செவ்வாய், 3 ஜனவரி, 2017

சிவாலயம் எழுப்பினால் பெறக்கூடிய மேன்மைகள்...

சிவாலயம் எழுப்பினால் பெறக்கூடிய மேன்மைகள்...

சிவாலயம் எழுப்புவதால் ஒருவன் பெறக்கூடிய மேன்மையை பற்றிச் சூத முனிவர் நைமிசாரணிய  முனிவர்களுக்கு கூறலாணார்.

(1)  சிவாலயம் எழுப்புபவன் தினமும் பெருமானை வழிபாடு செய்தால் உண்டாகும்  சிறப்பை அகைகிறான்.

(2)   அவன் குலத்தில் வாழ்ந்த நூறு தலைமுறையினர் சிவலோகம் செல்வர்.

(3)  சிவாலயம் எழுப்ப வேண்டும் என்று மனதால் நினைத்தாலே ஏழு பிறவிகளில் செய்த பாலங்களில் இருந்து விடுபடுவான்.

(4)   ஆலயம் கட்டி முடித்தால்  அதில் உள்ள கற்க்கள் ஒவ்வொன்றிர்க்கும்  ஒவ்வோரு ஆயிரம் ஆண்டுகள் சிவ லோகத்தில் இருக்கும் வேறு பெறுவர்.

(5)  சிவலிங்கத்தை உருவாக்குபவர் சிவலோகத்தில்  அறுபதினாயிரம் ஆண்டுகள் இருப்பார்.  அவனது தோன்றல்களும்  சிவலோகத்தை அடையும் புன்னியம் பெருவர்.

(6)   சிவாலயத் தொண்டுகளில் ஈடுபடு வோரை எமன் நெருங்கக் கூடா தென்று சிவ பெருமான் எச்சரித்து உள்ளார். அவர்கள் தலைமுறையினரைக் கூட  எமதூதர்கள் நெருங்க மாட்டார்கள்.

(7)  சிவாலயத்தில் உரிய பொருள்களால் அபிஷேகம் செய்து வழி படுபவன் ஆயிரம் பசுக்களைத் தானம்  செய்த பலனைப் பெறுவான்.

(8)  கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் சிவ லிங்கத்துக்கு  சிவ லிங்கத்துக்கு நெய் அபிஷேகம் செய்தால்  சர்வ பாவங்களும் விலகும்.

(9)   பெளர்ணமி, அம்மாவாசைகளிலும்  சிவ லிங்கத்திற்க்கு அபிஷேக ,ஆராதனைகள் செய்வோர்க்கும்  அத்தகைய பலனே கிடைக்கும்.

(10)   பிரதோஷ காலங்களில் நெய்யபிஷேகம்  செய்தால் அது தெரிந்தோ,தெரியாமலோ செய்த பாவங்களை நீர்மூலமாக்கும்.

(11)   பசும்பாலால் அபிஷேகம் செய்தால் சிவலோகமடைந்து  என்றும் மகிழ்சியாக இருப்பார்.

(12)  நவக்கிரகங்களும் அவனுக்கு அருள் புரியும்.

(13)  சிவ பெருமானை மனதிற்குகந்த மலர்களால் அர்சுனை செய்யலாம். உலர்ந்த வில்வமும் அர்ச்சனைக்கு உரியதே. (ஆனால்) தாழம் பூ அர்சுனைக்கு ஆகாது.

(14)  மலர்களுக்குப் பதில் பிருங்கராச பத்திரம்,அருகம்புல்  போன்றவற்றால் அர்சுனை செய்யலாம்.

(15)  புண்ணியக் காலங்களில்  சிவ பெருமானை வழிபடுவோர் தினசரி வழி பாட்டிலூம்  ஆயிரம் பங்கு  அதிகமாக பலன் பெருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக