சனி, 17 மார்ச், 2018

வசந்த நவராத்திரி :(17/3/18 ---- 25/3/18)


வசந்த நவராத்திரி :(17/3/18 ---- 25/3/18)

வருடத்தை ஆறு ருதுக்களாக ஆன்றோர்கள் பிரித்துள்ளார்கள்
இரண்டு இரண்டு மாதங்களாக ருதுக்கள் அமையும். அந்த ருதுக்களில் 'ரிதூநாம் குஸுமாகர:' என்று ஸ்ரீ கிருஷ்ண பகவானால் சொல்லப்படுவது வஸந்த ருது. பருவங்களில் சிறந்ததாகச் சொல்லப்படுவது வஸந்த ருது. வஸந்த ருதுவே வசந்த காலம் . வாழ்வில் வசந்தம் தொடங்கக் கூடிய காலம். வயல்களில் அறுவடை முடிந்து, வளம் பொங்கக் கூடிய காலம். மக்களின் மனதில் ஆனந்தம் குடிகொள்ளும் காலம் .

வசந்த நவராத்திரி - பங்குனி மாத அமாவாசை முதல் தொடங்கப்படும். மறுநாள் ஆகிய பிரதமை - தெலுங்கு வருடப்பிறப்பாகிய யுகாதிப் பண்டிகை அமையும். இந்த நவராத்திரி ஸ்ரீ ராம நவமியுடன் முடியும்.

(நவராத்திரி நிர்ணயம் எனும் புத்தகத்தில்,

வசந்த நவராத்திரி 9 நாட்கள் கொண்டாடினால் உலகம் க்ஷேமம் அடையும் என்றும்,

ஒரு பட்ச்ம் நாட்கள் அதாவது 15 நாட்கள் (அமாவாசை - பெளர்ணமி வரை) கொண்டாடுதல் - வேண்டும் வரங்கள் கிடைக்கச் செய்யும் என்றும்,

மண்டல நாட்கள் அதாவது பங்குனி அமாவாசை முதல் சித்ரா பெளர்ணமி வரை 45 நாட்கள் கொண்டாடுவது ஸகல கார்யங்களிலும் வெற்றியைத் தரும் என்றும் கூறுகின்றது.)

பொதுவாக வட இந்தியாவிலும், தென் இந்தியாவில் சிற்சில கோயில்களில் மட்டுமே நடத்தப்படக் கூடியது. இந்த நவராத்திரி பொதுவாக ஆலயங்களில் மட்டுமே நடக்கக் கூடியது.

சாரதா நவராத்திரி போகம் எனும் மகிழ்வைத் தருவது,
வசந்த நவராத்திரி யோகம் எனும் பக்தி நிலையை தரக் கூடியது.


வசந்த நவராத்திரி நல் பக்தியையும், அந்த நல்பக்தியால் நல் வாழ்வையும் அளிக்கக் கூடியது.

வசந்த நவராத்திரி அம்பிகையின் வடிவமாகிய ராஜச்யாமளா அல்லது ராஜமாதங்கீஸ்வரி எனும் வடிவத்தைப் போற்றுவதாக அமையக் கூடியது.மதுரையில் உறையும் மீனாக்ஷி - ராஜசியாமளாவாக விளங்குகின்றாள். மதுரை ஆலயத்திலும் வசந்த நவராத்திரி வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

ஆலயங்களில் மேரு எனும் ஸ்ரீ சக்ர வடிவம் இருக்குமேயானால், அங்கு வஸந்த நவராத்திரி பொதுவாகக் கொண்டாடப்படும்.

இந்த வசந்த காலத்தில், பெரும்பாலான அம்பிகையின் ஆலயங்களில்

ஒன்பது தினங்களிலும் காலை வேளையில் சிறப்பு அபிஷேகம் நடத்தப் பெறும். ஒன்பது தினங்களிலும் அம்பிகை ஒவ்வொரு சிறப்பு அலங்காரத்தில் காட்சி நல்குவாள்.

மாலை வேளையில் அம்பிகைக்கு உகந்த, சாக்தத்தின் மிக உயர்நிலை பூஜையான ஸ்ரீ நவாவரண பூஜையும், லலிதா சகஸ்ரநாம அர்சசனையும், கன்யா பூஜையும், ஸுவாஸினி பூஜை  நடைபெறும்..


இத்தனை சிறப்புக்கள் வாய்ந்த இந்த வசந்த நவராத்திரி காலத்தில் நம் இல்லத்தில் பங்குனி மாதம் வரும் அமாவாசை அன்று நல்ல நேரத்தில் கலசம் வைத்து அதனை அம்பாளாக பாவித்து ஒன்பது நாளும் ( நவமி வரை )மாலையில் பூ பழம் தாம்பூலம் என்று நம்மால் முடிந்த நிவேதனம் செய்து  நமக்கு தெரிந்த தோத்திங்கள், பாடல்களை பாடி ( *சிவன் அபிஷேகம் பிரியர் பெருமாள் அலங்கார பிரியர் அது போல் அம்பாள் ஸ்தோத்திர பிரியா* ) அம்பாளை துதிக்க சகலகாரியமும் சித்தியாகும் தசமியன்று நல்ல நேரம் பார்த்து கலசபூசை செய்து பூஜை செய்து கலசத்தை அகற்றுவது வழக்கம்...

ஒன்பது நாளும் லலித்தா சகஸ்ரநாமம் பாராயணம். தேவிபாடம் . லலிதாம்பா ஷோபனம் . தேவிகட்கமாலா பாராயணம் .லலிதாதிரிசதி . அஷ்டோத்திர போன்றவை பாராயணம்  செய்வது சிறப்பு ஒன்பது நாட்களும் அம்பாளை குளிர்விக்கும் வகையிலான பாராயணங்கள்  சிறப்பு..

 அனைவரின் இல்லத்திலும் லலித்தாதிரிபுர சுந்தரி அருள் பெருகட்டும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக