திங்கள், 16 ஜூலை, 2018

ஆடி மாதத்தின் சிறப்புகள் / Aadi Month Special


ஆடி மாதத்தின் சிறப்பை பற்றி ஒரு சிறிய பதிவு

தமிழ் மாதங்கள் 12 ஆகும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. சில மாதங்களுக்கு பழமொழியும் உண்டு. ஆடி மாதத்திற்கு ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழி இருக்கிறது.
இந்த வருடம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிறந்துள்ளது. ஆடி மாதத்தில் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பயணமாவதாக சொல்லப்படுகிறது. காற்றும், மழையும் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையும், செவ்வாய்க்கிழமையும் மிகவும் சிறப்பு வாய்ந்ததது.
ஆடி செவ்வாய் கிழமைகளில் அம்மனை வழிபட்டு வந்தால் பெண்களின் மாங்கல்ய பலம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாவும், கூழ் ஊற்றுதலும், தீ மிதித்தலும் என்று களை கட்டும்.
ஆடி அமாவாசையில் குடும்பத்தின் முதியோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டால் நமக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.
ஆடி 18 ஆம் தேதி ஆடிப்ருக்கு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் தண்ணீர் அதிகமாக வரும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா எல்லா சிறப்புகளுக்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடித்தபசு அன்று கோமதி அம்மன் கோவிலில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
ஆடி மாதத்தில் மற்றொரு சிறப்பான செய்தி ஜவுளிக்கடைகளில் விற்பனை செய்யும் ஆடித்தள்ளுபடி ஆகும். எல்லா ஜவுளிக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். புடவைகள், சுடிதார்கள் என்று எல்லாவற்றுக்கும் விலையில் தள்ளுபடி செய்து கொடுப்பார்கள்.
இது பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கும். குடும்பத்தினருடன், உறவினர்களுடன், தோழிகளுடன் என்று கடைகளுக்கு சென்று வேண்டியதை வாங்கி வருவார்கள்.
இவ்வாறாக ஆடி மாத விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக