சனி, 29 ஏப்ரல், 2017
வியாழன், 20 ஏப்ரல், 2017
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள்...
சர்வ காரிய சித்தி தரும் - மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் , ஸ்லோகங்கள்...
ஆண்களுக்கு விரைவில் திருமணம் நடக்க
1. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோ தேஹி த்விஷா ஜஹி.
2. பத்னீம் மனோரமாம் தேஹி
மானோவ்ருத்தனு ஸாரீனீம்
தாரினீம் துர்கஸம்ஸார
ஸாகரஸய குலோத்பவாம்.
3. விதேஹி தேவி கல்யாணம்
விதேஹி விபுலாம் ச்ரியம்
ரூபம் தேஹி ஜயம் தேஹி
யசோதேஹி த்விஷா ஜஹி
பெண்கள் விரைவில் மணவாழ்க்கை பெற மந்திரம்
வெள்ளிக்கிழமைதோறும் குத்துவிளக்கினை ஏற்றி கிழக்கு முகமாக வைத்துக் கொள்ள வேண்டும். விளக்கிற்கு மல்லிகை மலர் சாத்தி குங்குமத்தினால் அர்ச்சனை செய்தபடி மாந்திரீக வலிமை பெற்ற கீழ்க்கண்ட சுலோகத்தை 108 தடவைகள் வீதம் வெள்ளிக்கிழமை தோறும் 48 வாரம் விடாமல் கூறி வழிபட வேண்டும்.
ஓம் யோகினி யோகினி யோகேஸ்வரி
யோவ சங்கரீ ஸகல ஸ்தவர
ஜங்கமஸ்ய சமூகே மம உத்வாஹம்
சீக்ரம் குரு குரு க்லிம் ஸ்வயம் வராணய நம
இம்மந்திரத்தை 108 முறைகள் கூறி விளக்குப் பூஜை செய்து வழிபாடு நிகழ்த்திய பின் சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் தந்து ஆசி பெற வேண்டும்.
திருமணம் விரைவில் நடைபெற இன்னொருவித வழிபாட்டு முறை உள்ளது. கன்னிப் பெண்ணின் வயது எத்தனையோ, அத்தனை நெய் விளக்குகளை கஜலட்சுமி அல்லது துர்க்கையின் எதிரே ஏற்றி வைத்து வழிபட வேண்டும். எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி ஒரு துண்டைப் பிழிந்துவிட்டு மேல் பக்கம் உள்ளே செல்லும்படி மடித்துக் கிண்ணம் போலாக்க வேண்டும். அந்தக் கிண்ணத்தில் நெய் ஊற்றி திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.
கஜலட்சுமிக்கு என்றாலும் துர்க்கைக்கு என்றாலும் சுத்தமான மஞ்சள் தூளினால் அர்ச்சனை செய்ய வேண்டும். இதற்கு பால் பாயசம் நிவேதனம் செய்து வழிபாடு முடிந்ததும் குழந்தைகளுக்கு பிரசாதம் தர வேண்டும். அர்ச்சனை செய்த மஞ்சளைப் பூசி தினமும் நீராட வேண்டும். நீராடி முடித்ததும், கிழக்கு நோக்கி நின்று கொண்டு இரு கைகளாலும் நீரை எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி மும்முறை நீரை கீழே கொட்ட வேண்டும்.
நாமோ விவஸ்தே பிரும்மன்
பாஸ்வதே விஷ்ணு தேஜஸே
ஜகத் ப்ரஸவித்ரே ஸுர்யாய
ஸவித்ரே கர்ம தாயினே
ஸுர்யாய நம: இதம் அர்க்யம்:
இதை மும்முறை கூறி நீரை தாரை வார்க்க வேண்டும். இதனால் ஏழு ஜென்மத்துக்கும் மாங்கல்ய பலம் ஏற்படும். திருமணமும் விரைவில் கைகூடும். இதே போல காலையில் நீராடி துளசி மாடத்திற்கு விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தபடி கீழ்க்கண்ட மந்திர சுலோகத்தைக் கூறி வழிபட்டு வர விரைவில் திரு மணம் கைகூடும்.
துளஸீமே சிரப்பது
பலம் பங்கஜ தாரிணி
த்ரி செனமே பத்ம நயனா
ஸ்ரீஸகி ஸ்ரவ ணேமம
கிறாணம் சுகந்தா மேபாது
முகஞ்ச சுமுகீ மம
ஸகந்தென கல்ஹாரிணீ பாது
ஹ்ருதயம் விஷ்ணு வல்லபா
புஷ்பதா மத்மயம் பாது
நாபிம் ஸெளபாக்ய தாயிணி
கடிதம் குண்டலனி பாது
ஊரு வாத வந்திதா
ஜெனனீ ஜானுனீ பாது
ஐஸ்கே சகல வந்திதம்
நாராயணப் ப்ரியே பாது
ஸர்வாஸ்கம் ஸர்வ ரக்ஷகா
ஸங்கடே விடிமே துர்கே
பயே வாதே மஹா ஹவே
ராத்யஹ ஸந்த யோ ஹேபாது
துளஸீ ஸர்வத ஸதா
இதீதம் பரமம் குஹ்யம்
துளஸ்யா கவசம் முதா
துளஸீ கானனே திஷ்டன்
ஆஸீ னோவா ஜபேத்யதி
ஸர்வவான் காமான் அவாப் னோத
விஷ்ணு சாயுஜ்ய முச்யதி
எனக்கூறி கற்பூர தீபம் காட்டி வணங்கி வரவேண்டும். இவ்வாறு நாள்தோறும் பக்திப் பெருக்குடன் செய்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும்.
நல்ல வரன் அமைய மந்திரம்
அபிராமி அந்தாதி பதிகம்
அதிசயமான வடிவுடை
யாள் அரவிந்த மெல்லாம்
துதிசய ஆனன சுந்தர
வல்லி துணை இரதி
பதிசய மானது அபசய
மாகமுன் பார்த்தவர்தம்
மதிசய மாகவன்றோவாம
பாகத்தை வவ்வியதே
தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.
அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில்
அமர்ந்தருளினாள்.
திருமணம் நிறைவேற மந்திரம்
திங்கட்பகவின்மணம் நாறும்
சீறடி சென்னிவைக்க
எங்கட்கு ஒருதவம் எய்திய வாஎண்
ணிறந்த விண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவமெய்து
மோதரங் கக்கடலுள்
வெங்கட் பணியணை மேல் துயில்
கூரும் விழுப்பொருளே.
பாற்கடலின் அலைகளுக்கிடையே கொடிய கண்களையுடைய பாம்பணையின் மேல் வைஷ்ணவி என்னும் பெயருடன் அறிதுயிலில் ஆழ்ந்திருக்கும் அன்னை அபிராமியே! பிறைநிலவின் மணம் வீசும் சிறந்த நின் திருவடிகளை எங்கள் சிரத்தின் மேல் கொள்ள எங்களுக்கு வாய்க்கப் பெற்ற பாக்கியம் வேறு தேவர்களுக்கும் வாய்க்குமோ.
மாங்கல்ய பாக்கியம் நிலைக்க
சில பெண்களின் ஜாதகத்திலேயே மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும். சிலரது கணவர்களுக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எனவே மாங்கல்ய பாக்கியம் நிலைக்க கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வரவேண்டும்.
1. ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய
ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே
விதிசதமகாத்யா திவிஷத:
2. கராளம் பத் க்ஷவேளம்
கபளித வத: கால கலநா
நசம்போ: தந்மூலம்தவ
ஜனநி தாடங்க மஹிமா
(அமிர்தத்தைச் சாப்பிட்டும் தேவர்கள் ஆபத்தைச் சந்திக்கிறார்கள். உன்னுடைய தாடங்க மகிமையால்தான் விஷமுண்ட பரமன்கூட மரணத்தை அடையவில்லை.
சுகப்பிரவசம் நடைபெற ஸ்ரீ கர்ப்ப ரட்சாம்பிகை ஸ்தோத்திரம்
அம்பாள் சன்னதியில் பிரம்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷ?தர் அவர்களால் மெய்மறந்து இயற்றப்பட்ட ஸ்தோத்திரம். தினசரி பாராயணம் செய்ய உகந்தது.
ஸ்ரீ மாதவீ கானனஸ்தே - கர்ப்ப
ரக்ஷõம்பிகே பாஹி பக்தம் ஸ்துவந்தம் (ஸ்ரீ)
வாதபீதடே வாமபாகே - வாம
தேவஸ்ய தேவஸ்ய தேவீஸ்துதித்வம்
மாந்யா வரேண்யாவதான்யா - பாஹி
கர்ப்பஸ்த ஜந்தூனதா பக்த லோகான் (ஸ்ரீ)
ஸ்ரீ கர்ப்ப ரக்ஷõ புரேயா - திவ்ய
ஸெளந்தர்ய யுக்தா ஸுமாங்கல்ய காத்ரீ
தாத்ரீ ஜனித்ரீ ஜனானாம் திவ்ய
ரூபாம் தயார்த்ராம் மனோக்ஞாம் பஜேதாம் (ஸ்ரீ)
ஆஷாடே மாஸே ஸுபுண்யே - சுக்ர
வாரே ஸுகந்தேன கந்தேன லிப்தா
திவ்யாம் பராகல்ப தேஷா - வாஜ
பேயாதி யாகஸ்த பக்தைஸ் ஸுத்ருஷ்டா (ஸ்ரீ)
கல்யாண தாத்ரீம் நமஸ்யே -வேதி
காக்ய ஸ்த்ரியா கர்ப்ப ரக்ஷõ கரீம் த்வாம்
பாலைஸ் ஸதாஸே விதாங்க்ரிம் - கர்ப்ப
ரக்ஷõர்த்த மாராது உபேதைரு பேதாம் (ஸ்ரீ)
ப்ரம் மோத்ஸவே விப்ரவீத்யாம் - வாத்ய
கோஷேண துஷ்டாம் ரதே ஸந்நிவிஷ்டாம்
ஸர்வார்த்த தாத்ரீம் பஜேஹம் - தேவ
ப்ருந்தை ரபிட்யாம் ஜகன் மாதரம் த்வாம் (ஸ்ரீ)
ஏதத் க்ருதம் ஸ்தோத்ர ரத்னம் - தீக்ஷ?
தானந் தராமேண தேவ்யாஸ் ஸுதுஷ்ட்யை
நித்யம் படேத்யஸ்து பக்தியா - புத்ர
பௌத்ராதி பாக்யம் பவேத்தஸ்ய நித்யம்: (ஸ்ரீ)
தீர்க்க சௌமாங்கல்யம் அளிக்கும் ஸ்லோகம்
இது சாவித்திரிஸ்ரீ, சாவித்திரி தேவியை பூஜித்து நமஸ்கரித்து பிரார்த்தித்த ஸ்லோகம். காலையில் தினமும் ஜெபிக்க வேண்டியது. கவனமாகப் படித்து பிழையி
ல்லாமல் சொல்லவும்.
ஓம்கார பூர்விகேதேவி வீணாபுஸ்தக தாரிணி
வேத மாதர் நமஸ்துப்யம் அவைதவ்யம் ப்ரயச்சமே
பதிவ்ரதே மஹாபாஹே பர்துச்ச ப்ரியவாதினி
அவைதவ்யம்ச ஸெளபாக்யம் தேஹித்வம் மமஸுவ்ருதே
புத்ரான் பௌத்ராம் ஸ்ச ஸெளக்யம்ச ஸெளமாங்கல்யம் ச தேஹிமே
தீர்க்க சௌமாங்கல்யம் பெற
ஸுதாமப் யாஸ்வாத்ய ப்ரதிபய ஜராம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதிசதமகாத்யா திவிஷத:
கராளம் யத் க்ஷ?வேளம் கபளித வத; கால கல நா
நசம்போ: தந்மூலம் தவ ஜனநி தாடங்க மஹிமா.
ப்ருக்ருதிம் ஜகதாம்பாது பதிபுத்ரவ கீஷுச
யத்ந்ரே ஷுபூஜயேத் தேவீம் தநஸந்தான ஹேதவே
இஹலோகஸுகம்புங்கத் வாயாத் யந்தேதேஸ்ரீவிபோ: பதம்
சாக்ஷúர் நிவேஷப்ரளய: யஸ்யாய் ஸர்வாந்தராத்மநே;
உந்மீல நேவுநஸ் ஸ்ருஷ்டி; தஸ்யா பூஜாவிதாநத;
க்ருஹீத்வா ஸ்வாமி நம்ஸாசச ஸாவித்ரி நிஜமாலயம்
லக்ஷ வர்ஷம் ஸுகம் புங்கத்தவா தேவீ லோகம் ஜகாமஸா.
மாங்கல்ய பலம் தரும் அபிராமி அந்தாதி
துணையும் தொழுந் தெய்வ மும்பெற்ற
தாயும் சுருதிகளின்
பணையும் கொழுந்தும் பதி கொண்ட
வேரும் பனிமலர்பூங்
கணையும் கருப்புச்சிலையுமென்
பாசாங்குசமும் கையில்
அணையும் திரிபுர சுந்தரி
யாவது அறிந்தனமே.
அழகிய மலரினை அம்பாகவும், இனிய கரும்பினை வில்லாகவும் மற்றும் பாசமும் அங்குசமும் கரங்களில் பெற்றிருக்கும் திரிபுரசுந்தரியே! எமைப் பெற்ற தாயே! நீ வேதமாகவும் அவற்றின் கிளை (சாகை) களாகவும், துளிகளாகவும் (உபநிடதம்) அதன் வேராகவும் (பிரணவம்) விளங்குகிறாய் என்பதை அபிராமியின் தெய்வீக அருளால் அறிந்துணர்ந்தோம்.
இல்வாழ்க்கையில் இன்பம் பெற
ஆனந்த மாய் என்அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுஉடை யாள்மறை நான்கினுக்கும்
தானந்த மான சரணார விந்தம் தவளநிறக்
கானந்தம் ஆடரங் காம்எம்பி ரான்முடிக் கண்ணியதே.
ஐம்பூத வடிவாகத் திகழ்பவள் அபிராமி. அமிர்தமாகவும், அறிவாகவும், ஆனந்தமாகவும் விளங்குகிறாள். வேதங்களாலும் அறிய முடியாத அம்பிகையின் திருவடித் தாமரைகள் திருவெண் காட்டிலே (சுடலையில்) திருநடமிடும் எம்பிரானின் தலை மாலையாக விளங்குகின்றன.
நல்ல குழந்தைகளாக வளர
தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றி லேன்ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பம் இக்கு அலர் ஆகநின் றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடி யார்பெற்ற பாலரையே
மலர் அம்புகளும், நீண்ட கரும்பு வில்லும் கொண்டிருக்கும் அபிராமி வல்லியே! உன் தவநெறியே அன்றி அடைக்கலம் வேறு ஒன்றுமில்லை என நான் அறிந்தும் அவ்வழியில் முயன்று நடைபயில எண்ணவில்லை. பேதையரைப் போன்றவர்கள் இந்த செம்பஞ்சுக் குழம்பு ஒளிவீசும் பாதங்களை உடைய பெண்கள். இவர்கள்
தாம் பெற்ற குழந்தைகளைத் தண்டிக்க மாட்டார்கள். எனவே விரைந்து எனக்கு அருள்புரிவாய் அன்னையே!
ஆண் குழந்தை ப்ராப்த்தி உண்டாக
ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனமுன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும் செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனுமுண்டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே
அன்னையே அபிராமியே! விண்ணுலகும் மண்ணுலகும் அறியுமாறு அந்த மன்மதனை சிவன் எரித்தார். ஆனால், நீசெய்த அருள் செயலால் அப்பெருமானுக்கு ஆறுமுகங்களும் ஈறாறு கரங்களும் உடைய ஞானக் குழந்தையே பிறந்தானே. என்னே உன் அன்பு !
குழந்தைப் பேறு உண்டாக
தாமம் கடம்பு படைபஞ்ச பாணம் தனுக்கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த
சேமம்திருவடி செங்கைகள் நான்கு ஒளி செம்மையம்மை
நாமம் திரிபுரை ஒன்றோ டிரண்டு நயனங்களே
திருபுரை என்னும் பெயரும் கொண்டவள் அபிராமி. அன்னையின் நெற்றிக் கண்ணும் பிற இரண்டு கால்களும் நான்கு கைகளும் செந்நிறங் கொண்டன. மாலையோ கடம்ப மாலை. படையோ பஞ்ச பாணங்கள். வில், கரும்பு, தேவியை வணங்கும் நேரமோ பைரவர்க்குரியதான நள்ளிரவு. அந்த அன்னை எனக்கென வைத்த செல்வமோ தாமரைத் திருவடிகள்.
கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கி வாழ
வருந்தா வகை என் மனத்தா
மரையினில் வந்துபுகுந்து
இருந்தாள் பழைய இருப்பிட
மாக இனிஎனக்குப்
பொருந்தா தொருபொருள்
இல்லைவிண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்தா
னதைநல்கும் மெல்லியலே
திருபாற்கடலிலே தோன்றிய அமிர்தத்தைத் திருமால் தேவர்களுக்கு வழங்கிடக் காரணமாக இருந்த அபிராமவல்லி, யான் பிறந்தும் இறந்தும் வருந்தாமல் என் இதயத் தாமரையில் எழுந்தருளித் தமது பிறப்பிடமாக எண்ணி உறைவிடமாக உறைந்தருளினாள். எனவே, இனி உலகில் எனக்கு வந்தமையாத செல்வம் ஏதுமுண்டா?
கல்யாண சித்தி பெற மந்திரம்
வெள்ளி அல்லது செவ்வாய்கிழமையில் கோவிலில் துர்க்கை அம்மன் முன்பாக இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும். தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும். இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமணம் சீக்கிரமே நல்ல இடத்தில் அமைந்து மங்களமாக முடியும்.
மந்திரம்
ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருதயம்
மம வசம் ஆக்ருஷ்ய சுவாஹா !
தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாக ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ண மந்திரம்
சந்தான பிராப்தி இந்த மந்திரத்தின் குறிக்கோளாகும். புத்திர தோஷம், சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கு உபதேசம் செய்து வைக்கலாம். உபதேசம் செய்து வைப்பவர் இந்த மந்திரத்தை பாராயணம் செய்திருக்க வேண்டும். தனுர் ராசி உபாசகர்களுக்கு மிக்க பலன் தரும் மந்திரம். முதலில் 18 முறை வீதம் 18 நாட்கள் ஜெபம் செய்ய வேண்டும். பின் 54 நாட்கள், 54 முறை வீதமும், பின் 108 நாட்கள் வரை 54 முறை வீதமும் ஜெபம் செய்ய வேண்டும். முழு ஜெபத்தையும் தோஷ பரிகாரமாகத் தர்ப்பணம் செய்துவிட வேண்டும். அதன்பின் 108 வீதம் தொடர் ஜெபம் செய்து அதன்பின் சங்கல்ப சங்கியை அல்லது அக்ஷரலக்ஷம் நிறைந்ததும் பாராயணம் செய்ய வேண்டும்.
இதனை புன்னை மரத்தடியில் ஜெபம் செய்வது சிறப்பு. கோமடம், துளசி வனம் போன்ற இடங்களும் ஜெபம் செய்ய ஏற்ற தலமாகும். ஜெபம் செய்ய கிழக்கு, வடக்கு திசைகள் சிறப்பு. காலையில் கிழக்கு திசை நோக்கியும், மாலையில் வடக்கு திசை நோக்கியும் ஜெபம் செய்ய சித்தி கிடைக்கும். பிரம்ம முகூர்த்தம் முதல் சூரியோதயம் வரை ஜெபம் செய்ய ஏற்ற காலம்.
அஸ்ய ஸ்ரீ ஸந்தான கோபாலகிருஷ்ண மஹா
மந்த்ரஸ்ய பகவான் நாரத ருஷி: அனுஷ்டுப்
சந்த: ஸ்ரீதேவகீஸுதோ தேவதா
க்லாம்-பீஜம், க்லீம்: சக்தி : க்லூம் கீலகம்
மம ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண-ப்ரஸாத-
த்வாரா ஸத்சந்தான-ஸித்தயர்த்தே ஜபே விநியோக:
க்லாம்-க்லீம்-க்லூம்-க்லைம்-க்லௌம்
க்ல: இதி கரந்யாஸ: அங்க ந்யாஸச்ச
பூர்ப்பு வஸ்ஸுவரோமிதி திக்பந்த: த்யானம்
த்யாயாமி பாலகம் கிருஷ்ணம் மாத்ரங்கே ஸ்தன்ய பாயினம்
ஸ்ரீ வத்ஸ வக்ஷஸம் காந்தம் நீலோத் பல - தலச்சவிம்
லம்-இத்யாதி பஞ்சபூஜா
மந்திரம்
ஓம்-ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லௌம்-தேவகீசுத
கோவிந்த வாஸுதேவ ஜகத்பதே தேஹிமே
தனயம் க்ருஷ்ண த்வா மஹம் சரணம் கத:
ஹ்ருதயாதி-ந்யாஸ
பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்விமோக
த்யானம் பஞ்சபூதா ஸமர்ப்பணம்
நரசிம்ம மந்திரம்
அஸ்யஸ்ரீ ந்ருஸிம்மாநுஷ்டுப் மஹா மந்த்ரஸ்ய
ப்ரும்மா ருஷி: அநுஷ்டுப்ச்சந்த்:
ஸ்ரீ லக்ஷ?மீ ந்ருஸிம்மகோ தேவதா-ஸ்ரீ லக்ஷ?மீ
ந்ருஸிம்ம ப்ரஸாத ஸித்யர்த்தே ஜபே விநியோக:
உக்ரம் வீரம் - அங்குஷ்டாப்யாம் நம
மஹா விஷ்ணும்-தர்ஜனீப்யாம் நம
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்-மத்ய மாப்யாம் நம
ந்ருஸிம்மம் பீஷணம்-அநாமிகாப்யாம் நம
பத்ரம் ம்ருத்யூம்ருத்யும்-கநிஷ்டிகாப்யாம் நம
நமாம்யஹம்-கரதலகரப்ருஷ்டாப்யாம் நம
உக்ரம் வீரம்-ஹ்ருதயாய நம
மஹாவிஷ்ணும்-சிரஸே ஸ்வாஹா
ஜ்வலந்தம் ஸர்வ தோமுகம்-சிகாயை வஷட்
ந்ருஸிம்மம் பீஷணம்-கவசாய ஸும்
பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும்-நேத்ராத்யாய வெளஷட்
நமாம்யஹம்-அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:
தியானம்
மாணிக்யாதி ஸமப்ரபம் நிஜருஜா ஸந்த்ராஸ்ய
ர÷க்ஷõகணம்: ஜாநுந்யஸ்த கராம்புஜம்
த்ரிநயனம் ரத்நோல்லஸத் பூஷணம்
பாஹுப்யாம் த்ருத சங்க சக்ர மநிசம் தம்ஷ்ட்ரோக்ர
வக்த் ரோஜ்வலம்: ஜ்வாலா ஜிஹ்வ முதக்ர
கேச நிவஹம் வந்தே ந்ருஸிம்மம் விபும்
லம்-பிருதிவ்யாத்மனே கந்தம் ஸமர்ப்பயாமி
அம்-ஆகாசாத்மனே புஷ்பாணி ஸமர்ப்பயாமி
யம்-வாய்வாத்மனே தூபமாக்ராபயாமி
ரம்-வஹ்னி யாத்மனே தீபம் தர்சயாமி
வம்-அம்ருதாத்மனே அம்ருதம் நிவேதயாமி
ஸம்-ஸர்வாத்மனே ஸர்வோபசாரான் ஸமர்ப்பயாமீ
மூலமந்திரம்
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும் ஜ்வலந்தம்
ஸர்வதோ முகம்! ந்ருஸிம்மம் பீஷணம்
பத்ரம் மிருத்யு மிருத்யும் நமாம்யஹம்
துக்கம் விலக மந்திரம்
துர்க்காம் மேஹ்ருதயஸ்திதாம் நவநவாம் தேவீம் குமாரீமஹம்
நித்யம் ஸர்வபயேன பக்திபரித: ஸூக்தேயதாம்னாயதே
துர்க்காம் தேவீம் சரணமஹம் ப்ரபத்யே மந்த்ரம் ஸதா ஸ்ருத் க்ருதான்
அஸ்மான் ரக்ஷணதீக்ஷ?தாம் ஸுமஹதீம் வந்தே ஜகன்மாதரம்
துர்க்கை அம்மா என் உள்ளத்தில் குமாரியாக இருக்கிறாள். அவளை பயபக்தியுடன் சொன்னபடி துர்கா தேவி அம்பாளை சரணடைகிறேன் என்ற மந்திரத்தை ஹ்ருதயத்திலேயே ஜபித்துக் கொண்டிருக்கும் எங்களை ரக்ஷ?ப்பதிலேயே முக்கியமான கருணையுடன் இருக்கும் மஹாதேவி ஜகன்மாதாவை சரணம் அடைகிறேன். இந்த நவதுர்கா ஸ்லோகம் துர்க்காம் என்று ஆரம்பித்து வந்தே ஜகன்மாதரம் என்று முடிக்கும். இதைப் பாராயணம் செய்பவர்களுக்கு கஷ்டம், நோய், துக்கம் வராது என்பது சத்யம்.
சௌபாக்கிய லட்சுமி
ஸெளமங்கல்யாம்பீப்ஸிதா: பதிமதீ:
ஸெளந்தர்ய ரத்னாகரா:
பர்த்தாஸங்கமுபேயுஷீ: ஸுவஸனீ:
ஸீமந்தனீஸ் ஸுப்ரியா:
ப்ரேம்ணா புத்ரகிருஹாதி பாக்யவிபவை:
ஸம்யோஜ்ய ஸம்ரக்ஷதீம்
ஸ்ரீ விஷ்ணுப்ரியகாமினீம் சுபகரீம்
ஸெளபாக்ய லக்ஷமீம் பஜே
சௌமாங்கல்யத்தை விரும்பும் சுமங்கலிகள் சௌபாக்கிய லட்சுமிக்கு பிரியமானவர்கள். அவர்களை ப்ரேமையுடன் குழந்தைகளையும், வீடு, தோட்டம், வாகனம், ஐஸ்வரியம், ஆரோக்கியம், மாங்கல்யம் முதலாக கொடுத்து ரட்சிக்கும் ஸ்ரீ விஷ்ணுவிடம் அதிகமாக ஆசை வைத்திருக்கும் லட்சுமிதான் சௌபாக்கிய லட்சுமி அம்மாளை ஜெபிக்கிறேன்.
மகாலட்சுமி ஸ்துதி
மகாலட்சுமி ஸ்துதி
தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க ஏதுவாக எளிமைப்படுத்தி இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )
மகாலட்சுமி ஸ்துதி
1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:
10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:
புதன், 19 ஏப்ரல், 2017
பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்
பாவங்களின் 42 வகை. வள்ளலார் பட்டியலிட்டுக் கூறுகிறார்
அவை:
1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைக் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.
செவ்வாய், 18 ஏப்ரல், 2017
அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்
அர்ச்சனைப் பூக்களின் பலன்கள்
⚜ கடவுளுக்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் கிட்டும்! ஆலயத்திலோ அல்லது வீட்டிலோ இருக்கும் தெய்வங்களை பூக்கள் கொண்டு பூஜிப்பதுதான் வழக்கம். ஒவ்வொரு தெய்வத்தையும் வழிபடும் போதும், பூஜை செய்யும் போதும் நாம் அர்ச்சனைக்கு உபயோகிக்கும் மலர்களைக் கொண்டு நமக்கு கிட்டும் பலன்கள் வித்தியாசப்படும். ஆம் தெய்வத்திற்கு எந்தெந்த பூக்களால் அர்ச்சனை செய்தால் என்ன மாதிரியான பலன்கள் நமக்கு கிட்டும் என்பது இங்கு காண்போம்.
அர்ச்சனைப் பூக்களின் அருமையான பலன்கள் :
⚜ அல்லிப்பூ ⇔ செல்வம் பெருகும்.
⚜ பூவரசம்பூ ⇔ உடல் நலம் பெருகும்.
⚜ வாடமல்லி ⇔ மரணபயம் நீங்கும்.
⚜ மல்லிகை ⇔ குடும்ப அமைதி.
⚜ செம்பருத்தி ⇔ ஆன்ம பலம், நோயற்ற வாழ்வு.
⚜ காசாம்பூ ⇔ நன்மைகள்.
⚜ அரளிப்பூ ⇔ கடன்கள் நீங்கும்.
⚜ அலரிப்பூ ⇔ இன்பமான வாழ்க்கை.
⚜ ஆவாரம் பூ ⇔ நினைவாற்றல் பெருகும்.
⚜ ரோஜா பூ ⇔ நினைத்தது நடக்கும்.
⚜ மருக்கொழுந்து ⇔ குலதெய்வம் அருள்.
⚜ சம்பங்கி ⇔ இடமாற்றம் கிடைக்கும்.
⚜ சங்குப்பூ (வெள்ளை) ⇔ சிவப்பூஜைக்கு சிறந்தது.
⚜ சங்குப்பூ (நீலம்) ⇔ விஷ்ணு பூஜைக்கு சிறந்தது.
⚜ மனோரஞ்சிதம் ⇔ குடும்ப ஒற்றுமை
⚜ தாமரைப்பூ ⇔ செல்வம் பெருகும், அறிவு வளர்ச்சி பெறும்.
⚜ நாகலிங்கப்பூ ⇔ லட்சுமி கடாட்சம், ஆரோக்யம்.
⚜ முல்லை பூ ⇔ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்.
⚜ நித்திய கல்யாணி பூ ⇔ முன்னேற்றம் பெருகும்.
⚜ தங்க அரளி (மஞ்சள் பூ) ⇔ குருவின் அருள், பெண்களுக்கு மாங்கல்ய பலம் கடன்கள் நீங்கும், கிரக பீடை நீங்கும்.
⚜ பவள மல்லி ⇔ இது தேவலோக புஷ்பமாகும். இந்த செடியினை வீட்டில் வளர்ப்பது மிக அவசியமாகும். இதன்மூலம் தேவர்களினதும், ரிஷிகளினதும் அருளும், ஆசியும் கிடைக்கும்.
⚜ பழைய புஷ்பங்கள், மலராத மொட்டுக்கள், தூய்மை இல்லாத பூக்களைக் கொண்டு இறைவனிற்கு அர்ச்சனை செய்யக்கூடாது.
⚜ அரச்சனை செய்த பூக்கள் கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகள் காலில் மிதிபடாதவாறு போட வேண்டும். முடிந்தால் தூய்மையான ஓடுகின்ற தண்ணீரில் விடலாம். அல்லது தூய்மையான இடத்தில் குழி தோண்டி போட்டு மூடிவிடலாம்.
⚜ கோவிலில் சாமிக்கு போட்ட மாலைகளை வாகனங்களில் முன்பக்கம் கட்டுவது மிகபெரிய சாபம். இதனால் தீமைகள் உண்டாகும் நன்மைகள் கிடைக்காது.
பூஜைக்கு சிறப்பான பூக்கள் :
⚜ திருமாலுக்கு ⇔ பவளமல்லி, மருக்கொழுந்து துளசி.
⚜ சிவன் ⇔ வில்வம், செவ்வரளி.
⚜ முருகன் ⇔ முல்லை, செவ்வந்தி, ரோஜா.
⚜ அம்பாளுக்கு ⇔ வெள்ளை நிறப்பூக்கள் ஆகியவை பூசைக்கு சிறப்பானவை.
ஆகாத பூக்கள் :
⚜ விநாயகருக்கு ⇔ துளசி.
⚜ சிவனுக்கு ⇔ தாழம்பூ.
⚜ அம்பாளுக்கு ⇔ அருகம்புல்.
⚜ பெருமாளிற்கு ⇔ அருகம்புல்.
⚜ பைரவர் ⇔ நந்தியாவட்டை.
⚜ சூரியனுக்கு ⇔ வில்வம் ஆகியவை பூஜைக்கு ஆகாதவை.
அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!
அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது. எல்லா நலன்களையும் குறைவிலாது அள்ளிக் கொடுக்கும் இந்தத் திருதியை நன்னாளை அட்சய திருதியை என அழைத்துப் போற்றிக் கொண்டாடினர். அதனால் தான் மிக விலையுயர்ந்ததாகக் கருதப்படும் தங்கத்தை அன்று மக்கள் வாங்குகின்றனர். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. பௌர்ணமி திதி, அமாவாசை திதி, சதுர்த்தி திதி, ஏகாதசி திதி, அஷ்டமி திதி போன்ற திதிகளைப் போன்றே அமாவாசைக்குப் பிறகு வரும் திருதியை திதியும் சிறப்பு திதியாகத் திகழ்கிறது. அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாளான திருதியைத் திருநாள் திருமகளுக்குரிய நாளாகத் திகழ்கிறது. அதிலும் தமிழ் மாதத்தில், சித்திரை மாத அமாவாசைக்குப் பிறகு வரும் 3-வது பிறையான அட்சயத் திருநாள் மிகவும் மகிமைமிக்கது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.
அட்சயதிருதியால் ஏற்படும் பலன்கள்:
இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது, எந்த வகையிலாவது பிறருக்கு உறுதுணையாக இருப்பது இவற்றினாலும் தர்மதேவதையின் அருளைப் பெற்று, இந்த அட்சய திருதியையில் புண்ணியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அட்சய திரிதியை நாளில் கொடுக்கும் தானம், அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.
அன்று பித்ருக்களுக்கு பிதுர்பூஜை என்று சொல்லக்கூடிய தர்ப்பணங்களைச் செய்து அவர்களின் ஆசியைப் பெற்றால், குடும்பமும் வாரிசுகளும் வளர்ச்சியடைவார்கள்.
திருமகள் அம்சமாக நல்ல மனைவி அமைய விரும்புவோர், தங்களுக்கு நல்ல மருமகள் வர விரும்பும் பெற்றோர், அட்சய திருதியையில், திருக்கோயிலில் வைத்து பெண் பார்க்கும் வைபவத்தையோ நிச்சயதார்த்தத்தையோ நடத்தினால் விரும்பியபடி மணமகள் அமைவாள்.
அட்சய திருதியை அன்று என்ன செய்ய வேண்டும்:
இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம்.
எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே.
வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும்.
நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான-தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்:
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
அளவற்ற வளம் தரும் அட்சய திருதியை!
* கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கௌரி தேவியை எழுந்தருளச் செய்து சொர்ண கௌரி விரதம் கடைபிடிப்பர். இதன்மூலம் பார்வதிதேவி, தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகின்றனர். குழந்தைப்பேறு, சுமங்கலிப் பாக்கியம், உடல்நலம் ஆகியவற்றுக்காக கர்நாடக பெண்கள் விரதம் இருப்பர். விரத முடிவில் அட்சய திருதியை தானமும் வழங்குவர்.
* அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணிய தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
* நவ திருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி அருகில் உள்ளது. பெருமாள், குபேரனுக்கு மரக்கால் என்ற அளவை பாத்திரம் கொண்டு செல்வத்தை அளந்து கொடுத்தார். அந்த மரக்காலை தன் தலைக்கு அடியில் வைத்தபடி படுத்திருப்பார். இவரை வைத்தமாநிதி என்றும், செல்வம் அளித்த பெருமாள் என்றும் அழைப்பர். அட்சய திருதியை நாளில் இவரை தரிசித்தால் வாழ்வில் வளம்சேரும்.
* காசியில் மக்களின் பசி போக்குவதற்காக பார்வதிதேவி, அன்னபூரணியாக அவதாரம் எடுத்தார். அன்னம் என்றால் உணவு என்று பொருள். பூரணி என்றால் முழுமையாக உடையவள் என்று பொருள். உணவை முழுமையாக கொண்ட அன்னபூரணி அட்சய பாத்திரம் பெற்று அதிலிருந்து வற்றாத உணவை எடுத்துக் கொடுத்து பக்தர்களின் பசியைப் போக்கினார். அந்த சமயத்தில் மக்களோடு மக்களாக சிவபெருமானும் அன்னபூரணியிடம் உணவு வாங்கிச் சாப்பிட்டார். அந்த நாள்தான் அட்சய திருதியை. எனவே, அட்சய திருதியை தினத்தன்று ஓம் நமச்சிவாய சொல்லி பரமேஸ்வரனின் அருளைப் பெறுவோம்.
* அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோயில்களிலிருந்தும் 16 பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்குத் தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
* மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் அட்சய திருதியை என்றால் திருமணம் தான் என்கிறார்கள். அந்த நாளில் திருமணம் செய்தால் எல்லா வளமும் பெறலாம் என்பது அவர்களது நம்பிக்கை. அதனால் அன்று நிறைய திருமணங்கள் நடைபெறுகின்றன.
அட்சயதிரிதியை தினத்தில் மகாலட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால் மகாலட்சுமியே பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவன்கோயிலுக்கு சென்றால் பலன் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. திருச்சி அருகே அமைந்துள்ள வெள்ளூரில் தான் மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மன் சிவகாம சுந்தரி தெற்கு நோக்கி தனி சன்னதியில் அருள்பாலிக்கிறாள்.
அட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள் ...
1. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
2. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப்பியாசம் செய்யும் சடங்கு 'அட்சய திருதியை' நாளில் செய்யப்படு கிறது.
3. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
4. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
5.. அன்னதானம் செய்வதும்,
6. கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
7. பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
8. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத் தரும்.
9. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
10. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
திங்கள், 17 ஏப்ரல், 2017
தானங்கள் கொடுப்தன் மூலம் நலல் பலன்கள் கிடைக்கும். இதோ அதன் விவரம்:-
தானங்கள் கொடுப்தன் மூலம் நலல் பலன்கள் கிடைக்கும். இதோ அதன் விவரம்:-
1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்
2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்
3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்
4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்
5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்
6. நெய் தானம் தர நோயைப் போக்கும்
7. பால் தானம் தர துக்கநிலை மாறும்
8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்
9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்
10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்
11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்
12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்
13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்
14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்
15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.
எனவே, இந்த தானங்களை செய்து நாம் வாழ்வில் நன்மை பெறலாம்
ஓம் நமச்சிவாய. 63 நாயன்மார்கள் வரலாறு
ஓம் நமச்சிவாய. 63 நாயன்மார்கள் வரலாறு
நாயன்மார் வரலாற்று சுருக்கம்!
1. திருநீலகண்ட நாயனார்:
கூடா நட்பின் விளைவால், மனைவியை இளம் வயது முதல் தீண்டக் கூடாது, முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்:
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
3. இளையான்குடிமாற நாயனார்:
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர்.தன்னுடைய , வீட்டுக் கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
4. மெய்ப்பொருளார்:
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான்.
இருப்பினும், சாகும்தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்
5. விறல்மிண்டர்:
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.
6. அமர்நீதியார்:
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும்,குடும்பத்தையும் ஈடாகத் தந்தவர்.
7. எறிபத்தர்:
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
8. ஏனாதிநாதர்:
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
9. கண்ணப்பர்:
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்புப் பெருக்கால் மாமிசத்தையும் இறைவருக்குப் படைத்தவர்.
10. குங்கிவியக்கலயர்:
சாய்ந்த லிங்கத்தை தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று உணவு வாங்காமல் சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
11. மானக்கஞ்சறார்:
தன் மகளுக்குக் கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
12. அரிவாட்டாயர்:
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால் மாறாக தன்னுடைய கழுத்தை வெட்டத்துணிந்தவர்.
13. ஆனாயர்:
புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.
14. மூர்த்தி நாயனார்:
சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும் திருநீறு, உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.
15. முருக நாயனார்:
வழிபாட்டுக்கு உரிய காலத்திற்கு ஏற்ப எம்பெருமானுக்கு பூமாலையாம் பாமாலையை (பாட்டினால்) சாத்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.
16. உருத்திரபசுபதி:
கழுத்தளவு நீரில் பகல் இரவு பாராமல் ருத்ரம் ஓதியவர்.
17. திருநாளைப்போவார்:
தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.
18. திருக்குறிப்புத் தொண்டர்:
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்குத் துணியைத் துவைத்தவர். ஆனால், குறித்தநேரத்தில் தன் பணியைச் செய்ய இயலாததால் தன் தலையைக் கல்லில் மோதியவர்.
19. சண்டேசுர நாயனார்:
சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்தவர். பாற்குடத்தைக் காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
20. திருநாவுக்கரசர் சுவாமிகள்:
தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
21. குலச்சிறையார்:
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
22. பெருமிழலைக் குறும்பர்:
சிவனாடியருக்கு வேண்டியது அளித்து உதவி புரிபவர்.
சுந்தரருடன் கயிலை சென்றவர்.
23. காரைக்கால் அம்மையார்:
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தார். பின், இறைவனே துடிக்க பேய் வடிவம் எடுத்தவர். சிவபெருமானால் அம்மையே என்று அன்புடன் அழைக்கப்பெற்றவர். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.
24. அப்பூதி அடிகள்:
திருநாவுக்கரசரின் பெயரில் பற்பல தொண்டுகள் புரிந்தவர். தன் மகன் பாம்பால் கடியுண்ட போதிலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படடக்கூடாது என்ற அச்சத்தால் இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின் இறந்த மகனை சிவன்அருளால் உயிர் பெற்ற செய்தவர்.
25. திருநீலநக்கர்:
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்
26. நமிநந்தி அடிகள்:
ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.
27.திருஞானசம்பந்தர்:
ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.
28. ஏயர்கோன் கலிக்காமர்:
இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.
29.திருமூலர்:
திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். சித்தர்.விடம் தீண்டி மூலன் என்பவர் இறந்தார் இதனால் பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.
30. தண்டி அடிகள்:
கண் குருடாக இருந்தாலும் சமுதாய நோக்கம் கொண்டு குளம் தோண்டியவர்.சமணர்கள் சவால் விட சிவஅருளால் கண் பார்வை மீண்டும் பெற்றவர். சமணர்கள் பார்வை இழந்தனர்.
31. மூர்க்கர்:
சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.
32. சோமாசிமாறர்:
நிறைய யாகம் நடத்தி சிவ பூஜை செய்தவர்.லோகம் சுபிட்சம் பெற பல சிவயாகம் நடத்தி ஈசனை மகிழ்வித்தார். சுந்தரரின் நண்பர்.
33. சாக்கியர்:
அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.
34. சிறப்புலி:
சிவனாடியார்கள் பேரன்புடையவர் வேண்டுவதை அளிக்கும் வள்ளல். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர்.
35.சிறுத்தொண்டர்:
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக தன் மகனையே வெட்டி கறி சமைக்கத் துணிந்தவர்.
36. சேரமான் பெருமாள்:
சுந்தரரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தார்.
37. கணநாதர்:
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார். திருஞானசம்பந்த மூர்த்தியுடன் நட்பு கொண்டு சிவாலயம் பல சென்று வழிபடும் பெறும் பெற்றார்.
38.கூற்றுவர்:
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால் தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
39. புகழ்ச்சோழ நாயனார்:
எறிபத்தர். தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து சிவனை நினைத்து தன் உயிரை விட நினைத்த மன்னர்.சிவனாடியார் தலை கொய்திய காரணத்தால் யாகத்தில் உயிர் துறந்தவர்.
40. நரசிங்க முனையரையர்:
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர். சிவாலயம் பல கட்டி சைவம் வளர்த்தார். மூர்த்தி வேடம் கொண்ட சிவனாடியரை கண்ட பல பதுங்கி செல்ல அவரை வணங்கி நீதி அளித்தார்.
41. அதிபத்தர்:
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை
நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று ஒருபொன் மீன் கிடைத்தாலும் சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
42. கலிக்கம்பர்:
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்தமனைவியின் கையை வெட்டியவர்.
43. கலியர்:
வறுமையில் தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்றியவர்.
44. சத்தி:
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன்:
மன்னன் பதவியை விட்டு திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.
46. கணம்புல்லர்:
விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்
47. காரி:
காரிக்கோவை என்ற நூல் இயற்றி வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
48. நின்றசீர் நெடுமாறனார்:
திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தைவளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
49. வாயிலார்:
இறைவனை எப்போதும் நினைக்கக்கூடிய தமது மனக்கோயிலில் இருத்தினார். உணர்வுஎன்னும் தூய விளக்கேற்றினார். ஒப்பில்லா அரும்பெரும் இன்பம் என்னும்திருவமுதத்தால் வழிபட்டு சிவபெருமானுடைய சேவடி நீழலை எய்தும் பேரின்ப வாழ்வுபெற்றார்.
50. முனையடுவார்:
அரசருக்காகப் போர் புரிந்து வரும் வருமானத்தில் சிவனாடியார்களா அனைவருக்கும் உணவு அளித்தார்.
51. கழற்சிங்க நாயனார்:
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
52. இடங்கழி:
அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர்.
53. செருத்துணை நாயனார்:
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த கழற்சிங்கநாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
54. புகழ்த்துணை:
வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.
55. கோட்புலி:
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.
56. பூசலார்:
பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில்
பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.
57. மங்கையர்க்கரசியார்சை:
சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி. அமைச்சர் குலச்சிறையாரின் துணையுடன் ஞான சம்பந்தரை மதுரைக்கு அழைத்து சைவமதம் தழைக்கும் படி செய்த அம்மையார்.
58. நேசர்:
சிவனாடியார்களுக்கு உடையும் கோவணமும் அளித்தார்.
எப்பொழுதும் சிவனின் நாமத்தை நினைத்தவர்.
59. கோச்செங்கட் சோழர்:
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாணர்:
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம் சிவனைப் போற்றியவர்
61. சடையனார் நாயனார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
62. இசைஞானியார்:
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
63. சுந்தரமூர்த்தி நாயனார்:
தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். ஈசன் நட்புகாக இவரைத் தேடி வந்தார். திருத்தொண்டத்தொகை பாடியருளியது பல அன்பு தங்களை நிகழ்த்தினார்.
* நாயன்மார்கள் வரலாறு எப்படி உருவானது?
நாயன்மார் என்போர் கி.பி 400-1000 காலகட்டத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்திருந்த சிறந்த சிவனடியார்கள் சிலராவார்கள். சுந்தரமூர்த்தி நாயன்மார் திருத்தொண்டத் தொகையில் அறுபத்து இரண்டு நாயன்மார்களைப் பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் சேக்கிழார் திருத்தொண்டர் தொகையில் கூறப்பட்ட அறுபத்து இரண்டு பேருடன் சுந்தரமூர்த்தி நாயன்மாரையும் இணைத்து அறுபத்து மூவரின் வரலாற்றை திருத்தொண்டர் புராணம் எனும் பெரியபுராணத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நாயன்மாரின் பட்டியல்
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60. மனிதனுக்கு
விழா செய்வதும் 60 வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு நாழிகைக்கு வினாடி 60. ஒரு வினாடிக்கு நொடி 60. இப்படி 60 என்றுதான் கணக்கு வரும். 63 என்று வராது.
சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள் சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.
அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா (இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்.
* பக்தியே பிரதானம்:
நாயன்மாரில் சிலரே சமய நூல்களில் புலமை உடையவர்கள். மற்றவர்கள் மிகச் சிறந்த பக்தர்கள் மட்டுமே. பலரும் பல்வேறு தொழில்கள் செய்து உயிர்வாழ்ந்தவர்கள். இறையருள் பெற பக்தி மட்டுமே போதுமானது என்பதும் எல்லோரும் இறைவன் திருவடிகளை அடையலாம் என்பதுமே இவர்கள் வாழ்க்கை தரும் பாடமாக உள்ளது.
பெண்கள் வீட்டோடு இருந்த அக்காலகட்டத்தில் காரைக்கால் அம்மையார், மங்கையர்கரசி, இசைஞானியார் மற்றும் திலகவதியார், சந்தனத்தாதியார், கமலவதியார்,
ஆகியோர் சிவ பூஜையே பிரதானமாக கொண்டு சிவனாடியார்களுக்கு தொண்டுகள் பல செய்து முக்தியடைந்தது வியக்கத்தக்க ஒன்று.
ஈசன் இன்றி அணுவும் ஆசையாது, காலனை உதைத்த கருணாமூர்த்தியே தன்னலமற்ற பக்தியுடன் நாம் சிவாலயம் சென்று சிவபெருமானை வழிபடுவோம்; நம் துன்பம், வறுமை, நோய் நீங்கி வாழ்வில் வளங்கள் பல பெறுவோம்.
ஞாயிறு, 16 ஏப்ரல், 2017
கொடுப்பதும் சனி ...கெடுப்பதும் சனி...யாரை விட்டது
கொடுப்பதும் சனி ...கெடுப்பதும் சனி...யாரை விட்டது
நவக்கிரகங்களில் ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனி பகவான் என்று சொல்வார்கள்.
அதனால் அவரை 'சனீஸ்வரன்' என்று போற்றுவர். ஒவ்வொருவரது வாழ்க்கையிலும், அவரவர் ராசிக்கேற்ப ஏழரை ஆண்டுகள் சனியின் பிடிக்குள் அடங்கி, உயர்வு- தாழ்வுகளைச் சந்தித்து வாழவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
இதைத்தான் 'ஏழரைச்சனி' என்கிறார்கள். 'கொடுப்பதும் சனி; கெடுப்பதும் சனி', 'யாரை விட்டது சனி' என்றெல்லாம் பழமொழிகள் பல உண்டு.
ஒருமுறை சனீஸ்வரன், தேவலோகத்தில் தேவேந்திரனுடன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தேவேந்திரன் சனீஸ்வரனைப் பார்த்து,
''உங்களால் பீடிக்கப்பட்டுத் துன்பம் அடையாதவர் எவரேனும் உண்டா?'' என்று கேட்டான்.
அதற்கு சனீஸ்வரன், 'இதுவரை இல்லை. ஆனால், இப்போது நினைவுக்கு வருகிறது. ஒரே ஒருவரை மட்டும் இதுவரை நான் பீடிக்கவேயில்லை.
ஆனால், இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது!' என்று கூறி, அவசரமாகப் புறப்பட்டார்.
'எங்கே செல்கிறீர்கள்?'' என்று இந்திரன் கேட்க, 'சிவனைத் தரிசிக்க!'' என்று கூறிச் சென்றார் சனீஸ்வரன்.
நேராக கயிலாயம் சென்றவர், சிவன்- பார்வதிதேவியை வணங்கி நின்றார்.
''சனீஸ்வரா! எம்மைக் காண வந்ததன் காரணம் என்னவோ?'' என்று கேட்டார்.சிவபெருமான்.
''பெருமானே! உங்கள் ஜாதகப்படி, இந்த விநாடி ஏழரைச்சனியின் காலம் ஆரம்பிக்கிறது. தங்களைப் பீடிக்கவே வந்தேன்'' என்றார் சனீஸ்வரன்.
''எனக்குமா ஏழரைச்சனி? என்ன சனீஸ்வரா... விளையாடுகிறாயா? கிரகங் களின் சுழற்சியை நிர்ணயித்த என்னையே பீடிக்கப் போகிறாயா?' என்று கேட்டார்.
''ஆம் ஸ்வாமி! நீங்கள் நிர்ணயித்த விதிகளின்படிதான் நான் வந்துள்ளேன். ஏழரை ஆண்டுகள் இல்லாவிட்டாலும், ஏழரை மாதங்கள் அல்லது ஏழரை நாட்களுக்காவது நான் தங்களைப் பீடித்து என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று கேட்டார் சனீஸ்வரன்.
''ஏழரை நாட்கள் என்ன, ஏழரை நாழிகை கூட உன்னால் என்னைப் பீடிக்க முடியாது' என்று கூறிய சிவபெருமான், பார்வதி தேவியின் கழுத்தில் இருந்த மாலையில் இருந்த ருத்ராக்ஷத்தில் மறைந்துகொண்டார்.
ருத்ராக்ஷத்தில் உள்ள தெய்வீக சக்தியைத் தாண்டி வேறு எந்த சக்தியும் அதனுள் நுழையவே முடியாது. அதுவும் பார்வதி தேவியின் கழுத்தில் இருக்கும் ருத்ராக்ஷத்துக்குள் சனி பகவான் எப்படி நுழைய முடியும்?
ஆனால், சற்றும் அசராமல் சிவ நாமத்தை ஜெபித்தபடி அங்கேயே அமர்ந்துவிட்டார் சனீஸ்வரன்.
ஏழரை நாழிகை கடந்தது. சிவபெரு மான் ருத்ராக்ஷத்திலிருந்து வெளியே வந்தார்.
சனீஸ்வரனை நோக்கி, ''பார்த்தாயா சனீஸ்வரா... உன்னால் என்னை ஏழரை நாழிகைகூட நெருங்க முடியவில்லையே?'' என்றார்.
''இல்லை பரமேஸ்வரா! உங்களை ஏழரை நாழிகை நேரம் நான் பீடித்திருந்தேன். அதனால்தான் உலக ஜீவராசிகளுக்கெல்லாம் படியளக்கும் நீங்களே, ஒரு ருத்ராக்ஷத்தில் மறைந்து, ஏழரை நாழிகை சிறைவாசம் ஏற்படுத்திக்கொண்டு, அதை அனுபவித்தீர்கள்'' என்றார்.
'சனீஸ்வரனின் விதி'யை நிர்ணயித்தவரும் அந்த விதிக்குக் கட்டுப்பட வேண்டியது அவசியம்தான் என்பதை எடுத்துக்காட்டிய சனீஸ்வரனை வாழ்த்தினார் சிவபெருமான்.
ஏழரை நாழிகை நேரம் தன் கழுத்தில் இருந்த ருத்ராக்ஷத்தில் தங்கி, தனக்கும் ருத்ராக்ஷத்துக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கக் காரணமான சனீஸ்வரனை அன்னை பார்வதிதேவியும் வாழ்த்தினாள்.
சிவனைப் பீடித்த சனி அதோடு விட்டு விடவில்லை. திரேதா யுகத்தில், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட பகவான் விஷ்ணு ஸ்ரீராமராக அவதரித்தபோது, அவருக்கு உதவி செய்வதற்காக அனுமனாக அவதாரம் செய்த சிவபெருமானை மீண்டும் ஒருமுறை பீடிக்க முயன்ற சம்பவம் ராமாயணத்தில் காணப்படுகிறது.
ராவணனை அழிக்க வானர சேனைகளுடன் இலங்கை செல்வதற்காக, கடலில் பாலம் அமைக்கும் பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீராமன்.
இந்த சேதுபந்தனப் பணியில் சுக்ரீவன், அங்கதன், அனுமன் மற்றும் அவனது வானர சேனைகள் ஈடுபட்டிருந்தன. வானரம் ஒவ்வொன்றும் தனது சக்திக்கு ஏற்றவாறு மரங்களையும் பாறைகளையும் தூக்கி வந்து கடலில் வீசிக்கொண்டிருந்தன.
ராம, லட்சுமணர்கள் இருவரும் கடலில் பாலம் உருவாவதை நோக்கிய வண்ணம் எல்லோருக்கும் ஆசி கூறிக் கொண்டிருந்தனர்.
அனுமனும் பாறைகளைப் பெயர்த்தெடுத்து, அவற்றின்மீது 'ஜெய் ஸ்ரீராம்' என்ற அக்ஷரங்களைச் செதுக்கி கடலில் எறிந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கே சனீஸ்வர பகவான் தோன்றி, ஸ்ரீராம லட்சுமணர்களை வணங்கி, ''பிரபு! அனுமனுக்கு ஏழரைச் சனி பீடிக்கும் காலம் தொடங்குகிறது. என்னைத் தவறாக எண்ணாதீர்கள். என் கடமையைச் செய்ய அனுமதி தாருங்கள்'' என்று வேண்டினார்.
'எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அதுபோல உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். முடிந்தால், அனுமனைப் பீடித்துப் பாருங்கள்' என்றார் ஸ்ரீராமன்.
உடனே சனீஸ்வரன் அனுமன் முன் தோன்றி, ஆஞ்சநேயா! நான் சனீஸ்வரன். இப்போது உனக்கு ஏழரைச்சனி ஆரம்பமா கிறது. உன்னைப் பீடித்து ஆட்டிப்படைக்க, உன் உடலில் ஓர் இடம் கொடு'' என்றார்.
''சனீஸ்வரா! ராவணனின் சிறையில் இருக்கும் சீதாதேவியை மீட்க நாங்கள் இலங்கை செல்லவே இந்த சேதுபந்தனப் பணியை ஸ்ரீராம சேவையாக ஏற்றுத் தொண்டாற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்தப் பணி முடிந்ததும், நானே தங்களிடம் வருகிறேன். அப்போது என் உடல் முழுவதுமே தாங்கள் வியாபித்து என்னை ஆட்கொள்ள லாம்'' என்றான் அனுமன்.
''ஆஞ்சநேயா! காலதேவன் நிர்ணயித்த கால அளவை நான் மீற முடியாது; நீயும் மீறக்கூடாது. உன்னை நான் பீடிக்கும் நேரம் நெருங்கிவிட்டது. உடனடியாகச் சொல்; உன் உடலின் எந்த பாகத்தில் நான் பீடிக்கலாம்?''என்று கேட்டார் சனீஸ்வரன்.
''என் கைகள் ராம வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனால், அங்கே இடம் தர முடியாது.
என் கால்களில் இடம் தந்தால், அது பெரும் அபசாரமாகும்.
'எண் சாண் உடம்புக்குச் சிரசே பிரதானம்! எனவே, நீங்கள் என் தலை மீது அமர்ந்து தங்கள் கடமையைச் செய்யுங்கள்'' என்று கூறினார் அனுமன்.
அனுமன் தலை வணங்கி நிற்க, அவன் தலை மீது ஏறி அமர்ந்தார் சனீஸ்வரன்.
அதுவரை சாதாரண பாறைகளைத் தூக்கிவந்த அனுமன், சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின்பு,
மிகப் பெரிய மலைப் பாறைகளைப் பெயர்த்து எடுத்துத் தலைமீது வைத்துக்கொண்டு, கடலை நோக்கி நடந்து, பாறைகளை கடலில் வீசினார்.
பெரிய பெரிய பாறைகளின் பாரத்தை அனுமனுக்குப் பதிலாக, அவர் தலை மீது அமர்ந்திருந்த சனீஸ்வரனே சுமக்கவேண்டியதாயிற்று.
அதனால், சனீஸ்வரனுக்கே கொஞ்சம் பயம் வந்துவிட்டது. 'தனக்கே ஏழரைச் சனி பிடித்துவிட்டதா?' என்றுகூடச் சிந்தித்தார்.
அனுமன் ஏற்றிய சுமை தாங்காமல், அவனது தலையிலிருந்து கீழே குதித்தார்.
''சனீஸ்வரா! ஏழரை ஆண்டுகள் என்னைப் பீடிக்கவேண்டிய தாங்கள், ஏன் இவ்வளவு சீக்கிரம் விட்டுவிட்டீர்கள்?'' என்று கேட்டார் அனுமன்.
அதற்கு சனீஸ்வரன், ''ஆஞ்சநேயா! உன்னை ஒரு சில விநாடிகள் பீடித்ததால், நானும் பாறைகளைச் சுமந்து சேது பந்தனப் பணியில் ஈடுபட்டுப் புண்ணியம் பெற்றேன்.
சாக்ஷத் பரமேஸ்வரனின் அம்சம் தாங்கள். முந்தைய யுகத்தில் தங்களை நான் பீடிக்க முயன்று, வெற்றியும் பெற்றேன். இப்போது தோல்வி அடைந்துவிட்டேன்' என்றார் சனீஸ்வரன்.
''இல்லை, இல்லை... இப்போதும் தாங்களே வென்றீர்கள்! ஏழரை ஆண்டுகளுக்குப் பதில் ஏழரை விநாடிகளாவது என்னைப் பீடித்துவிட்டீர்கள் அல்லவா?' என்றார் அனுமான்.
அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த சனீஸ்வரன்,
''அனுமான்..! உனக்கு நான் ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விரும்புகிறேன். என்ன வேண்டும் கேள்'' என்றார்.
''ராம நாமத்தை பக்தி சிரத்தையோடு பாராயணம் செய்பவர்களை உங்களது ஏழரைச் சனி காலத்தில் ஏற்படும் துன்பங்களில் இருந்து நீங்களே காத்தருள வேண்டும்' என வரம் கேட்டார் அனுமன்.
சனியும் வரம் தந்து அருளினார்.
பொதுவாக ஒருவரை ஏழரைச் சனி பீடிக்கும் காலத்தை மூன்று கூறாகப் பிரித்து
*மங்குசனி,*
*தங்குசனி,*
*பொங்குசனி*
என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அனுமன் பெற்ற வரத்தால் ஏழரைச் சனியின் மங்குசனி, தங்குசனி காலத்தில் ஏற்படும் இன்னல்களைத் தாங்கி பிரச்னைகளைச் சமாளித்து,
முடிவில் வெற்றியும் செல்வமும், சௌபாக்கியமும் பெற, ''ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம'' என்ற தாரக மந்திரத்தை சிரத்தா பக்தியுடன் ஜெபிக்க வேண்டுமென்று சாஸ்திரங்கள் அறிந்த பெரியோர்கள் நமக்கு வழிகாட்டியுள்ளனர்.
சனி, 15 ஏப்ரல், 2017
ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை
ஸ்ரீ இராம நாம மந்திர மகிமை
1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும், saispiritualcenter.org
7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள். saispiritualcenter.org
13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்..
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.
'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீயசக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding...இல் உள்ள குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)
'ராம நாமா' சொல்ல சொல்ல .........பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .
அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".
அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !
எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.
16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.
18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
19. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் ....அந்தராத்மவுடனே பேசுகிறோம்.......ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் ......என வணங்க, நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன் ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன் ஸ்ரீ ராமன்.
20. 'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .
21.'ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம். saispiritualcenter.org
இத்தகைய .'ராம நாமா' வில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ......ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் ........எல்லா உணர்ச்சிகளிலும் ...........இறை உணர்வை உணர்வதுவே ............இந்த பிறவியின் பயனாகும்.
B) கருட புராணம் கூறும் 28 நரக தண்டணைகள்
இந்து புராணங்களில் முக்கிய ஒன்றாக கருதப்படும் கருட புராணத்தில் மரணத்திற்கு பின்னான வாழ்வு, மறு ஜென்மம், சொர்க்கம் நரகம் போன்றவற்றை பற்றி பல்வேறு விளக்கங்கள் இருக்கிறது.
18 இந்து சமய புராணங்களில் ஒன்றான இதில் வாழ்வின் மேன்மைகளை பற்றி 19,000 ஸ்லோகங்களும் மனித வாழ்வில் செய்யும் தவறுகளுக்கு 28 விதமான கொடூர தண்டணைகளை பற்றி விஷ்ணு கருடனுக்கு(பறவைகளின் அரசன்) விவரிப்பது போல எழுதப்பட்டிருக்கும்.
வாழும் போது மனிதர்கள் செய்யும் அவசெயல்களுக்காக மிருகத்தனமான தண்டணைகளை அவர்கள் அடைவார்கள். கருட புராணத்தை படிப்பவர்கள் தவறு செய்ய அஞ்சும் படியாக இருக்கும். விஷ்ணு இதனை ‘எமனின் சித்திரவதைகள்’ என்பார்.
இனி தண்டணைகளை அறிய துவங்குவோம்.
தாமிஸிர நரகம்:பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.
அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும். saispiritualcenter.org
ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
மகா ரெளரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.
அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி: நன்மை, தீமை, பாவம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.
பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.
பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.
மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:
பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர்.
இப்படி புராணக்கதைகளில் அறிந்தே செய்யும் வெவ்வேறான தவறுகளுக்கு தண்டனைகள் இருப்பினும் வாழ்வுக்கு பின் என்ன இருக்கிறது என்பதை மரணித்து தான் அறிய வேண்டிருக்கிறது.
ஆனால் வாழும் போது செய்யும் தவறுகளுக்கு தண்டனை கிடைத்தால் தான் அவை மற்றவரை சிந்திக்க வைக்கும், இன்னமும் கருட புராணத்தை படிப்பவர் எவருமில்லை.
அந்நியன் படத்திற்கு பின்னரே இப்படி ஒரு புராணத்தை கேள்வி பட்டோர் பலர் உண்டு, அதுவே எதார்த்தம்.
ஈஸ்டர் திருநாள்
வசந்தம் வீசும் ஈஸ்டர் திருநாள்
அன்பென்ற நதி மீது படகாகு அறியாத பேரின்ப கரை சேர்க்கும்
அன்பென்ற வில்லின் முன் இலக்காகுஅகம் எங்கும் படிந்துள்ள குறை நீக்கும்
அன்புக்கு ஈர்க்கின்ற பலம் உண்டு இழந்தாலும் மகிழ்கின்ற குணம் உண்டு
தன் துன்பம் பிறர் வாழும் உரமாகும் அன்புள்ளம் இறை தந்த வரமாகும்
அன்பையும், அருளையும் போதித்த இயேசு பெருமான் பகைவர் தமக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் சகித்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த இரக்கத்துடனும், கருணையுடனும் தொண்டுகள் புரிந்தார்.
இன்னல் நீங்கி இன்பம் கண்ட நன்னாளாகக் கிறிஸ்தவ மக்கள் கொண்டாடும், ஈஸ்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை மிகுந்த
மகிழ்ச்சியோடு கொண்டாடப்படுகிறது.
நியாமும், சத்தியமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசு உயிர்தெழுதல் நிகழ்வு அமைந்துள்ளது.
உயிர்த்தெழுதல் என்பது மனித இனத்துக்குக் கிடைத்த கடவுளின் அன்பளிப்பு என்று கிறித்துவர்கள் நம்புகிறார்கள்.
ஈஸ்டர் கொண்டாட்டங்கள் . மனிதருள் உறைந்திருக்கும் மரணத்தை வெல்லும் சக்தியை நினைவுபடுத்தி வாழ்வைப் புதுப்பிக்கவும் ரணமாகிவரும் புவியின் புண்களை ஆற்றவும் அளிக்கப்படும் அறைகூவல்.
சிலுவையில் அறையப்பட்டு மரணித்த ஏசுபிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த வரவிற்காக நோன்பிருந்து கொண்டாடும் பண்டிகை ஈஸ்டர் திருநாள்.
அகத்தின் மரணத்தை வென்று நிஜ வாழ்வின் தாத்பர்யத்தை விளக்கும் உயிர்த்தெழுதல் அது.
அஞ்ஞானத்திலிருந்து விடுதலை பெற்று ஆன்மீக சுயத்தை உணர்த்திய சாகாவரம் அது.
ஈஸ்டர் மாதத்தில் விரதம் இருக்கும் கிருஸ்துவ மக்கள் தாங்கள் விரதகாலத்தில் செலவழிக்காமல் இருந்த பணத்தை ஏழைகளுக்கு அளிக்கின்றனர்.
இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியோடு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட முடிகிறது.
இந்த நன்னாளில் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்து இயேசு உயிர்தெழுத்தார் என்று மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்கின்றனர்.
இயேசுபிரான் கடவுளைப் பற்றிய புரிதலை மக்களுக்கு ஏற்படுத்தினார். பாவங்களுக்குத் துணைபோகக் கூடாது என்பதைத் தனது வாழ்முறையால் உணர்த்தினார்.
தனது மக்களாலேயே மரண தண்டனை வழங்கப் பெற்று, வேதத்தின் கூற்றுப்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இந்த நன்னாள் ஈஸ்டர் எனப் கொண்டாடப்படுகிறது.
இயோஸ்டன் என்ற வசந்த கால தேவதையின் விலங்கு முயல். வசந்த காலத்தில் மீண்டும் பிறப்பதை முட்டையால் அடையாளம் காட்டப்படுகிறது. புதிய வாழ்வின் தொடக்கத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
வசந்த காலத்தில் தான், நிறைய பறவைகள் முட்டையிட்டு இன விருத்தியில் இருக்கும் ..
முட்டை அடைகாக்கப்பட்டு அதிலிருந்து புதிய உயிர் வெளிவருவது புதிய வாழ்வின் குறியீடாக கருதப்படுகிறது.
மிகவும் பாரம்பரியமான கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் முட்டை என்பது, விரதத்தை முடிப்பதன் கொண்டாட்டத்தில் மட்டுமன்றி, இயேசு மீண்டும் பிறந்ததற்கான அடையாளமாகவும் கருதப்படுகிறது.
பாரம்பரியமாக, ஈஸ்டர் முட்டைகள் சிவப்பு நிறம் பூசப்பட்டு வருகிறது, அது இயேசு சிலுவையில் சிந்திய ரத்தத்தைக் குறிக்கிறது,
அதனுடைய கடின ஓடு கிறிஸ்துவின் மூடப்பட்ட கல்லறையையும், அதனை உடைப்பது, மரணத்திலிருந்து அவர் உயிர்த்தெழுதலையும் குறிக்கிறது.
முட்டை, கல்லறையின் குறியீடாகவும், அதனை உடைப்பதன் மூலம் வாழ்க்கை புதுப்பிக்கப்படுவது அல்லது மீட்டெடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்படுகிறது.
சிலுவையில் அறையப்பட்டு தியாகம் செய்ததன் மூலமாக உலகம் மற்றும் மனித இனத்தின் மீட்புக்காக இயேசு கிறிஸ்து சிந்திய இரத்தத்தைச் சிவப்பு நிறம் குறிக்கிறது.
முட்டை மறுபிறப்பின் குறியீடாகும்
செயலற்று முடங்கியுள்ள அதில் புதிய வாழ்வு வைக்கப்பட்டிருக்கிறது.
I
சாக்லேட் போன்ற உண்ணக்கூடிய பொருட்களால் ஈஸ்டர் முட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த முட்டைகள் மறைத்து வைக்கப்பட்டு ஈஸ்டர் தினத்தன்று குழந்தைகள் கண்டறியுமாறு வைக்கப்படுகிறது.
அதிக முட்டைகளை கண்டறியும் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை
சிவாலயத்தில் வழிபாடு செய்யும் முறை
உலகத்தில் வாழ்ந்து வரும் கோடிக்கணக்கான தமிழர்களில் உங்களுக்கு மட்டுமே இந்த பதிவை வாசிக்கும் பாக்கியம் கிடைத்திருக்கிறது.ஏனெனில்,நீங்கள் மட்டுமே பைரவப் பெருமானின் அருளையும்,சிவபெருமானின் ஆசியையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்.அந்த அளவிற்கு உங்களுடைய பூர்வபுண்ணியம் வலிமையாக இருக்கிறது;
தமிழ்நாட்டில் பழமையான ஆலயங்கள் 39,000 இருக்கின்றன;இதில் சரிபாதி சிவாலயங்களாக இருக்கின்றன;
ஒவ்வொருவருமே பேச்சு,மூச்சு,சிந்தனை முழுவதும் எப்படியெல்லாம் பணம் சம்பாதிப்பது? என்ற நோக்கத்தின்படியே செயல்படத் துவங்கிவிட்டனர்;விளைவு? நமது எதிர்கால சந்ததியினருக்கு நமது பண்பாடு பற்றிய அடிப்படை ஞானம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கிறது;இணையமும்,கணினிபற்றிய அடிப்படை ஞானம் இல்லாதவர்களை கற்காலத்தைச் சேர்ந்தவரைப் போல எண்ணத் துவங்கிவிட்டனர்;அப்பா 40 வருடம் அரசுப்பணி புரிந்து தனது 58 வயதில் பெற்ற சம்பளத்தை அவரது மகன்/ள் 21 வயதில் பெறத் துவங்கினான்/ள்.
சிறு சிறு நகரங்களும் செல்வச் செழிப்பைப் பெறத் துவங்கின;ஆனால்,அதே சமயம் செல்வ வளம் மிக்கவர்களுக்கும்,வறியவர்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் துவங்கியது;ஜனநாயக நாடான நமது நாடு முதலாளித்துவ வடிவம் எடுக்கத் துவங்கியது;அன்பு,பாசம்,விட்டுகொடுத்தல்,குடும்ப ஒற்றுமைக்கு தன்னையே தியாகம் செய்தல்,குழந்தைகளோடு நேரம் செலழித்து அவர்களின் ஆளுமைத் திறனை வளர்த்தல்,அவர்களின் சிந்திக்கும் திறனை வளர்த்தல்,அவர்களது நட்பு வட்டத்தைக் கண்காணித்தல் போன்றவை குறையத் துவங்கின;அவர்களது மனம் சார்ந்த சிக்கல்களை காது கொடுத்து கேட்க பெற்றோர்களுக்கே நேரம் இல்லை; ஆனால்,ஓடி ஓடி சம்பாதிப்பது அவர்களுக்காகவே!!!
தனது முதுமைக் காலத்தில் தன்னையும்,குடும்ப அமைப்பையும் நிர்வகிக்கும் விதமாக அவர்களுக்குப் பயிற்றுவிக்க நேரம் இல்லை;
இதற்கு முதல் காரணம் நமது முன்னோர்கள் நடைமுறைப்படுத்திய பாரம்பரிய நடைமுறைகளை இறுதிவரையிலும் பின்பற்றாததே காரணம்;ஏழு வயதிற்குள் நமது குழந்தைகளை அடிக்கடி பழமையான ஆலயங்களுக்கு அழைத்துச் செல்லாவிட்டால்,அதன்பிறகு அவர்களுக்கு பக்தி உணர்வை ஊட்டுவது முடியாத காரியமாகிவிடுகிறது.
பெற்றோர்,குரு,குழந்தைகள்,இறைவன்=இவர்களில் யாராவது ஒருவரை சந்திக்கச் சென்றாலும் வெறும் கையோடு போய் பார்க்கக் கூடாது என்பது நமது இந்து தர்மத்தின் சம்பிரதாயம்;
பெரும்பாலான சிவாலயங்களுக்குள் பசுமடம் அமைக்கப்பட்டிருக்கிறது;எனவே,வாழைப்பழங்கள் அல்லது அகத்திக்கீரை வாங்கிச் செல்வது அவசியம்;ஆண்கள் எனில்,மேலாடையைத் தவிர்த்துவிட்டு,சிவாலயத்தினுள் நுழைவது அவசியம்;ஒவ்வொரு நாளுமே மஞ்சள் நிற வேட்டியை அணிந்து கொண்டு செல்வது நன்று;
கோவில் வாசலில் துவார(வாசல்) பாலகராக விநாயகர் அருள்பாலித்துக் கொண்டு இருப்பார்;அவரை மனப்பூர்வமாக வழிபட்டுவிட்டு,கோவிலினுள் நுழைவது முறை;
விநாயகரை வழிபடும் போது,மனதினுள் அவரது காயத்ரி மந்திரத்தையோ அல்லது அகவலையோ மனதிற்குள் பாடுவது அவசியம்;
ஓம் ஏக தத் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோஹ் தந்தி ப்ரதோசதயாத்
என்பது விநாயகர் காயத்ரி மந்திரம் ஆகும்;
ஓம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தினை
இந்து இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே
என்பது விநாயகர் அகவல் ஆகும்;
இதுவும் ஜபிக்க இயலாதவர்கள் ஓம் கணபதியே போற்றி என்று ஒன்பது முறை ஜபித்தாலும் போதுமானது;
கோவிலின் கோபுரத்திற்கு நேர் கீழாக வரும் போது,அங்கிருந்து மூலவரின் உருவம் தெரியும்;அந்த கணத்தில் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை பனிரெண்டுமுறை ஜபித்துவிட்டு,கொடிமரத்தின் அருகில் வரவேண்டும்;கொடி மரத்துக்கு அருகில் இருக்கும் பலிபீடத்தை வந்தடைய வேண்டும்;அங்கே வடக்கு நோக்கி விழுந்து கும்பிட வேண்டும்;இப்படிச் செய்வதால் நம்மிடம் அதுவரை இருந்து வந்த அனைத்து தீய எண்ணங்களையும் அந்த பலிபீடத்தில் பலியிடுவதாக ஐதீகம்;பலிபீடத்தில் விழுந்து வணங்கியப் பின்னர்,ஒருபோதும் கோவிலுக்குள்ளே எந்த இடத்திலும் விழுந்து வணங்கக் கூடாது;மேலும்,சிவாலயத்தினுள் இறைவனைத்தவிர,வேறு எவரையும் வணங்கக் கூடாது;அனாவசியமான பேச்சு,செல்போன் பேச்சு கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;
சிவனை வழிபடுவதற்கு முறைப்படி நந்திபகவானிடம் அனுமதி கோர வேண்டும்;நந்தி பகவானை வழிபடுவதன் மூலமாக இந்த அனுமதி நமக்கு கிடைத்துவிட்டதாக அர்த்தம்;
ஓம் ஏகதத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தந்நோஹ் நந்தி ப்ரசோதயாத் என்பது நந்திபகவானின் காயத்ரி மந்திரம் ஆகும்;
பிறகு,மூலவராக இருக்கும் சிவனது இருப்பிடத்திற்குள் செல்ல வேண்டும்;ஏதாவது ஒரே ஒரு கோரிக்கையை மட்டுமே நினைக்க வேண்டும்;நினைத்துவிட்டு,ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்ற சிவமந்திரத்தை இங்கிருந்து ஜபிக்கத் துவங்க வேண்டும்;சிவனை வழிபட்டுவிட்டு,பக்கவாட்டு வாசல் வழியாகவே அம்பாள் சன்னதிக்குச் செல்ல வேண்டும்;
இதே போல,அம்மன் சன்னதியில் அமைக்கப்பட்டிருக்கும் நந்திபகவானை வழிபட்டப் பின்னரே,அம்மனை தரிசிக்கச் செல்ல வேண்டும்;இங்கேயும் மனதிற்குள் ஓம்சிவசக்திஓம்,ஓம்சிவசக்திஓம் என்று தொடர்ந்து ஜபித்துக் கொண்டே நமது கோரிக்கையை வேண்ட வேண்டும்;சிவனிடம் என்ன கோரிக்கையை வேண்டினோமோ,அதே கோரிக்கையை அம்பாளிடமும் வேண்ட வேண்டும்;
சிவன் சன்னதியில் தரப்படும் விபூதியையும்,அம்பாள் சன்னதியில் தரப்படும் குங்குமத்தையும் பத்திரமாக நமது வீட்டிற்குக் கொண்டு வர வேண்டும்;பலர் சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டு,அர்ச்சகர்/சிவாச்சாரியார் கொடுக்கும் விபூதி,குங்குமத்தை அங்கேயே கொட்டிவிட்டு வந்துவிடுகின்றனர்;இது தவறு மட்டுமல்ல;மகத்தான பாவமும் கூட!
பழமையான சிவாலயத்தில் தரப்படும் விபூதி,குங்குமத்தை விட்டுக் கொண்டு வந்து சேமித்துக் கொண்டே இருந்தால்,நமக்கும்,நமது குடும்பத்தாருக்கும் யாராலும் எந்த ஒரு மறைமுகத்தீங்கையும் செய்யமுடியாது;(நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தியிருந்தால்!)ஏனெனில்,இவைகளில் அளவற்ற தெய்வீக சக்தியும்,பாஸிடிவ் எனர்ஜியும் இருப்பதை இன்றைய நவீன அதீத உளவியில் விஞ்ஞானம் பலமுறை நிரூபித்திருக்கிறது;
மூலவர்களின் சன்னதிகளைக் கடந்து பக்கவாட்டுப்பகுதிக்கு வரும் போது சைவ அடியார்களின் 64 வரிசையைக் காணலாம்;இவர்கள் ஒவ்வொருவரின் முன்பாகவும் நின்று மூன்று முறை ஓம்சிவசக்திஓம் என்று ஜபிக்க வேண்டும்;இதன் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும் விநாயகரின் பெயர் செவிசாய்க்கும் விநாயகர் ஆகும்;இவர் முன்பாக ஒன்பது முறை தோப்புக் கரணம் போட்டுவிட்டு,இவரை ஒருமுறை வலம் வர வேண்டும்;
மூலவர் இருக்கும் சன்னதியின் பின்பக்கத்தைக் கடக்கும்போது,லிங்கோத்பவர் சன்னதி அமைக்கப்பட்டிருக்கும்;இந்த லிங்கோத்பவர் சன்னதிக்கு எதிரே அமைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கம் நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில் மிகவும் முக்கியமான சிவலிங்கம் ஆகும்.இந்த சிவலிங்கத்தை சில நிமிடங்கள் வரையிலும் வழிபட்டால் மட்டுமே நமக்கு கலியின் துன்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்;நமது மன அமைதி ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றுக் கொண்டே இருக்கும்;அதன் பிறகு,லிங்கோத்பவரை வழிபட வேண்டும்;படைக்கும் கடவுளான பிரம்மா அன்னப்பறவை வடிவில் சிவனின் முடியைத் தேடி பறப்பதை இந்த லிங்கோத்பவரின் மேல்பகுதியிலும்,காக்கும் கடவுளான மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து,சிவனின் அடியைத் தேடிச் செல்வதை இந்த லிங்கோத்பவரின் கீழ்ப்பகுதியிலும் செதுக்கியிருப்பதைக் காணலாம்;இந்த சம்பவம் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு,அண்ணாமலையில் நிகழ்ந்திருக்கிறது;அயன்,மால் இருவருக்குமே இறைவன் அந்த அண்ணாமலையாரே என்பதை இந்த லிங்கோத்பவர் சிற்பம் உணர்த்துகிறது;
கோவிலின் உட்பகுதிக்குள் அமைக்கப்பட்டிருக்கும் சண்டேஸ்வரர் சன்னதிக்கு கண்டிப்பாகச் செல்ல வேண்டும்;அவரது சன்னதியில் நின்று கொண்டு மெதுவாக கை தட்ட வேண்டும்;சிவாலயத்திற்கு வந்தமைக்கான பலன்களைத் தரும் பொறுப்பு இவரையேச் சேரும்;இப்படிக் கைத்தட்டினால் தான்,சிவாலயத்திற்கு நாம் வந்திருப்பதை சண்டேசுவரர் பதிவு செய்வார்;க்ஷேத்திரபாலகராகிய பைரவர் சன்னதிக்கு வரும் வரை இந்த மந்திரத்தை மட்டுமே ஜபிக்க வேண்டும்;
மூலவ சன்னதிகளின் பின்புறத்தைக் கடக்கும் போது சிறிதும் பெரிதுமாக ஏராளமான சிவலிங்கங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றன;அவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சித்தர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டவை;
சிவசக்தியின் கலப்பாக நாம் வாழ்ந்து வரும் உலகம் இயங்கிவருவதால்,ஓம்சிவசக்திஓம் ஜபிப்பதன் மூலமாக தம்பதியரின் மனக்கசப்பு அடியோடு நீங்கிவிடும்;ஒற்றுமை ஏற்படும்;
பைரவப் பெருமானின் சன்னதிக்கு வந்தடைந்ததும்,பைரவப் பெருமானின் காயத்ரி மந்திரம் அல்லது ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ என்ற மந்திரத்தையோ 8 முறை ஜபிக்க வேண்டும்;
பிறகு,உள்பிரகாரத்தைச் சுற்றி வர வேண்டும்;அப்போதும் ஓம்சிவசக்திஓம் என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;பெரும்பாலான ஆலயங்களில் உள்பிரகாரத்திலோ அல்லது வெளிப்பிரகாரத்திலோ ஸ்தல விருட்சம் வளர்ந்திருக்கும்;அதன் அருகில் வரும் போது நமது கோரிக்கையை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது கோரிக்கை விரைவில் நிறைவேறும்.கோவிலை விட்டு வெளியேறும் முன்பு கோவிலின் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகே செல்ல வேண்டும்;ஏனெனில்,பல கோடி ஆண்டுகளாக சிவ வழிபாடு செய்து வரும் பல சிவபக்தர்கள் கோவிலுக்குள் சூட்சுமமாக இருப்பார்கள்;கோவிலின் அனைத்துப் பிரகாரங்களையும் சுற்றிவிட்டு,கோவிலுக்குள் உட்காராமல் வீட்டுக்குப் புறப்பட்டால் அவர்களும் நம்மோடு நமது வீட்டுக்கு சூட்சுமமாக வரத் துவங்குவர்;அது முறையல்ல;
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
கோவில் பசுமடத்தில் இருக்கும் பசுக்களுக்கு கையோடு கொண்டு சென்ற பழங்களை அதற்குத் தானமாகத் தர வேண்டும்;மதுரை மீனாட்சியம்மன் கோவில் போன்ற ஒரு சில கோவில்களில் பசுமடத்தின் வாசலிலேயே அகத்திக்கீரை விற்பனை செய்து வருகிறார்கள்;ஒவ்வொரு முறை செல்லும் போதும் அகத்திக்கீரை வாங்கி பசுக்களுக்குத் தருவது நமது சோகங்களை நீக்கிடக் காரணமாக அமையும்;
அதே போல,நமது வீட்டில் இருந்து மூன்று கி.மீ.தூரத்திற்குள் பழமையான சிவாலயம் இருந்தால்,தினமும் அல்லது வாரம் ஒருமுறை அல்லது நமக்கு எப்போதெல்லாம் ஓய்வு நேரம் இருக்குமோ அப்போதெல்லாம் நடந்தே இந்த சிவாலயத்திற்குச் செல்ல வேண்டும்;தனியாகப் புறப்பட்டு,சிவவழிபாடு செய்துவிட்டு தனியாகவே வீடு திரும்புவதால் முழு சிவநிறைவு கிடைக்கும்;
அதே போல,நமது வீட்டில் இருந்து புறப்பட்டு சிவாலயம் சென்றுவிட்டு,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,யார் வீட்டிற்கும் செல்லாமலும் நேராக நமது வீட்டை வந்தடைய வேண்டும்;ஒவ்வொரு பழமையான சிவாலயமும் நமக்கு அளவற்ற ஆத்ம சக்தியைத் தரக்கூடியவை;நமது கர்மவினைகளை படிப்படியாகவும்,முழுமையாகவும் நீக்கக் கூடியவை;
சிவாலயத்தினுள் அல்லது சிவாலயத்தின் வாசலில் நாம் செய்யும் ஒவ்வொரு தானமும் ஏராளமான புண்ணியத்தை நமக்கு அருளக் கூடியவை;
தொடர்ந்து 45 நாட்கள் சிவாலயம் சென்று வந்தாலே சிவனம்சமாகவே நாம் மாறிவிடுவோம்;தொடர்ந்து பத்து ஆண்டுகள் தினமும் சிவாலயம் சென்று வந்தால் குருவின் வடிவில் சிவ தரிசனம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு சனிப்பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு திங்கட்கிழமை பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து நான்கு தலைமுறையாக நமது வீட்டு பெண்மணிகளின் சோகங்கள் படிப்படியாக நீங்கும்;நமது மனதினுள் இருக்கும் தேவையற்ற அழுக்குகள் நீங்கும்;மன உறுதி பலப்படும்;நமது சிந்தனைத் திறன் பல மடங்கு அதிகரிக்கும்;நமது சுபாவத்துக்கு ஏற்ற ஆன்மீக குருவை நாம் சந்திக்கும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;
ஒரே ஒரு சாதாரண பிரதோஷத்தன்று,பழமையான சிவாலயத்தில் நடைபெறும் பிரதோஷ அபிஷேகத்தில் கலந்து கொண்டால் தொடர்ந்து ஓராண்டு சிவாலயம் சென்று வந்த புண்ணியம் நமக்குக் கிட்டும்;
இன்றும் பல சிவாலயங்களில் சாதாரண ஊழியர்கள் வடிவில் அந்தக் கோவிலின் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் பணிபுரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்;தொடர்ந்து ஓராண்டு வரை சிவாலயம் செல்பவர்களுக்கு அந்த ஆலயத்தின் மகிமையை உணரும் சந்தர்ப்பம் அமையும்.
உலகில் எப்போதெல்லாம் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைகிறதோ,அப்போதெல்லாம் பூமியில் தண்ணீர்ப்பஞ்சம் குறிப்பாக குடிநீர்ப்பஞ்சம் உண்டாகும் என்பது சிவனடியார்களின் அனுபவ உண்மை;
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)