கிறிஸ்துமஸ் மரத்தின் கதை..
கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் ஸ்டார், கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.
இங்கிலாந்து நாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன் மரக்கிளைகளையும் பச்சை இலைக் கொத்துக்களையும் வீட்டு வாசலில் தொங்கவிட்டால் தீய ஆவிகள் அணுகாது என்னும் நம்பிக்கை ஆழமாக இருந்தது. இந்தப் பழக்கம் சீர்திருத்த கிறிஸ்தவ மதம் தோன்றிய பிறகு ஒழிந்தது. அப்படிப்பட்ட சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தைத் தோற்றுவித்தவரான மார்ட்டின் லூதர் கிங் என்ற பாதிரியாரால்தான் கிறிஸ்துமஸ் மரம் இயேசு பிறப்புக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
போனிபேஸ் வெட்டிய மரம்
ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் நிலவிவந்த பல மூடநம்பிக்கைகளை அவர் கடுமையாகச் சாடியும் எதிர்த்தும் வந்தவர். ஊர் ஊராகச் என்று மதப் பிரச்சாரம் செய்துவந்த அவர், ஓக் மரம் ஒன்றை மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடும்கோபம் கொண்ட அவர், அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்தமரம் மீண்டும் துளிர்த்துவிடாமல் இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார்.
ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்தசில தினங்களிலேயே ஓக் மரக் கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக முன்பிருந்த மரத்தைப் போலவே கம்பீரமாக எழுந்து நின்றதை மக்கள் கண்ட மக்கள், அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாகக் பார்க்கத் தொடங்கினார்கள். பாதிரியார் போனிபஸ் தனது ஊழியத்தை முடித்துக்க்கொண்டு மீண்டும் அவ்வழியே திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.
இதனால் கிறிஸ்வ வழிபாட்டில் பத்தாம் நூர்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத் தொடங்கியது. ஆனால் கிறிஸ்துமஸ் மரமாக அது அப்போது உருப்பெறவில்லை.
மார்ட்டின் லூதர் வியந்த ஒளி மரம்
சீர்திருத்த கிறிஸ்துவ மதம் உருவாகக் காரணமாக இருந்த மார்ட்டின் லூதர் கிங்கும் ஒரு ஜெர்மானியப் பாதிரியார்தான். 15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இவர், கிறிஸ்துமஸ் நெருங்கிக்கொண்டிருந்த ஒரு டிசம்பர் மாதத்தின் மத்தியில் பனி படந்த சாலை வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது சின்னச் சின்ன ஓக் மரங்களின் மத்தியில் வெண்பனி படந்திருந்த ஃபிர் மரமொன்று வெளிச்சத்தில் தேவ அழகுடன் ஒளிர்வதைக் கண்டார். அதை அவர் ஓர் இறை தரிசனமாகவே கருதினார். இந்தக் காட்சியை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
அடுத்த இரு வாரங்களில் வந்த கிறிஸ்துமஸ் தினத்துக்கு முதல் நாள், தேவாலய வளாகத்தில் நின்றுகொண்டிருந்த அதேபோன்றதொரு ஃபிர் மரத்தைத் தொங்கும் மெழுகுவர்த்திக் கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். அந்த வழக்கம் அதன் பிறகு ஜெர்மனி முழுவதும் பரவத் தொடங்கி பிறகு 16-ம் நூற்றாண்டில் உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. ஓக் மற்றும் ஃபீர் மரங்களை கிறிஸ்துமஸ் சமயத்தில் அலங்கரிப்பதெற்கென்றே பிற நாடுகளிலும் மக்கள் அவற்றை வளர்க்கத் தொடங்கினார்கள்.
இப்படி வளர்க்க முடியாதவர்கள் செயற்கையான கிறிஸ்துமஸ் மரங்களைப் பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்களின் வர்த்தகச் சந்தை இன்று அமெரிக்க, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் மட்டும் 50 ஆயிரம் மில்லியன் டாலர்கள் மதிப்பு என்றால் நம்ப முடிகிறதா?
கிறிஸ்துமஸ் மரங்கள்!
உலகில், பெரும்பாலான நாடுகளில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இப்பண்டிகையை முன்னிட்டு வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரமும், நாட்டிற்கு நாடு மாறுபட்டு இருக்கும். இதோ சில, வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரங்கள்:
சோவியத் யூனியனிலிருந்து, 1990ல் பிரிந்த முதல் குடியரசு நாடு, லிதுவேனியா; இந்நாட்டின் தலைநகரம் வில்னியுஸில், 2015ல், ஒரு கிராமத்து வீட்டில் புதுமையான கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டது. 65 சதுர கி.மீ., பரப்பளவு கொண்ட அவ்வீட்டின் முன்புறம் தேவதாரு மரக்கிளைகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வீட்டின் உள்ளே சென்றால், அவ்வூரில் உள்ள பிரபலங்கள், கிறிஸ்துமஸ் கதைகளைக் கூறினர். இது, மிகுந்த பாராட்டை பெற்றது.
இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில், இரண்டாயிரம் பொம்மைகளை கொண்டு, 14 மீட்டர் உயரத்திற்கு கிறிஸ்துமஸ் மரம் அமைக்கப்பட்டது.
பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த இந்த கிறிஸ்துமஸ் மரத்தில் வைக்கப்பட்டிருந்த பொம்மைகள், இறுதியில், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது.
இத்தாலியில் உள்ள கபியோ நகரையொட்டி, மவுண்ட் இன்ஜினோ என்ற மலை உள்ளது. இம்மலையின் சரிவில் உள்ள, 650 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மரத்தின் கிளைகளில், 250 பச்சை மற்றும் ஏராளமான வண்ண விளக்குகளை பொருத்தி, ஜொலிக்க வைப்பர்.
ஆண்டுதோறும், டிசம்பர், 7ம் தேதியன்று அமைக்கப்பட்டு, டிசம்பர் மாத இறுதி வரை, இந்த மரம் ஜொலிக்கும்.
சோவியத் யூனியனிலிருந்து, 1991ல் தனி நாடாக சுதந்திரம் பெற்ற நாடு, எஸ்டோனியா. இதன் முக்கியமான நகரங்களில் ஒன்றான, ராக்பெர்ரேவில், இரண்டு ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம் இது! பழைய வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட, 121 ஜன்னல்களை மெருகேற்றி, வண்ணக் கண்ணாடிகளை பொருத்தி, கிறிஸ்துமஸ் மரம் அமைத்தனர். இது, வித்தியாசமாக இருந்ததால், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரசல்ஸ் நகரில் உள்ள அரண்மனையில், கடந்த ஆண்டு, ஆறு சம அளவு கொண்ட சதுரங்களால் ஆன கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்திருந்தனர். ஆனால், இதற்கு மக்களிடம் வரவேற்பு இல்லாததால், இந்த ஆண்டு, பாரம்பரிய முறையில், இதே இடத்தில் கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளனர்.
நார்வே நாட்டின், டார்மன்ட் என்ற நகரில், 45 மீட்டர் உயரத்தில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான கிறிஸ்துமஸ் மரம் இது. இதன் சிறப்பு என்னவென்றால், 1,700 தனித்தனி, ஊசியிலை மரங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் மரங்கள்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் கலாசாரம் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் பரவியது. உலகிலேயே கிறிதுமஸ் விழாவின் போது கிறிஸ்துமஸ் மரம் வைப்பது முதன்முதலில் ஜெர்மனியில்தான் தொடங்கியது. ஜெர்மனி, ஆஸ்திரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் " பிர்' என்ற மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் இருந்தது. இருப்பினும் மரங்களின் இலைகள் மற்றும் மலர்களைக் கட்டி அலங்கரிக்கும் வழக்கம் இங்கிலாந்தில் தான் 1841 ஆம் ஆண்டில் ஆரம்பித்தது. நார்வேயில் " ப்ரூஸ்' மரத்தை வெட்டி கிறிஸ்துமஸ் மரமாக நட்டு, அதில் மெழுகுவர்த்தியால் அலங்காரம் செய்து ஏற்றி, நடுநடுவே ஆப்பிள் மற்றும் பழவகைகள், அலங்காரப் பொருள்கள் வைத்து குழந்தைகளுக்கு அவற்றைப் பரிசாக வழக்குவர். மின்சாரம் பிரபலமான பிறகுதான் மெழுகுவர்த்திக்குப்பதிலாக மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
முதன் முதலாக கிறிஸ்துமஸ் மரத்தை அல்பெர்டினாஸ் என்ற அரசன் நட்டான் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில் வெள்ளைமாளிகையில் வைக்கும் கிறிஸ்துமஸ் மரத்தை " ப்ளூ ரூம் கிறிஸ்துமஸ் மரம்' என அழைக்கின்றனர்.
வெள்ளை மாளிகையில் மொத்தம் 37 மரங்கள் வைக்கப்படுகின்றன. 1933 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் காலத்தில்தான் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் கலாசாரம் வத்திக்கான் முழுவதும் பரவியது.
இன்றும் புனித பீட்டர் சதுக்கத்தினை ஒட்டிய வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படும் வழக்கம் இருக்கிறது. ஆண்டுதோறும் ஒரு ஐரோப்பிய நாடு கிறிஸ்துமஸ் மரத்தை அன்பளிப்பாக வழங்குகிறது. 2011 ஆம் ஆண்டு உக்ரைன் நாடு வழங்கிய கிறிஸ்துமஸ் மரத்தின் உயரம் 206 மீட்டர் ஆகும். வெள்ளை மாளிகையில் வைக்கப்படும் கிறிஸ்துமஸ் மரத்தின் உச்சியில் நட்சத்திரம் அல்லது வானதூதரை வைத்திருப்பர்.
இன்று ஐரோப்பிய நாடுகளில் மட்டுமின்றி ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் பலவற்றிலும் கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுகிறது. இந்தியாவிலும் ஆலயங்கள், பெரிய மால்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும் துணிக்கடைகளிலும் மதபேதமின்றி கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுவதை அனைவரும் அறிவோம்.
குழந்தை இயேசு மண்ணுலகில் வந்து பிறந்ததை வரவேற்கும் முகமாகக் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவின் ஓர் அங்கம்தானே கிறிஸ்துமஸ் மரம். மகிழ்ச்சியின் விழாவான கிறிஸ்துமஸ் பெருவிழா நம் வாழ்வில் அமைதியும் இன்பமும் பெருகச் செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக