ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 16
ஆபத்துக்களைப் போக்கி ஆனந்தம் தரும்
அபூர்வ ப்ரஹலாத ஸ்தோத்ரம் :
( நம்பிக்கையோடு இந்த அரிய துதியை சொல்பவர்கள் ஆபத்துக்கள் நீங்கப்பெற்று ஆனந்த வாழ்வு வாழ்வார்கள்
அற்புதமான இந்த அரிய தோத்திரத்தை தினமும் சொல்வதால் ஆபத்துக்கள் வந்து அச்சுறுத்தாமல் இருக்கும்
கலியுகத்தில் கடவுள் ப்ரகலாதனுக்கு காட்சி தந்தது போல நமக்கும் காட்சி தருவாரா என்றால்
ப்ரகலாதனுக்கு பகவானிடம் இருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை நமக்கும் இருந்தால் சத்தியமாக ஏதோ ஒரு வடிவில் பகவான் நமக்கும் காட்சி தந்து நம்மை இரட்சிப்பார்
ஆபத்துக்களைப் போக்கி ஆனந்தவாழ்வருளும் அபூர்வ ப்ரகலாதனால் சொல்லப்பட்ட ஸ்தோத்ரம் இதோ எளிய தமிழ் விளக்கத்துடன் )
1) நமஸ்தே புண்டரீகாக்ஷ நமஸ்தே புருஷோத்தமே/
நமஸ்தே ஸர்வலோகாத்மன் நமஸ்தே திக்மசக்ரிணே//
( செந்தாமரைக் கண்களை உடையவனே நமஸ்காரம்
புருஷோத்தமனே நமஸ்காரம் சர்வலோகம் ஆனவனே நமஸ்காரம் பகைவர்களுக்கு பயங்கரமான சக்ராயுதத்தை ஏந்தியவனே நமஸ்காரம் )
2) நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மணே ஹிதாய/
ஜகத்ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம://
( ப்ரம்மஞானம் பெற்றவர்களின் தேவனே வணக்கம்
பசு ப்ராமணன் போன்றவர்களுக்கு நன்மை பயப்பவனே நலம் தரும் நாயகனே கோவிந்தனே
மீண்டும் மீண்டும் நமஸ்காரம் )
தேவர்கள் பசுக்கள் அந்தணர்கள் ஆகியோர்கள் பிறருக்காகவே வாழவேண்டும் அப்படி அவர்கள் வாழ பகவான் அருள்புரிகிறான் என்கிறது புராணம் இந்த ஸ்லோகம் மிகவும் பிரபலமானது
3) ப்ரஹ்மத்வே ஸ்ருஜதே விஸ்வம் ஸ்திதௌ பாலயதே புன:/
ருத்ரரூபாய கல்பாந்தே நமஸ்துப்யம் த்ரிமூர்த்தயே//
( உலகங்களை பிரம்மாவின் உருவில் இருந்து கொண்டு சிருஷ்டி செய்கிறீர் விஷ்ணுவின் உருவில் இருந்து அவற்றை ரட்சிக்கினீர் கடைசியில் ருத்ரன் உருவில் இருந்து சம்ஹாரம் செய்கிறீர் இவ்விதம் மும்மூர்த்திகளாக விளங்கும் தங்களுக்கு நமஸ்காரம் )
4) தேவா யக்ஷா ஸுரா: ஸித்தா: நாகா கந்தர்வ கின்னரா: கிம்புருஷ://
பிஸாசா: ராக்ஷசாஸ்சைவ மனுஷ்யா: பஸவ: ததா//
( யட்சர்கள் அசுரர்கள் சித்தர்கள் நாகர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருஷர்கள் பிசாசர்கள் ராட்சசர்கள் மனிதர்கள் மற்றும் )
5) பக்ஷிண: ஸ்தாவரைஸ்சைவ பிபீலிக ஸரீஸ்ருபா:/
பூம்யாம்போ (அ) க்னிர்ந போ வாயு: ஸப்த: ஸ்பர்ஸ ததா ரஸ://
( பட்சிகள் தாவரங்கள் எறும்புகள் புழுக்கள் பூமி நீர் நெருப்பு ஆகாயம் வாயு சப்தம் ரஸம் )
6) ரூபம் கத்தோ மனோபுத்தி: ஆத்மா காலா ததா குணா:/
ஏதேஷாம் பரமார்த்தஸ்ச ஸர்வ மேதத் த்வம்ச்யுத//
( உருவம் மணம் மனம் புத்தி ஆத்மா காலம் குணங்கள் இவை யாவற்றிலும் அச்சுதன் ஆன தாங்களே பரமார்த்த சொரூபமாக உள்ளீர்கள் )
7) வித்யா வித்யே பவான் ஸத்யம் அஸத்யம் த்வம் விஷாம்ருதே/
ப்ரவ்ருத்தம் நிவ்ருத்தம் ச கர்ம வேதோதிதம் பவான்//
( வித்யை அவித்யை சத்தியம் பொய்மை விஷம் அமிர்தம் வேதங்களில் கூறப்பட்ட ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி கர்மாக்கள் இவை யாவும் விஷ்ணுவாகிய தாங்களே )
8) ஸமஸ்த கர்ம போக்தா ச கர்மோ பகரணானிச/
த்வமேவ விஷ்ணோ ஸர்வானி ஸர்வ கர்மபலம் ச யத்//
( எல்லா கர்மாக்களும் தாங்களே கர்மாக்கள் செய்வதற்கு உபகரணங்களும் தாங்களே கர்மாக்கள் செய்ய காரணமான பலன்களும் தாங்களே )
9) மய்யன் யத்ர ததாந்யேஷூ பூதேஷூ புவனேஷூச/
தவைவ வ்யாப்திரைஸ்வர்ய குணஸம் ஸுசீகீ ப்ரபோ//
( என்னிடத்திலும் மற்றவர்களிடத்திலும் எல்லா உயிர்களிடத்திலும் எல்லா புவனங்களிடத்திலும் உமது ஈஸ்வரத்தன்மையும் வெளிப்பாடுகளுமான குணங்களுமே விரவியுள்ளன )
10) த்வாம் யோகீநஸ் ஸித்தயந்தி த்வாம் யஜந்தி ச யாஜலா/
ஹவ்ய கவ்யபுக் ஏகஸ்த்வம் பித்ரு தேவ ஸ்வரூப த்ருக்//
( யோகினிகள் உங்களை வேள்வியின் நாயகனாக நினைக்கிறார்கள் பித்ருகணங்களும் தேவகணங்களும் ரூபியாக நினைக்கிறார்கள் தாங்களே பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் சமர்ப்பிக்கும் கவ்யத்தையும் ஹவ்யத்தையும் உண்கிறீர்கள் )
11) ரூபம் மஹத்தே ஸ்திதமத்ர விஸ்வம் ததர்ஸ ஸூக்ஷ்மம் ஜகதேததீஸ/
ரூபாணி ஸர்வாணி ச பூதபேதா: தேஷ்வந்தராத்மாக்ய மத்வ ஸூக்ஷ்மம்//
( இந்த பிரம்மாண்டம் உமது ஸ்தூல சரீரம் அதற்குள் சூட்சுமமாக இருப்பது இந்த உலகம் அதற்குள்ளும் சூட்சுமமாக இருப்பது சகல உயிர்களும் அந்த உயிர்களுக்குள்ளும் மிக சூட்சுமமாக இருப்பது அந்தராத்மா )
12) தஸ்மாஸ்ச ஸூக்ஷ்மாதி விசேஷணாநாம் அகோசரே யத் பரமாத்மரூபம்/
கிமப்ய ஸிந்த்யம் தவ ரூபமஸ்தி தஸ்மை நமஸ்தே புருஷோத்தமாய//
( அதற்கு மேலும் சூட்சுமமாக இருந்து விசேஷணங்களால் பாதிக்க முடியாத சிந்தனைக்கும் அப்பாற்பட்ட. பரமாணு ( பரமாத்ம ) சொரூபமும் தாங்களே அப்பேற்பட்ட புருஷோத்தமனுக்கு நமஸ்காரம் )
13) ஸர்வ பூதேஷூ ஸர்வாத்மன் யா ஸக்தி பராதவர்/
குணாஸ்ரயா நமஸ்தஸ்யை ஸாஸ்வதாயை ஸுரேஸ்வர//
( சர்வாத்ம சொரூபியே எல்லா உயிர்களையும் குணங்களையும் ஆச்ரயிக்கும் உமது பராசக்திக்கு நமஸ்காரம் மனம் வாக்கு காயம் ( உடம்பு ) என்று எல்லாவற்றிற்கும் அப்பாலுக்கு அப்பாலாய் அதேசமயம் அவைகளின் உள்ளுக்குள்ளும் ஆவிர்பவித்து ஞானிகளுக்கு மாத்திரமே புலப்படக்கூடிய உமது பராசக்திக்கு நமஸ்காரம் )
14) யா (அ) தீத கோசரா வாசாம் மநஸாம் சாவிசேஷணா/
ஜ்ஞானி ஜ்ஞான பரிச்சேத்யா தாம் வந்தே ஸர்வேஸ்வரீம் பராம்//
( வாக்கு மனம் என்ற இரண்டுக்கும் எட்டாதவன்
விசேஷமான லட்சணங்கள் என்று கூற முடியாதவன் அவன் சுதந்திரமானவன் எதற்கும் கட்டுப்படாத மகா சக்தி உடையவன் )
15) ஓம் நமோ வாஸுதேவாய தஸ்மை பகவதே ஸதா/
வ்யதிரிக்தம் ந யஸ்யாஸ் தி வ்யதிரிக்தோ (அ) கிலஸ்ய ச//
( ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற பனிரெண்டெழுத்து திருநாமமே அவனின் தாரக மந்திரம் எவனைத் தவிர்த்து இந்த பிரபஞ்சத்தில் வேறு ஒன்றுமில்லையோ அந்த பகவான் வாசுதேவனுக்கு நமஸ்காரம் )
16) நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை நமஸ்தஸ்மை மஹாத்மனே/
நாமரூபம் ந யஸ்யைகோ யோ (அ) ஸ்தித்வேனோப லப்யதே//
( எவருக்கு பெயரோ உருவமோ இல்லையோ எவரை இருக்கிறார் என்பதை உணர்வால் மட்டுமே அறிய முடியுமோ அந்த பரமாத்மாவுக்கு மனம் மொழி மெய் என்னும் முக்கரணங்களாலும் நமஸ்காரம் )
17) யஸ்யாவதார ரூபாணி ஸமர்சந்தி திவௌகஸா/
அபஸ்யந்து பரம்ரூபம் நமஸ்தஸ்மை மஹாத்மனே//
( அந்த பரப்ரம்ம சொரூபத்தை முழுவதும் தேவர்களாலேயே காண முடியவில்லை அதனால் அந்த மகாவிஷ்ணு என்னென்ன அவதாரங்களை எடுத்தாரோ அவைகளை மட்டும் தேவர்கள் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள் அந்த மகா புருஷனுக்கு நமஸ்காரம் )
18) யோ (அ)ந்த ஸ்திஷ்டந்த ஸேஷஸ்ய பஸ்யதீஸ ஸுபாஸுபம்/
தம் ஸர்வ ஸாக்ஷிணம் விஸ்வம் நமஸ்யே பரமேஸ்வரம்//
( யார் எல்லோரின் உள்ளங்களிலும் இருந்து கொண்டு அவரவர்களின் நல்லது கெட்டவைகளை பார்த்து கொண்டு இருக்கிறாரோ அந்த விஸ்வரூபனை சர்வசாட்சியான பரமேஸ்வரனும் வணங்குகிறான் )
19) நமோஸ்து விஷ்ணவே தஸ்மை யஸ்யாபின்னயிதம் ஜகத்/
த்யேயா ஸ ஜகதாமாத்யா ஸ ரப்ரஸுதது மே (அ) வ்யயா//
( எவரிடம் இருந்து இந்த உலகத்தை பிரித்து பார்க்க முடியாதோ அந்த விஷ்ணுவுக்கு நமஸ்காரம் யோகிகளால் வேண்டப்பட்ட அழிவில்லாத உலகநாயகனான அந்த ஜெகந்நாதன் எங்களுக்கு காட்சி தரட்டும் )
20) யத்ரோத மேதத் ப்ரோதம் ச விஸ்வமக்ஷர வ்யயம்/
ஆதாரபூத்: ஸர்வஸ்ய ஸப்ரஸுதது மே ஹரி//
( எவரிடம் இந்த பிரபஞ்சம் உள்ளேயும் வெளியேயும் நிலை பெற்றுள்ளதோ எவர் எல்லாவற்றிற்கும் ஆதாரமாக உள்ளாரோ அந்த ஸ்ரீஹரி என் முன்னே தோன்றட்டும் )
21) ஓம் நமோ விஷ்ணவே தஸ்மை நமஸ்தஸ்மை புன: புன:/
யத்ர ஸர்வம் யத: ஸர்வம் ய ஸர்வம் ஸர்வ ஸம்ஸ்ரயா//
( எவர் எல்லாமுமாய் எவரிடம் இருந்து எல்லாமும் எவரை நாடியே எல்லாமும் சார்ந்தவராய் உள்ளாரோ அந்த விஷ்ணுவுக்கு நமஸ்காரங்கள் மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள் )
22) ஸர்வ கத்வாதனந்தஸ்ய ஸ ஏவாஹமவஸ்திதா/
மத்த ஸர்வம் அஹம் ஸர்வம் மயி ஸர்வம் ஸனாதனே//
( அந்த ( நாராயணன் ) அனந்தன் ஸர்வவ்யாபி
நான் அவனாகவே இருக்கிறேன் என்னிடம் இருந்தே இவையாவும் தோன்றின எல்லாமும் என்னிடத்தில் ஐக்கியமாகியுள்ளன )
23) அஹமேவாக்ஷயோ நித்ய: பரமாத்மா (ஆ)த்ம ஸம்ஸ்ரய:/
ப்ரஹ்ம ஸம்ஜ்ஞோ (அ) ஹமேவாக்ரே ததாந்தே ச பர: புமான்//
( நான் அக்ஷயன் ( குறைவில்லாதவன் ) நான் நித்யமானவன் ( அழிவில்லாதவன் ) நானே ஆதியும் ( முதலும் ) அந்தமும் ( முடிவும் ) ஆனவன் ப்ரம்மம் என்று குறிக்கப்படுவதும் நானே பரமாத்மாவும் நானே பரமபுருஷனும் நானே )
இவ்விதம் பிரகலாதன் விஷ்ணுவை தியானித்து எல்லாமே விஷ்ணுமயமாக கண்டு தானும் அவனுள் ஒடுங்கி இருப்பதனால் தன்னையே விஷ்ணுவாக கருதி விஷ்ணுவிடம் தன் மயத்தை அடைந்தான் பரம பரிசுத்தனான அவன் முன் பகவான் நரசிம்ம மூர்த்தியாக தோன்றி அவனை காத்து ரட்சித்தார்
- இதி ஸ்ரீ ப்ரஹலாத ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் -
( பிரகலாதனால் சொல்லப்பட்ட தோத்திரம் நிறைவுற்றது )
"ஸ்ரீ நரசிம்மர் திருவடிகளே சரணம்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக