ஞாயிறு, 22 செப்டம்பர், 2019

குருப்பெயர்ச்சி 2019-2020 : நன்மைகளை பெறும் ராசிகள் !!



குருப்பெயர்ச்சி 2019-2020... இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கு...!!
குருப்பெயர்ச்சி 2019-2020 : நன்மைகளை பெறும் ராசிகள் !!


நவகிரகங்களில் குரு :

🌟நவகிரகங்களில் பொது சுபராக இருந்து வாழ்வில் அனைத்துவிதமான செல்வங்களையும் அளிக்கக்கூடியவரும், பிரபஞ்சத்தின் தோற்றத்திற்காக உருவான சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கிரஸ முனிவருக்கு மகனாக பிறந்த பிரகஸ்பதி தன்னுடைய ஞானத்தால் உயர்ந்து பின்னாளில் வியாழ பகவான் என்றும், குருபகவான் என்றும் அழைக்கப்படுகிறார்.

குருவின் காரகங்கள் :

🌟குரு பல காரகங்களை கொண்டிருப்பினும், மானிடர் வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாத தனத்திற்கும், தனது வம்சத்தை அபிவிருத்தி செய்யும் புத்திர பாக்கியத்திற்கும் இவரே முக்கியகாரகர் ஆவார். அதனாலேயே தேவகுரு புத்திரகாரகன் என்றும், தனகாரகன் என்றும் போற்றப்படுகிறார். ஒருவருக்கு குருபலம் சாதகமாக இருப்பின் அவர் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் கடந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.

2019-2020ம் ஆண்டிற்கான குருப்பெயர்ச்சி :

🌟மங்களகரமான விகாரி வருடம் வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 11ஆம் (28.10.2019) தேதியின் பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் பிரதமை திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் அதிகாலை 03.14 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

🌟மங்களகரமான விகாரி வருடம் திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஐப்பசி மாதம் 18ஆம் (04.11.2019) தேதியன்று பின்னிரவு இயற்கை சுபரான குருதேவர் நவமி திதியில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் விடியற்காலை 05.17 மணிக்கு விருச்சக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவின் பார்வை பலம் :

🌟குரு எந்த ஸ்தானத்தை பார்க்கின்றாறோ அந்த ஸ்தானம் பலமும், அபிவிருத்தியும் அடைகிறது. அதாவது குரு, தான் நின்ற ராசியில் இருந்து 5,7,9 ஆகிய இடங்களை பார்க்கின்றார். குருவின் பார்வையில் ஐந்தாம் பார்வையும், ஒன்பதாம் பார்வையும் சிறப்பு பார்வைகளாக கருதப்படுகின்றன.

குருவின் பார்வையால் நன்மை பெறும் ராசிகள் :

மேஷம்

மிதுனம்

சிம்மம்
🌟குருபகவான் அவர் நின்ற வீட்டை காட்டிலும் அவர் பார்க்கும் வீட்டிற்கு அதிக சுப பலன்களை அளிக்கக்கூடியவர். குருவின் பார்வை பெறும் ராசிகள் பூரண சுப பலன்களை பெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக