தெய்வங்களும்.. வழிபாட்டு தினங்களும்.
* ஞாயிறு: கண்ணுக்குத் தென்படும் கடவுளான சூரியனை வணங்க ஏதுவான நாள். ‘ஆதித்ய ஹிருதயம்’ என்ற சுலோகத்தைச் சொல்லி வணங்க வேண்டும்.
* திங்கள்: சிவாலய தரிசனம் நன்மை தரும். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி பாடல்களைக் கொண்டு அம்பிகையையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.
* செவ்வாய்: முருகப்பெருமான் ஆலயத்திற்குச் சென்று, ஆறு விளக்குகள் ஏற்றி வழிபடுவதால் நினைத்தது நடக்கும். எதிரிகள் காணாமல் போவார்கள். கந்தசஷ்டி கவசம் படிப்பதும் நன்மை தரும்.
* புதன்: பெருமாளை சேவிப்பதற்கு ஏற்ற தினம். துளசி மாடத்திற்கு பூஜை செய்ய உகந்த நாள். விஷ்ணு சஹஸ்ரநாமம், நாலாயிர திவ்யபிரபந்தம் ஆகிய பாடல்களைப் பாராயணம் செய்தால் வாழ்வில் வளம் சேரும்.
* வியாழன்: நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பெரியவர் போன்ற மகான்களை ஆராதனை செய்யலாம். பகவத்கீதையைப் பொருள் புரிந்து படிப்பது நலன்களைப் பெற்றுத்தரும்.
* வெள்ளி: மகாலட்சுமி வழிபாடு நன்மைதரும். கோ-பூஜை செய்வது, பஞ்சமுக குத்துவிளக்கை ஏற்றி வைத்து பூஜிப்பது மிகவும் விசேஷம். அம்பிகையின் ஆலயங்களை தரிசிப்பது நன்மை தரும். மகாலட்சுமி ஸ்தோத்ரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்ரம், அன்னபூர்ணா அஷ்டகம் ஆகியவற்றைப் படிப்பதும் நல்லது.
* சனி: ஆஞ்சநேயர், கருடாழ்வார், நந்திகேஸ்வரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் என இறைவனுக்குத் தொண்டு செய்து இறைநிலை அடைந்த அடியவர்களை வணங்குவதற்கு சிறப்பான நாள். ராமாயணம், மகாபாரதம், சுந்தரகாண்டம், பெரியபுராணம் முதலான நூல்களைப் படித்தறியவும் இது ஏற்ற தினங்கள் ஆகும்.
* விநாயகப்பெருமானை எல்லா நாட்களிலும், எல்லா நேரத்திலும் வணங்கலாம். நினைத்தவுடன் நம் மனக்கண் முன் தோன்றுபவர் விநாயகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக