திங்கள், 30 செப்டம்பர், 2019

#நவரா‌த்‌தி‌ரி_நா‌ட்க‌ளி‌ல்_பாட_வே‌ண்டிய_பாட‌ல்கள்



#நவரா‌த்‌தி‌ரி_நா‌ட்க‌ளி‌ல்_பாட_வே‌ண்டிய_பாட‌ல்கள்

நவரா‌த்‌தி‌‌ரி‌யி‌ன் ஒ‌ன்பது நா‌ட்களு‌ம் ஒ‌வ்வொரு பாட‌ல்களை‌ப் பாட வே‌ண்டு‌ம்.

அவ‌ற்‌றி‌ன் தொகு‌ப்பை காண்போம் :

#முதல்_நாள்;

தேவியைப் பற்றிய பாடல்களை தோடி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

பாடல்: கற்பகவல்லி நின்

ராகம்: ராகமாலிகா

ராகம்: ஆனந்த பைரவி

கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாயம்மா தேவி (கற்பகவல்லி)
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில்
சிற்பம் நிறைந்த உயர் சிங்காரக் கோயில் கொண்ட (கற்பகவல்லி)

ராகம்: ஆனந்த பைரவி

நீயிந்த வேளைதனில் சேயன் எனை மறந்தால்
நானிந்த நானிலத்தில் நாடுதல் யாரிடமோ?
ஏனிந்த மௌளனம் அம்மா ஏழை எனக்கருள?
ஆனந்த பைரவியே ஆதரித்தாளும் அம்மா (கற்பகவல்லி)

ராகம்: கல்யாணி

எல்லோர்க்கும் இன்பங்கள் எழிலாய் இறைஞ்சி என்றும்
நல்லாட்சி செய்திடும் நாயகியே நித்ய
கல்யாணியே கபாலி காதல் புரியும் அந்த
உல்லாசியே உமா உனை நம்பினேனம்மா (கற்பகவல்லி)

ராகம்: பாகேஸ்ரீ

நாகே‌ஸ்வரி நீயே நம்பிடும் எனைக்காப்பாய்
வாகீ‌ஸ்வரி மாயே வாராய் இது தருணம்
பாகேஸ்ரீ தாயே பார்வதியே இந்த
லோகே‌ஸ்வரி நீயே உலகினில் துணையம்மா (கற்பகவல்லி)

ராகம்: ரஞ்சனி

அஞ்சன மையிடும் அம்பிகே எம்பிரான்
கொஞ்சிக்குலாவிடும் வஞ்சியே நின்னிடம்
தஞ்சமென அடைந்தேன் தாயே உன் சேய் நான்
ரஞ்சனியே ரக்ஷிப்பாய் கெஞ்சுகிறேனம் (கற்பகவல்லி)

#இரண்டாம்_நாள்:

கல்யாணி ராகத்தில் தேவியைப் பற்றிய பாடல்களைப் பாடலாம்.

பாடல்: உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா

வரிகள்: அம்புஜம் கிருஷ்ணா
ராகம்: கல்யாணி
தாளம்: ஆதி

உன்னையல்லால் வேறே தெய்வம் இல்லையம்மா
உலகெல்லாம் ஈன்ற அன்னை (உன்னையல்லால்)

என்னையோர் வேடமிட்டுலக நாடக அரங்கில் ஆடவிட்டாயம்மா
இனியாட முடியாது என்னால் திருவுள்ளம் இரங்கி
ஆடினது போதுமென்று ஓய்வளிக்க (உன்னையல்லால்)

நீயே மீனாக்ஷி காமாக்ஷி நீலாயதாக்ஷிஎன பலபெயருடன்
எங்கும் நிறைந்தவள் என் மனக்கோயிலினில்
எழுந்தருளிய தாயே திருமயிலை வளரும் (உன்னையல்லால்

#மூன்றாம்_நாள்:

தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

பாடல்: நானொரு விளையாட்டு பொம்மையா

வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: நவரச கானடா
தாளம்: ஆதி

நானொரு விளையாட்டு பொம்மையா
ஜகன் நாயகியே உமையே உந்தனுக்கு
நானிலத்தில் பல பிறவியெடுத்து
திண்டாடியது போதாதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)

அருளமுதைப் பருக அம்மா அம்மா என்று
அலறுவதைக் கேட்பதானந்தமா
ஒரு புகலின்றி உன் திருவடி அடைந்தேனே
திருவுளம் இரங்காதா (தேவி) - உந்தனுக்கு (நானொரு)

#நான்காம்_நாள்:

அம்பிகையின் பாடல்களை பைரவி ராகத்தில் பாட வேண்டும்.

பாடல்: நீ இரங்காயெனில் புகலேது

வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: அடானா
தாளம்: ஆதி

நீ இரங்காயெனில் புகலேது அம்பா
நிகில ஜகன்னாதன் மார்பில் உறைதிரு (நீ இரங்காயெனில்)

தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்பா (நீ இரங்காயெனில்)

பாற்கடலில் உதித்த திருமளியே - ள
பாக்யலக்ஷ்மி என்னை கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா (நீ இரங்காயெனில்

#ஐந்தாம்_நாள்:

தேவியின் பாடல்களை பந்துவராளி ராகத்தில் பாட வேண்டும்.

பாடல்: அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்

வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: பந்துவராளி
தாளம்: ஆதி

அம்பா மனம் கனிந்துனது கடைக்கண் பார்
திருவடி இணை துணையென் (அம்பா)

வெம்பவ நோயற அன்பர் தமக்கருள்
கதம்ப வனக்குயிலே ஷங்கரி ஜகதம்பா (மனம்)

பைந்தமிழ் மலர்ப்பாமாலை சூடி உன் பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் என்னேரமும் நின் திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதிமயங்கி அறுபகைவர் வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீ‌ஸ்வரி எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி என் (அம்பா)

#ஆறாம்_நாள்:

தேவியைப் பற்றிய பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடுவது சிறப்பு.

பாடல்: தேவி நீயே துணை

வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

தேவி நீயே துணை
தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி)

தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி)

மலையத்வஜன் மாதவமே - காஞ்சன
மாலை புதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

#ஏழாம்_நாள்:

தேவியைப் போற்றிப் பாடும் பாடல்களை பிலஹரி ராகத்தில் பாடுவது சிறப்பு.

பாடல்: ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

வரிகள்: கானம் கிருஷ்ண ஐயர்
ராகம்: ரதிபதிப்ரியா
தாளம்: ஆதி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)

சுக ‌ஸ்வரூபிணி மதுர வாணி
சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
பஞ்சமி பரமேஷ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத ‌ஸ்வரூபிணி (ஜகத்)

#எட்டாம்_நாள்:

தேவியின் பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாடுதல் நலம்.

பாடல்: ஸ்ரீசக்ர ராஜ
ராகம்: ராகமாலிகா

ராகம்: செஞ்சுருட்டி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனே‌ஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனே‌ஸ்வரி

ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஷ்வரி ராஜராஜே‌ஸ்வரி (ஸ்ரீசக்ர)

ராகம்: புன்னாகவராளி

பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர)

ராகம்: நாதனாமக்ரியை

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வரி (ஸ்ரீசக்ர)

ராகம்: சிந்து பைரவி

துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டே‌ஸ்வரி (ஸ்ரீசக்ர)

#ஓன்பதாம்_நாள்:

தேவியின் திருப்பாடல்களை வசந்தா ராகத்தில் பாடுவது உகந்தது.

பாடல்: மாணிக்க வீணையேந்தும்

ராகம்: மோகனம்

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா
பாடவந்தோமம்மா பாட வந்தோம்

அருள்வாய் நீ இசை தர வா நீ - இங்கு
வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க)

நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க)

வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே

வாணி சர‌ஸ்வதி மாதவி பார்கவி
வாகதீ‌ஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கினிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி (அருள்வாய்) (மாணிக்க)

#தசமி_அன்று:

பாடல்: கருணை தெய்வமே கற்பகமே

வரிகள்: மதுரை ஸ்ரீநிவாசன்
ராகம்: சிந்து பைரவி
தாளம்: ஆதி

கருணை தெய்வமே கற்பகமே
காணவேண்டும் உந்தன் பொற்பதமே என் (கருணை)

உறுதுணையாக என் உள்ளத்தில் அமர்ந்தாய்
உன்னையன்றி வேறு யாரோ எம் தாய் (கருணை)

ஆனந்த வாழ்வு அளித்திட வேண்டும்
அன்னையே எம்மேல் இரங்கிட வேண்டும்
நாளும் உன்னைத் தொழுதிடல் வேண்டும்
நலமுடன் வாழ அருளல் வேண்டும் (கருணை)

நவராத்திரி ஸ்லோகம்

நவராத்திரி ஸ்லோகம்:

*நவராத்திரி ஸ்பெஷல் !

*மூன்று* தேவிக்கும்

1. *துர்க்கா* தேவி



ஓம் துர்க்காயை நம

ஓம் மகா காள்யை நம

ஓம் மங்களாயை நம

ஓம் அம்பிகாயை நம

ஓம் ஈஸ்வர்யை நம

ஓம் சிவாயை நம

ஓம் க்ஷமாயை நம

ஓம் கௌமார்யை நம

ஓம் உமாயை நம

ஓம் மகாகௌர்யை நம

ஓம் வைஷ்ணவ்யை நம

ஓம் தயாயை நம

ஓம் ஸ்கந்த மாத்ரே நம

ஓம் ஜகன் மாத்ரே நம

ஓம் மகிஷ மர்தின்யை நம

ஓம் சிம்ஹ வாஹின்யை நம

ஓம் மாகேஸ்வர்யை நம

ஓம் திரிபுவனேஸ்வர்யை நம



2. *லட்சுமி* ஸ்ரீதேவி



ஓம் மகாலக்ஷ்ம்யை நம

ஓம் வரலெக்ஷ்ம்யை நம

ஓம் இந்த்ராயை நம

ஓம் சந்த்ரவதனாயை நம

ஓம் சுந்தர்யை நம

ஓம் சுபாயை நம

ஓம் ரமாயை நம

ஓம் ப்ரபாயை நம

ஓம் பத்மாயை நம

ஓம் பத்மப்ரியாயை நம

ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம

ஓம் சர்வ மங்களாயை நம

ஓம் பீதாம்பரதாரிண்யை நம

ஓம் அம்ருதாயை நம

ஓம் ஹரிண்யை நம

ஓம் ஹேமமாலின்யை நம

ஓம் சுபப்ரதாயை நம

ஓம் நாராயணப் பிரியாயை நம



3. *சரஸ்வதி* தேவி



ஓம் சரஸ்வத்யை நம

ஓம் சாவித்ர்யை நம

ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம

ஓம் ஸ்வேதா நநாயை நம

ஓம் ஸுரவந்திதாயை நம

ஓம் வரப்ரதாயை நம

ஓம் வாக்தேவ்யை நம

ஓம் விமலாயை நம

ஓம் வித்யாயை நம

ஓம் ஹம்ஸ வாகனாயை நம

ஓம் மகா பலாயை நம

ஓம் புஸ்தகப்ருதே நம

ஓம் பாஷா ரூபிண்யை நம

ஓம் அக்ஷர ரூபிண்யை நம

ஓம் கலாதராயை நம

ஓம் சித்ரகந்தாயை நம

ஓம் பாரத்யை நம

ஓம் ஞானமுத்ராயை நம



*மூன்று* தேவியருக்கான *நவராத்திரி* ஸ்லோகம்:



கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ

ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!

துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா

மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!



*பொருள்:*

இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே!

வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை *சரஸ்வதி* என்றும்,  *லட்சுமி* என்றும், சிவனின் பத்தினியாகிய *பார்வதி* என்றும் *பலவிதமாகக்* கூறுகிறார்கள்.
 *மனதிற்கும்* வாக்கிற்கும்  *அப்பாற்பட்டவளே!*

 எல்லையற்ற
*மகிமை* கொண்டவளே!

நவராத்திரி கொலு வைக்கும் முறை


நவராத்திரி கொலு வைக்கும் முறை

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம் பூதங்களி ல் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர் களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.

 *1.முதலாம் படி:*
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்க.

*2. இரண்டாம் படி:-*

ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

*3. மூன்றாம் படி :-*

மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மை கள்.   

    *4. நாலாம்படி :-*

நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு  போன்றவற்றின் பொம் மைகள்.

*5. ஐந்தாம்படி :-*

ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள   

     *6. ஆறாம்படி :-*

ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.


*7. ஏழாம்படி :-*

மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த    சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள்.   

. *8. எட்டாம்படி :-*

தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

*9. ஒன்பதாம்படி :-*

பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக் கம்.   

*🚩--DCH ---ஆன்மீகப் பதிவுகள்----*

 *நவராத்திரி வழிபாட்டு முறை.*
🌾🚩🌺🌾🌸🌾🚩
*1. முதலாம் நாள் :-*

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறு செ ய்தவர்களை திருத்தி நல் வழிபடுத் தவே ஆகும்.

மதுரை மீனாட்சி அம்மனை முதல் நாளில் அண்ட சராசரங்களைக் காக்கும ராஜராஜேஸ்வரி அம்மனாக அலங்கரிப்பர்.

முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.

*2. இரண்டாம் நாள் :–*

இரண்டாம் நாளில் அன்னையை வரா ஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ(பன்றி)முகமும் தெத்து பற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுத ங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போ ன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன் னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில் லி சூனியம், எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

மதுரை மீனாட்சி அம்மன் இன்று விறகு விற்ற லீலையில் காட்சி அளிப்பாள். அதாவது சுந்தரர் விற்றவிறகை மீனாட்சி அம்மன் தலையில் ஏற்றும் படலம் நடக்கும். குடும்ப பாரத்தை கணவனுடன் சேர்ந்து மனைவியும் சுமக்க வேண்டும் என்ற தத்து வத்தினை வலியுறுத்துவ தாக நாம் கருதலாம்.

இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.

*3. மூன்றாம் நாள் :-*

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திரா ணியாக வழிபட வேண் டும். இவளை மாஹேந்தரி, சாம் ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோக த்தை பரிபா லனம் செயபவளும் இவளே யாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புப வர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்க, பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வு, சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளே யாகும்.

இன்று மீனாட்சி அம்மன் கல்யானைக்கு கரும்பு கொடுத்த அலங்காரத்தில் காணப்படுவார்.

மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண் பொ ங்கல்.

*4. நான்காம் நாள் :-*

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் திருமண கோலத்தில் காட்சி யளிப்பார்கள்.

நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.

*5. ஐந்தாம் நாள் :-*

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவி யாக வழிபடவேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியா வாள். திரிசூலம், பிறைச் சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்த ருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளி கள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் நாரைக்கு மோட்சம் கொடுத்த அலங்காரத்தில் காட்சி யளிப்பார் கள்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.

*6. ஆறாம் நாள் :-*

இன்று அன்னையை கவுமாரி தேவி யாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவ சேனா திபதியான முருக னின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கி டுபவள். வீரத் தை தருபவள்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் பாணணிற்கு அங்கம் வெட்டிய அலங் காரத்தில் அருள்புரிவார்கள்.

ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்

*7. ஏழாம் நாள் :-*

ஏழாம்நாள் அன்னையை மகா லட் சுமியாக வழிபட வேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டா யுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னை யாகும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவ சக்தி கோலத்தில் மக்களிற்கு அருள் பாலிப்பார்கள்.

ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க் கண்டுச் சாதம்.

*8. எட்டாம் நாள் :-*

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு,



சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ரு க்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள் வேண்டும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் மகிஷா சுர மர்த்தினி அலங்காரத்தில் காட்சியளிப்பார்கள்.

எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க் கரைப் பொங்கல்.

*9. ஒன்பதாம் நாள் :-*

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழி பட வேண்டும். அன்ன வாகனத்தில் இரு ப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச் செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.

இன்று மதுரை மீனாட்சி அம்மன் சிவபூசை செய்யும் கோலத்தில் அருளாட்சி புரிவார்கள்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.


ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

நவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம்?... எப்படி உருவானது?...


நவராத்திரி ஏன் கொண்டாடுகிறோம்?... எப்படி உருவானது?...

நவராத்திரி உருவான கதை !!
மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றிற்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே நவராத்திரி வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும்.

மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார் என்று புராணங்கள் கூறுகின்றன. இதனை கொண்டாடும் விதமாக வீடுகளில் கொலு வைத்து 10 நாட்கள் தொடர்ச்சியாக அம்மனுக்கு வழிபாடு நடத்தப்படுகிறது.

நவராத்திரி உருவான கதை :

மகிஷாசுரன் என்னும் ஓர் அரக்கன் மூவுலகையும், தேவர்களையும் அடிமைகளாக்கி அனைவரையும் துன்புறுத்தி வந்தான். அவன் ரம்பன் என்பவனுக்கும், எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன். அதனால்தான் மனித உடலுடனும், எருமை தலையுடனும் தோன்றினான். மகிஷாசுரன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாறாயிரம் ஆண்டுகள் தவம் செய்தான். பிரம்மன் தன் முன் தோன்றியதும் சாகாவரம் வேண்டும் என்று கேட்டான். இவ்வுலகில் பிறந்த யாவருக்கும் இறப்பு என்பது நிச்சயம் நடந்தே தீரும். அதனால் உன் வரத்தை மாற்றிக்கேள் என்றார் பிரம்மதேவர்.

அதற்கு மகிஷாசுரன் முன்யோசனை ஏதுமின்றி எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவ்வரத்தையே பிரம்மதேவரும் அருளினார். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷாசுரன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

வரத்தை பெற்றதும் மகிஷாசுரனின் அராஜகம் ஆரம்பித்தது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டனர். மகாவிஷ்ணு தேவர்களுக்கு உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால், மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை.

எதனால் மகிஷனை அழிக்க முடியவில்லை என்று குழப்பத்தில் ஆழ்ந்தார். பின் பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றதால் தான் மகிஷனை அழிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் சென்று முறையிட்டார்.

சிவன் தன் சக்தியால் 'சந்தியாதேவி" என்ற சக்தியை உருவாக்கினார். அந்த சக்தியின் கண்கள் கறுப்பு, சிவப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

மகிஷாசுரன் தன்னிடம் போர் செய்ய வரவேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷாசுரனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய அவன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான்.

இதை அறிந்த சந்தியாதேவி, 'தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்" என்று தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷாசுரன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பவில்லை. இதை கண்ட மகிஷாசுரன், கடைசியாக தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷாசுரனிடம் பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷாசுரன் மாண்டான்.

இதை கண்ட தேவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மகிஷாசுரனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் மகிஷாசுரமவர்த்தினி என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

சனி, 28 செப்டம்பர், 2019

நவராத்திரி பஜை,பிரசாதம்,மற்றும் வண்ணம் அட்டவணை

நவராத்திரி பஜை,பிரசாதம்,மற்றும் வண்ணம் அட்டவணை


வந்தது நவராத்திரி... எப்படி விரதம் இருக்க வேண்டும்?


நவராத்திரி விரதமுறை...!!

மக்களின் பண்பாட்டை வளர்க்கும் விழாக்களில் முக்கியமானது நவராத்திரி. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி ஆகும்.

நாளை முதல் ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கோலாகலமாக இருக்கப் போகின்றது.

நவராத்திரி ஒன்பது நாட்கள் :

நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக்காலம்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான லட்சுமியின் ஆட்சிக்காலம்.

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம்.

நவராத்திரி விரதமுறை :

புரட்டாசி மாத வளர்பிறை பிரதமை திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூஜை செய்ய வேண்டும். வீடுகள் அல்லது ஆலயங்களில் கொலு வைக்க வேண்டும்.

விரதம் இருப்பவர்கள் அமாவாசையில் ஒருவேளை உணவு உண்டு பிரதமை முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூஜை முடிந்தபின் பால், பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

நவராத்திரி கொலுவில் கும்பம் வைப்பது மிகவும் முக்கியமானது. நவராத்திரியில் குமாரி பூஜை மிகவும் பிரதானமானவை.

வீட்டில் கொலு வைப்பவர்கள் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை அழைத்து அவர்களை அம்மனாகப் பாவித்து, அவர்களுக்கு தேவையான பொட்டு, வளையல், உணவு, இனிப்பு பலகாரம், ஆடை கொடுத்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

விரதமிருப்பவர்கள் ஒன்பதாம் நாளான நவமி அன்று முழுமையாக விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் சரஸ்வதி பூஜை என்பதால் குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள், நாம் பாராயணம் செய்யும் புத்தகங்களை வைத்து வழிபட வேண்டும்.

அடுத்த நாள் விஜயதசமியன்று சுவையான பலகாரங்கள் செய்து அம்பாளுக்குப் படைத்து நிவேதனம் செய்து, பூஜைக்கு வைத்த புத்தகங்களை எடுத்து பிள்ளைகளுக்கு படிக்க கொடுக்கலாம். அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள அனைவரும் அம்பாளை வழிபட வேண்டும்.

இவ்வாறு 10 நாட்களும் சிரத்தையுடன் அம்பாளுக்கு விரதம் இருந்து விஜயதசமி அன்று விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இவ்விரதம் இருப்பதால் குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.

படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.

இவ்வாறு முறையாக விரதமிருந்தால், வாழ்வில் நமக்கு எல்லா வளங்களும் கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்.

நவராத்திரி சிறப்புகள் :

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சர்க்கரைப் பொங்கல், உளுந்து வடை, நைவேத்தியம் செய்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

நவராத்திரி நாட்களில் வீட்டில் கோலமிடுவதற்கு அரிசி மாவைப் பயன்படுத்தி கோலமிட வேண்டும். இவ்வாறு செய்வதால் குடும்ப ஒற்றுமையும், செல்வமும் வளரும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால் ஐஸ்வர்யம் உண்டாகும்.

நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சிறந்த வழிபாடாகும்.

தினந்தோறும் நவராத்திரி பூஜையின் நிறைவாக, பலவிதமான மங்கலப் பொருட்களை ஏழைகளுக்கு தானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்கள்தான் நவராத்திரி பூஜைகளை நிறைவு செய்ய உதவி புரிகின்றன.

திருமணம் ஆகாதவர்கள் நவராத்திரியின் ஒன்பது நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையன்று சுமங்கலி பெண்களுக்கு அன்னதானம் செய்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்து ஆசி பெற்றால் உடனடியாக திருமணம் கைகூடும்.

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் வரும் திங்கட்கிழமை லலிதாம்பிகையின் அவதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ஒன்பது சிறுமிகளுக்கு பட்டுப்பாவாடை தானம் செய்தால் நினைத்தது நடக்கும்.


வெள்ளி, 27 செப்டம்பர், 2019

ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி, ஹிமாசல பிரதேசம்,


இன்றைய கோபுர தரிசனம்..

ஶ்ரீமன்கி ஹனுமான் திருக்கோயில், கௌஸலி, ஹிமாசல பிரதேசம்,

கௌஸலி
கௌஸலி என்னும் அருமையான அழகான மலைபிரதேசம் ஹிமாசல பிரதேசத்தில் கால்காவிலிருந்து 40 கி.மீ தொலைவிலும், சண்டிகரிலிருந்து 65 கி.மீ. தொலைவிலும் உள்ளது. கால்கா வரை இரயில் வண்டியில் சென்று, அங்கிருந்து பஸ்ஸிலோ அல்லது டாக்ஸியிலோ கௌஸலியை சுமார் ஒன்னரை மணி நேரத்தில் அடையலாம். சிம்லாவை விட கௌஸலியில் மிக அழகான, பார்க்க பல இயற்கை காட்சிகளுடன், அதே சமயம் மிக எளிமையான மக்களையையும் சந்திக்கலாம். கால்காவிலிருந்து டாக்ஸியில் பயணிக்கும் பொழுது, அது ஒரு தனி அனுபவமாகவே இருக்கும். கண் கொள்ளா இயற்கை காட்சிகள், இனிமையான இளம் குளிர் காற்று, அதைவிட பேரானந்தம் தருவது - என்னை தழுவி சென்ற மேக கூட்டங்கள். மேக கூட்டங்களிடையே நாம் புகுந்து செல்வது என்பது மிக மிக புதிய மறக்க முடியாத அனுபவம். சிம்லாவை போல் கௌஸலி பெரிய கோடை தலம் இல்லை, இங்கு காணுவதற்கு என்று தனியாக ஒன்றும் இல்லை. ஆனால் இந்த தலம் நமக்கு நல்ல அமைதியையும் ஓய்வையும் கொடுக்கும் இடம். பதற்றத்திலிருந்து விடுபட்டு, நம் மனதிற்க்கு நல்ல ஓய்வு கொடுக்க முடியும்.

மன்கி பாய்ன்ட், கௌஸலி
மன்கி பாய்ன்ட் என்பது கௌஸலியில் இருக்கும் ஒரு குன்றின் உச்சி முனை. மன்கி என்னும் ஹனுமார் பக்தர், இம்மலை உச்சியில் ஹனுமாருக்காக கோயில் கட்டினார். அதனால் அவர் பெயராலேயே இம்மலை உச்சியை மன்கி பாய்ன்ட் என்று அழைக்கப் படுகிறது. ஆனால் மக்கள் இதனை மங்கி (monkey) பாய்ன்ட் என்றே அழைக்கின்றனர். உள்ளூர் வாசிகள் கூப்பிடும் விதத்தில் மன்கி பாய்ன்ட் என்றும் கோயிலை ஹனுமானா கோயில் என்றும் அழைப்பதே உச்சிதம் என்பேன். கௌஸலி பஸ் நிலயத்திலிருந்து மன்கி பாய்ன்ட் சுமார் நான்கு கி.மீ. தொலைவு இருக்கும். இங்கிருந்து டாக்ஸிகள் கிடைக்கும். ஒரு டாக்ஸிக்கு ரூ.400/ரூ500 என்று வாங்குகிறார்கள். சில பக்தர்கள் மலை உச்சி வரை நடந்தே செல்கிறார்கள்.

 மன்கி பாய்ன்ட்க்கு பிரயாணம்
கீழிருந்து வந்த டாக்ஸி மன்கி பாய்ன்ட்டில், விமானப் படையின் விமான தளத்து நுழைவு வாயிலில் விட்டுவிட்டது. விமான தளத்தின் உள்ளே தான் ஹனுமானா கோயில் உள்ளது. புகைபடத்துடன் கூடிய அடையாள அட்டை இருந்தால் தான் உள்ளே போக முடியும். அதிர்ஷ்ட வசமாக என்னிடம் அடையாள அட்டை இருந்தது. நீங்கள் மறக்காமல் அடையாள அட்டை எடுத்து வரவும்.

தாங்கள் எடுத்து செல்லும், மொபைல், கமிரா முதலியவைகளை விமான தள நுழைவாயிலிலேயே பாதுகாப்பாக வைத்துவிட வேண்டும்.

மன்கி பாய்ன்ட் நமக்கு கண்ணுக்கு இப்பொழுது தெரிகிறது. சுமார் அரை கி.மீ. உயரத்தில் உள்ளது கோயில். குன்றின் கீழ் விமான படையினரின் மனைவியர்களால் நடத்தப்படும் சிறிய சிற்றுண்டிசாலை உள்ளது. டீ,காபி, முதலியன கிடைக்கின்றன. கோயில் உள்ள குன்று மிகவும் செங்குத்தான ஏற்றம்.

அந்த அரை கி.மீ. தூரமும் வைஶ்ணவ தேவியில் உள்ளது போல், மேலே கூரை கிடையாது. பாதையும் சற்று கரடு முரடாகவே இருக்கும். பாதையின் இருபுறமும் இருக்கும் பாறைகளில் சற்றே இளைபாரலாம் அவ்வளவே. பாறைகளில் ’ராமசந்திர மானஸ்’இல் இருந்து ஸ்லோகங்கள் எழுதியுள்ளார்கள். வழியில் நிறைய குரங்குகள் உள்ளன. ஆனால் அவைகளுக்கு நாம் எதையும் புசிக்க கொடுக்க வேண்டாம் என்பது உள்ளூர் வாசிகளின் வேண்டுகோள். ஏனெனில் குரங்குகள் அதுவாக காட்டில் உணவுகளை தேடி தின்று, விதைகளை அங்கங்கே போட்டுவிட்டு போகும், அப்போதுதான் காடு செழிப்பாக இருக்கும், பக்தர்கள் உணவு கொடுக்க ஆரம்பித்தால் காடுகள் அழியும் என்று செல்கிறார்கள்.

மலையுச்சி
மலையுச்சியை அடைந்த பிறகு, உச்சி இடது பாதத்தின் வடிவில் இருப்பது தெரியும். மலையுச்சியை ஶ்ரீஹனுமானாவின் கால் பதிந்து இப்படி ஆனதாக கூறப்படுகிறது. சஞ்சீவி பர்வதத்தை எடுத்து செல்கையில் ஶ்ரீஹனுமானாவின் கால் இம்மலையுச்சியில் பதித்ததினால் இப்படி ஆனது. அப்படி பதிந்த பாதத்தின் குதிகால் இருக்கும் இடத்தில் அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. மன்கி என்னும் பக்தரால் கட்டப்பட்டது இக்கோயில். கோயில் பக்கத்தில் ’ஹெலி பாட்’ [helipad] உள்ளது. நம்மால் ஶ்ரீஹனுமானாவின் இடது திரு பாதத்தின் கட்டை விரல் பதிந்த இடம் வரை செல்ல முடியும்.

மன்கி பாய்ன்ட் ஶ்ரீஹனுமானாவுக்கு திருக்கோயில்
மேக கூட்டத்தின் இடையில் அமைந்திருக்கும் இக்கோயிலை காணும் பொழுது சொர்கத்தில் இருப்பது போன்ற உணர்வே மேல் தூக்கி நின்றது. காண்பது நிஜமாகவே இருப்பதால், ஶ்ரீஹனுமானா வாயுபுத்திரன் என்பதை தெள்ளத்தெளிவாக தெரிவிப்பதுப் போல் இருந்தது. அங்கு கோயில் கொண்டிருக்கும் ஶ்ரீஹனுமானாவின் சிலாரூபம் தனது இடது திருக்கரத்தில் சஞ்சீவி மலையையும், வலது திருக்கரத்தில் கதையும் வைத்துள்ளார். கோயிலில் சிறிய சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கோயில் அருகில் சிறிய சிற்றுண்டிசாலை உள்ளது. மேலே ஏறுவதும், கோயிலில் இருந்தது, கீழே இறங்கியது எல்லாம் எனக்கு இரண்டு மணி நேரம் ஆகியது.

நம்புங்கள். மலையுச்சியை அடைந்த பிறகு, நீங்கள் திரும்பி வர மனம் வராது. அருமையான சுகமான மெல்லிய காற்றும், மன்கி பாய்ன்ட் வாயுபுத்திரனின் அருளாட்சியும், தங்களை ஆனந்தத்தில் ஆழ்த்திவிடும். சொர்க்கம் என்பது இந்த  கோவில் இருக்கும் இடமன்றி வேறேது என்று எண்ணுவீர்கள்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், முனிவர்களும்,யோகிகளும், மகரிஷிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ ராமஜெயம்,
ராம நாமமே சொன்னால் அங்கே வருவார் ஹனுமார், க்ஷேமங்கள் யாவையும் தருவார், ஶ்ரீ ராம பக்த ஹனுமார்.

தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்


தாமிரபரணி நதிக்கரையை சுற்றியுள்ள கோவில்கள் பற்றிய விவரங்கள்

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன.

அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.

*1. காந்திமதி நெல்லையப்பர் கோவில்*

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் “தாமிர சபை” என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான்

இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பபெற்றதுக்கது.

இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.

*2. சபை சிவாலயங்கள்*

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

* சித்ர சபை – திருக்குற்றாலம்

* தாமிர சபை- திருநெல்வேலி

*3. முப்பீட தலங்கள்*

* அம்பாசமுத்திரம் – திருமூலநாதர் திருக்கோயில்

* ஊர்காடு – திருக்கோஷ்டியப்பர் திருக்கோயில்

* வல்லநாடு – திருமூலநாதர் திருக்கோயில் (தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது).

*4. பஞ்ச ஆசன தலங்கள்*

* ஏர்வாடி – திருவழுந்தீசர் திருக்கோயில்

* களக்காடு – சத்யவாகீசர் திருக்கோயில்

* நான்குநேரி – திருநாகேஷ்வரர்
திருக்கோயில்

* விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்

* செண்பகராமநல்லூர் – இராமலிங்கர் திருக்கோயில்

* தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்

* சங்கரன்கோயில் – மண் தலம் (ப்ருத்திவி)

* கரிவலம்வந்தநல்லூர் – அக்னி தலம்

* தாருகாபுரம் – நீர் தலம்

* தென்மலை- காற்று தலம்

* தேவதானம் – ஆகாய தலம்

*5. காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்*

* சிவசைலம் – சிவசைலப்பர் திருக்கோயில்

* ஆழ்வார்குறிச்சி – வன்னீஸ்வரர் திருக்கோயில்

* கடையம் – வில்வவனநாதர் திருக்கோயில்

* திருப்புடைமருதூர் – நாறும்பூநாதர் திருக்கோயில்

* பாபநாசம் – பாபநாசர் திருக்கோயில்

*6. இராமர் வழிபட்ட பஞ்சலிங்க தலங்கள்*

* களக்காடு- சத்யவாகீசர்
* பத்தை – குலசேகரநாதம்
* பதுமனேரி – நெல்லையப்பர்
* தேவநல்லூர் – சோமநாதம்
* சிங்கிகுளம் – கைலாசநாதம்

*7. நவ சமுத்திர தலங்கள்*

* அம்பாசமுத்திரம்
* ரவணசமுத்திரம்
* வீராசமுத்திரம்
* அரங்கசமுத்திரம்
* தளபதிசமுத்திரம்
* வாலசமுத்திரம்
* கோபாலசமுத்திரம்
* வடமலைசமுத்திரம் (பத்மனேரி)
* ரத்னகாராசமுத்திரம் (திருச்செந்தூர்- இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

*8. பஞ்ச பீட தலங்கள்*

பஞ்ச பீட தலங்களில் முதல் நான்கு தலங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன.

* கூர்ம பீடம் – பிரம்மதேசம்
* சக்ர பீடம் – குற்றாலம்
* பத்ம பீடம் – தென்காசி
* காந்தி பீடம் – திருநெல்வேலி
* குமரி பீடம் – கன்னியாகுமரி.இது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.

*9. சிவ கைலாயங்கள் (ஆதி கைலாசம்)*

* பிரம்மதேசம் – கைலாசநாதர் திருக்கோயில்
* அரியநாயகிபுரம் – கைலாசநாதர் திருக்கோயில்
* திருநெல்வேலி (தென்கைலாயம்)- தென்கைலாசநாதர் (நெல்லையப்பர்) திருக்கோயில்
* கீழநத்தம் (மேலூர்)- கைலாசநாதர் திருக்கோயில்
* முறப்பநாடு – கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை – கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் – கைலாசநாதர் திருக்கோயில் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* கங்கைகொண்டான் – கைலாசநாதர் திருக்கோயில்
* தச வீரட்டானத் தலங்கள் (மேற்கு சிவாலயங்கள்)
* சிவசைலம் – சிவசைலப்பர் திருக்கோயில் – பக்த தலம்
* வழுதூர் – அக்னீஸ்வரர் திருக்கோயில் – மகேச தலம்
* கோடகநல்லூர் – அவிமுக்தீஸ்வரர் திருக்கோயில் – பிராண லிங்கத் தலம்
* சிங்கிகுளம் – கைலாசநாதர் திருக்கோயில் – ஞானலிங்கத் தலம்
* மேலநத்தம் – அக்னீஸ்வரர் திருக்கோயில் – சரண தலம்
* ராஜவல்லிபுரம் – அக்னீஸ்வரர் திருக்கோயில் – சகாய தலம்
* தென்மலை – திருப்பாத்தீஸ்வரமுடையார் திருக்கோயில் – பிரசாதி தலம்
* அங்கமங்கலம் – நரசிங்கஈஸ்வரமுடையார் திருக்கோயில் – கிரியாலிங்க தலம்
* காயல்பட்டினம் – மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் – சம்பத் தலம் (இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* திற்பரப்பு – மகாதேவர் திருக்கோயில் (இது தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது)

*10. வாலி வழிபட்டத் தலங்கள்*

* திருவாலீஸ்வரம் – திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* கீழப்பாவூர் – திருவாலீஸ்வரர் திருக்கோயில்
* தென்காசி வாலியன்பத்தை – திருவாலீஸ்வரர் திருக்கோயில்

* நவகைலாயங்களும் நவக்கிரகங்களின் ஆட்சியும்
* பாபநாசம் – சூரியன்
* சேரன்மகாதேவி – சந்திரன்
* கோடகநல்லூர் – செவ்வாய்
* குன்னத்தூர் – இராகு
* முறப்பநாடு – குரு(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ஸ்ரீவைகுண்டம்- சனி(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* தென்திருப்பேரை – புதன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* ராஜபதி – கேது(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)
* சேர்ந்தபூமங்கலம் – சுக்கிரன்(இது தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது)

*11. வேறு சில ஆலயங்கள்*

* இது தவிர தென் காளஹஸ்தி என்று போற்றப்படும் கரிசூழ்ந்தமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயிலை சுற்றி அஷ்டலிங்க தலங்கள் உள்ளதாக திருநெல்வேலி தல புராணம் கூறுகிறது. துர்வாச முனிவர் வழிபட்ட இந்த கோயில்கள் பற்றி ஆய்வுகள் நடந்து வருகின்றன.

* நெல்லையிலிருந்து சுமார் 13 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் திருவேங்கடநாதர் கோவில் உள்ளது.

* நெல்லையிலிருந்து சுமார் 53 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது தென்காசி. தென்னிந்தியாவின் காசி (வாரணாசி) என்று அழைக்கப்படும் இந்நகர் சுமார் 400 ஆண்டுகால வரலாறு கொண்டது.

* சங்கரன் கோயில் எனும் ஊரில் உள்ள சங்கரநாராயணர் கோவில் தனிச்சிறப்பு பெற்றது....

மகாளய அமாவாசை வழிபாடு


மகாளய அமாவாசை வழிபாடு

மகாளய பட்ச அமாவாசை அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு. மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை  நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.

கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை  வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.

நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது.  ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் .

நோயில் இருந்து விடுதலை:

 பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.

பிதுர் தேவதைகள்:

 நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.

1. நம் பித்ருக்கள் (மண்),

2. புரூரவர் (நீர்),

3. விசுவதேவர் (நெருப்பு),

4. அஸீருத்வர் (காற்று),

5. ஆதித்யர் (ஆகாயம்)

என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான்  என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன.  ஆனால் இக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.

இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம்.  வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!

புனித நீர் ஸ்தலங்கள்:

காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண  லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.

காருண்ய பித்ருக்கள்:

சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

இவர்கள் காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.

பலன்கள்:

நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தியோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும். இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர்.  வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.

சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

மஹாளய அமாவாசை 2019: புரட்டாசி சனி மஹாளய அமாவாசையில் தானம் கொடுங்க தோஷங்கள் நீங்கும்...


மஹாளய அமாவாசை 2019: புரட்டாசி சனி மஹாளய அமாவாசையில் தானம் கொடுங்க தோஷங்கள் நீங்கும்...

நம் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வரவேற்று நாம் அவர்களுக்கு விருந்து கொடுப்போம். அதுபோல பித்ரு லோகத்தில் இருந்து நம்மை காண வரும் முன்னோர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு தானம் கொடுக்க வேண்டும் அன்னதானம் செய்ய வேண்டும் இதன் மூலம் நம் பித்ருக்கள் மகிழ்ச்சியடைந்து நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். இதன் மூலம் எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் நீங்கும். நாளை சனிக்கிழமை மஹாளய அமாவாசை தினமாகும். இந்த நாளில் நாம் தானம் செய்தல் நம் தலைமுறை மட்டுமல்லாது மூன்று தலைமுறைக்கும் புண்ணியம் சேரும்.


மஹாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம். அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு மகாளய அமாவாசை புரட்டாசி சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

மஹாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும். இந்த ஆண்டு மகாளய பட்சம் 2019 செப்டம்பர் 14 முதல் 28 செப்டம்பர் 2019 வரை உள்ளது. நாளை 28ம் தேதி மஹாளய அமாவாசை தினம் சனிக்கிழமையில் வருகின்றது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு புரட்டாசி சனிக்கிழமை வருவதால் அது சிறப்பான மஹாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது.


மஹாளயத்தை மறக்காதீங்க
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க

வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.


மஹாளயத்தை மறக்காதீங்க
இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு எங்கள் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க

வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.



ஏழைகளளுக்கு உதவி பண்ணுங்க
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும். அன்னதானம் கொடுக்கலாம் இயன்றவர்கள் மிதியடி, போர்வைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவானின் ஆசி கிடைக்கும். ஏழைகளுக்கு உதவியும் மரியாதையும் கொடுத்தால் போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.


ஏழைகளளுக்கு உதவி பண்ணுங்க
சனி அமாவாசை தினத்தில் ஏழை எளியோருக்கு உதவி செய்ய வேண்டும். அன்னதானம் கொடுக்கலாம் இயன்றவர்கள் மிதியடி, போர்வைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஏழை மக்களின் உருவில் சனி பகவான் இருக்கிறார். அவர்களுக்கு உதவி செய்வதால் சனி பகவானின் ஆசி கிடைக்கும். ஏழைகளுக்கு உதவியும் மரியாதையும் கொடுத்தால் போதும் சனி பகவானின் ஆசி கிடைக்கும்.


முன்னோர்களுக்குப் படையல்
மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.


முன்னோர்களுக்குப் படையல்
மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.
நன்றி ஒன் இந்தியா.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

நாளை மகாளய அமாவாசை... முன்னோர்களின் ஆசியை பெற மறக்காமல் இதை செய்யுங்கள்..!!


நாளை மகாளய அமாவாசை... முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம்..!!


🌚ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை திதியின்போது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறந்தது.

🌚பொதுவாக, பித்ருக்கள் என்று அழைக்கப்படும் முன்னோர்களை வழிபடுவதற்கு உகந்த தினம் அமாவாசை. முன்னோர்களுக்கு அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து, அவர்களை வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

🌚அந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் முன்னோர்களின் ஆசிப்பெற்று, நமது பாவங்கள் அனைத்தும் விலகும்.

🌚அதிலும் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்கள் சிறப்பு பெற்ற தினங்களாகும்.

🌚இவற்றில் புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மட்டும் 'மகாளய அமாவாசை" என்று அழைக்கப்படுகிறது.

🌚இந்த ஆண்டு மகாளய அமாவாசை நாளை புரட்டாசி மாதம் 11ஆம் தேதி செப்டம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை அதிகாலை 3.08 மணிக்கு உத்திரம் நட்சத்திரம் கூடிய நாளில் மகாளய அமாவாசை தொடங்குகிறது.

🌚மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவறவிட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், இது அதற்கான முழுப்பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வருவதாக ஐதீகம்.

🌚மறைந்த பெற்றோர் மற்றும் மூதாதையரை மனதில் நினைத்து இந்த நாளில் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் செய்ய வேண்டும்.

🌚இந்த மகாளய அமாவாசையில் பித்ரு தோஷம் நீங்க திதி தர்ப்பணம் கொடுங்கள். இந்த மகாளய அமாவாசையில் இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது நல்லது. தோஷங்கள் இருந்தாலும் அகலும். முக்கியமாக இந்த மகாளய அமாவாசையில் தானம் செய்வது சிறப்பான பலன்களை தரும்.

எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும்?

🌚அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்

🌚தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்

🌚தீபம் - கண்பார்வை தெளிவடையும்

🌚அரிசி - நாம் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் நீங்கும்

🌚நெய் - தீராத நோய்களை போக்கும்

🌚பால் - துன்பங்கள் நீங்கும்

🌚பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்

🌚தேங்காய் - நினைத்த காரியம் ஈடேறும்

🌚நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்

🌚பூமி தானம் - ஸ்வர தரிசனம் உண்டாகும்

🌚அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.

தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் :

🌚உடல் மற்றும் மனம் சம்மந்தமான வியாதிகளில் இருந்து நம்மை விடுவிக்கும்.

🌚மனதில் அமைதியை கொண்டு வரும்.

🌚பித்ரு தோஷம் விலகும்.


வியாழன், 26 செப்டம்பர், 2019

நவராத்திரி ஸ்பெஷல்... கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது?


நவராத்திரி ஸ்பெஷல்... கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது?
கொலு மேடையும், பொம்மைகளும் !!


🌟 நவராத்திரி விழா செப்டம்பர் 29ஆம் தேதி (புரட்டாசி 12) ஞாயிற்றுக்கிழமை அன்று ஆரம்பமாகிறது. கொலு மேடைக்கு பூஜை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

🌟 புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி பத்து நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகையே நவராத்திரி ஆகும். இந்தப் பண்டிகை எல்லா மாநிலங்களிலும் வௌ;வேறு பெயர்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

🌟 நவராத்திரியின் சிறப்பே பல விதமான மண்ணாலான பொம்மைகளை கொண்டு கொலு வைப்பதுதான். அவரவர் வசதிப்படி முப்பெரும் தேவியை குறிக்கும் விதமாக மூன்று படிகளாகவோ அல்லது சக்தியின் சக்கரத்தை குறிக்கும் விதமாக ஐந்து படிகளாகவோ, சப்தமாதர்களை குறிக்கும் ஏழு படிகளாகவோ, நவகிரகங்களை குறிக்கும் ஒன்பது படிகளாகவோ வைக்கலாம்.

கொலு மேடைக்கு பூஜை :

🌟 கொலு வைப்பதற்கு முன் கொலு மேடைக்கு பூஜை செய்வது முக்கியம். ஒரு நூல் சுற்றிய கும்பத்தில், பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலைப்பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.

🌟 குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்ய வேண்டும்.


கொலுவில் பொம்மைகள் வைக்கும் வழக்கம் எப்படி உருவானது?

🌟 சுரதா என்ற அரசரிடம், அவரது எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து வெற்றி பெறுவது என்பது ஆகாத காரியம் என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

🌟 காளியை வணங்கினால் எதிரிகள் காணாமல் போவார்கள் என்று குருதேவர் கூறினார். அதன்படி காளிதேவியை மண்ணால் செய்து வழிபட்டார் மன்னர் சுரதா.

🌟 காளிதேவி, அரசரின் தவத்தால் மகிழ்ந்து, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள்.

🌟 அத்துடன் 'பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணில் என்னை வடிவமைத்து பூஜித்ததால் உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்" என்ற ஆசி வழங்கினாள்.

🌟 இதுவே கொலுவில் மண்ணால் செய்யப்படும் பொம்மைகள் இடம் பெற காரணமாகும்.


செவ்வாய், 24 செப்டம்பர், 2019

முன்னேற்றம் தரும் மொரீசியஸ் முருகன் கோவில்


அருள்மிகு மொரீசியஸ் முருகன் கோவில், ரோஸ்கில்ஸ், தலைநகர் போர்ட் லூயிசில்

*முன்னேற்றம் தரும் மொரீசியஸ் முருகன் கோவில்*
   
மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது.

இந்தியாவிலிருந்து அரபிக்கடல், இந்துமகா சமுத்திரம் வழியாக உலகின் தென்மேற்கு மூலைக்குச் சென்றால் ஆப்பிரிக்க கண்டத்தை ஒட்டியுள்ள மடகாஸ்கர் தீவுக்கு அருகில் உள்ளது மொரீசியஸ் தீவு.

கடலும், மலையும் கரும்புக் காடுகளும் நிறைந்து, இயற்கை அன்னை தொட்டில் கட்டித் தூங்க வைக்கும் அத்தீவிற்கு, பிரெஞ்சுக்காரர்களும், ஆங்கிலேயர்களும் ஆட்சியாளர்களாக இருந்த போது, தமிழகத்திலிருந்து அந்த மண்ணை வளப்படுத்த தமிழர்களும் சென்றுள்ளனர்.

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே சென்றுள்ள தமிழர்கள், இன்றைய மொரீசியஸ் மக்கள் தொகையில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

அதே போல் மொரீசியஸ் தமிழ் மக்கள் சார்பில், தமிழ் கோவில்கள் கூட்டமைப்பு என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்தி, தமிழகம் போல பல ஆலயங்களும் அங்கே அமைக்கப்பட்டுள்ளன.

அத்தோடு அந்த ஆலயங்களில் சிறப்பாக விழாக்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மொரீசியசில் பல தமிழக கட்டிட சிற்பக் கலையின் பாணியில் கோவில்கள் இருப்பினும், தலைநகர் போர்ட் லூயிசில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ரோஸ்கில்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோவில் காண்பவர்களைக் கவரும்படி அமைந்திருக்கிறது. இது 1920 ஆண்டு கட்டப்பட்ட கோவில்,

திருத்தணி முருகன் கோவில் என்ற பெயரில் அமைந்த இந்த ஆலயம், நூற்றாண்டு விழா கொண்டாடும் நிலையில் இருக்கிறது.

*ஆலய அமைப்பு*

வண்ணங்கள் பளிச்சிடும் சுதை வேலைப்பாடு நிறைந்த 3 நிலை ராஜகோபுரம் தமிழர்களை தலை நிமிரச் செய்வதாக உள்ளது.

ஆலயத்திற்குள் நுழைந்தால் பலி பீடம், பளபளவென்ற கொடிமரம், மயில் வாகனம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.

மயில் வாகனத்தின் எதிரே மூலவர் முருகப்பெருமான் தனி விமானத்தின் கீழ், கருவறை உள்ளே காட்சி தருகின்றார்.

அழகுக்கு அழகு சேர்க்கும் இந்த முருகப்பெருமான் மனைவியர் யாரும் இல்லாமல், தனித்து நின்ற கோலத்தில் அருள்கிறார்.

இடது கையை இடுப்பில் வைத்தபடியும், வலது கையை தூக்கியவாறு அதில் பூங்கொத்து வைத்துக்கொண்டும், வேல் தாங்கியபடி உள்ள இவரது உருவம் கண்களைக் கவருவதாக இருக்கிறது.

முருகப்பெருமானின் சன்னிதிக்கு வலதுபுறம் அமர்ந்த நிலையில் விநாயகர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.

முருகனுக்கு இடதுபுறம் ஐந்து தலை நாகம் குடைபிடிக்க நான்கு கரங்களுடன் மாரியம்மன் அமர்ந்துள்ள தனிச் சன்னிதி உள்ளது.

இந்த இரு தெய்வங்களும் தெற்கு பார்த்து இருக்கிறார்கள். மண்டபத்தில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் சித்திரம் வரையப்பட்டுள்ளது.

பெரிய மண்டபத்தின் முன்னே முதலில் திருமால் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவருக்கு எதிரே கருடன் வீற்றிருக்கிறார்.

அடுத்து சிறு கோவிலில் நந்தி வீற்றிருக்க, லிங்க சொரூபமாக சிவபிரான் காட்சி தருகிறார். அதன் எதிரே நவக்கிரகங்களின் கூட்டமைப்பு இருக்கிறது.

*விழாக்கள்*

இந்த ஆலயத்தில் தைப்பூசம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

தமிழர்கள் மட்டுமல்லாது பிற மொழி பேசுவோரும் ஆண், பெண் பாகுபாடின்றி காவடி எடுத்து, நேர்த்திக்கடன் செலுத்துவது சிறப்பானதாகக் சொல்லப்படுகிறது.

கந்த சஷ்டி விழாவின் ஆறு நாட்களும் அபிஷேகங்களும், ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரத்திலும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

சந்தனக் காப்பில் முருகனை கண்டுகளிப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்படுகிறது.

கார்த்திகை தீபத்தன்று கோவிலிலும், தங்கள் வீடுகளிலும் தீபம் ஏற்றுவது தமிழர்கள் மரபு. இங்கும் அதே போன்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில், இந்த ஆலயத்தில் உள்ள மாரியம்மனுக்கு கஞ்சி வார்த்தல் விழா சிறப்பாக நடைபெறுகிறது.

*புரட்டாசி சனிக்கிழமைகளில், குறிப்பாக கடைசி வாரம் ‘கோவிந்தன் விழா’ கொண்டாடப்படுகிறது.*

அன்றைய தினம் பக்தர்கள் நெற்றியில் நாமமிட்டுக்கொண்டு பெருமாளை, வழிபடுகிறார்கள்.

இத்திருக்கோவிலில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் திரவுபதி அம்மன் ஆலயம் அமைத்து மகாபாரதத்தை நினைவு கூருகிறார்கள்.

மொரீசியஸ் சுதந்திர தினமான மார்ச் 12-ந் தேதி இந்த ஆலயத்தில் மக்கள் மஞ்சள் ஆடை உடுத்தி தீமிதி உற்சவம் சிறப்பானதாக நடைபெறுகிறது. மொரீசியஸ் முருகப்பெருமான் ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

கடல் கடந்தும், காலங்கள் கடந்தும் தமிழ் தெய்வீகத்தையும் கலாசாரத்தையும் காப்பாற்றி வரும் மொரீசியஸ் தமிழர்களை வாழ்த்துவோம்.

ௐ முருகா, வடிவேல் முருகா, வெற்றிவேல் முருகா

வெற்றி திருநாள்... நவராத்திரி சுபராத்திரி...


வெற்றி திருநாள்....
விஜயதசமி நாளன்று அம்பிகையை பார்வதியின் ஸ்துால வடிவமான விஜயாம்பாளாக அலங்கரிக்க வேண்டும். பூஜையறையில் மலர்க்கோலமிட வேண்டும். பால் பாயாசம், இனிப்பு வகைகள், பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் ஆகியவற்றை நைவேத்யமாகப் படைக்க வேண்டும். இந்த வழிபாட்டின் மூலம் சகல சவுபாக்கியமும் உண்டாகும்.
மகிஷாசுரன், தனக்கு ஒரு பெண்ணால் மட்டுமே மரணம் நேர வேண்டும் என்று வரம் பெற்றான். வரத்தின் பலத்தால் தேவர்களைத் துன்புறுத்தினான். இதற்கு முடிவு கட்ட எண்ணிய சிவன் தன் ஆயுதமான திரிசூலத்தை அம்பிகைக்கு வழங்கினார். திருமால் உள்ளிட்ட தேவர்களும் தங்களின் ஆயுதங்களைக் கொடுத்தனர்.
சிங்க வாகனத்தில் புறப்பட்ட அம்பிகை அசுரனைக் கொன்று வெற்றி வாகை சூடினாள். விஜயதுர்கா, மகிஷாசுரமர்த்தினி என்று பெயர் பெற்றாள். இந்த வெற்றிக்குரிய நன்னாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது.
பாட வேண்டிய பாடல்
மாலயன் தேட மறை தேட வானவர் தேட நின்ற
காலையும் சூடகக் கையையும் கொண்டு கதித்தகப்பு
வேலை வெங்காலன் என் மேல் விடும் போது வெளிநில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பனிமொழியே.
........
நவராத்திரி வழிபாடு ஏன் தோன்றியது
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், அதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.
முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த அரக்கர்களை கண்டு அஞ்சி நடுங்கினர்.
இப்படியே போனால் மக்கள் தாங்கமாட்டார்கள் என்று எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டனர். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தனர். ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். அதனால் தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தித்தனர்.
மக்களின் துன்பம் கண்டு சகியாத அவளும் அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூவரும் தங்களுடைய சக்திகளை எல்லாவற்றையும் ஒன்று திரட்டி அன்னைக்கு அளித்துவிட்டு, சிலை என ஆனார்கள். அதே போல இந்திரனும் திக்குப் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள்.
அப்படி அவர்கள் நின்றதால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கம் வந்தது. அன்னை அந்த ஆயுதங்களை பத்துக் கரங்களில் தாங்கி, போர்க்கோலம் பூண்டு சும்ப, நிசும்பர்களையும், அவர்களது படைத்தளபதிகளான மது, கைடபன், ரக்தபீஜனையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
அவள் வெற்றி பெற்ற தினமே விஜயதசமி. ஒன்பது நாட்கள் போர் விடாமல் நடந்தது. அதனாலேயே நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம். ஏன் ராத்திரி? ஒன்பது பகலில் கொண்டாடலாம் என்று கேள்வி எழுவது சகஜம்.
அந்நாட்களில் போருக்கு என்று சில சட்ட திட்டங்கள் உண்டு. மாலை நேரம் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு போர் புரிய மாட்டார்கள். படைகள் தங்கள் கூடாரங்களில் ஓய்வெடுத்துக் கொள்ளும். அப்போது அன்னையின் படைக்கு ஊக்கம் கொடுக்கவும், மறுநாளைய போரில் உற்சாகமாகப் போரிடவும் வேண்டி அன்னையைக் குறித்த ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இது ஒன்பது இரவுகள் நடந்தது. அதனாலேயே நாம் நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
........
ஆண்டுக்கு இருமுறை கொண்டாட்டம்
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்றும் பெயர்.
இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமம். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய் நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே வழக்கத்தில் உள்ளது.
......
அம்பாளின் விருப்பம்
நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம்.
விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவத்தை சக்தியாலும், வறுமையை செல்வத்தினாலும், அறியாமையை ஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லா செயல்களும் எளிதாக வெற்றி பெறும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
...........
நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும் பெயருண்டு.
சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை. மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன், கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன் குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள். அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
.........
எந்த படியில் என்ன பொம்மை வைக்க வேண்டும்?
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
* முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
* மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
* நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
* ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
* ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
* ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
* எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள்,பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.
.......
கொலுமேடை பூஜை
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.
..........
நவராத்திரி நாமாவளி!
நவராத்திரி நேரத்தில் அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் எனச் சொல்ல நேரமில்லாதவர்கள் இந்த சிறிய நாமாவளிகளைச் சொல்லலாம். மூன்று தேவியருக்கும் தனித்தனியாக உள்ள இந்த பதினெட்டு நாமாவளிகளும் மிகுந்த சக்தி வாய்ந்தவை.
துர்க்கா தேவி
ஓம் துர்க்காயை நம
ஓம் மகா காள்யை நம
ஓம் மங்களாயை நம
ஓம் அம்பிகாயை நம
ஓம் ஈஸ்வர்யை நம
ஓம் சிவாயை நம
ஓம் க்ஷமாயை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் உமாயை நம
ஓம் மகாகௌர்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் தயாயை நம
ஓம் ஸ்கந்த மாத்ரே நம
ஓம் ஜகன் மாத்ரே நம
ஓம் மகிஷ மர்தின்யை நம
ஓம் சிம்ஹ வாஹின்யை நம
ஓம் மாகேஸ்வர்யை நம
ஓம் திரிபுவனேஸ்வர்யை நம
........
லட்சுமி ஸ்ரீதேவி
ஓம் மகாலக்ஷ்ம்யை நம
ஓம் வரலெக்ஷ்ம்யை நம
ஓம் இந்த்ராயை நம
ஓம் சந்த்ரவதனாயை நம
ஓம் சுந்தர்யை நம
ஓம் சுபாயை நம
ஓம் ரமாயை நம
ஓம் ப்ரபாயை நம
ஓம் பத்மாயை நம
ஓம் பத்மப்ரியாயை நம
ஓம் பத்மநாபப் ப்ரியாயை நம
ஓம் சர்வ மங்களாயை நம
ஓம் பீதாம்பரதாரிண்யை நம
ஓம் அம்ருதாயை நம
ஓம் ஹரிண்யை நம
ஓம் ஹேமமாலின்யை நம
ஓம் சுபப்ரதாயை நம
ஓம் நாராயணப் பிரியாயை நம
........
சரஸ்வதி தேவி
ஓம் சரஸ்வத்யை நம
ஓம் சாவித்ர்யை நம
ஓம் சாஸ்த்ர ரூபிண்யை நம
ஓம் ஸ்வேதா நநாயை நம
ஓம் ஸுரவந்திதாயை நம
ஓம் வரப்ரதாயை நம
ஓம் வாக்தேவ்யை நம
ஓம் விமலாயை நம
ஓம் வித்யாயை நம
ஓம் ஹம்ஸ வாகனாயை நம
ஓம் மகா பலாயை நம
ஓம் புஸ்தகப்ருதே நம
ஓம் பாஷா ரூபிண்யை நம
ஓம் அக்ஷர ரூபிண்யை நம
ஓம் கலாதராயை நம
ஓம் சித்ரகந்தாயை நம
ஓம் பாரத்யை நம
ஓம் ஞானமுத்ராயை நம
.........
மூன்று தேவியருக்கான நவராத்திரி ஸ்லோகம்
கிராஹுர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீ மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸ ஹசரீ மத்ரித நயாம்!
துரீயா காபி த்வம் துரதிகம் நிஸ்ஸீம மஹிமா
மஹாமாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி!!
பொருள்: இறைவனோடு இணைந்திருக்கும் சக்தியே! வேதங்களின் உட்பொருளை உணர்ந்தவர்கள் உன்னை சரஸ்வதி என்றும், லட்சுமி என்றும், சிவனின் பத்தினியாகிய பார்வதி என்றும் பலவிதமாகக் கூறுகிறார்கள். மனதிற்கும் வாக்கிற்கும் அப்பாற்பட்டவளே! எல்லையற்ற மகிமை கொண்டவளே! மகாமாயாவாக இருந்து உலகை இயக்கச் செய்து பிரமிக்க வைப்பவளே! அருள்புரிவாயாக.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

நவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்


நவராத்திரி 2019: கொலு வைத்து கொண்டாடினால் அம்பிகை குடியேறுவாள்.

 நவராத்திரி விழாவை கொலு வைத்து கொண்டாடுவது மரபு. நவராத்திரியன்று, பெண்கள் வீடுகளில் கொலு வைத்து, விரதம் இருந்து, அம்மனை வழிபட்டால் நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது. பத்து நாட்களும் விதவிதமாக பிரசாதங்கள் படையலிட்டு, பாடல்கள் பாடி, அம்மனை வழிபடுவார்கள். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை வரும் 29ஆம் தேதி தொடங்குகிறது. அன்று முதல் கொலு வைக்கலாம்.


கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்பதில் ஒருமுறை உள்ளது. இருக்கும் வசதிகளைப் பொறுத்து ஒற்றைப்படை எண்ணில் கொலு அமைக்க வேண்டும். மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி பண்டிகையில் படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.


பராசக்தியின் அம்சம்
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பராசக்தி ஒவ்வொரு தேவியின் வடிவில் ஒரு வயது முதல் பத்து வயது கன்னிப்பெண் வடிவில் அவதாரம் செய்வதாக ஐதீகம். நவராத்திரி பண்டிகை கொண்டாடும் ஒன்பது நாட்களும் கொலு வைத்து பூஜித்தால் எல்லா தெய்வ வடிவங்களிலிருந்தும் பராசக்தி வெளிப்படுவாள் என்பது ஐதீகம். ஒன்பது நாட்களிலும் தேவியாக பாவித்துத் துதிக்க, நமக்குச் சொந்தமல்லாத, பிறர் வீட்டுக் குழந்தையையே அழைத்து வந்து உபசரிக்க வேண்டும்.


நவராத்திரி கொலு
அனைத்திலும் தேவியே இருக்கிறார் என்பதை உலகுக்கு உணர்த்தவே நவராத்திரி நாட்களில் கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் கொலு வைத்தால், அம்பிகை அனைத்து அம்சமாக நம் வீட்டில் எழுந்தருளி விட்டாள் என்பது நம்பிக்கையாகும். ஒரு நவராத்திரிக்கு கொலு வைத்தால் பிறகு வாழ்நாள் முழுவதும் நவராத்திரி நாட்களில் கொலு வைக்க வேண்டும் என்பது நம்பிக்கை.




விக்னங்கள் தீர்க்கும் விநாயகர்
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக தேவி பாகவதம் சொல்கிறது.


படி தத்துவம்
கொலுமேடை 9 படிகள் கொண்டதாக அமைப்பது சிறப்பு. சிலர் 5, 7, 9, 11 என வசதிக்கு ஏற்ப படி அமைத்து கொலு பொம்மைகளை அலங்கரிப்பார்கள். கீழிருந்து மேலாக படிகளும் அவற்றில் வைக்கப்படும் பொம்மைகளும் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


புல் முதல் மிருகங்கள்வரை
முதலாம் படியில் ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வகை பொம்மைகளும் வைக்கலாம். இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள். மூன்றாம் படியில் மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள். நான்காம்படியில் நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள். ஐந்தாம்படியில் ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள் வைக்கலாம்.


தெய்வங்கள்
ஆறாம்படியில் ஆறறிவு படைத்த மனிதர்கள் பொம்மைகள். ஏழாம்படியில் மனித நிலையிலிருந்து உயர் நிலையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் போன்றோரின் பொம்மைகள் வைக்கலாம். எட்டாம்படியில் தேவர்கள், அஷ்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகளை வைக்கலாம். ஒன்பதாம்படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிபராசக்தி வைக்கவேண்டும்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

நல்வாழ்வு அருளும் நவராத்திரி வழிபாடு - 29-9-2019 நவராத்திரி வழிபாடு ஆரம்பம்


நல்வாழ்வு அருளும் நவராத்திரி வழிபாடு - 29-9-2019 நவராத்திரி வழிபாடு ஆரம்பம்

‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி.

‘நவம்’ என்றால் ஒன்பது என்று பொருள். ஒன்பது நாட்கள் பராசக்தியின் ஒன்பது விதமான அம்சங்கள் கொண்ட ஒன்பது தேவியரை வழிபடும் பண்டிகைதான் நவராத்திரி. பெண்மைக்கு முக்கியத்துவம் தந்து, ‘தீமையை அழிக்கும் வலிமை கொண்டது பெண் சக்தி’ என்று உலகத்தாரை உணரவைத்த மகாசக்தி பொருந்திய பெண் தெய்வத்தின் யுத்த வரலாறுதான் இந்த நவராத்திரி விழாவின் அடிப்படை.

புராணங்களின்படி தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் பெருங்கொடுமைகள் புரிந்தவன் மகிஷன் என்னும் அசுரன். எருமை தலை கொண்டதால் மகிஷன் என்று பெயர் பெற்றார். இவனை அழிக்க மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்களின் சக்திகளில் இருந்து தோற்றுவித்த மகாசக்தி, தொடர்ந்து ஒன்பது நாட்கள் இரவு பகலாக அவனை எதிர்த்துப் போராடி பத்தாம் நாள் அவனை வெற்றி கொண்டு மகிஷாசுரமர்த்தினியாக அருள்புரிந்த நிகழ்வே நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

இந்த நவராத்திரி விழாவானது, புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் விரதங்கள், இரவு நேர பூஜை வழிபாடுகளோடு நடைபெறும். பத்தாம் திதியான அம்பிகை, அசுரனை வெற்றிகொண்ட தசமி திதியுடன் இந்த விழா நிறைவு பெறும்.

நம்மால் கொண்டாடப்படும் ஒவ்வொரு பண்டிகைகளின் பின்னணியிலும், மகத்தான காரணம் ஒன்றை நம் ஆன்மிகம் வைத்திருக்கும். அதன்படி நவராத்திரி விழாவும் அதன் நாயகிகளான துர்க்காதேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகளை முன்னிறுத்தி சக்தியின்றி இயங்காத வாழ்வின் சத்தியத்தை நமக்கு புரியவைக்கிறது.

ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இதன் முதல் மூன்று நாட்கள் வணங்கப்படும் துர்க்காதேவி, இச்சாசக்தியாக நமக்குள் மறைந் திருக்கும் தீய எண்ணங்களை அழித்து நல்ல மனிதனாகும் வல்லமையை அருள்கிறாள். அடுத்து வரும் மூன்று நாட்கள் மனித வாழ்விற்குத் தேவையான எல்லா செல்வங்களையும் தந்து நம்மை கவலைகள் அற்ற முழு மனிதனாக்கும் கிரியாசக்தியாக அன்னை மகாலட்சுமி வணங்கப்படுகிறாள். கடைசி மூன்று நாட்கள் மனித வாழ்வின் அனைத்தும் உணர்ந்து ஞானம் பெற்று மோட்சம் அடைய வழிகாட்டும் ஞானசக்தியான சரஸ்வதியை வணங்கி இம்மை வாழ்விலேயே நற்பேறு பெறுகிறோம்.

கொலுவின் தத்துவம்

நவராத்திரி வந்துவிட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் கொண்டாட்டம்தான். பலவிதமான பொம்மைகளை தங்கள் கற்பனைக்கேற்ப வடிவமைத்து வருபவரின் பாராட்டைப் பெறலாமே. பொம்மைகள் என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அம்பிகைக்கும்தான். எப்படி என்கிறீர்களா?

சுரதா எனும் அரசர், தன் எதிரிகளை அழிக்க தன் அரசவை குருவிடம் ஆலோசனை கேட்டார். குரு சொன்னபடி, தூய களிமண்ணால் காளி ரூபம் வடித்து, அதை ஆவாகனம் மற்றும் பூஜைகள் செய்து வழிபட்டு, அன்னையின் அருளால் பகைவர்களை அழித்தான் என்பது புராணக்கதை.

தேவி புராணத்தில் அம்பிகை கூறிய “ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜிப்போருக்கு, நான் சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்” என்ற வாக்கின்படி சுரதா அரசர் செயல்பட்டு தன் பகைவர்களை வென்றார்.

எனவேதான் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்குப் பிடித்த பொம்மைகளை வைத்து அலங்கரித்து அம்மன் அருளை வேண்டுகின்றனர். மனிதன் படிப்படியாக ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து பரிணாம வளர்ச்சி பெற்று, இறுதியில் கடவுளுடன் இரண்டறக் கலக்க வேண்டும் எனும் தத்துவத்தையே கொலுப்படிகளும், அதில் வைக்கப்படும் பொம்மைகளும் உணர்த்துகின்றன. குறிப்பாக அன்னை பராசக்தியின் அனைத்துப் படைப்புகளையும் உள்ளடக்கிய கொலு, அன்னையின் விஸ்வரூப தரிசனம் என்றும் கூறலாம். ஒரு செல் உயிர்கள் முதல் பல்வேறு நிலை கொண்ட பரிணாம வளர்ச்சி உயிர்கள் வரை அனைத்தும் அந்த அன்னையின் படைப்பே என்பதையும் உணர்த்தும் கொலு இது.

ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்துள்ளனர் ஆன்மிக நெறியாளர்கள். பெண்களை மையப்படுத்தி கொண்டாடப்படும் நவராத்திரிக்கும், அற்புதமான வழிபாட்டு முறைகள் உள்ளன. இந்த 9 நாட்களும் வழிபட வேண்டிய சக்திகள், அவர்களுக்கு ஏற்ற மலர்கள், கோலங்கள், ராகம், நிவேதனம், இசைக்கருவி என அனைத்து பற்றியும் வேதங்களில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி முதல் மூன்று நாட்கள் துர்க்காதேவியின் அம்சங்களான மகேஸ்வரி, கவுமாரி, வராகி ஆகிய சக்தி களையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமியின் அம்சங்களான மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி ஆகிய சக்திகளையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியின் அம்சங்களான பிரம்மி, சாம்பவி, நரசிம்மி ஆகிய சக்தி களையும் வழிபட்டு வாழ்விற்குத் தேவையான வீரம், செல்வம், ஞானம் ஆகியவற்றைப் பெறுகிறோம். நவராத்திரியின் ஒன்பது தேவதைகளுள் ஏழு தேவதைகள் சப்தமாதாக்கள் எனப்படும் சப்தகன்னியர். இன்னொருவர் மகாலட்சுமி. இவர்களுடன் சேர்ந்து நரசிம்மியையும் வழிபடுகிறோம்.

தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு குறிப்பிட்ட முறைப்படி பூஜைகளும், பாராயணமும் செய்யவேண்டும் என முறைபடுத்தப்பட்டுள்ளது. அவரவர் சக்திகேற்றவாறு மகாசக்தியை ஆவாகனம் செய்து, தினமும் நிவேதனம் படைக்க வேண்டும். துர்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும், சரஸ்வதி அஷ்டோத்திரமும் படித்து தேவியை துதிக்க வேண்டும். வயது வாரியான கன்னிப்பெண்கள் மற்றும் சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களை அம்மன் வடிவமாக ஆராதிக்க வேண்டும்.

பெண்களால் பெண் சக்திகளை ஆராதிக்கும் தெய்வீக பண்டிகையான நவராத்திரியில், வீட்டில் சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து தங்களால் முடிந்த அளவில் கொலுப்படிகள் அமைத்து அலங்கரித்து, முழு சிந்தையையும் அந்த மகாசக்தியின் மீது செலுத்தி, அனைவரையும் வீட்டுக்கு வரவேற்று, அவர்களை சக்திகளாக பாவித்து உபசரிக்க வேண்டும். அவர்களின் மனமும், வயிறும் நிறைந்தாலே, முப்பெரும்தேவிகளின் அகம் குளிர்ந்து வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

‘வசதி உள்ளவர்கள் அனைத்து வழிபாடுகளையும் முறையே செய்ய முடியும். நமக்கு செய்ய வசதியில்லையே’ எனும் மனக்குறையை தவிர்த்திடுங்கள். குத்துவிளக்கையே தேவியின் வடிவமாக பாவித்து முடிந்ததை பிரசாதம் செய்து ஒரு பெண்ணை அழைத்து அவர் களுக்கு மனதார தாம்பூலம் தந்து உபசரித்தாலே இந்த பூஜையின் முழுப்பலனையும் அன்னை உங்களுக்கு அருள்வாள். அன்னைக்கு தேவை தூய அன்பு மட்டுமே. அதை அப்பழுக்கின்றி தந்தாலே, அனைத்து செல்வங்களையும் அவள் நமக்குத் தந்து ஆசீர்வதிப்பாள்.

மனங்களின் வேறுபாடுகளை களைந்து அனைவரும் ஒன்றுகூடி மகிழும் நவராத்திரியில், நவதேவியரை வழிபட்டு நல்வளங்கள் பெறுவோம்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

நவராத்திரி நாயகிகள்



நவராத்திரி

அகில உலகங்களையும் படைத்து ரட்சிக்கும் ஜகன்மாதாவான பராசக்தி, கருணை கொண்டு உயிர்களுக்கெல்லாம் அருள்கடாட்சிக்கும் அற்புதமான காலம்தான் நவராத்திரி.

யா தேவி ஸர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம

- என்று அம்பிகையின் அருமைபெருமைகளைப் போற்றுகிறது தேவி மஹாத்மியம். ஆண்டுக்கு நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்பட்டதாகப் பழைய நூல்கள் தெரிவிக்கின்றன.

வசந்த நவராத்திரி - பங்குனி மாதத்தில், ஸ்ரீராம நவமியையொட்டி கொண்டாடப்படுவது; வசந்த காலத்தில் வரும்.


ஆஷாட நவராத்திரி - ஆடி மாதத்தில் வருவது.

மக நவராத்திரி - மாசி மாதம் வருவது.

ஆஷாட நவராத்திரியும் மக நவராத்திரியும் இப்போது அவ்வளவாகப் பழக்கத்தில் இல்லை என்பதாலும், அம்பிகை உபாசகர்கள் மட்டுமே அநேகமாக இவற்றைக் கடைப்பிடிப்பதாலும், இவை குப்த நவராத்திரிகள் (மறைவான நவராத்திரிகள்) எனப்படுகின்றன.

சாரதா நவராத்திரி - இது, புரட்டாசி- ஐப்பசி மாதங்களில் வரும்; சரத் காலமாகிய புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படுவது. இதை மகா நவராத்திரி, தேவி சரண் நவராத்திரி, சரத் நவராத்திரி ஆகிய பெயர்களாலும் புராண நூல்கள் போற்றுகின்றன.

இந்தப் புண்ணிய காலத்தில், அம்பிகையின் திருக்கதைகளையும் அவளைப் போற்றும் துதிப்பாடல்களையும் படித்தும் பாடியும் வழிபடுவது விசேஷம். அவ்வகையில், அம்பிகையின் மறக்கருணையைப் போற்றும் திருக்கதைகளை அறிவோம்.

மது-கைடப சம்ஹாரினி

அதுவொரு பிரளய காலம். எங்கு பார்த் தாலும் பெரும் வெள்ளம். ஸ்ரீமகா விஷ்ணுவோ அரவணையில் நித்திரையில் ஆழ்ந்திருந்தார். அப்போது திடுமெனத் தோன்றினார்கள் மது-கைடபர் எனும் அசுரர்கள். அவர்கள் பார்க்கும் இடங்களிலெல்லாம் வெள்ளம். அதைக் கண்டவர்களுக்கு, அந்த வெள்ளத்தையும் அதைத் தாங்கிக் கொண்டிருக்கும் வஸ்துவையும் யார் படைத்திருப்பார்கள் என்று எண்ணம் எழுந்தது. அப்போது வானில் ஓர் ஒலி எழும்பியது மந்திரவடிவில். அதை உள்வாங்கிக்கொண்ட அசுரர்கள், தொடர்ந்து ஆகாயத்தில் பேரொளியைக் கண்டார்கள். தாங்கள் மனதில் வாங்கிய மந்திரத்தால், அந்தப் பேரொளியைத் தியானித்து தவமிருக்கத் தொடங்கினார்கள்.

அவர்களின் தவம், அனைத்துக்கும் ஆதாரமான ஆதி சக்தியை மகிழ்வித்தது. விளைவு... அசரீரியாகப் பேசினாள் அசுரரிடம்; ``வேண்டும் வரம் கேளுங்கள்’’ என்றாள். ``நாங்கள் விரும்போதுதான் மரணம் நிகழவேண்டும்’’ என்று வரம் கேட்டுப்பெற்றார்கள் அசுரர்கள். வரம் கிடைத்ததும் அவர்களின் அட்டுழீயம் ஆரம்பித்தது. பிரம்மனையே போருக்கு அழைத்தார்கள். நான்முகன் நாராயணனிடம் ஓடோடிச் சென்றார். அவரோ அரிதுயிலில் ஆழ்ந்திருந்தார். ஆகவே, பெருமாளைத் துயிலெழச் செய்யவேண்டி, யோக நித்ராதேவியை துதித்தார். அதன் விளைவாக விழித்தெழுந்த பெருமாள், அசுரரை எதிர்த்துப் போர்புரிந்தார்.

வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கமுடியாதபடி போர் நீண்டது. இந்த நிலையில் அங்கே தோன்றினாள் அம்பிகை. அவளே தங்களுக்கு வரம் தந்தவள் என்பதை அறியாத அசுரர்கள், அவள்மீது மோகம் கொண்டார்கள். இந்த நிலையில், ``நீங்கள் இருவரும் பெரும் வீரர்களாக இருக்கிறீர்கள். எனவே, என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்’’ என்றார் பெருமாள்.மோகம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த அசுரர்களோ, ``நாங்கள் கொடுப்பதற்கென்றே அவதரித்தவர்கள். வேண்டு மானால் உமக்கு வரம் தருகிறோம்’’ என்றனர். இதைத்தானே பெருமாளும் எதிர்பார்த்தார். எனவே, ``நீங்கள் இருவரும் என்னால் கொல்லப்படவேண்டும்’’ என்றார்.

நவராத்திரி நாயகியே சரணம்!
அவர் கேட்டதும்தான் நிலைமையை உணர்ந்தனர் அசுரர்கள். எப்படியேனும் தப்பிக்க நினைத்து, ``தண்ணீர் இல்லாத இடத்தில்வைத்து எங்களைக் கொல்லலாம்’’ என்றார்கள். அப்போதே பிரமாண்டமாக விஸ்வரூபம் எடுத்து, அசுரர்களைத் தூக்கி தன் தொடையில் வைத்து வதம் செய்தார், பெருமாள். தக்க தருணத்தில் தோன்றி அந்த அசுரர்கள் அழியக் காரணமாக இருந்ததால், அன்னையை `மதுகைடப சம்ஹாரினி’ எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் இந்தத் திருநாமத்தைத் தியானித்து, அம்பிகையை வழிபட்டால், தொழிலில் போட்டி-பகை போன்ற பிரச்னைகள் அனைத்தும் நீங்கும்; வாழ்வில் வெற்றிவாகை சூடலாம்.

மஹிசாசுர மர்த்தினி

கடும் தவமிருந்து `பெண்ணால் மட்டுமே மரணம் சம்பவிக்க வேண்டும்’ என்று பிரம்மதேவரிடம் வரம் கேட்டுப்பெற்றவன், மகிஷாசுரன். ஒருவர் சகலவிதத்திலும் வல்லமை பெற்றுவிட்டால், அவரைப் பெரும் அகங்காரம் தொற்றிக்கொள்ளும். அந்த அகங்காரத்துக்கு அடிமையானால், விளைவுகள் விபரீதமாகும். மஹிஷனுக்கும் அப்படியான நிலை வாய்த்தது. அனைவரையும் அடிமைப் படுத்தினான். வழக்கம்போல் தேவர்கள் பிரம்மனிடம் வந்து புலம்ப, அவர்களை அழைத்துக்கொண்டு சிவபெருமானிடம் சென்று சரணடைந்தார் பிரம்மன். சிவனாரோ, திருமாலிடம் சென்று வழி கேட்கும்படி பணித்தார். அப்படியே அனைவரும் திருமாலின் சந்நிதானத்துக்குச் சென்றார்கள்.

`` நம் அனைவரின் சக்தியும் ஒன்றிணைந்து பெரும் சக்தியாய் அவதரிக்கும். அந்தத் தேவி யால் அவன் அழிவான். ஆனால், நம் சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைந்து வெளிப்பட, பரமேஸ்வரனே சங்கல்பிக்க வேண்டும்’’ என்றார், திருமால். ஆகவே, அனைவரும் ஒன்றிணைந்து பரமேஸ்வரனைத் துதித்தார்கள். அக்கணமே அங்கே எழுந்தருளினார் பரமன். மறுகணம் அங்கிருந்த அனைவரது சக்திகளும் ஒன்றிணைய, தேவி ஒருத்தி தோன்றினாள். அவளின் திருவடிவில் இணைந்த சக்திகள் குறித்து அற்புதமாக விவரிக்கிறார் வியாசர்.

சிவனாரின் சக்தி - திருமுகமாகவும், எம சக்தி - கேசங்களாகவும், அக்னி சக்தி - முக்கண்களாகவும், சந்தியா சக்தி - புருவங் களாகவும், குபேர சக்தி - மூக்காகவும், பிரம்ம சக்தி - பல் வரிசையாகவும், அருண சக்தி - 18 திருக்கரங்களாகவும், இந்திர சக்தி - இடையாகவும், சந்திர சக்தி - மார்புகளாகவும், வசுக்களின் சக்தி - நகங்களாகவும், வருண சக்தி - துடை மற்றும் முழங்கால்களாகவும் தேவியின் திருவடிவத்தில் இடம்பெற்றிருந்தனவாம்.

நவராத்திரி நாயகியே சரணம்!
அந்தத் தேவியிடம், மும்மூர்த்தியர் முதலாக தேவர்கள் அனைவரும் தத்தமது ஆயுதத்தை வழங்கினார்கள். அவர்களை ஆறுதல்படுத்திய அம்பிகை, மஹிஷாசுரனுடன் போர் தொடுத்து, விரைவில் அவனை அழித்தாள். தேவர்கள் மகிழ்ந்தனர். ``மஹிஷாசுர தீரவீர்ய நிக்ரஹாயை நமோ நம’’ என்று போற்றித் துதித்தார்கள். நவராத்திரியின் அடுத்த மூன்று நாள்கள் மஹிஷாசுர மர்த்தினியாய் அம்பாளைப் போற்றித் துதிப்போம்; வறுமை, நோய், தடைகள் முதலான தீவினைகளை அழித்து நம்மை ரட்சிப்பாள் அந்தத் தேவி!

சும்ப-நிசும்ப சம்ஹாரம்

மஹிஷனைப் போன்றே `பெண்ணால் மட்டுமே அழிவு’ எனும் வரம் பெற்றவர்கள் சும்ப-நிசும்பர்கள். இந்த அசுரர்களின் அக்கிரமங்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, தங்களின் குரு தேவரான வியாழ பகவானின் வழிகாட்டுதல்படி, இமயமலைச் சாரலுக்குச் சென்று சக்தியைத் தியானித்து வழிபட்டார்கள் தேவர்கள். அவர்களுக்குக் காட்சி கொடுத்த அன்னை, தன் மேனியிலிருந்து காளியைத் தோற்றுவித்தாள்.

பின்னர், காளியுடன் அசுர்களின் எல்லைக்குச் சென்று தங்கினாள். அவளின் எழிற்கோலம் குறித்துக் கேள்விபட்ட அசுரர்கள், அவள் யாரென்பதை அறியாமல் அவள்மீது மோகித்தார்கள். போரிட்டாவது தங்கள் எண்ணத்தை நிறைவேற்றத் தீர்மானித்தார்கள். போர் மூண்டது. அலை அலையாய் வந்த அசுரப் படைகள், தேவியால் உருவாக்கப்பட்ட சக்திப்படையால் அழிக்கப் பட்டன. நிறைவில் அந்த அசுரர்களையும் அழித்தாள் தேவி சக்தி!

இந்த மூன்று சம்ஹாரக் கதைகளிலும் முதலாவதான மது-கைடப வதத்தின்போது வந்தவள் துர்கா என்றும், மகிஷாசுர சம்ஹாரத்தின்போது வந்தவள் மகாலட்சுமி அம்சம் என்றும், சும்ப-நிசும்பர் வதத்தின் போது வந்தவள் சரஸ்வதி என்றும் தேவி பாகவதம் போற்றுகிறது. இதையொட்டி நவராத்திரியின் முதல் மூன்று நாள்கள் துர்கையையும், அடுத்த மூன்று நாள்கள் திருமகளையும், கடைசி மூன்று நாள்கள் கலைவாணியையும் வழிபடவேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள்.

நாமும் முறைப்படி நவராத்திரி வழிபாடு களைச் செய்து வழிபடுவோம். வழிபாட்டு வேளையில், கீழ்க்காணும் அபிராமி அந்தாதிப் பாடலைப் பாடி அன்னையை வணங்குவோம்; சகல நன்மைகளும் உண்டாகும்.

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை

பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறைமுடித்த

ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு

செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே
நன்றி விகடன்.
Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

நவராத்திரி நோன்பு


நவராத்திரி நோன்பு

* விரதகாலம்
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி (புரட்டாசி) மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பாகும். இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூசை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் அனுட்டிக்கப்படும் நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

* தொன்ம நம்பிக்கை
மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

# நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
# நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[மேற்கோள் தேவை].
# இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

* பூசை முறை
ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.

* கும்பம் வைத்தல்
நறுமணமுள்ள சந்தனம், பூ (மலர்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாசம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

* குமாரி பூசை
குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும். பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

* விஜய தசமி
நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

* கன்னி வாழை வெட்டல்
ஆலயங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

* நவராத்திரி விரத நியதிகள்
# புரட்டாதி மாத வளர்பிறை பிரதமைத் திதியில் கும்பம் வைத்து நவமி வரை பூசை செய்தல் வேண்டும்.
# வீடுகளிலும் ஆலயங்களிலும் கொலுவைத்தல் வேண்டும்.
# விரதம் கைக்கொள்ளுவோர் அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் முதல் எட்டு நாட்களும் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.
# ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாறணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.
# விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பாராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாறணையைப் பூர்த்தி செய்யலாம்.
# தசமி திதியில் பாறணை செய்தல் வேண்டும்.
# இவ் விரதத்தை ஒன்பது வருடங்கள் தொடர்ந்து அனுட்டித்தல் வேண்டும்.
நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது

* விரதகாலங்களில் ஓதத்தக்க தோத்திரப்பாடல்கள்
# தேவி மகாத்மியம்
# அபிராமி அந்தாதி
# துர்க்கா அஷ்டகம்
# இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)
# சகலகலாவல்லி மாலை
# சரஸ்வதி அந்தாதி
# மஹிஷசுரமர்த்தினி தோத்திரம்.

Posted by
மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144