செவ்வாய், 30 மே, 2017

அமாவசை தினம்



அமாவசை தினம்

அரசர்கள் அமாவாசையன்று விருந்து கொடுத்து ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடத்தியுள்ளனா்.
இந்த அமாவாசை தினம் அனேக மதங்களிலும் முக்கியத்துவத்தைப் பெற்றது.
இந்துக்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை மிகவும் சிறப்புடையது.

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது.
அமாவாசையன்று பிறக்கும் குழந்தைகளின் மூளை பிற்காலத்தில் அதீதமாக வேலை செய்யும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமாவாசையன்று விபத்துகள் கூடுதலாக ஏற்படுவதாக ரஷ்ய விஞ்ஞானிகள் கூறுகின்றனா்.
அமாவாசைப் பிறவிகளில் அனேகருக்கு தலையில் இரண்டு சுழி இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.

சோதிட ரீதியாக அமாவாசை நிறைந்த நாள் எனக் கூறுகின்றனா். அனேகா் அமாவாசையில் மோதிரம் செய்து போடுகின்றனா்.
சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் சாஸ்திரிகள் மந்திர ஜெபம் ஆரம்பிக்கின்றனா். கடலில் நீராடி தங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்குகின்றனா்.
அமாவாசையன்று ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனா்.
முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும்.

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக்கற்றையில் உள்ள அமிர்தத்தைப் புசிக்கும். அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் இரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.
நம்மை யாராவது எண்ணுகிறார்களா? நமக்குத் தா்ப்பணம், படையல் செய்கிறார்களா என்று பார்க்கும்.

நாமெல்லாம் இறந்த முன்னோர்களின் இரத்த சம்பந்தமான கொடி வழியைச் சோ்ந்தவா்கள். மேலும் அவா்கள் பாடுபட்டுத் தேடிய சொத்தை நாம் பாடுபடாமல் அனுபவிக்கிறோம். அமாவாசையன்று முன்னோர்களை நினைக்க நேரமில்லை. ஆனால் டி.வியில் கிரிக்கெட் பார்க்க நேரம் இருக்கிறது. பசியால் அமாவாசையன்று வந்த பிதுா்கள் என்னும் நம் முன்னோர் ஆவிகள் நமக்குச் சாபம் இட்டுச் செல்லும். இப்படிப் பிதிர்கள் என்னும் ஆவிகள் இட்ட சாபம் நாளாவட்டத்தில் கூடும்.

பின்னா் நம் குடும்பத்தை நிச்சயம் பாதிக்கும்.
இதனால் குடும்பத்தில் அகால மரணங்கள், மனக்கோளாறுகள், கணவன் மனைவி பிரிவு, குழந்தை இல்லாமை ஆகியவை உண்டாகும். இதனை மந்திர யந்திர தந்திர சாதனங்களால் தீா்க்க முடியாது. அன்னதானம் செய்வதால் மட்டுமே தீா்க்கக் கூடியது.
வீடு வாசல் இல்லாத ஏழைகளுக்கு அமாவாசையன்று அன்னதானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அமாவாசையன்றும் தங்களால் இயன்ற அளவு உணவை அன்னதானம் செய்யலாம். பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் அன்று அன்னம் அளிக்கலாம். வள்ளலார் வலியுறுத்தும் ஜீவகாருண்யம் இதுதான்!
அமாவாசை பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் இருக்கும் இடத்தில் செய்வது நல்லது. முடியாதவா்கள் தங்கள் இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்யலாம். வீட்டிலும் செய்யலாம்.

அமாவாசையன்று தலையில் எண்ணெய் தடவக் கூடாது. புண்ணியத் தலங்களில் கடலில் நீராடலாம். அல்லது நதியில் நீராடலாம். அமாவாசையன்று காலை சூரிய உதயத்தின் போது கடலில் எடுக்கப்பட்ட நீரை வீட்டுக்குக் கொண்டுவந்து தீா்த்மாகத் தெளிக்கலாம். அதனால் வீட்டிலுள்ள தோஷங்கள் நீங்கும்.

நமக்கு அன்னம் இடுபவள் அன்னபூரணி! ஆவிகளுக்கு அன்னம் இடுபவள் ஸ்வதா தேவி! நாம் ஆவிகளை நினைத்துக் கொடுக்கும் அன்னத்தை மற்றும் யாகத்தில் போடும் ஆவுதிகளை ஸ்வதா தேவிதான் சம்பந்தப்பட்ட ஆவிகளிடம் சோ்ப்பிக்கிறாள்.
உற்றார், உறவினா் தொடா்பு இல்லாத ஆவிகள் மரம், செடி கொடிகளில் அமாவாசையன்று மட்டும் தங்கி, அவற்றின் சாரத்தைச் சாப்பிடும். அதனால் அமாவாசையன்று மட்டும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடக்கூடாது. பறிக்கக் கூடாது.

ஒவ்வொரு மாதம் அமாவாசை அன்னதானம் செய்ய முடியாதவா்கள் தை, ஆடி, புரட்டாசி அமாவாசையில் அன்னதானம் செய்ய வேண்டும். புரட்டாசி அமாவாசையில் செய்தால் 12 ஆண்டுகளாக அன்னதானம் தா்ப்பணம் செய்யாத தோஷம் நீங்கும்.
நகரங்களில் வசிப்பவா்கள் அமாவாசையன்று ஏழைக் குழந்தைகளுக்கு அல்லது ஆதரவற்றவா்களுக்கு முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்ய வேண்டும். இதர தானங்கள் தருவது அவரவா் வசதியைப் பொறுத்தது.

அன்னதானம் கஞ்சியாகவோ, சாதமாகவோ, இட்லியாகவோ இருக்கலாம். ஆனால் எள்ளு சட்னி அல்லது எள் உருண்டை கண்டிப்பாக இருக்க வேண்டும்.
எதுவும் செய்ய முடியாமல் இருப்பவா்கள் ஒரு பசு மாட்டிற்கு ஒன்பது வாழைப்பழங்கள் அமாவாசை அன்று கொடுக்க வேண்டும். இதற்குச் சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இல்லை.

முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய ஒவ்வொரு மனிதப் பிறவியும் இதைச் செய்ய வேண்டும். மாமிச ஆகாரம் தவிர்ப்பது பெரும் ஜீவகாருண்யமாகும்.

நாம் கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்!





நாம் கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்!
கோயிலுக்குச் செல்லும் பொழுது...

1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.
3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.
4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.
5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.
6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.
7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.
8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

கோயிலுக்குள் இருக்கும்பொழுது...

10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.
12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.
13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.
14. விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.
15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.
16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.
17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.
18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.
19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.
20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.
21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.
22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.
23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.
27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.
28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.
29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.
30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.
31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ  கெடுக்கக்  கூடாது.
32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.
33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.
34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.
35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.
36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

தரிசனத்திற்கு முன்னும்.. பின்னும்...

37. கோவிலை வேகமாக வலம் வருதல் கூடாது.
38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.
39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.
40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.
41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

கோயிலுக்கு வெளியே...

42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.

44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்

45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக்  கூடாது.

46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.
48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.
49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செலும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.
50. கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்".

திங்கள், 29 மே, 2017

நாகதோஷங்களை அடியோடு நீக்கும் கர்கோவில் நாகராஜா திருக்கோவில்



நாகதோஷங்களை அடியோடு நீக்கும் நாகர்கோவில் நாகராஜா திருக்கோவில்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்குவது நாகர்கோவில். அங்குள்ள நாகராஜா திருக்கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் ‘நாகர்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகராஜா கோவில் ஆகும்.
நாகருக்கென்றே தனிக்கோவில்
ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.
நாகர் சிலைக்கு பாலாபிஷேகம்
அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே அந்தப் பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.
ஆண் நாகமும், பெண் நாகமும்
ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டுவந்த மன்னன் மார்த்தாண்டநாகதோஷம் போக்கும் நாகராஜர் வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது.
இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.


மண் பிரசாதம்
இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.
கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னிதி, பாலமுருகன் சன்னிதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னிதி முதலியவை உள்ளன. மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னிதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது.
தீர்த்த துர்க்கை
இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
‘ஓடவள்ளி’ என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.

வெள்ளி, 26 மே, 2017

ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!



ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள்  !!!

ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை  சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில்  பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில்  தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.

*1, திங்களூர் (சந்திரன்):*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*காலை 6மணி*

ஒன்பது  நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள்  கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி  கிளம்பலாம்.

*2, ஆலங்குடி (குரு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 7.30மணி*

ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள்  சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு  8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்

காலை 8.30 மணிக்குள்  இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்

*3, திருநாகேஸ்வரம் (ராகு) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*காலை 9.30*

கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் ஹ  10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி  பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க  ஒரு மணி நேரம் ஆகும். பின்னர்  கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு  புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.


*4, சூரியனார் கோவில் (சூரியன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 11.00மணி*

நீங்கள்  11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.

*5, கஞ்சனூர் (சுக்கிரன்) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*மதியம் 12.15*

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால்  மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே  12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.

*6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :*
*தரிசனம் நேரம் :1மணி நேரம்*
*மாலை 4மணி*

நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை  20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம்.  மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.

*7, திருவெண்காடு (புதன்) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 5.15மணி*

வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம்  மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.

*8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :*
*தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்*
*மாலை 6.15மணி*

திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம்.  ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்

*9, திருநள்ளாறு (சனி) :*
*தரிசனம் நேரம்:1மணி நேரம்*
*இரவு 8.00மணி*
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால்  8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும், சிவபெருமானையும் ஒரு மணிநேரம்  தரிசிக்கலாம்.

9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது நவக்கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்ம பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்....  

விநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்!* *தெரிந்து கொள்வோம்!



விநாயகர் பற்றிய *80 அற்புத உண்மைகள்!* *தெரிந்து கொள்வோம்!

1.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிக்கை ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டியவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ்வடிவில் எழுந்தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களிமண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடு வார்கள்.
10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனாலேயே மீண்டும் விண்ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருதவீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனைவரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங் களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

22. தும்மைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும். துவாபர பாகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ”சோமாஸ்கந்த வடிவம்” என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்பபடும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.

31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

33. சாதூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவிலில் தீப்பெட்டி செய்வோர் ஒவ்வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய்வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை.நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ்செயலில் உங்களுக்குத்துணையாக இந்தக்கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.

50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள் படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பெளத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த 2010-ம் ஆண்டு ஒரு லட்சத்து 19 ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட் டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.

66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பெளத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வியாழன், 25 மே, 2017

உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தில்! கைலாசநாதராக சிவன்!!



உலகின் மிகப்பெரிய சிவன் சிலை நேபாளத்தில்! கைலாசநாதராக சிவன்!!

இந்தியாவிற்கு அடுத்து இந்து மக்கள் அதிகளவில் வாழும் ஒரு நாடு தான் நேபாளம். இந்துக்கள் அதிகம் வாழும் இரண்டாவது நாடான நேபாளத்தில் தற்போது
2 கோடியே 34 இலட்சத்து 40 ஆயிரத்து 450 இந்துக்கள் வாழ்கின்றனர் (81.3%).

சிவன் கோவில் அதிகம் இருக்கும் நேபாளத்தில் தொழிலதிபரான கமல் ஜெயின் என்பவர் தன் சிவபக்தியினால் உலகின் மிகப்பெரிய சிவனின் சிலையை பக்தாபூர் மாவட்டம் சங்கா என்ற பகுதியில் 2004 ஆம் ஆண்டு கட்ட தொடங்கவே, இந்தியா மற்றும் நேபாளத்தினர் என முந்நூறுக்கும் மேற்பட்டோர் வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனின் பணிகள் 2011 ல் நிறைவடைந்தது.

இச்சிலையானது எஃகு கம்பிகள், கற்காரை, துத்தநாகம் மற்றும் காப்பர் போன்றவற்றின் கலவையினால் வானுயர 144 அடி (44 மீட்டர்) உயர சிலையாக விண்ணை முட்டி நிற்கின்றது.

ஜுன் மாதம் 21 ம் தேதி 2011 ல் நேபாளத்தின் வசந்த கால "தீஜ்" பண்டிகையின் போது இக்கோவில் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. வாரத்திற்கு 5000 க்கும் மேற்பட்ட சுற்றுலா மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து கோவிலை பிரம்மிப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

கைலாசநாத மகாதேவ் சிவன் சிலையானது உலகின் மிகப்பெரிய 14 வது உயர்ந்த சிலையாகவும் திகழ்கிறது.

             

குலதெய்வம்



குலதெய்வ அனுமதியே முக்கியம்

ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வ தோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.

குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது பங்குனி உத்திர நாளில் குலதெய்வ கோயிலில் வணங்கினால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.

எப்போது வழிபடுவது?

கிராம கோவில் திருவிழா மற்றும் முக்கிய பண்டிகை திருவிழா நாட்களிலும், குல தெய்வ சிறப்பு பூஜைகளை ஒன்றாக இணைத்து செய்வதுண்டு குடும்பத்தில் நடை பெறும் பிறந்த நாள் விழா, காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா, திருமண விழா போன்ற விசேச நாட்களில் குலதெய்வத்திற்கு முதல் அழைப்பிதழ் வைக்கும் பழக்கம் இருக்கிறது.

திருமண நிச்சயம் குலதெய்வத்தின் முன்பு நடக்கும் வழக்கமும் சில இடங்களில் இருக்கிறது. வருடத்திற்கு ஒரு முறை சுற்றமும், கோவில் பங்காளிகளும் ஒன்றாக இணைந்து ஆட்டு கிடாவெட்டி பொங்கல் வைத்து விழாவை போல சிறப்பாக வழிபாடு செய் கின்றார்கள்.

வழிபாடு பலன்கள்...........

குலதெய்வம் வழிபாட்டின் மூலம் மணமாகதவர்களுக்கு திருமணம் நடைபெறும். குழந்தை வரம் பெறுவது, தீராத நோய்களுக்கு பரிகாரம் பெறுவது, கல்வி, தொழில் விருத்தி கிடைப்பது, வழக்குகளில் நீதி கிடைப்பது முதலிய பயன்கள் பெறப்படுகிறது.

அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களையே அளிக்கிறது.

திருச்செந்தூர் முருக கடவுளே குலதெய்வம்..........

பெற்றோர்கள் சொல்லாத காரணத்தாலும், இடம் பெயர்ந்து விட்ட காரணத்தாலும் பலர், தங்களது குலதெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பார்கள். ஜோதிடர்கள் அதற்கு பரிகாரங்கள் கூறி இருந்தாலும் நாம் வணங்குவது, உண்மையிலேயே நம் குல தெய்வம்தானா என்ற நெருடல் சிலருக்கு இருந்து கொண்டே இருக்கும்.

இப்படி தவிப்புக்குள்ளாகி இருப்பவர்கள் வீணாக கவலைப்பட வேண்டியதில்லை. திருச்செந்தூர் முருகனை குல தெய்வமாக மனதில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்தால் போதும். நிச்சயம் பலன்கள் கிடைக்கும்.

பகவத் கீதை தரும் விளக்கம்.......

குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:- யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களை அப்படியே நான் வழி நடத்துகிறேன், செயல்களின் பயனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை வழிபடுகிறார்கள். அதாவது இறைவனை லட்சியமாகக் கொள்வதும் உலக இன்பங்களை ஒதுக்கி விட்டு இறை நெறியில் செல்வதும் எல்லோராலும் முடியாது.

உலகம் மற்றும் அதன் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக இறைவன் தேவதைகளைப் படைத்துள்ளார் அல்லது அவரே அப்படி அவதரிக்கிறார். வேத காலத்தில் இந்திரன், வருணன் முதலிய தேவர்கள் வழிபடப்பட்டனர். இக்காலத்தில் உள்ள தேவதைகள் தான் குல தெய்வங்கள். எனவே குலதேவதையை ஒருவர் முறையாக வழிபட்டாலே உலக இன்பங்களைப் பெற் றுக்கொண்டே இறை நிலை அடையும் வாய்ப்பு உள்ளது.

ராசிப்படி குலதெய்வம்.....

ஒருவருக்கு ஜாதக ரீதியில் ஒன்பதாமிடம் தான் இறையருள் தருகிற இடம். இங்கே இருந்து தான் குலதெய்வ குறிப்பை தெரிந்து கொள்ள முடியும். இதோ உங்கள் குலதெய்வ அட்டவணை.

ராசி - குலதெய்வம்

மேஷம் - மதுரைவீரன்

ரிஷபம் - ஐயனார்

மிதுனம் - காளியம்மன்

கடகம் - கருப்பன்னசாமி

சிம்மம் - வீரபத்திரன்

கன்னி - அங்காளம்மன்

துலாம் - முனீஸ்வரன்

விருச்சிகம் - பெரியாச்சி

தனுசு - மதுரைவீரன்

மகரம்- ஐயனார்

கும்பம் - காளியம்மன

மீனம் - மதுரைவீரன்...

புதன், 24 மே, 2017

விரைவில் திருமணம் நடைபெற....


விரைவில் திருமணம் நடைபெற....

O1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.

02. ஓர் ஏழைப்பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.

03. 7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும்.
எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை.

இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள் #வெள்ளிக்கிழமை தோறும் அல்லது #செவ்வாய்க்கிழமை தோறும் #ராகு கால நேரத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு ஏற்றி வரவும்.

இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

04. சென்னை-#திருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.  பல்வேறு புராணச்சிறப்புகள் மிக்கது.

இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

05. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள #ஆலங்குடியில் வீற்றிருக்கிறார் #குரு #பகவான்.

அங்குள்ள #தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

06. #வேப்ப_மரத்தடியில் வீற்றிருக்கும் #பிள்ளையாரை கடலை எண்ணெய் நீங்கலாக பிற #பஞ்ச #தீப #எண்ணை ஊற்றி தீபம் ஏற்றி #மஞ்சள் #பொடி #அபிஷேகமும், eபால் #அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

07. காஞ்சீபுரம் #கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள #நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் #பஞ்சமி நாட்களில் #அடிப்பிரதஷணம் செய்யுங்கள்.

ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு #மாங்கல்யச் #சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

08. #தேவதோஷம்,
#பித்ருதோஷம்,
#சர்ப்பதோஷம்,
#திருஷ்டிதோஷம்,
#பிரேதசாபம்,
#அபிஷாரதோஷம்
என்று
#ஆறு
#வகையான
#தோஷங்களால்
#திருமணம்
#தடைப்படுகிறது.

#மாயவரம் #குத்தாலம் நெடுஞ்சாலையில் உள்ள ஊர் #திருமணஞ்சேரி, இங்குள்ள #கல்யாண #சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் உடனே திருமணம் ஆகிவிடும்.

09. திருமணம் #செவ்வாய் #தோஷத்தால் தடைபடுமாயின் #வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.

10. துணைவியருடன் இருக்கும் நவக்கிரகங்களை வழிபட உடனே திருமணம் நடைபெறும்.

இத்தகைய நவக்கிரகங்கள் கல்யாண நவக்கிரகங்கள் என அழைக்கின்றனர்.

இயலாதவர்கள் #துணைவியாருடன் சேர்ந்துள்ள #நவக்கிரக படம் வாங்கி வழிபட்டு வரவும் விரைவில் திருமணம் நடைபெறும்.

கருடபுராணம் சொல்லும் நன்மைகள்


கருடபுராணம் சொல்லும் நன்மைகள்

*1    அன்னதானம் செய்தல் -   விரும்பிய உலகத்தில் ஒரு வருடம் வீதம் சுகித்திருப்பார்.*

*2    கோ தானம் செய்தல்  -  கோலோகத்தில் வாழ்வர்*

*3    பசு கன்றீனும் சமயம் தானம் கொடுத்தவருக்கு -   கட்டாயம் வைகுண்ட வாசம் உண்டு*

*4    குடை தானம் செய்தவர்    1000 ஆண்டுகள் வருணலோகத்தில் சுகம் அனுபவிப்பார்*

*5    தாமிரம், நெய், கட்டில், மெத்தை, ஜமுக்காளம், பாய், தலையணை - இதில் எதை தானம் செய்தாலும், சந்திர லோகத்து சுகங்களை அனுபவிப்பார்*

*6    வஸ்திர தானம் கொடுத்தவர்  10000 ஆண்டுகள் வாயுலோகத்தில் வாழ்வார்*

*7    இரத்தம்,  கண், உடல் தானம் கொடுத்தவர்  அக்கினிலோகத்தில் ஆனந்தமாயிருப்பார்*

*8    ஆலயத்துக்கு யானை தானம் கொடுத்தவர் இந்திரனுக்கு சமமான ஆசனத்தில் அமர்ந்திருப்பார்*

*9    குதிரையும், பல்லக்கும் தானம் கொடுத்தவர்
 இந்திரன் காலம் வரை வருணலோகத்தில் வாழ்வார்*

*10    நந்தவனங்களை ஆலயத்துக்கு அளிப்பவர்    ஒரு மன்வந்தரகாலம் வாயுலோகத்தில் வாழ்வார்*

*11    தானியங்களையும், நவரத்தினங்களையும் தானம் கொடுத்தவர்  மறு ஜென்மத்தில் அறிவாளியாகவும் தீர்க்காயுள் கொண்டவராயும் வாழ்வர்*

*12    பயன் கருதாது தானம் செய்பவரின் மரணம்  உன்னதமாயிப்பதோடு மீண்டும் பிறவி வாய்ப்பதில்லை*

*13    நற்செயலை விரும்பி செய்கிறவர்கள்    சூரியலோகத்திற்கு செல்கிறார்கள்*

*14    தீர்த்த யாத்திரை புரிகின்றனர். சத்தியலோக வாசம் கிட்டுகிறது*

*15    ஒரு கன்னிகையை ஒழுக்கமாக வளர்த்து விவாகம் செய்து கொடுப்பவர்கள்,  14 இந்திர ஆயுட்காலம் வரை அமராவதியில் சுகித்திருப்பர்*

*16    பொன் வெள்ளி ஆபரணங்களைத் தானம் கொடுத்தவர், குபேர லோகத்தில் ஒரு மன்வந்தரம் வாழ்வார்*

*17    பண உதவி செய்பவர்கள், ஸ்வேத தீபத்தில் நெடுங்காலம் வாழ்வார்கள்*

*18    நீர் நிலைகளை சீர்திருத்துபவரும், உண்டாக்குபவரும் , ஜனலோகத்தில் நீண்டகாலம் சுகித்து வாழ்வார்கள்*

*19    பயனுள்ள மரங்களை நட்டு பாதுகாப்பவர்,  தபோ லோகத்தை அடைகிறார்*

*20    புராண நிகழ்ச்சிகளைக் குறிக்கும் சிற்பங்களையுடைய கோபுரம் கட்டும் செலவினை ஏற்றால், 64 ஆண்டுகள் பரமபதத்திலிருப்பான்*

*21    தெய்வம் பவனி வரும் வீதிகளை செம்மைப்படுத்துபவர்,  10000 வருடங்கள் இந்திரலோகத்தில் சுகித்திருப்பார்.*

*22    பௌர்ணமியில் டோலோற்சவம் செய்பவர், இம்மையிலும் மறுமையிலும் இன்பமடைவார்.

*23    தாமிரப்பாத்திரத்தில் எள்ளைத் தானம் கொடுத்தவர்.  நற்குலத்தில் உதித்து திடகாத்திரமாக கீர்த்தியோடு பிரகாசிப்பார்*

*24    சுவையான பழங்களைத் தானம் கொடுத்தவர்,  ஒரு கனிக்கு ஒரு ஆண்டு வீதம் கந்தர்வ லோகத்தில் சுகித்திருப்பார்*

*25    ஒரு சொம்பு நல்ல தண்ணீரை நல்லவர்களுக்குத் தானம் கொடுத்தவருக்கு    கைலாய வாசம் கிட்டும்*

*26    அருணோதயத்தில் கங்கையில் நீராடுபவர், 60000 ஆண்டுகள் பரமபத்திலிருப்பர்*

*27    விரதம் நோன்புகளை பக்தியுடன் கடைபிடிப்பவர், 14 இந்திர ஆயுட்காலம் வரை சொர்க்கபுரியில் வாசம் செய்வர்*

*28    சுதர்சன ஹோமமும்,  தன்வந்திரி ஹோமமும் செய்பவர், ஆரோக்கியவானாக சத்ருக்களில்லாதவராக, தீர்க்காயுளுடன் வாழ்வர்*

*29    ஷோடச மகாலெட்சுமி பூஜையை முறையோடு செய்பவர்,  குலம் பதினாறு பேறுகளையும் பெற்று பெருமையுடன் விளங்குவர்.*

*30    இதைப் படிப்பவரும், கேட்பவரும் புண்ணிய காலங்களில் தானம் கொடுப்பவரும்,  தனது அந்திம காலத்தில் நல்ல உலகத்தை அடைந்து இன்புறுவார்கள்.  அவர்களின் பெற்றோரும் பிதுர்களும் முக்தி பெறுகின்றனர்.*

*எந்த எந்த சுகத்தை யார் யார் விரும்புகின்றார்களோ, அவரவர் அதற்குரிய பொருட்களை, உயரிய ஒழுக்கமுள்ளவர்களுக்குத் தானம் செய்தால் அந்தந்த சுகத்தை அடைவார்கள்*

ஸ்ரீகாளஹஸ்தீசுவரர் கோயில்



ஸ்ரீகாளஹஸ்தீசுவரர் கோயில்

ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக வழிபடக் கூடிய ஆலயமாக இருப்பது ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில் இருக்கும் காளஹஸ்தீஸ்வரர் கோயில் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கை.

#தலவரலாறு

சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்த அந்த பாம்பு பாதாளத்தில் இருந்து மாணிக்கங்களை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு தினமும் பூஜை செய்தது. பாம்பு பூஜை செய்து முடித்த பின்னர் அங்கு வரும் யானை, மாணிக்கங்களை தனது துதிக்கையால் அப்புறப்படுத்திவிட்டு பூக்கள், தண்ணீர், வில்வ இலை கொண்டு சிவனை பூஜித்தது.

தான் வைக்கும் மாணிக்கங்களை தள்ளிவிடுவது யார் என்பதை அறிய ஒரு நாள் அந்த பாம்பு பூஜைக்குப் பின்னரும் அங்கேயே காத்திருந்தது. வழக்கம் போல் வந்த யானை, மாணிக்கங்களை தள்ளிவிட்டு பூஜை செய்தது. கோபம் கொண்ட பாம்பு, யானையின் துதிக்கை வழியாக அதன் தலைக்குள் புகுந்து, யானை மூச்சு விட முடியாதபடி செய்தது. பரிதவித்த யானை துதிக்கையால் சிவலிங்கத்தை தொட்டு வழிபாடு செய்துவிட்டு, பாறையில் மோதி இறந்தது. யானையின் தலைக்குள் இருந்த பாம்பும் நசுங்கி இறந்தது.

இதேபோன்று, சிவன் மீது பக்தி கொண்டிருந்த சிலந்தி ஒன்றும் அதே சிவலிங்கத்தை வழிபட்டு வந்தது. தனது உடலில் இருந்து வரும் நூலினால் சிவனுக்கு கோவில் கோபுரம், பிரகாரம் கட்டி பூஜித்து வந்தது. காற்றில் நூல் அறுந்து போனாலும் மீண்டும் கட்டியது.

ஒரு முறை சிலந்தி கட்டிய நூல் கோபுரத்தை எரிந்து சாம்பலாகும்படி செய்தார் சிவபெருமான். கோபம் கொண்ட சிலந்தி, எரிந்து கொண்டிருந்த தீபத்தை விழுங்க சென்றது. சிலந்தியின் பக்தியை கண்டு வியந்த சிவபெருமான், அதனிடம் என்ன வர வேண்டும் என்று கேட்டார். மீண்டும் பிறவாமை வேண்டும் என்று வேண்டிய அந்த சிலந்திக்கு முக்தி கொடுத்து தன்னுடன் ஐக்கியமாக்கிக் கொண்டார் சிவன். இதே போன்று, தன் மீது கொண்டிருந்த அபரிமித பக்தியால் இறந்து போன யானை, பாம்பு ஆகியவற்றுக்கும் முக்தி அளித்தார் சிவன்.

இந்த அற்புதங்கள் நிகழ்ந்த தலம் தான் ஸ்ரீகாளஹஸ்தி. இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

#பெயர்க்காரணம்

சீகாளத்தில் என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது என்கிறார்கள் சிலர்.

ஸ்ரீகாளஹஸ்தி எவ்வாறு உருவானது என்பதற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது. சிவபெருமான் ஆணைப்படி பிரம்மன் கயிலாயத்தை படைத்த போது அதில் இருந்து ஒரு பகுதி பூமியில் தவறி விழுந்து விட்டது. அந்த இடமே சீகாளத்தி என்ற இப்போதைய ஸ்ரீகாளஹஸ்தி என்கிறார்கள் சிலர்.

#கோயில்அமைப்பு

கோவிலின் உள் பிரகாரத்தில் சிவனுக்கும், பார்வதிக்கும் தனி சன்னதிகள் உள்ளன. காசி விஸ்வநாதர், பால ஞானாம்பா, நந்தி, விநாயகர், சுப்பிரமணியர், அஷ்டோத்ரலிங்கம், சுயம்புநந்தி, வாயுலிங்கம், கண்ணப்பன், சகஸ்ரலிங்கம், சனிபகவான், துர்கா, 63 நாயன்மார்களுக்கு தனி சன்னதிகள் உண்டு.

ஞானபிரசுன்னாம்பிகை சன்னதியை கடந்து சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்றால் அங்கிருந்து கண்ணப்ப நாயனார் மலை சிகரத்தை காணலாம்.

தென் கயிலாயம் என்று போற்றப்படும் ஸ்ரீகாளகஸ்தி, பஞ்சபூத தலங்களில் வாயு (காற்று) வுக்கு உரிய தலமாகும். இங்குள்ள லிங்கம் வாயு லிங்கமாகும். இன்றைக்கும் காற்றுப்புக முடியாத கர்ப்பக கிரகத்தில், சுவாமிக்கு ஏற்றி வைத்திருக்கும் அகல் தீபம் படிப்படியாக சுடர் விட்டு மேலெழுந்து அங்கும், இங்கும் அசைந்தாடுவது ஓர் அற்புத நிகழ்ச்சியாகும்.

#பாதாளவிநாயகர்

கோவிலின் வெளிப்பிரகாரத்தில் பாதாள கணபதி கோவில் உள்ளது. ஒரு சமயம் அகத்தியர் சிவபெருமானையும், விநாயகரையும் வழிபட மறந்தார். இதனால் விநாயகரின் கோபத்தால் ஸ்ரீகாளஹஸ்தியை ஒட்டி ஓடும் பொன்முகலி என்ற சொர்ணமுகி ஆறு வற்றிவிட்டது. தன் தவறை உணர்ந்த அகத்தியர் விநாயகரை பூஜை செய்து வழிபட்டு விநாயகரின் அருளுக்கு உரியவர் ஆனார் என இக்கோவில் தலபுராணம் கூறுகிறது.

காலப்போக்கில் விநாயகர் கோவில் இருந்த பகுதியை விட, அதை சுற்றியிருந்த பகுதிகள் எல்லாம் உயர்ந்து விட்டன. அதனால் விநாயகர் கோவில் பாதாளத்திற்கு போய் விட்டது. இதனால் இங்குள்ள விநாயகர், பாதாள கணபதி என்று அழைக்கப்படுகிறார். படிக்கட்டுகள் வழியே 20 அடி கீழே இறங்கிச் சென்று இந்த விநாயகரை வழிபட வேண்டும்.

#தோஷங்கள்_விலக_பரிகார_பூஜை

ஸ்ரீகாளஹஸ்தி, காளஹஸ்தீஸ்வரர் கோவில் ராகு மற்றும் கேது கிரகங்களின் பரிகார தலமாகவும் திகழ்கிறது. ராகு, கேது கிரக தோஷம், சர்ப்ப தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீண்டகாலம் தீராத பிரச்சினையில் சிக்கி திண்டாடுபவர்கள் இங்கு வந்து ராகு மற்றும் கேது சர்ப்பதோஷ நிவாரண பூஜை செய்து கொண்டால், பிரச்சினையில் இருந்து விடுபடுகின்றனர்.

தினமும் காலை 6.30 மணியில் இருந்து இரவு 9 மணி வரை பரிகார பூஜை செய்யப்படுகிறது. இதற்காக கோவில் தேவஸ்தான அலுவலகத்தில் ரூ.250, ரூ.500, ரூ.1000, ரூ.1,500க்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்கிறார்கள். காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படும். இதில் ஒரு அனுமதிச் சீட்டு வாங்கினாலே போதுமானது, பூஜைக்குரிய பொருட்கள் அனைத்தையும் கோவிலில் கொடுத்து விடுகிறார்கள். ஒரு அனுமதிச் சீட்டுக்கு 2 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வேளை பூஜையின் போது 200 பேர் வரை கலந்து கொள்ளலாம். 45 நிமிடம் இந்த பூஜை நடைபெறும்.

1,500 பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்குபவர்களுக்கு கோவில் உள் பிரகாரத்தில் தனியாக தோஷ பூஜை செய்கிறார்கள். இதில் கணவன், மனைவியர் கலந்து கொள்ளலாம். இவர்களுக்கு சிறப்பு தரிசனம், ஆசீர்வாத தரிசனம் இலவசம். பூஜைக்கு செல்பவர்கள் தாமரைப்பூ, வில்வ இலை வாங்கி செல்வது நல்லது. இதற்காக கோவிலில் ஆங்காங்கே இந்த பொருட்களை விற்பவர்கள் உள்ளனர். ரூ.20 கொடுத்தால் பை நிறைய இந்த பொருட்கள் கொடுக்கிறார்கள். இந்த பூஜை செய்பவர்கள் அன்று இரவு ஸ்ரீகாளஹஸ்தியில் தங்கி செல்வது நல்லது.

#பயணவசதி

ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவில் சென்னை செல்லும் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி அமைந்துள்ளது. சென்னையில் இருந்து காரில் சென்றால் 4 அல்லது 5 மணி நேரத்தில் ஸ்ரீகாளகஸ்தியை சென்றடையலாம். சென்னையிலிருந்து நேரடியாக இந்த ஊருக்கு பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

*****

திங்கள், 22 மே, 2017

சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!



சுந்தரகாண்டம் படிப்பதால் ஏற்படும் கற்பனைக்கும் எட்டாத நன்மைகள்!

1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.

2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.

3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.

4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்.

5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.

6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.

7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.

8. சுந்தரகாண்டத்தை முறைப்படி வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.

9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.

10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.

11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.

13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.

14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.

15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.

16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.

17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.

18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.

19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.

20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.

21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.

22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.

23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.

24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.

25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.

26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.

27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.

28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.

29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.

30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.

31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.

32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)

33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.

34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.

35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.

36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.

37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.

38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.

39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.

40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க.    கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.


ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-


ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-

1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும்
உண்டு.
.
7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.
.
11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்.

23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

வெள்ளியங்கிரி பற்றி சில குறிப்புகள்......



வெள்ளியங்கிரி பற்றி சில குறிப்புகள்......

அடிவாரக் கோயில்:
கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.
மலைக்கோயில்:
கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வனப்பகுதி ஆகும். வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கோயிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலைஏறக்கூடாது. மலைஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இத்தடிகள் அடிவாரத்தில் விற்பனைக்கு உள்ளன. தற்போது அதன் விலை ரூ 20/- அத்தடியை தங்கள் உயரத்திற்கு தகுந்தாற் போல் நீளத்தை சீராக்கி தர ரூ 5/- வசூலிக்கின்றனர். இத் தடி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாள சின்னமாக விளங்குவதுடன் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.
இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம் மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி யன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்தபின் வெயில் கடுமை அதிகரிக்கும் முன் அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. மழை காலங்களில் மலை ஏறுவது பாதுகாப்பானது அல்ல மாறாக ஆபத்தை விளைவிக்கும். சறுக்கி, வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலைஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இச் சிலைகளை மலைப்பாதை தொடக்கத்தில் நிறுவி உள்ளனர்.
முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் 3/4 அடிமுதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும் அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும் போது இருட்டாகத்தான் இருக்கும். எனவே டார்ச் லைட் எடுத்துச் செல்வது மிகஅவசியம். கூடுதலாக ஒரு செட் பேட்டரி செல் வைத்திருப்பது நல்லது. இம்மலையில் காட்டுக் கொசுக்கள் அதிகம். உடல் பாகங்கள் வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டால் கொசுக்கடியால் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக மாலைநேரத்தில் கொசுக்கள் அதிகம் இருக்கும். இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த இரவு நேரத்திலும் வியர்வை கொட்டும். மலைஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர எழுத்துக்களால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுகிறது. சுவாசகுழாயும், சுவாசப் பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது. மூலிகைகளின் சாரம் மிகுந்த நீரை பருகுவதாலும் நீராடுவதாலும் உடல்நலம் சீராகுகிறது.
ஏழு மலைகளில் முதல் மலை மட்டும் அதிக உயரம். சுமார் 1 1/2 கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் அருகே இளைப்பாற ஒரு சிறிய கூடமும் பிஸ்கட், சோடா, சுக்கு காபி போன்றவற்றை விற்பனை செய்யும் கடையும் உள்ளது. வெள்ளிங்கிரி மலையில் சாப்பிட வேறு எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுனைநீர் கிடைக்கும். எனவே மலை ஏறும் போது சாப்பிட ரொட்டி ஜாம், சப்பாத்தி, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுப் பொருட்களைத் தவிர்தல் நலம். இல்லையெனில் மலைஏறும் போது நிறைய நீர் அருந்த வேண்டி வரும். நீர் அதிக அளவில் அருந்தினால் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகிவிடும்.
இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதால் நிலவு ஒளியிலும் பாதையில் வெளிச்சம் தெரிவதில்லை. ஓரிடத்தில் படி ஏறிச் செல்லும் போது கருத்த உருவம் ஒன்று நகர்ந்து வருவதை டார்ச் வெளிச்சத்தில் காண முடிந்தது. கூர்ந்து பார்த்தால் அது ஒரு கருந்தேள். பயந்து நடுங்கிவிட்டோம். நாங்கள் ஒதுங்கி அதற்கு பாதை விடுத்து பின் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏனெனில் அவை வாழும் இடத்திற்கு நாம் வந்துள்ளோம். அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்வது நியாயமில்லை. இரவு நேரத்தில் மின்மினி பூச்சிகளை அதிக அளவில் காணமுடிந்தது. இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.
மூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை.
ஒருவிதமான கோரைட் புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்ற என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.
ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்க கம்பளி உடைகளான மப்ளர், ஸ்வெட்டர், தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம். இம்மலையில் பயணிக்கும் போது நடைபாதையின் ஓரத்தில் வரப்பு போன்ற பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஒன்று எங்களை நோக்கி ஊர்ந்து வந்ததை எதிர் கொண்டோம். பாதை ஓரத்தில் ஒதுங்கி அதற்கு வழிவிட்டு, அது எங்களைக் கடந்து சென்றபின் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.
அடுத்து ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் உள்ளன. குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.
ஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் ரூபாய் பத்துக்கு கிடைக்கும் சூடான சுவையான சுக்கு காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இக்கடையை அடுத்து கோயில் நிர்வாகத்தினரால் வெய்த தகர கொட்டகை ஒன்று உள்ளது. இதில் சுமார் 50/60 பேர் படுத்து ஓய்வெடுக்கலாம். இது இரண்டு மாத உபயோகத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். இங்கு தங்கி ஓய்வெடுத்து பின் விடியற்காலை பயணத்தைத் தொடரலாம். இங்கு தங்காமலும் செல்லலாம். இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். இம் மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக் கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம் நம் கண்களை விட்டு என்றுமே அகலாத நினைவுகளாகும்.
இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரசதகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூஜை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். ஆன்மிக அன்பர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாகத் திகழும் ஈசனை தொழுதுய்ய வேண்டும்.
உமையவள் இறைவன் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திரு நடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து பல காரமேடை என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.
கீழே இறங்கும் போது 3வது மலையினுள் நுழைந்து நடக்க ஆரம்பித்தால் ஏசி அறையினுள் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு வந்து விடுகிறது. அடர்ந்த மரங்களினிடையே பயணிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதது ஆகும். இரவு நேரத்தில் மலை ஏறும் போது மூலிகை காற்றின் வாடையையும், குளிர்ச்சியையும் உணர்ந்த நமக்கு கீழே இறங்கும் போது வண்டுகள் எழுப்பும் ரீங்காரம், பறவைகள் கத்துகின்ற மெல்லிய ஓசை, இயற்கை எழில் காட்சிகளை ரசித்து, தூய காற்றை சுவாசித்துக் கொண்டு பயணிக்கும் சுகமே அலாதி தான். இரண்டாம் மலையிலும் முதல் மலையிலும் பறக்கும் அணில்கள் மரங்களில் தாவிச் செல்வதைக் காணலாம். பாதை ஓரத்தில் உள்ள செடிகளில் சிவப்பு எறும்புகள் (செவ்வெறும்பு) அதிக அளவில் காணப்படுகின்றன. கடித்தால் உடல் முழுவதும் தடித்துக் கொள்வதுடன் அரிப்பும் உண்டாகி விடும். எனவே மிகுந்த கவனம் தேவை. கீழே இறங்கியவுடன் நல்ல முறையில் எந்த விதமான விபத்தும் இன்றி சென்று வந்ததற்காக ஈசனுக்கும் மனோன் மணியம்மைக்கும் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஒருவர் மலைக்குச் சென்று ஈசனைத் துதித்து பின் இறங்கிவிட்டால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திகழ்கிறார் எனக் கொள்ளலாம்.
புனித பயணத்தின் போது ..
ஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. மிகமிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வனத்துறையினர் விழாக் காலங்களில் அனைவரின் பைகளையும் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர் போன்றவற்றைப் பிரித்து எடுத்த பின்பு தான் மேலே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட நீர் மேலே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாறாக சலுகை விலையில் தண்ணீர் பாட்டில்களைத் தருகின்றனர். மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர்.
வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம். பாம்பாட்டி சித்தர், சாதுக்கள், யோகிகள் அர்ச்சுனன் முதலானோர் கடுந்தவம் மேற்கொண்டு வலிமை பெற்ற தவ பூமியாகும். வட கைலாயதிற்கு இணையாகவும் அதைவிட பெருமையும் சக்தியும், அற்புத குணங்களை உடைய ஏராளமான மூலிகைகளை தன்னகத்தே கொண்ட ஒப்புயர்வற்ற மலை தென் கைலாயம் எனும் வெள்ளிங்கிரி மலையாகும்.
காலை நேரத்தில் ஈசனைத் தரிசித்த பின் அம்மலையின் அழகு, சூரியோதயம், இயற்கை எழில் ஆகியவற்றை ரசிக்கலாம். இரவு நேரத்தில் ஏறி இறைவனைத் தொழுதபின் உடனே கீழே இறங்கி விட்டால் இந்த இயற்கைச் செல்வங்களை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம். இம் மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன் உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த் தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத் தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்...!



காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்...!

 பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம். வேண்டும் வரமெல்லாம் தரும் இந்த வரதராஜப் பெருமாள் கோவிலில் அப்படி என்ன ரகசியங்கள் உள்ளது என்று பார்ப்போம்....

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை....!

🌞 இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்தி வரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் 2019ம் ஆண்டில்தான். அப்போது 10 நாட்களுக்கு அவரைக் தரிசிக்கலாம். பிறகு மறுபடி நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

அத்தி சிற்ப அதிசயம்....!

🌞 கற்சிற்ப காலத்துக்கு முன்னால் அத்தி மரத்தாலேயே இறை திருவுருவங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கும் அத்திமரம், எத்தனை வருடம் நீரில் ஊறினாலும் கெட்டுப் போகாது என்பதற்கும் சாட்சியாக இந்த அத்திவரதர் விளங்குகிறார்.

ஆங்கிலேயரின் பரிசு....!

🌞 வரதராஜப் பெருமாள் கழுத்தில் அணிந்திருக்கும் மீன் (மகரம்) வடிவிலான அணிகலன் ஆங்கிலேயர் ஆட்சியின்போது, சென்னையில் உயரதிகாரியாகப் பணியாற்றிய ராபர்ட் கிளைவ், தன் பக்திக் காணிக்கையாக செலுத்திய ஆபரணம்.

தேவலோக விருந்து நறுமணம்....!

🌞 ஒவ்வொரு வருடமும் சித்ரா பௌர்ணமி அன்று இரவு 12 மணிக்கு, பிரம்மன் வரதர் சந்நதிக்கு வந்து வரதரை பு+ஜிப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில், பெருமாளுக்கு நைவேத்யமாகத் தயாரிக்கப்பட்ட பலகாரங்களை பெருமாள் சந்நதிக்குள் வைத்துவிட்டு, வெளியே வந்து விடுகிறார்கள்.

🌞 குறிப்பிட்ட நேரம் கழித்து, அதாவது பு+ஜை முடித்து பிரம்மன் சென்றபின், உள்ளே நுழையும் போது அந்த நைவேத்ய பாத்திரங்களைத் திறந்து பார்த்தால் அது, தேவலோக விருந்தின் நறுமணத்தைக் கொண்டிருப்பதை நுகர்ந்து பக்தர்கள் பரவசப்படுகிறார்கள்.

மூலவரின் முகத்தில் சு+ரிய கதிர்கள்....!

🌞 சித்திரை மாத பௌர்ணமியை அடுத்த 15 நாட்களில் அஸ்தமன நேரத்தில், தன் கிரணங்களை மூலவரின் முகத்தில் விழுமாறு செய்து வணங்குகிறான் ஆதவன். இந்த அற்புதம் வேறெந்த திவ்ய தேச தலத்திலும் காணக் கிடைக்காதது.

தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி...!

🌞 இங்கே தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி என்று இரண்டு பல்லி உருவங்களை மேலே விதானத்தில் பதித்து வைத்திருக்கிறார்கள். ஏணிபோன்ற படியேறிச் சென்று அந்தப் பல்லிகளைத் தொட்டு வணங்கி, வரதராஜரையும் தியானித்துக் கொண்டால், தீராத நோய்களும் தீர்கின்றன.

🌞 ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் புத்திரர்களான ஹேமன், சுக்லன் இருவரும் கௌதம முனிவரால் சாபம் பெற்று இவ்வாறு பல்லிகளாக ஆனார்கள் என்றும் வரதரை வழிபட இந்திரன் வந்தபோது அவன் பார்வை பட்டு அவர்கள் சாப விமோசனம் பெற்றார்கள் என்றும் புராணம் சொல்கிறது.

சனி, 20 மே, 2017

திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறதா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!


திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறதா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!




சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில்

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது.
தலச் சிறப்புகள் :
உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது, சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.
கோவில் மணிமண்டபத் தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது.
கோவில் கல்வெட்டுகளில் சேரன்மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள்.
இக்கோவிலை நந்தனார் தரிசித்ததற்கு அடையாளமாக இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.
தலப்பெருமை :
சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில், அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, தங்கள் வேலையை துவங்குவர். இந்த லிங்கம், கோவிலில் இல்லாமல், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு சிவனுக்கு கோவில் கட்ட நினைத்தனர். ஆனால் அவர்களிடம் போதிய வருமானம் இல்லை.
அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்க்க ஆரம்பித்தனர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், ஒருசமயம் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து, உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டி மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன் என்று எழுந்தார். சகோதரிகள் பதறிப்போய் அவசரத்தில் விளக்கை தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு, விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு, சுயரூபத்தில் காட்சி தந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.
பிரார்த்தனை :
அரிசி வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்கின்றனர்.
திருமண தோஷம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர்.
சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திருவிழா :
இக்கோவிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும், சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.

சித்தர்கள் காட்சி தரும் திருநம்பிமலை !!!



சித்தர்கள் காட்சி தரும் திருநம்பிமலை !!!

(திருநெல்வேலி மாவட்டம், களக்காடு  அருகே திருக்குறுங்குடி பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் நம்பி கோயில் அமைந்துள்ளது. திருக்குறுங்குடியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள இக் கோயிலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். குறிப்பாக, ஒவ்வொரு தமிழ் மாத கடைசி சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கானோர் இங்கு குடும்பத்துடன் வந்து தங்கியிருந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.  இங்கு ஓடும் நம்பியாறு மிகவும் புனிதமான நதியாகக் கருதப்படுகிறது. கோடையிலும் இங்கு தண்ணீர் வரத்து இருக்கும். இக் கோயிலுக்குச் செல்லும் சாலையானது திருக்குறுங்குடியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது .)

ஒய்யாரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி மலையின் ஆரம்பமான மலைப்பகுதி. அடர்ந்த காடுகளின் பசுமை, கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் குளிர்ச்சியாகக் காட்சி தெரிய-நம்பியாறு-யாரையும் கேட்காமல் மலையுச்சியிலிருந்து தன் இஷ்டத்திற்கேற்ப செடி, கொடி, மலையடிவார மரங்களின் வேர்களை ஆசையோடு தடவிக் கொண்டு கிடைத்த மூலிகைச் சாற்றையும் இழுத்துக் கொண்டு குளுமையாக புன்னகையோடு பவனி வந்து கொண்டிருக்கும் அற்புதக் காட்சியை ஆசைதீரப் பார்த்துக் கொண்டிருக்கும் அற்புதமான மலையைப் பெற்ற திருக்குறுங்குடி.

தரைமட்டத்திலிருந்து சுமார் எட்டு கி.மீ. கரடு முரடான பாறைக் கற்களை மிதித்துக் கொண்டு மெல்ல மலையேறினால் நம்பிப்பெருமாளின் கோவிலைச் சென்று அடையலாம். கீழ் மட்டத்திலிருந்து நம்பிமலை ஏற குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகலாம்.

மலையில் சாலை போடும் பணி நடந்து கொண்டிருப்பதால் பாதி தூரம் ஜீப் வருகிறது. பிறகு பாதி தூரம் எப்பேர்ப்பட்டவர்களும் காலால் நடந்துதான் போகவேண்டும். மரத்தின் வேர்களும் பாறைக் கற்களும்தான் நமக்கு வழிகாட்டி. இடையிடையில் தங்கி ஓய்வெடுத்துச் செல்லலாம்.

முகத்தை அலம்பிக் கொள்ள நம்மை நாமே ஆசுவாசப் படுத்திக் கொள்ள அங்கங்கே பாறைக்கு நடுவில் ஓடையும் சிற்றருவிகளும் இருப்பதால் தொய்வில்லாமல், களைப்பும் இல்லாமல் செல்லலாம். மிக அடர்த்தியான காடுகள் இங்குமங்கும் இருந்தாலும் காட்டு மிருகங்கள் இருந்தும் அவற்றினால் எந்தவிதத் தொல்லையும் இல்லை.

நம்பி கோவிலில் ஓரளவு வசதியோடு திண்ணை இருக்கிறது. மற்றபடி எந்தவித வசதிகளையும் எதிர்பார்ப்பது கஷ்டம்தான். ஆயிரமாயிரம் குரங்குகள் நம்மைச்சுற்றி இருப்பதால் அந்த மலைக் கோவிலில் பொழுது மிக நன்றாகக் கழியும். கோவிலுக்குப் பக்கத்தில் நம்பியாறு வற்றாமல், பாறை இடுக்கு வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த ஆற்றின் தண்ணீர் சிறிது கூட மாசுபடவில்லை. அதோடு மூலிகைச் செடிகளிடையே தவழ்ந்து வருவதால் மூலிகை மணமும் வீசுகிறது. அந்தத் தண்ணீரை எடுத்து பல நாள்கள் வைத்திருந்தாலும் அந்த நீர் கெடுவதில்லை என்பது அனைவருக்கும் ஓர் ஆச்சரியம்.

நம்பி கோவிலின் கீழே மிகப் பிரம்மாண்டமான புளியமரம் இருக்கிறது. இந்த மரத்தின் அடியில் பல்வேறு சித்தர்கள் இன்றைக்கும் தவம் புரிகிறார்கள். என்றாலும் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் அந்தப் புளிய மரத்தின் அடியிலிருந்து சித்தர்கள் வெளியே வருவதும் அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களுக்குள் பரிபாஷையில் பேசிக் கொள்வதும் இன்றைக்கும் நடக்கிறது என்கிறார் நம்பிமலைக் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளாகக் குடியிருக்கும் தொண்ணூறு வயதான மனிதச் சித்தர் ஒருவர்.

நம்பிமலைக் கோவிலிலிருந்து இடப்பக்கம் மிகவும் அடர்ந்த காட்டுப்பாதை ஒன்று இருக்கிறது. அங்கு ‘தாய் பாதம்’ என்று ஓரிடம் சென்றால் சித்தர்களின் தரிசனம் நிறையக் கிடைக்கும். அவர்கள் வசிக்கும் குகைகளும் ஆங்காங்கே நிறையக் காணப்படுகின்றன.

இந்த மலைப்பாதையில் துணிந்து செல்ல பெரும்பாலானோர்க்குத் தைரியம் வராது. ஆனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பலர், ஆண்டுக்கொரு முறை இந்த மலைப்பாதை வழியே நான்கு நாள்கள் பயணமாகச் சென்று பொதிகை மலைக்குச் சென்று வருகிறார்கள்.

இந்த மலைக்கோவிலுக்கு வருகிறவர்கள் தங்கள் பாபங்களை ஒழிப்பது ஒருபக்கம் இருந்தாலும், எதிர்காலத்தில் எந்தவிதக் கஷ்டம் இல்லாமல் மன அமைதியோடு வாழலாம் என்ற தன்னம்பிக்கையோடு செல்வதைக் காணலாம்.

ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை தோறும் இந்தக் கோவிலுக்கு அக்கம் பக்கத்திலிருந்து நிறையக் கூட்டம் வருகிறது. சித்திரை மாதம் பௌர்ணமி அன்று இந்தக் கோவிலில் யாகம் வளர்த்து பூஜை செய்வதால் அன்று மட்டும் ஆயிரக்கணக்கான பேர் மலையிலேயே தங்கி விடுவார்கள்.

சித்தர்கள் இங்கு புற்றில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்கள் புற்றீசல் போல் அவ்வப்போது வெளிப்படுவதாகவும் பார்ப்பதற்கு மூன்று அடிக்குமேல் இருக்கமாட்டார்கள் என்றும் சொல்கிறார்கள். இந்த சித்தர்களைக் காண்பதற்காகப் பல நாள்கள் காத்துக் கிடப்பதுண்டு.

பொதுவாக சித்தர்கள் அத்தனை பேரும் சிவன் கோவிலின் மலைகளிலேதான் உலாவருவதாகச் சொல்வதுண்டு. ஆனால் வைணவக் கோவிலில் சித்தர்கள் இருப்பது பெரும் ஆச்சரியம்தான். அந்த அதிசயம் இந்தக் கோவிலில் தான் தினமும் நடக்கிறது.

ஆரோக்கியமான மலைக்காற்று அமிழ்ந்து நன்றாக குளிக்கும்படியான மூலிகைச் சாற்றோடு விழும் நம்பிமலை நம்பியாறு. சுற்றிலும் பசுமைப் புரட்சிகள். பொழுது போவதற்கு ஆயிரக்கணக்கான குரங்குகளின் சேஷ்டைகள். இந்த அருமையான காட்சிகள், நம் அனைவருக்கும் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் கொடுக்கும். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை இந்த மலைப் பெருமாளைக் கண்டு ஆனந்தமடைந்து வரலாம்