ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி டிசம்பர் 03.
மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்து ஆச்சார்ய வடிவாக வந்ததே தத்தாத்ரேய ரூபம். பல தெய்வங்களை வழிபட்டாலும் எல்லா தெய்வங் களும் அந்த பரபிரம்ம வடிவமே. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை நடத்தும் மும்மூர்த்திகளும் பரபிரம்மத்தின் மூன்று முகங்களே.
இந்த கருத்தைச் சொல்ல வந்ததுதான் தத்தாத் ரேய அவதாரம். மற்ற எல்லா அவதாரங்களுக்கும் ஆரம்பம், முடிவு உண்டு. ஆனால் இந்த அவதாரத்திற்கு முடிவு கிடையாது. ஏனெனில் அனுமனைப்போல, மார்க்கண்டேயனைப் போல தத் தாத்ரேயரும் சிரஞ்சீவியாக போற்றப்படுகிறார். அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசுயாவும் காட்டில் வசித்தனர். கணவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே அனுசுயாவின் பணி. குழந்தை இல்லாத அவள், தனக்கு மும்மூர்த்திகளே தெய்வக் குழந்தைகளாக பிறக்க வேண்டுமென விரும்பினாள். இதனை அறிந்த மும்மூர்த்திகளும் தங்கள் தேவியரிடம் ஆலோசனை கேட்டனர்.
அனுசுயாவிற்கு சோதனை வைத்து, அதில் வெற்றி பெற்றால், அவளது குழந்தையாகப் பிறக்கலாம் என தேவியர்கள் மூவரும் யோசனை தெரிவித்தனர். எப்படியும் இந்த சோதனையில், அவள் தோற்று விடுவாள் என்பது அவர்களது கணிப்பு. அதன்படி பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் துறவி வடிவில் அனுசுயாவின் குடிசைக்கு வந்து உணவிடும்படி கேட்டனர். அவள் உணவுடன் வரும் போது, “பெண்ணே, நீ நிர்வாணமாக எங்களுக்கு உணவிட்டால்தான், அதை ஏற்போம்“ என்றனர். அனுசுயா கலங்கவில்லை. அவளுக்கு தன் கற்பின் மீதும், பதிவிரதா தன்மையின் மீதும் அதீத நம்பிக்கையுண்டு.
“கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை எடுத்து, நான், என் கணவருக்கு செய்யும் பணிவிடை உண்மையானால், இந்த துறவிகள் குழந்தைகளாகட்டும்“ எனச் சொல்லி, அவர்கள் மேல் தெளித்தாள். உடனே மூன்று தெய்வங்களும் குழந் தைகளாகிவிட்டனர். தனக்கு பால் சுரக்கட்டும் என, அடுத்த வேண்டுகோளை வைத்தாள் அனுசுயா. நிர்வாண நிலையில், குழந்தைகளுக்கு பாலூட்டினாள். வெளியே சென்றிருந்த அத்திரி முனி வர், தன் ஞான திருஷ்டியால் நடந்ததை அறிந்தார். வீட்டுக்கு வந்த அவர், அந்தக் குழந்தைகளை ஒரு சேர அணைத்தார்.
ஒரு உடல், மூன்று தலை, இரண்டு கால்கள், ஆறு கைகளுடன் குழந்தை இணைந்தது. அதற்கு தத்தாத்ரேயர் என்று பெயரிட்டார். தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட கதியை அறிந்த முப்பெருந்தேவியரும், அனுசுயாவின் குடிசைக்கு வந்தனர். நடந்ததை கூறி, தங்கள் கண வன்மார்களை சுயவடிவில் திருப்பித் தர கேட்டனர். அவர்களிடம், உங்கள் கணவன்மார் உங்களுக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என்பது போல், குழந்தையில்லாத எங்களுக்கு இந்தக் குழந்தை யும் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் அத்திரி மகரிஷி. உடனே, மூன்று தெய்வங்களும் எழுந்தனர்.
‘‘ரிஷியே, உங்கள் விருப்பப்படி இந்தக் குழந்தை இங்கேயே இருக்கும். இவன் பெரிய ரிஷி யாக விளங்குவான்,‘‘ என்று கூறி, மறைந்தனர். இவரது இன்னொரு பெயர் ஆத்ரேயர், அதாவது அத்ரியின் புதல்வர். தத்தாத்ரேயர் என் வணங்கப் பெறுகிறார். அவதார தலம் தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்று கூறப்படு கிறது. தாணுமலையானாக இங்கே இறைவன் உறைகிறார்.
உத்திரப்பிரதேசத்தில் “குரு மூர்த்தி“ என்றாலேயே அது தத்தரைக் குறிக்கின்றது. பிரயாகையில் இவருக்கு ஒரு கோயில் இருக்கிறது. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீதத்தாத்ரேயரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்பார்கள்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஜெயந்தி!
இவரது மந்திரம் ஞாபக சக்தி தரும். ஞானம், மோக்ஷம், நற்குணங்கள் தரும்.(க்ஷிப்ர பிரசாதனர் ) விரைந்து அருள் செய்பவர். இழந்த சொத்துக்களைத் திரும்பப்பெற , கடன் தீர , அடமானம் வைத்த பொருள் , நகைகளை மீட்ட, காணாமல் போன பொருள்களை கண்டறியவும் அருள் செய்பவர்.
மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார்.
இடபமும், அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன.
உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள். அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது.
அத்திரி மகரிஷியின் புதல்வரானதால் ஆத்ரேயன் என்றும்; விஷ்ணுவால் தத்தம் செய்யப்பட்டதால் தத்தாத்ரேயன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் பெரும் பாலான வீடுகளில், அனுசுயா தேவி மூன்று குழந்தைகளுடன் உள்ள திருவுருவப் படங்களை வழிபடுகின்றனர்.
ஸ்ரீதத்தாத்ரேயர் சிவபூஜை செய்த திருத்தலங் களில் முதன்மையானது திருவிடைமருதூர். இங்கு ஸ்ரீதத்தாத்ரேயர் திருவுருவம் உள்ளது.
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும், சேங்காலிபுரத்திலும் தத்தாத்ரேயர் சந்நிதிகள் உள்ளன.
ஸ்ரீதத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம் என்பர்.
ஸ்ரீ வித்யா உபாஸனை மந்திர சாஸ்திரத்தில் உயர்வான வித்தை இதைப் பற்றி இயற்றப்பட்ட கிரந்தங்களில் பெரியதும் சிறந்ததும் இவரால் இயற்றப்பட்டதே.அதை பின்பற்றி இவரது சீடரான ஸ்ரீ பரசுராமரால் சுருக்கமாக ஒரு கிரந்தம் இயற்றப்பட்டது.இன்றளவும் அந்த கிரந்தமே ஸ்ரீ வித்யா உபாசகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
அவதூதர்களுக்கு ஸ்ரீ தத்தாத்ரேயரே சத்குரு.சகுன உபாசகர்களுக்கு கற்பக மரம் போல் நல்வாழ்வு தருபவரும்,நிர்குண உபாசகர்களுக்கு சத்குருவாய் விளங்கி ஆன்ம உயர்வு தந்து ஜீவசமாதி ஆகும் நிலை வரை அருள் செய்பவர்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் தியான ஸ்லோகம் :-
மாலகமண்டலு தர கரபத்மயுக்மே |
மத்யஸ்த பாணியுகளே டமருத்ரிசூலம் |
அத்யஸ்த ஊர்த்வ கரயோ : சுப சங்க சக்ரே |
வந்தே தமத்ரி வரதம் புஜ ஷட்க யுக்தம்||
பொருள்: மாலை,கமண்டலம் ,உடுக்கை, ஈட்டி ,சங்கு, சக்கரம் இவற்றைக் தம் ஆறு கரங்களில் தாங்கியவரும் அத்ரி மகரிஷியின் மகனுமான ஸ்ரீ தத்தாத்ரேயரே தியானிக்கிறேன்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் காயத்ரி!
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத் ||
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹ
திகம்பராய தீமஹி
தந்நோ தத்த பிரசோதயாத்.'
மேற்கண்ட மந்திரத்தை ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும் என்பது அனுபவம்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் மந்திரம்:
1.ஓம் த்ராம் தத்தாத்ரேயாய நமஹ||
2.ஓம் குரு தத்த நமோ நமஹ||
குடும்பஸ்தர்கள் மேற்கண்ட மந்திரங்களில் ஏதேனும் ஒன்றை ஜெபித்து வரலாம்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் சாந்தி மந்திரங்கள் :-
நமஸ்தே பகவான் தத்தாத்ரேய ஜகத்பதே |
சர்வ பாத ப்ரசமனம் குரு சாந்தி ப்ரயச்ச மே ||
இந்த மந்திரத்தை ஜெபித்து வரக் குடும்பத்தில் அமைதி,மன நிம்மதி உண்டாகும்.
புதன்கிழமை புதன் ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்க செல்வவளம் உண்டாவதோடு பீடைகள், திருஷ்டி, தீவினைகள் விலகும்.
தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
பூத பிரேத பிசாச்சத யஸ்ய ஸ்மரண மாத்ரதஹ|
துராதேவ பலாயந்தே தத்தாத்ரேயம் நமாமிதம்||
முன்ச்ச முன்ச்ச ஹூம் பட ஸ்வாஹா||
செவ்வாய்க்கிழமை செவ்வாய்ஹோரையில் இடது கையில் பஞ்சபாத்திரத்தில் நீர் வைத்து இந்த மந்திரத்தை 108 முறை ஜெபித்து அந்த தீர்த்தத்தை சிறிது அருந்திப் பின்னர் மீதம் உள்ள தீர்த்தத்தை வீடு முழுவதும் தெளிக்கப் பீடைகள்,திருஷ்டி,தீவினைகள்,பேய்,பிசாசு தொந்தரவுகள் விலகும்.தீர்த்தத்தை கால்களில் மிதிபடாதபடித் தெளிக்கவும்.
தேங்காய் வாங்கி அதை மஞ்சள், பன்னீர் கலந்த தீர்த்தத்தால் கழுவிச் சந்தனம், குங்குமம் இட்டுச் சிவப்புப்பட்டுத் துணியால் சுற்றி இந்த மந்திரத்தை 1008 உரு ஜெபித்து தேங்காயை வீட்டு வாசலில் கட்ட எந்த தீய சக்தியும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தாது காப்பாகும்.
புது வீடு கட்டிக் குடியேறுபவர்கள் யார் பேரில் வீடு உள்ளதோ அவருக்கு படுபட்சி இல்லாத ஒரு நன்னாளில் இந்த தேங்காய்ப் பிரயோகத்தைச் செய்து வீட்டு வாசலில் கட்ட நன்மை உண்டாகும்.
முற்பிறவிப் பாவவினைகள் தீர, கர்மவினையின் பதிப்பால் தீராவியாதி,வறுமை நீங்க :-
அத்ரி புத்ரோ மஹாதேஜ தத்தாத்ரேயோ மஹாமுனியே |
தஸ்ய ஸ்மரண மாத்ரேன சர்வபாபை ப்ரமுச்யதே ||
இந்த மந்திரத்தை தினம் ஜெபிக்க நன்று .ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியனைப் பார்த்தபடி ஜெபிக்கப் பன்மடங்கு பலன்தரும்.
சந்தானபாக்கிய ப்ரத (குழந்தை வரம் தரும்) ஸ்ரீ தத்தாத்ரேய மந்திரம்:
தூரிக்ருத பிஸாச்சார்த்தி ஜீவயித்வம் ம்ருதம் சுதம்|
யோபுவபிஷ்டதா பாது ச ந: சந்தான விருத்தி க்ருத்||
இந்த மந்திரத்தை வியாழக்கிழமை குரு ஹோரையில் வெண்ணையில் மந்திரித்து உண்டு வர விரைவில் பாக்கியம் கிட்டும்.
அவதார தலம்
தத்தாத்ரேயர் அவதாரம் நடந்த ஸ்தலம் சுசீந்திரம் என்று கூறப்படுகிறது.
தாணுமலையானாக இங்கே இறைவன் இருக்கிறார்.உத்திரப்பிரதேசத்தில் "குரு மூர்த்தி" என்றாலேயே அது தத்தரைக் குறிக்கின்றது. பிரயாகையில் இவரது கோவில் இருக்கின்றன. கர்நாடகாவில் ஆண்டுதோறும் மூன்று நாட்கள் தத்த ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீதத்தாத்ரேயரை நினைப்பதாலேயே பக்தர்களின் சங்கடங்கள் விலகியோடும் என்று சொல்லப்படுகிறது. இவரை உபாஸித்தால் ஞான மார்க்கத்தில் ஈடுபாடும், தீவிர வைராக்யமும் சித்திக்கும் என்று கூறப்படுகிறது. நாமும் ஞான-வைராக்கியம் சித்திக்க அவரை பிரார்த்திப்போமாக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக