திங்கள், 12 மார்ச், 2018

காரடையான் நோன்பு..மார்ச் 14


 காரடையான் நோன்பு..மார்ச் 14

மத்திரத் தேசத்தின் அஸ்வபதிஎன்ற அரசனுக்கு மாளவிஎன்ற குணவதியான மனைவிஇருந்தாள். “அரசன் என்றபதவியை கொடுத்தஇறைவனால், தந்தை என்றபதவியை கொடுக்கமுடியவில்லையே…“ என்றகவலை அஸ்வபதிதம்பதினருக்கு வாட்டியது. தன்கவலையை நாரதர்முனிவரிடம் சொல்லி வருத்தபட்டார் அரசர்.“கவலை வேண்டாம். இறைவன் உங்களுக்கு பெரும்செல்வமான குழந்தை செல்வத்தை தருவார். நீங்கள்சாவித்திரி தேவியை மனதால் நினைத்து விரதம்இருந்து யாகம் செய்யுங்கள்“ என்றார் நாரத முனிவர்.

நாரதரின் வாக்கு வன்மையோ அல்லது யாகத்தின்மகிமையோ… ஆச்சரியப்படும் விதமாக, பலவருடங்களாக குழந்தை இல்லாத கவலை தீர்ந்தது.ஆம்… மாளவி கருதரித்தாள். ஓரு வருடத்தில் அழகானபெண் குழந்தையை பெற்றேடுத்தாள். சாவித்திரிதேவியின் அருளால் பிறந்ததால், அந்த குழந்தைக்கு“சாவித்திரி“ என்று பெயர் வைத்தார்கள்.

குழந்தை பருவத்தை கடந்து பருவ மங்கையானாள்சாவித்திரி. தன் கையால் பூ  பறித்து இறைவனுக்குமாலை சூடுவதை வாடிக்கையாக வைத்திருந்தாள்சாவித்திரி. ஒருநாள், தன் தோழிகளுடனும் பணிப்பெண்களுடனும் காட்டில் பூ பறிக்க சொன்றாள்.அப்போது –

அதே காட்டில் குடும்பத்தோடு வாழ்ந்து வரும்சத்தியவானை கண்டாள். பார்த்தவுடனே “இவர்தான்தமக்கு கணவராக வர வேண்டும்.“ என்றுதீர்மானித்தாள் சாவித்திரி. தன் விருப்பத்தைதந்தையிடமும் சொன்னாள் சாவித்திரி.

பொதுவாக பிள்ளைகளின் காதலை உடனடியாக எந்தபெற்றோரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால்சாவித்திரியின் தந்தையோ தன் மகளின் காதலுக்குஎதிர்ப்பு சொல்லவில்லை. காதலுக்கு காது கேட்காதுஎன்று அவருக்கும் தெரியும். தந்தையின் நண்பரானநாரத முனிவரோ இதற்கு சம்மதிக்கவில்லை.

“சத்தியவானுக்கு ஆயுள் குறைவு. அவனை திருமணம்செய்தால் காலம் முழுவதும் நீ கண்ணீர் சிந்தவேண்டும்“ என்று எவ்வளவோ எடுத்துரைத்தார். ஆனால் சாவித்திரியோ நாரதரின் பேச்சை சிறிது கூடகாதில் போட்டு கொள்ளவில்லை. சாவித்திரியின்தந்தையோ, “என் மகளின் விருப்பமே என் விருப்பம்“ என்று கூறி தந்தை அஸ்வபதி, சாவித்திரியைசத்தியவானுக்கு திருமணம் செய்து வைத்தார்.

நாட்கள் பறந்தது. மாதங்கள் ஓடியது. ஒரு வருடம்முடியும் தருவாயில் நாரத முனிவர் கூறியது போல்ஒருநாள், சாவித்திரியிடம் பேசி கொண்டு இருக்கும்போது மரணத்தை அடைந்தான் சத்தியவான்.

யமதர்மரை ஒருபிடி பிடித்தாள் சாவித்திரி.

 கணவரின் மரணம் எதிர்பார்த்ததுதான். இருந்தாலும்ஒரு வருடம் கூட முடியாத நிலையில் தன் வாழ்க்கைமுடிந்துவிட்டதே என்று கண்ணீர் வடித்தாள்சாவித்திரி. விரோதிகளாக இருந்தாலும் அவர்கள்பெரியோர் என்றால் அவர்களிடத்தில் விரோதத்தைகாட்டாமல் வணங்கும் பண்பு உள்ளவள் சாவித்திரி.

தன் கணவரின் உயிரை பறித்த யமன், சாவித்திரி முன்நின்றான். ஆனால் அவள் எந்த கோபத்தையும்காட்டாமல் யம தேவனின் காலில் விழுந்து ஆசிபெற்றாள்.

பொதுவாக சுமங்கலி பெண்கள் பெரியோர்களின்காலில் விழுந்தால், “தீர்க்க சுமங்கலி பவ“ என்றுபெரியோர்கள் வாழ்த்துவார்கள். யம தர்மராஜனும்அதுபோல் சாவித்திரியை வாழ்த்தினார். பெரியமரத்தை சிறு கோடாறி வீழ்த்தி விடும் என்பதுபோல், யமதர்மராஜன் தந்த வாழ்த்துகளை கெட்டியாகபிடித்து கொண்டாள் சாவித்திரி. யமனிடமேவாதாடினாள். “தீர்க சுமங்கலியாக இரு என்றுவாழ்த்திய தாங்களே என் வாழ்க்கையைஅழிக்கலாமோ…“ என்ற சாவித்திரியின்கேள்விகளுக்கு பொறுமையாக பதில் அளித்தார்யமதேவன்.

சில கேள்விகளுக்கு பதில் தெரியாமல் “ஆமாம்ஆமாம்“ என்று கூறி கொண்டே வந்தார்.

“ஒரு பெண்ணுக்கு எதற்காக திருமணம் செய்துவைக்கிறார்கள்? தலைமுறையை உருவாக்கவேண்டும் என்பதற்காகதானே. ஆனால் என்தலைமுறை என்னோடு முடிந்து விட கூடாதுஇல்லையா“? என்றாள் சாவித்திரி.

இவளிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற அவசரஎண்ணத்தில் சாவித்திரி எதை பற்றி பேசுகிறாள்என்று கூட சரியாக கேட்காமல், “ஆமாம் ஆமாம்” என்றார் யம தேவன்.

“அப்படியானால் நீங்கள் எனக்கு இரண்டு வரம்தந்திருக்கிறீர். அதில் முதல் வரம், தீர்க்கசுமங்கலியாக இருப்பாய் என்று சொன்னீர்கள். இரண்டாவது தாய்மை அடைவாய் என்றீர்கள். உங்கள்இந்த இரண்டு வாக்கும், என் கணவர் சத்தியவான்உயிருடன் இருந்தால்தான் சாத்தியம். உங்கள் ஆசிபலிக்க வேண்டும். தாங்கள் “தர்மராஜன்“. நியாயத்தைமட்டுமே பார்ப்பவர். கட்டிய கணவருடன் வாழ்வதுதான்பெருமை. அவர் இல்லாது போனால் ஏது பெருமை.? எனக்கு எப்படி உங்கள் வாக்கு பலிக்கும்? என் கணவர்உயிரை எடுத்துக்கொண்டீரே. தர்மராஜன் என்கிறபுகழுக்குரிய உங்கள் ஆசி பலிக்கவில்லை என்றுவரலாறு பேசுமே. அதுவா உங்களுக்கு பெருமை?“ என்று யமதர்மரை ஒருபிடி பிடித்தாள் சாவித்திரி.

“இது என்னடா வம்பாக இருக்கிறதே. இதற்குதான்தெய்வம் நேரில் வரக்கூடாதோ…? வந்துதொலைத்தால் இப்படிதான் வம்பாகிவிடும்.“ என்றுதன்னை விட்டால் போதும் என்ற எண்ணத்தில்சத்தியவானின் உயிரை திரும்ப கொடுத்துவிட்டுசென்றார் யமதர்மராஜன்.

பூஜை முறைகள்

மாசியும்,பங்குனியும் இணையும் சமயத்தில்காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள்அனுஷ்டிக்கும் விரதம்  காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும்வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும்.

கார் காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லைகுத்தி கிடைத்த அரிசிமாவில் இனிப்பு, காராமணிகலந்து அடை தயாரிப்பதே காரடை ஆகும். இதைநைவேத்தியமாக இறைவனுக்கு படைத்துஅனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு ஆகும்.

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் நாளில்பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையைசுத்தம் செய்து அரிசிமாவில் கோலம்    போடவேண்டும்.  வாழை இலையில் ஒருகலசம் வைத்து கலசத்தின் மேல் தேங்காய், மாவிலைவைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம்,மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்டவேண்டும். அருகில் காமாட்சி அம்மன் படம் வைத்துவழிபட வேண்டும்.  அத்துடன் இரண்டு வெல்லஅடைகளும் வெண்ணெயும் பூஜையில் வைக்கவேண்டும்.

“உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என்கணவர்பிரியாதிருக்க வேண்டும்“என்று சொல்லிவழிபடவேண்டும்.

நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறுகட்டிக்கொள்ள வேண்டும். கன்னிபெண்கள்விரைவில் திருமணம் நடக்க மஞ்சள் சரடு அணிந்தால்விரைவில் திருமணம் நடக்கும்.

மறுநாள் இரண்டு அடையைபசுமாட்டிற்க்குக்கொடுக்க வேண்டும்.

 அரிசி மாவில், இனிப்பு சேர்த்து அடை தயாரிக்கவேண்டும். இதுவே, காரடை ஆகும்.

ராமாயணத்தை  படித்தால், அது படிக்கப்படும்இடத்திற்கு ஆஞ்சனேயர் வந்து விடுவார்என்பதுபோல், சாவித்திரியின் சரித்திரத்தைகேட்டாலோ – படித்தாலோ அந்த இடத்தில்சாவித்திரிதேவியே முன் வந்து ஆசி வழங்குவாள்.தீர்க்க சுமங்கலி பவ என்று யமனே ஆசி வழங்குவார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக