கிறிஸ்துமஸ் பற்றிய உண்மைகள் தெரியுமா உங்களுக்கு?
வருடா வருடம் டிசம்பர் மாதம் வந்துவிட்டாலே நம் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் பண்டிகை தான். அதிலும் கிறிஸ்துமஸ் கேக் மிகவும் பிரபலமான ஒன்று.
வருடா வருடம் டிசம் 25 ஆம் திகதி இப்பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும்.
இயேசு கிறிஸ்து பிறந்த தினம் தான் கிறிஸ்துமஸ் ஆக கொண்டாடப்படுகிறது என்பது அனைவரும் அறிந்திருப்போம். ஆனால் அவர் எப்பொழுது பிறந்தார் என்பது இன்னும் உறுதிபட யாராலும் கூறமுடியல்லை.
பிறந்த வருடம் சரியாக தெரியவில்லை என்பதால் கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.
இதனால், யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, மார்ச்ச மாதம் 25ஆம் திகதி மரியா இயேசுவைக் கருத்தரித்தார் என்னும் நம்பிக்கை தொடக்க காலக் கிறித்தவரிடையே நிலவியது.
அதிலிருந்து ஒன்பது மாதங்கள் கணக்கிட்டு, டிசம்பர் 25இல் இயேசு பிறந்தார் என்று கிறித்தவர்கள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்புவிழாக் கொண்டாட தொடங்கினர்.
கிறிஸ்துமஸ் பற்றிய சில உண்மைகள்
கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை பண்டைய ஆங்கிலத்தின் "Christ's Mass" என்று பொருள்படும், "Cristes maesse" என்ற வார்த்தையிலிருந்து வந்தது.
டட்சு வாய் வழிக் கதையில் வரும் செயின் நிகோலஸ் என்பவர் தான் சேண்டா கிளாஸ் என்ற கிறிஸ்துமஸ் தாத்தா!!. ஆனால், இவர் உண்மையில் டிசம்பர் 6ம் தேதியில் தான் பரிசுகளை வழங்கினாராம்.
சாக்ஸ் களில் பரிசுப் பொருட்களை தொங்கவிடும் வழக்கம்: டட்சு மக்கள் ஷூவில் கிறிஸ்துமஸ் தாத்தாவின்(செயிண்ட் நிக்கோலஸ்) கழுதைக்கு ஷூக்களில் உணவு வைத்தனர். இந்த ஷூக்களில் மறுநாள் பரிசுப் பொருட்கள் இருந்ததாக நம்பப்பட்டது. இது தான் காலப்போக்கில் சாக்ஸ்களில் பரிசுப் பொருட்களை தொங்கவிடும் வழக்கமானது.
13ம் நூற்றாண்டில் இத்தாலியின் அஸ்ஸி நகரில் செயின் பிரான்ஸிஸ் என்பவரால் முதன் முதலில் கிறிஸ்துமஸ் கெரால் தேவாலயத்தில் பாடப்பட்டது.
முக்கியமான ஒன்று, பைபிள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப் படி, குழந்தை இயேசு மாட்டுக் கொட்டகையில் பிறக்க வில்லையாம். ஒரு குகையில் தான் பிறந்தாராம்.
இறை ஆய்வாளர்கள் பலர் இயேசு கிறிஸ்து டிசம்பர் 25ல் பிறக்கவில்லை என்றும் 6BC-30AD ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் செப்டம்பர் மாதம் பிறந்ததாகவும் கருதுகின்றனர்.
ஜூலியன் காலண்டரின் படி, கிரேக்கர்கள் கிறிஸ்துமஸை ஜனவரி 7ம் தேதிதான் கொண்டாடுவார்களாம். அதோடு கிறிஸ்துமஸ் பரிசுகளை புத்தாண்டு அன்று தான் திறப்பார்களாம்.
முதன் முதலில் பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ், 521ADம் ஆண்டு யார்க் என்ற இடத்தில் கொண்டாடப்பட்டதாம்.
கீரீஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கிறிஸ்துமஸ் போனஸாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என்பது சட்டமாம்.
இயேசுவை சிறந்த மனிதர்களுக்கு(wisemen) வழிகாட்டிய Star Of Bethlehem என்பது ஒரு வால் நட்சத்திரம் அல்லது யுரேனஸ் கோள் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
Xmas என்று கிறிஸ்துமஸை குறிப்பிடுவது காலப்போக்கில் சமய சார்பற்றதாகவும், தவறானதாகவும் கருதப்படுகிறது. ஆனால் அது சரி தான். கிரேக்கத்தில் X என்ற வார்த்தைக்கு கிறிஸ்து என்று பொருளாம். எனவே Xmas என்பது மிகச் சரியானது.
உலகின் மிக உயரமான கிறிஸ்துமஸ் மரம் வாஷிங்டன் ஷாப்பிங் மால் ஒன்றில் 1950ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக