ஆருத்ரா தரிசனம்
" ஆருத்ரா தரிசனம் " -
சென்றால்
வென்றிடலாம்,
செல்வோமா ??
ஓம் சிவசிவ ஓம் !!!
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஆன்மீக அன்பர்கர்களுக்கு வணக்கம்.
நாம் நலமுடன் வாழ , நல்வழியில்
செல்ல , நல்ல சிந்தனையுடன்
செயல்பட ஆன்மீக ஆராய்ச்சிகள் பல
செய்து முடிவுகளை கட்டுரையாக தந்து
கொண்டு இருக்கும் திரு அய்யா
சகஸ்ரவடுகர் அவர்களின் " ஆருத்ரா
தரிசனமும் அதனால் விளையும்
நன்மைகளும்" என்று நமக்கு
நல்லதொரு வழியினை சிவ
வழிபாட்டினால் இங்கு
விளக்குகிறார்கள்.
ஓம் சிவசிவ ஓம் !!
" ஆருத்ரா தரிசனம் " என்பது நாம் நன்கு
அறிந்ததே . மீண்டும் ஓர் நினைவூட்டல். மார்கழி
மாதம் - முழு நிலவாம் " பௌர்ணமி" அன்று
" ஆருத்ரா" எனும் " சிவ
பெருமானின் " நட்சத்திரம் அதாவது
'திருவாதிரை ' வருவது , நன்னாளில்
சிவபெருமான் அம்மையோடு தேரில் பவனி
வந்து மக்களுக்கு அருள் புரிவார்கள். இதில்
ஈச வடிவமானது திரு நடராசர்
அமைப்பாகும் எனவே தில்லை அம்பலம்
என்னும் ஆகாய தலமே இந்த ஆருத்ரா
தரிசனத்திற்கு பேரு பெற்ற
தலம் ஆகும். இறைவன் எங்கும் நிறைந்தவன்;
எதிலும் தெரிபவன் :
ஆருத்ரா தரிசனம் மற்றும் திருவாதிரை
களி குறித்த புராண கதைகள் :
தாருகா வனத்து முனிவர்கள்
சிவபெருமானை நிந்தித்து ஒரு
பெருவேள்வி நடத்தினர்.
சிவனார் பிச்சாடனர் வேடமேற்று பிச்சை
எடுக்க முனிவர்களின் இல்லங்களுக்குச்
சென்றார். முனிபத்தினிகள் தம்மை
மறந்து பிச்சாடனராகிய
சிவபெருமான் பின்னே
செல்லலாயினார். இதனால்
வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத
யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு
என்பவற்றைத் தோற்றுவித்து சிவன்பால்
ஏவினர். சிவனார் மதயானையைக்
கொன்று, அதன் தோலை அணிந்தார்.
மற்றவைகளைத் தானே தரித்துக்
கொண்டு முயலகன் மீது வலது
காலை ஊன்றி இடது காலைத் தூக்கி
நடனமாடி, முனிவர்களுக்கு உண்மையை
உணர்த்தினார். இதுவே ஆருத்திரா
தரிசனம் என்று
சொல்லப்படுகின்றது.
மார்கழி மாதத்தில் தில்லைச் சிதம்பரத்தில்
கோவில் கொண்டருளிய நடராஜப்
பெருமானைத் தரிசிக்க தேவர்கள்
வருவதாக புராணங்கள் கூறுகிறது.
தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப்
பொழுதாகும். இக்காலத்தில்
(வைகறையில்) சுவாமி தரிசனம் செய்வது
உத்தமமாகக் கருதப்படுகின்றது.
அக்காலத்தைப் பிரம்ம முகூர்த்தம்
என்று அழைப்பர்.
மார்கழி மாதம் திருவாதிரை நாளன்று
நடராசருக்குச் சிறப்புகள் நடைபெறும்.
அவற்றுள் சிதம்பரத்தில் நடப்பது மிகவும்
சிறப்புடையது. திருவாதிரை தினத்தில் தில்லை
நடராஜப் பெருமான் தேரில் வீதி வலம்
மக்களுக்கு அருள்பாலிப்பார்.
இக்காட்சியியைக் கண்டு தரிசிக்க
பிறநாடுகளில் இருந்து மக்கள் கூட்டம் இங்கு
வருவது நாம் அறிந்ததே. சிதம்பரம் பஞ்சபூதத்
தலங்களில் ஆகாயம் என்றும் நடராஜப்
பெருமானைத் தரிசிக்க முத்தி
கிடைப்பதாகவும்
சொல்லப்படுகின்றது.
( ஆன்றோர்களுக்கு நன்றி )
சேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர்
சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து
வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும்
ஒரு சிவனடியாருக்கு உணவளித்துப் பின்
தான் உண்டு உணவருந்துவார்.
ஒரு நாள் அதிகமாக மழைபெய்து
விறகுகள் ஈரமாயின அதனால் அன்று
அவரால் விறகு விற்க முடியவில்லை.
அதனால் அரிசி வாங்க காசு அவரிடம்
இல்லை. எனவே அன்று கேள்வரகில் களி
செய்து சிவனடியாரை
எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும்
தென்படவில்லை. மனம் நொந்த
சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த
விரும்பி நடராஜப் பெருமான் ஓர்
சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம்
ஏகினார். சேந்தனார் அகமகிழ்ந்து களியை
சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார்
களியை மிக விருப்பமுடன் உண்டதுமல்லாமல்
எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை
உணவிற்குத் தருமாறு வாங்கிச்
சென்றார்.
மறுநாள் காலையில் வழக்கம் போல்
திலைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில்
கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்;
நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச்
சிதறல்கள்.
மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச்
சிறிதும் அசையாது நின்றது. மக்கள் மிகவும்
மனவருந்தினார். அப்போது அசரீரியாக
"சேந்தா நீ பல்லாண்டு பாடு" என்று
கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத
யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப்
பெருமானைத் துதித்தார்.
சேந்தனார் இறைவன் அருளால்
"மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள்
வஞ்சகர் போயகல" என்று தொடங்கி
"பல்லாண்டு கூறுதுமே" என்று முடித்துப்
பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப்
பாடினார். உடனே தேர் நகர்ந்தது.
சேந்தனாரின் கால்களில் அரசரும்,
அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து
வணங்கினார்கள். அன்றைய தினம்
திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை
நாளில் நடராஜப் பெருமானிற்குக்
களிபடைக்கபடுவதாகச்
சொல்லப்படுகின்றது. (
ஆன்றோர்களுக்கு நன்றி )
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த
நன்னாளில் நமது கர்ம வினை நீங்கி நற்பேறு
பெரும் பொருட்டும் - தடைபட்ட
திருமணம் ; கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்க ; நோய் நொடியின்றி வாழ ;
நேர்மையான கோரிக்கைகள் இப்படி எல்லாவித
நலனும் கிடைக்க பின்வருவனவற்றை
வருகின்ற 26-12-2015 சனிக்கிழமை
அதிகாலையில் இருந்து - மதியம் 12
மணிக்குள் செய்ய யாவும்
பலிதமாகும் என்பது நமது அய்யா
சகஸ்ரவடுகரின் ஆராய்ச்சி பூர்வமான
உண்மை .
அதிகாலை நீராடி அருகில் உள்ள
சிவாலயம் சென்று முதலில்
வெளிபிரகாரம் ஒரே ஒரு முறை சுற்றி
பின் கொடிமரம் அருகில்
சென்று ஈசனிடம் மனதார வேண்டி
(நேர்மையான கோரிக்கைகள் ) பின்பு நேராக
கோவிலின் உள் சென்று
உட்பிரகாரதினை ஆறு முறை கட்டாயம்
சுற்ற வேண்டும் . இங்கு வேண்ட கூடாது ,
சிவ எண்ணத்திலே சுற்ற வேண்டும்
( யாரிடமும் பேச வேண்டாம் ).
சுற்றிய பின்பு கோவில் (கருவறை - நின்று தரிசிக்கும்
இடம் )உள்ளே சென்று உங்களது
பெயருக்கு அர்ச்சனை
செய்ய வேண்டும்.
சிவபெருமானுக்கு தான் அர்ச்சனை.
அர்ச்சனையை முடித்த பின்பு நமது பிரதான
கொள்கையாக நம் சகஸ்ரவடுகர்
அய்யா கூறிய அன்னதானம்
செய்ய வேண்டும் கட்டாயம் குறைந்தது 6
பேருக்கு செய்ய வேண்டும்.
சூட்சும வடிவில் சித்தர்களே வந்து
உண்பதாக அய்யா அவர்கள்
கூறினார்கள். அதனை விசேஷம் மிகுந்த
நாள் இந்த ஆருத்ரா தரிசன நாள். நம்
இன்னல் தீர்ந்து இறைபாதம் அடைய
இதைவிட எளிய வழி எங்கும் உண்டோ ??
ஆன்மீக ஆராய்ச்சியில் தன்னையே
அர்ப்பணித்து எங்களை போன்றோருக்கு
உதவும் அய்யா
சகஸ்ரவடுகர் அவர்களுக்கு நன்றிகள் பல!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக