வெள்ளி, 1 நவம்பர், 2019

கந்த சஷ்டி : நோய்களை தீர்க்கும் நாழிக்கிணறு தீர்த்தம் - திருச்செந்தூர் சுவாரஸ்யங்கள்


கந்த சஷ்டி : நோய்களை தீர்க்கும் நாழிக்கிணறு தீர்த்தம் - திருச்செந்தூர் சுவாரஸ்யங்கள்

 சூரசம்ஹாரம் முடிந்ததும் சிவபூஜை அபிஷேகத்துக்காக தன்னிடம் இருந்த வேலினால் முருகன் பூமியில் ஓங்கி குத்தி நாழிக்கிணறு ஏற்படுத்தினார். நாழிக்கிணறு தண்ணீர் நோய்களை தீர்க்கும் குணமுடையது. கடலோரத்தில் இருந்தாலும் இந்த தீர்த்தத்தின் சுவை அலாதியானது.

சூரனை வதம் செய்த திருச்செந்தூர் முருகனை வழிபட்டு சஷ்டி தினத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால், வழக்குகள் மற்றும் பிரச்னைகள் அனைத்திலும் இருந்தும் விடுபடலாம்.

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் என்று 2 மூலவர்கள் உள்ளனர். சுப்பிரமணிய சுவாமி கிழக்கு பார்த்தும், சண்முகர் தெற்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி தனியாக உள்ளர். சண்முகர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியுள்ளார்.

மூலவர் சுப்பிரமணியருக்கு தினமும் தூய வெள்ளை நிற ஆடையே அணிவிக்கப்படுகிறது. சண்முகருக்கு சிறப்பு பச்சை நிற ஆடைகள் அணிவிக்கப்படும்

திருச்செந்தூர் தலத்தில் சண்முகர், ஜெயந்தி நாதர், குமரவிடங்கர், அலைவாய் பெருமான் என நான்கு உற்சவர்கள் உள்ளனர். இவர்களில் குமரவிடங்கரை மாப்பிள்ளை சுவாமி என்று அழைக்கிறார்கள். திருச்செந்தூரில் வீரவாகு தேவர் காவல் தெய்வமாக உள்ளார். இதனால் இத்தலத்துக்கு வீரவாகு பட்டினம் என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூர் தலத்தில் தினமும் வீரவாகு தேவருக்கு பூஜை நடத்தப்பட்ட பிறகே மூலவருக்கு பூஜை நடத்தப்படுகிறது.

 ஓம் வடிவ கோவில்
திருச்செந்தூர் கோவில்
திருச்செந்தூர் கோவில் வடிவம், பிரணவ மந்திரமான ஓம் எனும் வடிவில் அமைந்துள்ளது. திருச்செந்தூர் கோவில் கருவறை உட்பகுதியில் சூர்யலிங்கம், சந்திர லிங்கம் உள்ளன. மூலவருக்கு பக்தர்கள் கட்டணம் செலுத்தி தங்க அங்கி அணிவித்து வழிபடலாம். இந்த வழிபாட்டின் போது முருகருக்கும், பரிகார தெய்வங்களுக்கும் தங்க அங்கி, வைர வேல் அணிவிக்கப்படும். திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 157 அடி உயரம் கொண்டது.

 சுப்ரமணியர் தரிசனம்
சண்முகர் தரிசனம்
இக்கோயிலுக்குச் செல்லும் வழியில், தூண்டுகை விநாயகர் கோவில் உள்ளது. இவ்விநாயகரை வணங்கியபின்னர் தான் முருகப் பெருமானை வணங்கச் செல்ல வேண்டும். திருச்செந்தூர் கோவில் மூலவர் முன் உள்ள இடம் மணியடி எனப்படுகிறது. இங்கு நின்று சுப்பிரமணியரை தரிசிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மகாமண்டபத்தில் உள்ள சண்முகர் சன்னதியில் ஆத்மலிங்கம் உள்ளது. மறக்காமல் அந்த லிங்கத்தையும் வழிபட வேண்டும். முருகனை நினைத்து தியானம் இருக்க விரும்புபவர்கள் வள்ளிக்குகை அருகில் உள்ள தியான மண்டபத்தை பயன்படுத்தலாம்.


 பஞ்சலிங்க தரிசனம்

வள்ளி குகை
மூலவருக்கு பின்புறம் சுரங்க அறை உள்ளது. ரூ.5 கட்டணம் செலுத்தி உள்ளே சென்றால் முருகன் பூஜை செய்த பஞ்சலிங்கங்களைக் காணலாம். இந்த அறைக்கு பாம்பறை என்றும் ஒரு பெயர் உண்டு. திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.


 24 தீர்த்தங்கள்
நாழிக்கிணறு
திருச்செந்தூர் கோவிலில் மொத்தம் 24 தீர்த்தங்கள் உள்ளன. அவற்றில் நாழிக்கிணறு, வதனாரம்ப தீர்த்தம் இரண்டும் முக்கியமானவை.

நாழிக்கிணறு 24 அடி ஆழத்தில் உள்ளது. இங்கு நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும் என்பது ஐதீகம். வதனாரம்ப தீர்த்தம் கடலில் பாறைகள் நிறைந்த பகுதியில் உள்ளது. எனவே அங்கு குளிக்க அனுமதி இல்லை. கலிங்கதேசத்து மன்னன் மகள் கனக சுந்தரி பிறக்கும் போதே குதிரை முகத்துடன் பிறந்தாள். அவள் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்கபெற்று நல்ல முகத்தை பெற்றாள்.

 ராஜகோபுரம் திறப்பு
ஒரே ஒருநாள் திறப்பு
திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரத்துக்கு மேலைக் கோபுரம் என்றும் ஒரு பெயர் உண்டு. மேற்கு திசையில் உள்ளதால் இந்த பெயர் ஏற்பட்டது.

திருச்செந்தூர் கோவில் ராஜகோபுரம் வாசல் ஆண்டு முழுவதும் அடைக்கப்பட்டே இருக்கும். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானை திருமண நாளில் மட்டுமே அந்த வாசல் திறக்கப்படும். திருச்செந்தூர் கோவிலில் நடைபெறும் பூஜைகளில் விசுவரூப தரிசனம் எனும் நிர்மால்ய பூஜையே மிக, மிக முக்கியமான பூஜையாகும்.

 செந்திலாண்டவருக்கு நன்கொடை
சர்வ சமய ஒற்றுமை
திருச்செந்தூர் முருகன் ஆலயம் சமய ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கிறது. கிறிஸ்தவ மீனவர்கள் திருச்செந்தூர் முருகனை உறவுமுறை சொல்லி அழைக்கிறார்கள். திருச்செந்தூர் கோவில் திருப்பணிகளுக்கு காயல்பட்டினத்தில் வசித்த சீதக்காதி எனும் வள்ளல் நன்கொடை அளித்துள்ளார். செந்திலாண்டவருக்கு ஆறுமுக நயினார் என்றும் பெயர் உள்ளது. திருச்செந்தூர் தாலுகா பகுதியில் வாழும் பலருக்கு நயினார் எனும் பெயர் சூட்டப்பட்டிருப்பதை காணலாம். இசுலாமியரும் நயினார் எனும் பெயர் சூட்டிக் கொண்டுள்ளனர்.

 தங்க நகைகள் காணிக்கை
அருள் பெற்ற சங்கரர்
குமரகுருபரர், பகழிக் கூத்தர், ஆதி சங்கரர், உக்கிரபாண்டியனின் மகள் உள்பட ஏராளமானவர்கள் திருச்செந்தூர் முருகனின் நேரடி அருள் பெற்றனர்.

வீரபாண்டிய கட்ட பொம்மனும் அவர் மனைவி சக்கம்மாவும் செந்திலாண்டவருக்கு ஏராளமான தங்க நகைகள் காணிக்கையாக வழங்கியுள்ளனர். திருச்செந்தூர் முருகனுக்குத் தங்கத் தேர் உள்ளது. இத்திருத்தலத்தில் நவக்கிரகங்களுக்குச் சிலை கிடையாது.

 நோய்கள் நீங்கும்
எதிரிகள் தொல்லை நீங்கும்
ஜோதிடத்தில் ஆறாம் பாவம் எதிரிகள் நோய், கடன்களை குறிக்கும் பாவம். திருச்செந்தூர் முருகனை தரிசிக்கும் முன்பு நாழிக்கிணறில் குளித்தால் நோய் நீங்கும். அதே போல சூரனை வதம் செய்த திருச்செந்தூர் முருகனை வழிபட்டு சஷ்டி தினத்தில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தினால், வழக்குகள் மற்றும் பிரச்னைகள் அனைத்திலும் இருந்தும் விடுபடலாம்.

#KANDA_SASHTI

Posted by -
புவனா,மதியழகி & மதிவதனி,
மதி கல்வியகம்,
MBM ACADEMY
WhatsApp 9629933144

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக