சனி, 29 ஜூன், 2019

அத்தி வரதன் திருவிழா - மக்கள் கையேடு


அத்தி வரதன் திருவிழா - மக்கள் கையேடு

40 வருடங்களுக்கு ஒரு முறை காஞ்சிபுரம் அருள்மிகு தேவராஜ சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் ‘அத்திவரதர் வைபவம்' வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 17-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. அனந்த சரஸ் தீர்த்தத்தில் இருக்கும் அத்திவரதர் வெளியே எடுக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக எழுந்தருளச் செய்யப்படுவார். முதல் 24 நாள்கள் சயன நிலையிலும், அடுத்த 24 நாள்கள் நின்ற கோலத்திலும் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். (இது உறுதி இல்லை. மாறுதல் இருக்கலாம்)

இந்த வைபவத்தில் கலந்துகொண்டு வரதரை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கு சில வழிகாட்டுதல்கள்!

1. குளத்தில் இருந்து அத்திவரதரை வெளியில் எடுப்பதை யாரும் பார்க்க முடியாது. அத்திவரதர் வெளிவரும்போது பக்தர்கள், பத்திரிகையாளர்கள், வி.ஐ.பி-க்கள் என யாருக்கும் தரிசிக்க அனுமதி இல்லை. ஆகவே, முதல்நாள் அன்றே அத்திவரதரை பார்க்க வேண்டும் என்று திட்டமிட வேண்டாம். வெளியூர் பக்தர்கள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, விழா தொடங்கிய சில நாள்கள் கழித்து அத்திவரதரை தரிசிக்க திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

2.  48 நாள்களிலும் அத்திவரதர் தரிசனம் மட்டுமே நடைபெறும். வேறு எந்த சிறப்பு பூஜையும் நடைபெறாது.

3. காலை 6  முதல் 2 மணி வரை, பிற்பகல் 3 முதல் 8 மணி வரை எனத் தரிசனத்துக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

4.  அத்திவரதர் தரிசனத்தைக் காண வரும் பக்தர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். தேசிகர் சந்நிதி வழியாக வசந்த மண்டபத்தை அடைந்ததும் அத்திவரதரை தரிசனம் செய்யலாம். தரிசனம் முடிந்த பின்பு மேற்கு ராஜகோபுரம் வழியாக வெளியேற வேண்டும்.

5.  பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என இரண்டு வரிசையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். பொதுதரிசனத்துக்கு எவ்விதக் கட்டணமும் இல்லை. சிறப்பு தரிசனத்துக்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். வி.ஐ.பி-க்கள் மேற்கு கோபுரம் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். வி.ஐ.பி தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

6. ஸ்ரீதேவராஜர் மற்றும் தாயார் சந்நிதிகளுக்குச் செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனியாக ஒரு வரிசை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்தவழியாக மூலவர் மற்றும் தாயாரைத் தடையின்றி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

7. வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து நிறுத்தம், மருத்துவ முகாம், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ளன.

8. காஞ்சிபுரம் நகரத்தில் தற்காலிகப் பேருந்து நிலையங்களை ஓரிக்கை, ஒலிமுகமதுப்பேட்டை, பச்சையப்பன் கல்லூரி வளாகம் ஆகிய மூன்று இடங்களில் அமைத்திருக்கிறார்கள். மேலும், தனியார் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காகப் பச்சையப்பன் கல்லூரி (நசரத்பேட்டை), திருவீதிபள்ளம், லாலா தோட்டம் (நகரம்), ஒலிமுகமதுப்பேட்டை ஆகிய பகுதிகளில் வாகன நிறுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

9. சென்னை, திருவள்ளூர், திருத்தணி, பூந்தமல்லி, திருப்பதி, பெங்களூரு போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஒலிமுகமதுப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். உத்தரமேரூர், வந்தவாசி, திண்டிவனம், திருச்சி, புதுச்சேரி மற்றும் செய்யாறு, திருவண்ணாமலை போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் ஓரிக்கை பேருந்து நிலையத்திலிருந்தும் தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம், மாமல்லபுரம் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் பேருந்துகள் நத்தப்பேட்டை, வையாவூர் வழியாக மாற்றுவழியில் மத்திய பேருந்து நிலையத்துக்கு வந்து புறப்படும்.

10. தற்காலிகப் பேருந்து நிலையத்திலிருந்து கோயில் பகுதிக்குச் செல்லும் போக்குவரத்துக்கென நிமிடத்துக்கு 20 அரசுப் பேருந்துகள் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

11. காஞ்சிபுரம் நகராட்சிப் பகுதியில் 70 கழிப்பிடங்கள் பயன்பாட்டில் உள்ளன. மேலும், கோயிலைச் சுற்றியுள்ள 4 மாட வீதிகளிலும் இருபாலருக்கும் தலா 11 வீதம் 22  தற்காலிகக் கழிப்பிடம் கூடுதலாக அமைக்கத் திட்டமிட்டுள்ளார்கள். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் 36 கழிப்பிடங்களும் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் 92 கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தற்காலிகப் பேருந்து  மற்றும் வாகனம் நிறுத்தும் இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் உட்புறத்தில் 2 சுத்திகரிப்பு எந்திரங்களும் வெளிப்புறத்தில் 4 சுத்திகரிப்பு எந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில்  6 புதிய சுத்திகரிப்பு எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 5,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கக் குடிநீர்த் தொட்டி கோயிலுக்குள் ஒன்றும், கோயிலுக்கு வெளிப்புறத்தில் 10 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் 85 இடங்களில் 2,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன.

12. குற்றம் நடைபெறாமல் தடுக்கும் வகையில் 100 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பு அலுவலகம் மூலமாகக் கண்காணிப்புப் பணிகள் நடைபெறும். சுமார் 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

13. சுகாதாரத் துறையின் மூலமாகக் கோயிலுக்கு உள்பகுதியில் 5 மருத்துவக் குழுக்களும் கோயிலுக்கு வெளியில் 4 மருத்துவக் குழுக்களும் அமைக்கப்பட உள்ளன. முக்கிய பகுதிகளில் 108 ஆம்புலன்ஸுடன் கூடிய தற்காலிக மருத்துவ அறைகள் அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

14. அத்திவரதர் வைபவம் நடைபெறும் நாள்களில் உரிய அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அன்னதானம் வழங்க முடியும். உணவின் மாதிரி எடுத்துப் பரிசோதனை செய்யப்படும். அதுபோல் காஞ்சிபுரத்தில் உள்ள சுமார் 300 உணவகங்களிலும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளார்கள். அந்த உணவகங்களில் இருந்து வரும் உணவுகள் தினமும் பரிசோதனை செய்யப்படும்.

15. பெரும்பாலான விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. ஆகவே, வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களை திருமண மண்டபங்களில் தங்க வைப்பதற்கு தொண்டு அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட உள்ளது.



அத்திவரதர்...

*வந்தாரய்யா...வந்தாரு...*
அத்திவரதர் வந்தாரு....

🐘கவலையெல்லாம் தீர்க்கவே வந்தாரு...
🦜மனசெல்லாம் குளிரவே வந்தாரு...
🦚ஊரெல்லாம் செழிக்கவே வந்தாரு...
🐄மழையெல்லாம் பெய்யவே வந்தாரு...
🐎பிரச்சனைகளெல்லாம் அழியவே வந்தாரு...
🦁தர்மத்தை காக்கவே வந்தாரு...
🐅அதர்மத்தை ஒழிக்கவே வந்தாரு...

#வந்தாரய்யா வந்தாரு...
*அத்திவரதர் #வந்தாரு...*

🧡நம்மையல்லாம் பார்க்கவே வந்தாரு...
❤நன்மையெல்லாம் தரவே வந்தாரு...
💛இந்துக்களை ஒண்ணு சேர்க்கவே வந்தாரு...
💙40வருஷம் விரதம் முடிச்சே வந்தாரு...
💚நாடெல்லாம் விளங்கவே வந்தாரு...
🖤நாட்டாமை பண்ணவே வந்தாரு...
💜வம்சத்தையே காப்பவரு வந்தாரு...

வந்தாரய்யா...வந்தாரு...
அத்திவரதர் வந்தாரு...

🌷அனந்தசரஸிலிருந்து வந்தாரு...
💐ஊரெல்லாம் தூங்கும்போது வந்தாரு...
🌹உனக்காகவும் எனக்காவும் வந்தாரு...
🌸ஆனந்தமாயிரு என்று சொல்லவே வந்தாரு...
🌼48நாள் தரிசனம் தர வந்தாரு..
🌻ராமானுஜரை #காத்தவர் #வந்தாரு...
🌾திருக்கச்சிநம்பியின் #செல்வமே #வந்தாரு...
💞கோபாலவல்லியின் புன்னகைமன்னன் வந்தாரு....

ஐயா...
வந்தாரு...வந்தாரு...வந்தாரு...
ஆஹா...
வந்தாரு...வந்தாரு...வந்தாரு...
அற்புதமா...வந்தாரு..
அழகா...வந்தாரு...


வாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக நம்பப்படும் ‌காஞ்சிபுரம் அத்திவரதர்


வாழ்நாளில் ஓரிரு முறை மட்டுமே தரிசிக்க வாய்ப்பு கிடைக்கக்கூடியதாக நம்பப்படும் ‌காஞ்சிபுரம் அத்திவரதரை பக்தர்கள் தரிசிக்க பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

உலகப் பிரசித்திப்பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலின் அனந்தசரஸ் குளத்திலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்திவரதர் சிலை வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இந்த அத்திவரதர் திருவிழாவுக்காக தீவிர ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

அத்திவரதரை ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது எந்தச் சிறப்புப் பூஜைகளும் செய்யப்பட மாட்டாது. அதிகாலை 5 மணி முதல் மாலை‌ 5 மணி வரை மட்டுமே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

காஞ்சிபுரம் தாலுகாவைச் சேர்ந்த பக்தர்கள் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க மாவட்ட நிர்வா‌கம் ஏற்பாடு செய்துள்ளது. இதுதவிர ஜூலை 1,2,3 மற்றும் 12லிருந்து 24ஆம் தேதி வரையும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி முதல் 12ஆம் தேதி மற்றும் 16,17ஆம்‌ தேதிகளில் மாலை நேரத்திலும் உள்ளூர் மக்கள் அத்திவரதரை தரிசிக்கலாம்.

மேலும் சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய காலை 11 மணியிலிருந்து 12 மணி வரையும், மாலை 5 மணிமுதல் 6 வரையும் அனுமதிக்கப்படுவர். சகஸ்ர நாமம் தரிசனம் செய்ய ஒரு நபருக்கு 500 ரூபாய் கட்டணம் ஆன்லைன் மூலம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது தரிசனம், சிறப்பு தரிசனம் என 2 வரிசைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். சிறப்பு தரிசன கட்டணமாக 50 ரூபாய் வசூலிக்கப்படும். அவர்கள் கிழக்கு ராஜகோபுரம் வழியாகச் சென்று அத்திவரதரை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர விஐபி தரிசனத்திற்கு 500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முக்கிய நபர்கள் மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர். மூலவர் மற்றும் தாயார் சன்னதிகளுக்கு செல்வதற்காக மேற்கு ராஜகோபுரத்திலிருந்து தனி வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு


காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் அத்தி வரதர் வரலாறு

திருக்கச்சி அல்லது காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் என்பது பெருமாள் கோயில் என்று வைணவர்களால் போற்றப்படுகிறது. வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்த தலம். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்
பெயர்
புராண பெயர்(கள்):
பெருமாள் கோயில், திருக்கச்சி. ஹஸ்திகிரி, வேழமலை. அத்திகிரி
பெயர்:
காஞ்சி வரதராஜப் பெருமாள் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:
காஞ்சிபுரம்
மாவட்டம்:
காஞ்சிபுரம்
மாநிலம்:
தமிழ்நாடு
நாடு:
இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:
தேவராஜப் பெருமாள்
உற்சவர்:
பேரருளாளன் (தேவராஜன், தேவ பெருமாள்)
தாயார்:
பெருந்தேவி தாயார்
உற்சவர் தாயார்:
பெருந்தேவி தயார்
தீர்த்தம்:
வேகவதி நதி, அனந்த சரஸ், சேஷ, வராக, பத்மா, அக்னி, குசேல, பிரம்ம தீர்த்தம்.
மங்களாசாசனம்
பாடல் வகை:
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்:
பூதத்தாழ்வார் (2), பேயாழ்வார் (1), திருமங்கை ஆழ்வார்(4).
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்:
புண்யகோடி விமானம்
கல்வெட்டுகள்:
உண்டு

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலின் தோற்றம்
வரலாறும் சிற்பக்கலையும்
தொகு
இக்கோயில் எவரால் முதலில் நிறுவப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் வேழமலையில் குகைவரைக் கோயில் கிழக்கு மேற்கே விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்தினர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் அமைக்கப்பெற்றன. சோழர்களின் வீழ்ச்சிக்குபின், விஜயநகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்களை நிறுவினர்.[சான்று தேவை]

நூற்றக்கால் மண்டபத்தில் தொங்கும் கல் சங்கிலி
கல்யாண மண்டபம் எட்டு வரிசைகளில், வரிசைக்கு பன்னிரண்டு தூண்களாக 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லாளான தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.[சான்று தேவை] தூண்களில் யாளி, போர்குதிரை, குதிரை மீது வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்குள் உள்ள சிறிய நன்கு தூண் கொண்ட மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என அழைக்கப்படுகிறது. இதன் நான்கு மூலைகளில் தொங்கும் கற்சங்கிலிகள் சிற்பக்கலையின் விந்தையாகும். கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது.[சான்று தேவை] தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்துள்ளது.

கோயில் அமைப்பும் உட்சன்னதிகளும்

மூலவராகிய தேவராஜப் பெருமாள், வேழ மலை (அத்திகிரி) மீது நின்ற திருக்கோலத்தில் மேற்கே திருமுகமண்டலமுடன் நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மூலவர் மலை மீது அமைந்துள்ளார் என்பதற்கு சான்றாக கர்பகிரகத்தின் நேர் கீழே குன்று குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். பெருமாளை காண்பதற்கு இருப்பதிநான்கு படிகளை ஏறிச்செல்லும் போது காணப்படும் தங்க பல்லி மற்றும் வெள்ளி பல்லி, இக்கோவிலில் பிரசிதம். மூலவரை நோக்கிய படி தென்மேற்கே பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதியும், திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

அத்தி வரதர் எனப்படும் மரத்தல் செய்யப்பட்ட பெருமாள், திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார். முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் நீண்ட நெடிய உருவம்.40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளியெடுத்து, கோயிலில் பள்ளிகொள்ள வைத்து ஒருமாத காலத்திற்கு உற்சவங்கள் பிரமாதமாக நடக்கும். அத்திவரதரை தம் வாழ்நாளில் தரிசிப்பது மிகப் பெரும் பேறு ஆகையால், எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருமாளைத் தரிசிப்பர்.

திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது.தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

பாடல்கள்

மங்களாசாசனம், திருமங்கையாழ்வார்

என்னெஞ்சம் மேயான் என் சென்னியான், தானவனை-

வன்னெஞ்சம் கீண்ட மணிவண்ணன், முன்னம்சேய்-

ஊழியான் ஊழி பெயர்த்தான், உலகேத்தும்-

ஆழியான் அத்தியூரான்.

அத்தியூரான் புள்ளை ஊர்வான், அணிமணியின்-

துத்திசேர் நாகத்தின் மேல்துயில்வான், - மூத்தீ-

மறையாவான் மாகடல் நஞ்சுண்டான் தனக்கும்

இறையாவான் எங்கள் பிரான்.

திருவிழாக்கள்

வைகாசி மாதத்தில் உற்சவத் திருவிழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடைபெறும். இவ் உற்சவத் திருவிழாவில் கருடசேவையும், தேரும் மிகப்பிரபலம்.

போக்குவரத்து

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் காஞ்சிபுரம் - செங்கற்பட்டு சாலையில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு நகர பேருந்துகளும் ஆட்டோக்களும் இயக்கப்படுகின்றன. காஞ்சிபுரத்திற்கு சென்னையிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும் ரயில்களும் உள்ளன.

ஜூலை 01 (1.7.2019 ) முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்


ஜூலை 01 (1.7.2019 ) முதல் 48 நாட்கள் அத்தி வரதர் தரிசனம்.

ஒன்றல்ல, இரண்டல்ல.. 40 ஆண்டுகளாக கோவில் குளத்து தண்ணீருக்குள் மூழ்கி தவம் இருக்கும் அத்திவரதர், அனைவருக்கும் வரம் அளிப்பதற்காக அந்தக் குளத்தில் இருந்து அத்தி பூத்தாற்போல வெளியே வர இருக்கிறார்.

ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரே ஒரு முறை அல்லது அதிகபட்சமாக இரண்டுமுறை மட்டுமே காணக்கூடிய இந்த அற்புதமான, பரவசமூட்டும் ஆன்மிக நிகழ்வு காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், வருகிற 1-ந் தேதி முதல் 48 நாட்கள் பக்திப் பெருக்குடன் கோலாகலமாக அரங்கேற இருக்கிறது.


பல்வேறு சிறப்புகளைத் தாங்கி இருக்கும் காஞ்சிபுரத்தின் ஒரு பகுதியான விஷ்ணு காஞ்சியில், பக்தர்களுக்கு இடையறாது வரங்களை அள்ளித் தரும் வரதராஜப் பெருமாள் கோவில் இருக்கிறது.

‘கோவில்’ என்றாலே அது ஸ்ரீரங்கம் கோவிலை மட்டுமே குறிக்கும் என்பார்கள்.

‘மலை’ என்றாலே, திருப்பதி வெங்கடாஜலபதி குடிகொண்டுள்ள திருமலையை அடையாளப் படுத்தும் என்பார்கள். எனவேதான் அந்த இடம் ‘திரு’ என்ற அடைமொழியையும் சேர்த்து ‘திருமலை’ என்று அழைக்கப்படுகிறது.

இதைப்போலவே, உலகம் முழுவதும் எத்தனையோ பெருமாள் கோவில்கள் இருந்தாலும், ‘பெருமாள் கோவில்’ என்றால், அது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலை மட்டுமே குறிக்கும் என்ற அளவுக்கு இந்தக் கோவில் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.


வரதராஜப் பெருமாள் கோவிலின் கிழக்கு கோபுரம் 125 அடி உயரத்தில் வானுயர்ந்து நிற்கிறது. மேற்கு ராஜகோபுரத்தின் உயரம் 96 அடி. 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவிலில் 19 விமானங்கள் உள்ளன.

உலகம் முழுவதும் இருந்து வரும் பக்தர்களின் வேண்டுகோள்களை ஏற்று அவர்களுக்குத் தாராளமாக வரங்களைக் கொடுக்கும் வரதராஜபெருமாள் கோவில், 1018-1053-ம் ஆண்டுகளில் சோழ மன்னர் களால் கட்டப்பட்டது. பிற்காலத்தில் தெலுங்கு சோழர்கள், பாண்டிய மன்னர்கள், ஹொய்சாள மன்னர்கள், சேர மன்னர்கள் உள்பட பல மன்னர்களால் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது பிரமாண்டமாகக் காட்சி அளிக்கிறது.

கோவிலில் உள்ள 350 கல்வெட்டுகள் மூலம் இங்கு நடைபெற்ற சீரமைப்பு பணிகள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்ற போது, ராபர்ட் கிளைவ், கர்னல் லயோனஸ் பிளேசி ஆகியோரும், அதன் பிறகு, டெல்லி ஆலம் கீர் பாஷாவும் இந்தக் கோவிலால் அதிகம் கவரப்பட்டு, ஏராளமான தங்க நகைகளை காணிக்கையாகக் கொடுத்து இருக்கிறார்கள்.

இவற்றில் ராபர்ட் கிளைவ் கொடுத்த தங்க ஆரம், ‘கிளைவ் மகர்ஹண்டி’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை நடைபெறும் போது இந்த ஆரம், சுவாமிக்கு அணிவிக்கப்படுகிறது.


இந்தக் கோவில் உருவானது தொடர்பாகவும், கோவில் குளத்தில் 40 ஆண்டுகளாக அத்திவரதர் மூழ்கி இருப்பது பற்றியும் கூறப்படும் புராணச் செய்திகளில் பல ருசிகரமான தகவல்கள் அடங்கி இருக்கின்றன.

தேவலோகச் சிற்பியான விஸ்வகர்மாவை அழைத்த பிரம்மா, தான் மிகப் பெரிய யாகம் ஒன்றை நடத்த இருப்பதாகவும், அதற்குத் தகுந்த அழகிய நகரை அமைத்துத் தருமாறும் கேட்டுக் கொண்டார். அவர் கேட்டுக் கொண்டபடி உருவாக்கப்பட்டதுதான், இப்போது வரதராஜப் பெருமாள் குடிகொண்டுள்ள இடம்.

உலகைப் படைத்த பிரம்மா, இந்த உலகில் மகாவிஷ்ணு நிரந்தரமாக தங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினார். இந்த கோரிக்கையை முன்வைத்தே பிரம்மா, அஸ்வமேத யாகம் நடத்தினார்.

அந்த சமயத்தில் பிரம்மாவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்த சரஸ்வதி, “இந்த யாகத்தில் பங்குகொள்ள முடியாது” என்று கூறிவிட்டார்.

இதனால், பிரம்மா, தனது மற்ற துணைவியர்களான காயத்ரி, சாவித்ரி ஆகியோரை அழைத்து வந்து யாகத்தை மேற்கொண்டார். இதை அறிந்த சரஸ்வதி, கோபம் கொண்டு ‘வேகவதி’ ஆறாக பெருக்கெடுத்து வந்து யாகத்தை அழிக்க முயன்றார்.

அப்போது, யாகத்தை காப்பாற்றுவதற்காக மகாவிஷ்ணு, அந்த ஆற்றின் குறுக்கே படுத்து அதனை தடுத்து நிறுத்தி விட்டார். இதனால் பிரம்மாவின் யாகம் எந்த பாதிப்பும் இல்லாமல் நிறைவேறியது.



யாகத்தின் இறுதியில், அந்த வேள்வித் தீயில் இருந்து மகாவிஷ்ணு, லட்சுமி தேவியுடன் வரதராஜ பெருமாளாகத் தோன்றினார். பிரம்மாவின் விருப்பத்தை ஏற்று இங்கேயே நிரந்தரமாகத் தங்கி பக்தர்களுக்கு வேண்டும் வரத்தை வழங்குவதாகவும் கூறினார்.

அந்த யாகத்தீயில் இருந்து, அத்தி மரத்தால் ஆன உருவத்துடன் தோன்றியவர்தான், இப்போது அனைத்து பக்தர்களாலும் போற்றி வணங்கப்படும் அத்தி வரதர் ஆவார்.

அந்த அத்தி வரதர், 40 ஆண்டுகளாக குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு, 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியே எடுத்து பூஜிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

யாகத்தீயில் இருந்து வெளியே வந்தபோது அத்தி வரதர், தீயில் கருகி சற்று பின்னப்பட்டுவிட்டதாகவும், சேதம் அடைந்த சிலையை மூலவர் சன்னிதியில் வைக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

யாக வேள்வியில் இருந்து வந்தபோது தன்னை அதிக வெப்பம் தாக்கியதால், தன்னை குளிர்விப்பதற்காக ஒரு குளத்தில் 40 ஆண்டுகள் மூழ்க வைத்து, அதன் பிறகு 48 நாட்கள் பூஜித்து மீண்டும் 40 ஆண்டுகள் குளத்தில் வைத்துவிட வேண்டும் என்று அத்தி வரதர் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு செய்தி கூறுகிறது.

அன்னியர்கள் படையெடுப்பின்போது, அத்தி வரதரை காப்பாற்ற, அந்த சிலையை கோவில் குளத்தில் பத்திரமாக மூழ்க வைத்து இருந்ததாகவும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டதாகவும், அதே முறை இப்போதும் தொடர்ந்து கடைப்பிடிக்கப் படுகிறது என்றும் சிலர் சொல்கிறார்கள்.

1688-ம் ஆண்டு அவுரங்கசீப் ஆட்சி காலத்தில், அத்தி வரதர் சிலையை பாதுகாக்க காஞ்சிபுரத்தில் இருந்து அதனை எடுத்துச் சென்று, திருச்சி அருகே உடையார் பாளையத்தில் மறைத்து வைத்து இருந்து, 1710-ம் ஆண்டு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும், அத்தி வரதர் பல ஆண்டுகளாக வரதராஜப் பெருமாள் கோவிலின் மூலவர் சன்னிதியில் இல்லை என்பது மட்டும் உறுதி.

அத்தி வரதருக்குப் பதிலாக, காஞ்சிபுரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பழைய சீவரம் என்ற ஊரில் உள்ள மூலவரை எடுத்து வந்து வரத ராஜப்பெருமாள் கோவிலில் வைத்து இருக்கிறார்கள். இவரை ஆண்டுதோறும் தை மாதத்தில் பழைய சீவரம் ஊருக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பூஜைகள் செய்த பிறகு மீண்டும் காஞ்சிபுரத்திற்கு கொண்டுவந்து விடுகிறார்கள்.

யாகத்தீயில் உருவான அத்தி வரதர் சிலை 10 அடி உயரம் கொண்டது ஆகும். முழுக்க அத்தி மரத்தால் உருவான இந்த சிலை, பெரிய வெள்ளிப் பேழையில் வைத்து மூடப்பட்டு, வரதராஜப் பெருமாள் கோவிலின் குளத்தில் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஆலயத்தில் அனந்தசரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம் ஆகிய இரண்டு குளங்கள் இருக்கின்றன. மேற்கு ராஜ கோபுரத்திற்கு வடமேற்கில் உள்ள அனந்தசரஸ் திருக்குளத்தில், சிறிய விமானத்துடன் கூடிய நாலுகால் மண்டபம் உள்ளது. இதன் அருகே தான் அத்தி வரதர் வெள்ளிப்பேழையில் தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறார்.

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தக் குளத்தில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றிவிட்டு, அங்குள்ள வெள்ளிப் பேழையை வெளியே எடுப்பார்கள்.

அதற்குள் இருக்கும் அத்திவரதர், 48 நாட்களில் 30 நாட்கள் சயனக் கோலத்திலும் 18 நாட்கள் நின்ற கோலத்திலும் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்த அரிய நிகழ்வு மிகச் சரியாக 40 ஆண்டுகளுக்கு ஒரு முறையே நடை பெறும்.

கடந்த 1939-ம் ஆண்டு திருக்குளத்தில் இருந்து வெளியே வந்த அத்தி வரதர், அதன் பிறகு 1979-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி வெளியே எடுக்கப்பட்டார். இப்போது 40 ஆண்டுகளுக்குப் பிறகு அத்தி வரதரை திருக்குளத்தில் இருந்து எடுக்கும் பரவசமான நிகழ்வு ஜூலை 1-ந் தேதி நடைபெற இருக்கிறது.

இதற்காக அந்தக் குளத்தில் உள்ள நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. வெள்ளிப்பேழையில் இருந்து வெளிப்படும் அத்தி வரதர், தொடர்ந்து 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார். அப்போது அவரது அருளைப் பெற, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காஞ்சிபுரத்திற்கு படையெடுப்பார்கள்.

நமது வாழ்வின் அரிய நிகழ்ச்சியான இதில் நாமும் கலந்து கொண்டு அத்தி வரதரின் அளவற்ற அருளையும், அவரிடம் இருந்து வேண்டிய வரங்களையும் கேட்டுப்பெறுவோம்.
நன்றி மாலைமலர்

அத்திவரதர்


#அத்திவரதர்

காஞ்சிபுரம் : கோவில்கள் நகரமான காஞ்சியில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவில் ராஜகோபுரம், மேற்கு நோக்கி அமைந்துள்ளது.

மூலவரான வரதராஜப் பெருமாள், பெருந்தேவி தாயாருடன் அருள் பாலிக்கிறார். வேகவதி ஆறு, அனந்த புஷ்கரணி ஆகியவை தீர்த்தங்களாக உள்ளன. இந்த அனந்த புஷ்கரணியில் தான் அத்திவரதர் சயனித்தபடி அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில், அழகியசிங்கர், சக்கரத்தாழ்வார், வலம்புரி விநாயகர், தன்வந்திரி, திருவனந்தாழ்வார், கருமாணிக்க வரதர், மலையாள நாச்சியார் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு, நாராயணனைத் தாங்கி நின்றமையால், இத்தலம், 'அத்திகிரி' என, அழைக்கப்படுகிறது. தங்க பல்லி தரிசனம் இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.

அனந்த புஷ்கரணி அத்தி வரதர் :

அத்தி வரதப் பெருமாளை, வெள்ளித்தகடு பதித்த பெட்டியில், சயனக் கோலத்தில், அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.

இப்போது, கோவில் இருக்குமிடம், ஒரு காலத்தில் அத்தி மரங்கள் சூழ்ந்த மலையாக இருந்தது. அங்கு, பிரம்மன் யாகம் செய்தபோது, அதிலிருந்து அத்தி வரதர் தோன்றினார். அவரை, பிரம்மன் பூஜித்து வந்தார்.
காலப்போக்கில், அத்திகிரி வரதரை பூஜித்த அர்ச்சகர் ஒருவரது கனவில் வந்த அத்தி வரதர், யாக குண்டத்திலிருந்து வந்ததால், தன் உடல் எப்போதும் தகிப்பதாகவும், தன்னை நிரந்தரமாக புஷ்கரணியில் எழுந்தருளச் செய்யும்படியும் கூறியுள்ளார்.
புஷ்கரணியில் எழுந்தருளச் செய்தால், மூலவராக யாரை தரிசிப்பது என்று, அர்ச்சகர் வினவ, பழைய சீவரத்தில் உள்ள வரதரை பிரதிஷ்டை செய்து, பூஜித்துக் கொள்ளும்படியும், தன்னை, 40 ஆண்டிற்கு ஒருமுறை வெளிக் கொண்டு வந்து, ஒரு மண்டல காலம் பூஜிக்கும் படியும் கட்டளையிட்டுள்ளார்.
அதன்படியே, அத்தி வரதரை, தண்ணீருக்குள் எழுந்தருளச் செய்ததாகவும் கூறப்படுகிறது. பெருமாள் எழுந்தருளியுள்ள அனந்த புஷ்கரணி, எப்போதும் வற்றியதில்லை.மேலும், ஆண்டிற்கு ஒரு குறிப்பிட்ட தினத்தன்று, வரதராஜப் பெருமாள், காஞ்சியிலிருந்து, பழைய சீவரத்திற்கு பாரிவேட்டை செல்வது, இதன் அடிப்படையில்தான் என்றும் கூறப்படுகிறது.


வெள்ளையருக்கு பயந்து :

மேலும், வெள்ளையர்கள் ஆட்சியில், கோவில் சிலைகள் அனைத்தையும், அவர்கள் நாட்டிற்கு கடத்திச் சென்ற நிலையில், அத்தி வரதர் சிலையையும் நாடு கடத்தி விடுவார்களோ என்ற பயத்தில், அப்போது இதை ஆராதித்து வந்தவர்கள், பூமிக்கடியில் புதைத்திருந்தனர்.
பிற்காலத்தில், பெருமாள் இருப்பது சிலரால் கண்டுபிடிக்கப்பட்டு, அவரை அங்கேயே ஆராதித்து வந்தார்கள். அவருக்கு, அதே இடத்தில் மண்டபம் கட்டி, பூஜித்ததாகவும் கூறப்படுகிறது.அந்த மண்டபத்தைச் சுற்றிலும், பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியதால் அதையே ஒரு குளமாக மாற்றி, நிரந்தரமாக தண்ணீருக்குள்ளேயே அவரை வைத்து விட்டனர்.
நாற்பது ஆண்டிற்கு ஒருமுறை, அவரை வெளியே எடுத்து, ஒரு மண்டல காலத்திற்கு, அவரை பூஜித்ததாகவும், மீண்டும் அவரை தண்ணீருக்குள் வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது; அந்த வழக்கம் தொடர்கிறது.


வாழ்க்கையில் ஒருமுறை :

ஒவ்வொருவரும், அவரது ஆயுள் காலத்திற்குள் ஒருமுறை அல்லது இருமுறை தான் அத்தி வரதரை தரிசிக்க முடியும். கடந்த, 1854, 1892, 1937, 1979 ஆகிய ஆண்டுகளில், அத்தி வரதர் தரிசன உற்சவம் நடந்தது.
இந்த நுாற்றாண்டில், இந்தாண்டில் முதன் முறையாக, ஜூலை, 1ம் தேதி, அனந்த தீர்த்தத்தில் இருந்து வெளியே வருகிறார். அத்தி வரதரை, வசந்த மண்டபத்தில், 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு வைப்பர்.
முதலில், சயனக் கோலத்திலும், பின், நின்ற கோலத்திலும் தரிசனம் தந்தபின், மீண்டும் அனந்த தீர்த்தத்தில் பெருமாள் சயனித்தபடி, அருள்பாலிப்பார்.

#40_ஆண்டுகளுக்கு_பிறகு_அத்திகிரி #வரதர்_வெளியே_வந்தார்..!


#40_ஆண்டுகளுக்கு_பிறகு_அத்திகிரி #வரதர்_வெளியே_வந்தார்..!

40-ஆண்டுகளுக்கு பிறகு அத்திகிரி வரதர் நீரிலிருந்து வெளியே வந்தார்!
இன்று காலை 40 ஆண்டுகளுக்கு பிறகு
குளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அத்திவரதர் காண கண்கோடி வேண்டும்
இன்று அதிகாலை காஞ்சி அத்தி வரதர் நீரிலிருந்து வெளியே வந்தார்….
இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்..

#அத்திவரதன்வைபவம்

அத்திகிரி அருளாப் பெருமாள் வந்தார்;
ஆளைபரி தேரின்மேல் அழகர் வந்தார்;
கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்:
கருதவரம் தரும் தெய்வப் பெருமாள் வந்தார்;
முக்திமழைப் பொழியும்முகில் வண்ணர் வந்தார்;
மூலமென ஓல மிட வந்தார் வந்தார்;
உத்தர வேதிக்குள்ளே உதித்தார் வந்தார்;
உம்பர்தொழும் கழலுடையார் வந்தார் தாமே!

காஞ்சிபுரம் ஶ்ரீ தேவராஜஸ்வாமி திருக்கோவிலில் 40 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் உற்சவமான ஶ்ரீ அத்திவரதர் எழுந்தருளும் வசந்தமண்டபம்…

40 ஆண்டுகளாக அத்திவரதன் திருமேனியில் இருந்த பச்சையம் அனைவருக்கும் தரப்பட்டது.

வரதன் திருமேனியில் இருந்த காரணத்தால் துர்நாற்றம் எதும் இன்றி மிகுந்த வாசனையுடன் இருந்ததது.

அத்திவரதர்
ஐந்து தலை ஆதிசேஷன் படுக்கையில் இருந்து அத்தி வரதன் எழுந்தருளினார்.

16 நாக சிலைகள் அத்தி வரதருடன் இருந்தன.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் #அத்திவரதர் திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி பின்பு 3.10 மணியளவில் வசந்த மண்டபத்தில் சயன கோலத்தில் சேவை சாதித்தார்.

வேத மந்திரங்கள் முழங்க ‌‌திரு அத்தி வரதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்.

ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார் அத்திவரதனை கண்ட ஆனந்த களிப்பில் பக்தர்கள் உள்ளனர்.

ஸ்ரீ காஞ்சி அத்தி வரதர் 40 Years one’s world festival Today started
ஆதி அத்தி வரதர் மூலவர் அனந்தரஸ் குளத்தில் இருந்து இன்று 28.06.19 வெளியே எடுத்து வசந்த மண்டபத்தில் வைக்கபட்டுள்ளார். முழு ஆய்வுக்கு பின்னர் திருமேனி பொதுமக்கள் தரிசனத்திற்கு ஜூலை 1.07.19 முதல் 48 நாட்கள் காலை முதல் மாலை 5மணி வரை அனுதினமும் தரிசனம் செய்யலாம் பக்தர்கள் அனைவரும் வருக அத்தி வரதர் அருள் பெறுக.

#ஓம்_நமோ_நாராயணா...

வெள்ளி, 28 ஜூன், 2019

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்


உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்.

நீங்கள் உங்களது பிறந்த நட்சத்திரத்தின் பாடலை ஒவ்வொரு நாளும் மூன்று தடவை பாடி,
சிவபெருமானை வணங்கி வந்தால், நவக்கிரகங்களால் ஏற்படும் இன்னல்கள் நீங்கி நிம்மதியாக வாழலாம்.

அசுவினி:
தக்கார்வம் எய்திசமண் தவிர்ந்து
உந்தன் சரண் புகுந்தேன்
எக்கால் எப்பயன் நின் திறம்
அல்லால் எனக்கு உளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிக வடமேரு என்னும்
திக்கா! திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே

பரணி:
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதியானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்பொடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவியானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்தவாறே.

கார்த்திகை/கிருத்திகை:
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணியோடு
மாமலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரை இலாத
காஞ்சி மாநகர் தன்னுள்ளார்
எல்லிய விளங்க நின்றார்
இலங்கு மேற்றளியனாரே.

ரோகிணி:
எங்கேனும் இருந்து உன்
அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னோடும்
உடன் ஆகி நின்றருளி
இங்கே என் வினையை
அறுத்திட்டு எனை ஆளும்
கங்கா நாயகனே
கழிப்பாலை மேயோனே.

மிருக சீரிடம்:
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி

திருவாதிரை/ஆதிரை:
கவ்வைக் கடல் கதறிக் கொணர்
முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத் துவர் வாயார்
குடைந்து ஆடும் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து
எழுவார் அடி தொழுவார்
அவ்வத் திசைக்கு அரசு
ஆகுவர் அலராள் பிரியாளே.

புனர்பூசம்:
மன்னும் மலைமகள் கையால்
வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள்
ஆயின தூக்கமலத்து
அன்னவடிவின அன்புடைத்
தொண்டர்க்கு அமுது அருத்தி
இன்னல் களைவன இன்னம்பரான்
தன் இணை அடியே.

பூசம்:
பொருவிடை ஒன்றுடைப் புண்ணிய
மூர்த்திப் புலி அதளன்
உருவுடை அம்மலைமங்கை
மணாளன் உலகுக்கு எல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற
தில்லை சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு
மற்று இனிக் காண்பது என்னே.

ஆயில்யம்:
கருநட்ட கண்டனை அண்டத்
தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய
வல்லானைச் செந்நீ முழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு
இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்
கோன் என்று வாழ்த்துவனே

மகம்:
பொடி ஆர் மேனியனே! புரிநூல்
ஒருபால் பொருந்த
வடி ஆர் மூவிலை வேல் வளர்
கங்கையின் மங்கையொடும்
கடிஆர் கொன்றையனே! கடவூர்
தனுள் வீரட்டத்து எம்
அடிகேள்! என் அமுதே!
எனக்கு ஆர்துணை நீ அலதே.

பூரம்:
நூல் அடைந்த கொள்கையாலே
நுன் அடி கூடுதற்கு
மால் அடைந்த நால்வர் கேட்க
நல்கிய நல்லறத்தை
ஆல் அடைந்த நீழல் மேவி
அருமறை சொன்னது என்னே
சேல் அடைந்த தண்கழனிச்
சேய்ன்ஞலூர் மேயவனே.

உத்திரம்:
போழும் மதியும் புனக் கொன்றைப்
புனர்சேர் சென்னிப் புண்ணியா!
சூழம் அரவச் சுடர்ச் சோதீ
உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே
வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரைக்காவிரிக் கோட்டத்து
ஐயாறு உடைய அடிகளே.

அஸ்தம்:
வேதியா வேத கீதா விண்ணவர்
அண்ணா என்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கு
நின் கழல்கள் காணப்
பாதி ஓர் பெண்ணை வைத்தாய்
படர் சடை மதியம் சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே
அருள் செயாயே.

சித்திரை:
நின் அடியே வழிபடுவான்
நிமலா நினைக் கருத
என் அடியான் உயிரை வவ்வேல்
என்று அடர்கூற்று உதைத்த
பொன் அடியே இடர் களையாய்
நெடுங்களம் மேயவனே.

சுவாதி:
காவினை இட்டும் குளம் பல
தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்று
எரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி
போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத்
தீண்டப்பெறா திருநீலகண்டம்.

விசாகம்:
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம் தான் விரித்து ஓத வல்லனை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமை நங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்று உடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.

அனுஷம்:
மயிலார் சாயல் மாது ஓர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

கேட்டை:
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.

மூலம்:
கீளார் கோவணமும் திருநீறும்
மெய்பூசி உன் தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா
எனை ஏற்றுக்கொள் நீ
வாள் ஆர் கண்ணி பங்கா!
மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால்
இனியாரை நினைக்கேனே.

பூராடம்:
நின் ஆவார் பிறர் அன்றி நீயே ஆனாய்
நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய்
மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய்
பூமி மேல் புகழ்தக்கப் பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால்
ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே.

உத்திராடம்:
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையோனே
உறவு இலேன் உனை அன்றி மற்று அறியேன்
ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர் பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவடுதுறையுள்
அறவோனே எனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே

திருவோணம்/ஓணம்:
வேதம் ஓதி வெண்நூல் பூண்ட
வெள்ளை எருது ஏறி
பூதம் சூழப் பொலிய வருவார்
புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும்
நம்பா என நின்று
பாதம் தொழுவார் பாவம்
தீர்ப்பார் பழன நகராரே.

அவிட்டம் :
எண்ணும் எழுத்தும் குறியும்
அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இடைமொழி பாடிய
வானவரதா பணிவார்
திண்ணென் வினைகளைத்
தீர்க்கும் பிரா திருவேதிக்குடி
நண்ணரிய அமுதினை
நாம் அடைந்து ஆடுதுமே.

சதயம் :
கூடிய இலயம் சதி பிழையாமைக்
கொடி இடை இமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திருமுல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுபதா பரஞ்சுடரே.

பூரட்டாதி:
முடி கொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் சுரிகுழலாள்
படி கொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதி:
நாளாய போகாமே நஞ்சு
அணியும் கண்டனுக்கு
ஆளாய அன்பு செய்வோம்
மட நெஞ்சே அரன் நாமம்
கேளாய் நம் கிளை கிளைக்கும்
கேடுபடாத்திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்
கோளிலி எம்பெருமானே.

ரேவதி:
நாயினும் கடைப்பட்டேனை
நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சினுள் நிலாவிளாய்
நிலாவி நிற்க
நோயவை சாரும் ஆகில் நோக்கி
நீ அருள் செய்வாயே.


சனி, 15 ஜூன், 2019

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:


மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:
1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .
அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி.

ஞாயிறு, 9 ஜூன், 2019

அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்


அருள்மிகு ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்

நெல்லை சந்திப்பு தாமிரபரணி நதிக்கரையோரம் உள்ள மணிமூர்த்தீஸ்வரத்தில் அமர்ந்து அருள் பாலிக்கிறார் ஸ்ரீமூர்த்தி விநாயகர் என்ற உச்சிஷ்ட கணபதி. விநாயகருக்கு என தனி கோயிலாக கொண்டு அருளும் இங்கு மட்டுமே ராஜகோபுரம் உள்ளது. இதனால் ஆசியாவிலேயே ராஜகோபுரம் கொண்ட தனி விநாயகர் ஆலயம் என்ற பெருமையைும் பெற்றுள்ளது.

ராஜகோபுரத்தில் மட்டும் 108 விநாயகர் சிலைகள் இடம்பெற்றுள்ளன. சுமார் ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக உள்ள இக்கோயிலில் நாயக்கர்கள், பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலங்களில் சிறப்பான வழிபாடுகள் நடந்ததாக வரலாறுகள் உள்ளன.

இடையில் சரியாக பராமரிக்கப்படாமல் இருந்த இந்த ஆலயம் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு உபயதாரர் கள் அறநிலையத்துறையுடன் இணைந்து மீண்டும் சீரமைத்து ராஜகோபுரத்தை புதுப்பித்துள்ளனர். புதிய கொடிமரமும் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு இக்கோயிலில் கொடியேற்றத் துடன் 10 நாட்கள் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகி றது. இதில் சிறப்பம்சமாக 8ம் திருநாளான வருகிற 9ம் தேதி வெள்ளிக்கிழமை ஆயிரத்து 8 தேங்காய்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மூர்த்தி விநாயகர் தனது இடப்பக்க மடியில் ஸ்ரீ நீலவாணியை அமர்த்தியபடி அருளுகிறார். ஸ்ரீ நீலவாணி என்பது லட்சுமி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய தேவியரை உள்ளடக்கிய தெய்வமாக கருதப்படுகிறது.

ஆனந்த நிலையில் காட்சியளிக்கும் இவரை வணங்கினால் பல்வேறு பலன்களை பெறமுடிகிறது. குறிப்பாக இவருக்கு தேங்காய் மாலை அணிவிப்பது விசேஷமாக உள்ளது. திருமணம் வேண்டி வருபவர்க ளுக்கு தடைகள் அகன்று விரைவில் திருமணம் கைகூடுகிறது. இதற்காக தேன் கலந்த மாதுளை மாலை மற்றும் தேங்காய் மாலை அணிவித்து வழிபடுகின்றனர்.

 இக்கோயிலில் உள்ள பைரவர் சன்னதியில் உள்ள தீர்த்த கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் 3 நாட்கள் சூரிய ஒளி நேராக விநாயகர் சன்னதியில் படுவது கூடுதல் சிறப்பம்சமாகும் என கோயில் பட்டர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

 *பிரகாரத்தில் 16 வகையான விநாயகர்*

உச்சிஸ்ட கணபதி கோயிலின் உள் பிரகாரத்தில் விநாயகர் 16 வடிவங்களுடன் தனிச்சிறப்புகளுடன் அருளுகிறார். குஷி கணபதி (நோய் அகல), ஹரித்ர கணபதி (காரியத்தடை, வியாதி நீங்க), ஸ்வர்ண கணபதி (தங்கம் அடைய), விஜய கணபதி (வெற்றி அடைய), அர்க கணபதி (நவக்ரக தோஷம் நீங்க), குருகணபதி (குருவருள் பெற), சந்தான லட்சுமி கணபதி (நன்மகவு அடைய), ஹேரம்ப கணபதி (அமைதிபெற), சக்தி கணபதி (செயல் வெற்றிபெற), சங்கடஹர கணபதி (தடங்கல் நீங்க), துர்கா கணபதி (துன்பம் நீங்க), ருணஹரண கணபதி (கடன் தொல்லை தீர), ஸ்ரீ வல்லப கணபதி காயத்ரீ (காரிய சித்தி, கணவன் மனைவி அன்பு பெருக), சித்தி கணபதி (முயற்சிகள் வெற்றிபெற), வீர கணபதி (தைரியம் அடைய), சர்வ சக்தி கணபதி (உடற் பலம் பெற) ஆகிய கணபதி சன்னதிகள் உள்ளன.