விநாயகர் பற்றிய 25 வழிபாட்டு தகவல்கள்
*🔔தடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றியை அளிப்பவர் கணபதி. விநாயகருக்கு உகந்த 25 வழிபாட்டு தகவல்களை அறிந்து கொள்ளலாம்.*
*🔔🐘🚩விநாயகர் 25🚩🐘🔔*
*🔔1. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை.*
*🐘துதிக்கையில் தண்ணீர்க்குடம்.*
*🐘 பின் இரண்டு கைகளில் அங்குசம், பாசம்.*
*🐘 முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.*
*🔔2. விநாயகரை ஒரு முறை வலம் வருதல் வேண்டும்.*
*🔔3. மகாபாரதத்தை வியாசர் சொல்லச் சொல்ல விநாயகர் எழுதினார்.*
*🔔4. விநாயகர் பயிர் தொழிலுக்குரிய தெய்வம் என்று சொல் லப்படுகின்றார். அதாவது பயிரை அழிக்கக் கூடிய பெருச்சாளியைத் தமது வாகனமாக்கி அடக்கி வைத்துள்ளார் என்பது இதன் பொருள்.*
*🔔5. விநாயகரின் வாகனங்கள் மயில், காளை, சிங்கம், யானை, குதிரை, பூதம் முதலியனவாகும்.*
*🔔6. வெள்ளிக் கிழமை தோறும் அருகம்புல், தேங்காய் ஆகியவற்றினைக் கொண்டு கணபதி ஹோமம் செய்து வந்தால், நீண்ட ஆயுளும், செல்வமும் கிடைக்கும்.*
*🔔7. விநாயகரின் மந்திரம் ஓம் கம் கணபதியே நமஹ என்பதாகும். காலை மாலை 108 தடவை இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் சகல நன்மைகளும் உண்டாகும்.*
*🔔8. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.*
*🔔9. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.*
*🔔10. விநாயகப் பெருமான் பிரணவம் ஆகிய ஓங்கார மந்திர சொரூபமாய் விளங்குபவர்.*
*🔔11.இப்வுலகில் விநாயகரின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்ந்தவர் புருசுண்டி என்ற முனிவர். இவர் விநாயகரைப் போல் துதிக்கையுடன் கூடிய தோற்றத்தில் காணப்பட்டார்.*
*🔔12. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.*
*🔔13. விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் காப்புதான் மிகவும் பிரியமானது.*
*🔔14. விநாயகர் ஏற்காத இலை துளசி இலை.*
*🔔15. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வை யார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்*
*🔔16. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.*
*🔔17. விநாயகர் புகழ் பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக சப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.*
*🔔18. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.*
*🔔19. விநாயகர் சதுர்த்தி விழா மராட்டியத்திலும், ஆந்திராவிலும் 11 நாட்கள் வழி பாடாகக் கொண்டாடப்படுகின்றது.*
*🔔20. பிள்ளையாருக்கு ஞானக்கொழுந்து என்றொரு பெயருண்டு. ஞானத்தை அருள்வதற்காக விநாயகர் அரச மரத்தடியில் அமர்ந்துள்ளார்.*
*🔔21. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.*
*🔔22. கணபதிக்கும், சனீஸ்வரனுக்கும் பிரியமானது வன்னி மரம். எனவே, வன்னிமர இலைகளால் விநாயகப் பெருமானை வழிபட்டால் சனிபகவான் தொல்லைகள் நீங்கும்.*
*🔔23. கணபதி வழிபாடு என்பது காணா பத்யம் என்றழைக்கப்படுகிறது. இது ஆதிசங்கரர் சிறப்பித்த வழிபாடு ஆகும்.*
*🔔24. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.*
*🔔25. விக்னம் என்றால் கஷ்டம். கஷ்டங்களை அகற்றுபவர் என்பதால் விக்னேஸ்வரர் என்கிற பெயர் விநாயகருக்கு ஏற்பட்டது.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக