செவ்வாய், 3 ஜனவரி, 2017

வேடன் நளனான வரலாறு

வேடன் நளனான வரலாறு

அற்புதம் என்ற மலையில் ஆகுகன் என்ற வேடன்,அவன் மனைவி ஆகுகிடன் வாழ்ந்து வந்தான். அம் மலைக்கருகில் ஒரு சிவாலயம்.இந்தத் தம்பதியினர் அக்கோயிலுக்குத் தினமும்  செல்வர். கணவன் கோயிலுக்குள்ளும், மனைவி வெளியே இருந்தும் வழிபாடு செய்வர்.

ஒரு நாள் மாலை ஒரு யோகி அந்தச் சிவாலயத்துக்கு வந்து அங்குச் சிறிது நேரமு தங்கி இருந்தபோது ஆகுகி அவரைக் கண்டாள். வணங்கி அன்று இரவு அவள் இல்லத்தில் தங்கிச் செல்லலாம் என்று கூற அவர் மெளனம் சாதித்தார்.

அப்போது வேடன் தன் மனைவியிடம் யோகியார் குடிசைக்குள் உறங்கட்டும். நாமிருவரும் வெளியே இருப்போம் என்று கூறினான்.  இதனை கேட்ட யோகி பெண்பிள்ளை இரவில் விளியே தங்குவது சரியல்ல என்றார்.

இருதியில் முனிவரும் மனைவியும் உள்ள தங்கச் செய்து வேடன் வெளியில் காவல் இருந்தான்.அவ்வமயம் அங்கு வந்த ஒரு பெரிய புலி வேடனை க் கொன்று தின்று விட்டது.

காலையில் இதை பற்றி அறிந்த முனிவர் பெரிதும் வருந்தினார்.
அப்போது ஆகுதி அவள் கணவர் அந்தனருக்கு உதவி செய்து தனது உயிரை விட்டதால் மோட்சம் அடைவார் என்று மகிழ்ந்தாள். அவனைத் தொடர்ந்து தானும் உயிர்த் துறக்கத் துறவியின் அனுமதியை வேண்டினாள்.

அடுத்து கணவன் உடலுக்குத் தீமூட்டி அதில் தானும் தீக்குளிக்க முற்படுகையில்,சிவனார் காட்சி தந்து அவளைத் தடுத்து, அவள் அடுத்து விதர்ப்ப நாட்டு மன்னன்  மகள் தமயந்தியாய்ப்  பிறப்பாள் என்றும், அவள் கணவன்  நிடத நாட்டு மன்னன் நளனாய்ப் பிறப்பான் என்றும் கூறி சிவயோகியார்  அன்னப் பறவையாய் இருவருக்கும் மணம் முடிந்து வைப்பார். அவர்களுக்கு அடுத்த பிறவி ஏதும் இல்லை. மோட்சம் கிடைக்கும் என வரமளித்தார்.

அவ்வாறே மூவரும் நளன்,தமயந்தி, அன்னப்பறவையாகினர். அடுத்த பிறவியில் ,அந்த இடத்தில் சிவ பெருமான் அசுவேசுரர்;என்ற பெயரில் கோவில் கொண்டு திகழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக