால் பல நூறு உயிர்கள் காக்கப்படவும் வாழ்த்துகள்.
இந்த வழிபாடு சித்தர்களால் சொல்லப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக