செவ்வாய், 23 அக்டோபர், 2018

அன்னாபிஷேகம் ஸ்பெஷல் ! 24.10.18 !


அன்னாபிஷேகம் ஸ்பெஷல் ! 24.10.18 !

ஐப்பசி பௌர்ணமி - ஆனந்தம் தரும் அன்னாபிஷேகம்!

சாம வேதத்திலே ஒரு இடத்தில் “அஹமன்னம்,
அஹமன்னம், அஹமன்னதோ” என்று
கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும்
நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
 அமுது படைக்கும்அந்தஆண்டவனுக்கே அமுதுபடைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

ஆகமத்தில் அன்னாபிஷேகம் :

 ஆலயவழிபாட்டில்பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்க  உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரியஅன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.அதை ஏன் ஐப்பசி மாத பௌர்ணமியில் செய்ய ணேவ்டும்? மற்ற மாதங்களில் செய்யலாமே? ஐப்பசி மாதப் பௌர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.

அது என்ன சாபம்?தெரிந்த கதைதான். சந்திரன், அஸ்வினி முதல் ரேவதி வரையிலான தனது நட்சத்திர மனைவியருள் ரோகிணியிடம் மட்டும் தனி அன்பு செலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல் தேயட்டும் என்று சாபம். சந்திரனுக்கும் ஒவ்வொரு கலையாக தேய ஆரம்பித்தது. அவன் மிகவும் வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்து சிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள் மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார், அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.

கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும் முழுப்பொலிவும் வருடத்தின் ஒருநாள் அதாவது ஐப்பசி பௌர்ணமி அன்று மட்டுமே கிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்து பின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும் என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு, மதி முழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு!

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது. அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழு ஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில் அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து நடைமுறைப்படுத்தினார்கள்.

 முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினல் குளிர்வது இயற்கைதானே.

அன்னத்தின் சிறப்பு :

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம்
ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள்
என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது..

சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன். இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன். தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி. கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன்.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் திருக்கோயில் மூலவராகச் சுமார் பதிமூன்று அடி உயரமும், அறுபத்து மூன்று அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லிலான மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்த லிங்கத்தை முழ்கடிக்கும் அளவிற்குச் சுமார் நூறு மூட்டை அரிசியில் அன்னம் செய்து, அதனை அன்னாபிஷேகமாகச் செய்வது வழக்கம்.

அன்னாபிஷேகம் செய்யும் முறை:

ஐப்பசி மாத முழுநிலவு நாளில் முதலில் ஐந்து வகைப் பொருட்களால் இறைவனுக்க அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த அன்னத்தைக் கொண்டு (தேவையானால் சற்று நீர் கலந்து) அன்னாபிஷேகம் செய்யப்படும். சமீபகாலமாக அன்னாபிஷேகத்தின் போது அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு லங்காரம் செய்வது வழக்கமாயிருக்கிறது.

சிவலிங்கத் திருமேனியின் மேலிருந்து அன்னத்தை வைத்துக் கொண்டே வருவார்கள். சிவலிங்கத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கிறார்கள். கீழ்ப்பகுதி, பிரம்ம பாகம். நடுப்பகுதி, விஷ்ணு பாகம். இதுவே ஆவுடை. மேற்பகுதி பாணம், சிவபாகம். அன்னாபிஷேகம் சிவலிங்கத் திருமேனியின் எல்லா பாகங்களுக்குமாக முழுமையாகவே செய்யப்படும்.

இந்த அபிஷேகம் மட்டும்தான் இரண்டு நாழிகை நேரம், அதாவது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் அப்படியே வைக்கப்பட்டிருக்கும். அந்தச் சமயத்தில் யஜுர் வேத பாராயணமும், ருத்திரம், சமகம் போன்ற மந்திரங்களின் பாராயணமும் நடைபெறும். நாழிகை நேரம் முடிந்த உடன் அன்னத்தை அகற்றி விடுவார்கள். பின்னர் ஐந்து வகைப் பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெறும்.

ஒவ்வொரு அன்னப் பருக்கையும் சிவரூபமாக இருப்பதாகப் பேரூர் புராணம் தெரிவிக்கிறது.
லிங்கத்தின் ஆவுடையிலும் பாணத்தின் மீதும் சாத்தப்பட்ட அன்னம் மிகவும் கதிர்வீச்சுடன் இருக்கும். எனவே அதனை எவரும் உண்ணாமல் அப்படியே எடுத்துச் சென்று கோயில் குளத்திலோ இல்லை ஆற்றிலோ கொண்டு கரைப்பார்கள். நீர்வாழ் உயிர்களுக்கு உணவு!

நமது இந்து மதம் எப்போதும் மனிதனை மட்டுமே முன்னிறுத்தி எதையும் இறைவனிடம் வேண்டுவதில்லை. எல்லா உயிரினங்களும் வாழ வேண்டும். அவ்வாறு வாழ்ந்தால் தான் மனிதனுக்குத் தேவையான உணவு
தடையின்றிக் கிடைக்கும் என்பதை
இயற்கையின் சமன்பாட்டு விதியை நன்கு அறிந்திருந்தனர் நம் முன்னோர்.
அதனால்தான் அன்னாபிஷேகப் பிரசாதம் நீரில் வாம் புழு, பூச்சிகள், மீன்கள், மற்ற நீர் வாழ் உயிரினங்கள் எல்லாமும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கம் கொண்டு நீரில் கரைக்கப்படுகிறது. நல்ல அதிர்வுகளும், உடலுக்குத் தேவையான கதிர் வீச்சுகளும் நிறைந்திருக்கும் பிரும்ம பாகத்தில் சாத்தப்பட்ட அன்னம் மனிதர்களுக்கே அளிக்கப்படுகிறது. ஏனெனில் அவற்றைத் தாங்க சிறு உயிர்களால் முடியாது என்ற ஜீவகாருண்யமே காரணம்.
வெள்ளை அன்னம் சாப்பிடக் கூடாது என்பதால்,               பிரசாதமாக வினியோகிக்கப்படும் அன்னம்  சாம்பார், தயிர், மோர் ஆகியவற்றுடன் தனித்தனியே கலக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்படும் .இந்தப் பிரசாதத்தை உண்டால் நோய் நொடிகள் வராது, குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதிகம்.

அன்னாபிஷேகப் பலன்கள்:

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று ஒரு பழமொழி உண்டு. அது பொதுவாக, எந்த வேலையும் செய்யாமல் ஓசிச் சோறு உண்டு வெட்டியாக காலம் கழிப்பவரைக் குறித்துச் சொல்லப்படுவதாக இருக்கிறது. ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. சோறாகிய அன்னத்தை அதாவது அன்னாபிஷேகத்தைக் கண்டவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பதே காலப் போக்கில் இவ்வாறு மாறிவிட்டது.

வியாபாரத்தில் பிரச்னை இருப்பவர்களும், நஷ்டமடைந்தவர்களும் அன்னாபிஷேகத்தை தரிசித்துப் பிரசாதத்தை உண்டால் வியாபாரம் நிமிரும். பள்ளிக் குழந்தைகளுக்கும் ஏற்றது இது. சில குழந்தைகள் நன்றாகப் படிப்பார்கள். ஆனால் தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போகும். அந்தக் குழந்தைகள் அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் எல்லாம் நன்றாக நினைவில் நிற்கும்.

வீட்டில் லிங்கம் வைத்திருந்தும் நித்ய வழிபாடுகள் செய்யாதவர்கள் இல்லை செய்ய இயலாதவர்கள் வருடத்தில் ஒரு நாள் அன்னாபிஷேக தரிசனம் செய்து பிரசாதம் உண்டு, சிவபூஜை செய்யாததால் ஏற்படும் தோஷத்தைப் போக்கிக் கொள்ளலாம்.

நீண்ட நாடளாக குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் அன்னாபிஷேகத்தைக் கண்ணாரக் கண்டு பிரசாதம் உண்டால் குழந்தை பிறக்கும்.
பொதுவில் சிவப் பிரசாத அன்னத்தை உண்போர்க்கு என்றைக்குமே உணவுக்கு தட்டுப்பாடு என்பதே வராது. வீட்டில் எப்போதும் தானியங்கள் மிகுந்து இருக்கும்.

அன்னாபிஷேகப் பிரசாதத்தை உண்டால் தோற்றப் பொலிவும், தன் நம்பிக்கையும் கை வரப் பெறும். அன்னாபிஷேகம் குறைவின்றி நடந்தால் அந்த வருடம் முழுவதும் நல்ல விளைச்சல் இருக்கும், ஊர் செழிக்கும், கலைகள் வளரும், மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள் என்பது நம்பிக்கை.
இவற்றை எல்லாம் வைத்துப் பார்க்கும் போது அன்னாபிஷேகம் என்பது மிகவும் தொன்மை வாய்ந்தது. பாரம்பரியச் சிறப்புடையது என்பது நன்று விளங்குகிறது.!

🐜🐜சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான தவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த
சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் (வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் ) கண்டு தரிசித்து,ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

திருச்சிற்றம்பலம் !!!

சனி, 20 அக்டோபர், 2018

ஸ்ரீ மஹா சரஸ்வதி கோவில், கூத்தனூர்


ஸ்ரீ மஹா சரஸ்வதி கோவில், கூத்தனூர், திருவாரூர் மாவட்டம்,

📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில், இந்து மதப்புராணங்களில், கல்விக் கடவுளாக குறிப்பிடப்படும் சரஸ்வதி தேவிக்காகக் கட்டப்பட்ட அரிய கோவில்களுள் ஒன்றாகும்.

📖 கூத்தனூர் சரஸ்வதி கோவில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறை-திருவாரூர் தொடருந்துத் தடத்தில், பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகே இக்கோவில் உள்ளது.

தல வரலாறு :

📖 சத்தியலோகத்தில் வாழ்ந்த தம்பதியினரான பிரம்மனுக்கும், சரஸ்வதிக்குமிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது.

📖 கல்விக்கு அரசியான தன்னாலேயே சத்தியலோகம் பெருமையடைகிறது என்று சரஸ்வதியும், தன் படைப்புத் தொழிலால்தான் சத்தியலோகம் பெருமையடைகிறது என்று பிரம்மனும் வாதிட, வாதம் முற்றி இருவரும் ஒருவரை ஒருவர் சபித்து கொண்டனர்.

📖 இதனால் பூலோகத்தில் சோழ நாட்டில் புண்ணியகீர்த்தி, சோபனை என்ற தம்பதியினருக்கு பகுகாந்தன் என்ற மகனாகவும், சிரத்தை என்ற மகளாகவும் அவதரித்தனர். அவர்களுக்கு திருமணவயது வந்த போது பெற்றோர் வரன் தேட ஆரம்பித்தனர்.

📖 அப்போது இவர்கள் இருவருக்கும் தாங்கள் யார் என்பது நினைவுக்கு வந்தது. சகோதர நிலையிலுள்ள தாங்கள் திருமணம் செய்து கொண்டால் உலகம் பழிக்குமே என அஞ்சினர். பிரம்மன் தனக்கு சரஸ்வதியால் ஏற்பட்ட சாபத்தால் படைப்பு தொழிலில் ஏற்பட்ட தவறுக்கு ஈசனிடம் வருந்தி அழுதார். பெற்றோருக்கு இவ்விஷயம் தெரிய வந்தது. அவர்களை சமாதானம் செய்யும் விதத்தில், சிவனை நினைத்து உள்ளம் உருகி பிரார்த்தனை செய்தனர்.

📖 சிவபெருமான் அவர்கள் முன் தோன்றி, இப்பிறவியில் சகோதரர்களாக அவதரித்த நீங்கள், திருமணம் செய்வது என்பது இயலாத காரியம், அதர்மம், எனவே, சரஸ்வதி மட்டும் இங்கே தனியாக கோவில் கொண்டிருக்கட்டும்.  இங்கு வரும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தையும், ஞானத்தையும், நல்ல புத்தியையும் வழங்கட்டும் என்று அருள்பாலித்தார். அதன்படி கன்னி சரஸ்வதியாக அவள் கூத்தனூர் ஆலயத்தில் அருள்பாலிக்கிறாள். பிரம்மனுக்கு ஏற்கனவே கோவில் கிடையாது என்ற சாபம் இருப்பதால் அவருக்கு கோவில் வேண்டாம், அவர் சத்தியலோகம் சென்று படைப்புத் தொழிலை கவனிக்க கடவது என்று அருளினார்.

📖 சரஸ்வதி தேவியை தேடி சரஸ்வதி நதி இங்கே வந்தது. இரண்டும் இணைந்து குப்த கங்கையாக காட்சி அளிக்கிறது. ( இங்கு கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் வந்தது தனி வரலாறு, அது ஈசனின் திருவிளையாடல், அதை வேறு ஒரு பதிவில் குறிப்பிடுகிறேன்)

தலச் சிறப்பு :

📖 தமிழ்நாட்டிலேயே, சரஸ்வதி தேவிக்கென தனியாக அமைக்கப்பெற்ற ஒரே கோவிலாகும்.

📖 சரஸ்வதி தேவி குடியிருக்கும் கருவறைக்கு மேலே ஐந்து கலசங்களுடன் ஒரு கோபுரம் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் சரஸ்வதி தேவி வெண் தாமரைப் பூவில் அமர்ந்திருக்கிறார். வெண்பட்டு உடுத்தியிருக்கிறார். வலது கரத்தில் சின்முத்திரையுடனும், இடது கரத்தில் புத்தகத்துடனும், வலது மேல் கையில் அட்சர மாலையுடனும், இடது மேல் கையில் அமுத கலசத்துடனும், ஜடாமுடியுடனும் காட்சி தருகிறார்.

📖 இவ்வூர் இரண்டாம் ராஜ ராஜ சோழனால் தன் அவைப்புலவரான ஒட்டக்கூத்தருக்கு தானமாக வழங்கப்பட்டது. எனவே அவரது பெயரால் 'கூத்தனூர்' ஆனது. ஒட்டக்கூத்தர் தான் இக்கோவிலை பனர்நிர்மானம் செய்தார் என்று தலபுராணம் சொல்கிறது.

பிரார்த்தனை :

📖 பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அக்க்ஷாராப்யசம் செய்விக்கப்படுகிறது.

📖 பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்வதும், வேலைக்கான போட்டித்தேர்வு எழுதுபவர்களும், வெளிநாட்டுக்கு மேல்படிப்பிற்கு செல்பவர்களும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

📖 கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வாரி வழங்குவாள் என்ற நம்பிக்கை உள்ளது.

ஓம் ஸ்ரீ மஹா சரஸ்வத்யை நம:

வெள்ளி, 19 அக்டோபர், 2018

வீட்டு பூஜை குறிப்புகள்_80

வீட்டு பூஜை குறிப்புகள் 80

1. தினசரி காலையும், மாலையும் தூய மனதுடன் சில நிமிடங்களாவது கடவுள் பெயரை உச்சரித்தல் வேண்டும்.

2. தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

3. நம் வீட்டின் கிழக்குப் பக்கம் துளசிச் செடி, வேப்ப மரம் இருக்க வேண்டும். அதனால் எந்தவித நோயும் வராது. விஷ ஜந்துக்களும் நம்மை அண்டாது. தூய்மையான காற்றும் கிடைக்கும்.

4. வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும். அங்கு ஆன்மீக அதிர்வுகள் ஏற்படாது. மிகக் குறைந்த பூஜைக்கு பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

5. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ள படம் ஒன்றை கிழக்குப் பார்த்து மாட்டி வைத்தால், அது வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளை சிறிது சிறிதாக நீக்கும்.

6. செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களில் பூறை அறையை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டும். மார்பிள், கிரானைட் தரைகளாக இருந்தால் ஈரத்துணியால் துடைக்க வேண்டும். அமாவாசை, பவுர்ணமி, வருடப்பிறப்பு போன்ற பண்டிகை நாட்களுக்கு முதல் நாளும் இவ்வாறு செய்ய வேண்டும்.

7. நமது வலது உள்ளங்கையில் மகாலட்சுமி இருப்பதால் காலை எழுந்தவுடன் வலது உள்ளங்கையை பார்க்க வேண்டும். இது துவாதசன தரிசனம் எனப்படும்.

8. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

9. அமாவாசை, பவுர்ணமி, மாதப்பிறப்பு, ஜன்ம நட்சத்திரம் ஆகிய தினங்களில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க கூடாது.

10. பொதுவாக நெற்றிக்கு திலகமிடாமல் பூஜை செய்யக்கூடாது.

11. பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

12. கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது. மற்றவர்கள் தேங்காய் உடைக்கும் இடத்தில் இருக்கவும் வேண்டாம்.

13. சாமி படங்களுக்கு வாசனை இல்லாத பூக்களைக் சூடக்கூடாது.

14. வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

15. வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடுவது தான் நல்லது. நாம் அணைக்கக் கூடாது.

16. அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், மாலை ஐந்தரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலன்களும் நிச்சயம் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் எவர்சில்வர் விளக்குகளைப் பூஜை அறையில் விளக்கேற்றப் பயன்படுத்தக் கூடாது.

17. நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.

18. ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

19. விளக்கேற்றும் போது மற்றவர்கள் ஏற்றி வைத்த விளக்கின் மூலமாக நம் விளக்கை ஏற்றக்கூடாது. தீப்பெட்டி மூலமாக தான் விளக்கேற்ற வேண்டும்.

20. ஓம் என்ற மந்திரத்தை பூஜை அறையில் பத்மாசனத்தில் அமர்ந்து ஒருவர் தொடர்ந்து கூறி தியானம் செய்து வந்தால் அவரை எப்பேர்ப்பட்ட வினைப்பயனும், வியாதியும் நெருங்காது.

21. வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்.

22. சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.

23. ருத்ரம், சமகம் போன்றவற்றை வீட்டில் காலையில் தினமும் கேட்பது நல்லது.

24. நாம் வீட்டில் கடவுளை வணங்கும்போது நின்றவாரே தொழுதல் குற்றமாகும். அமர்ந்தபடி தான் தொழுதல் வேண்டும்.

25. யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.

26. பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

27. பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.

28. பூஜை அறையில் தெய்வப்படங்களை வடக்குப் பார்த்து வைத்தால் சாபமுண்டாகும்.

29. விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

30. ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

31. ஈர ஆடையுடன் வழிபட நேருமானால் ஈர உடையை, ஓம் அஸ்த்ராய பட் என்ற 7 முறை கூறி உதறி உதடுத்தலாம்.

32. சுப்ரபாதத்தை தினமும் காலை வேளையில் மட்டுமே கேட்க வேண்டும். அவ்வாறு கேட்க முடியாத நிலையில் மாலையில் கேட்பது அவ்வளவு உசிதமானதில்லை எனப்படுகிறது.

33. பகவானின் மந்திரத்தை சொல்லி பிரார்த்திக்க தெரிந்தவர்களுக்கு எப்போதும் எல்லாமே வெற்றிதான். காலையில் விழித்தவுடன் நாராயணனையும் இரவு தூங்கு முன் சிவபெருமானையும் நினைக்க வேண்டும்.

34. கஷ்டங்கள் நீங்க நினைத்தது நடக்க எளிய வழி தீபம் ஏற்றுவதுதான் தீப ஒளி இருக்குமிடத்தில் தெய்வ அணுக்கள் நிறைந்திருக்கும். வீட்டில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தீபம் ஏற்றி வைக்கலாம்.

35. தீபத்தில் உள்ள எண்ணெய் தான் எரிய வேண்டுமே தவிர திரி அல்ல. திரி எரிந்து கருகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

36. விளக்கை ஏற்றும்போது வீட்டில் பின் வாசல் இருந்தால் அதன் கதவை சாத்தி விட வேண்டும்.

37. காலையில் நின்று கொண்டு செய்யும் ஜெபத்தால் இரவில் செய்த பாவமும், மாலையில் உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜெபத்தால் பகலில் செய்த பாவமும் தொலைகிறது.

38. விளக்கு எரிந்து கொண்டிருக்கும் போது கைவிரலால் எண்ணெய்யிலுள்ள தூசியை எடுப்பதோ திரியை தூண்டுதோ கூடாது. 39. எரிந்து கொண்டிருக்கும் தீபத்தை ஆண்கள் அணைக்கக் கூடாது.

40. ஆண்கள் தெய்வங்களை வழிபடும்போது தையல் உள்ள உடைகளை அணியக் கூடாது.

41. ஈரத்துணியை உடுத்திக் கொண்டு பூஜைகள், ஜபங்கள் செய்யக்கூடாது.

42. வாழைப் பழத்தில் பத்தியை சொருகி வைக்கக் கூடாது.

43. தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.

44. புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

45. மா இலை கட்டுவதால் பல தோஷங்கள் நீங்கும். மா இலை தோரணங்களுக்கு பதிலாக பிளாஸ்டிக், பித்தளை முதலியவற்றால் மாவிலை போன்று தோரணம் கட்டலாகாது.

46. தெய்வப் படம், குத்து விளக்குளில் மின் வயரால் அலங்காரம் செய்யக்கூடாது.

47. தினசரி பிரார்த்தனை என்பது வீட்டு வாசலில் ஓடி வரும் தெளிந்த ஆறு போன்றது. யார் ஒருவர் அதில் தன்னை சுத்தி செய்து கொள்கிறானோ அவர் தன்னை நிர்மலமாக்கிக் கொள்கிறார்.

48. வீட்டில் பூஜை செய்து முடித்ததும் துளசியை கையில் வைத்துக் கொண்டு என் பக்தன் எங்கு சென்றாலும் நான் அவனைப்பின் தொடர்ந்து செல்வேன் என பகவான் கூறியுள்ளார். அதனால் ஒருவர் கையில் துளசி இருக்கும் வரை விஷ்ணுவின் துணை அவருக்கு உண்டு.

49. தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.

50. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.

51. வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.

52. நிர்மால்யம் என்பது பூஜையின் முதல் நாள் போட்டு வாடிய புஷ்பங்களை குறிக்கும். நிர்மால்யங்களை காலில் படாமல் கண்களில் ஒற்றிக் கொண்டு தாம்பாளம், கூடையில் போட்டு வைத்திருந்து ஓடும் தண்ணீரில் விட வேண்டும்.

53. செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.

54. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

55. பெரியவர்களும், சிறுவர்களும் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் ஆகியவற்றை வாய்விட்டுத் தினமும் படிக்க வேண்டும். வாய்விட்டு படிப்பதால் குரல் உறுப்புகள் பலம் கொள்ளும். அதனால் மார்பு ஆரோக்கியம் பெறும். சுவாசப் பைகளுக்கும் நல்லது.

56. பூஜை செய்யும் நேரத்திலாவது பெண்கள் ஸ்டிக்கர் போட்டு அணியாது குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

57. பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் போட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.

58. வெள்ளியன்று குத்து விளக்கிற்கு குங்குமம், சந்தனம் பொட்டிட்டு, பூ சார்த்தி, குங்குமம், புஷ்பம், மஞ்சள் அட்சதையால் குத்து விளக்கு பூஜை செய்வது குடும்ப நலத்திற்கு நல்லது.

59. வீட்டில் துளசியை வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் துளசியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது துளசியுடன் தானம் கொடுக்க வேண்டும். துளசியோடு தரப்படாத தானம் வீண்.

60. பூஜை அறையில் தெய்வங்களுக்குப் படைப்பதற்கு வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். சீவல் பொட்டலத்தை வைக்கக் கூடாது. வெற்றிலையை இரட்டைப் படை எண்களில்தான் வைக்க வேண்டும். இரண்டு வெற்றிலைக்கு ஒரு பாக்கு என்ற கணக்கில் எவ்வளவு வெற்றிலை வைக்கிறோமோ அந்த அளவு பாக்கு வைக்க வேண்டும்.

61. வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

62. வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

63. சாமிக்கு படைக்கும்போது வாழை இலை போட்டு படைக்கிறோம். அப்படி வாழை இலை போடும் போது வாழை மரத்திலிருந்து நறுக்கப்பட்ட பகுதி சுவாமி படத்திற்கு வலது பக்கம் வரவேண்டும்.

64. மாலையில் வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு முன் தான தருமம் செய்வதென்றால் செய்து விடுங்கள். விளக்கு ஏற்றிய பின் தான தருமம் செய்யாதீர்கள்.

65. குழந்தைகளுக்கு ஆன்மிக வழிகாட்டும் ஸ்லோகங்களும், நமது நீதி நூல்களில் உள்ள நல்ல பழக்க வழக்கங்களும் கற்றுத் தர வேண்டும்.

66. பெண்கள் தலைமுடியை வாரி முடிந்து முடிச்சு போட்டுக் கொள்ள வேண்டும். தலையை விரித்து போட்டு இருந்தால் லட்சுமி தேவி தங்க மாட்டாள்.

67. பூஜை செய்யும்போது கடவுள் உருவங்களின் பாதங்கள் மற்றும் முகத்தைப் பூக்களால் மறைத்து விடக்கூடாது. முகமும், பாதமும் திறந்து நிலையில் இருக்க வேண்டும்.

68. செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.

69. பூஜை அறையிலோ, வீட்டிலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைக்க வேண்டும். வணங்குபவர் தெற்குப் பகுதியில் வடக்குத் திசையைப் பார்த்தவாறு அமர்ந்து வணங்கலாம். தெற்கு நோக்கி தெய்வப் படங்களை வைக்கக் கூடாது. கிழக்குப் பக்கம் முடியாவிட்டால் தெற்குப் பக்கத்தைத் தவிர பிற திசைகளைப் பார்த்து படங்களை வைக்கவும்.

70. பூஜை செய்பவர் தெற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளைப் பார்த்து கொண்டு உட்கார்ந்து பூஜை செய்யக்கூடாது.

71. பூஜை அறையில் அதிக படங்களையும், தெய்வச் சிலைகளையும் வைக்கிறோம் என்பதற்காக அவற்றை நெருக்கமாக வைக்கக் கூடாது. ஒவ்வொரு தெய்வச் சிலைக்கும் இடையில் போதிய இடம் விட்டு வைக்க வேண்டும்.

72. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

73. அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.

74. திங்கட்கிழமையன்று பஞ்சால் செய்யப்பட்ட விளக்கு திரியை கையால் தொடக்கூடாது.

75. தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

76. எரியும் விளக்கில் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தன் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.

77. சாமி படங்களில் உலர்ந்த பூக்களை விட்டு வைக்கக் கூடாது.

78. விஷ்ணுவை வணங்கி வீடு திரும்புபோது லட்சுமி தேவியும் நம்முடன் நம் வீட்டுக்கு வருகிறாள் என்பது ஐதீகம். ஆகவே விஷ்ணு கோவிலிலிருந்து வீடு திரும்புமுன் அங்கே உட்காரக் கூடாது.

79. ஸ்வஸ்திக், ஸ்ரீ சக்கரம், ஓம் மற்றும் திரிசூலம் சின்னங்களை வாசல் கதவிலோ அல்லது வாசலின் உள்ளே நேர் எதிரேயோ ஒட்டி வைப்பது பாதுகாப்பிற்கும், அதிர்ஷ்டத்திற்கும் உதவும். வெளியே செல்லும்போது சட்டைப் பையிலும் வைத்துக் கொள்ளலாம்.

80. வாசலுக்கு நேர் எதிரே வாசலைப் பார்த்து சிரிக்கும் புத்தரை வைப்பது வளமை, வெற்றி, தனலாபம் ஆகியவை அளிக்க வல்லது.

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்....?

ஏன் சபரிமலை ஒரு வித்தியாசாமான வழிபாட்டு ஸ்தலம்....?

*1. உலகின் புனிதப் பயணங்களில் வருடம் தோறும்  சுமார்  40-50 மில்லியன்  பக்தர்களை  கொண்டு......*

 *மெக்கா விற்கு அடுத்த படியாக அதிகம் பயணப்படுகிற இடம் சபரிமலை .*

*2. சைவம் மற்றும் வைணவ பிரிவுகளின் ஒற்றுமை உருவமாக பார்க்கப்படுகிற  புண்ணிய  கோவில் சபரிமலை*

*3. மதுரையில் இருந்து தன் சொந்த அமைச்சர்களால் உயிருக்கு ஆபத்து என கருதி சென்ற  ராஜசேகர பாண்டியன் திருவிதாங்கூர் மன்னனால் உதவப்பட்டு.....*

 *பந்தள தேசத்து மன்னனாக ஆட்சி செய்தான்.*

 *அவனின் வளர்ப்பு மகனே ஐயப்பன் (1194AD)*

*4. ராஜசேகர பாண்டியன்  பம்பை நதிக்கரையில்  வேட்டையாட சென்றபோது.....*

 *கண்டெடுத்த கடவுள் அவதாரமே குழந்தை மணிகண்டன் (ஐயப்பன்).*

*5. 12 வயது வரை மணிகண்டன்  மனித உருவமாக வளர்ந்து  தன அவதார நோக்கம் முடிந்த உடன் தியானம் செய்ய சென்ற இடமே இன்றைய சபரிமலை .*

*6. பந்தள வம்சத்தை சார்ந்த நபர்கள் இன்றும் சபரிமலை செல்வதில்லை.*

*தன் தந்தை ராஜசேகர பாண்டியன் சபரிமலை வந்தால் ஐயப்பன் எங்கு எழுந்து விடுவாரோ  என்று அவர் கால்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.*

 *டஅதனால் தான் அந்த ஐதீகம் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.

7. பந்தள மன்னர் ராஜசேகர பாண்டியன் தன் வளர்ப்பு குழந்தை ஐயப்பனுக்காக செய்ததே திருவாபரண பெட்டி..

இதில் தங்கத்தில் சிறிய வடிவில் புலி,யானை, வாள், மாலை போன்றவை உள்ளன.. ஓலை சுவடிகளை இன்றும் காணலாம்.

8. ராஜசேகர பாண்டியன் தன் மனைவி தலைவலி என்று சொல்லி புலியின் பாலை அடர்ந்த காட்டிற்குள் ஐயப்பனை கொண்டு  வர சொன்னபோது...

 இரண்டு முடிச்சுக்களில் பாதுகாப்பிற்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியதே இன்று இருமுடியாக ஐயப்ப பக்தர்கள் பின்பற்றுகின்றனர்.

9. இந்தியாவில் கோவில் வளாகத்தில் (சன்னிதானத்தில்) அரேபிய முஸ்லிம் வாவர் சுவாமியாக காட்சி அளிப்பது சபரிமலையில் மட்டுமே.. வாவர் ஐயப்பனின் நெருங்கிய நண்பர்..

இந்த சன்னதியின் பூஜைச்சடங்குகள் முஸ்லிம் அர்ச்சகர்களால் செய்விக்கப்படுகிறது.மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டு.

10. ஹரிவராஸனம் விச்வமோஹனம் என்ற புகழ்பெற்ற  கே ஜே யேசுதாஸ் பாடிய பாடலே நடை அடைப்பில் ஐயப்பன் உறங்குவதற்காக இசைக்கப்படுகிறது. இந்த பாடலை எழுதியவர் கம்பங்குடி ஸ்ரீகுளத்துஐயர்.இவர் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி

11. Memoir of the survey of Travancore and Cochin states என்ற ஆங்கிலேயர் 1894 ல் எழுதிய புத்தகத்தில் சபரிமலைக்கு செல்வோர் அப்போதே ஆண்டு தோறும் 15000 என்று குறிப்பிட்டு இருக்கிறார். அப்போதைய மக்கள்தொகை தென் இந்தியாவில் 5 கோடிக்கும் கீழ்.

12. பரசுராமரால் பிரதிஷ்டை பண்ணப்பட்ட  ஐயப்பன் சிலை 1950 ல் தீவிபத்தில் சேதம் அடைந்தது. இன்று அந்த சிலை உருக்கபட்டு கோவில் மணியாக கொடி மரம் அருகே காட்சி அளிக்கிறது.

13. தீவிபத்தை  தொடர்ந்து சிலையை யார் செய்ய வேண்டும் என்ற தேவபிரசன்ன குடவோலை முறைப்படி, ஐயப்பன் சந்நிதியில் சீட்டுப் போட்டு பார்க்கப்பட்டது.

 அதில் மதுரை நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையும் பி.டி.ராஜனும் பெயர்கள் வந்தன. அவர்கள் வழங்கிய விக்கிரகத்தைத்தான் இன்றைக்கும் தரிசித்துக் கொண்டிருக்கிறோம்.

அந்த சிலை கும்பகோணத்தில் அடுத்த சுவாமிமலையில் தேசிய விருது பெற்ற சிற்பக்கலைஞர் ராமசாமி ஸ்தபதியால் செய்யப்பட்டது.

14. கேரளாவில் கோயில்களில் பராமரிப்பு பணிகளோ, முக்கிய மாற்றங்களோ நடத்த வேண்டும் என்றால் கடவுளிடம் அனுமதி கேட்பதற்காக ‘தேவபிரசன்னம்’ என்ற பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

 அதன்படியே இன்றும் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டுமெனில் தேவபிரசன்னம் செய்யப்பட்டு கடவுளின் அனுமதி பெற வேண்டும் என்பது கோவில் நிர்வாகத்தின் முடிவு.
15. Kamakhya Temple (Guwahati, Assam), Lord Kartikeya Temple (Pehowa, Haryana and in Pushkar, Rajasthan) Haji Ali Dargah (Mumbai, Maharashtra) Mangal Chandi Temple, (Bokaro, Jharkhand) Sree Padmanabhaswamy Temple (Malayinkeezhu, Kerala) Patbausi Satra (Barpeta, Assam) Jain Temple (Ranakpur, Rajasthan) போன்ற கோவில்களை போல சபரிமலையும் பெண்களை அனுமதிப்பதில்லை .
16. ஐயப்பனை  சாஸ்தாவாக வழிபடும் முறை தமிழகத்தில் இருப்பதே.

 முக்கியமாக தென் மாவட்டங்களில் அய்யனார்  வழிபாடு மிக பிரபலம்.

அதில் ஆதி சாஸ்தாவாக காட்சி அளிக்கும் இடமே சொரிமுத்து அய்யனார் கோவில் பாபநாசம்,

17. விரத முறையில் உணவை உண்டு அன்னதானம் செய்ய வேண்டும் என்பது சபரிமலை யாத்திரையில் மட்டுமே.  மற்ற முறைகளில் விரதம் என்றால் உணவை உட்கொள்ளாமல் இருப்பது.

18. ஏழை,பணக்காரர்,சாதி, உயர் அதிகாரி,பாமரன் என  பாகுபாடு அன்றி அனைவரையும் சாமியாக பார்ப்பதே சபரிமலையின் தனிச்சிறப்பு.

19. 41 நாட்கள் விரதம் இருக்கும் முறை  சபரிமலை யாத்திரையில் மட்டுமே காணப்பட கூடிய ஒன்று. வேறு எந்த கோவிலிலும் காண முடியாத கடுமையான விரத முறை.

20.  அடர்ந்த காட்டிற்குள் வன விலங்குகள் தாக்கும் அபாயத்திற்கு மத்தியில் நடைபயனமாக 60 கிலோ மீட்டர் செல்வது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மட்டுமே 

21. கேரள கட்டுமான முறையையும் தமிழ்நாட்டின் சாஸ்தா வழிபாட்டையும் இணைத்து இரு மாநிலத்தின் ஒற்றுமை சின்னமாக இருப்பது சபரிமலை

22. மணிகண்டன் கல்வியை குருவிடம் தான் பயில வேண்டும் என்று ஆசைப்பட்ட ராஜசேகர பாண்டியனின் ஆசையே இன்று குரு தத்துவமாக குருசாமியாக ஐயப்ப யாத்திரையில் இருக்கிற வழக்கம்..

 தன்னை காண வேணுமெனில் குரு மூலமாகத் தான் வர வேண்டும் என்று ஆசைப்பட்டவர் ஐயப்பன்

23. மற்ற கோவில்களை போல் தினமும் அல்லாமல்

 ஆண்டில் வெறும் 120 நாட்களுக்கும் குறைவாக நடை திறந்து இருக்கும் கோவில் சபரிமலையே

24. சபரிமலை யாத்திரையை தமிழக மக்களிடையே மிகவும் பிரபல படுத்தியவர்  நவாப் ராஜ மாணிக்கம் பிள்ளை ...

 பாடல்கள் மூலம் பிரபலபடுத்தியவர்கள் வீரமணி சோமு மற்றும் அவர் தம்பி கே வீரமணி.

25. இன்று போல் அடர்ந்த காட்டில் சாலை,
ஹோட்டல்கள் இல்லாத காலத்தில் தமிழக பக்தர்களுக்காக  உணவும் பேருந்து வசதியையும் ஏற்படுத்தி குருவாக  இருந்தவர் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்ட புனலூர் தாத்தா சுப்ரமணிய அய்யர்.

26. ஐயப்ப பக்தர்கள் எருமேலியில் இருக்கும் வாவர் மசூதிக்கு சென்று வாவரை வணங்குவது வழக்கம்.

அதன் பிறகே பெருவழியில் நுழைகின்றனர்.

 எந்த இந்து கோவிலிலும் இல்லாத இந்த முறை சபரிமலையை தனித்துவமாக காட்டுகிறது.

27. சபரிமலைக்கு மற்ற கோவில்களை போல் குறிப்பிட்ட வருடங்களுக்கு பிறகு கும்பாபிஷேகம் செய்கிற வழக்கம் இல்லை.

 ஆண்டுதோறும் வரும் பக்தர்களின் பக்தியாலும் அதன் சக்தி குறையாமல் ஒவ்வொரு வருடமும் அதன் சைதன்யம் கூடிக்கொண்டே  செல்வதாக நம்பப்படுகிறது.

28. பரசுராமர் உருவாக்கிய சிறிய ஆலயத்தை மாற்றி அமைத்து பதினெட்டு படிகளோடு உருவாக்கியவர் பந்தள அரசர் ராஜசேகர பாண்டியன்.

29. சபரிமலையை தவிர மற்ற கோயில்களில் சாஸ்தாவை வீராசனத்தில் காணலாம்.

 அதன்படி, சாஸ்தாவின் ஒரு கால் நிலத்திலும், மறு கால் மடித்தபடியும் இருக்கும்.

மடித்த காலையும் இடுப்பையும் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் பட்டம் வீரப்பட்டம் எனப்படும்.

30. சபரிமலையில் மாளிகைபுறத்து அம்மன் சன்னதி என்பது ஐயப்பன் வதம் செய்த பெண் மகிஷியின் தூய்மை வடிவமே.

 வதம் செய்த பிறகு ஐயப்பன் தன்னை மணந்து கொள்ள விருப்பம் சொன்ன போது

 “என் அருகிலேயே நீ இருக்கலாம்.

 என்றும் எப்போது என்னை ஒரு கன்னிசாமியாவது வராமல் இருக்கிறாரோ....

 அன்று உன்னை மணந்து கொள்கிறேன்” என்று கூறியவன் பிர்மச்சர்யம் கொண்ட ஐயப்பன்..

 அந்த மாளிகைபுரத்து அம்மன் இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறாள்..

 ஆண்டு தோறும் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது...  சுவாமியே சரணம் ஐயப்பா

வியாழன், 18 அக்டோபர், 2018

அருள்மிகு ஓதிமலை முருகன் கோவில்





அருள்மிகு ஓதிமலை முருகன் கோவில், இரும்பறை, கோவை மாவட்டம்,

கோவையில் சித்தர்கள் வாழும் ஓதிமலை,

புன்செய் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. எழுபது டிகிரி கோணத்தில் செங்குத்தாக மலை அமைந்துள்ளது.இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்.

இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.

ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர். ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் - அதே கோலத்தில்... கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்... குமாரபாளையம் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.

சஷ்டி நாட்களில் அதிகாலை கோவில் திறந்து பூஜையும் நடைபெறும். ஆதலால் சஷ்டி நாட்களை தேர்வு செய்துகொள்ளலாம். இளையவர்கள், இன்னும் திறன் மிகுந்தவர்கள் கொஞ்சம் எடையை தூக்கி ஏற முடியும் என நினைப்பவர்கள், கோவில் திருப்பணிக்காக மணல் மற்றும் சிமெண்ட் சிறு மூட்டைகளாக எடுத்துச்செல்லும் அளவில் கட்டி அடிவாரத்தில் வைத்திருக்கிறார்கள். ஒரு செங்கல்லையாவது கொண்டு செல்லலாம். உடல் பயிற்சிக்காக  அவற்றையும் மேலே கொண்டு சேர்க்கலாம். கோவிலுக்கு போகின்றவர்கள் தயவு செய்து தனி வாகனங்களில் போக வேண்டாம். இன்னும் இந்த மலை இயற்க்கை சூழலுடன் இருக்கிறது. பேருந்தோ அல்லது சைக்கிள்களிலோ சென்று  வாகனப்புகையை தவிர்த்து  சூழலை காக்க வேண்டுகிறார்கள்

இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் “விபூதிக்காடு – தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..

இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.

பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்பட்டுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்  சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..

ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. இங்கு மொத்தம் 1800க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. இது சித்தர்கள் வாழ்ந்து வரும், தவமிருக்கும் மலையாகும். அமைதியாக முருகனை தியானித்தபடி மலை ஏறினால் சித்தர்கள் கண்ணில் படுவார்கள், அவர்கள் ஆழ்நிலை தியானத்தில் இருப்பார்கள். அவர்களை தொந்தரவு செய்யாமல் மேலே ஏறி முருகனை தரிசியுங்கள்.

எங்கே இருக்கிறது?:

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கிறது ஓதிமலை. கோவையில் இருந்து அன்னூருக்கு பேருந்து வசதி உண்டு. கோவை- அன்னூர் சுமார் 35 கி.மீ. தொலைவு. அன்னூர் ஜங்ஷன் சாலையில் இருந்து ஓதிமலை ரோடு துவங்கும். இங்கிருந்து சுமார் 16 கி.மீ. பயணித்தால் ஓதிமலை அடிவாரம் வரும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஓதிமலைக்கு சுமார் 26 கி.மீ. தொலைவு.

எப்படிப் போவது?:

கோவை தவிர மேட்டுப்பாளையம், திருப்பூர், அவினாசி ஆகிய ஊர்களில் இருந்தும் அன்னூருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. அன்னூரில் இருந்து ஓதிமலைக்குப் பேருந்து வசதி உண்டு.

நடைதிறப்பு :

நண்பகல் 11:00 மணி - மாலை 4:00 வரை (மதிய பூஜை நண்பகல் 12:00 மணி).

ஆலயம் திறந்திருக்கும் தினங்கள்: திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, பௌர்ணமி மற்றும் அமாவாசை, கிருத்திகை ஆகிய தினங்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். விசேஷ தினங்கள் விதிவிலக்கு.

ஓம் முருகா, வடிவேல் முருகா, வெற்றிவேல் முருகா...

சனி, 13 அக்டோபர், 2018

நவராத்திரி_உருவான_கதையும்_கொலுபடிகளின்_தத்துவமும்

தினம் இரு தகவலில் இன்றைய முதல் தகவல் இதோ:-

நவராத்திரி_உருவான_கதையும்_கொலுபடிகளின்_தத்துவமும்

*நவராத்திரி.* பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது.

இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் இப்போது தெரிந்துக் கொள்ள இருக்கிறோம்.

அக்டோபர் மாதம் 8.10.2018 அன்று மகாளய அமாவாசையாக இருப்பதால் அன்றைய தேதியிலேயே நல்ல நேரத்தை பார்த்து கொலு வைக்க வேண்டும்.

*நவராத்திரி_உருவான_கதை*

ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.

அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

“போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

*கொலுவில்_பொம்மைகள்_வைக்கும்_வழக்கம்_உருவான_சம்பவம்*

தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

“நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர்.

தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.

காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.

*கொலுபடிகளின்_தத்துவம்*

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

*முதல்_படி,* அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.

*இரண்டாம்_படியில்* – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

*மூன்றாம்_படியில்* - மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

*நான்காவது_படியில்* - நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

*ஐந்தாம்_படியில்* - ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

*ஆறம்_படியில்* - ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

*ஏழாம்_படியில்* – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

*எட்டாம்_படியில்* - தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.

*ஒன்பதாம்_படியில்*– முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.. இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது.

ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களை குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.

*பூஜை_பாடல்கள்*

துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும் சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை - ஸ்லோகங்களை படிக்கலாம் அல்லது கேசட்டில் ஒலிக்கவும் செய்யலாம்.

அத்துடன் தினமும் ஒரு சுமங்களி பெண்களுக்காவது விருந்து படைக்க வேண்டும். இயலாதவர்கள் நவதானியங்களால் செய்யும் சுண்டல்களை ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு தர வேண்டும்.

ஒன்பது நாளில், உங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஒன்பது பெண்களை அழைத்து அவர்களுக்கு உணவு அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து, மஞ்சல் குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு போன்றவை தர வேண்டும்.

*விஜயதசமி_என்ற_பெயர்_காரணம்*

பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை பொருக்காத சிலர் வீண் சண்டைக்கு இழுப்பதுதானே சிலரின் குணம். இதை யாராலும் மாற்ற முடியாது அல்லவா. அதுபோல் துரியோதனனும் பாண்டவர்களை போருக்கு அழைத்தான்.

இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், “நம் விஜயன், தசமி அன்று கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான்” என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து“விஜயதசமி” என்ற பெயர் ஏற்பட்டது. மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் “ஆயுதபூஜை” என்ற பெயரும் ஏற்பட்டது.

*இச்சாசக்தி_ஞானசக்தி_கிரியாசக்தி_உருவான_கதை*

ஒரு சமயம், மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. திரும்ப உலகத்தை உருவாக்கும் பெரிய கடமை இறைவனுக்கு உண்டானது. அதனால் இச்சா சக்தி-விருப்பம் நிறைவேறுதல், ஞான சக்தி- ஞானம்,அறிவுபெறுதல், கிரியா சக்தி- ஆக்கம், உருவாக்குதல் என்ற பூலோக மக்களுக்கு தேவையானதை முதலில் உருவாக்கினார் என்கிறது புராணம். இதனால் நவராத்திரி அன்று முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறுகிறோம்.

*சரஸ்வதி_பூஜைமுறை*

சரஸ்வதி பூஜையன்று பூஜை ஆரம்பிக்கும் முன் மஞ்சளில் விநாயகரை பிடித்து விநாயகருக்கு குங்கும்,அறுகம்புல் மலர்கள் சமர்பிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் கல்வி அல்லது கணக்கு புத்தகங்களில் பொட்டு வைத்து சரஸ்வதிதேவி படத்தின் முன் வைக்க வேண்டும்.
வீடுகளிலும், அலுவலகங்களிலும் சரஸ்வதி படத்துக்கு சந்தனம் தெளித்து மஞ்சள்-குங்குமம் பொட்டு வைத்து, மல்லிகை பூ, வெண்தாமரை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

*நெய்வேதியம்*

சுண்டல், சக்கரைப் பொங்கள், வடை, பொறி, கடலை, அவல், நாட்டுசக்கரை, பழங்களையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

*ஆயுத_பூஜை*

ஆயுத பூஜையில் அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும். நம் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். காரணம், அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.

*பூஜை_மந்திரம்*

கணபதி மந்திரமும், சரஸ்வதிக்கு உகந்த காயத்திரி மந்திரங்களும் சொல்லலாம். இந்த மந்திரங்களை சொல்வதால் பூஜை செய்த பலன் இன்னும் சிறப்பாக கிடைக்கும்.

*ஓம்கணபதி_காயத்ரி*

ஓம் ஏகதந்தாய வித்மகே!
வக்ர துண்டாய தீமகி!
தன்னோ தந்தி ப்ரசோ தயாத்!

*சரஸ்வதி_மந்திரம்*

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
விஜயதசமி

மறுநாள் விஜயதசமி அன்று நல்ல நேரம் பார்த்து பூஜையில் வைத்த புத்தகத்தையும், பொருட்களையும் உபயோகப்படுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்கவும் விஜயதசமி சிறந்த தினமாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த தினம் சிறப்பானது. இப்படி நல்ல செயல்களை விஜயதசமி அன்று செய்தால் அதற்குரிய பலன் வைரம் போல் ஜொலிக்கும்.

ஏற்றமான வாழ்க்கை அமைய கலைவாணியின் அருளை பெறுவோம். .

தாம்பூலம் தரும் முறை


#நவராத்திரி #ஸ்பெஷல் !

#தாம்பூலம் #தரும் #முறை. !
                                                                                    தாம்பூலம் என்பது வெற்றிலை,பாக்குக்கு வழங்கப்படும் பொதுப் பெயர். வெற்றிலையில் முப்பெருந்தேவியரும் வாசம் செய்கின்றனர்
உயிர்களிடையே, தயை , ஈகை முதலிய குணங்களை விருத்தி செய்யும் முகமாக, மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளுள் ஒன்று அதிதி போஜனம்.'அதிதி' என்பவர், உறவினரோ, அறிவித்துவிட்டு வரும் விருந்தினரோ அல்ல. முன்பின் தெரியாத யாராவது, 'பசி ' என்று வந்தால், உணவிடுதலே, அதிதி போஜனம் ஆகும். அவர் கிருஹஸ்தர் (இல்லறத்தார்) ஆனால் அவர் உணவு எடுத்துக் கொண்ட பின் தாம்பூலம் அளித்தல் வேண்டும்.

வீட்டிற்கு சுமங்கலிப் பெண்கள் வந்தால், கட்டாயம் தாம்பூலம் தருதல் வேண்டும். குறைந்த பட்சம் குங்குமம் மட்டுமாவது தர வேண்டும். 
வெற்றிலை சத்தியத்தின் சொரூபம். அதனால்தான், நிச்சயதாம்பூலத்தன்று வெற்றிலை பாக்கை மாற்றிக் கொள்கின்றனர். நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நிறுத்துவது, வாக்குத் தவறிய கொடும்பாவத்தைத் தேடித் தரும்.

எல்லா தெய்வபூஜைகளிலும் தாம்பூலத்திற்கு முக்கிய இடம் உண்டு. நிவேதனத்திற்குப் பின் தாம்பூலம் படைத்து வழிபட வேண்டும். சாக்தர்கள் தங்கள் பூஜையில், தேவிக்கு, முக்கோணவடிவிலான தாம்பூலம் சமர்ப்பித்து வழிபடுகிறார்கள். அம்பாளை மகிழ்விக்கும் செயல்களில் ஒன்று தாம்பூலம் தருதல்.
தாம்பூல பூரித முகீ..............என்று,லலிதா சஹஸ்ரநாமம் தேவியைப் புகழ்கிறது.இதன் பொருள்'தாம்பூலம் தரித்ததால்,பூரிப்படைந்தமுகத்தினை உடையவள்'என்பதாகும்.
விழாக் காலங்களிலும் பண்டிகை நாட்களிலும் பெண்கள் ஒருவருக்கொருவர் தாம்பூலம் வழங்கிக் கொள்வதன் மூலம், மறைமுகமாக, 'நாம் இருவரும் தோழிகள், நாம் ஒருவருக்கொருவர் உண்மையாக இருக்க வேண்டும், என்று ஒப்புக் கொள்கின்றனர்.

 தானங்கள் செய்யும் போது,(ஸ்வர்ண தானம், வஸ்திர தானம் போன்றவை) வெற்றிலை பாக்கையும் சேர்த்துத்தருவதே சம்பிரதாயம்.

திருமணங்களில் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் தாம்பூலப்பை முக்கிய இடம் வகிக்கிறது.

விசேஷங்களுக்கு அழைக்கச் செல்லும்போதும் தாம்பூலம் வைத்து அழைப்பது மிகுந்த மரியாதைக்குரிய செயலாகக் கருதப் படுகிறது.விருந்து உபசாரங்கள் தாம்பூலத்துடனேயே நிறைவு பெறுகின்றன.

வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும் என்றாலும் இது சத்வ குணம் கொண்டதல்ல. ஆகவேதான் பிதுர் தினங்களில் வெற்றிலை போடலாகாது.

பண்டிகை நாட்களில் வழங்கப்படும் தாம்பூலம்.
இது கீழ்க்கண்ட பொருட்களை உள்ளடக்கியது.

1. வெற்றிலை 2. பாக்கு 3. மஞ்சள், குங்குமம், 4. சீப்பு 5. முகம் பார்க்கும் கண்ணாடி 6. வளையல் 7. மஞ்சள் கயிறு 8. தேங்காய் 9. பழம் 10. பூ 11. மருதாணி 12.கண்மை13. தட்சணை14. ரவிக்கைத்துணி அல்லது புடவை.

இதில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு அர்த்தம் உண்டு. வெற்றிலை, பாக்கு, கொடுப்பதன் அர்த்தத்தை முன்பே பார்த்தோம்.

மஞ்சள்,குங்குமம்,மஞ்சள் கயிறு சுமங்கலித் தன்மையை வழங்குகிறது.

சீப்பு, கணவனின் ஆயுளை விருத்தி செய்வதற்காக,

கண்ணாடி, கணவனின் ஆரோக்கியம் காக்க,

வளையல், மன அமைதி பெற‌

தேங்காய், பாவம் நீங்க, ( மட்டைத் தேங்காய் அளிப்பதே சிறந்தது ஆனால் அதை உரிக்கும் எந்திரம் பல வீடுகளில் இல்லாத நிலையில், உரித்த தேங்காய் கொடுப்பதே நல்லது.)

பழம்,அன்னதானப் பலன் கிடைக்க,

பூ, மகிழ்ச்சி பெருக,

மருதாணி, நோய் வராதிருக்க,

கண்மை ,திருஷ்டி தோஷங்கள் அண்டாதிருக்க, 

தட்சணை லக்ஷ்மி கடாட்சம் பெருக,

ரவிக்கைத்துணி அல்லது புடவை வஸ்திர தானப் பலன் அடைய‌
வழங்குகிறோம்.

மனிதர்களிடையே பிறர்க்குக் கொடுத்து மகிழும் வழக்கம் வரவே இம்மாதிரி சம்பிரதாயங்கள் ஏற்பட்டன. காலப் போக்கில், ஆடம்பரத்திற்காகவும், தங்கள் வசதியைப் பிறருக்குக் காட்டவும் கொடுப்பதாக மாறி விட்டது சோகமே.

தாம்பூலம் வழங்குவதன் நோக்கம் அம்பிகையைத் திருப்தி செய்வதே. அனைவருக்கும் தாம்பூலம் வழங்கும் போது அம்பிகையும் ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தாம்பூலம் பெற்றுக்கொண்டு நம்மை வாழ்த்துவாள். தேவி எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். நமக்குப் பூக்கள் தரும் பூக்காரி, நம் வீட்டுப் பணிப்பெண், ஏன், தெருவில் குப்பைகள் சுத்தம் செய்பவர் இப்படி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அப்படி இருக்க, தாம்பூலம் தருவதில் பேதம் பார்ப்பது, தேவியை அவமதிப்பது போலாகும்.  வயதான சுமங்கலிகள், பெண்கள், குழந்தைகள் என்பது ஒப்புக்கொள்ளக்கூடிய பிரிவினை. இது தவிர்த்து, அந்தஸ்துவேறுபாடு,பழைய கோபதாபங்கள் இவற்றை மனதில் வைத்துத் தரும் தாம்பூலங்களுக்கு எந்தப் பலனும் இல்லை.

மேற்குறிப்பிட்ட எல்லாப் பொருட்களையும் வசதியுள்ளவர் தரலாம். இல்லாதோர் வருந்த வேண்டியதில்லை. நம் எல்லோர் இதயத்துள்ளும் இருக்கும் தேவி, எல்லாம் அறிவாள். 

கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து, கிளர்ந்து, ஒளிரும்
ஒளியே! ஒளிரும் ஒளிக்கிடமே எண்ணில் ஒன்றுமில்லா "

என்கிறார் அபிராமி பட்டர்.

நவராத்திரிகளில் 'கன்யாபூஜை' செய்து, சிறு பெண்குழந்தைகளுக்கு போஜனம் அளித்து, நலங்கு இட்டு, உடை, கண்மை, பொட்டு, பூ, பழத்தோடு கூடிய தாம்பூலம் அளிப்பது அளவற்ற நன்மை தரும். அவர்களுக்கு நாம் அளிக்கும் பொருட்கள், நம் மூதாதையரைத் திருப்தி செய்து, நம் சந்ததியரை வாழ்வாங்கு வாழ வைக்கும்.

தம்பதி பூஜை, சுமங்கலி பூஜை (சுமங்கலிகளுக்குப் உணவளித்து, நலங்கு இட்டு, பின் தாம்பூலம் தருதல், இதையே சற்று விரிவாக, 'சுமங்கலிப் பிரார்த்தனை எனச் செய்கிறோம்) முதலியவையும் சிறந்தது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், தாம்பூலம் கொடுப்பதாலும் பெறுவதாலும் சுபிட்சம் விளையும். சிலர், சுபகாரியத் தடை நீங்க பூஜைகளும் பரிகாரங்களும் செய்பவர்கள் தாம்பூலம் தந்தால் பெறுவதில்லை. அந்த தோஷங்கள் தம்மைத் தொடரும் என்ற பயமே காரணம். அடுத்தவருக்கு நன்மை தராத எந்தச் செயலும், சம்பந்தப்பட்டவருக்கு நன்மை அளிப்பதில்லை என்பதை உணர வேண்டும்.

எல்லா உயிர்களிலும் தேவியின் அம்சம் உள்ளது. ஆகவே, யாராவது தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைத்தால், கட்டாயம் போக வேண்டும். வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்தாலும் அலட்சியப்படுத்தாமல் தாம்பூலம் வாங்கிக் கொள்ள வேண்டும்.

பண்டிகை நாட்களில் பலரும் கூடி இருக்கும் நேரத்தில், கணவனை இழந்த பெண்கள் இருந்தால் அவர்கள் மனம் நோகாமல், அன்பளிப்புப் பொருட்களை வழங்கி,அவர்களை நமஸ்கரித்து, அவர்கள் ஆசியைப் பெறுவது சிறந்தது.

தாம்பூலம் தரும் முறைகள்:

1. தாம்பூலம் கொடுப்பவர் கிழக்குப் பார்த்து நின்று கொண்டு கொடுக்க வேண்டும்.

2. பெற்றுக்கொள்பவர் அவர் எதிரே சிறு மணை அல்லது பாய் போட்டு அமர்ந்து கொண்டு வாங்கவேண்டும். நலங்கு இடுவதானால், தாம்பூலம் பெற்றுக்கொள்பவருக்கு, பிசைந்த மஞ்சள் கொஞ்சம் தந்து, கால் அலம்பி வரச் சொல்லி, பிறகு உட்கார்த்தி வைத்து நலங்கு இடவும்.
பானகம் முதலிய பானங்களைக் குடிக்கத் தரவும். இல்லையென்றால் தண்ணீராவது தர வேண்டும்.

3. பிறகு, மஞ்சள், குங்குமம், சந்தனம் தந்து எடுத்துக் கொள்ளச் சொல்ல வேண்டும்.                       
4. தேங்காய் அளிப்பதானால், அதில் லேசாக மஞ்சள் பூசி ஒரு குங்குமப் பொட்டு வைத்து, அதைத் தாம்பூலப் பொருட்களோடு சேர்த்து, அம்மன் முன் காட்டவும். தேங்காயின் குடுமிப் பகுதி அம்பாளைப் பார்த்து இருக்க வேண்டும். அம்பாளின் அருள் அதில் இறங்கி, கொடுப்பவரும் வாங்குபவரும் நலம் பெற வேண்டிக்கொள்ளவும்.

5. பின் தாம்பூலப் பொருட்களை ஒரு தட்டில் வைத்துத் தரவும்.

6.பெற்றுக் கொள்பவர் வயதில் இளையவர் என்றால்,  அவர், கொடுப்பவருக்கு நமஸ்காரம் செய்து வாங்கிக் கொள்ளவும்.

7.வயதில் பெரியவருக்குத் தாம்பூலம் கொடுப்பதானால், தாம்பூலம் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்யவும்.

8. கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் தாம்பூலத்தை முறத்தில் வைத்து, மற்றொரு முறத்தால் மூடிக்கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. முறம் மஹாலக்ஷ்மியின் அம்சமாகக் கருதப்படுகிறது. கருகமணியும் தாம்பூலத்தில் வைத்து வழங்குகின்றனர்.

புடவைத்தலைப்பால் முறத்தை மூடி, தாம்பூலம் வழங்குகின்றனர்.  பெற்றுக் கொள்பவரும் அவ்வாறே பெறுகிறார்.

                                       
தர்மம், ஈகை, தயை, சாந்தி போன்ற குணங்கள் உலகில் பரவ வேண்டி, அம்பிகையைத் தொழுது வணங்கி, தாம்பூலமளித்து, வெற்றி பெறுவோம் .

திங்கள், 8 அக்டோபர், 2018

வீணை ஆஞ்சநேயர் மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயில்...


வீணை ஆஞ்சநேயர்  மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோயில்...

சிவபெருமான் திருநடனம் புரிந்த மப்பேடு சிங்கீஸ்வரர்  ஆலயத்தில், ஈசனின் நடனத்திற்கு ஆஞ்சநேயர் வீணை இசைத்ததாக கூறப்படுகிறது. ஆஞ்சநேயர், விரபாலீஸ்வரர் சன்னிதியின் எதிரில் நின்று வீணையை இசைத்து சிவபெருமானின் அருளைப் பெற்றதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர். அதே போல் வீணையை கையில் ஏந்தியிருக்கும் கலைமகளான சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் தோன்றியவர். எனவே இத்தலத்தில் வீணையுடன் அருள்பாலிக்கும் ஆஞ்சநேயரை வணங்கினால், இசைத்துறையில் சங்கீத சக்ரவர்த்தியாகலாம் என்றும், இத்தலம் மூல நட்சத்திரம் உள்ள வர்களின் குறைகளை நீக்கும் தலம் என்றும் பக்தர்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர் .

புரட்டாசி மாத மஹாளய அமாவாசை

#இந்த வருட புரட்டாசி மாத மஹாளய அமாவாசை (8-10-2018)#அரிய தகவல்கள் #அடங்கிய நீண்ட பதிவு!

(கடைசிவரை #பொறுமையாக #படிக்கவும்)

8-10-2018புரட்டாசி மாத மஹாளய அமாவாசை மிகவும் அற்புதமான நாள்.

(8 1 0 2 0 1 8)முன்னிருந்தும் பின்னிருந்தும் பாருங்கள்.ஒரே மாதிரியாக வரும்.

இந்த வருடம்,புரட்டாசி மஹாளய அமாவாசை,புரட்டாசி 22 ம் நாள் 8/10/2018 திங்கட்கிழமை அன்று  வருகிறது.

அமாவாசை தினங்களில் மஹாளய அமாவாசை தினம் மிகச்சிறப்பு வாய்ந்தது.

பித்ரு காரியங்களுக்கு உகந்த தினமான, அன்றைய தினத்தில் திங்கட்கிழமையும் சேர்ந்து வருவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

பொதுவாக திங்கட்கிழமையும்
(சோமவாரம்), அமாவாசையும் சேர்ந்து வரும் தினங்களில், விரதமிருந்து, அரசமரத்தை பிரதட்சிணம் செய்வது கிடைத்தற்கரிய பலன்களைத் தரும்.

இதுவே 'அமாசோம விரதம்' என்று சிறப்பிக்கப்படுகிறது.

இந்த நன்னாளில், அரசமரத்தைப் பிரதட்சிணம் செய்து, பின் சிவாலய தரிசனம் செய்வதும், அஸ்வத்த நாராயண பூஜை செய்வதும் மிக விசேஷமாகக் கருதப்படுகிறது.

அரசமரத்தின் மருத்துவ குணங்கள்:

அதிகாலை வேளையில் அரசமரத்தைச் சுற்றும் போது, அதிலிருந்து வரும் காற்று, நாளமில்லா சுரப்பிகளைத் தூண்டி செயல்பட வைக்கும் வலிமையுடையதாக இருக்கிறது.

மேலும்,பித்த சம்பந்தமான நோய்களையும், சரும நோய்களையும் நீக்கும் தன்மையுடையது.

அரசமரப்பட்டை, வேர் ஆகியவற்றை நன்றாகப் பொடிசெய்து கஷாயமாகவோ, அல்லது பால் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினாலோ, பெண்களுக்கு, மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள், கருப்பைக் கோளாறுகள் முதலியவை நீங்கும்.

சிறப்பான இருதய வடிவம் கொண்ட இம்மரத்தின் இலைகளை நல்லெண்ணெய் தடவி, நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றிய விளக்கொளியில் காட்டினால் பழுப்பு நிறமடையும்.

அதை உடம்பில் ஏற்படும் வீக்கத்தில் வைத்துக் கட்டினால் விரைவில் குணம் தெரியும்.

அதிகாலையில் இம்மரத்தைச் சுற்ற,  இரத்த ஓட்டம் சீர்ப்படும். மனஅழுத்தம் போன்ற நோய்கள் நீங்கும்.

ஆன்மீக ரீதியாக, அரசமரத்தின் முக்கியத்துவம்:

அரசமரத்திற்கு அஸ்வத்த மரம் என்றும் பெயர் உண்டு.

ஹோமங்களில் பயன்படுத்தப்படும் சமித்து எனும் சொல், அரசங்குச்சிகளையே குறிக்கும்.

அரசங்குச்சிகளைக் கொண்டு ஹோமம் செய்யும் போது வெளிவரும் புகை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட நுரையீரல் சம்பந்தமான ப்ரச்னைகளைத் தீர்க்கும் வல்லமை உடையது.

காற்றில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழிக்கும் சக்தியும் அந்தப் புகைக்கு உண்டு.

ஆனால் சமித்துகளுக்காக அன்றி வேறெந்தக் காரணத்துக்காகவும் அரசமரத்தை வெட்டலாகாது.

அவ்வாறு செய்தால் அது பெரும் பாவமாகும்.

இம்மரம் ஸ்ரீ விஷ்ணுவின் வலக்கண்ணில் இருந்து தோன்றியதாக பத்மபுராணம் கூறுகிறது.

அரசமரத்தின், வேரில் பிரம்மாவும், நடுப்பகுதியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் வாசம் செய்வதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன.

புத்தர் ஞானஒளி அடைந்த போதிமரம் எனப்படுவது அரசமரமே என்றும் ஒரு கூற்று இருக்கிறது.

ஆற்றங்கரையோரங்களிலும், குளக்கரைகளிலும் அரசமரத்தை நட்டு வளர்ப்பதன் ரகசியம் தெரியுமா?.

ஏனெனில், அம்மரத்தின் நிழல் பட்ட நீர் நிலைகளில் நீராடுவது, பிரயாகையில்(திரிவேணி சங்கமத்தில்) நீராடுவதற்குச் சமம்.

திருவாவடுதுறை, திருநல்லம் போன்ற சிவத் தலங்களிலும், திருக்கச்சி, திருப்புட்குழி, திருப்புல்லாணி ஆகிய வைணவத் திருத்தலங்களிலும் தல விருட்சமாக அரசமரமே விளங்குகிறது.

மேற்கண்ட  கோவில்களுக்குள் இருக்கும் அரசமரம் பன்மடங்கு அருட்சக்தி உடையதாக விளங்குகிறது.

நாகதோஷ நிவர்த்திக்காக, அரசமரத்தின் அடியில் நாகர் உருவங்களைப் பிரதிஷ்டை செய்து வைப்பது வழக்கம்.

இம்மரத்தின் அடியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம்.

எனவே, பெண்கள், மஞ்சள் குங்குமத்தை இம்மரத்தின் அடியில் தூவி வழிபடுவதைக் காணலாம்.

உங்களுக்காக ஒரு ஆன்மீக ரகசியம் சொல்லவா?

அரசமரத்தின் கன்றை ஒரு நல்ல நாளில் ஊன்றி வைத்து, நீர் வார்த்து, கவனமுடன் வளர்க்க வேண்டும்.

பின், ஏழு வருடம் கழித்து, அதற்கு மனிதர்களுக்கு செய்வது போலவே, உபநயனம் செய்வித்து, ஒரு வேப்பங்கன்றை அதனருகில் நட்டு, இரண்டிற்கும் திருமணம் செய்வித்து வளர்த்தால், அவ்வாறு செய்பவர்களுக்கு எல்லா நலன்களும் உண்டாகும்,
முன்னோர்கள் முக்தி நிலை எய்துவர் என்று புராணங்கள் கூறுகின்றன.

இவ்வாறு அரசமரமும் வேப்ப மரமும் இணைந்து இருக்கும் இடங்களில் மிகுந்த சாந்நித்யம் நிலவுவது கண்கூடு.

மேலும், இம்மரம் இருக்கும் இடத்திலிருந்து முப்பது மீட்டர் தூரத்திற்குள் இருக்கும் கோவிலில் மிகுந்த சாந்நித்யமும் அதன் விளைவாக, மன அமைதியும் கிட்டும் என்றும் கூறப்படுகிறது.

அஸ்வத்த நாராயண விரதமும் பூஜையும்:

திங்கட்கிழமையும் அமாவாசையும் சேரும் நாட்களில், விரதமிருக்கும் போது, அதற்கு அங்கமாக, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும்.

புத்ர பாக்கியமும், தீர் சுமங்கலியாக வாழவும்  சுமங்கலிகள்,இதைசெய்வது அவசியம்.

இந்தப் பூஜையை அரசமரத்தின் அடியில் செய்யலாம். அல்லது,  பூஜை அறையில் அரசமரக் கொத்தை வைத்துப் பூஜிக்க வேண்டும்.

இந்த விரதம் சம்பந்தமாக சொல்லப்படும் புராணக்கதை:

மகாபாரதத்தில், பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு, இவ்விரத மகிமையைக் கீழ்வருமாறு கூறினார்.

காஞ்சி நகரத்தில், தேவஸ்வாமி என்பவர், தனவதி என்னும் மனைவியுடனும், ஏழு ஆண் குழந்தைகள் மற்றும் ஒரு பெண் குழந்தையுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்.

ஏழு ஆண் மக்களுக்கும் திருமணமாகியது. ஒரு நாள், வேத வேதாந்தங்களில் கரை கண்ட ஒரு அந்தணர், தேவஸ்வாமியின் வீட்டுக்கு பிக்ஷையின் பொருட்டு வருகை புரிந்தார்.

அவரைத் தகுந்த முறையில் உபசரித்த தேவஸ்வாமி, தன் மனைவி, மருமகள்கள், மற்றும் மகளை, அவரிடம் ஆசி பெறச் செய்தார்.

மற்றவர்கள் நமஸ்கரிக்கும் போதெல்லாம், 'தீர்க்க சுமங்கலி பவ' எனும் நல்லாசி கூறிய அவர், குணவதி என்னும் பெயர் கொண்ட, தேவஸ்வாமியின் மகள் நமஸ்கரிக்கும் போது மட்டும், 'திருமணம் நடக்கும் போது, சப்தபதி நேரத்தில், இப்பெண், கணவனை இழப்பாள்' என்றுரைக்க, அதிர்ந்த தேவஸ்வாமி தம்பதியினர், இந்தப் பெருந்துயரம் ஏற்படாதிருக்க வழி கேட்டுப் பிரார்த்திக்க, சிம்ஹள தேசத்திலிருந்து, சோமவதி என்னும் பெண்ணை, திருமணத்திற்கு அழைத்து வந்தால், அப்பெண்ணின் உதவியால் துயர் தீரும் என நல்வழி கூறினார்.

இதைக் கேட்ட, தேவஸ்வாமியின் கடைசிப் புதல்வனான, சிவஸ்வாமி என்பவன், பெற்றோரிடம் அனுமதி பெற்று,  தன் தங்கையாகிய குணவதியையும் அழைத்துக் கொண்டு, சிம்ஹள தேசம் நோக்கிப் பயணமானான்.

இரவில், ஒரு பெரிய ஆலமரத்தினடியில் இருவரும் தங்கினார்கள். அம்மரத்தில் அண்ட பேரண்ட பக்ஷி என்னும் மிகப்பெரிய பக்ஷியின் கூடு இருந்தது.

இரவு கூட்டை அடைந்த தாய்ப்பறவை, தன் குஞ்சுகளுக்கு உணவூட்டத் தொடங்கியது.

ஆனால், குஞ்சுகளோ உணவை ஏற்காமல்,  'அம்மா, இம்மரத்தடியில் இருவர் பசித்திருக்க நாங்கள் மட்டும் எப்படி உணவை ஏற்க முடியும்?' என்று வினவின.

தாய்ப்பறவை, 'அவர்களுக்கும் உணவளித்து, அவர்கள் வந்த காரியத்தையும் நிறைவேற்றி வைக்கிறேன்!' என்று உறுதியளித்த பின்பே,அவை உணவுண்டன. 

பின், தாய்ப்பறவை, சிவஸ்வாமிக்கும் குணவதிக்கும் உணவுதந்து உபசரித்து,பின் அவர்கள் வந்த காரியத்தை விசாரித்து, இருவரையும் சிம்ஹளதேசம் கொண்டுபோய்ச் சேர்த்தது.

அங்கு சோமவதியைக் கண்டு விவரம் கூறியதும் அவளும் உடனே கிளம்பி, அவ்விருவருடன் காஞ்சிபுரம் வந்தடைந்தாள்.

தேவசர்மா என்பவரின் மகன் ருத்ர சர்மா என்பவருக்கும், குணவதிக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.

திருமண தினத்தன்று, சப்தபதி நேரத்தில் ருத்ரசர்மா இறந்து விழ, அனைவரும் பதறித் துடித்தனர்.

இதைக் கண்ட சோமவதி, 'கவலை வேண்டாம். நான் இது நாள் வரையில் கடைபிடித்து வந்த 'அமாசோம விரதத்'தின் பலனைக் குணவதிக்குத் தருகிறேன்' என்று கூறித் தாரை வார்த்துக் கொடுத்தாள்.

உடனே, ருத்ரசர்மா, உறக்கம் நீங்கி எழுந்தவன் போல் எழுந்தான்.

சோமவதியும், இவ்விரதத்தைச் செய்யும் முறையை குணவதிக்கு உபதேசித்து,  விடைபெற்றுத் தன் ஊர் சேர்ந்தாள்.

இக்கதையால், அக்காலத்தில், நீதி, தர்மம் முதலியவை எவ்வாறு தழைத்தோங்கியிருந்தது என்பதை அறியலாம்.

தனக்கு பிக்ஷையிட்ட இல்லத்தில் நேரவிருக்கும் துன்பத்தை அறிந்து, அதைத் துடைக்க வழி செய்த அந்தணர், நன்றி மறவாமைக்கு நல்லதொரு உதாரணமாகிறார்.

தன் மரத்தடியில் வந்து தங்கிய அதிதிகளை உணவளித்து உபசரித்ததோடு, அவர்கள் போக வேண்டிய இடத்துக்கு அழைத்துச் சென்ற பறவையின் செயல், விருந்தினரை உபசரிக்க வேண்டிய முறையை, அக்காலத்தில் பறவைகளும் கடைப்பிடித்து வந்ததை எடுத்துக் காட்டுகிறது.

மேலும், அதன் குஞ்சுகளும், விருந்தினர் உண்ணும் முன் தாங்கள் உண்ணுதல் கூடாது என்று மறுத்தது எத்தனை சிறப்பு?.

முன்பின் அறியாதவராயினும், அவர்களுக்கு நேரவிருக்கும் துன்பம், தன்னால் நீங்குமென்றால், தன்னாலான உபகாரத்தைக் கட்டாயம் செய்ய வேண்டும் என்ற நல்ல உள்ளத்தோடு, சோமவதி திருமணத்திற்கு வருகை புரிந்தாள்.

மேலும், தன் விரதப்பலனை தாரை வார்த்துக் கொடுக்கிறாள்.

பரோபகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இதை விடச் சான்று தேவையில்லை.

புராணக்கதைகளை, கட்டுக்கதைகள் என்று எண்ணாமல், அதில் இருக்கும் நீதிகளை, வாழ்வில் கடைப்பிடிப்பது நல்லது.

இந்த விரதம் அனுஷ்டிக்கும் முறை:

இதை விரதமாக எடுத்தால், ஒவ்வொரு வருடமும், அமாவாசையும் திங்கட்கிழமையும் வரும் நாளில், அரசமரத்தைப் பூஜை செய்து, பிரதட்சிணம் செய்ய வேண்டும்.

விரதம் எடுக்கும் வருடத்தில், நூற்றெட்டு அதிரசங்களைச் செய்து, நூற்றி எட்டு கிழங்கு மஞ்சள்கள் வாங்க வேண்டும்.

அரசமரத்தின் அடியில் முறைப்படி, வைதீகரை வைத்து, அஸ்வத்த நாராயண பூஜையைச் செய்ய வேண்டும்.

பூஜையும் பிரதட்சணமும் நிறைவடையும் வரை உபவாசம் இருக்க வேண்டும்.

அதன் பின், ஒரு வேளை மட்டும் உணவு கொள்ளுதல் சிறப்பு.

பூஜை  நிறைவடைந்த பிறகு,

மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே |

அக்ரத: சி'வரூபாய விருக்ஷராஜாய தே நம: ||

என்ற மந்திரத்தைச் சொல்லி, அரச மரத்தை நூற்றி எட்டு பிரதட்சணங்கள் செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு மஞ்சளும் , ஒரு அதிரசமும் போட வேண்டும்.

மரத்தின் முன் ஒரு தட்டையோ, பாத்திரத்தையோ வைத்து, இவ்வாறு போடலாம்.

விரதம் எடுப்பதற்கு, அதிரசம் செய்ய சௌகர்யப்படாவிட்டால், மஞ்சளை மட்டும் போடலாம்.

அல்லது முதல் சுற்றுக்கு மஞ்சள், இரண்டாவது சுற்றுக்கு குங்குமச்சிமிழ்,

மூன்றாவதற்கு, வெற்றிலை பாக்கு, நான்காவதற்கு பூ இவைகளை வரிசையாகப் போட்ட பிறகு, மீதிச்சுற்றுக்களுக்க்கு சௌகரியம்போல் எதை வேண்டுமானாலும் போடலாம்.

இனிப்புப் பண்டங்கள் தான் வேண்டும் என்பதில்லை.

108 கண்ணாடி, சீப்பு முதலியவற்றைக் கூடப் போடலாம்.

இயலாதவர்கள், 108 பூக்கள் அல்லது வெல்லக்கட்டிகளைச் சமர்ப்பிக்கலாம்.

பிரதட்சணம் செய்யும் போது மரத்தைத் தொடக்கூடாது.

சனிக்கிழமையன்று மட்டும் தான் மரத்தைத் தொடலாமென்றும் ஒரு கூற்று உள்ளது.

மரத்தை நெருங்கிச் சுற்றக் கூடாது.

அதிகாலை முதல் 9.00மணி வரையிலான
பொழுதில் அரசமரத்தை ஈரத்துணியுடன்
பிரதட்சிணம்செய்வது விரைவில் பலனைத் தரும்.

பிரதட்சணம் செய்த பிறகு,புனர் பூஜை செய்து,மரத்திற்கு சமர்ப்பித்தவற்றில் சிலவற்றை விரதத்தை நடத்தி வைத்தவருக்கு தாம்பூலம் தட்சணையுடன் அளித்து விட்டு, மீதியுள்ளவற்றை விநியோகிக்க வேண்டும்.

அதன் பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு திரும்ப வேண்டும்.

விரதம் எடுத்தவர்கள், இந்த விரதத்தை, சௌகர்யப்பட்ட வருடத்தில் அமாவாசை, திங்கட்கிழமையன்று பூரணமாக வரும் நாளில் முடித்து விடலாம்.விரதம் முடிக்க, ஐந்து கலசங்கள், அரசமர உருவம் பொறித்த வெள்ளித்தகடு ஒன்று,பிரதிமைத் தகடுகள் (வெள்ளியில்)ஐந்து, கலசங்களுக்கு சுற்ற வேஷ்டி, துண்டுகள் (வஸ்திரம்) ஆகியவை தேவை.

மற்ற விரதங்களுக்குச் செய்வது போல், பஞ்சதானம் (வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் முதலியன) செய்ய வேண்டும். அதிரசம் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

விரதத்தை நிறைவு செய்யும் வருடத்தில், எப்போதும் போல் அரசமரத்துக்குப் பூஜை செய்து, ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு அதிரசம் போட்டு பிரதட்சணம் செய்து விட்டு அவற்றை எடுத்துக்கொண்டு வீடு வந்து விட வேண்டும்.

அதன் பின் ஐந்து வைதீகர்களைக் கொண்டு, கலசங்களை ஸ்தாபனம் செய்து பூஜித்த பின், பஞ்ச தானம்  செய்து, வைதீகர்களுக்கு போஜனம் அளித்து, அவர்கள் சாப்பிடும் போது இலையில் அதிரசத்தையும் போட வேண்டும்.

பிறகே,மீதியுள்ளவற்றை விநியோகிக்கலாம்.

இதை விரதமாக எடுக்காவிட்டால்:

இம்மரத்தைப் பிரதட்சணம் செய்தால் அனைத்துப் பாவங்களும், சாபங்களும் உடனே நீங்கும்.

எனவே, இதை விரதமாக எடுக்க சௌகர்யப் படாவிட்டால் கூட அரசமரத்தை பிரதட்சணம் செய்வது சிறப்பு.

அவ்வாறு செய்ய விருப்பப்பட்டால், நூற்றி எட்டு இனிப்புப் பண்டங்களை, அல்லது பூக்கள் , வெல்லக்கட்டிகளை எடுத்துக் கொண்டு,அதிகாலை நேரத்தில் அரச மரத்தைப் பிரதட்சணம் செய்து, ஒவ்வொரு பிரதட்சணத்துக்கும் ஒவ்வொரு இனிப்பைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கூடுமானவரை ஏழு மணிக்குள் வலம் வருவது சிறப்பு.

அந்நேரத்தில் ஓசோன் வாயுவை அதிக அளவில் அரசமரம் வெளியிடுவதாகச் சொல்லப்படுகிறது.

இயலாதவர்கள், பத்து மணிக்குள்ளாவது பிரதட்சணத்தை முடித்துவிடவேண்டும்.

பிறகு,  மரத்துக்கு சமர்ப்பித்தவற்றை, சிறிதளவு வீட்டுக்கு எடுத்துவைத்துக் கொண்டு, மீதியை விநியோகிக்க வேண்டும்.

பின் ஆலய தரிசனம் செய்து விட்டு வீடு வந்து விடலாம்.

மேலே  பிரதட்சணம் செய்வதற்கென்று குறிப்பிட பட்ட மந்திரத்தை பக்தியுடன் உச்சரித்தவாறே சுற்றுவது சிறப்பு.

நூற்றி எட்டு முறை சுற்ற இயலாதவர்கள், இயன்ற அளவு சுற்றலாம்.

மூன்று முறை சுற்றினால்,விருப்பங்கள் நிறைவேறுதலும்,ஐந்து முறை சுற்றினால், எக்காரியத்திலும் வெற்றி அடைதலும், ஒன்பது முறை சுற்றினால்,புத்திர பாக்கியம் அடைதலும்,பதினொரு முறை வலம் வந்தால்  எல்லா போக பாக்கியங்கள் கிடைத்தலும்  நூற்றியெட்டு முறை வலம் வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் அடைதலும் கிடைக்கும்  என்று புராணங்கள் கூறுகின்றன.

எதிர்வரும் அபூர்வமான திங்கட்கிழமை 8-10-2018 புரட்டாசி மஹாளய அமாவசையன்று அமாசோம விரதமிருந்து, அரசமரத்தைப் பூஜித்து, அனைத்து தேவர்களின் நல்லாசிகளைப் பெறுவோம்

படித்ததை பகிர்ந்தேன்

நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்


நவராத்திரி நைவேத்தியம் மற்றும் சுண்டல் பட்டியல்

1-ம் நாள். நைவேத்தியம்.  வெண்பொங்கல். 
                 சுண்டல்            வெள்ளை கொண்டகடலை

2-ம் நாள்  நைவேத்தியம்.  புளியோதரை.                   
                  சுண்டல்.           பயத்தம் பருப்பு

3-ம் நாள்  நைவேத்தியம்.  சக்கரைப்  பொங்கல்.       
                  சுண்டல்.            மொச்சை கடலை

4-ம் நாள்   நைவேத்தியம்.  கதம்பம் சாதம்                             
                   சுண்டல்.           பச்சைப் பட்டாணி

5-ம் நாள்    நைவேத்தியம்.   தயிர் சாதம்                       
                    சுண்டல்             வேர்க்கடலை

6-ம் நாள்    நைவேத்தியம்.   தேங்காய் சாதம்.         
                     சுண்டல்            கடலைப்பருப்பு

7-ம் நாள்      நைவேத்தியம்.   எலுமிச்சை சாதம்.             
                      சுண்டல்            வெள்ளை பட்டாணி

8-ம் நாள்       நைவேத்தியம்.   பாயஸம்                           
                       சுண்டல்            காராமணி

9-ம் நாள்        நைவேத்தியம்   அக்கார அடிசல்                 
                        சுண்டல்            சாதா கொண்ட கடலை

செவ்வாய் மற்றும் வெள்ளி யன்று புட்டு அல்லது சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல் செய்யலாம்.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

குலசை தசரா திருவிழா

குலசை தசரா திருவிழா

குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற புரட்டாசி மாதம் 24ம் நாள் (10.10.2018) புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி புரட்டாசி மாதம் 23ம் நாள் அக்டோபர் 9ந்தேதி மதியம் 11 மணிக்கு காளி பூஜை, இரவு 9 மணிக்கு காப்பு கட்டுதல் நடைபெற உள்ளது.

*கொடியேற்றம்:*

முதலாம் திருநாளான அக்டோபர் 10ந் தேதி அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் திருவீதி உலா, காலை 9 மணிக்கு கோவில் வளாகத்தில் கொடியேற்றம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவில் அன்னை முத்தாரம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றார்.

*10/10/2018:*

1-ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலம்

*11/10/2018:*

2–ம் திருநாள் இரவில் கற்பகவிரிசம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலம்.

*12/10/2018:*

3–ம் திருநாள் இரவில் ரிஷபம் வாகனத்தில் பார்வதி திருக்கோலம்.

*13/10/2018:*

4–ம் நாள் இரவில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலம்.

*14/10/2018:*

5–ம் திருநாள் இரவில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலம்.

*15/10/2018:*

6–ம் திருநாள் இரவில் சிம்ம வாகனத்தில் மகிசாசுரமர்த்தினி திருக்கோலம்.

*16/10/2018:*

7–ம் திருநாள் இரவில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலம்.

*17/10/2018:*

8–ம் திருநாள் இரவில் கமல வாகனத்தில் கஜலெட்சுமி திருக்கோலம்.

*18/10/2018:*

9–ம் திருநாள் சரஸ்வதி பூஜை அன்று இரவில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலம்.

*19/10/2018:*

 *(சூரசம்காரம்)*
10–ம் திருநாளான ஐப்பசி 2ம் நாள் அக்டோபர் 19ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, நள்ளிரவு 12 மணிக்கு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி, மகிஷாசுரனை வதம் செய்யும் மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

*20/10/2018:*

11–ம் திருநாள் அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரை மேடைக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது.
அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலுக்கு அம்மன் எழுந்தருளி அபிஷேக ஆராதனைகள் முடிந்து, அதிகாலை 3 மணிக்கு திருத்தேரில் பவனி வந்து தேர் நிலையம் வந்தடைகிறார்.

*பாலாபிஷேகம்:*

காலை 6 மணிக்கு பூஞ்சப்பரத்தில் அம்பிகை திருவீதி உலா புறப்படுதல், மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்தல், மாலை 6 மணிக்கு காப்பு களைதல், இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது.

*21/10/2018:*

12–ம் திருநாளான அக்டோபர் 21ந்தேதி (ஞாயிறுக்கிழமை ) காலையில் அபிஷேக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது...

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!

தேதி 04.10.2018 வியாழக்கிழமை - குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...

உதாரணமாக ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதையே முதலில் பார்ப்போம்.

தற்போது விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18 - ம் தேதி வியாழக்கிழமை (4.10.18) குரு பகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்....

திருச்செந்தூர்

ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் கருதப்படும் திருச்செந்தூர் குரு பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற தலமாகும். கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

தென்குடி_திட்டை

இந்த குருஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சந்நதியில் காட்சி அளிக்கிறார்.

பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.

திருவாலிதாயம்

சென்னையை அடுத்த பாடி, முகப்பேறு அருகில் உள்ளது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

ஆலங்குடி

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் தெற்கு நோக்கி வீற்றிருந்து தனி சன்னிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.

குருவித்துறை

மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.

தக்கோலம்

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஜலநாதீசுவரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப்படுகிறார்.

மயிலாடுதுறை

இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிர்வத்தியாகும்.

அயப்பாக்கம்

சென்னை, அயப்பாக்கத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாகும். குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.

கும்பகோணம்

கும்பகோணத்தில், ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

குச்சனூர்

தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு வீற்றிருப்பார்.

 அது மட்டுமில்லாமல் தனி சந்நதியில் தட்சிணாமூர்த்தியாகவும் இடம் பெற்றிருப்பார்

வியாழன், 4 அக்டோபர், 2018

நவராத்திரி மற்றொரு கதை:


#நவராத்திரி மற்றொரு கதை:

மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ய அம்மன் 9 நாள் கொலுவிருந்து 10ம் நாள் மகிஷாசுரனை சமிஹாரம் செய்து மகிஷாசுரமர்த்தனியானாள் என்றும் கூறப்படுகிறது. 9 நாட்கள் அம்மன் #ஊசி மேல் தவம் நின்று தவம் புரிந்தாள். இதனால் நவராத்திரி தினமான 9 நாட்களும் ஊசியால் #துணிகளை_தைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

விஜயதசமியையொட்டி வீடுகள் மாவிலை தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்படும்.

சரஸ்வதி பூஜை தினத்தோடு நவராத்திரி விழா நிறைவடைந்து விடுவதான காரணத்தால் விஜயதசமி தினத்தன்று அம்மனுக்கு சுண்டல் நிவேதனம் கிடையாது.

காலையிலேயே வடை, பாயாசம், பலகாரங்களுடன் அம்மனுக்கு நிவேதனம் செய்யப்படும்.

இரவு கொலுவில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள் #படுக்கவைக்கப்பட்டு மறுநாள் கொலு பொம்மைகள் எடுத்து #வைக்கப்படும்.

நவராத்திரி சமயத்தில் சுமங்கலிகளை வீட்டிற்கு அழைக்க வேண்டும், அவர்களை அன்போடு அழைத்து, வஸ்திரம் (புடவை அல்லது சட்டை பிட்), குங்குமம், சீப்பு, சிமிழ், கண்ணாடி, மஞ்சள் கிழங்கு, வெற்றிலை பாக்கு, தக்ஷணை ஆகியவற்றோடு வடை, பாயஸம் அளித்து, மகிழ்வித்தால் மிகப் பெரும் பாக்கியம் கிட்டும்.

நவராத்திரி சமயத்தில் ஸ்ரீ சண்டி யாகம் செய்வது மிகப் பெரும் பேறு அளிக்கக் கூடியது. மார்க்கண்டேய புராணம் என்னும் புராணத்தின் மையப்பகுதியாக அமைந்திருக்கக் கூடிய துர்கா சப்த சதீ என்னும் 700 ஸ்லோகங்கள் முழுக்க முழுக்க அம்பிகையின் லீலைகளைச் சொல்லக் கூடியவை. அம்பிகைக்குரிய காலமாகிய நவராத்திரியில் அம்பிகைக்குகந்த ஸ்ரீ சண்டி ஹோமம் செய்வதால் கிடைக்கும் பலன்கள் :
1. ஏழ்மை வராது
2. அன்பு கிடைக்கும்
3. எதிரிகள், இயற்கையால் ஆபத்து உண்டாகாது
4. ஸுவாஸினி, பசு, ரிஷி, குரு, தேவதைகளால் உண்டான சாபம் நீங்கும்
5. விவசாயத்தில் நற்பலன் கிட்டும்
6. கல்வி ஞானம் பெருகும்
7. உத்யோக உயர்வு
8. திருமணமாகாதவர்களும் நல்ல இல்லறம் அமையும்.
9. மன அமைதி கிடைக்கும்.
10. தேக ஆரோக்கியம்

#நவராத்திரியில் கொலு வைக்கும் முறை.
#ஒன்பது படிகள் :
 #முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற #தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
 #இரண்டாவது படியில் இரண்டறிவு #கொண்ட நத்தை, சங்கு #போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
 #மூன்றாவது படியில் மூன்றறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு #போன்ற பொம்மைகள் இடம் #பெற வேண்டும்.
 #நான்காவது படியில் நான்கு அறிவு #கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் #பெற வேண்டும்.
 #ஐந்தாவது படியில் ஐந்தறிவு #கொண்ட நான்கு கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடமி பெற வேண்டும்.
 #ஆறாவது படியில் ஆறு அறிவு #படைத்த_உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
 #ஏழாவது படியில் மனிதனுக்கு #மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் #பெற வேண்டுமி.
#எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
#ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

#நவராத்திரியைக் கொண்டாடுவோம் !
#நல்லன யாவும் #பெறுவோம்

புதன், 3 அக்டோபர், 2018

பழமையான சிவ லிங்கம்



பழமையான சிவ லிங்கம்

உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் 'ஹரப்பா' வில் உள்ளது.

அதற்கு அடுத்த பழமையான சிவ லிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு மிகப் பழமையானவை. ஒன்று காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம்.

அடுத்து, 'குடிமல்லம்' என்ற இடத்தில் உள்ள சிவ லிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
இந்த குடிமல்லம் பரசுராமேஸ்வர சிவன் கோயில் ASI(Archeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது. உலகில் சிவ லிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவ லிங்கம்.

இந்த லிங்கம் முதல் நூற்றாண்டுக்கும் முந்தைய பழமையான லிங்கம் என கண்டறிந்துள்ளனர். இக்கோவில் சுவர்ணமுகி என்னும் ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது பக்தன் பரசுராமேஸ்வரன் என்பவன் இவ்வீசனை தினமும் சுவர்ணமுகி ஆற்றின் நீரை கொண்டும் பலவித மலர்களை கொண்டும் பூஜை செய்து வந்தான். அவன் பக்தியில் மனம் குளிந்த ஈசன் பக்தனுக்கு காட்சி தந்து பக்தனின் பெயரிலே லிங்கமாக காட்சி அளிக்கிறார். இங்கு சூரியன் மற்றும் ப்ரம்மாவும் பூஜை செய்துள்ளனர். சுவர்ணமுகி ஆற்றின் நீரை கொண்டே இக்கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலின் கற்கள் முதல் நூற்றாண்டுக்கும் முந்தைய உள்ள மிக நீண்ட கற்களாக உள்ளது.

ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
உண்மை. மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவ லிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.

இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை.ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்ச கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.

அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒருமுறையாவது அந்த சிவ லிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.


திங்கள், 1 அக்டோபர், 2018

மண் மணக்கும்கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்!


மண் மணக்கும்கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்!

இயற்கை எவ்வளவு பிரமாண்டமோ அவ்வளவு விநோதங்கள் நிறைந்தது. ஒருபுறம் அதன் சீற்றம் மனிதனைப் பயமுறுத்தினால், மற்றொரு புறம் தனது கொடைகளால், அவனது வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது. மனிதன், ஒளி தரும் ஆதவனுக்கு நன்றி சொன்னான்; மழை தந்த வானத்துக்கு வந்தனம் செய்தான்; நெல் விதைத்தால் பொன் விளைந்த பூமியைத் தாயாகவே கருதி போற்றினான். மலைகளையும் மரங்களையும் ஆராதித்தான்!
இயற்கையை மட்டுமா? தன் முன்னோரை, உயிர் நிகர் தலைவனை, கற்பிலும் தியாகத்திலும் சிறந்த குலப்பெண்களையும் தெய்வங்களாக்கி வணங்கினான்; வழிபாடு ஆரம்பமானது! மர வழிபாடு, புற்று வழிபாடு, நடுகல் வழிபாடு, உருவ வழிபாடு... என வழிபாடுகள் பரிணமித்தது இப்படித்தான்!
'வழிப்படல்’ எனும் வார்த்தையே வழிபாடு என்றானதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். முன்னோர் வழிப்படல்... அதாவது, முன்னோர் வழி நிற்றல் என்பது, இன்றும் கிராமங்களில் உயிர்த் திருக்கும் அறம். அங்கு வாழ்வோருக்கு... வில்லிசை,கணியன் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களில் வாழும் குலசாமிகளின் கதைகளும், தங்கள் முன்னோரின் வரலாறும், தலைவர்களின் சரித்திரமும்தான் புராணம், இதிகாசம் எல்லாமே!


மண்மணக்கும் அந்தச் சாமிகளின் கதைகள், பல மகிமைகள் நிறைந்தது; நம் பாரம்பரியத்தைச் சொல்வது; நம் மனதைப் பிசைந்து பக்குவப்படுத்துவது. அவற்றுள் சில கதைகளும் தகவல்களும் உங்களுக்காக...
நெ ல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவளாம். ஆச்சரியம்தான் இல்லையா? புராணங்களில் வரும் திரிபுராதியர் கதையை அறிந் திருப்பீர்கள் (இதே இதழில், 'தெரிந்த புராணம் தெரியாத கதை’ பகுதியில் உள்ள அதே கதைதான்).
இரும்பு, பொன், வெள்ளியாலான... அந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.
நெ ல்லை, செங்கோட்டை, அம்பை, நாகர்கோவில் பகுதிகளில் இசக்கியம்மன் வழிபாடும் பிரசித்தம். சாஸ்தாவின் துணை தெய்வங்களான யக்ஷன், யக்ஷி ஆகியோரையே இயக்கி என்றும் இயக்கன் என்றும் அழைத்தனர். இதில் 'இயக்கி’ என்பதே இசக்கி என்றான தாம். தென்னகத்தின் காவல் தெய்வங்களில் முக்கியமான வரான சுடலைமாடனின் கதையிலும் இசக்கியம்மன் பேசப்படுகிறாள்!
ஞா னப்பழம் கிடைக்காததால் முருகவேளும், அம்மாவைப் போன்ற குணவதியே தனக்கு மனைவியாக வேண்டும் எனும் வீறாப்புடன் பிள்ளையாரும் கயிலையில் இருந்து பிரிந்து சென்றுவிட, பிள்ளை ஏக்கத்தால் தவித்திருந்தாள் பார்வதியாள். அப்போது, பரமேஸ்வரன் வந்தார்.அவள் அருகில் இருந்த தீபத்தைத் தூண்டினார்.அதன் காரணமாக ஏற்பட்ட பொறி, அன்னையின் மடியில் விழுந்து பிள்ளையானது. ஆனால், அது பொல்லாத பிள்ளையாக வளர்ந்தது. 3 வயதிலேயே... இரவில் அன்னை தூங்கியதும், விறுவிறு வென பூலோகத்தில் தில்லை வனத்தின் சுடலைக்கு (சுடுகாடு) வந்து மாமிசம் புசித்துத் திரும்புவானாம். இதையறிந்த ஈஸ்வரன், 'கயிலைக்கு உகந்த பிள்ளை அல்ல; பூமியின் காவலுக்கு உகந்த பிள்ளை இவன்’ எனக் கூறி, அவனை பூலோகம் செல்லப் பணித்தாராம். பார்வதி யாளும் பிரிய மனமின்றி பிள்ளையை அனுப்பி வைத்தாள். கூடவே, வனப் பேச்சியும் துணைக்கு வந்தாளாம்.


பூவுலகில், குமரி பகவதிக்குச் சொந்த மான எட்டு கிடாரப் பொன்னை பாதுகாத்து வந்தார் சுடலை. இவர் வேட்டைக்குச் சென்றிருந்த ஒரு தருணத்தில், மந்திரவாதி ஒருவன் ஒரு கிடாரம் பொன்னை கவர்ந்து சென்றான். இதைத் தொடர்ந்து, மந்திரவாதியின் மகளை சுடலை மாடன் காதலித்ததும், மந்திரவாதியின் நில புலன்களை அவர் நாசப்படுத்தியதும், சமாதானத்துக்கு வந்த மந்திர வாதியிடம் அவன் மகளையே அவர் பலி கேட்டதும், இறுதியில் அவனை அழித்தொழித்ததையும்... (ஊருக்கு ஊர் சிற்சில வேறுபாடுகளுடன்) கதைகதையாய் சொல்கின்றன வில்லிசைப் பாடல்கள்! சுடரிலிருந்து பிறந்ததால் சுடலை என்று பெயர் எனச் சிலரும்; சுடலையை (சுடலை-சுடுகாடு) காத்திருப்பதால், சுடலை மாடன் என்று பெயர் வந்தது என வேறு சிலரும் விவரிப்பர். ஆறுமுகமங்கலம், சீவலப்பேரி, சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இவரது கோயில்கள் உண்டு.
ம துரைக்காரர்களுக்கு பரிச்சயமான பெயர் பாண்டி முனீஸ்வரர். மதுரை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள மேலமடை கிராமத்தில், கோயில் கொண்டுள்ளார். பாண்டி ஐயா என உரிமை யோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
ஒரு காலத்தில் மதுரைக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம், மானகிரி எனும் கிராமத்தில் தங்கியது. அவர்களில் கிழவி ஒருத்திக்கு கனவு வந்தது. அதில் தோன்றிய ஜடாமுடி தரித்த உருவம், ஓரிடத்தைக் குறிப்பிட்டு, 'அங்கு நான் பூமிக்குள் புதைந்திருக்கிறேன். என்னை வெளியில் எடுத்து, வழிபட்டு வந்தால், உன்னையும் உன் வம்சாவளியினரையும் சிறப்பாக வாழ வைப்பேன்!’ என்று கூறி மறைந்தது. விடிந்ததும் தன் கூட்டத்தாரிடம் அவள் கனவை விவரிக்க... அனைவரும் அந்த இடத்துக்குச் சென்று பூமியைத் தோண்டினர். பூமிக்குள் தவக்கோலத்தில் பத்மாசன கோலத்தில் கற்சிலை இருந்தது. பயபக்தியுடன் அந்தச் சிலையை எடுத்து, சிறிய குடிசையில் பிரதிஷ்டை செய்தனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு பலரும் வந்து, அந்தச் சிலையைத் தரிசித்துச் சென்றனர். ஒருநாள் சந்நியாசி ஒருவர் வந்தார். சிலையைத்  தரிசித்ததும் அருள் வந்தது அவருக்கு. 'பாண்டியன் நெடுஞ்செழியனின் கோட்டை இருந்த இடம் இது. இதே இடத்தில் வைத்து பாண்டியனை சபித்த கண்ணகி, மதுரையை எரித்தாள். மறுபிறப்பெடுத்த பாண்டியன், முற்பிறவியில் செய்த தவற்றுக்குப் பரிகாரமாக, இங்கு சிவனாரைக் குறித்து தவமிருந்தான். அதனால் மகிழ்ந்த ஈசன், மறுபிறப்பு நீக்கி அவனைத் தன்னிடமே அழைத்துக் கொண்டார். எனவே, தவக்கோலத்திலேயே கல்லாகி மண்ணுக்குள் புதையுண்டு போனான் பாண்டியன். அவனே, இப்போது வெளிவந்திருக்கிறான். இவனால், இனிமேல் இந்த இடம் பிணி போக்கும் ஸ்தலமாகத் திகழும்!'' என்றார். அதை நம்ப மறுத்த ஊரார், அப்போதே அந்த பகுதியைச் சுற்றிப் பல இடங்களில் தோண்டிப் பார்த்தனர்.
தோண்டப்பட்ட இடங்களில், மண்ணுக்குள் கருகிய செங்கற்களும் கருங்கற்களுமாகக் கிடந்தன. அவற்றைப் பார்த்த ஊராருக்கு, பெரியவரது வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது. அவரைத் தேடியபோது, அவர் அங்கு இல்லை. அவரது வாக்கை தெய்வ வாக்காகவே கருதி, அன்று முதல் அந்தச் சிலையை 'பாண்டி முனீஸ்வரர்’ என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்களாம்!
மே ல்மலையனூரில் இருந்து கர்ப்பிணி மனைவியுடன் பயணப்பட்டார் ஒருவர். இடுப்பில் கூடையை சுமந்தபடி, சூலத்தையே ஊன்றுகோலாக ஊன்றி நடந்துவந்த அந்தப் பெண்ணுக்கு கடும் தாகம். அப்படியே ஒரு மரத்தடியில் அமர்ந்தாள். ''அப்படியே படுத்துக்கொள்; தண்ணீர் எடுத்து வருகிறேன்'' என்று கூறிவிட்டு, தண்ணீரைத் தேடி ஓடினார் கணவர்.
வறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம்! ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம். அதைக் கடக்கமுடியாமல் திகைத்து நின்றார். பல நாழிகைகளுக்குப் பிறகு வெள்ளம் குறைந்ததும், ஆற்றைக் கடந்து மனைவி இருக்கும் இடத்தை அடைந்தவருக்கு அதிர்ச்சி; அவரின் மனைவி, புற்றுருவ மாகக் கிடந்தாள்! காலப்போக்கில் அந்த இடம் விளை நிலமானது. ஒருநாள் விவசாயி ஒருவரின் ஏர்க்கலப்பை பட்டு ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அதிர்ந்து போனவர் மயங்கிச் சரிந்தார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து விசாரிக்க... அவர்களில் ஒரு மூதாட்டிக்கு அருள்வந்தது. ''நான் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி. இங்கு புற்றுருவமா கிடக்கிறேன். கோயில் கட்டி, என்னைக் கும்பிடுங்க. உங்களை நல்லா பாத்துக்கறேன்’ என்றபடி மயங்கி விழுந்தாள். மெய்சிலிர்த்த மக்கள் அங்கே (திருவள்ளூர் அருகே புட்லூர்) கோயில் கட்டினர். பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத் தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர்.
ச முட்டியான்- மன்னர் தொண்டைமானின் அன்புக்கு உரியவன். அநாதரவாக நின்ற அவனை சிறுவயதிலேயே அரண்மனைக்கு அழைத்துவந்துவிட்டார். சாமர்த்தியசாலி யான அந்தச் சிறுவன், தொண்டைமானின் அடங்காத சண்டிக் குதிரையையும் அடக்கிக் காட்டியவன். அவன் வாலிபனானதும் அவனைத் தளபதியாக்கி, தன் மகளையும் கட்டி வைத்தார் தொண்டைமான். விரைவில் சமுட்டியானின் மனைவி கர்ப்பம் தரித்தாள். இந்த நிலை யில் பெருமழை பெய்து, மதானமேடு அணை உடைந்து வெள்ளம் ஊருக்குள் வந்தது. பலமுறை முயற்சித்தும் அணை உடைப்பை சரிசெய்ய இயலவில்லை. தொண்டைமானின் சிற்றரசு, நவாபு ஒருவனுக்குக் கட்டுப்பட்டது! அவன், அணையைச் செப்பனிட 7 நாட்கள் கெடு விதித் தான். சமுட்டியானும் ஊரில் இல்லை. கலங்கினார் தொண்டைமான். அன்றிரவு ஓர் அசரீரி, 'பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளையாய் பிறந்து, இப்போது தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணியை பலிகொடுத்தால், அணை உடையாது’ என ஒலித்தது. நாடெங்கும் பறை அறிவித்தனர். அதிர்ந்துபோன மக்கள், தலைச்சன் பிள்ளையை சுமக்கும் தங்கள் பெண்ணுடன், பக்கத்துப் பாளையங்களுக்குச் சென்றுவிட்டனர். தொண்டைமானின் மகளுக்கோ வளைகாப்பு நாள் நெருங்கியது. அவள் தனது வளைகாப்பை அணைப்பகுதியில் வைத்து நடத்த வேண்டினாள். அப்படியே செய்தார் தொண்டைமான்.
விழா நாளன்று யாரும் எதிர்பார்க்காத வகை யில், குறுவாளால் தன்னையே பலி கொடுத்தாள் தொண்டைமானின் மகள். அவளது தியாகத்தை எண்ணி பாளையமே கண்ணீர் வடித்தது. அவள், அவர்களின் தெய்வமாகிப் போனாள். அங்கேயே அழகான கோயில் எழுப்பப்பட்டது. அந்த இடத்துக்கு, 'உருவறுத்தான் கொல்லை’ என்றும், அவளுக்கு உயிர்பலியாயி என்றும் பெயரிட்டனர். அதுவே மருவி, தற்போது 'உருப்பிடி அம்மன்’ என்று வணங்கப்படுகிறாள் அந்தத் தெய்வத்தாய். வடலூர்-சென்னை சாலையில் கஞ்சமநாதபுரம் எனும் இடத்தில் உள்ளது இவளின் ஆலயம்.
செ ன்னையின் சுற்றுவட்டாரங்களில் பச்சை அம்மன் எனும் தெய்வம் குறித்து பல்வேறு தகவல்கள் உண்டு. சூரகோபன் எனும் அசுரனை அழிக்க படை பரிவாரங்களுடன் புறப்பட்டாள் பராசக்தி; அப்போது அவள், பச்சை வண்ணத்தில் ஜொலித்தாள்; அவள் பாதம்பட்ட இடமெல்லாம் வளமானது என்று ஒரு கதை விரியும்!
மன்னன் ஒருவன், சிவனாரிடம் பெற்ற வரத்தால், கங்கையே அவனுக்கு மகளாக, பச்சை அம்மனாக வந்து பிறந்ததாக ஒரு கதை உண்டு! சிவனாரின் திருமேனியில் இடம்பெற வேண்டி தவம் செய்ய வந்த பார்வதி பச்சை நிறத்துடன் திகழ்ந்தாள், அவளே பச்சை அம்மனாக அருள்கிறாள் என்றும் கூறுவர். வேறு சில இடங்களில்... போரில் கணவனை இழந்து, தீயில் புகுந்த பத்தினிப் பெண்களையே பச்சையம்மனாக வழிபடுவதாகக் கூறுகின்றனர்!