திங்கள், 17 ஜூலை, 2017

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை --ஆவணி மூலத்திருவிழா அழைப்பிதழ்



அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், மதுரை --ஆவணி மூலத்திருவிழா அழைப்பிதழ்

18.08.2017 ஆவணி மாதம் 2ம்தேதி வெள்ளிக்கிழமை  வாஸ்து சாந்தி

19.08.2017 ஆவணி மாதம் 3ஆம் தேதி  சனிக்கிழமை  கொடியேற்றம்

ஆவணி மாதம் 3ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆவணி மாதம் 24ஆம் தேதி வியாழக்கிழமை  வரை
(19.08.2017 - 24.08.2017)
சந்திரசேகரர் உற்சவம் இரவு புறப்பாடு கோயிலுக்குள் இரண்டாம் பிரகாரம்

25.08.2017 முதல் தினமும் மீனாட்சி சுந்தரேசுவரர் இரவு புறப்பாடு ஆவணி மூலவீதியில்
(02.09.2017 தவிர)

* 25.08.2017  வெள்ளிக்கிழமை காலை கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை,

* 26.08.2017   சனிக்கிழமை காலை
 நாரைக்கு முக்தி கொடுத்த லீலை,

* 27.08.2017  ஞாயிற்றுக்கிழமை காலை மாணிக்கம் விற்ற லீலை,

* 28.08.2017  திங்கட்கிழமை காலை  தருமிக்குப் பொற்கிழி அளித்த லீலை,

* 29.08.2017  செவ்வாய்க்கிழமை காலை உலவாக் கோட்டை அருளிய லீலை,

* 30.08.2017  புதன்கிழமை  காலை
பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை,


* 31.08.2017  வியாழக்கிழமை மதியம்
 வளையல் விற்ற லீலை
 மாலை
அருள்மிகு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம்,

* 01.09.2017 வெள்ளிக்கிழமை  மாலை   நரியைப் பரியாக்கிய லீலை / இரவு: திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமியும் மதுரைக்கு வருகை,

* 02.09.2017  சனிக்கிழமை மதியம் புட்டுதோப்பில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை,

* 03.09.2017ஞாயிற்றுக்கிழமை காலை விறகு விற்ற லீலை,

* 04.09.2017 திங்கட்கிழமை  காலை: சட்டத்தேர் இரவு: சப்தாவர்ணச் சப்பரம்,

* 05.09.2017 பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தவாரி
.
இரவு திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியும், திருவாதவூர் அருள்மிகு மாணிக்கவாசகர் சுவாமியும் குதிரை வாகனத்தில் வடக்கு ஆடி வீதியில் உள்ள 16கால் மண்டபத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளுதல்.

அனைவரும் வருக அங்கயற்கண்ணி உடனாய திருஆலவாய் அண்ணல் அருள் பெருக


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக