செவ்வாய், 12 நவம்பர், 2019

சனிப்பெயர்ச்சி (2020-2023)... யோகத்தை தரும் சனி... எந்த ராசிக்கு வரப்போகிறது?... யோகத்தை தரும் சனி இதுதான் !!



சனிப்பெயர்ச்சி (2020-2023)... யோகத்தை தரும் சனி... எந்த ராசிக்கு வரப்போகிறது?...
யோகத்தை தரும் சனி இதுதான் !!

கர்மச் சனி :

🔆 ராசிக்கு பத்தாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது கர்மச் சனியாகும்.

🔆 இந்த காலக்கட்டத்தில் உயர்பதவிகளில் அதிகார வீழ்ச்சி மற்றும் பதவியை இழத்தல் போன்றவை நிகழும்.

🔆 குடும்பத்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும்.

🔆 தொழிலில் கடினமான சூழல் இருப்பினும் இலாபம் உண்டாகும்.

🔆 மற்றவர்களால் அவச்சொல்லிற்கு ஆளாகுவீர்கள்.

🔆 வீட்டின் அமைதி மற்றும் மனைவியுடனான உறவுநிலை சரிவர இருக்காது.

யோகச் சனி :

🔆 ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது யோகச் சனியாகும்.

🔆 பெயருக்கு ஏற்றாற்போல் யோகத்தை அளிக்கக்கூடியவர்.

🔆 இந்த காலக்கட்டத்தில் காரியசித்தி உண்டாகும்.

🔆 தனவரவின் அதிகரிப்பால் மகிழ்ச்சியான சூழல் அமையும்.

🔆 மூத்தவர்கள் உறுதுணையாக இருந்து பல வகைகளில் ஆதரவாக இருப்பார்கள்.

🔆 இழந்த பொருட்களை மீட்டு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

🔆 வீட்டில் சுபநிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி உண்டாகும்.

விரயச் சனி :

🔆 ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் சனி சஞ்சாரம் செய்வது விரயச் சனியாகும்.

🔆 இந்த காலங்களில் பெரிய அளவிலான செலவுகள் ஏற்படும்.

🔆 ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.

🔆 பொன், பொருள் போன்றவை திருடு போகும். பல செலவுகள் ஏற்படும்.

🔆 சுயதொழில் எதிர்பார்த்த இலாபத்தை தராது. வேலையாட்களால் பிரச்சனை உண்டாகும்.

🔆 குடும்பத்தில் விரோதம் ஏற்பட்டு பிரிவு உண்டாகும்.

🔆 இந்த காலங்களில் யாருக்கும் ஜாமின் போடாமல் இருந்தால் பல பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.


Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144 .

*꧁☬@☬꧂* *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக