செவ்வாய், 10 ஜனவரி, 2017

திரு”ஆருத்ரா “தரிசனம்

திரு”ஆருத்ரா “தரிசனம்..

11.01.2017 புதன்கிழமை
------------------------------------
இருபத்தியேழு நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்கள்தான் “திரு”என்று ஆரம்பிக்கும் அவை திருவாதிரை,திருவோணம்.முன்னது சிவனுக்கு உரியது மற்றொன்று விஷ்ணுக்கு உரியது.

தட்சாயண காலத்தின் இறுதி மாதமாகிய மார்கழி திங்களில் திருவாதிரை நட்சத்திரதன்று வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி அற்புதமான முத்தியரையுடன் எம்பெருமான் சிவன் காட்சியளிக்கும் தரிசனமே ஆருத்ரா தரிசனமாகும்.

ஆருத்ரா என்பது ஆதிரை ஆகும் அந்த திரு வாகிய சிவனின் தரிசனம் ஆருதரா தரிசனம்.

“திருவாதிரையில் ஒரு வாய் களி”என்பது பழமொழி விறகு வெட்டியாகிய சேந்தனின் பக்தியை மெச்சி,சிவனடியார் வேடத்தில் அவன் வீட்டில் களி தின்னதோடு மட்டுமல்லாமல்,மறு வேலைக்கு வாங்கி கொண்டார் சிவன்.

தில்லை கோயிலை திறந்த பணியாளர்கள் நடராஜரின் அருகில் களி கொட்டி கிடந்ததை பார்த்து ஆச்சரியப்பட்டு அரசரிடம் கூறுகிறார்கள்,

சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அரசர் அமைச்சருக்கு ஆணையிட்டார். ஆனால் அவரோ அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.

எம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது.

அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக "சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.

சேந்தனார் இறைவன் அருளால் "மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல" என்று தொடங்கி "பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது.

சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார். சேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும்,

இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களிபடைக்கபடுவதாகச் சொல்லப்படுகின்றது.திருவாதிரை நாளில் விரதம் இருந்து களி சாப்பட்டால் அளப்பறிய பலன் கிடைக்கும்.

நாளை  11-01-2017 புதன்கிழமை ஆருத்ரா தரிசனமாகும் அன்று விரதம் இருந்து சிவனை தரிசனம் செய்யுங்கள் உங்கள் பாவமெல்லாம் விலகி அளப்பறிய சந்தோசங்கள் கிட்டும்.

திருவாதிரைக்கு களி செய்வது எப்படி?
.

செய்முறை:

தேவையான பொருள்கள்:

பச்சரிசி - 2 கப்

வெல்லம் - 400 கிராம்

நெய் - கால் கப்

முந்திரி - 10

திராட்சை - 15

தேங்காய் துருவல் - அரை கப்

ஏலக்காய் பொடி - அரை மேசைக்கரண்டி

தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும். தேவையான இதரப் பொருட்களையும் தயாராய் வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் பச்சரிசியை போட்டு பொரிஅரிசியை போல 10 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் போட்டு ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு மாவு சலிக்கும் சல்லடையை விட சற்று பெரிய துளையுடைய சல்லடையில் போட்டு சலித்து, சல்லடையில் மீதம் இருக்கும் அரிசியை மீண்டும் மிக்ஸியில் போட்டு ரவை போல் அரைத்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். கொதித்ததும் அரை கப் தண்ணீரை எடுத்து வைத்து விடவும்.

பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரில், ரவை போல பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, நன்கு கைவிடாமல் கட்டிவிழாதவாறு 5 நிமிடம் கிளறவும்.

தண்ணீர் கொதிக்கும் நேரத்தில் வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லத்தை கிளறவும்.

வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்ததும், பாகு ஆவதற்கு முன்பதம் வரும் வரை கிளறவும். பிறகு அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளறவும்.

மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும் 10 நிமிடம் வேக விடவும். இடையில் அவ்வபோது கிளறி விடவும். ஏலப்பொடியை சேர்க்கவும்.

வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் போட்டு 3 நிமிடம் வதக்கவும்.

வதக்கியவற்றை களியுடன் சேர்த்து கிளறவும். மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து இறக்கி விடவும். மாவை தண்ணீரில் போட்ட பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து செய்யவும். கிளறும் போது களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி கிளறிக் கொள்ளவும்.

திருவாதிரை களி ரெடி. இதனை குக்கரில் வைத்தும் செய்யலாம். வெல்லபாகை ஊற்றி நன்கு கிளறிய பிறகு குக்கரை மூடி 2 நிமிடம் கழித்து வெய்ட் போட்டு, 2 விசில் வந்ததும் இறக்கவும். பிறகு வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும்.
ஏழு-கறி கூட்டு ::திருவாதிரை-

உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சேனைக்கிழங்கு, சக்கரைவள்ளிக் கிழங்கு - ஒவ்வொன்றும் 100 கிராம். [தோலுரித்துக் கொள்ளவும்]

வாழைக்காய் - ஒரு பாதி; பூசணி, பரங்கிக்காய், ஒவ்வொன்றும் ஒரு சிறு பத்தை

அவரைக்காய், புடலங்காய், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சைப்பட்டாணி, சௌசௌ, காரட் --- 100 கிராம் ஒவ்வொன்றும்.,

மொச்சை முதலான சில கொட்டை வகைகள், வேர்க்கடலை, கொத்துக்கடலை (முதல் நாளே ஊறவைத்துக் கொள்ளவும்) (ஒவ்வொன்றும் 1/2 கைப்பிடியளவு)

கறிவேப்பிலை

துவரம் பருப்பு ---- 3 டேபிள்ஸ்பூன்
புளி ---- எலுமிச்சம் பழ அளவு.
சாம்பார் மிளகாய்ப் பொடி ---- 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் ---- 1/2 டீஸ்பூன்
உப்பு,

அரைத்துக் கொள்ள --

தனியா 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு 1 டீஸ்பூன்
வெந்தயம் -- 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் -- 8 - 10
தேங்காய் துருவியது --- 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

தேங்காய் தவிர மற்றவற்றை சிவக்க வறுத்து, கடைசியில் தேங்காய் சேர்த்து வறுத்து, தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பை குக்கரில் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.

எல்லா காய்களையும் மீடியம் சைஸில் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

புளியை நன்கு கரைத்து, உப்பு கொஞ்சம் போட்டு, அதில் காய்களை போட்டு வேக விடவும்.

சாம்பார் பொடி, மஞ்சள் தூள் போடவும். சுமார் 15 நிமிஷங்கள் வேகட்டும்.

காய்கள் வெந்தவுடன், அதில் வெந்த துவரம்பருப்பை சேர்த்து, அரைத்த விழுதையும் சேர்க்கவும்.

உப்பு போடவும். கறிவேப்பிலை போட்டு எல்லாவற்றையும் நன்கு கிளறி விடவும்.

5 நிமிஷங்கள் கொதிக்கட்டும்.

எழுகறி கூட்டு தயார்.

திருவாதிரை நன்னாளில் களியோடு சேர்த்து சூடாக பரிமாறவும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக