திங்கள், 29 ஜூலை, 2019

ஆடி 18-ல் கிரகப்பிரவேசம் செய்யலாமா? - ஜோதிடரின் பதில்...!!


ஆடி 18-ல் கிரகப்பிரவேசம் செய்யலாமா? - ஜோதிடரின் பதில்...!!

ஜோதிடர் பதில்கள் !!
1. ஆடி 18-ல் கிரகப்பிரவேசம் செய்யலாமா?

🌟 ஆடி 18-ல் கிரகப்பிரவேசம் செய்வதை காட்டிலும், ஆவணி மாதத்தில் செய்வது சிறப்பான பலனைத் தரும்.

2. மரம் வைக்க எந்த நட்சத்திரம் உகந்தது?

🌟 ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம் மற்றும் உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் உகந்தது.

3. கோவிலில் காலணி தொலைந்துவிட்டது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 கோவிலில் காலணி தொலைந்துவிட்டது போல் கனவு கண்டால் இதுவரை இருந்து வந்த பிணிகள் அகன்று சுபிட்சம் உண்டாகும்.

4. லக்னத்தில் சனி இருந்தால் என்ன பலன்?

🌟 எதைப்பற்றியும் கவலைக் கொள்ளமாட்டார்கள்.

🌟 விபரீதமான எண்ணங்களால் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வார்கள்.

🌟 வியாபாரத்தில் மத்திமமான முன்னேற்றம் உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

5. சனி திசையில், கேது புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 விரக்தி மனப்பான்மை அதிகரிக்கும்.

🌟 பிற இன மக்களால் சங்கடங்களை சந்திப்பீர்கள்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

6. சனி திசை, சனி புத்தி நடந்தால் என்ன பலன்?

🌟 உடல் நலம் பாதிக்கப்படும்.

🌟 தொழிலில் பொருள் விரயம் உண்டாகும்.

🌟 மனதில் தோன்றும் இனம்புரியாத கவலைகளால் சோர்வு ஏற்படும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

7. சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் என்ன பலன்?

🌟 எதிர்பார்த்த சுப காரியங்கள் நடைபெறும்.

🌟 பணியில் உயர்வு உண்டாகும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.

8. ஏழரைச் சனியில் திருமணம் செய்யலாமா?

🌟 ஏழரைச் சனியில் திருமண வரன்கள் அமைந்து வரும் பட்சத்தில் தாராளமாக திருமணம் செய்யலாம்.

9. ராசியும், லக்னமும் ஒன்றாக இருக்கலாமா?

🌟 ராசியும், லக்னமும் ஒன்றாக இருக்கலாம்.

10. லக்னத்திற்கு 12ஆம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்ந்திருந்தால் என்ன பலன்?

🌟 திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாத நிலையை உண்டாக்கும்.

🌟 துறவு நிலையில் அதிக விருப்பங்களை ஏற்படுத்தும்.

🌟 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.


சனி, 27 ஜூலை, 2019

இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?


இந்தியாவின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?

33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள,
தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!

9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.

திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும். தெற்கு வடக்காக 656 அடி அகலமும், கிழக்கு மேற்காக 846 அடி நீளமும், சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.

நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும். திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும்கிடையாது அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.

கோயில் ஐந்து வேலி, குளம் ஐந்து வேலி, செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும்.அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்.

இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.

சிவாயநம !! திருச்சிற்றம்பலம்!!!

வியாழன், 25 ஜூலை, 2019

அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு


ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். ஆடிமாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு விருப்பமான பதார்த்தங்களை படைத்து வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக் கை. அதனால் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதிலும் குறிப்பாக பெண்கள் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும்.

நாகர்கோவிலை அடுத்த தாழக்குடி அருகே உள்ள அவ்வையார் அம்மன் கோவிலில் ஆடி முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி நேற்று காலையிலிருந்தே பெண்கள் குவியதொடங்கினர் மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களிலிருந்தும், அண்டை மாநிலமான கேரளாவின் பல பகுதிகளிலிருந்தும் பெண்கள் வந்து இருந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த பொருள்களால் கூழ், கொழுக்கட்டை, சர்க்கரை பொங்கல் படைத்து அம்மனை வழிபட்டனர்.

கோவில் வளாகம் நிரம்பி வழிந்ததால் பக்கத்தில் உள்ள தோப்புகளிலும் பெண்கள் உணவு பண்டங்களை தயாரித்தனர். 1 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும் அங்குள்ள பிற சன்னதிகளான கணபதி, முருகன், மாடன், அகஸ்தியர் ஆகியவற்றிற்கும் தீபாராதனை நடைபெற்றது.

அவ்வையார் அம்மன் கோவிலுக்கு நாகர்கோவிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலிலும் ஆடி முதல் செவ்வாயையொட்டி சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானமும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

முப்பந்தல் ஆல மூடுஅம்மன் கோவிலில் பூக்குழி கொடைக்கான கால்நாட்டு விழா நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.

இக்கோவில்களுக்கும் அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

புதன், 24 ஜூலை, 2019

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது



நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று 25-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று காலை 5-30 மணிக்கு  அம்மன் சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
 4-ம் திருவிழாவான 28-ந்தேதி காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடக்கிறது.

மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், வளைகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது.


அடுத்த மாதம் (ஆகஸ்டு) 3-ந்தேதி 10-ம் நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும். இதையடுத்து அம்மனுக்கு அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னர் சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி, சுவாமி சன்னதிக்கு சென்றடைவார். அங்கு அம்மன் மடியில் கட்டி வைக்கப்படும் முளைகட்டிய சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

செவ்வாய், 23 ஜூலை, 2019

ஆடி பிறப்பு: கணவனின் பலம் பெருக பெண்கள் விரதம் இருக்கவேண்டிய மாதம்!

ஆடி பிறப்பு: கணவனின் பலம் பெருக பெண்கள் விரதம் இருக்கவேண்டிய மாதம்!

தேவர்களின் பகல் பொழுது நேற்றோடு முடிந்துவிட்டது. இன்று முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பிக்கப் போகிறது. கடந்த ஒரு மாதமாக ராகுவின் பிடியில் இருந்துவந்த பித்ருகாரகனான சூரிய பகவான் சந்திர கிரகணத்திற்குப் பின் ஒருவழியாக தப்பித்து மாத்ருகாரகனான சந்திரனின் மடியில் கடக ராசியில் தஞ்சம் அடைந்துவிட்டார். இன்னும் ஒருமாதத்திற்கு அங்கிருந்து ஆடிமாதத்தைச் சிறப்பிக்கப்போகிறார்.

பெண்மையை போற்றும் ஆடிமாதம்

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையில் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடி பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல், இப்படி நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு. தெரிந்துகொள்வோமா?

ஆடிப்பட்டம்

ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம். ஆடியில் காற்றுடன். மழையும் பெய்யும். அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் இதனால் வந்தது இந்த பழமொழி. எனவே விவசாய நாடான நமது நாட்டில் பொன்னேரு பூட்டும் வழக்கம் மரபில் இருந்தது. சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் விவசாயத்திற்குக் காரகமான சந்திரன், சுக்கிரன், சனி என அனைத்து கிரகங்களும் கடகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆடிப்பண்டிகை

"ஆடி அழைக்கும். உகாதி ஓட்டும்" என ஒரு சொலவடை உண்டு. அதாவது தமிழ் வருடத்தில் ஆடி மாதத்திலிருந்துதான் அனைத்து பண்டிகைகள் திருவிழாக்கள் தொடங்குகின்றன. யுகாதியோடு பண்டிகைகள் முடிந்துவிடும். அதன்பிறகு சித்திரை வருட பிறப்பை தவிர வேறு பண்டிகைகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் சிறப்பிக்கும் விதமாக ஆடி முதல் நாளில் ஆடிப்பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. வாசலில் கோலம் செம்மண்(காவி) எனக் களை கட்டத்தொடங்கிவிடும். தக்ஷிணாயனத்தின் முதன் நாளான ஆடிப் பண்டிகையின் போதும் கடைசி நாளான போகிப்பண்டிகையின் போதும் "போளி" எனும் இனிப்பு செய்வது பிராமணர் இல்லங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாக திருமணம் ஆன மணமகனை (மருமகனை) அழைத்து வெள்ளி கிண்ணத்தில் ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம். அதனால் ஆண்மை பெருகும் என்பது நம்பிக்கை.

சர்வ நதி ரஜஸ்வலா

ரஜஸ்வலா என்பது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தீட்டினை குறிப்பதாகும். நதிகளைப் பெண்களாகப் போற்றுவது நமது நாட்டின் பாரம்பரியம். எனவே ஆடி மாத ஒன்றாம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு நதிகளுக்கெல்லாம் ரஜஸ்வலா எனும் தீட்டு என்கிறது சாஸ்திரம். ஆடிமாதப் பிறப்பான 17-07-2019முதல் 19-07-2019 முடிய மூன்று நாட்கள் காவேரி, தாமிரபரணி, நர்மதா, யமுனா, முதலிய அனைத்து புண்ணிய நதிகளுக்கும் அதன் கிளை நதிகளுக்கும் ரஜஸ்வலா ஏற்படுவதால் அசுத்தி. ஆகவே இந்த மூன்று நாட்களிலும் அனைத்து புண்ணிய நதிகளிலும் கிளை நதிகளிலும் ஸ்நானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.


பெண்கள் மாதவிலக்கு காலத்தில் உடல் தூய்மை மற்றும் மனத்தெளிவு அற்று இருப்பதால் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஓய்வளிக்க சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இந்த காரணத்தினால் தான் இன்றளவும் பிராமணர்கள் மற்றும் ஆசாரமான குடும்பங்களில் மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. எனவே முதல் மூன்று நாட்களுக்கு நதிகளையும் புண்ணிய தீர்த்தங்களையும் நீராடுவது அவைகளை தொந்தரவு செய்வதற்குச் சமம் என்பதால் நீராடக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

ஆடியில் செவ்வாய் விரதம்

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

அம்மனுக்கு வளைகாப்பு

திருமணமாகிக் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஐந்தாம் மாதத்தில் வளைகாப்பு செய்வது வழக்கம். அந்த மரபுப்படி பங்குனி உத்திரத்தில் திருமணம் கண்ட அன்னையர் தெய்வங்களுக்கு ஐந்துமாதமான ஆடியில் வளைகாப்பு செய்யப்படுகிறது.

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலைப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகுகம்; பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


குறிப்பாக திருச்சி உறையூர் குங்கும வல்லி ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தித்தால் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிட்டும்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆடி அமாவாசை

தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. இராமேஸ்வரம் திருப்புல்லாணி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் சமுத்திர ஸ்நானம் மற்றும் தில தர்ப்பணம் செய்வது சிறப்பு.

ஆடிப்பௌர்ணமி


ஆடி மாதம் பெளர்ணமி தினமும் விசேஷமானதுதான். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

ஆடித்தபசு

சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. 'ஹரியும் அரனும் ஒன்றே' என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சியளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிக்கூழ்

சித்திரை வைகாசி காலங்களில் மாரியம்மனுக்கு ஏற்பட்ட உஷ்ண நோய் தனிய கம்பு மற்றும் கேழ்வரகில் கூழ் வார்ப்பது மரபு. ஆடியின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் செல்லும் இடங்களில் எல்லாம் கூழ் வார்ப்பதைக் காணலாம்.


பசிப்பிணி போக்கி, எளியவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே கஞ்சி வார்த்தல் வழிபாட்டின் தாத்பரியம். சமயபுரம், புதுக்கோட்டை - நார்த்தாமலை முதலான அம்மன் தலங்களில் கஞ்சி வார்க்கும் வழிபாடு சிறப்புற நடைபெறும்.

வளம் பெருக்கும் ஆடிப்பெருக்கு

நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்! காவிரித்தாய் கருவுற்றதைக் கொண்டாடும் திருநாள். மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருக்கியோடும் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்ச் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதிப் பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

ஆடிவெள்ளி


ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதைக் காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கன்னியாகுமரி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

அங்காரக சதுர்த்தி

சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்களங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்களன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி’ என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும் மற்றும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்..


மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்க்கும் மாதமென்றால் மிகையாகாது. ஆலயமோ அலுவலகமோ அல்லது வீடோ எல்லா இடங்களிலும் பெண்கள் ஓங்கி நின்று ஆண்களைக் காக்கும் மாதம் ஆகும். சந்திரனும் சுக்கிரனும் ஆதிக்கம் செலுத்தும் மாதம் ஆடி மாதம். தந்தையைக் குறிக்கும் சூரியன் தாயிடம் சென்று சரணடைகிறார். ஆகவே ஆண்கள் தங்கள் வரட்டுகௌரவத்திற்காக சண்டை போடாமல் "மாத்ரு தேவோ பவ:" என சரணடைந்துவிடுவது நல்லது. பெண்கள் தங்களிடம் தஞ்சமடைந்தவர்களை எப்படியாவது காப்பாற்றிக் கரை சேர்க்கும் அற்புத மாதம் ஆகும். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் அதில் நான் எந்த மூலை" என்பதை உணர்ந்து மனைவியரின் கோபத்திற்கு முன் பணிந்து சென்றுவிடுவது நல்லது.
நன்றி தினமணி

திருமண வரம் அருளும் நெல்லை காந்திமதி அம்மன்! #AadiSpecial


திருமண வரம் அருளும் நெல்லை காந்திமதி அம்மன்! #AadiSpecial


மூங்கில் காடுகள் நிறைந்திருந்த பகுதியாக இருந்த வேணுவனம் பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய வேணுவனநாதரை வழிபடுவதற்காக பிரகாசமான திருவடிவம் கொண்டு பூமியில் தோன்றிய அம்பிகை காந்திமதி அருளாட்சி புரியும் திருத்தலம்தான் திருநெல்வேலி. இந்த அம்மனை தரிசித்து, அவளுடைய அருள்திறம் பற்றியும் அறிந்துகொள்வோம். இந்த அம்மனின் அற்புதங்களும் அருளாசியும் சொல்ல சொல்ல நீள்பவை. கன்றுக்கு இறங்கும் தாய்ப்பசுவாய் என்றுமே பக்தர்களுக்கு அருள்புரியும் இளகிய மனம் கொண்டவள் நெல்லையை ஆளும் காந்திமதியம்மன். நெல்லையப்பரின் மனம் கவர்ந்த இந்த தயாபரி வேண்டுவதை கொடுக்கும் உபகாரி. வாருங்கள் இந்த அன்னையின் அற்புதங்களை காண்போம்.

* நெல்லையில் பிரதானப் பகுதியில் உள்ள காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார், நெல்லை நாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

* திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்ச நாட்டிய சபைகளில் தாமிர சபையாகவும் விளங்கும் இந்த ஆலயத்தில் காந்திமதியம்மை அழகே உருவாக அலங்கார சொரூபிணியாக விளங்குகிறாள்.


*  காந்திமதி அம்மனை இங்குள்ள மக்கள்  தங்கள் வீட்டு பெண் போலவே எண்ணி போற்றி வருகிறார்கள். அம்மனுக்காக அலங்காரப்பொருட்கள் யாவும் பெரும்பாலும் நெல்லை மக்களால் அளிக்கப்பட்டதாகவே இருக்கும்.

* காந்திமதியம்மனுக்கு நடக்கும் ஆடிப்பூரவளைகாப்பு முக்கியமான திருவிழா. அம்மன் சந்நிதியில் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கும். விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,  அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெறும்.

* ஆடி வெள்ளிகளில் அம்மனை காணவே கண் கூசும், அந்த அளவுக்கு அலங்கரிக்கப்பட்ட தேவியாக காட்சி தருவாள். புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்கநகைகள் ஜொலிக்க விளங்குவாள். அப்போது அனைத்து பழ வகைகளும், பிரசாதங்களும் நைவேத்தியமாக இவளுக்கு படைக்கப்படும்.

* ஆடி மாத வெள்ளி, செவ்வாய்களில் அளிக்கப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால், பிள்ளைவரம் வேண்டுபவர்களுக்குக்  பிள்ளை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.


* ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாக உள்ளது. இதன் மூன்றாவது பிராகாரம் பிரமாண்டமானது. இப்பிராகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தபடியே அருள்வழங்கும் அழகிய அம்பிகை பக்தர்களை காத்து வருகிறாள்.

* 2000 ஆண்டுகால பழைமையைக் கொண்ட இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது. ஆனிமாத விழாவில்தான்  தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்ட நெல்லையப்பர் தேர் பவனி வரும்.

* வேண்டும் வரங்களை மனம் மகிழ்ந்து அளிக்கும் இந்த அன்னை சொக்கநாத பிள்ளையால் 'காந்திமதியம்மை பதிகம்' என்ற அழகிய பாடல்களால் பாடப்பட்டவள்.

நெல்லைப்பகுதிக்கு வருபவர்கள் யாரும்  காந்திமதியம்மையை தரிசிக்காமல் சென்றதே இல்லை. அத்தனை வசீகரமும், வரப்பிரசாதியாகவும் விளங்கக்கூடியவள் இந்த அன்னை. ஆடி மாதத்தில் இந்த அன்னையை வணங்கி அருள் பெறவேண்டும்.
நன்றி விகடன்.

அம்பிகை அருள் பெருக்கும் ஆடிப்பூரம்


அம்பிகை அருள் பெருக்கும் ஆடிப்பூரம்

ஆடி மாதம் மற்றும் தை மாதம் அம்பிகைக்கு மிகவும் விசேஷம். ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரிய பகவான் தெற்கு நோக்கி பயணத்தைத் தொடங்கும் மாதம். உத்தராயணம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தட்சிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலமாகும். மேலும் தட்சிணாயனத்தின் தொடக்கமான ஆடியும், உத்தராயணத்தின் தொடக்கமுமான தை மாதமும் உலகாளும் அம்பிகைக்கு உகந்த மாதங்களாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

வடக்கே இமாசலத்தில் பர்வத ராஜகுமாரியாகப் பிறந்தவள், தென்கோடியில் கன்னியாகுமரியாக நிற்கிறாள். மலையாளத்தில் பகவதியாகவும், கர்நாடகத்தில் சாமுண்டீஸ்வரியாகவும், சோழ தேசத்தில் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரியாகவும், பாண்டி நாட்டில் மீனாட்சியாகவும், ஆந்திரத்தில் ஞானாம்பிகையாகவும், மராட்டியத்தில் துளஜா பவானியாகவும், குஜராத்தில் அம்பாஜியாகவும், பஞ்சாபில் ஜ்வாலாமுகியாவும், காஷ்மீரத்தில் க்ஷீர பவானியாகவும், உத்திரபிரதேசத்தில் விந்திய வாசினியாகவும்,

வங்காளத்தில் காளியாகவும், அஸ்ஸôமில் காமாக்யா ஆகவும் இப்படி தேசம் முழுவதிலும் பல ரூபங்களில் கோயில் கொண்டு நமக்கு அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

தேவிக்குரிய திருநாள்களில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் "ஆடிப் பூரத் திருநாள்' மிகவும் சிறப்பானது. ஆடிப்பூரத்தன்று வைணவத் திருக்கோயில்களில்

ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள் இந்நன்னாளில் ஆண்டாளை வணங்கினால் அவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

தேவிக்குரிய இத்திருநாளில் சித்தர்களும் யோகிகளும் தங்களது தவத்தை துவக்குவதாகப் புராணங்கள் கூறுகின்றன.தாய்மை பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பு. பெண்களுக்கு வளையல் காப்பு நடத்துவதுபோல, நம்மைப் படைத்த அன்னைக்கு வளைகாப்பு நடத்தி மகிழ்ந்திடும் நாளே ஆடிப் பூரம். அம்பிகைக்கு வளையல்களால் அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையல்கள் பெண்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்படுகிறது. அன்று அம்பிகைக்கு சித்ரான்னங்களும், ஆடிக் கூழும் படைத்து மக்கள் மகிழ்வர்.

திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு ஆடிப்பூர விழாவின் 4 ஆம் நாளன்று ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறுகிறது. இந்த அம்பிகையை வழிபடுவோர் திருமணம், பிள்ளைப்பேறு பெறுகின்றனர். சிலர் வீட்டில் முளைப்பாலிகை வைத்து அதை கோயிலில் சேர்க்கின்றனர். ஆடிப்பூர விழா, பல்வேறு ஆலயங்களில் வாகன சேவையுடன் 10 நாள் திருவிழாவாகவும் நடைபெறும்.

திருவாரூர் கமலாம்பாள், திருநாகை நீலாயதாட்சி, திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை போன்ற பல திருத்தலங்களில் 10 நாள் பிரம்மோற்சவமும் திருமயிலைக் கற்பகவல்லிக்கு ஆடிப் பூரத்தன்று மதியம் சந்தன காப்பு அலங்காரமும், இரவு வளையல் அலங்காரமும் நடைபெறுகிறது. மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மனுக்கு கூழ்வார்க்கும் பண்டிகைச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் உள்ள நைணை நாகாபூசணி அம்மன் ஆலயத்திலும் ஆடிப் பூரத்திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு அம்பிகைக்கு ருது சாந்தி வைபவம் பூப் புனித நீராட்டு விழாவாக நடைபெறுகிறது.

திருக்கழுக்குன்றம், அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், அன்னை திரிபுரசுந்தரி சுயம்பு வடிவானவள். அம்பாள் மூர்த்தம் அஷ்ட கந்தகம் உட்பட எட்டு விதமான வாசனை பொருள்களால் ஆக்கபட்டது. அம்பாளுக்கு (திரிபுரசுந்தரி) மார்பில் ஸ்ரீ சக்கரப் பதக்கம் சார்த்தப்பட்டுள்ளது. ஆடிப்பூரம், பங்குனி உத்திரம், நவராத்தியில் வரும் நவமி ஆகிய மூன்று நாட்களில் மட்டுமே அம்பாளுக்கு முழு அபிஷேகம் செய்யப்படுகின்றது. மற்ற நாள்களில் அம்மனுக்கு திருபாதத்தில் மட்டுமே பூஜை நடக்கின்றது. அகில உலகத்தை காக்கும் நாயகியாம் திரிபுரசுந்தரியை வருடத்தில் 3 முறை நடைபெறும் மகாஅபிஷேக விழாவில் கண்டு வணங்கினால் பாவம் விலகி நல்லன நடக்கும்.

ஆண்டாள், ஆடி மாதம், பூர நட்சத்திரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள துளசி தோட்டத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளே வட மாநிலங்களில் கோதாதேவி என்று கொண்டாடப்படுகிறாள். எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில் பூமி பிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். தன்னையே அரங்கனாகப் பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார நன்னாள் ஆடிப் பூரம் ஆகும். இந்நாளில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர்.

ஸ்ரீரங்கப் பெருமான் தேவியைக் கரம் பற்றித் தன்னுடன் சேர்த்துக் கொண்ட திருநாளை உணர்த்தும் விதமாக ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆடித் திருவிழாவின் 7ஆம் நாள் ஆண்டாளின் மடியில் சயனித்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார் ஸ்ரீ ரெங்கநாதர். இந்த ஊரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் நடக்கும் இந்நிகழ்ச்சி மிகவும் விசேஷமானது. இக் காட்சியை தரிசிக்கும் தம்பதியரிடையே ஒற்றுமை மேலும் பலப்படும்.

வளையல் வியாபாரி ஒருவர் பெரியபாளையம் வழியாக வந்து கொண்டிருந்தபோது களைப்பு மேலிட அங்கிருந்த ஒரு வேப்பமரத்தடியில் படுத்து உறங்கியவர், கண்விழித்துப் பார்த்தபோது, அவர் வைத்திருந்த வளையல் பெட்டியைக் காணாது துணுக்குற்றார். அன்றிரவு அம்பாள் அவர் கனவில் தோன்றி, ""நான் ரேணுகா பவானி!

அப்பா, நீ கொண்டுவந்த வளையல்கள் என் கையை அலங்கரித்து இருக்கிறது பார்! பல யுகங்களாக பெரியபாளையம் வேப்பமரத்தினடியில் புற்றில் சுயம்புவாக வீற்றிருக்கும் என்னை வணங்குபவர்களின் வாழ்க்கை செழிக்கும்'' எனக் கூறி மறைந்தாள். வியாபாரி அனைவரிடமும் தாம் கண்ட கனவைப் பகிர்ந்து கொண்டு திருக்கோயில் எழுப்ப உதவினார்.

அம்பாளுக்கு மலர், பழம், காய்கனி, நகை, மஞ்சள், சந்தனம், குங்குமம் இதுபோன்று பல அலங்காரங்கள் நடைபெறுவது போல ஆடிப் பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் விசேஷமாக வளையல்களால் அலங்கார வைபவம் நடைபெறும்.

பூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசியம் தரிசிக்கவேண்டிய திருத்தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும். அம்பாள் பெரிய நாயகி நின்ற திருக்கோலத்தில் அருள்கிறாள்.

கல்மாஷபாதன் மன்னனுக்கு நீண்ட காலமாகியும் பிள்ளைப் பேறு இல்லாததால் அகத்திய முனிவரின் ஆலோசனைப்படி இத்தலம் வந்தான். இடையர்கள் கொண்டுவரும் பூஜை பொருட்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இடறி விழுவதை அறிந்த மன்னன், தன் வாளால் பூமியில் கீறிப் பார்க்க, பூமியில் இருந்த சிவலிங்கத்தின் சிரசில் இரத்தம் பீச்சியடித்தது. இதைக் கண்ட மன்னன், தான் மாபெறும் தவறு இழைத்துவிட்டதாக புலம்பி, தன் உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொள்ள, பார்வதி தேவியுடன் ஆடிப் பூரத்தன்று திருமணக் கோலத்தில் தரிசனம் கொடுத்தார். இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். ஆண் குழந்தையும் பிறந்தது.

ஆடி மாதத்தில் பூரம் நட்சத்திரம் உச்சமாக இருக்கும். இந்நாளில் ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பணம் வைத்து கொடுப்பது நல்லது. இன்று மஞ்சள் தாலி கட்டிக்கொள்ள தீர்க்க சுமங்கலியாய் இருப்பர். ஆடிப்பூரம் அன்று சக்தி ஸ்தலங்களில் அம்மன் ஆலயங்களில் வழிபட கேட்கும் வரம் கிடைக்கும். ஆரோக்யம், செல்வ செழிப்பு உண்டாகும்.
நன்றி தினமணி.

ஆனந்த வாழ்வு தரும் ஆடிப்பூரம்


ஆனந்த வாழ்வு தரும் ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில் தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.

அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

காந்திமதியம்மனுக்கு வளைகாப்பு: திருநெல்வேலி காந்திமதியம்மனுக்கு, ஆடிப்பூர விழாவின் நான்காம் நாளன்று, ஊஞ்சல் மண்டபத்தில் வளைகாப்பு விழா நடைபெறும். இந்த வளைகாப்பு விழாவில் பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாகத் தரப்படும். இந்த வளையலை வாங்கி அணிந்து கொள்ளும் பெண்களுக்கு விரைவில் வளைகாப்பு வைபவம் நடப்பது உறுதி என்பது நம்பிக்கை.

சில இடங்களில் ஆடிப்பூரம் முளைப்பாலிகை திருவிழாவாகவும் கொண்டாடபடுகின்றன. ஒரு வாரத்திற்கு முன்னரே அவரவர் இல்லங்களில் நவதான்யங்களை விதைத்து முளைப்பாலிகையை தயார் செய்கின்றனர். திருஆடிப்பூரத்தன்று அவை அம்மன் சன்னதியில் சேர்க்கப்படுகின்றன. முளை வளர்ந்துள்ள விதத்தில் இருந்து வருடம் எவ்வளவு செழிப்பாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றது என்பது ஐதீகம்.

பல்வேறு ஆலயங்களில் ஆடிப்பூரம் அம்மனுக்குரிய பிரம்மோற்சவமாக பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறுகின்றது. இவ்வாறு பத்துநாள் பிரம்மோற்சவம் நடைபெறும் சில தலங்கள், திருவாரூரில் கமலாம்பாளுக்கு, திருநாகையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு, திருக்கருகாவூரில் கர்ப்பரட்சாம்பிகைக்கு. திருமயிலை கற்பகவல்லிக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம், இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பகவல்லிக்கு வளை காப்பு உற்சவம். மேல் மருவத்தூரில் ஆதிபராசக்திக்கு ஆடிப்பூரம் மிகப்பெரிய பண்டிகையாக அம்மனுக்கு கூழ் வார்க்கும் பண்டிகையாக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு சிறப்பு வழிபாடு நடக்காத கோவிலே இல்லை.

ஆடியில் பூத்த அரும்பு:  வைணவத்திருக்கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். ஆடி மாதத்தில் துளசி தோட்டத்தில் ஆண்டாள் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. இவளை வடமாநிலங்களில் கோதாதேவி என்று அழைப்பர். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.
நன்றி தினமலர்.

ஆண்டாளின் அவதார திருநாள் ஆடிப்பூரம்


ஆண்டாளின் அவதார  திருநாள்  ஆடிப்பூரம்

ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. ஆடி மாதம் சூரியன், கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் இடம் பெயர்ந்த போது, நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி, பூர நட்சத்திரம் கூடிய சனிக்கிழமையன்று துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் கண்டெடுக்கப்பட்டவள் ஆண்டாள். ஆண்டாளின் இயற்பெயர் கோதை. வடமாநிலங்களில் ‘கோதாதேவி’ என்று அழைப்பர்.

 ஆண்டாள் அவதரித்த திருத்தலமான திருவில்லிபுத்தூரை,  ‘கோதாதேவி அவதார ஸ்தலம்’ என்றும் அழைப்பதுண்டு. இதனால் ஆடிப்பூரத்தன்று திருவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் தேரோட்டமும் நடைபெறும். மங்கலமான இந்நாளில் திருமணமாகாத பெண்கள் ஆண்டாளை வணங்கினால், விரைவில் திருமணமாகும் என்பது நம்பிக்கை. மேலும் அம்மன் ஆலயங்களுக்கு சென்று மனதார வணங்கினால், மனம் போல் மாங்கல்யம், புத்திர பாக்கியம் கிடைக்கும். புனிதமான இந்த தினத்தில் அம்பிகை பூப்பெய்தினாள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினம் அம்பிகைக்கு, தங்கள் வீட்டு பெண் போல் வளைகாப்பு வைபவமும், பூப்பெய்தல் சடங்கும் நடத்தி பக்தர்கள் வழிபடுவார்கள். மேலும், சித்தர்கள், யோகிகள் இந்நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

ஆடி மாதத்தில் ‘பூரம்’ நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் தினமே ஆடிப்பூரம். இது அனைத்து அம்மனுக்கும் உரிய திருநாளாக போற்றப்படுகிறது. மனிதர்களை இன்னல்களில் இருந்து மீட்பதற்கு, உலகத்தை காக்கும் அன்னை  தோன்றிய நாளே ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுவதாக ஆன்மிக பெரியோர்கள் கூறுவதுண்டு. எனவே, இந்நாளில் அன்னை உலகிற்கு விஜயம் செய்து மக்களுக்கு அருள் புரிவார் என்று நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று ஆடிப்பூரம் வருவது கூடுதல் சிறப்பு.

 ஆடி மாதம் என்பது தக்ஷிணாயன காலத்தின் தொடக்க காலம். இது வரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக்காலமே இந்த தக்ஷிணாயன காலம் ஆகும். உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால்தான் முடியும். நம்முடைய மானிட வழக்கமான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னையாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள். மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை அம்மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்துக் கூறுவர். இந்த நாளில் இக்கோயிலுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது. எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய ஆரத்தினை தானே சூடிக் கொண்டு ஆடியில் அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் அவள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம்.

ஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்


ஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்...

ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.

ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் ஆலயங்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.

விஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

ஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில், மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை, பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து, கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள், கோதை.

பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.

ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.

ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.

பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.

அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.

ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.

ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.

ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே, ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை, முன்னதாகவே சொல்லிவைத்து பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெற்ற கிளியை பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.

மனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும், இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி. கண்ணனுக்காக தயார் செய்யப்பட்ட மலர் மாலையை, தான் சூடி அழகு பார்த்த ஆண்டாளின் வழியைப் பற்றி, இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைதான், பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி பெருமாளுக்கும், சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் சாத்தப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் தோன்றிய செவ்வாய்க்கிழமையில் துளசியை பூஜித்து, விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.

வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்து புன்னகை முகத்துடன் அருள் புரியும் ஆண்டாளை தரிசித்து வாருங்கள்.

ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்


ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்

அரங்கனை மணக்க அழகரிடம் பிரார்த்தனை!

நள வருடம்- ஆடி மாதம், சுக்ல பட்சம் சதுர்த்தி- செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அந்தத் திருநாள், பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது.

 இந்த தினத்தில்தான்... ஸ்ரீவில்லிப் புத்தூரில், வடபெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ்... செந்தமிழை, பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானை- அந்தத் திருவரங்கனை ஆள... ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்!
நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற, ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள். காரணம்?!
ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்!
'அரங்கனையே மணப்பேன்’ எனச் சங்கல்பித்ததுடன், தான் நினைத்ததை நிறை வேற்றியும் காட்டியவள் அல்லவா, அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்! அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க, நாம் நினைத்த காரியங்களையும், தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாளாம் அவள்.
அதே நேரம், நாம் நினைப்பதும் வேண்டு வதும் உசத்தியானதாக இருக்க வேண்டும், ஸ்ரீஆண்டாளின் வேண்டுதலைப் போலவே! அந்த அரங்கனே வேண்டும் என்றாள் அவள்; அதற்காகவே பக்தி செலுத்தினாள்; அந்த இறைவனுக்காகவே வாழ்க்கை நடத்தினாள். இதற்கு, அவளின் பாசுரங்களே சான்று!
ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்!

திருமாலிருஞ்சோலை- அழகர் அருள் பாலிக்கும், பாண்டி நாட்டு திவ்விய தேசம். எம்பெருமான் விண்ணளந்து நின்றபோது, அவரின் திருப்பாதத்தை பிரம்மன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய, ஆகாச கங்கையாய் பிரவாகித்த அந்த நீர், எம்பெருமானின் தண்டைச் சலங்கையில் பட்டுத்தெறித்து பூமியில் விழ, அதுவே நூபுர கங்கை (சிலம்பாறு) தீர்த்தமாய்த் திகழும் புண்ணிய க்ஷேத்திரம் இது.
ஸ்ரீசுந்தரவல்லித் தாயாருடன் அருளும் இந்தத் தலத்தின் நாயகன் அழகரைப் போற்றும் ஸ்ரீஆண்டாள்...
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட
கொள்ளுமாகில்நீ கூடிடு கூடலே!
- எனப் பாடுகிறாள் (நாச்சியார் திருமொழி: 4-1). அதாவது... 'நித்யசூரிகளால் அனுதினமும் கரம்கூப்பி வணங்கப்பெறும் திருமால், வள்ளல்பிரானாக திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிறான். உள்ளம் கொள்ளை கொள்ளும் அந்தக் கள்வன் பள்ளி கொண்டிருக்கும் திருவரங் கத்தில், அவனது திருவடிகளை நான் பிடித்துவிடும்படியாக அருள மாட்டானா? அப்படி அவன் அருள்வதற்குத் திருவுளம் பற்றுவானாகில், கூடலே நீ கூடிடுக’ என மேகத்தை வேண்டுகிறாள் கோதை நாச்சியார்.
ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்!
இதிலிருந்து, அரங்கனின் மீதான அவளின் பக்தியையும் காதலையும் நன்கு உணரலாம். 'மாலவனையன்றி மனிதர்கள் எவரையும் மணாளனாக ஏற்கமாட்டேன்’ எனச் சூளுரைத்துக் கொண்டவள், வாரணம் ஆயிரம் சூழ வர நாரணன் நம்பியை மணப்பதுபோல் கனவும் கண்டாள். அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே அவளின் பிரார்த்தனையாகவும் அமைந்தது.
திருமாலிருஞ்சோலை இறைவனிடம் ஆண்டாள் பிரார்த் தனை செய்வதைப் பாருங்களேன்...
நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!
- தனது வேண்டுதல் நிறைவேற, அழகருக்கு நூறு தடா (ஓர் அளவு) வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாகப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.
உன்னதப் பிரார்த்தனை பழுதின்றி நிறைவேறும். ஆண்டாளும் அரங்கனை அடைந்தாள்.
பிற்காலத்தில் உடையவர் ஸ்ரீராமானுஜர் கள்ளழகர் கோயிலுக்கு வந்து, இறைவனுக்கு நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பித்து வழிபட்டு, ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்.
பின்னர், அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது, அங்கே ஸ்ரீஆண்டாள் தன் அர்ச்சைக் கலைத்து (விக்கிரகத் திருமேனியை அர்ச்சை- அர்ச்சாவதாரம் என்பர்), 'வாரும் எம் அண்ணாவே’ என ஸ்ரீராமானுஜரை வரவேற்றா ளாம். இதன் அடிப்படையில், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில், 'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னாளாள்’ எனப் போற்றப்படுகிறாள் கோதை நாச்சியார்.



இன்றும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் திருக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் ஒருநாள், 'மாலே மணிவண்ணா...’ பாடலின்போது, ஆண்டாளுக்கு விருந்துபசாரம் நிகழ்த்துகிறார் ஸ்ரீராமானுஜர். மிக அற்புதமான வைபவம் இது!
ஆண்டாளைப் போற்றும் அருளாளர்கள், 'அவள் திருவேங்கடமுடை யானின் பெருமையை கேட்டபோது முக மலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை இறைவனின் வடிவழகை அறிந்தபோது அக மகிழ்ச்சியும், திருவரங்கனின் பெருமையைக் கேட்டு அளவற்ற இன்பமும் அடைந்தாள்; அரங்கனையே மணாளனாக வரித்துக் கொண்டாள்’ என்று சிலாகிப்பார்கள்.
இன்றைக்கும் திருப்பதி புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது, ஸ்ரீவில்லிப் புத்தூர் ஆண்டாளின் மாலை திருப்பதிக்குச் செல்லும். ஆண்டாள் மாலையை திருவேங்கடவன் ஏற்றுக்கொள்ள. அவரின் அருட்பிரசாதமாக புடவை ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை ஆண்டாளின் திருக்கரத்தில் சமர்ப்பித்து ஆராதனைகள் செய்வர். அதேபோல் சித்திரைத் திருவிழாவையட்டி, திருமாலிருஞ்சோலை அழகருக்கும் ஆண்டாள் மாலை கொண்டுசெல்லப்படுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபெருங் கோயிலில், அதிகாலை விஸ்வரூப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு, ஆண்டாள் மாலையுடன் காட்சி தருவார் ஸ்ரீவடபத்ரசாயி. ஆமாம்... அனுதினமும் இரவு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, இந்த இறைவனுக்குச் சார்த்தப்படுமாம். அந்த மாலையைக் களையாமல், மறுநாள் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருவார் பெருமாள்; தரிசிப்பவருக்குச் சிலிர்ப்பான அனுபவம் அது!
இந்நாளில்... ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் ஸ்ரீஆண்டாள் அகமகிழ்ந்து போற்றிய இன்னும் பிற தலங்களுக்கும் சென்று வழிபட்டு வாருங்கள். ஆண்டாளை உளமார வழிபடுங்கள்; அரங்கனின் துணையோடு உங்கள் பிரார்த்தனை பலிக்க, வாழ்வு இனிக்க வரம் தருவாள் கோதை நாச்சியார்.
நன்றி விகடன்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்


அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஆடிப்பூரம்

அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம். இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி  இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன்  மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் கிடைக்கும். இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.

ஆடிப்பூரம் என்னும் விழா ஆடி மாதத்திலே பூர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது கொண்டாடப்படுவது. இது தேவிக்குரிய திருநாளாகும். இந்த நாளில்  தான் உமாதேவியும் தோன்றியதாக கூறப்படுவதுண்டு. உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன.
 அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள். அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள்  அனைவருக்கும் தன் அருளை வழங்கும் நாள். பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டாடும் நாள் திருவாடிப்பூரம்.

சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக் கிழமையின் பெயரைக் கொண்டு  அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளியுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

அம்மன் நித்ய கன்னி என்பதால் அம்மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது என்பது ஐதீகம். அதற்காக ஆடிப்பூரம் அன்றைக்கு அம்மனுக்கு வளையல் அணிவித்து இன்று வளைகாப்பு தினமாக கொண்டாடப் படுகிறது.

கோயிலில் அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் திரமணமாகாத பெண்களுக்கு திருமணம் விரைவில் நடைபெறும். அதேபோல்  திருமணமாகியும் குழந்தைப் பேறு இல்லாத பெண்களுக்கு நல்ல மக்கட்பேறு கிட்டும். ஆடிப்பூரம் அன்று அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு  கண்ணாடி வளையல்கள் வாங்கி அளிப்பது மிகவும் புண்ணியம் என்றும் கூறப்படுகிறது.

ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைக்கலாமா? - ஜோதிடரின் பதில்..!!


ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைக்கலாமா? - ஜோதிடரின் பதில்..!!

ஜோதிடர் பதில்கள் !!
1. ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைத்து கொள்ளலாமா?

🌟 ஆடிப்பூரம் அன்று வளைகாப்பு வைத்து கொள்ளலாம்.

2. ஆடி மாதம் 18ஆம் தேதி புதிய தொழில் தொடங்க பூஜை போடலாமா?

🌟 ஆடி மாதம் 18ஆம் தேதி புதிய தொழில் தொடங்க பூஜை செய்வதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் செய்து கொள்ளவும்.

3. தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு ஆடி மாதம் கோவில்களுக்கு செல்லலாமா?

🌟 தோஷங்கள் மற்றும் பரிகாரங்கள் செய்வதற்கு ஆடி மாதம் கோவில்களுக்கு செல்லலாம்.

4. விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்கலாமா?

🌟 விநாயகர் சதுர்த்தி அன்று தொழில் தொடங்குவதை தவிர்த்து மற்ற சுப தினங்களில் தொடங்கவும்.

5. ஆடி மாதம் பத்திரப்பதிவு செய்யலாமா?

🌟 ஆடி மாதம் பத்திரப்பதிவு செய்வதை தவிர்க்கவும்.

6. ஆடி மாதம் பெண்கள் பருவம் வரலாமா?

🌟 ஆடி மாதம் பெண்கள் பருவம் வரலாம்.

7. விநாயகர் கோவிலில் எனது கையால் அபிஷேகம் செய்யலாமா?

🌟 விநாயகர் கோவிலில் உங்கள் கையால் அபிஷேகம் செய்யலாம்.

8. வாஸ்து செய்த பிறகு ஆடு வெட்டி சாமி கும்பிடலாமா?

🌟 வாஸ்து செய்த பிறகு ஆடு வெட்டி சாமி கும்பிடலாம்.

9. பொருத்தம் அனைத்தும் இருந்தும் திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு கூட்டுத்திசை நடக்கலாமா?

🌟 பொருத்தம் அனைத்தும் இருந்தும் திருமணத்திற்கு பிறகு கணவன்-மனைவிக்கு கூட்டுத்திசை நடப்பது நன்றன்று.

10. ஆடி மாதம் திருமணப்பேச்சு வார்த்தை நடத்தலாமா?

🌟 ஆடி மாதம் திருமணப்பேச்சு வார்த்தை நடத்துவதை தவிர்த்து ஆவணி மாதம் சுப நாட்களில் நடத்தலாம்.


சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி!


சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி!

மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது. இந்த ஆலயத்தில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை அங்காளபரமேஸ்வரி விளங்குகிறாள். மயானத்தில் வீற்றிருந்து பக்தர்களை பிடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றை முறியடித்து அருளாட்சி புரிந்து வரும் அங்காளபரமேஸ்வரியின் வரலாறு சிவனோடு தொடர்புடையது.

ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவர் அங்காளம்மன். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி அன்று சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக ஐதீகம்.

இதற்கு ஒருபுராணக்கதை உண்டு. சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போல், தனக்கும் 5–வது தலை வேண்டும் என்று நினைத்தார் பிரம்மதேவர்.

ஆகவே சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வரம் கேட்டு பெற்றுக்கொண்டார். இதனால் பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்தது. ஒருநாள் பிரம்மா கர்வத்துடன் கயிலாயத்துக்கு சென்றார். பிரம்மதேவனை கண்ட பார்வதி, சிவபெருமான் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி பூஜை பொருட்களை சமர்ப்பித்தார். பின்னர் பிரம்மாவின் முகத்தை பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொண்ட பார்வதி ஆத்திரம் அடைந்தாள். பிரம்மாவை நோக்கி உன் ஒரு தலை அழியக்கடவது என்று சாபம் இட்டார். மேலும் நடந்ததை சிவனிடமும் கூறினார் பார்வதி. பரமசிவன் தன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். ஆனால் வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைத்தது. சிவன் தலையை வெட்டுவதும் அந்த இடத்தில் புதிய தலை முளைப்பதுமாக இருந்தது. இந்த புதிரை சிவபெருமானால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் வெட்டப்பட்டு கீழே கிடந்த பிரம்மாவின் தலைகளை ஒரு கயிற்றில் கோர்த்துக்கட்டி அதை தன் கழுத்தில் மாலையாக சிவன் அணிந்து கொண்டார்.

அதன்பிறகு பிரம்மனின் தலையை வெட்டி அதை கீழே போடாமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். இப்போது பிரம்மனின் தலை வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைப்பது நின்றுவிட்டது. ஆனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது. பிரம்மாவின் ஒரு தலை அழிந்து விட காரணமாக இருந்த பார்வதியிடம் கோபத்தோடு வந்தாள் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. ‘பார்வதி! இனி நீ அழகுமிக்க ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக கொக்கு, சிறகு, மயில் தோகைகளை அணிந்து பூமியில் புற்றாக இருக்க வேண்டும்’ என்று சாபமிட்டாள்.

அதன்படி பார்வதிதேவி உருவம் மாறி,  திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் வந்து புற்றாக அமர்ந்தாள். இந்த சூழ்நிலையில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு வடகயிலாயம் நோக்கி சென்ற சிவன், மேல்மலையனூரில் அங்காளம்மன் 4 ஆயிரம் நோய்கள், பில்லி–சூனியம் ஆகியவற்றை தீர்த்து வைப்பதை அறிந்து மேல்மலையனூர் வந்தார். அங்காளம்மன் கோவில் முன்வந்து ‘அரகரா! அன்னதான பிச்சை’ என்று உரக்க சத்தம் போட்டார். இந்த சத்தம் அங்காளம்மன் காதில் விழுந்தது. உடனே அவர் மனம் மகிழ்ந்தார். யாசகம் கேட்கும் கணவருக்கு எதை வழங்குவது என்று யோசித்தார். அப்போது சிவனுக்கு எதை வழங்குவது என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். ‘அம்பிகையே! உன் கணவருக்கு எது சாப்பிடக் கொடுத்தாலும் அதை அவரது கையில் உள்ள கபாலம் சாப்பிட்டு விடும். ஆதலால் நீ உலகத்தில் உள்ள பயிர் பட்சணங்களை எல்லாம் வரவழைத்து உணவாக சமைக்க வேண்டும்.

பின்பு அதை 3 கவளமாக தயார் செய்ய வேண்டும். இரண்டு கவளத்தை உன் கணவர் கையில் உள்ள கபாலத்தில் போட வேண்டும். 3–வது கவளத்தை கபாலத்தில் போடுவதை போல் நடித்து அதை கைதவறி கீழே போடுவதை போல் தரையெங்கும் சிதறிவிட வேண்டும். சாதத்தின் ருசி அறிந்த கபாலம் அதை பொறுக்க பரமசிவன் கையில் இருந்து கீழே இறங்கும். அப்போது நீ பெரிய உருவெடுத்து அதை காலால் நசுக்கிவிடு. அந்த நேரத்தில் உன் கணவரை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகி விடும்’ என்றார்.

அன்னையும் மிக மகிழ்ந்து திருமால் கூறிய யோசனைப்படி செயல்பட்டார். சாதம் தயாரானது. உடனே அங்காளி, மூத்த பிள்ளை விநாயகரை அழைத்து விஷயத்தை சொல்லி, ‘உன் தந்தையை அக்னி குளத்தில் குளித்து வரச்சொல்’ என்று கூற, சிவனும் அதன்படி அக்னி குளத்தில் தீர்த்தமாடி கோவிலுக்கு வந்தார். அவருக்கு அங்காளம்மன் பாதபூஜை செய்து பணிவுடன் வரவேற்று உபசரித்தார். பிறகு கவள சாதங்களை எடுத்து வந்து ஒரு கவளத்தை சிவன் கையில் இருக்கும் கபாலத்தில் போட்டார்.

உடனே அதை கபாலம் சாப்பிட்டு விட்டது. 2–வது கவளத்தையும் போட அதையும் கபாலம் சாப்பிட்டது. 3–வது கவளத்தையும் உண்டு விட கபாலம் காத்திருக்க சாதத்தை தரை முழுவதும் வாரி இறைந்தாள் அங்காளம்மன். சாதத்தின் ருசிக்கு அடிமைப்பட்ட கபாலம், பரமசிவனின் கையில் இருந்து விருட்டென்று கீழே இறங்கி தரையில் சிதறிய அன்னத்தை பொறுக்கியது. அப்போது அங்காள பரமேஸ்வரி அகிலமே நடுங்கும் அளவு, மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்து நின்று, மிகுந்த சினத்துடன், அகோரவடிவில் கபாலத்தின் மீது ஓங்கி மிதித்தார். கபாலம் பெரும் கூச்சல் போட்டு,

‘நீயார்? என்னை ஏன் மிதித்தாய்?’ என்று ஆக்ரோஷத்துடன் கேட்டது.

அதைக்கேட்ட அன்னை, ‘கபாலமே! நீ இனி சிவனிடம் போக முடியாது. என் கீழ் தான் இருக்க வேண்டும். உனக்கு தேவையானவற்றை என்னிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்’ என்றாள். அதற்கு கபாலமும் உடன்பட்டது. இந்த நேரத்தில் பரமசிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சுயநிலை வரப்பெற்ற பரமசிவன் ஆனந்த நிலை அடையப்பெற்றார்.

சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார். அப்போதும் அங்காள பரமேஸ்வரியின் சினம் தணியவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்களும், 40 ஆயிரம் ரிஷிகளும் ஒன்று கூடி அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை தணிக்க தேர்த்திருவிழா நடத்தினர். அங்காளபரமேஸ்வரி கோபம் தணிந்து சிறிய உருவாக மாறி அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தார். உருமி மேளம் முழங்க மங்கள நாதம் இசைக்க வாணவேடிக்கை ஜாலம் காட்ட பிரமாண்டமான முறையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது மகா சிவராத்திரியன்று தான் என்பதால் இக்கோவிலில் மகாசிவராத்திரியை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது மயானக்கொள்ளை, தேரோட்டம் நடைபெறும். புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறு, ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து அக்கினி தீர்த்தத்தில் நீராடி அம்மனை வணங்கி நோய் நீங்கி அவர்கள் நலம் பெறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் மேல்மலையனூர் அமைந்துள்ளது. செஞ்சியில் இருந்து வடதிசையில் 20 கி.மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 30 கி.மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் உள்ளது.

வெள்ளி, 19 ஜூலை, 2019

தென்காசி கோவில் தெரியாத தகவல்கள்


தென்காசி கோவில் தெரியாத தகவல்கள்  :

  மூலவர் : விஸ்வநாதர்
  உற்சவர் : -
  அம்மன்/தாயார் :  உலகம்மன்
  தல விருட்சம் :  செண்பகமரம்
  தீர்த்தம் : காசி தீர்த்தம்
  ஆகமம்/பூஜை : -
  பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
  புராண பெயர் : -
  ஊர் : தென்காசி
  மாவட்டம் : தென்காசி
  மாநிலம் :  தமிழ்நாடு

         
  திருவிழா:
   
   மாசிமகப் பெருந்திருவிழா 10 நாள் சிறப்பாக கொண்டாடப்படும். புரட்டாசி நவராத்திரி கொலு திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாணமும்,ஆவணி மூல தெப்பத்திருவிழாவும், தை அமாவாசை பத்திர தீப திருவிழாவும் முக்கியமானதாகும். 
   
  தல சிறப்பு:
   
  இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற தலங்களில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் துர்க்கை இத்தலத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். 
   
 திறக்கும் நேரம்:
   
  காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
 முகவரி:
   
  அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி - 627 811,  தென்காசி மாவட்டம். 
   
 போன்:
   
  +91-4633-222 373 
   
  பொது தகவல்:
   
   நாரதர், அகத்தியர், இந்திரன், மிருகண்டு முனிவர், வாலி, நந்தி ஆகியோர் இங்குள்ள காசி விஸ்வநாதரை வழிபட்டுள்ளார்கள்.

     
 பிரார்த்தனை
   
  இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தல இறைவனை வழிபட்டால் மன நிம்மதி உண்டாகும்.

 நேர்த்திக்கடன்:
   
  சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். 
   
  தலபெருமை:
   
  1967 வரை இங்குள்ள கோபுரம் மொட்டைக்கோபுரமாக இருந்தது. அதன் பின் 1990ல் 180 அடி உயரத்தில் மிகப் பெரிய ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் தற்போது இக்கோயில் திகழ்கிறது. இந்த கோபுரத்தின் ஒன்பது நிலைகளிலிருந்தும் தென்காசியின் இயற்கை அழகை பார்க்க அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்பாதையில் நடந்து சென்றால் வான் வெளியில் வலம் வருவது போல் இருக்கும். கோபுரத்தின் 9வது நிலையில் இருந்தபடியே கோபுரத்தை சுற்றி வரும் பால்கனி வசதி உள்ளது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் : கோயில் மூலவராக காசிவிஸ்வநாதரும், உலகம்மனும் அருள்பாலிக்கிறார்கள். தலவிருட்சமாக செண்பகமரமும், தீர்த்தமாக காசி தீர்த்தமும் அமைந்துள்ளது.

கலை சிற்பங்கள் : இக்கோயிலில் உள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இங்குள்ள இரட்டைச்சிற்பங்களான வீரபத்திரர்கள் - தாண்டவ மூர்த்திகள். இரண்டு தமிழணங்குகளும், இணைச் சிற்பங்களான ரதி - மன்மதன் சிற்பங்களும், தனியழகு சிற்பங்களான திருமால் -காளிதேவி ஆகியவையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

 தல வரலாறு:
   
  சுமார் எழுநூறு வருடங்களுக்கு முன்பு பராக்கிரம பாண்டியன் சிவ பெருமானை வழிபட காசிக்கு செல்வதையே வழக்கமாக கொண்டிருந்தான். ஒருநாள் மன்னன் கனவில் தோன்றிய இறைவன், வடக்கே உள்ள காசிக்கு வருதற்கு பதிலாக இவ்விடத்திலேயே தட்சிண(தென்) காசியில் கோயில் அமைத்து வழிபடும்படி கூறினார். அதாவது எறும்பு ஊர்ந்து செல்லும் வழியாக சென்று அது எங்கு முடிகிறதோ அங்கு கோயில் கட்டும் படி இறைவன் கூறுகிறார். அதன்படி மன்னனும் எறும்பு சென்ற வழியே சென்ற போது, அது சிற்றாற்றங்கரையில் செண்பக வனத்திற்கு வந்து சேர்ந்தது. அந்த இடத்தில் புற்றில் சுயம்புலிங்கம் கண்டு கோயில் கட்டி வழிபட்டான்.
   
 சிறப்பம்சம்:
   
  அதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

வியாழன், 18 ஜூலை, 2019

தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோம்....


தேங்காய் உடைக்கும் போது ஏற்படும் சகுனங்களை, தெரிந்து கொள்வோம்....

தேங்காய் சகுணம்:

1) தேங்காய் முடிபாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால், செல்வம் சேரும்.
2) சரிசமமாக உடைந்தால், துன்பம் தீரும், செல்வம் பெருகும்.
3) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால், ரத்தினம் சேரும்.
4) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால், அழியாத செல்வம் உண்டாகும்.
5) சிறு சிறு துண்டுகளாக உடைந்தால் செல்வம், செல்வாக்கு, ஆபரண லாபம் உண்டாகும்.
6) ஓடு தனியாக கழன்றால், துன்பம் வரும்.
7) நீளவாக்கில் உடைந்தால், தனம் அழிந்து துன்பம் உண்டாகும்.
8) உடைக்கும் பொழுது கைபிடியில் இருந்து தவறி கீழே விழுந்தால் குடும்பத்தில் துன்பம் மற்றும் பொருள் இழப்பு ஏற்படும்.
9) முடி பாகம் இருகூறானால் தீயினால் பொருள் சேதமாகும்.
10) ஆலயத்தில் தெய்வத்திடம் வேண்டி கொண்டிருக்கும்பொழுது தேங்காய் உடைக்கும் சத்தம் கேட்டால், வேண்டும் காரியம் உடனே வெற்றியைத் தரும்.

சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை !!!


சேலத்தில் தேங்காய் சுடும் பண்டிகை !!!

தட்சிணாயனப் புண்ணிய காலம் ஆரம்பம்.

சேலம், ஈரோடு, தர்மபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி, தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

இப்பண்டிகை வட்டார வழக்காக உள்ளது. வேறு மாவட்டங்களில் இவ்வழக்கம் இல்லை. அப்படியிருப்பின் இம்மாவட்ட மக்கள் அங்கு வசித்து வருகின்றனர் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் முதல்  தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று ‘‘ஆடி-  18 அன்று முடிவுக்கு வந்தது. இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி முதல் நாள்  மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள். இந்த பூஜையின்போது படைக்கும் வகையில் இதுபோல் தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது.

ஆண்டாண்டு காலமாக அந்த ஐதீகத்தைக் கடைபிடிக்கும் வகையில் இந்த மாவட்டங்களில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடப்பட உள்ளது .

புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நாரினை  அகற்றிவிட்டு ஓடு மெலிதாகும் அளவுக்கு அதை தரையில் தேய்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும், அதன் ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும்.

பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் [ தேங்காய் நீருடன் கலந்து ]ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட அழிஞ்சில் மர குச்சியில் அந்த தேங்காயை சொருகுவார்கள். பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை மூடுவர். அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி,அந்த நெருப்பில் குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை காட்டி சுடுவர்.


ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வது வழக்கம். சிலர் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள்.

இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும். ருசி பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள்.

இந்த ஆடி மாத முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையின் போது வீட்டில் கருவுற்ற பெண்டிர் யாரேனும் இருந்தால் ,தேங்காய் சுடும் நிகழ்வை அந்த வீட்டில் உள்ளோர் செய்ய மாட்டார்கள்.

புதன், 17 ஜூலை, 2019

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள்.


ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை. ‘ஆடி செவ்வாய் தேடிக் குளி’ என்பது பழமொழி.

அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தில் ஆடி மாதத்தை ‘கர்கடக மாதம்’ என்பார்கள். சூரியன் குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம். தமிழ் மாத பிறப்புகளுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் இருக்கிறது. அந்தந்த கால, பருவ சூழ்நிலைக்கு ஏற்ப திருவிழாக்களையும், உற்சவங்களையும், விரத வழிபாடுகளையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். தமிழ் மாதத்தில் நான்காவது மாதமான ஆடி, தட்சிணாயன புண்ய காலமாகும். இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது! ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன.

இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

adiamavasai
ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது. தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை அதுக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர்.  நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் வந்தது.  ‘ஆடிப்பெருக்கு’ அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

adiperuku

நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.


திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் சிவபெருமானையும், திருமாலையும் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வந்தனர். ஒருநாள் இருவருக்கும் சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. அனைத்தையும் அறிந்த ஆதிசக்தியிடம் விடைபெறுவதற்காக கைலாசம் சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் என்றும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.

adikiruthikai

குரு பூர்ணிமா  ஆடி மாதப் பௌர்ணமி அன்று மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணன், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. புத்தர்கள் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த ‘வாரணமாயிரம்’ என்று  தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண உறவு கூடிவரும். பார்வதி தேவி ருதுவான நாளும் ஆடிப் பூரமே. அதனால் சிவன் கோவில்களிலும் ஆடிப் பூரம் அன்று அம்பாளுக்கு சிறப்பான வழிபாடுகள் உண்டு.

வரலட்சுமி நோன்பும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று வரும். இதுவும் பெண்கள் மிகவும் போற்றி வழிபடும் ஒரு பண்டிகை. வீட்டில் சௌகர்யங்கள் பெருகவும், இல்லத்தரசிக்கு மாங்கல்ய பலம் கூடவும் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு இது. வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரித்தாள் அவள் அருள் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாகதேவதைக்குப் பால் தெளித்து விசேஷ பூஜையும் செய்வார்கள்.

இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

ஆடிமாத கொண்டாட்டம்


ஆடிமாத கொண்டாட்டம்

ஆடி மாதம்
ஆடி என்பது சிறப்பு மிக்க ஆன்மிக மாதம் ஆகும். இது தமிழ் மாதத்தின் நான்காவது மாதமாகும். வாத பாராயணங்கள், ஆலய சிறப்பு வழிபாடுகள், மந்திரங்கள், பூஜைகள் ஆகியவற்றிற்கு கூடுதல் சக்தி அளிக்கும் மாதமாக கருதப்படுகிறது.

தமிழ் மாதத்தை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகளாக பிரிக்கலாம். ஆடி முதல் மார்கழி வரை புண்ணிய காலமான தஷ்ணாயண காலமாகும். இது ஆன்மிக மனம் கமழும் ஆடி மாதமாகவே திகழ்கிறது.

ஆடி விவசாயிகளின் நம்பிக்கைக்கு உயிர்கொடுக்கும் மாதம். இம்மாதத்தில் சூரிய வெப்பத்தின் தாக்கம் குறைந்து காற்றின் வேகம் அதிகரிக்கும். இது  தமிழகத்தில் ஒரு சிறப்பான பருவமழைக்காலத்திற்கு தொடக்கமாக இருக்கும். மேலும் இக்காலத்தில் வெளிப்படும் சூரியனின் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும். இம்மாதத்தின் சிறப்பை ஒரிரு வரிகளில் கூறவேண்டுமென்றால் “ஆடிப்பட்டம் தேடி விதை”, “ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்” போன்ற பழமொழிகள் இம்மாதத்தின் சிறப்பையும் தன்மையையும் உணர்த்திவிடும். எனவே ஆடிமாதம் விவசாயிகளின் பொற்காலம் ஆகும்.

ஆடிமாதத்தில் ஆடிவெள்ளி, வரலட்சுமி விரதம், ஆடி அமாவாசை, ஆடி கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி பவுர்ணமி, ஆடிப்பூரம், ஆடித்தபசு, நாகசதுர்த்தி, கருட பஞ்சமி, செவ்வாய் விரதம், ஆடி ஞாயிற்றுகிழமை  என தொடர்ச்சியாக சுப தினங்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஆடி பிறப்பு
ஆடி பிறப்பு என்பது பக்தி திருவிழாக்களின் துவக்கமாக உள்ளது. சூரியன் தென்புறம் நோக்கி பயணத்தை துவங்கும் காலம் இது. முற்காலத்தில் ஆடிபிரப்பை நமது முன்னோர்கள் சிறப்பாக கொண்டாடியதற்கான வரலாற்று பதிவுகள் உள்ளது. ஆனால் இது தற்காலத்தில் மிகவும் குறைந்தது விட்டது. இம்மாதத்தின் முதல் நாளில் புதுமண தம்பதிகளை பெண்வீட்டார் அழைத்து கௌரவிப்பர். பின் புதுப்பெண் இம்மாதம் முழுவதும் தனது தாய் வீட்டிலேயே தங்கி விடுவார்.

நாள் : ஜூலை - 17

ஆடிப்பெருக்கு (ஆடி 18)

ஆடிப்பெருக்கானது ஆடி மாதத்தின் பதினெட்டாம் நாளில் கொண்டாடப்படுகிறது. இது பதினெட்டாம் பெருக்கு எனவும் அழைக்கப்படுகிறது, ஆடிப்பெருக்கு விழாவானது நமது நீராதாரங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இவ்விழா தமிழர்களால் குறிப்பாக டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகளால் தங்களது ஜீவாதாரமாக விளங்கும் காவிரித்தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் தமிழக மக்கள் தங்கள் குடும்பங்களுடன் சென்று காவிரி நதிக்கு பூஜை செய்து, புனித நீராடி ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடத்துவர். இந்நாளில் திருமணம் ஆகாதவர்கள், தங்களுக்கு திருமணம் ஆகவும், திருமணமான பெண்கள் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்பம் செழிக்கவும் வழிபாடு நடத்துவர். பெண்கள் புதிய மஞ்சள் பூசிய கயிற்றை கட்டிக்கொள்வர்.

காவிரி ஆற்றின் படிக்கட்டுகளில் பச்சை வாழை இல்லை இட்டு அதில் காப்பரிசி, கருகமணி, வாழைப்பழம், புதிய மஞ்சள் கயிறு, காதோலை ஆகியவற்றை வைத்து தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்படும்.

இதே போல புதுமணத்தம்பதிகள் தங்கள் திருமணத்தின் போது பயன்படுத்திய மாலைகளை வாழை இலையில் வைத்து ஆற்றில் விடுவர். இவ்விழா டெல்டா மாவட்டங்களை தவிர கொங்கு மாவட்டங்களான திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

நாள்: 03- ஆகஸ்ட்

அம்மன் வழிபாடு
ஆடி மாதத்தை சக்தி மாதம் மற்றும் அம்மன் மாதம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஆடி மாதமானது அம்மனுக்கு உகந்த மாதமாக கருதபடுகிறது. எனவே இம்மாதத்தின் அனைத்து வெள்ளி கிழமைகளிலும், அம்மன் ஆலயங்களிலும், சிவன் பார்வதி வீற்றிருக்கும் ஆலயங்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது அம்மன், வேப்பிலை, மஞ்சள், சாகை வார்த்தல் மற்றும் கூழ் ஊற்றுதல். பெரும்பான்மையான வீடுகளை வேப்பிலைகளை தோரணம் கட்டி தொங்க விடப்பட்டிருக்கும்.

இதன் அறிவியல் அடிப்படை என்பது கோடை காலம் முடிந்து பருவ நிலையில் ஏற்படும் மாற்றம் பல விதமான நோய்களையும் கொண்டுவரும். வேப்பிலை மற்றும் மஞ்சள் நோய் கிருமி தடுப்பனாக செயல்படுகிறது மேலும் கூழ் வகை உணவுகள் உடலுக்கு வலிமையையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கிறது.

அம்மன் கோவில் திருவிழாக்கள்
பெரும்பான்மையான அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். இவிழாக்களில் பால்குடம் எடுத்தல், தீ மிதித்தல், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு வழிபாடு என பலவகையான முறைகளில் அம்மனுக்கு வழிபாடு நடைபெறும்.

ஆடி வெள்ளி
பொதுவாக வெள்ளிக்கிழமை என்பதே சிறப்பான நாளாகத்தான் கருதப்படுகிறது. அதிலும் அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளி என்பது கூடுதல் சிறப்பு. இம்மாதத்தின் ஆனைத்து வெள்ளி கிழமைகளிலும் பெண்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வார்கள். ஆடி மாத இறுதி வெள்ளியன்று மாகலட்சுமி தேவிக்கு வழிபாடு செய்யும் விதமாக வரலட்சுமி விரதம் அனுசரிப்பார்கள்.

நாட்கள் : ஜூலை- 21,  ஜூலை- 28, ஆகஸ்ட்- 4,  ஆகஸ்ட்- 11.

ஆடி செவ்வாய் விரதம்
“ஆடி செவ்வாய் தேடி குளி அரைத்த மஞ்சள் பூசிக் குளி” என்ற பாடலுகிணங்க ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து மஞ்சள் பூசிக் குளித்து அம்மனுக்கு விரதம் மேற்கொள்வர். இது அவர்களின் மாங்கல்ய பலத்தை கூட்டும் என்பது நம்பிக்கை. ஆடி மத சேவையில் ஒளவையார்ஒவையார் அம்மனுக்கு விரதம் இருப்பார்கள். இதில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்வர். ஆண் குழந்தைகள் கூட அனுமதிக்கப் பட மாட்டார்கள்.

நாட்கள்: 18- ஜூலை, 25- ஜூலை, 1- ஆகஸ்ட், 8- ஆகஸ்ட், 15-ஆகஸ்ட்

ஆடி அமாவாசை

ஆடி அமாவாசை தினம் மிக சிறப்பான தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினத்தில் புனித நீர் நிலைகளில் நீராடி, முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு திதி செய்வார்கள். இதன் மூலம் முன்னோர்களின் ஆன்மா மகிழ்ந்து ஆசி அளிப்பார்கள் என்பது நம்பிக்கை.

நாள்: 23- ஜூலை

ஆடி கிருத்திகை

ஆடி கிருத்திகை நாள் முருக பெருமானை வழிபடுவதற்கு உகந்த நாளாகும். ஆறுமுகனாக அவதாரம் எடுத்த முருகனை வளர்த்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. முருகனின் அறுபடை வீடுகளான திருவாவினங்குடி(பழநி), திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமிமலை, திருச்செந்தூர்  மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கிணங்க பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, மச்சக்காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி என பல விதமான காவடிகளை எடுத்தும், பல சிறப்பு பூஜைகளை செய்தும் முருகப்பெருமானை வழிபடுவர்.

நாள் : 15- ஆகஸ்ட்

ஆடி பூரம்

ஆடி மாதத்தில் ஆண்டாள் அவதரித்த பூரம் நட்சத்திர நாளை ஆடிப்பூரமாக கொண்டாடுகிறோம்.  அதே போல் கருவுற்றிருந்த பார்வதி தேவிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட இந்நாளில் தான். பெரும்பாலான அம்மன் கோவில்களில் ஆடிப்பூர திருவிழாவானது பத்து நாட்கள் கொண்டாடப்படும். இத்திருநாளில் அம்மனுக்கு சந்தனக்காப்பு, மஞ்சள் காப்பு, குங்குமக்காப்பு வழிபாடுகளை நடத்துவர். மேலும் வளை காப்பும் நடத்தப்பட்டு அந்த வளையல்கள் பெண் பக்தர்களுக்கு அளிக்கப்படும். பூஜித்த வளையல்களை அணிந்து கொண்டால் வாழ்வில் நன்மைகள் பெருகும் என்ற நம்பப்படுகிறது.

நாள்: 26 - ஜூலை

வரலட்சுமி விரதம்

சுமங்கலிகளுக்கு இது மிகவும் முக்கியமான நாளாகம். இந்நாளில் தாலி பாக்கியம் நிலைக்கவும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் வேண்டியும், செல்வம் செழிக்க வேண்டியும் பெண்கள் விரதம் மேற்கொள்வர். ஒரு கலசத்தினுள் பச்சரிசி, எலுமிச்சை, வெற்றிலை, பாக்கு, ஒரு வெள்ளிக்காசு அல்லது பொற்காசினை இட்டு, மாவிலையை கலசத்தின் மீது வைத்து அதன் மீது தேங்காயை வைத்து, கலசத்தை அம்மனின் முன்பு வைத்து விளக்கேற்றி பொங்கல், பருப்புவடை, பாயசம், கொழுக்கட்டை கொண்டு நிவேதனம் செய்து வழிபடுவார்கள்.

நாள் : 4 – ஆகஸ்ட்

ஆடித்தள்ளுபடி

விழாக்களை தாண்டி இம்மாதம் தன்னகத்தே ஒரு வணிகத்தையும் கொண்டுள்ளது. சிறு, குறு, மற்றும் பெரு வணிகர்கள் இந்த ஆடி மாதத்தில் துவங்கி தனது வணிகத்தை பெருக்கி கொள்வர். தள்ளுபடி விலையில் தேக்கம் அடைந்துள்ள கையிருப்பு பொருட்களை பெருமளவு விற்பனை செய்துவிடுவார்கள்.

ஆடி மாதமானது ஆன்மிக மாதமாக பக்தி மனம் வீசி மக்களுக்கு நன்மையையும், மன நிம்மதியையும், தெளிந்த அறிவையும், மக்களுக்குள் ஒற்றுமையையும் கொடுக்கும் விதமாக விழாக்களுக்கு அச்சாரம் போடும் மாதமாக இருக்கிறது. அனைத்து விழாக்களும் ஆன்மீகப்பார்வை தாண்டி அதில் அறிவியல் அடிப்படையும், சமூகபார்வையையும் கொண்டுள்ளது. அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் பெற்று செல்வா செழிப்போடு சிறப்பான வாழ்க்கை அமைய இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

செவ்வாய், 16 ஜூலை, 2019

ஆடி மாத சிறப்பையும் 25 ஆலய விழாக்களை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. ஆடி மாத சிறப்பையும் 25 ஆலய விழாக்களை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

1. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

2. சென்னை புறநகரில் உள்ள அம்மன் கோவில்களில் பெரிய பாளையம்மன் கோவிலில் தான் ஆடி திருவிழா மிக, மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.


3. கள்ளழகர் கோவிலில் விமரிசையாக ஆடித் தேரோட்டம் நடைபெறும்.

4. சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆடி மாதத்தை முன்னிட்டு 5 நாள் நடை திறந்து பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

5. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஸ்ரீவனதுர்க்கை அம்மன் கோவில் உள்ளது. ஆடி மாதம் இந்த கோவிலில் பிரமாண்ட தீ மிதி திருவிழா நடைபெறும்.

6. ஆடிப் பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

7. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி முளைக்கொட்டு விழா நடை பெறும் பத்து நாட்களில், ஆடி வீதி நான்கிலும் அம்மன் வலம் வருவார்.

8. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் ஆண்டாளுக்கு ஆடிப்பூர உற்சவம் மூன்று நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

9. கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவில் ஆடிப் பதினெட்டில் மும்மூர்த்திகளும் காவிரிக்கு எழுந்தருள்வார்கள். அன்று இரவு பச்சை மண்ணில் பானை செய்து, மா விளக்கு, காதோலை, கருகமணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு முதலியவற்றை அதில் வைத்து விட்டு வருவர்.

10. தமிழ்நாட்டில் பண்டை காலத்தில் காவிரி, கொள்ளிடம், தாமிரபரணி ஆகிய 3 நதிகளிலும் ஆடிப்பெருக்கு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த 3 ஆறுகளில் தண்ணீர் பெருகுவதை ‘‘முவ்வாறு பதினெட்டு’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

11. ஆடி மாதம்தான் கிராம தெய்வங்களான மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்றவைகளுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படும்.

12. ஆடி மாதம் குற்றால ஈசனை வணங்கி அருவியில் குளித்தால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

13. திருச்சி அருகே உள்ள திருநெடுங்கா நாதர் கோவி லில் ஆடி மாதம் முழுவதும் சூரிய ஒளி மூலவர் மீது படுவது சிறப்பாக கருதப்படுகிறது.

14. சேலத்தில் ஆடிமாதம் நடக்கும் செருப்படிதிருவிழா தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாத விழாவாகும். வேண்டுதல் செய்த பக்தர்கள் ஒரு ஜோடி செருப்பு, துடைப்பம், முறம் கொண்டு வருவார்கள். பூசாரி பக்தர் மீது 3 தடவை மெல்ல நீவி விடுவார்கள். இதுதான் செருப்படித் திருவிழா.

15. சென்னை திருநின்றவூரில் உள்ள நாகேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி முதல் நாள் சக்தி மாலை அணிந்து மஞ்சள் ஆடை தரித்து பய பக்தியுடன் ஒரு மண்டலம் விரதமிருந்து வேண்டுதல் நிறைவேற்றுவார்கள்.

16. கோவை ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் மூன்று தேவிகளுக்கும் முதல் மூன்று வாரங்கள் பூக்களால் தினமும் அலங்காரம் செய்வார்கள். நான்காவது வாரம் காய்கறிகளால் அலங்காரம் செய்வார்கள். ஐந்தாவது வாரம் பல வகை பழங்களால் அலங்காரம் செய்வார்கள். கடைசி வெள்ளியன்று வரலட்சுமி நோன்பு விழா நடைபெறும்.

17. ஆடி மாதத்தில் திருநெல்வேலி திரிபுர பைரவியையும் மகாமாரியம்மனையும் வணங்குவது சிறப்பாகும்.

18. செஞ்சிக் கோட்டை அருகே உள்ள கமலக் கண்ணி யம்மன் ஆலயத்தில் ஆடிமாதம் பெரிய அளவில் விழா நடைபெறும்.

19. தகடூரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கை அம்மனின் முழு உருவத்தை ஆடி மாதம் மூன்றாம் செவ்வாயில் மட்டுமே மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.

20. தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடிவெள்ளியில் நவசக்தி அர்ச்சனை செய்வார்கள். ஒன்பது சிவாச்சாரியார்கள் ஒன்பது வகை மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில் அர்ச்சிப்பதே நவசக்தி அர்ச்சனை எனப்படும்.

21. புதுச்சேரி அருகே வங்க கடலோரம் அமைந்துள்ள வீராம்பட்டினத்தில் உள்ள செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் முதல் வெள்ளியில் இருந்து கடைசி வெள்ளிவரை எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் விசேஷ பூஜைகளும் விதவிதமான பல்லக்கில் வீதியுலாவும் நடைபெறும். தேரோட்டத்தை அரசாங்க விழாவாகக் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை விடுவார்கள்.

22. சக்தி பீடங்களில் ஒன்றான திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலய அம்மன் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி வெள்ளியில் ஸ்ரீ வித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இவ்வம்மன் காதுகளில் உள்ள தாடகங்களில் ஸ்ரீசக்கரம் உள்ளது. ஆடி வெள்ளியன்று இவ்வம்மன் மாணவியாக இருக்க, ஈசன் குருவாக இருந்து உபதேசம் செய்தார்.

23. திருவானைக்காவலில் ஆடி வெள்ளியன்று அம்பாள் காலையில் லட்சுமிதேவியாகவும் உச்சிக்கால வேளையில் பார்வதியாகவும் மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தருவாள்.

24. ஆடிப் பவுர்ணமி அன்றுதான் திருச்சி உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் ஆலய பஞ்சவர்ண லிங்கம் உதங்க முனிவருக்கு ஜவண்ணங்களைக் காட்டியருளியது. அதனால் இவருக்கு ஐவண்ணநாதர் எனப் பெயர். காலை முதல் மாலை வரை இந்த லிங்கம் ஐந்து வண்ணங்களில் காட்சியளிக்கும்.

25. திருவல்லிக்கேணி எல்லை அம்மன் திருக்கோவிலில், ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளையல் அடுக்கி ‘‘சுவாசினி பூஜை’’ நடைபெறுகிறது. இப்பூஜை, சுமார் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
நன்றி மாலைமலர்