செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

அம்மன், முருகன் வழிபாடு... இன்று அப்படி என்ன ஸ்பெஷல்?



அம்மன், முருகன் வழிபாடு... இன்று அப்படி என்ன ஸ்பெஷல்?

குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்கச் செய்யும் ஆடி செவ்வாய்...!


🙏 இன்று முருகனுக்குரிய சஷ்டி திதி மற்றும் அம்மனுக்கு உகந்த ஆடி செவ்வாய். இரண்டும் ஒன்று சேர்ந்து வரும் இந்நாளில் முருகன், அம்மன் வழிபாடு சகல சௌபாக்கியங்களையும் பெற்றுத்தரும்.

🌟ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கூழ் வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுதல் என பெண்கள் பக்தி மயமாக காட்சியளிப்பார்கள்.

🌟இந்த மாதத்தில் சுப நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து விட்டு முழுக்க, முழுக்க அம்மன் வழிபாட்டுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். குறிப்பாக ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும்.

🌟ஆடி செவ்வாய்க்கிழமையான இன்று (06.08.2019) அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆடி செவ்வாயின் விசேஷம் :

🌟பெண்கள் ஆடி செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று நம்புகின்றனர்.

🌟செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கௌரி விரதம் கடைபிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கைகூடும்.

🌟ஆடி செவ்வாய்க்கிழமைகளில் அன்னதானம் செய்தால், பிற நாட்களில் செய்வதைவிட அதிக பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

🌟ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், செவ்வாய் நீச்சமடைந்தவர்கள், செவ்வாய் திசை நடப்பவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருக்க வேண்டும்.

🌟ஆடி செவ்வாய்க்கிழமை விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையை பூஜிப்பது விசேஷமானது.

🌟பத்ரகாளி ராகுவாக அவதாரம் செய்தாள் என்பர். செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமண தடைப்பட்டவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க்கிழமைகளில் ராகுகாலப் பூஜைகளில் பங்கு பெறுவது நல்லது.
சஷ்டி...!!


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும். அத்தகைய ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது சஷ்டி விரதம்.

சஷ்டியின் சிறப்புகள் :

🌟 சஷ்டி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும்.

🌟 சஷ்டி திதி வேலைக்கு சேருதல், வீடு வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.

🌟 சஷ்டி விரதம் விரதங்களுள் மிகச்சிறப்புடையது. இந்த விரதத்தை மனதில் கொண்டே சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி எழுந்தது.

🌟 சஷ்டி விரதம் இருந்தால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக