புதன், 9 ஆகஸ்ட், 2017

மிகப்பெரிய சிவாலயங்களில் ஐந்து நிலைகளில் நந்திகளை அமைத்திருப்பார்கள்.



மிகப்பெரிய சிவாலயங்களில் ஐந்து நிலைகளில் நந்திகளை அமைத்திருப்பார்கள்.

  அவை,
 1)இந்திர நந்தி
  2) பிரம்ம நந்தி
  3)ஆத்ம நந்தி
   4)மால் விடை நந்தி
   5)தரும நந்தி.

1) இந்திர நந்தி :-

    தேவலோகத்தின் தலைவனான இந்திரன் ரிஷப வடிவம் கொண்டு சிவபெருமானைக் தாங்கினான்.போகங்களின் அதிபதியாகிய இந்திரன் சொருபமான இந்த நந்தி போகநந்தி அல்லது இந்திர நந்தி என்று அழைக்கப்படும்.

     இந்நந்தி கோயிலுக்கு வெளியே சற்று தொலைவில் வீற்றிருக்கும்.

2)பிரம்ம நந்தி :-

  பிரம்ம நந்தி அல்லது வேத நந்தி என்று பெயர்.பிரமதேவன் ரிஷபம் வடிவம் கொண்டு சிவபெருமானை தாங்கியதால் இப்பெயர் ஏற்ப்பட்டது. "வேத வெள்விடை " என்றும் பெயர் உண்டு.

    பிரம்மம் என்பதற்க்கு அளவிட முடியாத பெருமைகளை உடையது என்று பொருள்.அதற்க்கு தகுந்தார் போல்  இந்த நந்தியை பிரம்மாண்டமாகவும், கம்பீரமாகவும் அமைப்பார்கள்.திருவிடைமரூதூர் சில கோயில்களில் சுதைகளில் அமைத்துள்ளனர்.இந்த நந்தி பெரிய மண்டபத்தில் அமைப்பார்கள்.

3)ஆன்ம நந்தி:-

    கோயில் கொடிமரம் அருகில் தலைமை நந்தியாக உள்ள நந்தி ஆன்ம நந்தி.

      ஆன்மாக்கள் (பசுக்கள்)பதியாகிய இறைவனை எந்நேரமும் சார்ந்து, சிவசிந்தனையில் நிலைபெற்றிருக்க வேண்டிய தன்மையை இந்நந்தி உணர்த்தும்.

     பிரதோஷ காலங்களில் இந் நந்திக்கே சிறப்பு வழிபாடுகள் செய்யப்படும்.

4)மால்விடை நந்தி.:-

        சிவபெருமான் திரிபுர சம்ஹாரம் செய்யும்பொழுது திருமால் விடை வடிவம் கொண்டு அவரை தாங்கினார். அதன் பொருட்டு தோன்றியது மால்விடை நந்தி என்ற திருமால் நந்தி.இதற்க்கு மால்வெள்விடை என்ற பெயரும் உண்டு.

        இந்த நந்தி சிவாலயத்தின் இரண்டாம் சுற்றில் அதாவது சக்தி பதத்தில் இறைவனுக்கு நேரே வீற்றிருப்பார்.

5) தரும நந்தி :-

   கருவரை அர்த்தமண்டபம் அடுத்த மஹாமண்டபத்தில் மிக சிறிய உருவில் உள்ள நந்தியே தரும நந்தி.

       இந்த உலகம் அழிந்து சிவபெருமானிடம் ஒடுங்கும் காலத்தில், தருமம் மட்டுமே நிலைபெற்றிருக்கும்.அந்நேரத்தில் அந்த தர்மம் விடை வடிவம் கொண்டு சிவபெருமானை  தாங்கும்.இவ்வகையில் தரும நந்தியானது இறைவனை பிரியாது அவனுடையே நிற்க்கும்.

      அதாவது தருமம் மட்டுமே சிவனோடு பிரியாது வீற்றிருக்கும் என்பதை உணர்த்தும் விதமாகவே சிவாலயங்களில் தரும நந்தி கருவரைலிங்கத் திருமேனி அருகில் முதன்மையாக வைக்கப்பட்டுள்ளது.

        இவ்வாறு ஐந்து நந்திகள் சிவாலயங்களில் அமைக்கும் மரபு உண்டு.இதில் மிகப்பெரிய. உண்மை தத்துவம் அடங்கியுள்ளது.

         சிவாலயத்திற்க்கு வெளியே இந்திர நந்தி எதை சுட்டுகின்றது என்றால், இந்திரனைப் போல் சுகபோக அதிபதியாக நீ இருந்தாலும் அந்நினைப்பை கோவிலுக்கு வெளியே விட்டுவிடு, என்பதை உணர்த்துகின்றது.

    அடுத்து கோயில் உள்ளே பெரியமண்டபத்தில் உள்ளது பிரம்ம நந்தி, எதை சுட்டுகின்றது என்றால் ,

      மனிதனுக்கு பணத்திற்க்கு அடுத்து ஏற்படும் கர்வம் கல்வி செருக்கு. ,

      நீ எவ்வளவு வித்தை, கல்வி, ஞானம் இருந்தாலும் அதாவது பிரம்மத்தை அறிந்தாலும் அதன்மூலம் சிவத்தை அடையமுடியாது என்று உணர்த்துகின்றது.அதாவது வித்யா கர்வத்தை அடக்குகின்றது.வித்தைக்கு கோயிலில் இடம் உண்டு என்பதால், இந்நந்தி கோயில் உள் உள்ளது.

       அடுத்து கொடிமரமண்டபத்தில் உள்ளது ஆன்ம நந்தி.

      கல்வி, செல்வம் என்ற இரண்டு செருக்குகள் நீங்கிவிட்டால் உயிரானது இறைவனை அடையும் பக்குவநிலையின் முதல் படிக்கு வந்துவிடுகின்றது.இந்நிலையில் உள்ள உயிருக்கு இடைவிடாத சிவதரிசனமும், சிவசிந்தனையும் தேவை.இதனை உணர்த்தும் விதமாகவே ஆன்ம நந்தி மூன்றாவதாக கொடிமரம் அருகில் வீற்றிருக்கும் நிலையில் அமைத்துள்ளனர்.

       அடுத்து  இரண்டாவது பிரகாரத்தில் உள்ள நந்தி மால்விடை நந்தி.

      மால்விடை நந்தி எதை சுட்டுகின்றது என்றால், ஆன்மாவனது பக்குவம் பெற்று சிவபக்தராகும் அமைப்பை உணர்த்துவது.சிவபக்தர்களில் முதன்மையானர் திருமால் என்பதும் சிந்திக்கதக்கது.மேலும் திருமால் நந்தி வீற்றிருப்பது சக்தி பதம்.சித்தாந்த நிலையில் சத்திநிபாதம் உணர்த்துவது.

   நிறைவாக உள்ள தருமநந்தி.ஆன்மா பக்குவம் பெற்று, சிவபக்தராய் அருள்பெற்றாலும், தருமநிலையே இறைவன் திருவருளை முழுமையாக அடையச் செய்யும் என்பதை உணர்த்துவது.

         இறுதில் தர்மமே ரட்சிக்கும்.தர்மத்தை மீறிய.  வழிபாடு எதுவும் இல்லை என்பதை உணர்த்துவது.
சிவார்ப்பணம்.

அன்பே சிவம்.... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக