புதன், 10 ஜனவரி, 2018

ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்



ஒரே கோயிலில் ஒன்பது அதிசயங்கள்

மெய்சிலிர்க்கும் ஆன்மீகத் தகவல்கள்

அதிசயம் ஒன்று:
அது ஒரு மகாப்பிரளய காலம். பிரளயத்தின் முடிவில் ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தோன்ற வேண்டும். பூமியெங்கும் மழை வெள்ளமெனகொட்டியது. உயிரினங்கள் அழிந் தன. ஆனால், அவ்வளவு வெள்ளப்பெருக்கிலும், பூ லோகத்தின் ஒரு பகுதி மட்டும் நீரில் மூழ்காமல் திட்டாக நின்றது. காரணம் அங்கு இறையருள் இருந் தது. அந்தத் தலமே தென்குடித்திட்டை எனும் திட்டை. பேரூழிக்காலத்திலும், பெரு வெள்ளத்திலும் மூழ்காத திட்டை தலம் ஒரு அதிசயமே.

அதிசயம் இரண்டு:
பரம்பொருள் ஒன்றே. பலவல்ல! சத்தியம் ஒன்றே இரண்டல்ல!! என்பது வேதவாக்கு அப்பரம்பொருள் தன்னிலிருந்து ஒரு பகுதியை சக்தியைப் பிரித்து உமாதேவியைப் படைத்தார். திட்டை திருத்தலத்தில் இறைவனுக்கு நிகராக மிக உயர்ந்த பீடத்தில் அம்பாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்மன் சந்நிதிக்கு மேலே மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கட்டங்கள் விதான த்தில் செதுக்கப்பட்டுள்ளன. அந்தந்த ராசிக்காரர்கள் தங்கள் ராசியின் கீழ் நின்று அம்மனைப் பிரார்த்திக்கும்போது அம்மன் அவர்கள்தோஷம் நீங்க அருளுகின்றார். பெண்களுக்கு ஏற்படும் திருமணத்தடை, மாங்கல்யதோஷ ம் நீங்க இந்த அம்மன் அருளுவதால் மங்களாம்பிகை எனப்புகழப்படும் உலகநாயகி இரண்டாவது அதிசயம்.

அதிசயம் மூன்று:
பிரளயத்தின் முடிவில் மீண்டும் உயிரினங்களைப் படைக்க உமையுடன் சேர்ந்து உமையொருபாகன் அண்டத்தைப் படைத்து, அதனைப்பரிபாலன ம் செய்ய மும்மூர்த்திகளையும் படைத்தனர். ஆனால் மாயைவயப்பட்டிருந்த மும் மூர்த்திகளும் பெரு வெள்ளத்தால் மூடி பேரிருள் சூழ் ந்திருந்த இந்தப் பிரபஞ்சத்தைக் கண்டு பயந்தனர். அலைந்து திரிந்து பெருவெள்ளத்தின் நடுவில் பெருந்திரளாக இருந்த திட்டையை அடைந்தனர். மாயை நீங்க வேண்டி இறைவனைத்தொழுதனர். இறைவன் அவர்கள் அச்சத் தைப்போக்க உடுக்கையை முழக்கினார். அதிலிருந்துதோன்றிய மந்திர ஒலிகள் மும்மூர்த்திகளையும் அமைதியடைச் செய்தது.
பேரொளியாக ஒரு ஓடத்தில் ஏறி வந்த இறை வன் அவர்களுக்கு காட்சி தந்தார். மும்மூர்த்திகளின் மாயையை நீக்கி அவர்களுக்கு வேத வேதாந்த சாஸ்திர அறிவையும், ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய 3 தொழில்களையு ம் செய்ய உரிய சக்தியையும், ஞானத் தையும் அருளினார். மும்மூர்த்திக ளும் வழிபட்டு வரம்பெற்றது மூன்றாவது அதிசயம்.

அதிசயம் நான்கு:
மூலவர் வசிஷ்டேஸ்வரர் விமானத்தில் சந்திரக்காந்தக்கல், சூரியக்காந்தக்கல் வைத்து கட்டப்பட்டுள்ளது. தன் மாமனார் தட்சனால் தினம் ஒரு கலையாக தேய்ந்து அழியும் சாபம் பெற்றார் சந்திர பகவான். தினமும் தேய்ந்துகொண்டேவந்த சந்திரபகவான், திங்களூர் வந்து கைலாசநாதரை, வணங்கி தவம் இருந்தார். கைலாசநாதரும், சந்திரனின் சாபம்நீக்கி மூன்றாம் பிறையாக தன் சிரசில் சந்திரனை அணிந்து கொண்டார். திங்க ளூரில் தன் சாபம் தீர்த்த சிவபெருமானுக்கு திட்டையிலே தன் நன்றிக் கடனை செலுத்துகிறார். எப்படி என்றால் இறைவனுக்கு மேலே சந்திர காந்தக் கல்லாக அமர்ந்து காற்றிலிருந்து ஈரப்பத்தை ஈர்த்து ஒரு நாழி கைக்கு ஒரு சொட்டாக இறைவனுக்கு நித்யா பிஷேகம் செய்கிறார். 24 நிமிடங்களுக்கு (ஒரு நாழிகை) ஒரு முறை இறைவன்மீது ஒருசொட்டுநீர் விழுவதைஇன்றும் காணலாம். உலகில் வேறு எந்த ஒரு சிவாலயத்திலும் காண முடியாத அற்புதம் இது. இந்த ஆலயத்தில் அமைந்துள்ள நான்காவது அதிசயம் இது.

அதிசயம் ஐந்து:
நம சிவாய என்பது ஐந்தெழுத்து மந்திரம். அந்த ஐந்து எழுத்தை மனதில் நிறுத்தும் அற்புத வடிவம் லிங்க உருவம். திட்டை வசிஷ்டேஸ்வர் ஆலய த்தின் நான்கு மூலைகளிலும் நான்கு லிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஐந்தாவது லிங்கமாக மூலவராக ராமனின் குலகுரு வான வசிஷ்டர் பூஜித்த வசிஷ்டேஸ்வரர் உள்ளார். எனவே, இது பஞ்சலிங்க ஸ்தலமாக உள்ளது. பஞ்ச பூதங்களுக்கும் தனித் தனியே பாரதத்தில் தலங்கள் உண்டு. ஆனால் ஒரே ஆலயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் ஐந்து லிங்கங்கள் அமைந் திருப்பது ஐந்தாவது அதிசயம்.

அதிசயம் ஆறு:
எல்லா ஆலயங்களிலும் மூலவராக உள்ள மூர் த்தியே பெரிதும் வழிப்பட ப்பட்டு வரம்தந்து தல நாயகராக விளங்குவது வழக்கம். ஆனால் திட் டைத்தலத்தில் சிவன், உமை, விநாயகர், முருகன், குரு, பைரவர் ஆகிய ஆறுபேரும் தனித்தனியே அற்புதங்கள் நிகழ்த்தி தனித்தனியாக வழி படப்பட்டு தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள். எனவே, பரிவார தேவதைகளைப்போல அல்லாமல் மூலவர்களைப்போலவே, அருள் பாலிப்பது
ஆறாவது அதிசயம்.

அதிசயம் ஏழு:
பெரும்பாலான ஆலயங்கள் கருங்கல்லினால் உருவாக்கப் பட்டிருக்கும். பழமையான ஆலயங்கள் சில செங்கற்களால் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால் கொடிமரம், விமானங்கள், கலசங்கள் ஆகிய அனைத்தும் கருங்கற்களினால் உருவாக்கப் பட்டுள்ளது இங்கு மட்டுமே. உலகில் வேறு எங்கும் இத்தகைய ஆலய அமைப்பு இருப்பதாக தெரிய வில்லை. எனவே  இது ஏழாவது அதிசயம் என்றால் மிகையாகாது.

அதிசயம் எட்டு:
பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்ட பைரவர் பல தலங்களுக்கு சென்றும் தோஷம் நீங்கப் பெறவில்லை. இதனால் திட்டைக்கு வந்து வசி ஷ்டேஸ்வரரை ஒரு மாதம் வரை வழிபட்டு வந்தார். வசிஷ்டேஸ்வரர் அவர் முன்தோன்றி என் அம்சமான உன் தோஷம் இன்றுடன் முடிந்துவிட்டது.நீ திட்டைத் திருத்தலத்தின் காலபைரவனாக எழுந்தருளி அருள்புரியலாம் என்றார். அன்று முதல் இத்தலம் கால பைரவரின் ஷேத்திரமாக விளங்கி வருகிறது. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனியால் பாதிக்கப்பட்டவர்கள் தேய்பிறை அஷ்டமியில் இந்த பைரவரை அபிஷேக ம் அர்ச்சனை செய்து வழிபட்டால், சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும். இங்கு எழுந்தருளி உள்ள பைரவர் எட்டாவது அதிசயம்.

அதிசயம் ஒன்பது:
நவக்கிரகங்களில் மகத்தான சுபபலம் கொண்டவர். குருபகவான் ஒருவரே. உலகம் முழுவதும் உள்ள தன தான்ய, பணபொன் விஷயங்களுக்கு குருவேஅதிபதி. தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இட ங்களை தன்பார்வை பலத்தால் சுபமாக்கும் தன்மை படைத்தவர். மேலும் ராகு, கேது, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் போன்ற கிரகங்களி னால் வரும் தோஷங்களை தமது பார்வை பலத்தினால் குறைக்கும் சக்தி படைத்தவர் குருபகவான். எனவே, குருபார்க்க கோடி நன்மை என்ற பழ மொழி ஏற்பட்டது. இத்தகைய குருபகவான் திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்தில் சுவாமிக் கும், அம்பாளுக்கும் இடையில் எங்கும் இல்லாச் சிறப்போடு நின்ற நிலையில் ராஜகுருவாக எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். இவருக்கு ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழாவு ம், அதனையொட்டி லட்ச்சார்ச்சனையும் குருபரி கார ஹோமங்களும் சிறப்பாக நடைபெற்று வரு கின்றன. இங்கு எழுந்தருளி உள்ள ராஜ குரு பகவான் ஒன்பதாவது அதிசயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக