விநாயகர் பற்றிய சுவாரசியமானத் தகவல்கள்
ஓம் கணபதியே நமஹ
👂. விநாயகர் என்றால் அவரை விட மேலான ஒருவர் இல்லை என்று அர்த்தமாகும்.
👂. மாதம் தோறும் பவுர்ணமி நான்காம் நாளான (நான்காம் பிறை) ஸ்ரீவிநாயகரை வழிபடுவோர் சங்கடம் நீங்கி, சந்தோஷம் அடைவர்.
👂. விநாயகர் பூஜைக்கு உகந்த மலர்கள் அருகம்புல், அரளி, நெல்லி, மரிக்கொழுந்து, ஜாதிமல்லி, வெள்ளெருக்கு, கரிசலாங்கண்ணி, எருக்கு, மாதுளை, புன்னை, மந்தாரை, மகிழம்பூ, வெட்டிவேர், தும்பை, சம்பங்கி, தாழம்பூ, முல்லை, கொன்றை, செங்கழுநீர், செவ்வந்தி, பவழமல்லி முதலியனவாகும்.
👂. விநாயகரின் ஐந்து கைகளில் உள்ளவை. 1) துதிக்கையில் தண்ணீர்க்குடம். 2) பின் இரண்டு கைகளில் அங்குசம் பாசம். 3) முன் கைகளில் வலது கையில் தந்தம், இடது கையில் மோதகம்.
👂. சிவபெருமான் உமாதேவியைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார். இதனைப் போன்றே விநாயகர் வல்லபையைத் தமது இடதுபாகத்தில் வைத்துள்ளார்.
👂. திருஞானசம்பந்தர் அன்பிலாந்துறை என்னும் தலத்துக்குச் சென்றபோது ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியது. இதனால் அவர் கரையில் இருந்தவாறே பதிகம் பாடினார். அதனைக் கேட்ட விநாயகர் செவிசாய்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.
👂. பல்லவர் காலக் கோவில்களில் பரிவார தேவதையாக முதன் முதலாக அமைக்கப் பெற்ற கணபதி காஞ்சி கைலாசநாதர் கோவிலில் காணப்படுகின்றார்.
👂. பஞ்சபூதத் தொடர்பு உடையவர் விநாயகர். இவர் அரச மரத்தடியில் ஆகாய வடிவாகவும், வாதநாராயண மரத்தடியில் வாயு வடிவமாகவும், நெல்லி மரத்தடியில் நீர் வடிவமாகவும், ஆல மரத்தடியில் மண்வடிவமாகவும் விளங்குகின்றார்.
👂. விநாயகர் உருவத்தில் எல்லா கடவுள்களும் உள்ளனர். நாபி - பிரம்ம உருவம், முகம் - விஷ்ணு, கண் - சிவரூபம், இடப்பாகம் - சக்தி, வலப்பாகம் - சூரிய ரூபம் என்று கருதப்படுகிறது.
👂. விநாயகரை வழிபடும் நாடுகள் சாவகம், பாலி, போர்னியா, திபெத், பர்மா, சியாம், சீனா, ஜப்பான், இந்தோனேசியா, கம்போடியா, மங்கோலியா, இந்தியா.
👂. பிள்ளையார் அழித்த அசுரர்கள் 1) அபிஜயன். 2) ஜ்வாலாமுகன். 3) துராசாரன். 4) சிந்து. 5) கிருத்திராசாரன் (6) குரோசுரன். 7) பாலாசுரன்.
👂. விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றோர் அவ்வையார், நம்பியாண்டார் நம்பி, சேந்தனார்.
👂. விநாயகரை வழிபட நல்லவாக்கு, நல்லமனம், லட்சுமி கடாட்சம் ஆகிய பலன்கள் கிடைக்கும்.
👂. வடக்கே விநாயகர் சதுர்த்தியை உருவாக்கியவர் பாலகங்காதர திலகர்.
👂. விநாயக ருத்ராட்சத்தின் மற்றொரு பெயர் எண்முக ருத்ராட்சம் ஆகும்.
👂. பிள்ளையார் அழித்த அரக்கிகள். 1) விரசை. 2) பிரமதை. 3) சிரம்பா.
👂. பிள்ளையார் சுழியில் உள்ள ஐந்தெழுத்துத் தத்துவம் நமசிவாய என்பதாகும்.
👂. விநாயகர் புகழ்பாடும் நூல்கள்: ஸ்ரீகச்சியப்ப முனிவர் அருளிய விநாயகக் கவசம், ஸ்ரீவிநாயக ஸப்தகம், ஷோடச கணபதி ஸ்துதிகள், ஸ்ரீகணேச புஜங்கம், ஸ்ரீகணேச பஞ்ச ரத்னம், ஸ்ரீகணேச வைகறைத் துதி, அவ்வையார் அருளிய விநாயகர் அகவல், ஸ்ரீகணேஷாஷ்டகம்.
👂. மராட்டியத்தில் தேங்காய்களை உடைத்து விநாய கருக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குகின்றார்கள்.
👂. மணிப்பூர் மாநிலத்தில் மைரி என்னும் மக்கள் மூங்கில் அரிசியைக் கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபாடு செய்கின்றார்கள்.
👂. வைணவ கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள விநாயகர் தும்பிக்கையாழ்வார் என்று அழைக்கப்படுகின்றார்.
👂. விநாயகப் பெருமான் சித்தி, புத்தி என்ற தம் மனைவியர் மூலம் உருவாக்கியவர் தான் சந்தோஷி மாதா ஆவார்.
👂. விநாயகர் ஐந்து கரங்களைக் கொண்டு விளங்குவதினால் "ஐங்கரன்'' என்று அழைக்கப்படுகின்றார்.
👂. புத்தர்கள் விநாயக வழிபாடு செய்கின்றார்கள்.
👂. சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் என்று தொடங்கும் பிரபலமான விநாயகர் துதி இடம்பெறுவது விஷ்ணு சகஸ்ர நாமத்தின் தொடக்கத்தில்தான். இந்தத் துதி பல்வேறு பூஜைகளுக்கும், நியமங்களுக்கும் தொடக்கத்தில் சொல்லப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக