சனி, 2 டிசம்பர், 2017

வீட்டில் தீபம் ஏற்ற வேண்டிய நேரமும், இடங்களும்!! தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் !!*



வீட்டில் தீபம் ஏற்ற வேண்டிய நேரமும், இடங்களும்!!  தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் !!*

 கார்த்திகை மாதம் முழுவதும் தினமும் மாலையில் வீடுகளிலும், ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுதல் சிறந்த பலன்களைத் தரும். அதிலும் தீபத்திருநாளன்று தீபம் ஏற்றினால் எவ்வளவு சிறப்பு என்று தெரிந்து கொள்வோம்.

திருக்கார்த்திகை நாளன்று குறைந்தபட்சம் 27 தீபங்கள் ஏற்றவேண்டும். வீட்டுவாசலில் லட்சுமியின் அம்சமான குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது மிகவும் நல்லது. கார்த்திகை திருநாளன்று நெல் பொரியை நைவேத்தியமாக படைத்தால் சிவனருள் கிடைக்கும்.

விளக்கு ஏற்றும் முறை :

ஒரு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.
மூன்று முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் - பசு, பூமி, செல்வம் கிடைக்கும்.
ஐந்து முகம் கொண்ட விளக்கு ஏற்றினால் - சகல நன்மையும், ஐஸ்வர்யமும் பெருகும்.

தீபம் ஏற்ற வேண்டிய இடங்களும், விளக்குகளும் :

கோலமிடப்பட்ட வாசலில் : ஐந்து விளக்குகள்
தின்ணைகளில் : நான்கு விளக்குகள்
மாடக்குழிகளில் : இரண்டு விளக்குகள்
நிலைப்படியில் : இரண்டு விளக்குகள்
நடைகளில் : இரண்டு விளக்குகள்
முற்றத்தில் : நான்கு விளக்குகள்


தீபம் ஏற்ற வேண்டிய அறைகளும், பயன்களும் :

பூஜையறையில் : இரண்டு கார்த்திகை விளக்குகள் ஏற்றி வைத்து வணங்கினால் சர்வ மங்களங்கள் உண்டாகும்.

சமையல் அறையில் : ஒரு விளக்கு ஏற்றி வைத்து வணங்கினால் அன்ன தோஷம் ஏற்படாது.

தோட்டம் முதலான வெளிப்பகுதிகளில் : எமனை வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். இதனால் மரண பயம் நீங்கும். ஆயுள்விருத்தி உண்டாகும்.

தமிழகத்தின் பாரம்பரிய சுவை உங்கள் இல்லம் தேடி.... நம்ம ஊரு வெப்சைட் யேவiஎந ளுpநஉயைட (நேட்டிவ் ஸ்பெஷல்)-ல்.

இங்கே கிளிக் செய்து உங்களுக்கு பிடிச்சதை ஆர்டர் செய்யுங்கள்!

திரிகளும், பயன்களும் :

பருத்தி பஞ்சு - வீட்டில் மங்களம் நிலைக்கும்.

வாழைத்தண்டின் நாரில் செய்த திரி - முன்னோர் சாபங்கள் நீங்கும்.

புதிய மஞ்சள் துணியால் செய்யப்பட்ட திரி - அம்பாளின் அருளால் நோய்கள் குணமாகும்.

சிவப்பு வண்ண துணியால் திரிக்கப்பட்ட திரி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.

வெள்ளை துணியால் திரிக்கப்பட்ட திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.


திருவண்ணாமலை தீபம் :

கார்த்திகை தீபம் என்றவுடன் நம் அனைவரின் கண்முன்னே வலம்வரும் காட்சி, திருவண்ணாமலை தீபம் என்றால் அது மிகையில்லை. திருவண்ணாமலையில் இன்று மாலை 5.30 முதல் 6 மணிக்குள் மகா தீபம் ஏற்றப்படுகிறது.

மலை உச்சியில் ஏற்றப்படும் இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் எரியும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

கார்த்திகை தீபமேற்ற உகந்த நேரம் :

கார்த்திகை மாதத்தில் மாலையில் 5.30 மணி முதல் 6.00 மணிக்குள் வீட்டிற்குள் விளக்கேற்ற வேண்டும். வாசனையுள்ள மலர்களை தொடுத்து அதை இறைவனுக்கு அணிவித்து வணங்க வேண்டும். கார்த்திகை மாதம் முழுவதும் தீபம் ஏற்ற உகந்த நாட்கள் ஆகும். தினமும் விளக்கு ஏற்ற முடியாதவர்கள் துவாதசி, சதுர்த்தி மற்றும் பௌர்ணமி ஆகிய தினங்களில் கண்டிப்பாக விளக்கேற்ற வேண்டும்.

*இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்!!*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக