வெள்ளி, 23 மார்ச், 2018

அசோகாஷ்டமி மார்ச் 24



அசோகாஷ்டமி மார்ச் 24 

*(பங்குனி 10 ...  மார்ச் 24 சனி கிழமை )*

பங்குனி மாத அமாவாசையிலிருந்து எட்டாம் நாளில் வரும் வளர்பிறை அஷ்டமி திதி மிகவும் விசேஷமானது.

 ராமநவமிக்கு முதல் நாள் இந்த நாள் வரும். இதை அசோகாஷ்டமி என்பர்.

 சோகம் என்றால் துன்பம். அசோகம் என்றால் இன்பம் .இந்த திதியன்று விரதம் இருந்தால் துன்பம் நீங்கி இன்பம் பிறக்கும் .

அன்று சுத்தமான இடத்தில் மருதாணி மரங்களை பயிர் செய்யலாம் .மருதாணி மரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம் .

மூன்று முறை வலம் வரலாம். முட்கள் இல்லாமல் ஏழு மருதாணி இலைகளை பறித்து கையில் வைத்துக் கொண்டு ' மருதாணி மரமே ! உனக்கு அசோகம் என்று பெயர் .

மது என்ற வசந்தகாலத்தில் நீ உண்டாகி இருக்கிறாய் .உனது அருளை பெறுவதற்காக உனது இலைகளை சாப்பிட்டுகிறேன்

வசந்தகாலம் போல இன்பம் தந்து என்னை பாதுகாப்பாயாக .' என்று சொல்லி வழிபட்டு அந்த இலைகளை மென்று சாப்பிட்ட வேண்டும் .

இதனால் நோய்களும் , நோய் ஏற்பட காரணமான பாவமும் விலகும்.
ராவணனால் கடத்தப்பட்ட சீதை அசோகவனத்தில்  சிறை வைக்கப்பட்டாள் .

 சோகமாக இருந்த அவள் மனநிலையை அங்கிருந்த மருதாணி மரங்கள் குறைத்தன.

உடனே அந்த மரங்களிடம் ' திருமண நாளில் உன் இலையை பெண்கள் பூசினால் அவர்களுக்கு எந்த கஷ்டமும் வராது ' என்ற பெருமையை வழங்கினாள் .அந்த வரம் கொடுத்த நாளே அசோகாஷ்டமி .

(பங்குனி 10 ...  மார்ச் 24 சனி கிழமை ) பங்குனி 10 அசோகாஷ்டமி ....!!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக