வர லட்சுமி விரதம்
விரதங்கள்
முற்பிறவியின் செயல்களால் இப்பிறவியில் உண்டாகும் தடைகள், தோஷங்கள், பிணிகள், கவலைகள் நீங்கி தெய்வத் திருவருள் பெறுவதற்கு வழிபாடுகள், விரதங்கள் பெரிதும் துணை நிற்கின்றன. ‘வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை வளமும், நலனும், ஞானமும் விரதங்களால் கிடைக்கின்றன’ என்று புராணங்கள் கூறுகின்றன. ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சௌபாக்கிய யோகம் கிடைக்கவும், மன அமைதி, சந்தோஷம் ஏற்படவும் பலபூசை, சடங்குகள் இருக்கின்றன. வரலட்சுமி நோன்பு (வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம்) என்பது பதினாறு வகை செல்வங்களுக்கும் அதிபதியான லட்சுமியின் அருள் வேண்டிடும் இந்துக்களின் நோன்பாகும்.
ஆவணி வெள்ளி
பொதுவாக வரலட்சுமி விரத பூசையை, ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமை அன்று செய்கிறோம். கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலிபாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைப்பிடிக்கின்றனர். கேட்கும் வரங்களைத் தரும் லட்சுமி தேவியை பூஜித்தல் இதன் சிறப்பு . திருமணமான பெண்கள், தங்கள் திருமணத்தை அடுத்துவரும் வரலட்சுமி பூஜையிலிருந்து இதை ஒவ்வொரு வருடமும் செய்யவேண்டும். வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம். இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம். மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
எளிய முறையிலான பூசை
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், தெரிந்த பாடல்களை ஈடுபாட்டோடுப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடைக் கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி, தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
தோரக்ரந்தி பூசை
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீர லட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டுவகை செல்வங்களை வாரி வழங்குபவள் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த அஷ்ட லட்சுமிகள்தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். அஷ்ட லட்சுமிகளும் திருமாலிடம் அடைக்கலம் பெற்றிருப்பதால் அவரை லட்சுமிபதி என அழைப்பர். இந்த அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் உள்ளதாக சாத்திரம் சொல்கிறது. எனவே வரலட்சுமி பூஜை தினத்தன்று ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பூஜை ``தோரக்ரந்தி பூசை’’ என்று அழைக்கப்படுகிறது.
விரிவான வழிபாடு
சாத்திரப்படி முறையாக விரதமிருந்து பூஜையைச் செய்ய விரும்பினால், விக்னேஸ்வர பூசை தொடங்கி, சங்கல்பம், கலச பூஜை, பிராணப்ரதிஷ்டை, தியானம், ஷோடசோபசாரம், அங்க பூஜை, லட்சுமி அஷ்டோத்ரம் (108 மந்திரங்கள்), தோரக்ரந்தி பூசை, பிரார்த்தனை, ஆரத்தி என்று விரிவாகச் செய்ய வேண்டும். தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அருகில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்டிக்கலாம்.
பூசைக்குத் தேவையானவை
மஞ்சள் பொடி (பிள்ளையார் பிடிக்க), நுனிவாழை இலை, அரிசி, தேங்காய், எலுமிச்சம்பழம், குங்குமம், சந்தனம், புஷ்ப வகைகள், வெற்றிலை, பாக்கு, பழம், கற்பூரம், ஊதுபத்தி, சாம்பிராணி, அட்சதை, வஸ்திரம், மஞ்சள் சரடுகள், பஞ்சாமிர்தம், குத்துவிளக்கு, திரிநூல், நல்லெண்ணெய், தீப்பெட்டி, தாம்பாளம், பஞ்சபாத்ரம், உத்தரிணி, கிண்ணம், கற்பூரத் தட்டு, தூபக்கால், தீபக்கால், மணி ஆகியவை தேவைப்படும். நிவேதனப் பொருள்களாக பொங்கல், பாயசம், அப்பம், வடை, கொழுக் கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகியவையும், பழ வகைகளில் ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழை, திராட்சை... போன்றவையும் படைக்கலாம்.
பூசைக்கான முன் ஏற்பாடுகள்
இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர். வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூசைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும். நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும். அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கலசத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, கலசத்தைப் பட்டாடையால் அலங்கரித்து, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) கலசத்தில் உள்ள தேங்காயில் வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும். அல்லது பூஜை அறையை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலைக் கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.
பூசையை மேற்கொள்தல்
ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம். மாலையில் சந்திரன் உதயத்திற்குப் பின் சூரிய அஸ்தமன காலத்தில் தலைவாசலில் தீபம் ஏற்றுதல் நன்று. அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகேநின்று வெளியில் நோக்கி கற்பூரஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூசையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும்.
லட்சுமி கடாட்சம்
பரிபூரண அருள் இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம்குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி சொல்லலாம். மஞ்சள் சரட்டைக் குங்குமத்தில் வைத்து கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்கி, தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும், எங்களுக்கு எல்லா வளங்களையும் தரவேண்டும் என்று வேண்டிக் கொள்ளவேண்டும். தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைக்க வேண்டும். பின்னர் பூசையை நிறைவு செய்யவேண்டும். குடும்பத்தில் மூத்த சுமங்கலிப்பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம்பெண்கள் அவர்களிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமிவிரத பூசையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் நிச்சயம் கிடைக்கும்.
பூசைக்கு உதவும் எளிய மந்திரம்
1. சகலசித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
3. ராஜமரியாதை தரும் கஜலட்சுமியே போற்றி!
4.செல்வச் செழிப்பைத் தரும் தனலட்சுமிய போற்றி!
5. தான்ய விருத்தியளிக்கும் தான்யலட்சுமியே போற்றி!
6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்- விஜயலட்சுமியே -போற்றி!
7. சவுபாக்கியங்கள் தரும் மகாலட்சுமியே போற்றி!
8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும் வீரலட்சுமியே போற்றி!
9. அனைத்து நன்மைகளையும் வரமாகத் தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!
மாங்கல்ய பாக்கியமும் ஐஸ்வர்யங்களும்
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தை களுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். வரலட்சுமி நோன்பைக் கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.
பொன்மழை
ஆதிசங்கரர் பிச்சை ஏற்கச் சென்ற வீட்டில் ஏழைத் தம்பதியர் உணவிற்கு வழியின்றி நெல்லிக்காயைப் பிச்சையிட, மனம் பொறுக்காமல் அன்னை மகா லட்சுமியை வேண்டி கனகதாரா தோத்திரத்தைப் பாட, அன்னை மகாலட்சுமி அந்த ஏழைத் தம்பதியர் குடிலில் தங்க (நெல்லிக்காய்) மழையாகப் பெய்து அவர்களை வளமாக வாழச் செய்தாள்.
லட்சுமி வந்தாள்: பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர நாட்டின் மன்னன்; அவனது மனைவி குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகளுடன் நல்ல அழகும் கொண்டவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள்.
கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதாரத் தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது முறையாகுமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, வெளியேற்றினாள்.
நல்லதைக் கற்பியுங்கள்: கலங்கிய கண்களுடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள். ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்காக என்னை அடித்துத் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை அமர வைத்து, உபசரித்து, “எனக்கு அந்த நல்லதைச் சொல்லிக் கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாட வேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாமல் வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள்.
தளர்ச்சியும் வளர்ச்சியும்
லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் வருந்திய மன்னன், இராச்சியம் தன் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்தான். புகுந்தவீடு சென்ற பின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்குச் செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்குள் ஓடிஒளிந்தனர்; உணவுக்கு வழியற்று திரிந்தனர். செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன்சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன. ஒருநாள், தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக்கொடுத்து, “இதை வைத்துக் கொண்டு எங்காவது சென்று பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள்.
மகளின் உதவி
சியாமா அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொற் காசுகளுக்கு பதில் கரித்துண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனான்; மகளுக்கும் தெரியப்படுத்தினர். உடனே, தன்தாய் மகாலட்சுமி தேவியை அவமதித்தது சியாமாவின் நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவு படுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக் காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளைச் சொல்லிக் கொடுத்தாள்.
தைரிய லட்சுமி
அதன்படியே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்குநாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரியலட்சுமி குடியேறியதால், தன் ஆதரவாளர் களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். வரலட்சுமி விரதத்தால் பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.
தேவர்குல பெண் நீதிபதி
சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அன்னை பார்வதிதேவி அவளைத் தொழு நோயாளி யாகும்படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்து வணங்கினாள். வரலட்சுமி விரதத்தைக் கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள்செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒருகுளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூசை செய்து சாபம் நீங்கப்பெற்றாள்.
விரதத்திற்கு ஈடு
கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி புண்ணிய நதிகளில் தீர்த்த மாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். மாமனார் மற்றும் மாமியாருக்குப் பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வர லட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகதநாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களைக் கடவுளின் வடிவமாகக் கருதி அவர்களுக்குப் பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில்:
தேவஸ்தானம் சார்பாக ஆண்டு தோறும் ஸ்ரீமகாமாரியம்மன் கோயிலில் ஸ்ரீ வரலட்சுமி விரதம் பூசை சிறப்பாக நடை பெற்று வருகிறது. இவ்வாண்டு 28.08.2015 வெள்ளிக்கிழமை மாலை 4,30 மணிக்கு அபிசேகம்; 5.30 மணிக்கு பூசை; இரவு 7.00மணிக்கு திருவிளக்கு வழிபாடு ஆரம்பம், இரவு 8.30 மணிக்கு சிறப்பு பூசை, தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடைபெறும்.
திருவிளக்கு வழிபாட்டில் கலந்துகொண்டு பூசை செய்பவர்களுக்குத் தேவையான பூசைப் பொருட்களான அகல்விளக்கு, அரிசி, மஞ்சள், எண்ணெய் திரிநூல் மற்றும் மங்கலப் பொருட்கள் கோயிலில் வழங்கப்படும். குடும்பத்தில் அனைவர் நலம்கருதி மகளிர் அனைவரும் திருவிளக்கு வழிபாட்டில் பங்கேற்று அன்னை மகாலட்சுமியின் அருள் பெற்றிட வேண்டுமாய் அழைக்கின்றோம்.
///
வரலட்சுமி விரதம் என அழைக்கப்படும் இவ் விரதத்தை விவாகமாகி சுமங்கலியாக வாழும் சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் மகாவிஷ்ணுவின் தேவியான இலட்சுமி தேவியைக் குறித்துச் அனுஷ்டிக்கும் மிகச் சிறப்பான விரதமாகும்.
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
சகல சௌபாக்கியங்களையும் தரும் லக்ஷ்மியை (அஷ்டலக்ஷ்மியை) வணங்குவதால் வரலக்ஷ்மி விரதம் (வரம் தரும் இலக்ஷ்மி விரதம்) என்றழைக்கப்பெறுகின்றது. மிகவும் பக்தி சிரத்தையோடும், மடியோடும் (ப்ரம்மசர்யம், விரதம், சைவ சாத்வீக உணவு, அஹிம்ஸை, சுத்தம், அழகு, இனிமை, ஒரு முகப்பட்ட மனது எல்லாம் கலந்தது) இந் நாளில் நோன்பிருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெற்று சுமங்கலியாக வாழலாம் என்பது ஐதீகம். இவ் விரதத்தை நியம விதிப்படி வீட்டினில் அனுஷ்டிப்பதனால் இலக்குமிதேவி வீட்டினுள் வாசஞ்செய்வாள். இயலாதவர்கள் ஆலயங்களிலும் இவ் விரதத்தை அனுஷ்டிக்கலாம்.
இவ் வரலட்சுமி விரதம், பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயம் உள்ளிட்ட எல்லா அம்பிகை ஆலயங்களிலும், இலக்குமி தேவியை பரிவார தெய்வங்களாக கொண்ட மற்றைய ஆலயங்களிலும் வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அனேகமாக எல்லோரும் ஆலயங்களில் இவ் விரதத்தை அனுஷ்டிக்கின்றனர். அங்கே குத்துவிளக்கேற்றி இலக்குமியை ஆவகணம் செய்து பூஜித்து வழிபட்ட பின்னர் அதனை அணையாது வீட்டிற்கு எடுத்துச் சென்று சுவாமி அறையில் வைத்து வழிபடடுகின்றனர். (இலக்குமி தேவியை ஆலயத்தில் இருந்து வீட்டிற்கு அழைத்து வருவதாக அமைகின்றது.)
உள்ளத் தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால்; அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதனால், இல்லத்தில் செல்வம் கொழித்துக் களித்தோங்கும். கணவன் நீண்ட ஆயுழுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர். அத்துடன் பிள்ளைப் பேறு இல்லாதவர்கள் "பாக்கிய இலட்சுமியின்" அருளினால் மக்கள்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலிப் பெண்கள் (குடும்பப் பெண்கள்) எல்லோரும் விரும்பிப் அனுஷ்டிக்கின்றனர். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் செல்லவச் சிறப்போடு வாழும் சிறந்த கணவன் கிடைக்கப் பெற்று சிறப்பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர் என ஆகமங்கள் கூறுகின்றன.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். இலட்சுமிதேவி எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவளும் என்றும், பொறுமை மிக்கவள் என்றும். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள். கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே. வரலட்சுமி விரதம் இருந்து அவளைப் பூஜித்தால் எல்லா எல்லாப் பலன்களும் கிடைக்கும் என ஆகமங்கள் கூறுகின்றன.
விரத அனுஷ்டிக்கும் முறை: இந்த விரதம் அனுட்டிப்பதற்கு வீடு அல்லது கோயில்களில் தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு மண்டபம் எழுப்ப வேண்டும். அதில் சந்தனத்தால் செய்யப்பட்ட வரலட்சுமியின் முகத்தை வைக்க வேண்டும். வசதி மிக்கவர்கள் வெள்ளி சிலை வைக்கலாம். சிலையை தாழம்பூவால் அலங்கரித்து அதை ஒரு பலகையில் வைக்க வேண்டும். சிலை முன் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும். அரிசியின் மீது தேங்காய், மாவிலை, எலுமிச்சை, பொன், பழங்கள் ஆகியவற்றை வைத்து சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவிக்க வேண்டும். ஒரு கும்பத்தை எடுத்து அதில் புனித நீர் நிறைத்து, சந்தனம் குங்குமம் வைத்து, மாவிலையுடன் தேங்காய் வைத்து அரிசியின் நடுவில் வைக்க வேண்டும்.பின் ஐந்து வகையான ஆரத்தி தட்டுகளால் பூஜை செய்ய வேண்டும்.
அஷ்டலட்சுமிகளுக்கும் விருப்பமான அருகம்புல்லை சிலையின் மீது தூவி பூஜை செய்வது நல்லது. பூஜையின் போதுஅஷ்டலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரம் ஆகியவற்றை படிக்கலாம். வீட்டிற்கு வந்திருக்கும் பெண்களுக்கு தேங்காய், மஞ்சள்கயிறு, குங்குமம் கொடுக்க வேண்டும்.நைவேத்யமாக கொழுக்கட்டை படைக்கலாம். பின் கலசத்தை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும். இதனால் அன்னபூரணியின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சந்தனத்தில் செய்யப்பட்ட லட்சுமி வடிவங்களை மறுநாள் நீர்நிலையில் கரைத்துவிட வேண்டும்.இந்த விரதம் இருப்பதால் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். செல்வ வளம் சேரும். மங்கள வாழ்க்கை அமையும். கன்னிப் பெண்களுக்கு திருமணம் நிச்சயமாகும்.
சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தின்போது தாலிக் கயிற்றை வைத்து பூஜை செய்து, அதனை அணிந்து கொள்வார்கள். இதனால் அவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள். இந்த வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மங்கள வாழ்க்கை அமையும். மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நீடிக்கும். குடும்பத்திற்கு எட்டுவித ஐஸ்வரியங்கள் உண்டாகும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும்.
தனியாக வீட்டில் விரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் அயலில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் வரலக்ஷ்மி பூசைககளில் கலந்தும் விரதம் அனுஷ்ட்டிக்கலாம். பெரும் பாலான இந்தியநாட்டவர்கள் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுகின்றனர். ஆனால் இலங்கையில் அனேகமானோர் அம்பிகை ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் விசேஷச பூசைகளில் பங்குபற்றி தம் விரதத்தை நிறைவேற்றுகின்றனர். உள்ளத்தூய்மையுடனும் உடல் தூய்மையுடனும் ஆசாரசீலர்களாக அஷ்ட இலக்குமியாக விளங்கும் அம்பிகையை வழிபட்டால் அம்பிகையின் அருள் கிடைத்து மகிழ்ச்சியான வாழ்க்கை அமைந்துவிடும்.
உங்கள் இல்லத்துக்கு மகாலட்சுமி குடி கொள்ள வேண்டுமா? முதலில் உள்ளத்தையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருங்கள்.
மனிதவாழ்க்கையில் தெய்வீகமும், ஆசார, அனுஷ்டானமும் சேர்ந்திருப்பது உத்தமம். ஆசார, அனுஷ்டானங்கள் முறையாக இருந்தாலே, அங்கு தெய்வீகமும் ஏற்பட்டு விடும். முன்னோரது ஆன்மிக வாழ்க்கை, ஆசார, அனுஷ்டானங்களுடன் கூடியது. காலையில் பல் தேய்த்து, குளித்து, நெற்றியில் திலகம் இட்டு தெய்வ வழிபாடு செய்த பிறகே உணவு எடுத்துக் கொள்வர்.
விவசாயம் மற்றும் வெளி வேலைகள் சம்பந்தமாக வெளியே போகிறவர்கள் கூட எவ்வளவு காலதாமதமாக வீடு திரும்பினாலும், குளித்து, நெற்றிக்கு விபூதி, பொட்டு வைத்துக் கொண்டு, சுவாமி படத்துக்கு பூ போட்டு விட்டுத்தான் உணவு எடுத்துக் கொள்வர். இதுவே, ஆசார, அனுஷ்டானமுள்ள குடும்பம்.
அப்படிப்பட்டவர்களையும், அந்த வீடுகளையும் பார்க்கும் போதே ஒரு தெய்வீக களை இருக்கும். பெண்கள் எழுந்ததும், குளியல், வாசல் தெளித்து கோலம் போடுதல், பூஜைக்கு வேண்டியவற்றை தயார் செய்தல் என, இவைகளையும் கவனித்த படியே சமையலையும் செய்து முடிப்பர். இவர்களும் இந்த ஆசார, அனுஷ்டான விஷயத்தில் சிரத்தையோடு இருப்பர்.
விடியற்காலையில் மகாலட்சுமி வந்து கொண்டே இருப்பாளாம். எந்த வீட்டு வாசலில் சாணம் தெளித்து, கோலம் போட்டு, தீபம் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதோ, அந்த வீட்டுக்குள் வந்து விடுவாள் என்பது ஐதீகம். இதுபோன்ற வீடுகளில் சுபிட்சத்துக்கும், ஷேமத்துக்கும் குறைவே இராது. தூய்மையில்லாத வீடுகளிலும், மனத்தூய்மையில்லாதவர்கள் வாழும் இடங்களிலும் இலட்சுமி தேவி வாசஞ்செய்ய மாட்டாள். பதிலாக மூதேவிதான் குடிகொள்வாள் என்பது ஆன்றோர் வாக்கு.
இப்போது எல்லாமே இயந்திர, நாகரிக வாழ்க்கையாகி விட்டது. காலையில் படுக்கையில் இருந்தபடியே காபி, பிறகு டிபன், பிறகு, எங்கேயாவது ஓடுவது, உழைப்பது; சினிமா, டிராமா, பொழுதுபோக்கு, இரவு வீடு திரும்பியதும் சாப்பாடு, தூக்கம். ஆண்கள் தான் இப்படியென்றால், பெண்கள் கூட ஆசார, அனுஷ்டானத்தில் சிரத்தை காட்டுவதில்லை. ஒரு இடத்தில் குப்பை இருந்தால், அதே இடத்தில் மேலும், மேலும் குப்பையைக் கொண்டு வந்து கொட்டுவர். அந்த இடம் குப்பை மேடாகி விடும். ஆசார, அனுஷ்டானக் குறைவு குடும்பத்தில் யாரிடமாவது இருந்தாலும் போதும், மற்றவர்களுக்கு அதில் சிரத்தை இல்லாமல் போய் விடும்.
"தாத்தா குளிக்காமலே சாப்பிடுகிறாரே! நான் மட்டும் ஏன் குளிக்க வேண்டும்?' என்று பேரன் கேட்டால், ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அப்பாவோ, தாத்தாவோ, பூஜை செய்தால், பேரனும் பக்கத்தில் உட்கார்ந்து, மந்திரம் சொல்வான், மணியடிப்பான், ஊதுவத்தி ஏற்றி வைப்பான். இப்படி, புத்தி அவனுக்கும் செல்லும். நாம் தான் வழிகாட்ட வேண்டும். ஆசார, அனுஷ்டானத்தோடு இருப்பது கவுரவக் குறைச்சல் என்று எண்ணினால், அந்த வீட்டில் மகாலட்சுமி தங்க மாட்டாள்; அவளுடைய "அக்கா' (மூதேவி)தான் சந்தோஷமாக வாசம் செய்வாள்!
வரலட்சுமி விரதம் பற்றிய புராணக் கதைகளை காண்போம்:
1. பத்ரச்ரவா என்னும் சவுராட்டிர மன்னனின் மனைவி கசந்திரிகா. மன்னன் எப்பொழுதும் மங்கலச் சொற்களையே பேசுபவன், கேட்பவன். குணம், கல்வி, தர்மம், கற்பு ஆகிய நற்பண்புகள் கொண்ட கசந்திரிகா நிலவைப் பழிக்கும் அழகு கொண்டவள்; சினத்தை ஒழித்து எப்பொழுதும் குளிர்ந்த சாந்தமான முகத்தை உடையவள். இவர்கட்கு 7 ஆண் மகவுகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. பெண் குழந்தையை சியாமா எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.
கசந்திரிகாவின் நற்குணங்களும், நற்செயல்களும் கண்டு மகாலட்சுமி அவளிடம் கருணை கொண்டாள். ஒரு வெள்ளிக்கிழமை துவாதசி திதியன்று மகாலட்சுமி ஒரு பழுத்த சுமங்கிலி உருவெடுத்து அந்தப்புறத்தில் நுழைந்தாள். வயிறார உண்டு வாய்நிறையத் தாம்பூலம் தரித்து அமர்ந்திருந்த அரசி, “தாயே! சுமங்கிலியே! தாங்கள் யார்? எதற்க்காக வந்தீர்கள்?” என் வினவினாள். அவளை நோக்கி மகாலட்சுமி,”கசந்திரிகா! நீ நல்லவள். உத்தமி. ஆனால், லட்சுமி தேவியின் அவதார தினமான இன்று வயிறார உண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டுள்ளாயே! இது நியாயமா?” எனக் கேட்டாள். செய்த தவறைச் சுட்டிக் காட்டியவுடன் கோபமே கொள்ளாத கசந்திரிகாவுக்கு சினம் கொப்பளித்து வந்தது. உடனே மகாலட்சுமியின் கன்னத்தில் அறைந்து, ”இங்கிருந்து போய்விடு” என்றாள். கண்கள் கலங்கி கண்ணீர் தளும்பிய முகத்துடன் வெளியேறிய மகாலட்சுமியைக் குழந்தை சியாமா கண்டு, ”அம்மா! ஏன் அழுகிறீர்கள்? என்ன வேண்டும்?” என்றாள்.
கண்களைத் துடைத்துக்கொண்டு மகாலட்சுமி, ”பெண்ணே! உன் தாயாருக்கு நல்லது சொன்னேன். அதற்க்காக என்னை அடித்து அவமானப்படுத்தித் துரத்தி விட்டாள். அதனால்தான் திரும்பிப் போகிறேன்” என்றாள். உடனே சியாமா மகாலட்சுமியை உபசரித்து, அமரவைத்து, “அந்த நல்லதை எனக்குச் சொல்லிக்கொடுங்களேன்” என்றாள். மனம் குளிர்ந்த மகாலட்சுமி, சியாமாவுக்கு வரலட்சுமி விரதம் கொண்டாடவேண்டிய வழிமுறைகளை உபதேசித்தாள். அன்று முதல் சியாமா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தவறாது வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்தாள். லட்சுமிதேவியை அவமதித்ததால் பத்ரச்ரவா மன்னனிடமிருந்த செல்வங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கின. மனம் நொந்த மன்னன் இராச்சியம் கையைவிட்டுப் போவதற்குள் மகளுக்குத் திருமணம் செய்ய எண்ணி மாலாதரன் என்ற மன்னனுக்கு மணமுடித்துக் கொடுத்தான். புகுந்த வீடு சென்றபின்னும் சியாமா விரதத்தைத் தொடர்ந்தாள். மாலாதரனுக்கு செல்வம் குவிந்தது. பத்ரச்ரவாவும் கசந்திரிகாவும் பகைவர்களால் விரட்டப்பட்டு காட்டுக்கு ஓடி உணவுக்கு வழியற்று ஊர் ஊராகத் திரிந்தனர்.
செய்தியறிந்த சியாமா வருந்தி, அவர்களைத் தன் நாட்டிலேயே தங்கவைத்துத் தன் சேவகன் மூலம் உணவளித்துக் காத்து வந்தாள். நாட்கள் கழிந்தன. ஒருநாள், நிறையத் தங்க நாணயங்களை ஒரு பாத்திரத்தில் போட்டு மூடிக் கொடுத்து, “இதை வைத்துக்கொண்டு எங்காவதுபோய்ப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்றாள். சியாமா அவ்விடத்தை விட்டு அகன்றதும், மூடிய பாத்திரத்தைத் திறந்து பார்த்த பத்ரச்ரவா, பொன்னுக்குப் பதில் கரித்துண்டுகளைக் கண்டு அதிர்ந்து போனான். இதை சியாமாவுக்குத் தெரியப்படுத்தினர். உடனே, சியாமாவுக்குத் தன் தாய் மகாலட்சுமியை அவமதித்தது நினைவுக்கு வந்தது. தன் அம்மாவை அழைத்து நடந்தவைகளை நினைவுபடுத்தி, அவள் செய்த தவறைச் சுட்டிக்காட்டி, விரதமிருக்கும் வழிமுறைகளையும் சொல்லிக் கொடுத்தாள்.
அவ்வாறே கசந்திரிகா வரலட்சுமி விரதமிருந்துவர நாளுக்கு நாள் நல்லவைகள் நடந்தன. பத்ரச்ரவாவுக்கும் மனதில் தைரிய லட்சுமி குடியேரியதால், தன் ஆதரவாளர்களைத் திரட்டிப் படையெடுத்து வந்து தன் நாட்டை மீட்டான். பெற்றோர் நல்ல நிலையை அடைந்ததைக் கண்ட சியாமா மகிழ்ந்தாள்.
2. சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள். ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்துகொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும்படி சாபம் கொடுத்தாள்.
சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியில் காலில் விழுந்தாள். வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப்பெற்றாள். புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும். நாளை பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம்.மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகத நாட்டில் வசித்த சாருமதி என்ற பெண் தனது கணவன், மாமனார், மாமியார் மற்றும் உறவினர்களை கடவுளின் வடிவமாக கருதி அவர்களுக்கு பணிவிடை செய்ததால் வரலட்சுமி விரதம் இருந்ததின் பலன் முழுவதும் கிடைத்து கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்தாள்.
2. பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத் தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.
தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அன்று மாலை சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந் ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோமாக.
செல்வ வளம் தரும் வரலட்சுமி விரதம்!
செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும். இந்த ஆண்டு வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் வருகிறது. வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.
விரதம் அனுஷ்டிக்கும் முறை
பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.
கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.
விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.
சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.
அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
புராணக் கதை
பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.
அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.
தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.
அனைத்து வளங்களையும் வாரி வழங்கும் வரலட்சுமியை வழிபட்டு நலம் பெறுவோம்.
வரலட்சுமி விரதம் பிறந்த கதை
சுமங்கலி பெண்களால் அனுடிக்கப்டும் விரதமே வரலட்சுமி விரதம் எனப்படும் . வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை அனுசரிக்கவேண்டிய விரதம் இது. பல பெண்கள் இந்த விரதத்தை பய பக்தியுடன் அனுடித்தாலும் அந்த விரதத்தின் உண்மையான விளக்கம் தெரியாது இங்கே இந்த விரதம் பிறந்த கதையை விரிவாக பார்க்கலாம்.(Varalaxmi viratha story)
வரலட்சுமி விரதம் பிறந்த கதை
வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 4-ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது. வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண மனிதர்கள்போல் கருதாமல், இறைவனே அவர்களது வடிவில் எழுந்தருளி இருப்பதாக கருதி, அவர்களுக்கு பணிவிடை செய்து வந்தாள். அவளது மனப்பான்மை மகாலட்சுமிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. மகாலட்சுமி, சாருமதியின் கனவில் வரலட்சுமியாக தோன்றி அருள் புரிந்தாள்.
என்னை துதித்து வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களது இல்லத்தில் நான் வசிப்பேன் என்று அப்போது சாருமதிக்கு அருளிய வரலட்சுமி, அந்த விரத முறையை கூறி மற்றவர்களுக்கு எடுத்துரைக்குமாறும் கேட்டுக் கொண்டாள். அதை அப்படியேச் செய்தாள் சாருமதி. இப்படித்தான் வரலட்சுமி விரதம் பிறந்தது.
இதன் பிரகாரம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை ஒவ்வொரு ஆண்டும் விரதம் கொண்டாடப்படும
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக