வைகாசி விசாகம் என்பது முருகக் கடவுள்அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். இந்நாள் சோதி நாள் எனவும் அழைக்கப்படுவதுண்டு. உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம்திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்துஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
புத்த பெருமான் பிறந்ததும் ஞானம் பெற்றதும் இந்த வைகாசி விசாகத்திலேயே ஆகும். இந்நாளிலேயே நம்மாழ்வாரும் பிறந்தார்.
வைகாசி விசாகம்: நெருப்பில் அவதரித்த அழகன் முருகன்
சென்னை: சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளை தமிழ் மக்கள் கொண்டாடுகின்றனர்.
வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகக்கடவுளின் அவதாரத் திருநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர். தீமைகளை அழித்து, நன்மைகளை காப்பதற்காகவே ஏற்பட்டது முருகனின் தோற்றம்.
நெருப்பில் உதித்த முருகன்
சூரபத்மன் என்ற அசுரனிடம் இருந்து மக்களை காக்க சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர், முருகன். சரவண பொய்கையில் விழுந்த அந்த பொறிகள் ஆறு குழந்தைகளாயின. அந்தக் குழந்தைகளை ஆறு கிருத்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அந்த ஆறு குழந்தை களையும் பராசக்தி எடுத்து அணைக்க அந்த அவை ஆறுமுகமும், பன்னிரண்டு கைகளையும் கொண்ட ஒரே ஒரு குழந்தையாக மாறின.
ஆறுமுகன் பெயர்கள்
முருகன், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், பக்தர்கள் ஒவ்வொருவர் மனதிலும் வசிப்பதால் குகன் ஆகவும், சரவண பொய்கையில் இருந்து வந்ததால் சரவணபவன் என்றும், ஆறு முகங்களை கொண்டவராக இருப்பதால் ஆறுமுகன் என்றும் அழைக்கப்படுகிறார்.
அக்னியில் அவதரித்த அழகன் முருகன்
சென்னை: தமிழ் கடவுள் முருகப் பெருமானின் அவதார தினமாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் வைகாசி விசாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.தீமைகளை அழிப்பதற்காக சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபமாக அவதரித்தவர் முருகன். இந்த அவதாரம் நிகழ்ந்தது வைகாசி விசாக நாளில்தான். வைகாசி விசாக தினத்தன்று பால்குடங்கள் எடுத்தும், காவடிகள் சுமந்தும் முருகனின் பிறந்தநாளை ஆன்மீகம் மணக்க மணக்க கொண்டாடுகின்றனர்.
நட்சத்திரங்கள் இருபத்தி ஏழில், சில நட்சத்திரங்கள் இறைவனுக்கு உகந்த நட்சத்திரங்களாகவும், இறைவன் அவதாரம் எடுத்த நட்சத்திரங்களாகவும் கருதப்படுகின்றது. அந்த அடிப்படையில் வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திரம் வடிவேலனுக்கு உகந்த நட்சத்திரமாக பக்தர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. விசாக தினத்தன்று வேலனை வழிபட்டால் வெற்றிகள் வந்து சேரும்.
Lord Murugan birthday of Vaikasi Vishagam
முருகப்பெருமானுக்கு எத்தனை விழாக்கள் எடுத்தாலும், வைகாசி விசாக விழாதான் வளர்ச்சியைக் கொடுக்கும் விழாவாக அமைகின்றது. விசாக நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை தரிசித்தால் வெற்றி கிட்டும்! வேலவன் அருளால் விரும்பியது நடக்கும்! எனவே தான் திருசெந்தூர் முதல் தேசமெங்கும் முருகனது ஆலயங்களில் இந்த விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
அள்ளிக்கொடுப்பதற்கு கரங்கள் அதிகமாக உள்ள தெய்வமாகவும், கூப்பிட்டதும் பறந்து வந்து உதவி செய்ய மயில் வாகனம் வைத்திருப்பதாலும் முருகப்பெருமான் மீது மக்கள் அளவிற்கு அதிகமாக பக்தி வசப்பட்டுள்ளனர். அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா என்றும், பழத்திற்காக போட்டியிட்டு பழநி மலையில் குடிகொண்டவன் என்றும், சூரபத்மனை போராடி வெற்றிகொண்ட சத்ரு சம்ஹாரனாகவும் மக்கள் நினைத்து வழிபடும் மகத்தான தெய்வம் முருகக்கடவுள். அப்படிப்பட்ட தெய்வத்தை வழிபட நமக்கு
வைகாசி விசாகம் வழிகாட்டுகின்றது.
இந்த ஆண்டு 28.5.2018 அன்று வருகின்றது. அன்றைய தினம் பன்னிருகை வேலவனை எண்ணி விரதமிருந்து வழிபட்டால் இடையூறு சக்திகள் விலகும். லட்சியங்கள் நிறைவேறும். இந்த விசாகத் திருநாளில் முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அருகில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஒன்றிற்குச் சென்று வழிபட்டு வரலாம். கந்தப் பெருமானை உள்ளத்திலும், இல்லத்திலும் நினைத்து வழிபட்டு வரலாம்.
வடிவேல் முருகனின் ஆலயத்திற்குச் சென்று அர்ச்சித்து வழிபடுபவர்கள், அபிஷேக ஆராதனைகளிலும் கலந்து கொண்டால் அற்புதப் பலன்கள் கிடைக்கும். வீட்டு பூஜையறையில் முருகப்பெருமான் படத்தை வைத்து வழிபடலாம். ஐந்துமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும் என்பது நம்பிக்கை. மயில் மீது ஏறி விரைந்து வந்து மால்மருகன் உங்களுக்கு வரம் தருவான்.
விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள்
அகலும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.
கலியுகத்தின் கண்ட தெய்வமாக விளங்குபவர் கந்தப்பெருமான். அவரது “வேலை” வணங்குவதே வேலையாக கொள்ள வேண்டிய நாள் விசாகத் திருநாளாகும். எனவே விசாகத் திருநாளில் வேலவனின் சன்னிதி சென்று வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும்.
வீரபாகு உள்ளிட்ட நவவீரர்கள் எப்படித் தோன்றினார்கள் தெரியுமா..?- விசாக மகத்துவம்!
'தமிழ்க் கடவுள்' என்று போற்றப்படும் அழகு முருகனுக்கு ஆயிரமாய் திருநாமங்கள் இருந்தாலும், சிறப்பான பெயர்களாகத் திகழ்பவை 'கார்த்திகேயன்' மற்றும் 'விசாகன்' ஆகிய இரண்டு திருப்பெயர்களாகும். காரணம்?
வீரபாகு
முருகப்பெருமான் ஞானஸ்வரூபி. அவனைச் சரணடைந்தால், நம்முடைய அகம்பாவம் நீங்கும். அகம்பாவமே மனிதர்களைப் பாவக்குழியில் வீழ்த்துகிறது. அதன் விளைவாக பல துன்பங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது. சூரபத்மன் அகங்காரத்தின் ஒட்டுமொத்த வடிவம். அவனால் பலவகையான துன்பங்களுக்கு ஆட்பட்ட தேவர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்காகவே, 'குமார சம்பவம்' நிகழ்ந்தது.
தர்மத்தை நிலைநிறுத்தவும், அதர்மத்தை அழிக்கவும் இறைவன் பல அவதாரங்களை எடுத்ததாக புராணங்கள் பேசுகின்றன. முருகப்பெருமானின் அவதாரம் தவிர்த்து, இறைவனின் மற்ற அவதாரங்களில் அசுரர்கள் சம்ஹாரம் செய்யப்பட்டனர். ஆனால், அழகு, அன்பு, கருணை ஆகிய அனைத்தும் உருவம் தரித்து வந்ததுபோல் அவதரித்த முருகப்பெருமான், சூரனை சம்ஹாரம் செய்யவில்லை. மயிலாகவும் சேவலாகவும் மாற்றி வாகனமாகவும், கொடியாகவும் கொண்டார். ஆக, முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்யவில்லை; மாறாக ஆட்கொண்டருளினார்.
அதுவே முருகப்பெருமானின் பேரருள் பெருங்கருணைத் திறம்.
முருகப்பெருமானின் திரு அவதாரம் நிகழ்ந்த வைகாசி விசாகம், நாளை (28.5.18) முருகப்பெருமானின் அனைத்து தலங்களிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.
சரி, விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தபோது நிகழ்ந்த மற்றோர் அற்புதம்தான் என்ன?
சூரபத்மனின் கொடுமைகளைத் தாங்கமாட்டாத தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று பிரார்த்திக்கின்றனர். அவர்களுக்கு அபயம் அருளிய சிவபெருமான், குமார சம்பவத்தை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டார். தம் நெற்றிக் கண்ணைத் திறக்க, ஆறு தீக்கதிர்கள் வெளிப்பட்டு, சரவணப்பொய்கையில் இருந்த ஆறு தாமரை மலர்களில் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்றியதும், அறுவரையும் அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒன்று சேர்த்து, அதன் பயனாக முருகப்பெருமானுக்கு ஆறுமுகன் என்ற திருப்பெயர் ஏற்பட்டதும் நாமெல்லாம் அறிந்த விஷயம்தான். ஆனால், அன்றைக்கே நிகழ்ந்த மற்றோர் அற்புதம் நவவீரர்களின் தோற்றம்தான்.
குமாரசம்பவத்துக்கு முன்பாக மற்றொரு தருணத்தில் சிவபெருமான் தம் நெற்றிக்கண்ணைத் திறந்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது வெளிப்பட்ட அக்னிச் சுடரின் வெம்மை தாங்கமாட்டாமல், பார்வதி தேவி எழுந்தோடினார். அதனால், அவருடைய திருவடி சிலம்புகளிலிருந்து நவமணிகள் தெறித்துச் சிதறின. சிதறிய நவமணிகளை, பார்வதி தேவியார் திருக்கண் நோக்க, அந்த மணிகளிலிருந்து நவசக்தி தேவியர் தோன்றினர். ஈசனின் திருவுள்ளக்குறிப்பின்படி அவர்கள் கருத்தரித்தனர். ஆனால், திடீரெனத் தோன்றிய நவதேவியரும் ஈசனருகே நிற்பதைக் கண்ட சக்திதேவி அவர்களிடம் கோபம் கொண்டு அவர்களது கரு பிரசவமாகாமல் நீண்ட காலம் அப்படியே தங்கியிருக்க வேண்டும் என்று சபித்தார்.
வைகாசி விசாகம்
அம்பிகையின் சாபம் கேட்டு அஞ்சி நின்ற நவசக்தியரின் உடலிலிருந்து வெளிப்பட்ட வியர்வைத்துளிகள் ஒவ்வொன்றும் ஒரு வீரனாக மாற, மொத்தம் ஒரு லட்சம் வீரர்கள் தோன்றினர். பின்னர், அம்பிகையின் கோபம் தணியவேண்டி சரவணப்பொய்கையின் அருகில் தவமியற்றினர். காலம் கனிந்து விசாகத்தன்று முருகப்பெருமானின் அவதாரம் நிகழ்ந்த அதே தருணத்தில், பார்வதிதேவி நவசக்தியருக்கும் அருள்புரிந்தாள். நவசக்தியரும் ஆளுக்கொரு பிள்ளையைப் பெற்றனர்.
மாணிக்கவல்லி வீரபாகுவையும், மௌத்திகவல்லி வீரகேசரியையும், புஷ்பராகவல்லி வீரமகேந்திரனையும், கோமேதகவல்லி வீர மகேஸ்வரனையும், வைடூரியவல்லி வீர புரந்தரனையும், வைரவல்லி வீர ரட்சகனையும், மரகதவல்லி வீர மார்த்தாண்டனையும், பவளவல்லி வீராந்தகனையும், இந்திரநீலவல்லி வீர தீரனையும் வீரத் திருமகன்களாகப் பெற்றனர். பிறக்கும்போதே பகைவர்களை அச்சுறுத்தும் தோற்றத்தோடு தோன்றிய அவர்களை வாழ்த்தி ஈசன் ஆளுக்கொரு வாளை பரிசளித்து வாழ்த்தினார். தர்மத்தை காக்க பிறப்பெடுத்திருக்கும் முருகப்பெருமானுக்கு உதவத் தயாராக இருக்க வேண்டும் என்றும் ஆணையிட்டார். இப்படி முருகப்பெருமான் தோன்றிய திருநாளிலேயே உருவானவர்கள் இந்த நவவீரர்கள். வைகாசி விசாகத் திருநாளில் கந்தனை வணங்குபவர்கள் இவர்களையும் வணங்கினால் எதிரிகள் பயம் ஒழிந்து வாழ்வாங்கு வாழ்வார்கள் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.
முருகப்பெருமான் விசாக நட்சத்திரத்தில் தோன்றியதால் விசாகன் என்ற பெயரும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பெற்றதால் கார்த்திகேயன் என்ற பெயரும் சிறப்பு வாய்ந்தவைகளாகப் போற்றப்படுகின்றன.
திருச்செந்தூர்
எங்கும் ஞான வடிவாக காட்சியளிக்கும் முருகப்பெருமான் அவதரித்த இந்த நாளில் அவன் தாள் வணங்கி அவன் புகழ் பாடி உய்வோம்.
வைகாசி விசாகம்
வைகாசி விசாகம் முருகக் கடவுள் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திரத்தில் வரும் சிறப்பு நாள் இதுவாகும். விசாகம் ஆறு நட்சத்திரங்கள் ஒருங்கு கூடியதொன்று. இதனால் முருகனும் ஆறு முகங்களோடு திகழ்பவர் என்பது ஐதீகம். உயிர்களுக்கு நேரும் இன்னலை நீக்கும் பொருட்டு சிவன் ஆறுமுகங்களாய்த் தோன்றி தம் திருவிளையாடலால் குழந்தையானது இந்நாளில். மக்கள், பிராணிகள், தாவரங்கள் எல்லாம் ஓருயிராகி இணைக்கப்பட்டிருக்கும் உண்மையை விளக்குதலே இந்நாளின் கருத்தாகும். இதனால் சைவர்கள் இந்நாளில் விரதமிருந்து ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடுவர்.
வைகாசி மாதத்தில் சந்திரன் பவுர்ணமி நாளில் விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனாலேயே இந்த மாதம் "வைசாக' மாதம் என்றிருந்து பின்னாளில் "வைகாசி' என்றானது. இந்த மாத பவுர்ணமி நாளை "வைகாசி விசாகம்' என்று குறிப்பிடுகிறோம். இந்த நாளில் தான் முருகப்பெருமான் அவதாரம் செய்ததாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. "வி' என்றால் "பட்சி' (மயில்), "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' மயில் மீது வலம் வரும் இறைவன் என்பதால் "விசாகன்' என்றும் வழங்குவர். முருகனுடைய வாகனமாக சூரபத்மனே வீற்றிருக்கிறான். பகைவனுக்கும் அருள்கின்ற தன்மையை முருகப்பெருமானிடத்தில் காணலாம். இந்நாளில் திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் அணி அணியாக மக்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்வர். விசாகனாம் முருகனைப் பணிந்து வினைகளைப் போக்குவோம்.
முருகப் பெருமானுக்கு உகந்த நாள் வைகாசி விசாகம். அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு விரதமிருந்து மனமுருகி வேண்டிக் கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது உறுதி.
குழந்தை இல்லாதவர்கள் வைகாசி விசாகம் அன்று பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதமிருந்து முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொண்டால் அடுத்த வருடம் வைகாசி விசாகத்திற்குள் மடியில் குழந்தை தவழுவது உறுதி. திருமணமாகாத கன்னியர்கள் விரதமிருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
இந்த விரதத்தை ஆண்களும் இருக்கலாம். அன்றைய தினம் பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து ஆறுமுகப் பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்வர். அன்றைய தினம் விரதமிருந்து ஒரு வேளை உணவு உண்டு முருகனை தியானிடத்தால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
வைகாசி விசாக நன்னாளில், முருகப்பெருமான் அவதாரம் நிகழ்ந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
காளிதாசர் எழுதிய, “குமார சம்பவம்’ எனும் நூலில், முருகப்பெருமானின் பிறப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. சம்பவம் என்றால், தோன்றுதல் குமரனின் தோற்றத்தைப் பற்றிய நூல் என்பதால், இந்தப் பெயர் வைக்கப்பட்டது. காளிதாசர் இந்தத் தலைப்பை வால்மீகி ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுத்தார்.
முனிவர்களின் யாகத்திற்கு இடைஞ்சல் செய்த தாடகை எனும் அரக்கியை வதம் செய்ய,ராமபிரானை விஸ்வாமித்திரர் அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கந்தப்பெருமானின் பிறப்பு, அவர் பத்மாசுரனை அழித்தது உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ராம லட்சுமணருக்கு சொன்னார். இந்த நிகழ்ச்சியை வால்மீகி, “குமார சம்பவம்’ என வர்ணித்துள்ளார். அந்த வர்ணனையே, காளிதாசருக்கு தலைப்பாக கிடைத்து விட்டது.
பத்மாசுரன் என்பவன், கடும் தவமிருந்து, சிவனுக்கு இணையான ஒருவரைத் தவிர, வேறு யாராலும் அழிக்க முடியாத வரம் பெற்றான். மேலும், அவ்வாறு பிறப்பவன், பெண் சம்பந்தமில்லாமல் பிறக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் வைத்து, சிவனிடம் அனுமதி வாங்கிவிட்டான்.
பிறகென்ன… இப்படி ஒருவன் பிறக்கவே முடியாதென்ற எண்ணத்தால், ஆணவம் கொண்டு, தேவர்களைத் துன்புறுத்தினான். சிவனிடம் முறையிடுவதற்காக சென்றனர் தேவர்கள். அப்போது, தட்சிணாமூர்த்தியாக வடிவம் தாங்கி, தவத்தில் இருந்தார் சிவன்; அவருக்கு பணிவிடை செய்ய வந்த அம்பாளும் தவத்தில் இருந்தார். தவமிருக்கும் நேரத்தில், எது கேட்டாலும் கிடைக்கும். இதைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், தங்களைத் துன்புறுத்தும் அசுரனை அழிக்கும் ஒரு அம்சம் உருவாக வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
சிவன், உடனடியாக விநாயகரை அனுப்பியிருக்கலாம்; ஆனால், அவரோ பார்வதியின் அம்சமாகத் தோன்றியவர். பெண் சம்பந்தம் அவருக்கு இருக்கிறது. பத்மாசுரனுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்ற, தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உருவாக்கி, கங்கை நதியில் விட்டார். அவை இணைந்து கந்தப்பெருமான் அவதரித்தார்.
இவருக்கு சுப்பிரமணியன் என்றும் பெயர் உண்டு. “ஸுப்ரஹ்மண்யன்’ என்ற பெயரே, தமிழில் இவ்வாறு சொல்லப்படுகிறது. இதற்கு, பரமாத்மாவின் அம்சம் என்று பொருள். சிவபெருமானே பரமாத்மா. அவரது பிள்ளை என்பதால் இந்தப் பெயர் வந்தது.
முருகப்பெருமான் ஆறு வயது வரை மட்டுமே பாலப்பருவ லீலைகளைச் செய்தார். பிரம்மாவுக்கு, “ஓம்’ என்ற மந்திரத்தின் பொருள் தெரியாததால், அவரைச் சிறையில் அடைத்தது, தந்தைக்கே பாடம் சொன்னது, தமிழ் மூதாட்டி அவ்வைக்கு நாவல்கனியைக் கொடுத்து, சுட்டபழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று கேட்டு, அந்த அறிவுக்கடலையே கலங்கச் செய்தது, உலகைச் சுற்றும் போட்டியில் பங்கேற்று, தண்டாயுதபாணியாக மலையில் நின்றது ஆகிய லீலைகள் குறிப்பிடத்தக்கவை.
பின்னர், அவர் தேவர்களின் சேனாதிபதியாகி, தேவசேனாதிபதி என்ற பெயர் பெற்றார். தேவசேனா என்பது, தெய்வானையின் பெயர். அவளை மணந்து, அவளுக்கு பதியானதாலும் இந்தப் பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர். குறமகளான வள்ளியை மணந்ததன் மூலம், இறைவனுக்கு உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பேதமில்லை என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
முருகப்பெருமானின் அவதார நன்னாளில், அவர் குடிகொண்டுள்ள மலைக் கோவில்களுக்குச் சென்று, நல்லருள் பெற்று வருவோம்.
வைகாசி விசாக வழிபாடு:
* மயில் மீது வலம் வருபவனே! வேதத்தின் உட்பொருளாய் திகழ்பவனே! கண்டவர் மனம் கவரும் அழகனே! தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமே! சிவபெருமானின் புதல்வனே! முருகப்பெருமானே! உன்னைச் சரணம்அடைகிறோம்.
* "மலையேறி வந்து என்னைத் தரிசித்தால் வாழ்வின் உச்சியை அடைந்து மகிழ்வாய்' என்பதை எடுத்துக் காட்டுவதற்காக, குன்றிருக்கும் இடமெல்லாம் கோயில் கொண்டவனே! ஆறுமுகப்பெருமானே! எப்போதும் எங்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தருள வேண்டும்.
* பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றுபவனே! ஒளிமயமான ஸ்வர்ண மஞ்சத்தில் அமர்ந்து, ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்தாற்போல் அழகுற காட்சி தருபவனே! தேவர்களுக்கு வாழ்வு அளித்த தெய்வமே! கார்த்திகேயனே! உன்னை எப்போதும் எங்கள் மனதில் நினைத்துக் கொண்டிருப்போம்.
* வேடராஜனின் குமரியான வள்ளிநாயகியை மணந்தவனே! இந்திரன் மகள் தெய்வானையின் துணைவனே! தாரகாசுரனை வதம் செய்த வீரனே! தாமரை போன்ற உன் ஆறுமுகங்களும் புன்சிரிப்பால் மலர்ந்துள்ளன. கண்கள் கருணையைப் பொழிந்து கொண்டிருக்கின்றன. சிவகுமரனே! உன் திருவடியைச் சரணடைந்து விட்டோம்.
* இளங்குமரனே! சிவபெருமானுக்கு குருவாய் வந்த குகனே! கந்தப்பெருமானே! சேனாதிபதியே! வெற்றி வேலவனே! மயில்வாகனனே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! எங்கள் தலைவனே! அசுரனை அழித்தவனே! எப்போதும் எங்களைக் காத்தருள வேண்டும்.
* கந்தப்பெருமானே! எங்கள் கண்கள் உன் திருவடிகளை மட்டுமே காணட்டும். காதுகள் உன் திருப்புகழை மட்டும் விருப்பத்தோடு கேட்டு மகிழட்டும். நாக்கு உன் பெருமையை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்கட்டும். உனக்கு தொண்டு செய்து வாழ்வதே எங்கள் பணியாக அமையட்டும்.
* முருகா! தாயும் நீயே! தந்தையும் நீயே! உன் பிள்ளைகளான எங்கள் பிழைகளைப் பொறுத்தருள்வாயாக. உன்னையன்றி வேறொருவரையும் நாங்கள் அறிந்ததில்லை. பாமரருக்கும் அருள்புரியும் பரம்பொருளே! நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வவளம் ஆகிய அனைத்து பேறுகளையும் தந்தருள்வாயாக.
வைகாசி விசாகத்திருநாlளில் குடும்பத்தினர் அனைவரும் கூட்டாக அமர்ந்து இந்த பிரார்த்தனையைச் செய்து, குமரன் அருள் பெறுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக