செவ்வாய், 20 ஆகஸ்ட், 2019

கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : கிருஷ்ணரின் தலையில் நீங்கா இடம் பிடித்த மயிலிறகு!!


கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் : கிருஷ்ணரின் தலையில் நீங்கா இடம் பிடித்த மயிலிறகு!!

கிருஷ்ணர் தலையில் மயில் இறகு கிரீடம் ஏன்?

🌟 சத்தியத்தை காப்பதற்காகவும், அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும் மகாவிஷ்ணு எடுத்த ஒன்பதாவது அவதாரமே கிருஷ்ணாவதாரம். அன்றை தினமே கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

🌟 கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) வரும் ஆவணி மாதம் 6ம் தேதி வெள்ளிக்கிழமை (23.08.2019) அன்று கொண்டாடப்படுகிறது.

🌟 ஸ்ரீகிருஷ்ணரின் அடையாளமாக இருப்பது தலையில் உள்ள மயில் இறகு மற்றும் புல்லாங்குழல். கண்ணனின் இசைக்கு மயங்காத மனிதரே கிடையாது.

🌟 எப்போதும் குழலுடன் இருப்பதால் குழலூதும் கண்ணன் என்றே அழைக்கலாம். ஒரு புறம் குழல் என்றால் இன்னொரு புறம் மயில் இறகு.

🌟 கண்ணனின் அழகுக்கு அழகு சேர்ப்பது போல் இருப்பது இந்த மயில் இறகுதான். கிருஷ்ணருக்கு தலையில் மயில் இறகு கிரீடம் எப்படி வந்தது? என்று தெரிந்து கொள்வோம்.


புராணக் கதை :

🌟 கம்சனின் கொடுமை காரணமாக கிருஷ்ணருடைய பெற்றோர் சிறையில் வாடினர். தங்கத்தொட்டிலில் இட்டு சீராட்டப்பட வேண்டிய குழந்தை மூங்கில் கூடையில் கடத்தப்பட்டு கோகுலத்திற்கு எடுத்து செல்லப்படுகிறான்.

🌟 இதனால் ஆயர்பாடி புழுதியில் விளையாட வேண்டியவன் ஆகிறான். ஆனால் ராஜலட்சணம் பொருந்திய அவனது முகம் பார்ப்போரை எல்லாம் வசீகரித்தது.

🌟 அவன் புதுப்புது யுக்திகளைக் கையாண்டு சின்னச்சின்ன பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டான். இதை கண்ட ஆயர்பாடி சிறுவர்கள் கண்ணனை கௌரவிக்க விரும்பினார்கள். உடனே அங்கே சுற்றித்திரிந்த மயிலை பிடித்தார்கள்.

🌟 அதனிடம் இருந்து ஓர் இறகை எடுத்து கிருஷ்ணரின் தலையில் கிரீடம் போல் செருகினார்கள். அன்று முதல் கிருஷ்ணரின் தலைமுடியில் மயிலிறகு நீங்காத இடம் பிடித்தது.

கிருஷ்ண ஜெயந்தி பூஜையால் உண்டாகும் பலன்கள் :

🌟 கிருஷ்ண ஜெயந்தி பூஜையில் சிறுவர்கள் கிருஷ்ணரின் கதைகளை சொல்லி வழிபட்டால், கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவ-மாணவிகளுக்கு புத்தசாலித்தனம் கூடும். புரிந்து கொள்ளும் ஆற்றல் திறமை அதிகரிக்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக