புதன், 18 ஜூலை, 2018

இந்த வார விசேஷங்கள் - 17.7.2018 முதல் 23.7.2018 வரை

இந்த வார விசேஷங்கள் - 17.7.2018 முதல் 23.7.2018 வரை

ஜூலை மாதம் 17-ம் தேதியில் இருந்து ஜூலை மாதம் 23-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.

*17-ந்தேதி (செவ்வாய்)*

சங்கரன்கோவில் கோமதியம்மன் ஆடித்தபசு உற்சவம் ஆரம்பம், தங்க சப்பரத்தில் சுவாமி புறப்பாடு.

குரங்கணி முத்துமாலையம்மன் கோவில், நாராயண சுவாமி தீர்த்தம்.

மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி சிம்மாசனத்தில் பவனி.

நத்தம் மாரியம்மன் பூந்தேரில் பவனி.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் புறப்பாடு கண்டருளல்.

கீழ்நோக்கு நாள்.

*18-ந்தேதி (புதன்)*

சஷ்டி விரதம்.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கல்யாண வைபவம்.

சங்கரன்கோவில் கோமதியம்மன் காமதேனு வாகனத்தில் வீதி உலா.

மதுரை மீனாட்சி அம்மன் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

மேல்நோக்கு நாள்.

*19-ந்தேதி (வியாழன்)*

மதுரை கள்ளழகர் ஆலயத்தில் ஆடி உற்சவம் ஆரம்பம்.

வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கோவில் உற்சவம் தொடக்கம்.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி காலை இந்திர விமானத்திலும், இரவு புஷ்பப் பல்லக்கிலும் பவனி.

மதுரை மீனாட்சி அம்மன் விருட்ச சேவை.

சங்கரன்கோவில் கோமதியம்மன் சிம்ம வாகனத்தில் வீதி உலா.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

*20-ந்தேதி (வெள்ளி)*

சங்கரன்கோவில் கோமதியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.

வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் அன்ன வாகனத்தில் பவனி.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கிருஷ்ண அவதாரக் காட்சி, சிம்ம வாகனத்தில் புறப்பாடு.

மதுரை மீனாட்சி அம்மன் கிளி வாகனத்தில் திருவீதி உலா.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி குதிரை வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் வேதவள்ளி தாயாருக்கு திருமஞ்சன சேவை.

சமநோக்கு நாள்.

*21-ந்தேதி (சனி)*

சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளி சப்பரத்தில் வீதி உலா.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சேரமான் பெருமாள் கயிலாயம் புகுதல்.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி கோவில் ரத உற்சவம்.

மதுரை மீனாட்சி அம்மன் புஷ்பப் பல்லக்கு.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராம அவதாரம், அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு.

சமநோக்கு நாள்.

*22-ந்தேதி (ஞாயிறு)*

சங்கரன்கோவில் கோமதியம்மன் கனக தண்டியல்.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கஜேந்திர மோட்சம்.

வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதி உலா.

மதுரை மீனாட்சி அம்மன் தங்க குதிரையில் திருவீதி உலா.

ராமநாதபுரம் கோதண்டராம சுவாமி இரவு தோளுக்கினியானில் பவனி.

ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

கீழ்நோக்கு நாள்.

*23-ந்தேதி (திங்கள்)*

சர்வ ஏகாதசி.

சங்கரன்கோவில் கோமதியம்மன் பூம்பல்லக்கு.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேரில் பவனி, இரவு புஷ்ப விமானத்தில் புறப்பாடு.

திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ராஜாங்க சேவை.

வடமதுரை சவுந்திரராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

சமநோக்கு நாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக