ஜலந்திரன் துளசி_பிருந்தா தேவந்திரன் தவறு
ஒரு சமையம் இந்திரன் சிவபெருமானைச் சந்திக்க கைலாய மலைக்குச் சென்றார்.திகம்பரனாகக் காட்சி தரும் ஈசாரை அவரால் அடையாளம் காண முடியாததால் அவரை யார்?
என்று கேட்டார். மும்முறை கேட்டதும் பதில் ஏதும் இல்லாததால் தனது வச்சிராயுதத்தை சிவனார் மீது வீசிட .அவர் எந்திரனை உக்கிரமாக நோக்க,இநுதிரன் சாம்பலானார்.
இதனை அறிந்த தேவகுரு பிரகஸ்பதி ஒடோடி வந்து, கருனணக் கடலே! இந்திரன் செய்த தவறை மனித்து உயிர் பெற்று எழுந்திடக் கருணை காட்ட வேண்டும். உங்கள் கோபத்தைக் கடலில் தூக்கி எறிய வேண்டும் 'என்று வேண்டினார்.
*ஜலந்திரன் தோற்றம்*
பிரகஸ்பதியின் வேண்டுகோளை ஏற்ற சிவபெருமான் இந்திரனை உயிர்ப்பித்து தனது கோபத்தைக் கடலில் எறிந்தார். அது மீகப் பயங்கரமான ராக்ஷசக் குழந்தையாகி மூவுலகும் கேட்கும் அளவுக்கு அழுதது. அந்த அழுகையைக் கேட்டு பிரம்மா கடலுக்கு வர,சமுத்திர ராஜன் அக்குழந்தையை நான்முகன் மடியில் கிடத்தி பெயர் சூட்டி ஆசீர்வதிக்க வேண்டினான்.
அக்குழந்தை எழுந்து நான் முகன் கழுத்தைப் பிடித்துக் கொள்ள நான்முகன் திணறினார். கண்களில் நீர் தழும்பியது. எனவே குழந்தைக்கு ஜலந்திரன் என்று பெயர் சூட்டினார் பிரம்மன்.மேலும் அக்குழந்தைக்குச் ;சிவபெருமானால் மட்டுமே மரணம் ஏற்படும் வரம் கொடுத்து சென்றார்.
*ஜலநுதிரன் திருமணம் , திக் விஜயம்*
ஜலந்திரன்,காலநேமியின் மகள் பிருந்தையைத் திருமணம் செய்து கொண்டான்.அவள் ஒரு கற்புக்கரசி, கடலில் தோன்றிய அமிர்தம், கற்பகவிருட்சம் ஆகிய அனைத்தும் தனக்கே சொந்தம் என்றும்,அவற்றைத் திருப்பித் தருமாறும் இந்திரனிடம் கூற, இரு தரப்பினரும் போர் செய்ய, இந்திரனுக்கு உதவ எண்ணிய திருமாலை மகாலட்சுமி தடுத்து, கடலில் தோன்றிய ஜலந்திரன் தனக்கு உடன் பிறந்தவன் என்று கூறி தடுத்தாள்.
ஜலந்திரனிடம் திருமால் அவன் வலிமை கண்டு மகிழ்வதாகக் கூறி வேண்டும் வரம் கேள் என்று சொன்னார். திருமால் கபடம் அறிந்த அசுரன் அவரைப் பாற்கடலிலேயே பள்ளி கொண்டிருக்க இருக்க வேண்டும் என்று வரம் கேட்டார். தேவர்கள் நாரதர் உதவியை நாட அவர் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார்.
அப்போது ஈசனார் நாரதரிடம் ஜலந்தரனுக்குத் தன் மீது கோபம் உண்டாகும்படி செய்யுமாறும் மீதியை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
*நாரதர் சூழ்ச்சி*
ஜலந்தரனை அடைந்த நாரதர் அவனிடம் எல்லாச் செல்வங்களுடன்,உமா ரத்தினம் அவனிடம் இருந்தால் அவனது பெருமைக்கு ஈடு இனண ஏது?
என்று புகநழ்ந்தார். உடனே அசுரன் பார்வதியைத் தன்னிடம் ஒப்படைத்து விட்டால் எவ்விதத் தீங்கும் செய்வதில்லை என்று தூது அனுப்பினான்.
*போரில் சுக்கிரன்*
சிவபெருமானுக்கும் ,ஜலந்திரனுக்கும் கடும் போர் நடக்க, அசுர குரு சுக்கிராச்சாரியர் இறந்தவர்களை உயிர்ப்பித்தார். எனவே ,அவரை வசபடுத்த சிவபெருமான் ஒர் அழகியை அனுப்ப அவள் மாயையால் சுக்கிரனைத் தனது தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டு சென்றுவிட்டாள்.
மீண்டும் போர் நிலவ ஜலந்தரன் ஒரு மோகினியை சிவனாரை மயக்க அனுப்பி வைதுதான். அந்த நேரத்தில் அவன் கைலைக்குச் சென்று பார்வதியைக் கைப்பற்ற நினைக்கையில் அவள் மறைநுதுவிட்டாள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக