கணேசர் கணேச காண்டம்
ஸ்ரீ கணேசர் வரலாற்றைக் கூறும் இப்பகுதி கணேச காண்டம் எனபடும். பிரகிருதி,கிருஷ்ணனை முன்னிட்டு விரதம் செய்து கணேசனை மகனாகப் பெற்றாள். உண்மையில் கிருஷ்ணன் தன்னில் ஒர் அம்சத்தையே கணேசராக மாற்றினார். மக்கள் க்ஷேமத்தை முன்னிட்டு அவரது வாழ்க்கை வரலாறு தரபடுகிறது.
நாரதர் வேண்டுகோளை ஏற்று நாராயணன் கணேச காண்டத்தைக் கூறினார்.
பார்வதி ;புண்யக விரதம், அனுஷ்டித்தாள்.கிருஷ்ணனே ஒரு குழந்தையாக அவள் படுக்கையில் தோன்றியது. பெற்றோர்கள் குழந்தையை வாரி எடுத்து முத்தமிட்டு முனிவர்கள்,பிராமணர்கள், யாசகர்களுக்குத் தானதர்மங்கள் செய்தனர்.இவ்வாறு கோலாகலமாக விழா நடைபெருகையில் சூர்ய புத்திரன் சனி அங்கு வந்தான். சனி குழந்தையைக் கண்டுகொள்ளாமலே இருக்க ,பார்வதி அது குறித்து சனியை கேட்டாள்.
*சனி மீது சாபம்*
அப்போது சனி, என் மீது ஒரு சாபம் இருக்கிறது. அதன் படி நான் எதை நோக்கினாலும் அது அழிய வேண்டும். சித்திரதன் என்ற கந்தர்வன் மகள் என் மனைவி. அவளை உதாசீனப்படுத்தியதால் அவள் இவ்வாறு எனக்கு சாப மிட்டாள் என்றான் சனி.
பார்வதியும் ,அங்குக் குழுமியிருந்த பெண்ங்களும் அதை கேட்டு நகைத்தனர். சனி கூறியதை சாதார்ணமாக எண்ணிப் பார்வதி சனியைத் தங்களைப் பார்க்கும் படி கூறினாலாள்.
*சனி பார்வை*
இதனால் உந்தப்பட்ட சனி குழந்தை மீது மட்டும் தன் பார்வையைச் செலுத்தினான்.நேரிடைப் பார்வையாக இன்றி ஒரக்கண்ணால் மட்டுமே பார்த்தான். அவன் பார்வை பட்டவுடன் பார்வதியின் மடியில் இருந்த குழந்தை தலையின்றி கிடந்தது. (கோலோகத்தில் கிருஷ்ணனுடன் தலை இனைந்து விட்டது. இதை கண்டு அனைவரும் திகைத்துவிட ,பார்வதி மயக்கம்முற்றாள்.
*கணேசனுக்கு தலை*
கிருஷ்ணன் கருடாரூடனாய் ஒர் ஆற்றாங்கரையில் ஜராவதம் உறங்கு வதைக் கண்டு அதன் தலையை சுதர்சன சக்கரத்தால் அகற்றி கைலாயம் அடைந்து தலையின்றிக் கிடந்த பார்வதியின் குழந்தையின் கழுத்தில் பொருத்தி உயிர் பெற செய்தார். பார்வதியும் மயக்கம் தெளிந்து எழ செய்தனர்.
*சனி ஊனமாதல்*
இந்நிகழ்ச்சியால் எல்லாறும் மகிழ்ச்சி கொண்டு விழா எடுத்து பிராமணர்களுக்கும் , முனிவர்களுக்கும் தாணம் தருமங்கள் அளித்துக் கொண்டாடினர். எனினும் ,சனி மீது பார்வதி கொண்ட கோபம் தனியவில்லை. அவள் சனியை முடமாக்கும் படி சபித்தாள்.
நடந்த சம்பவங்களுக்கு சனி காரணமில்லை என்றும், பார்வதியின் உந்துதலின் பேரிலேயின் குழந்தையை சனி பார்த்ததாகவும் கூறி ,தேவர்கள் பார்வதியைச் சமாதானபடுத்த முயன்றனர். அவள் சினம் சிறிது குறைந்தாலும் சனியின் ஊனம் முழுவதும் குணமாகாமல் அதன் பலன் சிறிது காணபட்டது.
குழந்தை கணேசனுக்கு பரிசுகள் குவிந்தனர். பிரம்மா கமண்டலம் தந்தார்.பிருதவி எலி வாகனம் அளித்தார். பார்வதி இனிப்பு தின்பண்டங்கள் தானியங்களாலான பணியாரம், கொழுக்கட்டை, பால்,தேன், பழம் ,நெய் ,தாம்பூலம் அளித்தாள்.
கணேசனை இமவானும்,மேனகையும்,பார்வதியும் பூக்கொண்டும் சந்தனம்,புனித நீர் படைத்தும் பூசித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக