ஐயப்ப பக்தர்களே!!.. சபரிமலை அழைக்கிறது.. இன்னும் சில தினங்கள் மட்டுமே..!!
சபரிமலை ஐயப்பன் கோவில் !!

🌟கார்த்திகை மாதம் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கு வருவது சபரிமலை ஐயப்பன் தானே. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தொடக்கத்தில் சபரிமலையில் மண்டல பூஜை நடைபெறுவது வழக்கம்.
🌟இன்னும் சில தினங்களில் கார்த்திகை மாதம் பிறக்க இருக்கிறது. ஐயப்ப பக்தர்களே! சபரிமலை சென்று ஐயப்பனை காண தயாராகி விட்டீர்களா?
🌟சபரிமலை ஐயப்பன் கோவில் கார்த்திகை மாத பூஜைகளுக்காக வருகிற 16ஆம் தேதி மாலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
🌟பூஜையின் முக்கிய நிகழ்வான மண்டல பூஜை டிசம்பர் 27ஆம் தேதியும், ஜனவரி 15ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும்.
சபரிமலை :
🌟சபரிமலை ஐயப்பன் கோவில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே அமைந்துள்ளது.
எப்பொழுது செல்லலாம்?
🌟கார்த்திகை முதல் நாளில் இருந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.
🌟சுற்றுலாப் பயணிகள் எப்போது வேண்டுமானாலும் ஐயப்பனை காணச்செல்லலாம்.
🌟சபரிமலை ஐயப்பனின் பதினெட்டு படிகளையும் ஏறிச் செல்ல வேண்டும் என்றால் நடை திறந்திருக்கும் போது செல்லலாம்.
எத்தனை நாட்கள் வேண்டும்?
🌟சபரிமலை ஐயப்பன் சுவாமியை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இரண்டு நாட்கள் போதுமானது.
🌟மற்ற கோவில்களையும் காண வேண்டுமானால் மேலும் இரண்டு நாட்கள் போதுமானது.
கட்டாயம் காண வேண்டிய இடங்கள் :
🌟ஐயப்பன் கோவில்
🌟மாளிகைபுரத்து அம்மன் கோவில்
🌟பம்பை நதி
🌟எருமேலி
🌟பந்தளம் கோவில்
🌟பந்தளம் அரண்மனை
🌟பத்தனம்திட்டா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக