கோவில் கொடை விழா (திருவிழா) நடத்தப்படுவதன் பின்னாலிருக்கும் அறிவியல் காரணம் அறிவீர்களா?
பொதுவாகவே கோடை காலம் வந்துவிட்டாலே கோவில் (திருவிழா) கொடை விழாக்களுக்கு பஞ்சமே இருக்காது, கிராமங்களில் இது மிகவும் அழகாக களைகட்டி கிராமங்கள் முழுவதுமே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஆனால் இதற்குப் பின்னால் பல அறிவியல் காரணங்களும் பொதிந்து கிடைக்கின்றன.
பொதுவாக கிராமங்களில் திருவிழா என்றாலே, வேப்பிலை மற்றும் மஞ்சளின் பங்குதான் அதிகமாக இருக்கும். மேலும் அதிகமாகவும் இடம்பெற்றிருக்கும். திருவிழா நாட்களில் ஒரு நாள், மூன்று நாட்கள் அல்லது பத்து நாட்கள் என்ற வரிசையில் திருவிழாக்கள் நடக்கும். அந்த திருவிழா நிறைவு பெறும் வேளையில் சுவாமி ஊர்வலம் என்று ஒன்று நடக்கும், அந்த ஊர்வலத்தில் அனைத்து வீடுகளிலும் செப்பு குடம் வைத்து அதில் புனித நீர் நிறைத்து அதன் மேல் வேப்பிலை வைத்து மஞ்சள் அரைத்து வைப்பார்கள். தங்கள் வீடுகளுக்கு முன்னால் சுவாமி ஊர்வலம் வரும்போது அதை வீட்டு வாசலில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்வது போல் ஊற்றுவார்கள். இதை ஏன் செய்தார்கள் என்று தெரியுமா?
பொதுவாக செப்புக் குடத்தில் நீரை நாம் சேகரித்து வைத்தால் அது சுத்திகரிக்கப்பட்டு சுத்தமானதாக மாறுகிறது, மேலும் வேப்பிலை மற்றும் மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. மேலும் பல நோய் தொற்றுக்கள் மற்றும் சிறுமிகள் நம்மீது அண்டாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கிறது. என்பது அனைவரும் அறிந்ததே! கிராமங்களில் கோடை காலங்களில் அம்மை நோய் மற்றும் பல வெயில் தாக்கத்தால் ஏற்படும் நோய்களை, தவிர்ப்பதற்காகவே இந்த முறை புழக்கத்தில் வந்து இருக்கிறது.
மேலும் அந்த வேப்பிலையை வீணாக்காமல் அதை வீட்டு வாசலிலேயே கட்டித் தொங்க விடுவார்கள். பிறகு அடுத்த வருடம் திருவிழாவின்போது அந்த பழைய வேப்பிலையை எடுத்துவிட்டு புதிதாக திருவிழாவில் வைத்த வேப்பிலையை மாற்றி கட்டுவார்கள். அந்த வேப்பிலை வாசலில் இருக்கும் போது எந்த கெட்ட வைரஸ் மற்றும் கிருமிகளும் வீட்டினுள் நுழைந்து விடாமல் நம்மைப் பாதுகாக்கும். அதற்காகவே நம் முன்னோர்கள் இதை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக