தமிழ் மாதம் பன்னிரண்டிலும் செய்ய வேண்டிய தானங்கள்
1. சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்
2. வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்
3. ஆனி – தேன்
4. ஆடி – வெண்ணெய்
5. ஆவணி – தயிர்
6. புரட்டாசி – சர்க்கரை
7. ஐப்பசி – உணவு, ஆடை
8. கார்த்திகை – பால், விளக்கு
9. மார்கழி – பொங்கல்
10. தை – தயிர்
11. மாசி – நெய்
12. பங்குனி – தேங்காய்
மேற்கண்ட இந்த தானங்களை அந்தந்த மாதத்தில் சரியானபடி செய்தால் துக்கங்கள் தீரும். அத்துடன் நன்மைகள் பல உண்டு.
இது தவிர...
1. திருநீற்றை வில்வ பழ ஓடில் வைத்து பூசி கொள்ள சிவ கதி எளிமையாகக்
கிடைக்கும்.
2. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் தவிர மற்றவர் தண்ணீரில்
திருநீற்றை குழைத்து பூசிக் கொள்ளக் கூடாது.
3. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யக் கூடாது (ஆகம முறைக்கு உட்பட்டது )
4. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றிக் காண்பிக்கக் கூடாது
5. நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக