வெள்ளிக்கிழமை என்னும் சுக்கிரவாரத்தில் தமிழ் வருடப் பிறப்பு!
🌟 ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம் முதல் நாளை உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இவ்வருடம் சுக்கிரவாரம் எனப்படும் வெள்ளிக்கிழமையில் தமிழ் வருடப் பிறப்பு உதயமாகிறது. வெள்ளிக்கிழமையை சுக்கிரவாரம் என்று சொல்வார்கள். இந்த நாளில் தமிழ் வருடம் உதயமாவது மிகுந்த விசேஷம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.
🌟 இந்த வருடத் துவக்கத்தை, பெருமாளையும், பெருந்தேவித் தாயாரான மகாலக்ஷ்மியையும் வழிபட்டு காரியங்களில் ஈடுபட்டால், எல்லா செயல்களிலும் சுக்கிர பலம் அதிகரிக்கும். சகல தடைகளும் அகலும். செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும்.
சிறப்பு வழிபாடு :
🌟 சிவாலயங்களிலும், குரு பகவான் கோலோச்சும் ஆலயங்களிலும் பு ஜைகள் நடைபெறும். குரு பகவான் குடிகொண்டிருக்கும் ஆலயங்கள் மட்டுமின்றி, மற்ற சிவாலயங்களிலும், முருகன் குடிகொண்டிருக்கும் கோயில்களிலும் கூட தமிழ் வருடப் பிறப்பான ஹேவிளம்பி வருடத் துவக்கத்தை முன்னிட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டு, விசேஷ பு ஜைகள் வழிபாடுகள் நடைபெறும்.
🌟 ஹேவிளம்பி ஆண்டு பிறக்கும் வெள்ளிக்கிழமை நாளில், குரு பகவானையும் ஸ்ரீமகாலக்ஷ்மி தாயாரையும் வணங்கினால், தடைப்பட்ட திருமணம் கைகூடி வரும். ஆதலால் திருமண தடைப்படுபவர்கள் அவசியம் வழிபடுவது நலம் சேர்க்கும். நல்ல வாழ்க்கைத் துணையை தரும்.
வீட்டில் செய்ய வேண்டியவை :
🌟 சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பு சி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
🌟 அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.
🌟 சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பு ஜையில் வைத்து பு ஜிக்க வேண்டும்.
🌟 பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாடப்படும் புது வருடத்தில் இறைவழிபாடு, விருந்தோம்பல், தானதர்மம், ஆசிபெறுதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
14 04 2017 வெள்ளிக்கிழமை காலை 2 மணிக்கு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார்.
இதுவரை நடைபெற்றது 'துர்முக' வருடமாகும்
'துர்முக' என்றால் 'கேடுவிளைவிக்கிற' என்ற வராஹமிஹிரர் வாக்குப்படி அதன் கெடு பலனை நம் நாட்டில் நிறையவே நாம் உணர்ந்தோம்.
நாளை முதல் 'ஹேமலம்ப சம்வத்சரம்' என்று அழைக்கப்படுகிறது
சம்வத்சரம் என்றால் ஆண்டு, வருடம் என்று அர்த்தம்.
ஹேம என்றால் தங்கம்..லம்ப என்றால் லட்சுமி. இரண்டையும் சேர்த்து சொல்லிப்பார்க்கும்போது இந்த வருடத்தின் பெயரின் அர்த்தம் விளங்கும்
எல்லாவகையிலும் 'செழிப்பான' என்று புரிந்துகொள்ளலாம்.
அகஸ்தியர் பரம்பரையில் வந்த சித்தர்களால் இந்த வருடம் 'ஹேவிளம்பி' வருடம் என்றும் அழைக்கப்படுகிறது.
மொத்தம் 60 வருடங்கள். அதில் இந்த ஹேமலம்ப வருடம் 31 வது வருடமாக வருகிறது.
31 முதல் 35 வரை உள்ள 5 வருடங்களும்
ப்ரஹ்மாவின் புத்திரர்களான பிரஜாபதி என்ற ரிஷிகளால் ஆளப்படுகிறது.
நமது முன்னோர்களாக கருதப்படும் இவர்கள்,
இந்த நாட்டையும், மனித குலத்தையும், மற்றைய அனைத்து ஜீவராசிகளையும் காக்கும் நமது முன்னோர்களாக சொல்லப்பட்டிருக்கிறது.
விசாக நக்ஷத்ரமும் அனுராதா என்று சொல்லப்படுகிற அனுஷ நக்ஷத்ரமும் கூடிய நன்னாளில் இந்த வருடம் ஆரம்பிக்கிறது
விசாக நக்ஷத்ரத்தின் க்ரஹம் குரு
அனுஷ நக்ஷத்ரத்தின் க்ரஹம் சனீஸ்வரர்.
குருவும் சனியும் சேர்ந்தால் அது மஹா பாக்ய யோகம் என்று அழைக்கப்படுகிறது. நாளை கிழமையும் வெள்ளிக்கிழமை
ஆகையால் இந்த மாதிரி குரு சனி வெள்ளி (சுக்ரன் ) சேர்க்கையில் பிறக்கும் இந்த ஆண்டு நமக்கும், மற்ற எல்லா ஜீவராசிகளுக்கும் எல்லாவகையிலும் சிறந்ததாக இருக்க இறைவனை பிரார்த்திப்போம்.
'லோகா ஸமஸ்தா ஸுகினோ பவந்து'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக