வியாழன், 3 ஆகஸ்ட், 2017

108 தடவை ஐந்தெழுத்துடன் நம சிவாய மந்திரம்


108 தடவை ஐந்தெழுத்துடன் நம சிவாய மந்திரம்

சிவமது பெருங்கடல் மூழ்கி குளித்து
சிவமதில் தீவினை கழுவி களைந்து
சிவமதன் நெருப்பில் பாவம் எரித்து
சிவமதன் உடனே ஒளியாய் கலக்க

ஈசனின் நாமம் என்னில் முழங்க
மனமவன் நினைக்க வாய் புகழ் பாடும்
மெய் அவன் உணர்ந்து கண் ஒளி கூடும்
முக்கது நுகர காது அதில் ஒலியாய்

முச்சுடர் மன்னன் ஆடிடும் நடனம்
ஐந்து அவை புலனும் ஐந்து எழுத்தாக
மும்மலம் களைந்து முக்தி தரவே
முக்கண் முதலோன் என்னில் முழுதாய்

அனலும் புனலும் புவியதன் மண்ணும்
இன்னும் விண்ணும் காற்றும் ஐந்தோடு
உருவாய் நானும் கலந்தே வரவே
திருவைந்தெழுத்தை சிவனர் தரவே

ஐம்பெரும் பூதமும் என்னில் ஒன்றி
ஐம்புலன் அதனில் பிரிவிலா நின்று
ஐந்து முகத்தான் தாள் பணிந்தேற்றி
ஐந்தெழுத்தோதி நாளும் சிறப்பேன்

1.நமசிவாய புகழைத்தருக
2.நமசிவாய கல்வியைத்தருக
3.நமசிவாய வலிமையைத்தருக
4.நமசிவாய வெற்றியைத்தருக
5.நமசிவாய நன்மக்கள் தருக
6.நமசிவாய பொன்பொருள் தருக
7.நமசிவாய நல்லூண் தருக
8.நமசிவாய நல்விதி தருக
9.நமசிவாய நுகர்சியை தருக
10.நமசிவாய அறிவவை தருக
11.நமசிவாய அழகை தருக
12.நமசிவாய பெருமை தருக
13.நமசிவாய இனிமை தருக
14.நமசிவாய துணிவினை தருக
15.நமசிவாய நீண்ட நல் ஆயுள் தருக
16.நமசிவாய நோயின்றி காக்க
17.நமசிவாய சுவாசம் காக்க
18.நமசிவாய உதிரம் காக்க
19.நமசிவாய நாளங்கள் காக்க
20.நமசிவாய நாடிகள் காக்க
21.நமசிவாய நரம்புகள் காக்க
22.நமசிவாய தசைகள் காக்க
23.நமசிவாய சுரப்பிகள் காக்க
24.நமசிவாய குரல்வலை காக்க
25.நமசிவாய குதத்தை காக்க
26.நமசிவாய ஈரல் காக்க
27.நமசிவாய இருதயம் காக்க
28.நமசிவாய நுரையீரல் காக்க
29.நமசிவாய கல்லீரல் காக்க
30.நமசிவாய உள்ளுடல் காக்க
31.நமசிவாய புட்டம் காக்க
32.நமசிவாய முதுகினை காக்க
33.நமசிவாய எலும்புகள் காக்க
34.நமசிவாய வயிற்றினை காக்க
35.நமசிவாய மார்பினை காக்க
36.நமசிவாய சிறுநீரகத்தை காக்க
37.நமசிவாய கபாலம் காக்க
38.நமசிவாய என்தலை காக்க
38.நமசிவாய நெற்றியை காக்க
39.நமசிவாய புருவம் காக்க
40.நமசிவாய உருவம் காக்க
41.நமசிவாய கண்களை காக்க
42.நமசிவாய கண்மணி காக்க
43.நமசிவாய கண்ணிமை காக்க
44.நமசிவாய கருவிழிகாக்க
45.நமசிவாய விழித்திரை காக்க
46.நமசிவாய முக்கினை காக்க
47.நமசிவாய முகவாய் காக்க
48.நமசிவாய பற்கள் காக்க
50.நமசிவாய தாடைகள் காக்க
51.நமசிவாய கழுத்தை காக்க
52.நமசிவாய இருதோள் காக்க
53.நமசிவாய தோல்கள் காக்க
54.நமசிவாய கைகள் காக்க
55.நமசிவாய முழங்கை காக்க
56.நமசிவாய கைவிரல் காக்க
57.நமசிவாய நகங்கள் காக்க
58.நமசிவாய துவாரங்கள் காக்க
59.நமசிவாய தலைமுடி காக்க
69.நமசிவாய மணிக்கட்டு காக்க
70.நமசிவாய உள்ளங்கை காக்க
71.நமசிவாய கால்கள் காக்க
72.நமசிவாய முழங்கால் காக்க
73.நமசிவாய கீழ்க்கால் காக்க
74.நமசிவாய கணுக்கால் காக்க
75.நமசிவாய பாதம் காக்க
76.நமசிவாய கால்விரல் காக்க
77.நமசிவாய தொடைகள் காக்க
78.நமசிவாய ஆண்குறி காக்க
79.நமசிவாய விரையை காக்க
80.நமசிவாய விந்தினை காக்க
81.நமசிவாய நாபி காக்க
82.நமசிவாய நாக்கை காக்க
83.நமசிவாய வாக்கை காக்க
84.நமசிவாய உதடுகள் காக்க
85.நமசிவாய முழுதாய் காக்க
86.நமசிவாய ஆள்பவர் பணிய
87.நமசிவாய எதிரிகள் பணிய
88.நமசிவாய துரோகிகள் ஒழிய
89.நமசிவாய பகைவரும் அழிய
90.நமசிவாய சூனியம் எரிய
91.நமசிவாய பில்லியும் ஒட
92.நமசிவாய கூராய் தீட்டி
93.நமசிவாய வாளாய் ஆக்கி
94.நமசிவாய வில்லாய் ஏற்றி
95.நமசிவாய நானில் பூட்டி
96.நமசிவாய சிவனர் அருளளே

என்மேல் பகையோடு வருவோர் எல்லாம்
(97) நமசிவாய முடிக்கட்டும்

சூழ்ச்சி கொண்டு வருவோர் எல்லாம்
(98) நமசிவாய முறிக்கட்டும்

இன்சொல் பேசி இருமுகம் காட்டும் கூட்டம் எல்லாம்
எந்தனை அணுகா(99) நமசிவாய பிரிக்கட்டும்

அன்பின் மொழியை பேசிடும் மனிதர்களுடனே (100)நமசிவாய சேர்க்கட்டும்.
101.ஒம் நமசிவாய
102.ஓம் நமசிவாய
103.ஓம் நமசிவாய
104.ஓம் நமசிவாய
105.ஓம் நமசிவாய
106.ஓம் நமசிவாய
107.ஓம் நமசிவாய
ஒங்கியே ஒலிக்க
108ஓம் நமசிவாய


மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக