வியாழன், 30 மார்ச், 2017

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில்...



பெண்களே! இது உங்களுக்கான கோவில்..  கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில்...

பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லது நடக்கும். இப்படி ஒரு சமயம் பார்வதிதேவிக்கே இடது கண் துடித்து பிரிந்த கணவர் சிவனுடன் இணையும் பாக்கியம் கிடைத்தது. இது நடந்த இடம் *கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவில்.*

*தல வரலாறு :*

 பூலோகத்தில் வந்து தங்கி உயிர்களை ஆட்கொள்ள சிவன் விரும்பினார். இதற்காக ஒரு லீலையை நிகழ்த்தினார். ஒரு சமயம் பார்வதிதேவியுடன் சொக்கட்டான் ஆடினார். பலமுறை ஆடியும் பெருமான் தோற்றார். ஆனால் வெற்றி தனக்கே எனக் கூறி அடம் பிடித்தார். அவருடன் ஊடல் கொண்ட பார்வதி, அவரது கண்களை சிறிது நேரம் மூடினாள். சிவனின் கண்களாக சூரிய சந்திரர் உள்ளனர். அவை இருண்டதால், உலகம் இருண்டு அனைத்து செயல்களும் நின்று போயின. தன் விளையாட்டான செயலால், உலக உயிர்கள் சற்று நேரம் பட்ட இன்னல் கண்டு மனம் வருந்தி, தனக்கு மன்னிப்பு வேண்டினாள். அதற்கு சிவன், “நீ பூலோகம் சென்று அங்குள்ள சிவத்தலங்களை பூஜித்து வா. எந்த தலத்தில், உன் இடது கண்ணும், இடது தோளும் துடிக்கிறதோ அந்தத் தலத்திற்கு வந்து, உன்னோடு நான் இணைவேன்,” என்றார்.

 தேவியும் பல தலங்களைத் தரிசித்துவிட்டு இங்கு வந்தபோது இடது கண்ணும், இடது தோளும் துடித்ததால் அங்கே தங்கி சிவனை பூஜித்தாள். சிவனும் அங்கு வந்து அவளுடன் இணைந்தார்.

 *சிறப்பம்சம்:*

 இந்தக் கோவிலிலுள்ள சிவகரைத்தீர்த்த நீரை தெளித்துக் கொண்டால் நினைத்தது நிறைவேறும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபடுகிறார்கள்.

 நாவுக்கரசரை மற்ற எந்தக் கோவிலிலும் உழவாரக் கருவியுடன் நின்ற நிலையிலேயே பார்க்க முடியும். இங்கு மட்டுமே சுவாமிகள் உட்கார்ந்த நிலையில் தனி சன்னிதியில் காட்சி தருகிறார். இது கிடைப்பதற்கரிய காட்சியாகும்.

 சப்தமாதர்கள் சந்நிதி கோவிலை ஒட்டி இருக்கிறது.

*பள்ளியறை சிறப்பு:*

பொதுவாக சிவாலயங்களில் பள்ளியறை அம்மன் சன்னிதியை ஒட்டியே இருக்கும். இந்தக் கோவிலில் சுவாமி சன்னிதியை ஒட்டி உள்ளது. தினமும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது எங்குமில்லாத் தனிச்சிறப்பு. இங்கே சிவனுக்கே மதிப்பு அதிகம். அவர் ஆயிரங்கலைகளோடு கூடிய சந்திரனை தலையில் சூடி தங்கியுள்ள இடம். எனவே அவரை எண்ணி தவமிருக்க அம்பாள் தேர்ந்தெடுத்த தலம் இது. எனவே அன்னையே பள்ளியறைக்கு எழுந்தருள்கிறாள்.

 இங்குள்ள விநாயகரின் கரங்களில் ஆயுதம் ஏதும் கிடையாது. பாதிரி மலர்க் கொத்துக்கள் மட்டுமே உள்ளது. இத்தகைய சிலையை பார்ப்பது அரிது.

*தெருவடச்சான் நிகழ்ச்சி:*

 இந்தக் கோவிலில் வைகாசி விசாகம் 10 நாட்கள் நடக்கும். இதில் ஐந்தாம்நாள் தெருவடச்சான் நிகழ்ச்சி நடக்கும். அதாவது இங்குள்ள தேர் அகலமாக இருப்பதால், யாரும் தெருவில் நடந்து செல்ல முடியாது. அந்த அளவு தெருவை தேர் அடைத்து செல்லும். எனவே இந்த நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு பெயர். இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். தை அமாவாசை, மாசி மகம் ஆகிய நாட்களில் கடலில் தீர்த்தவாரி நடக்கும். பவுர்ணமியன்று பஞ்சபிரகார வலம் வருதல் என்ற நிகழ்ச்சி நடக்கும்.

*திருநாவுக்கரசர் கரையேறிய கதை:*

 திருநாவுக்கரசரை, மகேந்திரவர்ம மன்னன் கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அவர் *'கற்றுணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும், நற்றுணையாவது நமசிவாயவே'* எனப் பாடித்துதிக்க அந்தக் கல் தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கரையேறியது. மக்கள் பரவசமடைந்து அவரை வரவேற்கச் சென்றார்கள். நாவுக்கரசர் கடலிலிருந்து கரையேறிய இடம் *'கரையேறவிட்ட குப்பம்'* என்னும் பெயருடன்
விளங்குகிறது. அவரை முதன்முதலில் *'அப்பர்'* என்று ஞானசம்பந்தர் அழைத்தது இத்தலத்தில் தான்.

சிவகரை தீர்த்த சிறப்பு :*

 இந்தக் கோவிலிலுள்ள தீர்த்தத்தை சிவகரை தீர்த்தம் என்கின்றனர். சிவன் சித்தராக உருக்கொண்டு வந்து கை வைத்த இடம் இது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளதாக ஐதீகம். ஈசான்ய மூலையில் இந்த தீர்த்தம் இருப்பதால் இந்த தீர்த்தத்துக்கு சக்தி அதிகம். இங்குள்ள அம்மனை பெரிய நாயகி என்கின்றனர். கணவரைப் பிரிந்த பெண்கள், மீண்டும் இணைய இவளுக்கு பட்டு சாத்தி வழிபடுகின்றனர்.

 அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமானை பாடியுள்ளார்.

அகத்தியர், வியாக்ரபாதர், மங்கணமுனிவர், உபமன்னியர், ஆதிராசன் ஆகியோர் பூஜித்து பேறு பெற்ற தலம்.

புலிக்கால் முனிவர் தவம் செய்து பேறு பெற்ற தலம். இதன் காரணமாகவே இவ்வூர் பாதிரிப்புலியூர் எனப் பெயர் பெற்றது.

*இருப்பிடம்:*

 கடலூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ., தூரத்தில் கோவில்.

 *திறக்கும் நேரம்:*

 காலை 6:00 - 11:00, மாலை 4:00 - 8:30 மணி.


நந்தனார் எனும் ஏழை அடியாரின் அன்பிற்க்காக நந்தியை விலக செய்து காட்சி கொடுத்த சிவன்..


நந்தனார் எனும் ஏழை அடியாரின் அன்பிற்க்காக நந்தியை விலக செய்து காட்சி கொடுத்த சிவன்..

சிதம்பரம் அருகிலுள்ள  மேல ஆதனூர் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர் நந்தனார்.

அதிதீத *சிவபக்தர்*இந்த நந்தனார்.

இவருக்கு வெகு காலமாய் ஒரு தீராத ஆசையொன்று இருந்து வந்தது.

*சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை* தரிசிக்க வேண்டுமென்று அவருக்கிருந்த பெரிய ஆசை.

இவருடைய வருமாணப் *பொருளாதாரம் மிகவும் குறைவாக இருப்பதும்*, அவர் சிதம்பரம் செல்ல முடியாமைக்கு இதுவும் ஒரு காரணம்.

இவர்,கூலி வேலைக்கு செல்வதால் *நாளை போவலாம்  நாளை போவலாம்* என்று நாளைத்  தள்ளிப் போட்டுக் கொண்டே போனதால் நந்தனாரை *திருநாளைப் போவார்* என்றும் அழைத்தும் வந்தார்கள்.

ஒரு நாள் தன் ஊருக்கு அருகாக இருக்கும் *திருப்புன்கூர் சிவலோகநாதர்* திருக்கோயிலுக்கு வந்தார்.

அக்காலத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் திருக்கோயிலுனுள் சென்று வர அனுமதியில்லாத காலமது.

எனவே திருக்கோயிலுக்கு *வெளியே நின்று, சுவாமியை எட்டி எட்டிப் பார்த்தார்*. சுவாமியை அவரால் பார்த்து *வணங்க முடியவில்லை.*

திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி யிருந்ததாலும், *சுவாமியின் முன் நந்திவாகனர் அமர்ந்திருந்ததாலும்,* நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை.

ஆமாம், சுவாமியை தரிசனம் செய்த பக்தர்கள் கூட்டம் சிறிது நேரத்தில் குறைந்து போக, *நந்தனாரின் பார்வைக்கு சுவாமி தெரியவில்லை.* இப்போது நந்திபெருமானின் பின்புறம் மட்டும்தான் தெரிந்தது.

 இந்நிலையையை எண்ணி மனவருத்தத்துடன்.............
*"சிவனே!, உன் திருமுகத்தைக் காண முடியவில்லையே!* என மனமுருகி வேண்டினார்.

நந்தனாரின் *நினைவையெல்லாம், பெருமானின் கர்ப்பகிருக வாயிலில் இருக்கும் துவார பாலகர்களின் நினைவுக்கு* தோன்றியது.

உடனே இரு *துவாரபாலகர்களும் நந்தனாரின் மன வேதனையை பெருமானிடம் சென்று,*.............
ஐயனே!"  தங்கள் பக்தர் நந்தனார் வந்திருக்கிறார் என்று சொன்னார்கள்.

சிவபெருமானும் *நந்தனாரின் பக்தி நினைவலையையென்னி,*
தன் முன்பாக அமர்ந்திருந்த நந்தியை, *சற்று இடப்பக்கமாக விலகியிரு,* எனச் சொன்னார்.

பெருமானின் உத்தரவுபடி *நந்தியார் இடதுபுறமாக கொஞ்சம் நகர்ந்தமர்ந்தார்*. இப்போது சிவலோகநாதரின் திருமுக திருக்காட்சி நந்தனார்க்கு கிடைத்தது.

*(ஆனால் நிறையோர் மனதில் ஒரு வினா இருந்திருக்கும். ஈசன் நேராக நந்தனாரை உள்ளே வரவழைத்திருக்க வேண்டியதுதானே? என்று. அதைவிட்டு ஏன் நந்தியை விலகச் சொன்னாரென்று!")*

அதற்குக் காரணம்! இவ்விதம் நடந்து விட்டிருப்பது, நந்தி விலகியது நமக்குத் தெரிய வேண்டுமென்பதற்காகத்தான். நந்தி ஏன் விலகியது என்ற கேள்வி நமக்கு எழ வேண்டுமென்பதற்காகத்தான்.நந்தி விலகியதற்குக் காரணம் நந்தனார்க்காக என தெரிய வரவேண்டுமென்பதற்காகத்தான்.

இவ்விதம் நடக்க ஈசனும் ஏன் முடிவெடுத்தாரென்றால்?, *நந்தனாரின் பக்தியும் புகழும் வெளிக்கொணர,* ஈசனே திருவிளையாடல் நடத்த திட்டமிட்டிருந்தான்.

ஏனென்றால், நீண்ட *நாளாய் நந்தனாரின் ஆசையான சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானைத் தரிசிக்க* வேண்டுமென்று நினைப்பைக் கொண்டிருந்த ஆசையை, சிதம்பரத்தில் திருவிளையாட்டம் செய்து *அவருக்குக் காட்சி செய்ய வேண்டுமென்று ஈசனும்* முடிவு செய்து வைத்திருந்தார்.

காலம் வந்தது.
சிதம்பரத்திற்கு நந்தனார் வந்தார்.
அவரால் திருக்கோயிலுக்குள் செல்ல முடியாதகையால், *"நடராஜப் பெருமானே!* உன் *தரிசனம் எனக்கு கிடைக்குமா?* என்ற மன வேதனையைத் தாங்கிக் கொண்டு, திருக்கோயில் வெளிப்பிரகாரத்தைச் சுற்றி சுற்றி வந்தார்.

இரவு நெருங்கும் வேளையில் நந்தனார்க்கு களைப்பு வர, கோயிலின் மதில் சுவரருகில் *அமர்ந்திருந்தவர் அப்படியே தூங்கிப்* போனார்.

நந்தனாரின் மனவலைவுக்குள் கனவாக வந்த ஈசன், *"நந்தா வருத்தம் கொள்ளாதே!* என்னை நீ காணப் போகிறாய்!. *நெருப்புடத்தில் புகுந்தெழுந்து என்னைக் காண்பாய்!* எனச் சொல்லி கனவைக் கலைத்து மறைந்தார்.

உடனே மறுபடியும், *தில்லைவாழந்தணர்கள் கனவிலும் தோன்றி,* *அக்னி வளர்த்து என் அன்பன் நந்தனை, அக்கினிக்குள் உட்புக அழைத்து வாருங்கள*் அவனுக்கு உயிர் நீங்காதிருக்கச் செய்வோம் என்றார்.

தில்லைவாழந்தணர்களும் நந்தனாரைத் தேடிக் கண்டு ஈசனின் கனவு நிகழ்வைக் கூறி திருக்கோயிலுக்குள்அழைத்து வந்தனர். நந்தனார் மனம் நெகிழ்ந்தார்.

*நடராஜப் பெருமான் முன்பு அக்கினியை தில்லைவாழந்தணர்கள் உருவாக்கினார்கள்*

நந்தனாரை அக்கினியினுள் புக கூறினார்கள். *நந்தனாரும் அக்கினினுள் உட் பிரவேசம் செய்தார்.* கூடவே தில்லைவாழந்தணர்கள் நந்தனாரைக் காணும் பொருட்டு, அக்கினியின் இட, வல புறமாகச் சென்று முன் வந்தனர்.

*நந்தனாரைக் காணவில்லை.*

நடராஜப் பெருமானைப் பார்த்து வணங்கியெழுந்தார்கள் தில்லைவாழந்தணர்கள் அனைவரும்.

*என் அன்பன் நந்தன் என்னோடிருக்கிறான் என்று நடராசப் பெருமான் கூறினான்.*

ஆமாம்!, நந்தன் *நடராஜனோடு இரண்டறக் கலந்துவிட்டிருந்தார்*


*தீவிர பக்தி இருந்தால், ஈசன் அருள் கிடைக்கும்*

நீதி

*ஈசன் அடியார்களின் அன்பைத்தான் பார்ப்பார்*

*அடியார்களின்
*குலம்*
 *ஏழை*
*பணக்காரன்* என பார்க்கமாட்டார்*

*நாமும் ஈசனிடம் அன்பை செலுத்தி அருள் பெறுவோம்*

சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?




சிறு பழத்திற்காக முருகன் கோபித்தது ஏன்?

இந்து மதம் தன்னுள் பல்வேறு தத்துவப் புதையல்களை ஒளித்து வைத்திருக்கிறது.

மிகச் சரியாக அந்தப் புதையல்களைக் கண்டெடுத்தவர்களைதான் நாம் ஞானிகள் என்று கொண்டாடி வருகிறோம்.

அற்புதமான சிந்தனைகளை செறிவுமிக்க தத்துவங்களை சாதாரண மக்களும் புரிந்துகொள்வதற்காகவே அவை கதை வடிவில் சொல்லப்பட்டன.

பழம் கிடைக்காமல் போன சாதாரண விஷயத்திற்கு யாராவது கோபப்படுவார்களா?

என்ன சொல்கிறது சேவற்கொடியோன் கதை?

ஞானம் அடைதலின் இரண்டு வழிகளை அந்த நிகழ்வு அடையாளம் காட்டுகிறது.

அம்மையும் அப்பனும் இருக்கின்ற இடம் விட்டு நகராது. பிரம்மச்சரியம் காத்து இறையோடு இணைந்து நிற்றல் பிள்ளையார் வழி.

உலக விஷயங்களில் உழன்று,
உலக விஷயங்களைச் சுற்றி வந்து அனுபவித்து,

பின் இறைத்தேடலில் ஞானம் கேட்டு வரும்போது ஒரு மெல்லிய பிணக்கு அங்கே வருகிறது.

இது இப்போது உனக்கு வேண்டாம்.
உள்ளே விஷயக் குவியல் இருக்கிறது.

தனியே ஓடு. குன்று தேடி நில். உற்று உற்று உள்ளே பார்த்து அவற்றிலிருந்து விலகி நில்.

தவம் செய். நீ ஞானத்தைத் தேடி எங்கேயும் ஓடவேண்டியதில்லை.

அந்தப் பழம் ஞானப் பழம் நீயே.

நீயே அதுவாகி மலர்ந்து நிற்பாய் என்பது தான்

முருகக் கடவுளின் கோபம் கூறும் செய்தி.

செவ்வாய், 28 மார்ச், 2017

தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா..?



தீபம் ஏற்றினால் சாபம் நீங்குமா..?



❖ தீபம் என்பது இறைவனின் அம்சம். தீபத்தை நாம் எந்த அளவுக்கு மனம் ஒன்றி வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இறைவனை நெருங்க முடியும். ஒருவர் தினமும் விளக்கேற்றி இறைவழிபாடு செய்தால், அவர் மெய் உணர்வைப் பெற முடியும் என்று அப்பர் கூறியுள்ளார்.

தீபத்தால் சாபம் நீங்குமா :

★ கவனிப்பாரின்றி உள்ள கோவிலில் தீபம் ஏற்றி வைப்பது பித்ரு தோஷங்களையும், பித்ருக்களால் ஏற்பட்ட சாபத்தையும் போக்கும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும்.

★ வறுமையினால் துன்பப்படும் குழந்தைகளுக்கு உணவளிப்பது, பசு மாட்டைத் தினமும் பூஜித்தல், வேதம் அறிந்த பெரியோர்களின் ஆசியைப் பெறுதல், சிதைவு அடைந்த கோவில்களின் புனர்நிர்மாணத்திற்கு உதவுதல், அனாதை பிரேதத்தை, ஈமச் சடங்குகள் செய்ய வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் பொருள், பணம் உதவி செய்தல் போன்ற மகத்தான புண்ணிய காரியங்களின் பலன்கள் மேற்கூறிய தோஷங்களுக்குச் சக்தியுள்ள பரிகாரங்களாகும்.

பரிகாரங்களும், இனிய பலன்களும் :

✰ பசியோடு வருபவரை உபசரித்தால் மோட்சம் கிட்டும்.

✰ பசுவிற்கு பசும்புல், அகத்திக்கீரை, பழம் தந்தால் பிள்ளை வரம் கிடைக்கும்.

✰ துளசிச் செடி நட்டாலோ அல்லது அதற்கு தண்ணீர் ஊற்றினால் பாவம் அகலும்.

✰ மலர்ச்செடிகள் நட்டு வைத்தால் மங்கலங்கள் பெருகும்.

✰ ஆலயங்களைச் சுத்தம் செய்து கோலமிட்டால் ஆண்டவனின் அருள் கிடைக்கும்.

✰ தொழு நோயாளிக்கு வயிராற விருந்து படைத்தால் கர்மம் அகலும்.

✰ தினசரி தியானம் செய்வதால் நிம்மதியும், ஞானமும் கூடிவரும்.

✰ காக்கைக்கு காலையில் உணவிட்டால் பித்ருக்களால் நன்மை உண்டாகும்.

✰ உழவாரப் பணிகளை (கோவிலுக்கு சேவை செய்வது) மேற்கொண்டால் பிறவிப் பயனை அடைய இயலும்.

பலன் அளிக்க கூடிய பரிகார ஸ்தலங்கள் :

➚ சூரியன் - சூரியனார் கோவில்

➚ சந்திரன் - திருப்பதி

➚ குரு - ஆலங்குடி, திருச்செந்தூர்

➚ சுக்கிரன் - ஸ்ரீ ரங்கம்

➚ புதன் - திருவெண்காடு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

➚ செவ்வாய் - வைத்திஸ்வரன் கோவில்

➚ சனி - திருநள்ளாறு

➚ ராகு - திருநாகேஷ்வரம்

➚ கேது - காளாஸ்திரி (ஆந்திரப் பிரதேசம்).

திங்கள், 27 மார்ச், 2017

திருமுருகனின் 16 வகை திரு கோலங்கள்



திருமுருகனின் 16 வகை திரு கோலங்கள்

1. ஞானசக்திதரர்: இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் `ஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.

2.கந்தசாமி: இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.

3. ஆறுமுக தேவசேனாபதி: இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.

4. சுப்பிரமணியர்: இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

5. கஜவாகனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

6.சரவணபவர்: தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர்: இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது

8. குமாரசாமி: இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர்: இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.

10. தாரகாரி: `தாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி: இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12. பிரம்மசாஸ்தா: இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.

13. வள்ளிகல்யாணசுந்தரர்: இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.

14. பாலசுவாமி: இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் குப்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.

15. சிரவுபஞ்சபேதனர்: இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உண்டு.

16. சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.

எல்லா உயிர்களும் சிவமாகட்டும்..



எல்லா உயிர்களும் சிவமாகட்டும்..

அதிசயம் ஒன்று

அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும்.
பூமியெங்கும் மழை வெள்ளமெனகொட்டியது.

உயிரினங்கள் அழிந்தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூலோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது.

காரணம் அங்கு இறையருள் இருந்தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை.

பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.

அதிசயம் இரண்டு

பரம்பொருள் ஒன்றே. பலவல்ல! சத்தியம் ஒன்றே இரண்டல்ல!! என்பது வேதவாக்கு

 அப்பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து உமாதேவியைப் படைத்தார்.

திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விமானத்தில் செதுக்கப்பட்டுள்ளன.

அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின்கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும்போது அம்மன் அவர்கள்தோஷம் நீங்க அருளுகின்றார்.

பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை, மாங்கல்யதோஷம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை எனப்புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.

அதிசயம் மூன்று

பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப்பரிபாலனம் செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தனர்.

ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும் மூர்த்திகளும் பெருவெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ்ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு பயந்தனர்.

அலைந்து திரிந்து பெருவெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர்.

மாயை நீங்க வேண்டி இறைவனைத்தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத்தைப்போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்துதோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச் செய்தது.

பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறைவன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்திகளின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையும் செய்ய உரிய சக்தியையும், ஞானத்தையும் அருளினார். மும்மூர்த்திகளும் வழிபட்டு வரம்பெற்றது மூன்றாவது அதிசயம்.

அதிசயம் நான்கு

மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான்.

தினமும் தேய்ந்துகொண்டேவந்த சந்திரபகவான், திங்களூர் வந்து கைலாச நாதரை, வணங்கி தவம் இருந்தார்.

கைலாசநாதரும், சந்திரனின் சாபம்நீக்கி மூன்றாம்பிறையாக தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார்.

திங்களூரில் தன் சாபம் தீர்த்த சிவபெரு மானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார். எப்படி என்றால் இறைவனுக்கு மேலே சந்திரன் காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பத்தை ஈர்த்து ஒரு நாழிகைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யாபிஷேகம் செய்கிறார்.

24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒருமுறை இறை வன்மீது ஒருசொட்டுநீர் விழுவதைஇன்றும் காணலாம்.

உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது. இந்த ஆலயத்தில் அமைந்துள்ள நான்காவது அதிசயம் இது.

அதிசயம் ஐந்து

நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலயத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார்.

எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது ஐந்தாவது அதிசயம்.

அதிசயம் ஆறு

எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர்த்தியே பெரிதும் வழிப்படப்பட்டு வரம்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம்.

ஆனால் திட்டைத்தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழி படப்பட்டு தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

எனவே, பரி வார தேவதைகளைப்போல அல்லாமல் மூலவர்களைப்போலவே, அருள் பாலிப்பது ஆறாவது அதிசயம்.

அதிசயம் ஏழு

பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப்பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும்.

ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரியவில்லை.

 எனவே இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.

அதிசயம் எட்டு

பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்றும் தோஷம் நீங்கப்பெறவில்லை.

இதனால் திட்டைக்கு வந்து வசிஷ்டேஸ்வரரை ஒரு மாதம் வரை வழிபட்டுவந்தார்.

வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்துவிட்டது.

நீ திட்டைத்திருத்தலத்தின் காலபைரவனாக எழுந்தருளி அருள் புரியலாம் என்றார்.

அன்று முதல் இத்தலம் கால பைரவரின் ஷேத்திரமாக விளங்கி வருகிறது.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

இங்கு எழுந்தருளியுள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.

அதிசயம் ஒன்பது

நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர். குருபகவான் ஒருவரே. உலகம் முழுவதும் உள்ள தன தான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவேஅதிபதி.

தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடங்களை தன்பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர்.

மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களினால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். எனவே, குருபார்க்க கோடி நன்மை என்ற பழ மொழி ஏற்பட்டது.

இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.

இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவும், அதனையொட்டி லட்ச்சார்ச்சனையும் குரு பரிகார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

கிருஷ்ண பக்தி ஒரு சிறுகதை



கிருஷ்ண பக்தி ஒரு சிறுகதை

ஒரு ஊரில் ஒரு ஆதரவற்ற ஏழைப் பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு என்று சொந்தம் அவள் வளர்க்கும் சில மாடுகள் தான். அந்த மாடுகளிடமிருந்து பாலை கறந்து அக்கம் பக்கத்து கிராமங்களில் உள்ள பல வீடுகளுக்கு சென்று தினசரி கொடுப்பதை அவள் வழக்கமாக கொண்டிருந்தாள். அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து வாழ்ந்து வந்தாள்.

ஊரின் எல்லையில் இருக்கும் ஒரு சன்னியாசியின் ஆஸ்ரமத்துக்கும் இவள் தான் தினசரி பால் கொடுப்பது வழக்கம்.

ஒரு நாள் வழக்கம் போல, சன்னியாசி பூஜையில் உட்கார்ந்தார். ஆனால் நைவேத்தியத்துக்கு தேவையான பால் இன்னும் வரவில்லை. அடிக்கடி இந்த பால் கொண்டு வரும் பெண் தாமதமாக வருகிறாள் என்பதை புரிந்துகொள்ளும் அவர் அந்த பெண்ணிடம் கடிந்துகொள்கிறார்.

“ஏன்மா… உன்னாலே ஒழுங்கா சரியான நேரத்துக்கு பால் கொண்டுவர முடியாதா? உன்னாலே எனக்கு எல்லாமே தாமதமாகுது”

“மன்னிக்கணும் சாமி. நான் என்ன பண்ணுவேன்…. நான் வீட்டை விட்டு சீக்கிரமா தான் கிளம்புறேன். ஆனால், இங்கே வர்றதுக்க்கு கரையில படகுக்காக காத்திருக்க வேண்டியிருக்கு.”

“என்னது ஆத்தை கடக்குறதுக்கு படகுக்கு காத்திருக்கியா? அவனவன் பிறவிப் பெருங்கடலையே “கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொல்லிகிட்டே தாண்டிடுறான். நீ என்னடான்னா ஆத்தை கடக்குறதை போய் ஒரு பெரிய விஷயமா சொல்லிகிட்டிருக்கியே…. என்னமோ போ…. இனிமே சீக்கிரம் வரணும் இல்லேன்னா எனக்கு பால் வேண்டாம்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்.

அவர் என்ன நினைச்சு சொன்னாரோ…. ஆனால் அந்த பெண் அதை மிகவும் தீவிரமாக பயபக்தியுடன் கேட்டுக்கொண்டாள்.

மறுநாளிலிருந்து சரியாக குறித்த நேரத்துக்கு பால் கொண்டு வர ஆரம்பித்துவிடுகிறாள்.

சந்நியாசிக்கோ திடீர் சந்தேகம் வந்துவிடுகிறது.

“என்னமா இது அதிசயமா இருக்கு? இப்போல்லாம் சரியான நேரத்துக்கு வந்துடுறியே?”

“எல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்த மந்திரம் தான் ஐயா…. அது மூலமா நான் ஆத்தை சுலபமா தாண்டிடுறேன். படகுக்காக இப்போல்லாம் காத்திருக்கிறதில்லை”

“என்ன நான் சொல்லிக் கொடுத்த மந்திரமா? அதை வெச்சு ஆத்தை தாண்டிடுறியா? நம்பமுடியலியே…. ” என்று கூறும் சந்நியாசி அவள் ஆத்தை தாண்டுவதை தான் நேரில் பார்க்க வேண்டும் என்கிறார்.

ஆற்றின் கரைக்கு சென்றவுடன், “எங்கே தாண்டு பார்க்கலாம்” என்கிறார் அந்த பெண்ணிடம். பால்காரப் பெண், கை இரண்டும் கூப்பியபடி “கிருஷ்ணா கிருஷ்ணா” என்று கூறியபடியே தண்ணீரில் நடக்க ஆரம்பித்துவிடுகிறாள்.

நடந்ததை நம்ப முடியாது பார்க்கும் சன்னியாசிக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி மறுபக்கம் தயக்கம்.

“ஆறு எவ்வளவு ஆழம்னு தெரியலையே…. தவிர கால் உள்ளே போய்ட்டா என்ன செய்றது? ஆடை  நனைந்துவிடுமே…? என்று அவருக்கு பலவாறாக தோன்றியது.

ஒரு சில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கூறியபடி தண்ணீரில் காலை வைக்க முயற்சிக்கிறார். ஆனால் கால் உள்ளே செல்கிறது. சன்னியாசி திடுக்கிடுகிறார்.

“அம்மா உன்னாலே முடியுது என்னால ஏன் முடியலே….?” என்கிறார் அந்த பெண்ணை பார்த்து. அந்த பெண் பணிவுடன், “ஐயா…. உங்க உதடு ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ன்னு சொன்னாலும் உங்க கை ரெண்டும் உங்க உடுப்பு நனையக்கூடாதுன்னு தூக்கி பிடிச்சிருக்கே….? தவிர ஆத்தோட ஆழத்தை பரீட்சித்து பார்க்கும் உங்க முயற்சி அந்த ஆண்டவனையே ஆழம் பார்க்கிறது போலல்ல இருக்கு!” என்கிறாள்.

சந்நியாசி வெட்கி தலைகுனிகிறார்.

கடவுள் மேல் நமது நம்பிக்கை எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதை விளக்க பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறிய கதை இது.

பிரார்த்தனை செய்கிறவர் மனநிலை அந்த பெண்ணின் மனநிலை போலத் தான் இருக்கவேண்டும். அந்த சன்னியாசியை போல அல்ல.

"ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் "

ஞாயிறு, 26 மார்ச், 2017

தெரிந்து கொள்ளவேண்டிய ஆன்மிகத் தகவல்கள்......



தெரிந்து கொள்ளவேண்டிய  ஆன்மிகத் தகவல்கள்......

1.சிவசின்னங்களாக போற்றப்படுபவை.....
திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம்....
ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம்.....
தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
திருப்பெருந்துறை(ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம்.....
திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம்......
பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர்.........
திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம்.......
திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம்,நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது...........
துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது.........
கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன்.....
கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன்....
நடராஜர்(கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம்...
சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம்...
காசி

15.சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம்...
திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம்...
மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர்...
சின்முத்திரை

19.  கயிலாயத்தில் தேவலோகப்பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர்...
சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம்...
ஸ்ரீசைலம்(ஆந்திரா)

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம்...
ஒரிசாமாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம்....
திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த  ஆழ்வார்....
திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம்....
பரணிதீபம் (அணையா தீபம்)

25.  அருணாசலம் என்பதன் பொருள்...
அருணம்+ அசலம்- சிவந்த மலை

26.ஆறாதாரங்களில் திருவண்ணாமலை...
ஆதாரமாகத் திகழ்கிறது மணிபூரகத் தலம்

27. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர்...
பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்

28. ""கார்த்திகை அகல்தீபம்'' என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு...
1997, டிசம்பர் 12

29. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம்...
திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

30.. கார்த்திகை நட்சத்திரம் ....தெய்வங்களுக்கு உரியது
சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்

31 குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம்.....
24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)

32. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர்....
அனுமன்

33.நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
திருவாசகம்

34. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்?

அறவிடை(அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)  

35. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள்....
அறம், பொருள், இன்பம், வீடு(மோட்சம்)

36. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை?
108

37. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர்...
காரைக்காலம்மையார்

38."மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று நடராஜரிடம் வேண்டியவர்......
அப்பர்(திருநாவுக்கரசர்)

39. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம்..
ஆணவம்(ஆணவம் அடங் கினால் ஆனந்தம் உண்டாகும்)
முயலகன்

40. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம்....
குற்றாலம்

41. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம்...
சங்கார  தாண்டவம்

42. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்?
வெள்ளியம்பலம்(மதுரை)

43. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம்...
பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)

44. நடராஜருக்குரிய விரத நாட்கள்....
திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

45. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம்....
களி.

46.திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன்...
தாயுமானசுவாமி

47. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம்....
காளஹஸ்தி

48. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர்...
பிருங்கி

49. திருமூலர் எழுதிய திருமந்திரம் ....திருமுறையாகும்
பத்தாம் திருமுறை

50. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம்...
திருக்கோலக்கா(தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது

51.விபூதி என்பதன் நேரடியான பொருள்...
மேலான செல்வம்

52.சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம்...
கஞ்சனூர்

53. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை?
12

54. மதுரையில் உள்ள சித்தரின் பெயர்....
சுந்தரானந்தர்

55.திருஞானசம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம்...
ஆச்சாள்புரம்(திருப்பெருமணநல்லூர்)

56.. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி....
திலகவதி

57.. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார்...
சேரமான் பெருமாள் நாயனார்

58.. "அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்' என்ற அருளாளர்...
வள்ளலார்

59. மதுரையில் சைவசமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை......
மங்கையர்க்கரசியார்

60.மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்?
அரிமர்த்தனபாண்டியன்

61. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவமன்னன்...
மகேந்திரபல்லவன்

62.சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் ...
தத்புருஷ முகம்(கிழக்கு நோக்கிய முகம்)

63. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை?
எட்டு

64. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
மாசி தேய்பிறை சதுர்த்தசி

65. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்?
4 கால அபிஷேகம்

66. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம்.....
நமசிவாய

67. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்?
சிவாயநம

68. சிவசின்னங்களாக போற்றப்படுபவை...
திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)

69. சிவனுக்குரிய உருவ, அருவ. அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
அருவுருவம்

70. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம்....
ராமேஸ்வரம்

71. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம்...
தட்சிணாமூர்த்தி

72.கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்?
12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில்...
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

74. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம்...
வில்வமரம்

75.அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி...
மானசரோவர்

76.திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?
81

77.பதிகம் என்பதன் பொருள்...
பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு

78. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல்...
சிவஞானபோதம்

79. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை....
டமருகம் அல்லது துடி

80.அனுபூதி என்பதன் பொருள்....
இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

81.உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை.....
மதுரை மீனாட்சி

82. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர்.....
மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை

83. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர்....
தடாதகைப் பிராட்டி

84. பழங்காலத்தில் மதுரை ..... என்று அழைக்கப்பட்டது.
நான்மாடக்கூடல், ஆலவாய்

85. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம்...
கடம்ப மரம்

86. மீனாட்சி.... ஆக இருப்பதாக ஐதீகம்.
கடம்பவனக் குயில்

87. மீனாட்சி கல்யாணத்தை நடத்திவைக்கும் பெருமாள்....
திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்

88. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர்...
குமரகுருபரர்

89.மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர்....
மகாகவி காளிதாசர்

90. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள்...
சித்ராபவுர்ணமி

91. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர்...
ரோஸ் பீட்டர்

92. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
ஜுரகேஸ்வரர்

93. "நாயேன்' என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
மாணிக்கவாசகர்

94.தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர்...
இறையனார்(சிவபெருமானே புலவராக வந்தார்)

95. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம்....
சூலைநோய்(வயிற்றுவலி)

96.அம்பிகைக்கு உரிய விரதம்....
சுக்கிரவார விரதம்(வெள்ளிக்கிழமை)

97. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம்....
தோணியப்பர்(சீர்காழி)

98.தாசமார்க்கம்' என்னும் அடிமைவழியில் சிவனை அடைந்தவர்...
திருநாவுக்கரசர்

99."தம்பிரான் தோழர்' என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர்......
சுந்தரர்

100.திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர்...
சேக்கிழார்

101.. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர்...
சேந்தனார்

102.திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம்..
சண்ட தாண்டவம்

103. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில்...
குருந்த மரம்(ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம்...
திருவானைக்காவல்

105. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர்....
சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்

106.சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர்...
திருமூலர்

107. பிருத்வி(மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள்....
காஞ்சிபுரம், திருவாரூர்

108. சிவாயநம என்பதை .... பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
சூட்சும (நுட்பமான)பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் "ஐந்தெழுத்து மந்திரம்'.

109. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர்...
பூசலார் நாயனார்

110. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம்....
திருவாடானை( அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)

111. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம்...
மயிலாப்பூர் கபாலீஸ்வரர்

112.பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர்...
பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)

113.சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர்....
அகத்தியர்

114. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம்....
தட்சிணாமூர்த்தி

115.சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர்...
திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்

116. தஞ்சாவூரில் உள்ள மூலவர்
பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்

117.சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர்....
சேந்தனார்

118.உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்' என்று இறைவனைக் குறிப்பிடுபவர்...
திருமூலர்

119.இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர்....
திருஞானசம்பந்தர்

120. "நாமார்க்கும் குடியல்லோம்' என்று கோபம் கொண்டு எழுந்தவர்...
திருநாவுக்கரசர்

121. "ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்' என்று பாடியவர்....
சுந்தரர்

122. "இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்' என்று போற்றியவர்...
மாணிக்கவாசகர்

123. "உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்' என்று துதித்தவர்....
திருமூலர்

124. "உழைக்கும் பொழுதும் அன்னையே' என்று ஓடி வரும் அருளாளர்....
அபிராமி பட்டர்

125.ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர்...
குலசேகராழ்வார்

126.திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர்....
இடைக்காட்டுச்சித்தர்

127. கோயில் என்பதன் பொருள்....
கடவுளின் வீடு, அரண்மனை

128. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்....
சம்பந்தர்,அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்

129. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று எதைக் குறிப்பிடுவர்?
முன்வினைப்பாவம்

130.கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
சிவபெருமான்

131. சிவபெருமானுக்கு பிரியமான வேதம்...
சாமவேதம்

132.நமசிவாய' மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர்...
ஆனாய நாயனார்

133.யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
பாணபத்திரர்

133.அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம்...
திருவையாறு

134. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர்...
ராஜராஜசோழன்

135.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

136.கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல்...
விநாயகர் அகவல்.

137.மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர்....
மூர்த்திநாயனார்

138.நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம்.....
காளஹஸ்தி

139.அன்னத்தின் பெயரோடுசேர்த்து வழங்கப்படும் தலம்...
திருச்சோற்றுத்துறை ( திருவையாறு அருகில் உள்ளது)

140. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான்...
மதுரை சொக்கநாதர்

141. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன்...
திருச்சி தாயுமானவர்

142. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம்...
திருக்கடையூர்( காலசம்ஹார மூர்த்தி)

143. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம்...
திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)

144. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
காளஹஸ்தி

145. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம்...
திருவானைக்காவல்(திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்

146. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில்...
திருவண்ணாமலை

147. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம்...
திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)

148. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள்.....
திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)

149. சிவபெருமானின் வாகனம்
ரிஷபம்(காளை)

150. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம்....
சந்தியா தாண்டவம்

151. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம்...
கேதார்நாத்

152. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
மூன்று(பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)

153.மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள்....
திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்

154. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது....
பிட்சாடனர்

155.சிவபெருமானை ஆடு பூஜித்த தலம்....
திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)

156. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்......
நமிநந்தியடிகள்( திருவாரூர்)

157.அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம்....
திருவானைக்காவல்

158. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன்.....
கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)

159.சிவன் "அம்மா' என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
காரைக்காலம்மையார்

160. தாச(பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர்....
திருநாவுக்கரசர்

161.முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம்...
திருக்கருக்காவூர்

162.தினமும் பிரதோஷ பூஜை நடக்கும் தலம்....
திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்

163.சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள்...
ருத்ராட்சம்

164.முக்கண்ணன் என்று போற்றப்படுபவர்....
சிவன்

165.சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை... என்ற பெயரால் அழைப்பர்.
அனங்கன்(அங்கம் இல்லாதவன்)

166.ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர்....
ருத்ரபசுபதியார்

167.இரவும்பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர்...
ருத்ரபசுபதியார்

168.ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)

169.சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை.....
14

170.ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
கேதார்நாத்

171.நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர்.....
பதஞ்சலி முனிவர்.

172.சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள்.....
வியாக்ரபாதர், பதஞ்சலி

173. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர்.........
சிவபெருமான்

174.நடராஜரின் தூக்கிய திருவடியை .... என்பர்
குஞ்சிதபாதம்

175.தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர்......
ரத்தினசபாபதி

176.உமாபதி சிவாச்சாரியார் எழுதியசித்தாந்த நூல்....
சித்தாந்த அட்டகம்

177.கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம்.....
கோமுகி

178. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
ஆறுகாலம்

179. சிவனுக்கு "ஆசுதோஷி' என்ற பெயர் உள்ளது. அதன் பொருள்.......
விரைந்து அருள்புரிபவர்

180. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர்.....
லிங்கோத்பவர்

181. சிவனுக்குரிய மூர்த்தங்கள்(சிலை வடிவங்கள்) எத்தனை?
64

182.சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர்....
சோமாஸ்கந்தர்

சனி, 25 மார்ச், 2017

இஸ்லாம் தகவல்கள்


இஸ்லாம் தகவல்கள்

🔴 திருக்குர்ஆனின் மொத்த வசனங்கள் (ஆயத்துக்கள்) - எத்தனை ?
⚫ 6666
🔴 தும்மினால் என்ன சொல்ல வேண்டும் ?
⚫ அல்ஹம்து லில்லாஹ்.,
🔴 வஹீ என்றால் என்ன வென்று ?
⚫ அல்லாஹ்வின் செய்தி.
🔴வஹீ கொண்டு வரும் வானவர் யார் ?
⚫ஜிப்ரயீல் (அலை)
🔴 இஸ்திக்பார் என்றால் என்ன ?
⚫ பாவமன்னிப்பு தேடுவது.
🔴 முதன் முதலில் பாங்கு சொன்னவர் யார் ?
⚫ பிலால் (ரலி)
🔴 முதல் கலீபா யார் ?
⚫ அபூ பக்கர் சித்தீக் (ரலி)
🔴 மன்னிக்கப்படாத பாவம் எது ?
⚫ குப்ர் - இறைமறுப்பு, ஷிர்க் - அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்.
🔴 கொடுங்கோல மன்னன் பிர்அவ்னை எதிர்த்துப் போராடிய நபி யார் ?
⚫ நபி மூஸா (அலை)
🔴 எவருடைய பெற்றோருக்கு கியாமத்து நாளில் கிரீடம் சூட்டப்படும் ?
⚫ குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்களின் பெற்றோருக்கு
🔴 அல்லாஹ்வுக்கு பிரியமான இடம் எது ?
⚫ பள்ளிவாசல்
🔴 யாருடைய காலின் கீழ் சொர்க்கம் உள்ளது ?
⚫ தாயின் காலின் கீழ்.
🔴பிள்ளைகளை தொழுகைக்கு ஏவ வேண்டிய வயது? ⚫ 7 வயது.
🔴பிள்ளைகள் வெளியே போகும் போது வீட்டிள்ளோர் என்ன சொல்ல வேண்டும் ?
⚫ ஃபீ அமானில்லாஹ்
🔴நமது செயல்களை பதிவு செய்யும் மலக்குகளின் பெயர் என்ன ?
⚫ கிராமன் காதிபீன்.
🔴 பிர்அவ்ன் ஆட்சி செய்த நாடு எது ?
⚫ எகிப்து (மிஸ்ர்)
🔴 இறைத் தூதர்களை அரபியில் எப்படி சொல்வது ?
⚫ நபி, ரசூல்
🔴 இஸ்லாம் என்பதின் பொருள் என்ன ?
⚫ அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிவது.
🔴 உலகம் முழுவதையும் படைத்தது யார் ?
⚫ அல்லாஹ்.
🔴 அஸ்ஸலாத் என்றால் என்ன ?
⚫ தொழுகை
🔴 திருக்குர்ஆன் எந்த மொழியில் உள்ளது ?
⚫ அரபி மொழியில்.
🔴 அர் ரஹ்மான் என்பதின் பொருள் என்ன ?
⚫ அளவற்ற அருளாளன்.
🔴 திருக்குர்ஆனின் முதல் ஸூரா எது ?
⚫ ஸூரா அல் பாத்திஹா
🔴 முஸ்லிமின் முதல் கடமை என்ன?
⚫ தொழுகை.
🔴 மக்காவில் உள்ள அல்லாஹ்வின் இல்லம் எது ?
கஃபா.
🔴அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர்கள் மறுமையில் தண்டனை பெறும் இடம் எது ?
⚫ நரகம்.
🔴 பத்ருப் போரில் கலந்துக் கொண்ட ஸஹாபாக்கள் எத்தனை பேர் ?
⚫ 313 ஸஹாபாக்கள்
🔴ஹஜ்ஜதுல் விதா என்றால் என்ன ?
⚫ நபி (ஸல்) அவர்கள் மறைவதற்கு முன் செய்த கடைசி ஹஜ் ஆகும்.
🔴 நபி (ஸல்) அவர்கள் செய்த ஹஜ் எத்தனை?
⚫ ஒன்று
🔴 நபிமார்களில் மிகச்செல்வந்தரராக வாழ்ந்த நபி யார் ?
⚫ நபி சுலைமான் (அலை)
🔴நபி (ஸல்) அவர்களுக்கு எத்தனை பிள்ளைகள் ?
⚫ஏழுபேர். 3ஆண்கள் , 4 பெண்கள்.
🔴 ஹதீஸ்களை அதிகம் அறிவிப்பு செய்த ஸஹாபி யார் ?
⚫அபூ ஹுரைரா (ரலி)
🔴அதிகமான ஹதீஸ்களை அறிவிப்பு செய்த நபி (ஸல்) அவர்களின் மனைவி யார் ?
⚫ அன்னை ஆயிஷா (ரலி) அன்ஹா
🔴 திருக்குர்ஆனில் பிஸ்மி இல்லாத ஸூரா எது ?
⚫ ஸூரா தவ்பா.
🔴முதன் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
⚫கதீஜா (ரலி)
🔴 திக்ருகளில் சிறந்தது எது ?
⚫ லாஇலாஹ இல்லல்லாஹ்
🔴 சிறுவர்களில் முதலில் இஸ்லாத்தை ஏற்றவர் யார்?
⚫ அலி (ரலி)
🔴 நபித் தோழர்களில் அதிகம் செல்வம் படைத்தவர் யார் ?
⚫அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் (ரலி)
🔴 ஜும்ஆ தொழுகைக்கு எத்தனை ரக்அத்கள் ?
⚫ 2 ரக்அத்கள். பர்லு
🔴 நபி (ஸல்) அவர்களின் பெற்றோர் யாவர் ?
தாயார் ஆமினா, தந்தையார் அப்துல்லாஹ்.
🔴 நபிமார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்ல வேண்டும் ?
⚫ அலைஹிஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும்.
🔴 நபித்தோழர்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும் ?
⚫ ரலியல்லாஹு அன்ஹூ என்று சொல்ல வேண்டும்.
🔴இறைநேசர்கள் நல்லடியார்களின் பெயரைக் கேட்டால் என்ன சொல்லவேண்டும் ?
⚫ ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்று சொல்ல வேண்டும்.
🔴 முதன் முதலில் ஏற்பட்ட கொலை எது ?
⚫ ஆதம் (அலை) அவர்களின் மகன் காபில், தன் சகோதரர் ஹாபிலை கொலை செய்தது.
🔴 சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கம் எது ?
⚫ ஜன்னதுல் பிர்தவ்ஸ்.
🔴 எந்த முஸ்லிமுக்கு தொழுகை கடமையில்லை ?
⚫ மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு
🔴நபி (ஸல்) காலத்தில் தன்னை 'நபி' என்று சொன்ன பொய்யன் யார் ?
⚫முஸைலமதுல் கத்தாப்.
🔴 ஹதீஸ் கிரந்தங்களில் முதலிடம் பெற்ற நூல் எது ?
⚫ ஸஹீஹுல் புகாரி.
🔴 உண்மையான வீரன் யார்?
⚫ கோபம் வரும்போது தன்னை கட்டுப்படுத்திக்
கொள்பவன்.
🔴 நபி (ஸல்) அவர்கள் வாழ்வு காலம்.
⚫ 63 ஆண்டுகள்.

*உலக அமைதிக்கு உலகமறையின் உபதேசம்*

🔴அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்யுங்கள்.  (04:36)

*🔴 தாய் தந்தையரை "சீ" என்று கூறாதீர்கள்*. (17:24)

🔴நம்பிக்கையோடு ஒப்படைக்கப்பட்ட பொருட்களை மோசம் செய்து விடாதீர்கள். (08:27)

🔴அளவுகளிலும், எடைகளிலும் மோசம் செய்து விடாதீர்கள். (06:152)

🔴மதுவும், சூதாட்டமும் தீமையானது, அதில் பெரும் பாவம் இருக்கிறது. (05:91)

🔴பெண்களின் சொத்தின் பங்கை அவர்களிடம் ஒப்படைத்து விடுங்கள். (04:07)

🔴மனிதர்களுக்கு இடையிலான குற்றங்களை மன்னித்து விடுங்கள். அவ்வாறு மன்னிப்பதால் உங்கள் குற்றங்களை இறைவன் மன்னிப்பான். (64:14)

🔴விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள்.அதுமானக்கேடான செயலாகும்.மேலும் வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச்செல்லக் கூடியதாகும். (17:32)

🔴குழப்பம் செய்வது கொலையை விடக் கொடியதாகும் . (02:191)

🔴வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்ககை தேவைகளை) அளிக்கிறோம்.(17:31)

🔴இறைவன் மீது பிரியம் உள்ளவர்கள் அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், சிறைப்பட்டோருக்கும் உணவளிக்கிறார்கள். (76:08)

🔴நீதியை கடைபிடியுங்கள், உங்களுக்கோ, உங்கள் பெற்றோருக்கோ, நெருங்கிய உறவினருக்கோ பாதகமாக இருந்தாலும் சரியே!  (நீங்கங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் சரியே! (04:135)

🔴எவன் ஒருவன் ஒரு மனிதரை அநியாயமாக கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் எல்லோரையும்  கொலை செய்தவன் போல் ஆவான். (05:32)

 🔴இறைநம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும், வட்டிக்கு வட்டியாகவும்) இரட்டிப்பாக்கப்பட்டு பன்மடங்காக்கப்பட்ட நிலையில் வட்டி வாங்கி உண்ணாதீர்கள். (03:130)

🔴அல்லாஹ்வின் இறுதி தூதர் (முகம்மது நபி)PBUH யிடத்தில் திட்டமாக உங்களுக்கு அழகgிய  முன்மாதிரி இருக்கிறது.(33:21)

இன்ஷா அல்லாஹ்!!!

வெள்ளி, 24 மார்ச், 2017

கடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு!!!



கடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு!!!

தமிழகம் என்றாலே கோயில்கள் மயம்தான். மாநிலம் முழுவதும் ஏராளமான கோயில்கள் உள்ளன. புகழ்பெற்ற சிவன் கோயில்களில் நவகிரக சந்நிதிகளும் உள்ளன. ஆனால், தேவிப்பட்டினம் நவக்கிரக கோவில் மிகவும் வித்தியாசமானது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கோயில், கடலில் அமைந்துள்ளது என்பது சிறப்புக்குரியது.

தேவிப்பட்டினத்து நவபாஷான சந்நிதிக்கு ஒரு புராணக் கதையைச் சொல்கிறார்கள்…
அலை பொங்கித் ததும்பும் கடலில் “இந்த இடத்தில் எப்போதும் அலையடிக்காமல் நிறுத்தி வைக்க வேண்டும்!’ எனப் பெருமாளிடம் வேண்டினாராம் ராமபிரான். அந்த வேண்டுகோளை ஏற்று அலையை நிறுத்தி வைத்தாராம் ஆதி ஜகந்நாதப் பெருமாள். அந்தத் திருத்தலம்தான் தேவிப்பட்டினம். இது ராமநாதபுரத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடத்தில், ஆதி ஜெகன்னாதர் கோயில் கொண்டுள்ள சந்நிதி, கடலடைத்த பெருமாள் சந்நிதி என்ற பெயருடன் அழகாகத் திகழ்கிறது.
இங்கு ஏன் கடல் அலையை நிறுத்த வேண்டும்? ராமபிரான், உப்பூரில் வெயிலுகந்த விநாயகரை வேண்டிவிட்டு தேவிப்பட்டினம் வருகிறார். அங்கு வந்ததும் அசரீரியாக ஒரு செய்தி அவருக்குக் கேட்கிறது. “சீதையை ராவணன் தூக்கிச் சென்றதற்கு நவக் கிரக தோஷம்தான் காரணம் என்றும், அது போவதற்கு, கடல் நடுவே மணலால் நவக் கிரகம் உருவாக்கி வழிபட வேண்டும்!’ என்றும் அந்த அசரீரி சொன்னதாம்.
அதனால், ராமபிரானும் மணலால் நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம் அப்போது, ஸ்ரீமந் நாராயணனை வேண்டிக் கொள்ள, மணலால் பிடித்த நவக்கிரகங்கள் கல்லாக மாறின. ராமனின் வேண்டுகோளால் கடல் அலைகளும் அந்த இடத்தில் ஓய்ந்துவிடுகின்றன. இதனாலேயே, தேவிப்பட்டினம் நவபாஷனம் என்றும், கடலுக்குள் நவக்கிரக சந்நிதி அமையப் பெற்றது என்பதும் சிறப்புக்குரியதாக ஆனது.


என்னதான் புனிதத்துவம் வாய்ந்த இடம் என்றாலும், கடற்கரை பகுதியில் இருந்தே துர்நாற்றமும், அசுத்தமும் ஆரம்பித்து விடுகிறது. நீண்ட பாலம் வழியாக நடந்து சென்று, கடல் நீருக்குள்ளான நவக்கிரக சந்நிதியை அடைய வேண்டும். அப்பகுதி முழுவதுமாக கன்னங்கரேலென அடர் கறுப்பு நிறத்தில் தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. அதற்குள் இறங்கித்தான் பக்தர்கள் நவக்கிரக வழிபாடு மற்றும் தோஷங்கள் நிவர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இவற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தத் தலத்துக்கான புனிதத்துவம் சிறக்கும்.
திருமணத் தடை நீக்கம், குழந்தைப்பேறு, பிரம்மஹத்தி தோஷம், நவக்கிரக தோஷ நிவர்த்தி என தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள், நவக்கிரக சந்நிதி நோக்கி வந்து கொண்டேயுள்ளனர்.
நவகிரக தோஷம் மட்டுமல்லாது, ராமபிரான் சனியின் பாதிப்பில் இருந்தும் விடுபட்டார் என்று ஒரு புராணக் கதையும் இங்கே உண்டு. இங்கே கடற்கரையில் திலகேஸ்வரர் கோவிலும் உள்ளது. இங்கே சிவபெருமானும் பார்வதி தேவியும் காட்சியளிக்கின்றனர். சிவபெருமான் திலகேஸ்வரர் என்ற திருநாமத்துடனும், பார்வதி செளந்தரநாயகியாகவும் காட்சி தருகின்றனர்.
இந்த நவகிரக சந்நிதிக்கு, நவபாஷனக் கோவில் என்று ஒரு பெயரும் உள்ளது. பாஷனம் என்றால் கல். நவ தானியங்களைக் கொண்டு இந்தக் கற்களுக்கு பூஜைகள் செய்யப் படுகின்றன. அமாவாசை நாட்களில் ஏராளமானோர் இங்கே குவிகின்றனர். மூதாதையரை வழிபட்டு, சாப விமோசனம் அடைகின்றனர். ஆடி அமாவாசை தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.

வருடத்தின் எல்லா நாளும் பிரதோஷம்





வருடத்தின் எல்லா நாளும் பிரதோஷம்!

அதிசய கோயில்
 பொதுவாக ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும். லிங்கத்திற்கு எதிரில் நந்தி இருக்கும்.
ஆனால் இந்த கோயிலில், ஆவுடையார் மீது நந்தி, நந்தியின் மீது சிறிய  லிங்கமாக ஈசன். வீற்றிருக்கும்
 இது போன்ற அமைப்பை வேறு எங்கும் காணமுடியாது.  அதனால் இந்த கோயிலில் உள்ள நந்தியையும் சிவனையும் தரிசிக்கும் எல்லா நாளுமே பிரதோஷ நாளாக கருதப்படும். மேலும் இந்த கோயில் மலை மீது உள்ள குகையில் அமைந்திருக்கிறது. கோயிலை கட்டியது சித்தர் பெருமக்கள் என்கிறார்கள்.
 இன்றும் இங்கு சித்தர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
இங்கு மிக பிரமாண்டமான
ஏழு கற் பாறைகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் ஒரு இசை என ஏழு ஸ்வரங்களை தரும் அதிசய கல்லாக இருக்கிறது. ஆயிரம் அடி உயர மலையில் பிணிகளை போக்கும் அரிய சுணைகள் இருக்கிறது.
 நந்தி இருக்கும் குகைக்கு மேலே உள்ள இன்னொரு குகையில் கிருஷ்ணரின் சிலை இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களால் உருவாக்கப்பட்டது.  இத்தனை பெருமைகளை கொண்ட இந்த மலை வாலாஜா அருகே இருக்கிறது. இதன் பெயர் அனந்தலை மலை. ஆனால் இங்கு இயங்கி வரும் கல்குவாரிகள் இந்த அற்புத மலை மற்றும் சிவன் கோயில் உள்ள குகையை வெடி வைத்து தகர்க்க திட்டமிட்டு அது சிவ பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம். அதை தடுப்பதற்கு ஒரே வழி நாம் அணி அணியாக இந்த கோயிலுக்கு சென்று வழிபடுவதன் மூலமே தடுக்க முடியும். சித்தர்கள் உருவாக்கிய இந்த அரிய சிவாலயத்தை காப்போம், நந்தியின் அருளை பெறுவோம். நன்றி! ஓம் நமச்சிவாய
 குகையில் உள்ள நந்தி மற்றும் அதன் மீதுள்ள லிங்கம்
 மலையை வெடி வைத்து தகர்க்கும் காட்சிகள்
 வேலூர் மாவட்டம்
ஆற்காடு வாலாஜா அருகே
உள்ளது.*

சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்!



சகல வினைகள் போக்கும் சனிப்பிரதோஷம்!

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது அவ்வையாரின் வாக்கு. தமிழகம் எங்கும் சிவாலயங்கள் நிறைந்த பூமி. சிவ சிவ என்கையிலே நம் தீவினைகள் எல்லாம் ஓடிவிடும் என்பது பெரியோர் வாக்கு. சிவாலயத்தில் பிரதோஷ தரிசனம் தொடர்ந்து செய்துவந்தால் முன் ஜென்ம பாவ வினைகள் கரைந்தோடும் என்பது ஐதீகம்.

   பிரதோஷம் என்பது மாதம் இரண்டுமுறை ஆலயங்களில் அனுஷ்டிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை திரயோதசி, மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 மணி முதல் ஆறு மணிவரை பிரதோஷ காலம் என்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த திரயோதசி திதி கார்த்திகை மாதத்தில் சனிக்கிழமைகளில் வந்தால் சனிமஹாப்பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. அன்றுதான் சிவன் ஆலகால விஷத்தை உண்டதாக புராணங்கள் கூறுகின்றன.

   எனவே சனிக்கிழமைகளில் பிரதோஷம் என்பது சனிப்பிரதோஷம் என்று சிறப்பாக வழிபாடு செய்யப்படுகின்றது. இருபது வகையான பிரதோஷ வழிப்பாட்டு முறைகள் ஆகமங்களில் கூறப்படுகிறது. இருப்பினை மாதப்பிரதோஷமும் அதிலும் சனிப்பிரதோஷமும் ஆலயங்களில் விமரிசையாக வழிபாடு நடத்தப்படுகின்றது.

வளர்பிறை தேய்பிறை என்ற இரண்டு பட்சங்களிலும் வரும் திரயோதசி திதியன்று அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடிக்கவேண்டும். சிவாலயம் சென்று வழிபடவேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருக்கவேண்டும். திருமுறைகளை ஓத வேண்டும். பிரதோஷநேரம் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை. இந்நேரத்தில் சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாயநம) ஓதி வழிபட வேண்டும். வசதி உள்ளவர்கள் சுவாமிக்கும் அம்பிகைக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தல் அவசியமாகும். சிவபெருமானுக்கு ருத்ரன் என்றொரு பெயரும் உண்டு. ருத் - என்றால் துக்கம். ரன் - என்றால் ஓட்டுபவன். ருத்ரன் - என்றால் துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள்.

பிரதோஷகாலத்தில் நந்தி தேவருக்கு அருகம்புல் மாலை போட்டு நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் கலந்து வைத்து பூஜை செய்கிறார்கள்.

எனவே, பிரதோஷ தினத்தன்று மறவாமல் நந்திகேஸ்வர வழிபாடு செய்ய வேண்டும்.

பிரதோஷ பூஜையின் போது அபிஷேகப் பொருட்களால் விளையும் பலன்கள்:-

1. பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.

2. தயிர் - பல வளமும் உண்டாகும்

3. தேன் - இனிய சாரீரம் கிட்டும்

4. பழங்கள் - விளைச்சல் பெருகும்

5. பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும்

6. நெய் - முக்தி பேறு கிட்டும்

7. இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும்

8. சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்

9. எண்ணெய் - சுகவாழ்வு

10. சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்

11. மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்
. உத்தம மகா பிரதோஷம் :

சிவபெருமான் விஷம் அருந்திய தினம் சனிக்கிழமையாகும். அந்தக் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பானதாகும்.

சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் வளர்பிறையில், சனிக்கிழமையில் திரயோதசி திதியன்று வரும்

பிரதோஷம் உத்தம மகா பிரதோஷம் ஆகும். இது மிகவும் சிறப்பும் கீர்த்தியும் பெற்ற தினமாகும்.

பிரதோஷ காலத்தில் சிவனுக்கும் நந்திதேவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்வார்கள்.

மாவினால் செய்த அகல் விளக்கில் நெய்விளக்கு ஏற்றவார்கள். அரிசியில் வெல்லம் சேர்த்து (காப்பரிசி) படைத்து வணங்குவார்கள். பொதுவாகச் சிவன் கோயில்களை இல்லறவாசிகள் வலம் இடமாக வலம் வந்து வணங்க வேண்டும். முற்றும் துறந்த துறவியர் இடம் வலமாக வந்து வணங்க வேண்டும்.

பிரதோஷ நாட்களில் மட்டும் சிவாலயத்தை வலம் வரும் முறையினைச் சோமசூக்தப் பிரதட்சணம் என்று கூறுவர். சோமசூக்தம் என்ற சொல் சிவலிங்க அபிஷேக நீர்வந்து விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியைக் குறிக்கும்.

இத்தீர்த்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே சோமசூக்தப் பிரதட்சணம் எனப்படும். இம்முறை சிவாலயத்தில் மட்டும் அதுவும் பிரதோஷ காலத்தில் மட்டும் மேற்கொள்ளப் பட வேண்டிய முறையாகும். பிரதோஷ காலத்தின் போது நந்தியை முதலில் தரிசனம் செய்ய வேண்டும்.

அங்கிருந்து இடது புறமாகச் சென்று சண்டிகேஷ்வரரைத் தரிசனம் செய்தல் வேண்டும். பிறகு சென்ற வழியே திரும்பி வந்து நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்தல் வேண்டும். அங்கு நின்றும் வலமாச் சென்று பராசக்தியின் அம்சமாய் விளங்கும்.

அபிஷேகநீர் வரம் துவார வழியே சிவனைத் தரிசனம் செய்து சென்றவழியே திரும்பி வந்த நந்திதேவரை மீண்டும் தரிசனம் செய்தல் வேண்டும். இவ்வாறு மேலும் இருமுறையாக, மும்முறை இடம் வலம், வலம் இடமாக, பிரதட்சணமாகச் சுற்றிக் கொள்ளுதல் வேண்டும்.

இப்படியாக வலம் செய்வதன் வாயிலாக அரிய பேற்றைப் பெறலாம் என்பது ஆகம விதியாகும்.
சிவனை வழிபட ஏற்ற காலம் மாலை நேரம்; அதிலும் சிறந்தது சோமவாரம்; (திங்கட்கிழமை) அதிலும் சிறந்தது மாத சிவராத்திரி, அதிலும் சிறந்தது பிரதோஷ காலம். பிரதோஷ காலத்தில் சிவதரிசனம் செய்பவர்கள், எல்லா தேவர்களையும் தரிசித்த பலனையும் பெறுவர்.
பிரதோஷ காலத்தில், சகல தேவர்களும், சிவதரிசனம் செய்ய வந்து விடுகின்றனர். அதனால், நம் வீடுகளில் தெய்வ வழிபாடு பிரதோஷ காலத்தில் அவசியமில்லை.
பிரதோஷ காலங்களில் சிவதரிசனம் செய்வதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் கிடைக்கும்; சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்; சோமாஸ் கந்த மூர்த்தியை தரிசிப்பதால், இந்திரனுக்கு சமமான புகழ் கிட்டும்; பிரதோஷ காலத்தில் சிவாலயத்தில் செய்யப்படும் எந்த கைங்கர்யமும் பலவாகப் பெருகி, அளவற்ற பலனை கொடுக்கும்.

வியாழன், 23 மார்ச், 2017

எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும்!



எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும்!


நம் அனைவருக்கும் வெற்றிலை என்பது தாம்பு ல தட்டில் வைக்கும் ஒரு பொருள். ஆனால் வெற்றிலையை கொண்டு பரிகாரம் செய்யலாம் என்பது தெரியாத விஷயம். எந்த ராசிக்காரர்கள் எந்த தெய்வத்திற்கு வெற்றிலையை வைத்து வழிப்பட்டால் துன்பம் தீரும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

வெற்றிலையில் மாம்பழம் வைத்து முருகனை செவ்வாய் கிழமையில் வழிப்பட்டால் துன்பங்கள் அகலும்.

ரிஷபம்

வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டால் துன்பம் விலகி இன்பம் கிட்டும்.

மிதுனம்

வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை புதன் கிழமையில் வழிப்பட்டால் துன்பம் விலகும்.

கடகம்

வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

சிம்மம்

வியாழக்கிழமை வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கஷ்டம் விலகும்.

கன்னி

வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலைகள் தீரும்.

துலாம்

வெள்ளிக்கிழமை வெற்றிலையில் கிராம்பு வைத்து இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துன்பம் தீரும்.

விருச்சிகம்

வெற்றிலையில் பேரிச்சப்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் துயரம் தீரும்.

தனுசு

வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழக் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் கவலை நீங்கும்.

மகரம்

வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.

கும்பம்

வெற்றிலையில் நெய் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிப்பட்டால் கவலை தீரும்.

மீனம்

ஞாயிற்றுக்கிழமை வெற்றிலையில் சர்க்கரை வைத்து இஷ்ட தெய்வத்தை வழிப்பட்டால் நோய் தீரும்.

திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது. இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…!



திருவிளக்கில்லாமல் எந்த தெய்வ வழிபாடும் கிடையாது.  இறைவனின் அருளை வெகுவிரைவாக நமக்கு அளிப்பது நாம் ஏற்றும் தீபங்களே…!

தீபங்களை நாம் ஏற்றுவதால் தெய்வங்கள் நம் கர்ம வினைகளை நீக்கி கோரிய பலன்களை தருகின்றன.  கர்ம வினைகள் நீங்காமல் நற்பலன்கள் கிடைக்காது.  தீபங்களே கர்ம வினைகளை நீக்கக்கூடியவை.  தெய்வங்களை அமைதி படுத்தக்கூடியவை.  ஆனால் தீபங்களை ஏற்றுவதற்கு சில விதிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துள்ளனர்.  அவற்றை பின்பற்றி ஏற்றப்படும் தீபங்கள் நாம் நினைத்த பலனை தரக்கூடியவை.

விளக்கினை செய்யும் பொருட்களும் அதன் பலன்களும்:

மண் அகல் விளக்கு பீடைகள் விலகும்.

வெள்ளி விளக்கு திருமகள் அருள் உண்டாகும்.

பஞ்ச உலோக விளக்கு தேவதை வசியம் உண்டாகும்.

வெங்கல விளக்கு ஆரோக்கியம் உண்டாகும்.

இரும்பு விளக்கு சனி தோஷம் விலக்கும்.

விளக்கின் வகைகள்:

1. குத்து விளக்கு
உலோகத்தினால் செய்யப்பட்டது.
2. அகல் விளக்கு மண்ணால் செய்யப்பட்டது.
3. காமாட்சி விளக்கு உலோகத்தினால் செய்யப்பட்டது.
4. கிலியஞ்சட்டி விளக்கு மண்ணால் செய்யப்பட்ட அகண்ட விளக்கு.
5. செடி விளக்கு உலோகத்தால் செய்யப்பட்ட செடி போன்ற அமைப்பை உடையது.
6. சர விளக்கு உலோகத்தினால் அடுக்கடுக்காக செய்யப்பட்டது.
 
திருவிளக்கின் சிறப்பு: (குத்து விளக்கு)

தீப ஒளியில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் சக்திகள் உள்ளனர்.  தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கும்.  இதன் அடிப்பாகத்தில் பிரம்மாவும், தண்டு பாகத்தில் திருமாலும், நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமானும் வாசம் செய்கின்றனர்.

எனவே விளக்கை குளிர்விக்கும் போது கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது.  பூவால் குளிர்விக்கலாம்.  தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.  வாயால் ஊதி அணைக்கக்கூடாது.  அவ்வாறு அணைத்தால் சிவபெருமானையும், முப்பெரும் சக்திகளையும் அவமதிக்கும் செயலாகும் என்பதை நினைவில் கொள்ளவும்.

குத்து விளக்கின் மூன்று பாகங்களும் கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும்.  தற்போது கடைகளில் கிடைக்கும் குத்து விளக்கினை மேற்கண்ட மூன்று பாகங்களை தனித்தனியாக கழற்ற முடியும்.  ஒரு சிலர் அடிப்பாகத்தில் அழுக்கினை சேர விடுகின்றனர்.  இது பிரம்மாவை அவமதிக்கும் செயலாகும்.

உயரம் அதிகமாக உள்ளதாக  நினைத்து தண்டினை கழற்றி வைத்து விட்டு மேல் மட்டும் அடிப்பாகம் இவற்றை மட்டும் பயன்படுத்துகின்றனர்.  இதுவும் தவறாகும்.  இது திருமாலை அவமதிப்பதாகும்.  பிரம்மா மற்றும் திருமால் இருவரும் மிகப்பெரிய சிவபக்தர்கள் ஆவர்.  அவர்களை அவமதிப்பது சிவபெருமானையே அவமதிப்பதாகும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தீபங்கள் ஏற்றும் இடங்கள்:

வீட்டின் பூசையறை,  நடு முற்றம், சமயலறை, துளசி மாடம், பாம்பு புற்று, நீர் நிலைகளின் கரைகள், ஆலயம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபங்கள் 16 வகைப்படும். அவை…

1. தூபம்
2. தீபம்
3. அலங்கார தீபம்
4. நாகதீபம்
5. விருஷ தீபம்
6. புருஷா மிருக தீபம்
7. சூலதீபம்
8. கமடதி (ஆமை) தீபம்
9. கஜ (யானை) தீபம்
10. வியக்ர (புலி) தீபம்
11. சிம்ஹ தீபம்
12. துவஜ (பொடி) தீபம்
13. மயூர (மயில்)தீபம்
14. பூரண கும்ப (5 தட்டு) தீபம்
15. நட்சத்திர தீபம்
16. மேரு தீபம்




விளக்கேற்றும் காலம்:

வேளை நேரம்
காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்)
மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை (தினப்பிரதோஷம்)

மேற்கண்ட காலங்களில் விளக்கேற்றுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.  நமது கர்ம வினைகள் நீங்கும்.  தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும்.  நமது வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும்.

தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு ஒப்பாகும்.  தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்திற்கு அவிர் பாகமாக போய் சேரும்.  ஒருவரது இல்லத்தில் கண்டிப்பாக மேற்கண்ட இரண்டு வேளையும் விளக்கேற்ற வேண்டும்.  குளித்த பின்பே நாம் விளக்கேற்ற வேண்டும்.  குளிக்காமல் ஏற்றப்படும் விளக்கிற்கு பலன் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

விளக்கின் முகங்களும் அவற்றின் பலன்களும்: (குத்து விளக்கு)

ஒரு முகம்

நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும்.  துன்பங்கள் நீங்கும்.  நன்மதிப்பு உண்டாகும்.

இரண்டு முகம்

கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.

மூன்று முகம்

புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.

நான்கு முகம்

அனைத்து பீடைகளும் நீங்கும்.  அனைத்து செல்வங்களும் கிட்டும்.

ஐந்து முகம்

எல்லா நன்மைகளும் கிட்டும். அட்ட ஐச்வரியங்களும் உண்டாகும்.  குடும்ப ஒற்றுமை உண்டாகும்.  திருமணத்தடை நீங்கும்.  புண்ணியம் பெருகும்.

விளக்கின் தீபம் நோக்கும் திசையும் அதன் பலனும்: (திசைக்காட்டியை கருத்தில் கொண்டது)

கிழக்கு

இந்திரனைப் போல் வாழ்வு உண்டாகும்.  அனைத்து துன்பங்களும் நீங்கும்.  குடும்பம் செழிப்புறும்.  பீடைகள் நீங்கும்.

மேற்கு

கடன் தொல்லை நீங்கும்.  சனி தோஷம், கிரக தோஷம் முதலான அனைத்து வகை தோஷங்களும் நீங்கும்.  சகோதரர்களிடையே ஒற்றுமை உண்டாகும்.  பங்காளிப்பகை நீங்கும்.

வடக்கு

திருமணத்தடை நீங்கும்.  சர்வ மங்கலமும் உண்டாகும்.  பெரும் செல்வம் வந்து சேரும். கல்வித்தடை நீங்கும்.  சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

தெற்கு

மரணபயம் உண்டாகும்.  துன்பங்கள் வந்து சேரும்.  பாவம் வந்து சேரும்.  கடன் உண்டாகும்.

விளக்கில் பயன்படுத்தும் எண்ணெய்களும் அவற்றின் பலன்களும்:

1. நெய் கடன் தீரும்.  வருமானம் அதிகரிக்கும்.  நினைத்தது நடக்கும்.  கிரகதோஷம் நீக்கும். செல்வம், சுகம் தரும்.

2. நல்லெண்ணெய் நோய்கள் நீங்கும்.  ஆரோக்கியம் அதிகரிக்கும்.  நவகிரகங்களின் அருள் உண்டாகும்.  தாம்பத்ய உறவு சிறக்கும்.  அனைத்து பீடைகளும் விலகும்.

3. தேங்காய் எண்ணெய் அனைவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டாகும்.  துணிவு உண்டாகும். மனத்தெளிவு உண்டாகும்.

4. விளக்கெண்ணெய் புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும்.  தேவதை வசியம் உண்டாக்கும்.  அனைத்து செல்வங்களும் உண்டாகும்.

5. வேப்ப எண்ணெய் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.  மற்றவர்களின் உதவி கிடைக்கும். இல்லற இன்பம் அதிகரிக்கும்.

6. இலுப்பை எண்ணெய் காரிய சித்தி உண்டாகும்.

7. வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் சகல ஐச்வர்யங்களும் உண்டாகும்.

8. நெய் + வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் செல்வம் சேரும்.  குலதெய்வ வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றது.

9. விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்
பராசக்தி அருள் உண்டாக்கும்.  மந்திர சித்தி தரும்.  கிரகதோஷம் நீக்கும்.

குறிப்பு: கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே கூடாது.  மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை.

தெய்வங்களும் அவற்றிற்குரிய எண்ணெய்களும்:

விநாயகர் தேங்காய் எண்ணெய்
திருமகள், முருகன்  - நெய்
குலதெய்வம் வேப்ப எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + நெய்
பைரவர் நல்லெண்ணெய்
சக்தியின் வடிவங்கள் விளக்கெண்ணெய் + வேம்பெண்ணெய் + தேங்காய்  எண்ணெய் + இலுப்பை எண்ணெய் + பசுநெய்
ருத்ர தெய்வங்கள் இலுப்பை எண்ணெய்
எல்லா தெய்வங்கள் நல்லெண்ணெய்
நாராயணன் நல்லெண்ணெய்

விளக்கின் திரிகளும் அவற்றின் பலன்களும்:

இலவம் பஞ்சுத்திரி சுகம் தரும்.

தாமரைத்தண்டு திரி முன்வினை நீக்கும்.  செல்வம் சேரும்.  திருமகள் அருள் உண்டாகும்.

வாழைத்தண்டு திரி மக்கட்பேறு உண்டாகும்.  மன அமைதி உண்டாகும்.  குடும்ப அமைதி உண்டாகும்.  தெய்வ சாபம் மற்றும் முன்னோர் பாவம் நீங்கும்.  குழந்தைப்பேறு உண்டாகும்.

வெள்ளெருக்கு திரி செய்வினை நீங்கும்.  ஆயுள் நீடிக்கும்.  குழந்தைகளின் வாழ்க்கை சிறப்பாகும்.

பருத்தி பஞ்சுத்திரி தெய்வ குற்றம், பிதுர் சாபம் போக்கும்.  வம்சம் விருத்தியாகும்.

வெள்ளைத்துணி திரி அனைத்து நலங்களும் உண்டாகும்.

சிவப்பு துணி திரி திருமணத்தடை நீக்கும்.  மக்கட் பேறு உண்டாகும்.

மஞ்சள் துணி திரி எல்லா காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.  அம்பிகையின் அருள் உண்டாகும்.  வியாதிகள் நீங்கும்.  செய்வினை நீங்கும்.  எதிரிகள் பயம் நீங்கும்.  தம்பதிகள் ஒற்றுமை ஓங்கும்.  மங்களம் உண்டாகும்.

பட்டுத்துணி திரி எல்லா சுபங்களும் உண்டாகும்.

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்:
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

முன்பிறவி பாவம் நீக்கும் தீபம்:

வேதாரண்யம் கோயிலில் எலி ஒன்று, விளக்கில் கிடந்த நெய்யைக் குடிப்பதற்காக வந்தபோது, தவறுதலாக அதன் மூக்கு பட்டு அணைய இருந்த தீபம் தூண்டப்பெற்றது. அதன் பயனாக அந்த எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது. கோயிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோயில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகிவிடும். அதனால், திருக்கார்த்திகையன்று கோயில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பலவிதங்களிலும் விளக்கேற்றிவைப்பர். கோயில் முன்னர் சொக்கப்பனை கொளுத்துவர்.

பொதுவான விதிமுறைகள்:

விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும் ஏற்றிட வேண்டும்.  குறைந்த பட்சம் இரண்டு திரிகளாவது ஏற்ற வேண்டும்.

பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.

விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில் விளக்கில் நெய் அல்லது எண்ணெய் ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது நலம்.  இது கணவன் – மனைவி ஒற்றுமை உண்டாக்கும்.

ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை நோக்கி ஏற்றவும். நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு உண்டான பலன்களை அடையலாம்.
தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும். வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய ஸ்லோகம்

கீடா:பதங்கா:மசகாச்ச வ்ருக்ஷ:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்: புழுக்களோ, பறவைகளோ அல்லது கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும் பூமியிலும் எத்தனை வகையான ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.

‘விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்கு உடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே!’

விளக்கேற்றிய பின்பு பின்வரும் தேவாரப்பாடலை பாடவும்.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது
சொல்லக விளக்கது சோதி யுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

அகர தீபமோ குகநாதம்
உகர தீபமோ கணநாதம்
மகர தீபமோ பூதநாதம்
மகா தீபமோ சிவநாதம்

"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"



"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்"

இடம்: அரியலுர் மாவட்டம், திருமழபாடி(திருமானுர் வழி)

நாள் : 04/ 04 /2017

"நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்" என்பது, நம் முன்னோர்களின் நம்பிக்கையுடன் கூடிய சொல்வழக்கு.

நந்தியெம்பெருமாள் கயிலையில் சிவபெருமானின் வாயிற்காவலனாக இருப்பவர். திருமழபாடி என்னும் தலத்தில் அவதரித்தவர்.

திருவையாற்றீசன் ஐயாறப்பர்மீது மிகுந்த பக்திகொண்டவர் சிலாத முனிவர். திருமணமாகிப் பல ஆண்டுகள் கழித்தும் புத்திரப் பேறின்மையால் வருந்திய முனிவர், ஐயாறப்பரை வழிபட்டு அருந்த வமியற்றினார்.

முனிவரின் தவத்துக்கிரங்கிய ஈசன், "சிலாதனே, நீ புத்திர காமேஷ்டி யாகம் செய்வாயாக. அதன் பின் யாகபூமியை உழும்பொழுது, பெட்டகம் ஒன்று தோன்றும். அப்பெட்டகத்தில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனை எடுத்துக்கொள். அவனுக்கு ஆயுள் 16 ஆண்டுகள் மட்டுமே' என்று அசரீரி வாக்காகக் கூறினார்.

அதன்படியே யாகபூமியிலிருந்து ஒரு பெட்டகம் வெளிப்பட்டது. அதற்குள் நான்கு தோள்களும், மூன்று கண்களும், பிறையணிந்த முடியும் கொண்ட ஒரு மூர்த்தியைக் கண்டார். அம்மூர்த்தியை வணங்கினார். மீண்டும் ஐயாறப்பர்அசரீரியாய் "பெட்டியை மூடித்திற' என்றார். அவ்வாறே சிலாதர் பெட்டியை மூடித்திறந்ததும், பெட்டிக்குள் அழகிய குழந்தையொன்று காணப்பட்டது. அதைக்கண்ட முனிவரும், அவரது மனைவியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.

குழந்தைக்கு செப்பேசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்கள். செப்பேசர் 14 வயதுக்குள் சகலகலைகளையும் கற்று வல்லவராயினார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் தனது ஆயுள் முடிந்து விடும் என்று பெற்றோர் வருந்துவதைக் கண்ட செப்பேசர் அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஐயாறப்பர் கோவிலுக்குச் சென்று ஈசனை வணங்கி, அங்குள்ள அயனரி தீர்த்தத்தில் நீராடி, கால்மேல் காலையூன்றிக் கடுந்தவம் மேற்கொண்டார். நீர்வாழ் உயிர்கள் அவரது உடலை அரித்துத் தின்றன. மனந்தளராத செப்பேசர் பலநாள் தவமிருந்தார்.

அவரது பக்திக்கு இரங்கிய இறைவன் செப்பேசருக்கு தீர்க்காயுளையும் 16 பேறுகளையும் தந்தருளினார். செப்பேசரின் புண்பட்ட உடலை நலமுறச் செய்ய மனங்கொண்ட ஈசன் கங்கை நீர், பிரம்மன் கமண்டல நீர், அம்மையின் கொங்கைப்பால், கொண்டல் (மேகம்) நீர், இடப நந்தியின் வாய்நுரை நீர் என்னும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார். செப்பேசரின் புண்கள் நீங்கின; உடல் பிரகாசம் கொண்டது.

ஈசன் அருள்பெற்ற செப்பேசருக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தார் சிலாதர். அதன்படி வசிஷ்ட முனிவரின் பௌத்ரியும், வியாக்ரபாத முனிவரின் புத்ரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமான சுயம் பிரகாசையை செப்பேசருக்கு பங்குனி மாத புனர்பூச நட்சத்திரத்தில் திருமணம் செய்து வைத்தார். திருமழபாடியில் திருமணம் நடைபெற்றது. திருமண விழாவும், திருமணஊர்வலமும் மிகச்சிறப்பாக நடந்தேறின.

திருவையாற்றைச் சுற்றியுள்ள தலங்களான திருவேதிக்குடியிலிருந்து வேதியர்களும், திருப் பூந்துருத்தியிலிருந்து பூக்களும், திருப்பழனத்திலிருந்து பழங்களும், திருச்சோற்றுத் துறையிலிருந்து உணவு வகைகளும், திருநெய்த்தானத்திலிருந்து நெய்யும், திருக்கண்டியூரிலிருந்து செப்பேசருக்கான நகைகளும் வரவழைக்கப்பட்டன.

செப்பேசர் ஐயாறப்பரிடம் உபதேசம் பெற்று கயிலையில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியையும், சிவபெருமானுக்கு வாயில் காப்போனாகும் பதவியையும், சைவாச்சார்யார்களுள் முதல் குரு என்ற தன்மையையும் பெற்றார். இத்தகைய பெரும் பேறுகளைப் பெற்ற செப்பேசர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார்.



நந்திதேவருக்கும் சுயம் பிரகாசைக்கும் நடந்த திருமண நிகழ்வு திருமழபாடியில் ஆண்டுதோறும் திருவிழாவாகக் கொண் டாடப்படுகிறது. திருவையாற்றிலிருந்து பஞ்சநதீஸ்வரர் வந்து திருமணத்தை நடத்திவைப்பது வழக்கம்.

காவிரியின் இருமருங்கிலும் அமைந்துள்ள திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஏழு தலங்களும் சப்த ஸ்தானத் தலங்கள் எனப்படுகின்றன.

சித்திரை பௌர்ணமியை அடுத்துவரும் விசாக நட்சத்திரத் தன்று, திருவையாற்றில் நடைபெறும் சப்தஸ்தானம் எனப்படும் ஏழூர்த்திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. நந்திதேவர் திருமணத்திற்கு உதவி செய்த ஆறு தலத்து மூர்த்திகளுக்கும் நன்றி தெரிவிக்கும்பொருட்டு ஐயாறப் பரும் அறம்வளர்ந்த நாயகியும் கண்ணாடிப் பல்லக்கிலும்; நந்தியெம்பெருமான் வெட்டிவேர் பல்லக்கிலும் ஆறு தலங்களுக்கும் எழுந்தருள்வர்.

அந்தந்த தலத்து மூர்த்திகளும் இவர்களை எதிர்கொண்டழைப்பர். கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அம்மூர்த்திகளும் உடன்வர, நந்தியெம்பெருமானும் ஏழூர் மூர்த்திகளும் திருவையாற்றில் எழுந்தருள்வர். இவ்விழாவை திருநந்தி தேவர் திருமண ஊர்வலம் என்பர். பல்லக்குகளின் அலங்காரமும் வீதிகளில் அவை உலாவருவதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்குகொண்டு திருமுறைப்பாராயணம், சிவஸ்துதிகள் செய்தபடி பல்லக்குகளைப் பின் தொடர்ந்து வலம்வருவதன் மூலம் நலன்கள் பல பெறுகிறார்கள்.

ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் ஏழூர்த்திருவிழா பக்தர்கள் கண்டு களித்துப் பலன்பெறவேண்டிய சிறப்பான விழாவாகும்.

கந்தனின் தந்தையை தான் கவனமாய் சுமந்து செல்வாய்
நந்தனார் வணங்குதற்கு நடையினில் விலகி நின்றாய்
நந்தியே உம்மை துதித்தேன் நாடி வந்து எமை காப்பாய்

புதன், 22 மார்ச், 2017

இந்துக்கள் எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது – இந்து தர்ம சாஸ்திரம் கூறும் உண்மைகள் :



இந்துக்கள் எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது – இந்து தர்ம சாஸ்திரம் கூறும் உண்மைகள் :

1.இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்; இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்; இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.
2.ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.
3. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.
4. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.
5. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.
6. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது. துணியில்லாமல் குளிக்கக் கூடாது. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.
7. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.
8. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.
9. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.
10. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.
11. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.
12. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.
13.சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.
14. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.
15.இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.
16. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.
17. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.
18. (அறிவுரை) மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.
19. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.
20. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.
21. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.
22. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.
23. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.
24. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது
25.பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.
26. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.
27. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.
28. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.
29. (அறிவுரை) தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.
30.பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது
31. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.
32. (அறிவுரை) அங்கவினர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது
33. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.
34. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.
35. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.
36. (அறிவுரை) பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.
37. பசு மாட்டை, ‘கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.
38. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.
39. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.
40. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.
41. அண்ணன், தம்பி, அக்காள், தங்கை, ஆசிரியர், மாணவர், கணவர், மனைவி, குழந்தை, தாய, பசு, கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.
42. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.
43. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக



உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக

1) ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான்.
அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை.

அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள்.

ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம்.

அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

2) வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

நெல்லிக்கனிக்குஹரிபலம் என்ற பெயரும் உண்டு.

லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி.

நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும்.

எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது.

நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்.

3) சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.

4) தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.

5) பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் எனும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால்?பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான்.கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.

6) செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.

7) சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள்,சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.

8) காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்

9) தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.

10) விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும்.‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.

11) விளக்கை தானாக மலையேற விடக்கூடாது,ஊதியும் அமர்த்தக்கூடாது.

புஷ்பத்தினாலும்மலையேற்றக்கூடாது.
அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள்?
அப்படி கேளுங்க….தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும்.

12) வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது.அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.

13) மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.

14) ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள்.

15) எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது.
எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும்.

16) எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள்.

17) வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும்.

அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும்,பொருளும், சந்தோஷமும் பெருகும்.

18) எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது.இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

19) எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.

20) சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.

21) தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவதும், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்.

22) குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது.கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும்.அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும்.

23) அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது.
கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும்.

கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.

24) பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.

25) அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது

26) வெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.

27) இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.

28) வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.

29) பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.

30) மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.

31) விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.

32) விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.

33) கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள்.வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம்.

பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.

34) ஒருவருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசல் படியில் நின்று கொடுக்கக் கூடாது.கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது கீழே இறங்கி வாங்க வேண்டும்.

35) துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது.

36) உப்பைத் தரையில் சிந்தக் கூடாது.
அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.

37) வாசல்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.

38) பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது.

ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.

39) வெற்றிலை, வாழை இலை இவைகளை வாடவிடக் கூடாது, வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.

40) சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள்தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.

41) அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.

42) அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாது

43) நகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.

44) பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.

45) சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.

46) ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.

47) பெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது.

48) தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.

49) பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின்நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது

50) தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும்.லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.

சகல ஐஸ்வர்யங்களையும் பெற்று நோயின்றி வாழ வாழ்த்துக்கள்