ருத்ராட்ச முகங்களும் அதற்குரிய நட்சத்திரங்களும்!
ருத்ராட்சத்தை உருவாக்கியவர் சிவபெருமான். ருத்ராட்சத்தில் ஒருமுகம் முதல் பலமுகம் கொண்ட ருத்ராட்சங்கள் இருக்கின்றன. ருத்ராட்சத்தை வயது வரம்பில்லாமல் மொழி, இனம், தேசம், ஆண், பெண் என்கிற பேதமில்லாமல் யார் வேண்டுமானாலும் ருத்ராட்சத்தை அணியலாம்.
குழந்தைகள் ருத்ராட்சம் அணிந்து கொள்வதால் அவர்களின் படிப்புத் திறமை பளிச்சிடும். ருத்ராட்சத்தை பெண்கள் அணிந்துக் கொண்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். மேலும் இல்லத்தில் லட்சுமி கடாட்சமும் நிறைந்திருக்கும். ருத்ராட்சம் அணிவதால் மனமும், உடலும் தூய்மை அடைகின்றது.
ருத்ராட்சத்தை அணியும்போது எத்தனை முகம் கொண்ட ருத்ராட்சம் ஏற்றது என்பதை அறிந்து அணிய வேண்டும். அந்த வகையில் ஜோதிட ரீதியாக பார்க்கும்போது மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒன்றில்தான் பிறந்திருப்பார்கள்.
இந்த 27 நட்சத்திரத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த முகம் கொண்ட ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
1. அஸ்வினி - 9 முகம்.
2. பரணி - 6 முகம், 13 முகம்.
3. கார்த்திகை - 12 முகம்.
4. ரோஹிணி - 2 முகம்.
5. மிருகசீரிஷம் - 3 முகம்.
6. திருவாதிரை - 8 முகம்.
7. புனர்பு சம் - 5 முகம்.
8. புசம் - 7 முகம்.
9. ஆயில்யம் - 4 முகம்.
10. மகம் - 9 முகம்.
11. புரம் - 6 முகம், 13 முகம்.
12. உத்திரம் - 12 முகம்.
13. ஹஸ்தம் - 2 முகம்.
14. சித்திரை - 3 முகம்.
15. சுவாதி - 8 முகம்.
16. விசாகம் - 5 முகம்.
17. அனுஷம் - 7 முகம்.
18. கேட்டை - 4 முகம்.
19. மூலம் - 9 முகம்.
20. புராடம் - 6 முகம், 13 முகம்.
21. உத்திராடம் - 12 முகம்.
22. திருவோணம் - 2 முகம்.
23. அவிட்டம் - 3 முகம்.
24. சதயம் - 8 முகம்.
25. புரட்டாதி - 5 முகம்.
26. உத்திரட்டாதி - 7 முகம்.
27. ரேவதி - 4 முகம்.
27 நட்சத்திரங்களில் அவரவர் பிறந்த நட்சத்திரத்திற்கு குறிப்பிட்டுள்ள ருத்ராட்ச முகங்களை அணிந்து கொண்டால் சிவபெருமானின் அருளால் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வாழலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக