ராமநவமி ஸ்பெஷல்
ராம நாமத்தின் மகிமை :
உலகிலேயே உயர்ந்த நாமம் ஸ்ரீ ராமநாமம்
ராமா என்று ஒருமுறை கூறினால் செய்த பாவங்கள் தீர்ந்து விடும்
ஸ்ரீ ராமபிரான் இலங்கை செல்வதற்காக வானரங்கள் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் எல்லா வானரங்களும் கற்களைத் தூக்கி கடலுக்குள் போட்டன
ஒவ்வொரு கல்லும் மற்றொரு கல்லின் மீது சரியாக அமர்ந்தது ஆஞ்சநேயர் அந்தப் பணியை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார் மனதிற்குள் ராமநாமா ஜபித்த படி ராமபிரானும் இதை கவனித்துக் கொண்டிருந்தார் அவர் மனதிலும் ஆசை ஏற்பட்டது நாமும் இந்த வானரங்களுடன் இணைந்து கல்லைத் தூக்கிப் போட்டால் என்ன எனக் கருதியபடியே ஒரு கல்லை எடுத்து கடலுக்குள் போட்டார் அந்தக்கல் சரியாக மற்ற கற்களின் மீது அமரவில்லை அவை தண்ணீரில் அடித்துச் சென்று விட்டது ராமபிரானுக்கு வருத்தம் இந்த வானரங்கள் போடும் கற்கள் மட்டும் மற்றொரு கல்லின் மீது அமர்ந்து விட்டதே இதற்கு என்ன காரணமாக இருக்கும் என வருத்தப்பட்டார்
ஆஞ்சநேயர் ராமர் அருகில் வந்தார் அவர் அனைத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தார்
ஆஞ்சநேயா நான் செய்ததை நீ பார்த்து விட்டாயா எனக்கு ஒரு கல்லைபோடக்கூடத் தெரியவில்லை என்னை நினைத்து எனக்கே வெட்கமாக இருக்கிறது என்றார்.
அதற்கு ஆஞ்சநேயர் ப்ரபோ எல்லா வானரங்களும் உங்கள் தாரக மந்திரமான ராம் ராம் என்ற உங்கள் நாமத்தைச் சொல்லிக் கொண்டே கற்களைத் தூக்கிப் போட்டன அவை சரியாக அமர்ந்தது நீர் ராமனாகவே இருந்தாலும் ராம நாமம் சொல்லி போட்டிருந்தால் அது சரியாக கற்களில் போய் அமர்ந்திருக்கும் என்றாராம்
ராமநாமம் அவ்வளவு சக்தி வாய்ந்தது
ராமநாமம் மிகவும் அற்புதமானது
ஸ்ரீ ராமரின் பெயரை இடைவிடாது உச்சரிப்பதன் மூலம் எல்லா உயிர்களிடத்தும் ராமனை காணலாம் எல்லா வகையான துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறலாம்
பாவங்களிலிருந்து கடைந்தேறலாம்
இவ்வளவு சக்தி வாய்ந்த ராம நாமத்தை
தெருவில் நடந்து போகும் போதும்
ஆபீஸில் வேலை செய்யும் போதும்
வீட்டில் சமையல் செய்யும் போதும்
சொல்லலாம்....!!!!
ராம் என்ற சொல் புனிதமான ஓம் என்னும் மந்திரத்திற்கு சமமானது
( நம் தமிழ்நாட்டிலதான் குட்மார்னிங் வணக்கம் என்று சொல்கிறோம் வடநாட்டு பக்கம் காலையில் வரும் பால்காரன் கூட ராம் ராம் என்று கூப்பிட்டுத்தான் பாலை ஊற்றுவான் அவ்வளவு மகத்தானது ராமநாமம் )
JAISRI RAM
ராமநவமி ஸ்பெஷல் !
ஸ்ரீ நாமராமாயணம்
ஓம் ஸ்ரீ ஸீதாலக்ஷ்மண பரதஸத்ருக்ந ஹனுமத்ஸமேத
ஸ்ரீ ராமச்சந்த்ரபரப்ரஹ்மனே நம:
பாலகாண்டம்
1 .ஸுத்த ப்ரஹ்ம பராத்பர ராம்
2 .காலாத் மக பரமேஸ்வர ராம்
3 .ஸேஷ தல்ப ஸுக நித்ரித ராம்
4. ப்ரஹ்மாத் யமரப் ரார்த்தித ராம்
5. சண்டகிரண குலமண்டந ராம்
6. ஸ்ரீமத் தஸரத நந்தந ராம்
7. கௌஸல்யா ஸுகவர்த்தந ராம்
8. விஸ்வாமித்ர ப்ரியதந ராம்
9.கோர தாடகா காதக ராம்
10. மாரீசாதிநி பாதக ராம்
11. கௌஸிகமக ஸம்ரக்ஷக ராம்
12. ஸ்ரீ மதஹல்யோத்தாரக ராம்
13. கௌதம முனி ஸம் பூஜித ராம்
14. ஸுரமுனி வரகண ஸம்ஸ்துத ராம்
15. நாவி கதா விதம் ம்ருது பத ராம்
16. மிதிலா புர ஜன மோஹக ராம்
17. விதேஹ மாநஸ ரஞ்ஜக ராம்
18.த்ர்யம்பக கார்முக பஞ்ஜக ராம்
19.ஸீதார்ப்பித வரமாலிக ராம்
20.க்ருதவை வாஹிக கௌதுக ராம்
21. பார்க்கவ தர்ப்ப விநாஸக ராம்
22. ஸ்ரீ மதயோத்யா பாலக ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
அயோத்யா காண்டம்
23. அகணித குணகண பூஷித ராம்
24. அவநீத நயா காமித ராம்
25. ராகா சந்த்ர ஸமாநந ராம்
26. பித்ரு வாக்யா ஸ்ரித காநந ராம்
27. ப்ரிய குஹ விநி வேதிதபத ராம்
28. தத்க்ஷாலித நிஜ ம்ருது பத ராம்
29. பரத்வாஜ முகா நந்தக ராம்
30. சித்ரா கூடாத்ரி நிகேதந ராம்
31. தஸரத ஸந்தத சிந்தித ராம்
32. கைகேயீ தந யார்த்தித ராம்
33. விரசித நிஜ பித்ரு கர்மக ராம்
34. பரதார்ப்பித நிஜ பாதுக ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
ஆரண்ய காண்டம்
35. தண்டகா வந ஜந பாவந ராம்
36. துஷ்ட விராத விநாஸத ராம்
37. ஸரபங்க ஸுதீக்ஷ்ணார்ச்சித ராம்
38. அகஸ்த்யா நுக்ரஹ வர்த்தித ராம்
39. க்ருத்ராதி பஸம் ஸேவித ராம்
40. பஞ்சவடி தட ஸுஸ்தித ராம்
41. ஸுர்ப்பண கார்த்தி விதாயக ராம்
42. கரதூ ஷணமுக ஸூதக ராம்
43. ஸீதா ப்ரிய ஹரிணாநுக ராம்
44. மாரீசார்த்திக் ருதாஸுக ராம்
45. விநஷ்ட ஸீதாந் வேஷக ராம்
46. க்ருத்ராதி பகதி தாயக ராம்
47. ஸபரி தத்த பலாஸந ராம்
48. கபந்த பாஹூச் சேதந ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
கிஷ்கிந்தா காண்டம்
49.ஹனுமத் ஸேவித நிஜபத ராம்
50.நத ஸுக்ரீவா பீஷ்டத ராம்
51.கர்வித வாலி ஸம்ஹாரக ராம்
52.வானர தூத ப்ரேஷக ராம்
53.ஹிதகர லக்ஷ்மண ஸம்யூத ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
ஸுந்தர காண்டம்
54. கபிவர ஸந்தத ஸம்ஸ்ம்ருத ராம்
55. தத்கதி விக்னத் வம்ஸக ராம்
56. ஸீதா ப்ராணா தாரக ராம்
57. துஷ்டத ஸாதந தூஷித ராம்
58. ஸிஷ்ட ஹநூமத் பூஷித ராம்
59. ஸீதா வேதித காகாவந ராம்
60. க்ரூத சூடாமணி தர்ஸந ராம்
61. கபிவர வஸநா ஸ்வாஸித ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
யுத்த காண்டம்
62. ராவண நிதநப் ரஸ்தித ராம்
63. வாநர சைன்ய ஸமாவ்ரூத ராம்
64. ஸோஷித ஸரீதி ஸார்த்தித ராம்
65. விபீஷணா பயதாயக ராம்
66. பர்வத ஸேது நிபந்தக ராம்
67. கும்பகர்ண ஸிரஸ் சேதக ராம்
68. ராக்ஷஸ ஸங்க விமர்த்தக ராம்
69. அஹி மஹி ராவண சாரண ராம்
70. ஸம்ஹ்ரூத தஸமுக ராவண ராம்
71. விதிபவ முகஸுர ஸம்ஸ்துத ராம்
72. கஸ்தித தஸரத வீக்ஷித ராம்
73. ஸீதா தர்ஸந மோதித ராம்
74. அபிஷிக்த விபீஷண நத ராம்
75. புஷ்பக யாநா ரோஹண ராம்
76. பரத்வா ஜாபி நிஷேவண ராம்
77. பரத ப்ராண ப்ரியகர ராம்
78. ஸாகே தபுரீ பூஷண ராம்
79. ஸகல ஸ்வீய ஸமாநத ராம்
80. ரத்நல ஸத்பீடா ஸ்தித ராம்
81. பட்டாபிஷேகா லங்க்ருத ராம்
82. பார்த்திவ குல ஸம்மாநித ராம்
83. விபீஷணார்ப் பித ரங்கக ராம்
84. கீஸகுலா நுக்ரஹ கர ராம்
85. ஸகல ஜீவ ஸம்ரக்ஷக ராம்
86. ஸமஸ்த லோகா தாரக ராம்
ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய ஸீதா ராம்
உத்தர காண்டம்
87. ஆகத முநிகண ஸம்ஸ்துத ராம்
88. விஸ்ரூத தஸகண்டோத் பவ ராம்
89. ஸீதாலிங்கந நிர்வ்ரூத ராம்
90. நீதி ஸுரக்ஷித ஜநபத ராம்
91. விபிநத் யாஜித ஜநகஜ ராம்
92. காரித லவணா ஸுரவத ராம்
93. ஸ்வர்க்க தஸம்புக ஸம்ஸ்துத ராம்
94. ஸ்வதநய குஸ லவ நந்தித ராம்
95. அஸ்வமேதக்ரது தீக்ஷித ராம்
96. காலா வேதித ஸுரபதி ராம்
97. அயோத்யக ஜந முக்தித ராம்
98. விதிமுக விபுதா நந்தக ராம்
99. தேஜோமய நிஜ ரூபக ராம்
100. ஸம்ஸ்ரூதி பந்த விமோசக ராம்
101. தர்ம ஸ்தாபந தத்பர ராம்
102. பக்தி பராயண முக்தித ராம்
103. ஸர்வ சராசர பாலக ராம்
104. ஸர்வ பவாமய வாரக ராம்
105. வைகுண்டாலய ஸம்ஸ்தித ராம்
106. நித்யாநந்த பத ஸ்தித ராம்
107. ராம ராம ஜெய ராஜா ராம்
108. ராம ராம ஜெய ஸீதா ராம்
// இதி ஸ்ரீ நாம ராமாயணம் ஸம்பூர்ணம் //
ஸ்ரீராமநவமியான இன்று இதை பக்தியுடன் படித்தால் நினைத்தது நிறைவேறும்.
* உலகாளும் நாயகனே! ராமச்சந்திரனே! சூரிய குலத்தில் உதித்தவனே! அமிர்தமான ராம என்னும் திருநாமம் கொண்டவனே! அபயம் அளிப்பவனே! அகலிகையின் சாபம் தீர்த்தவனே! குளிர்ச்சி மிக்க நிலவு போல பிரகாசிப்பவனே! பிறவிக் கடலைத் தாண்டச் செய்பவனே! எங்களுக்கு செல்வ வளம் தருவாயாக.
* ஜானகியின் பிரியனே! அனுமனுக்கு வாழ்வு அளித்தவனே! ஆதிமூலமானவனே! தாய் போல அன்பு மிக்கவனே! பயம் போக்குபவனே! சேது பாலம் அமைத்தவனே!
ஏழு மரா மரங்களைத் துளைத்தவனே! லட்சுமணரின் சகோதரனே! ஏகபத்தினி விரதனே! எங்கள் இல்லங்களை மங்களகரமாக்குவாயாக.
* காருண்ய மூர்த்தியே! ஜோதியாய் ஒளிர்பவனே! ராமஜெயம் சொல்வோரைக் காப்பவனே! கோதண்டம் என்னும் வில் ஏந்தியவனே! கோசலையின் புதல்வனே! ரத்ன குண்டலம் அணிந்தவனே! மரவுரி தரித்தவனே! சபரிக்கு மோட்சம் அளித்தவனே! எங்கள் உள்ளத்தில் குடியிருக்க வருவாயாக.
* கல்யாண குணத்தவனே! ராஜலட்சணம் பொருந்தியவனே! வானரங்களின் தலைவனே!
சங்கீதப் பிரியனே! ஜெகம் புகழும் புண்ணிய வரலாறு கொண்டவனே! மாருதியின் மனம் கவர்ந்தவனே! ரகு குல திலகனே! லவகுசர்களின் அன்புத் தந்தையே! விஜய ராகவனே! சீதையின் நாயகனே! எங்கள் வீடும், நாடும் நலமுடன் திகழ அருள்புரிவாயாக.
ராமர் காலடி தடங்கள் பதிந்த சில இடங்கள்
திருமாலின் அவதாரங்களில் ஒப்பற்றது ராம அவதாரம்.
அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும், அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால் நடையாகவே யாத்திரை புரிந்தவர் ராமபிரான்.
*அயோத்தி:*
இது ராமர் பிறந்த புண்ணிய பூமி. துளசிதாஸர், கம்பர், தியாகராஜர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ராம நாம ஊற்றின் முக்கிய தலம்.
வாரணாசி
லக்னோ மார்க்கத்தில் அயோத்தியா ரெயில் நிலையம் உள்ளது.
*பக்ஸர்:* சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று பல பெயர்கள் கொண்ட ‘பக்ஸர்’ என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம்.
பாட்னா
மொகல்சராய் ரெயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.
*அகல்யாசிரமம்:*
கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி – தர்பங்கா ரெயில் மார்க்கத்தில் கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும்.
அங்கிருந்து மேற்கே 15 மைல் தொலைவில் அஹியாரி என்ற ஊர் உள்ளது. அங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது.
இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால், அஹல்யா குண்ட் எனப்படும் அகல்யாசிரமத்தை அடையலாம்.
*ஜனக்பூர்:*
மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இது சீதாமடியில் இருந்து ஜனக்பூர் சாலையை அடைந்து, அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரம் சென்றால் ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
*ராம்டேக்:*
இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனராம். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் – சிவனிஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக்.
*சபரி ஆசிரமம்:*
சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது.
விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ‘ஹம்பி’. இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது.
இதன் அருகே உள்ள மலை ‘மதங்க பர்வதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
*ராமேஸ்வரம்:*
ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, ராமன் சிவலிங்க பூஜை செய்த இடம் இது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக