சனி, 26 ஆகஸ்ட், 2017

நெருப்பில் முடி பொசுங்ககூடாது என்று கூறுவதின் ரகசியம்...



நெருப்பில் முடி பொசுங்ககூடாது என்று கூறுவதின்  ரகசியம்...


*இன்றளவும் கிராமப்புரங்களில்நெருப்பில் முடி பொசுங்க கூடாது எனக்கூறுவார்கள்.*

*அதுவும் வீட்டினுள் நெருப்பில் தெரிந்தோ, தெரியாமலோ வெட்டப்பட்ட உதிர்ந்த முடிகள் எரியக்கூடாது, மகா தரித்திரம் அப்போதே பிடிக்கும் எனபார்கள்.*

*இதன் ரகசியம்தான் என்ன?*

*கைமுடியானாலும். தலைமுடியானாலும். பறவைகள். மிருகங்கள் முடியானாலும்,வெட்ட வெட்ட வளரக்கூடியது.*

*அதில் ரத்தம் உண்டு, பார்ப்பதற்கு தெரியாது.*

*ஆனால் அது தீயில் பொசுங்கும் போது தெரியும், அதன் வாடையே அதற்கு சாட்சி*

*ஒரு உயிரை எரிக்கும் போதும். முடியை எரிக்கும்போதும் ஒரே வாசனை (வாடை) வரும்.*

*இந்த துர்நாற்றம் லட்சுமி வாசம் செய்வதற்கு ஏற்றதல்ல*

*அதனால்தான் அக்காலத்திலேயே பிணத்தை எரிப்பதானாலும் ஊரின் மேற்கே (காற்று திசையில்) கொண்டு சென்று எரித்தார்கள்.*

*இந்த வாடையை முகர்ந்தவர் யாரானாலும் 16-நாள் தொடர்ந்து தலைக்கு குளித்து வர வேண்டும், இல்லையேல் தரித்திரம் தான் பிடிக்கும்.*

*முடியானாலும் இதே நிலைதான், அதுமட்டுமல்ல கருவாடு. இறைச்சி எந்த வீட்டில் தீய்ந்து போகிறதோ அந்த வீடும் வெகுவிரைவில் கீழ்நிலைக்கு வரும்.*

*தீப்புண் பட்ட குடும்பமும் தரித்திரத்திற்கு ஆட்பட்டு பின்புதான் மீளும்.*

*அதே போல் கொசுவானாலும் வீட்டில் இறக்கலாம், ஆனால் தீய்ந்து போகக்கூடாது.*

*இப்போது நவீனமாக கொசுவை கொள்ள எலக்ட்ரானிக் பேட் வந்துள்ளது.*

*இதை பலரும் பயன்படுத்துகிறார்கள், இந்த பேட்டில் கொசு தீய்ந்து போகிறது, குடும்ப சுகமோ செல்வமோ குறைந்து கொண்டே வருகிறதை ஆய்வு மூலம் பலரிடம் கண்டுபிடிக்கபட்டுள்ளது.*

*ஓட்டல்களில் ஈ தொல்லை தீர ஒரு நீலவண்ண மின்சார குழல் விளக்கு எரியும்.*

*அதன் ஈர்ப்பு ஈ. கொசு. சிறு வண்டுகளை கவர்ந்து ,அந்த விளக்கை சுற்றி சுற்றி வரும்.*

*அதற்காகவே அந்த குழல் (டியூப் லைட்) விளக்கின் பக்க வாட்டில்  மின்சார ஹீட்டர் பொருத்தி இருப்பார்கள்.*

*அதில் அகப்பட்டு அனைத்தும் பொசுங்கும்.*

*அதை பொருத்தி  இருந்த பல ஓட்டல் உரிமையாளர்கள் அழிந்து போய் இருக்கிறார்கள்.*

*அதாவது செல்வமற்று. சுகமற்று. கடன்பட்டு. தொழில் கைமாறி ஓடும் அளவிற்கு தரித்திரம் ஆட்கொண்டதை ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.*

*நரிக்குறவர்களை கடந்த காலங்களில் கவனித்திருந்தீர்களேயானால் எந்த இறைச்சியாகட்டும் தீயில் பொசுக்கி சாப்பிடுவார்கள்.*

*அதனால் அவர்கள் நாடோடி வாழ்க்கையுடன் யாசகம் பெற்றே உயிரையும். உடலையும் வளர்க்க வேண்டியதாயிருந்தது.*

*அந்த அளவிற்கு தரித்திரம் அவர்களை ஆட்கொண்டது.*

*அதே நேரத்தில் இன்றைக்கு அவர்களை பார்த்தீர்களேயானால் இறைச்சியை சுட்டு பொசுக்கி தின்னும் பழக்கத்தை நாட்டு சூழ்நிலையால் விட்டு விட்டார்கள்.*

*இப்போதைக்கு அவர்கள் நன்றாகவே வளர்ச்சி கண்டிருக்கிறார்கள்.*

 *அன்றைக்கு செய்த அதே தொழில்தான் இன்றைக்கும் செய்கிறார்கள்.*

*அன்றைக்கு அவர்களுடைய பழக்கம் இறைச்சியை சுட்டு பொசுக்கி தீய்த்து சாப்பிட்டார்கள், தரித்திரம் பிடித்திருந்தது.*

*அதை மாற்றிக் கொண்டு கிடைத்த இறைச்சியை சமைத்து சாப்பிடுகிறார்கள், பெரும் தரித்திரத்தில் இருந்து மீண்டு சாதாரண தரித்திர நிலையில் உள்ளார்கள்.*

*இதுதான் வித்தியாசம்.*

*ஆக முடி. நகம். இறகு , உரோமம். சதைகள் தீயில் கருகினால் அது வீடாக இருந்தால் மகா தரித்திரம் பிடிக்கும்.*

 *காடாக இருந்தாலும் இவைகள் பொசுங்குவதை அடிக்கடி முகரும்படி ஆட்படாதீர்கள் ,கவனமாக இருங்கள்.*

 *சாதாரண சைவ சமையல் செய்யும்போது கூட கடாய் தீயக்கூடாது என்பார்கள்.*

*கடாயில் அடியில் தீய்ந்து போனதில் சாப்பாடு சாப்பிடக்கூடாது, தரித்திரம் பிடிக்கும் என்பார்கள்.*

*இவைகளெல்லாம் மறுக்க முடியாத உண்மையே.*

*நெருப்பில் முடி பொசுங்குதல் , கடாய் தீய்ந்து போகுதல் போன்ற சூழலில் ஏழைகள் இயல்பாகவே ஆட்படுகிறார்கள்.*

*இதன் காரணமாகவே அவர்கள் கடைசி வரை ஏழையாய் இருக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.*

*யாகம் வளர்க்கும் போதும் கூட யாக தீயில் முடியோ,பூச்சிகளோ விழுந்து தீய்ந்து போனால் நிச்சயம் முழு பலன் கிடைப்பதில்லை.*

 *இது தெரியாமல் நிகழக்கூடிய நிகழ்வானாலும் அதன் துர்நாற்றம் (வாடை) லட்சுமி கடாட்சத்தை விலக்கி விடும்.*

 *நம் கையில் உள்ள ரோமம் தீ பட்டு லேசாக பொசுங்கினாலும் உடனே அவ்விடத்தில் மஞ்சள்தூள் குழப்பி பூசி விடவேண்டும்.அப்போதுதான் தரித்திரம் பிடிக்காது.*

 *எந்த ஒரு தரித்திர தீட்டிற்கும் மஞ்சள் நீர் சிறந்த பரிகாரமாகும்.*

*தலையில் எண்ணெய் தேய்க்கும் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் தலையணையிலோ அதன் உறையிலோ மேற்புறத்தில் எண்ணெய் படிவம்  படிந்துஇருக்கும்.*

*மற்ற எண்ணெய்க்கும் முடியில் ஊறிய எண்ணெய்க்கும் முகர்ந்து பார்த்தால் வாடையில் வித்தியாசம் தெரியும்.*
*( சிக்கு வாசனை என்பார்கள்)*

*அந்த தலையணையை நெருப்பில் எரிக்கக்கூடாது, பயன்படுத்திய பின் பழுதானால் தூக்கி போட்டு விடலாம்,*

 *ஆனால் நெருப்பில் போடக்கூடாது,*
 *மகா தரித்திரம் பிடிக்கும்.*

 *நம் முடி எண்ணெய் பட்ட எந்த துணியும் எரியவிடக்கூடாது.*

*போகி பண்டிகை அன்று சிலர் பழைய துணி தலையணை இவைகளை எரிப்பதுண்டு.*

*அதில் இதுபோல எண்ணெய் துணி எரிந்தால் மகா தரித்திரம் அவரை வந்து அடையும்.*

*எனவே கவனமாக இருக்கவும்.*

*பொறுமையைவிட மேலான தவமுமில்லை*
*திருப்தியை விட மேலான இன்பமுமில்லை*
*இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை*
*மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை.*

*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்.*

*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*
                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக