செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

சிங்கப்பூர் மாரியம்மன்... கோயில் பற்றி ...


 சிங்கப்பூர் மாரியம்மன்...  கோயில் பற்றி ...

☄🚢சிங்கப்பூரில் இன்று நடுநாயகமாக நிற்கும் கோயில்களையும், அரசாங்கக் கட்டிடங்களையும் சாலைகளையும் அமைத்த பெருமைக்குரியவர்கள் கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட கைதிகள்தான். அவர்கள்தான் இங்குள்ள கலைநயமிக்க ஆலயங்களை முதலில் உருவாக்கியவர்கள். 1827-ல் முதன்முதலில் கட்டப்பட்ட  சவுத் பிரிட்ச் சாலை மகாமாரியம்மன் கோயிலைத் தொடர்ந்து இன்று சிங்கப்பூரில் மொத்தம் 32 இந்துக் கோயில்கள் உள்ளன.

☄🚀மகாமாரியம்மன் ( கிளிங் ஸ்டிரிட்) கோயில் சிங்கப்பூரில் சைனா டவுன் என்னும் வட்டாரத்தில், சவுத் பிரிட்ச் சாலை என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். இதுவே சிங்கப்பூரின் மிகப் பழமையான கோயில். மகா மாரியம்மன் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், கடலூர் போன்ற இடங்களில் இருந்து சிங்கப்பூர் தமிழ் மக்களின் உறுதுணையோடு 1827-ல் அமைக்கப்பட்டது.

☄🌍மாரியம்மனை முதற் தெய்வமாகவும், மூலஸ்தான தெய்வமாகவும் அமைத்துள்ளார்கள்.


☄🚀இக்கோயில் உருவாகவும், தோற்றம் பெற்று அமைவதற்கும் காரண கர்த்தாவாக இருந்தவர் நாராயணப்பிள்ளை என்பவர் ஆவார். கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்கக் கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில் முன் வந்தது.1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில் அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது. 1827-ல் கோவிலின் அடித்தளப்பணி ஆரம்பிக்கப்பட்டது.

☄🚀நாராயணப் பிள்ளையை இந்திய சமூகத் தலைவராகவும் ஆங்கில அரசு அங்கீகாரம்கொடுத்துள்ளது. நாட்டு மக்கள் நன்றாக இருக்கவும், நல்ல சுபிட்ச வாழ்க்கை அமையவும் ஆண்டவன்அருள் வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு வழிபாட்டுத் தலத்தினை அமைக்க எண்ணினார். வருங்காலத்தில்
சிங்கப்பூர் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கப் போகிறது என்ற யூகம் அவர் மனதில் உதித்திருக்கிறது.

☄🚀தமிழ் நாட்டின் கடலூரை சேர்ந்த பலரும் அவரிடம் வேலைப் பார்த்தனர். அப்படி வந்தவர்களில் பொய்கையூரை
சேர்ந்த பண்டாரமும் ஒருவர். தமது ஊர் முத்து மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்த
அவருக்கும் உறவினருக்கும் இடையில் எழுந்த பிரச்சனையால், கோயிலில் இருந்த அம்மன் சிலையை  தன்னோடு
எடுத்துக் கொண்டு பினாங் வந்திறங்கினார். சிங்கப்பூர்
வந்த அவர் அம்மன் சிலைக்கு சிறிய கோயில் ஒன்றை கட்ட நாராயணப் பிள்ளையின் உதவியை நாடினார்.
 
 
☄🌍அப்போது சிங்கப்பூரில்  இந்துக்களின் எண்ணிக்கை பெருகவே கோயிலுக்கான தேவை ஏற்பட்டது.
கோவில் அமைப்பதற்கான நிலத்தை வழங்க கிழக்கிந்திய கம்பெனி முதன்முதலாக 1822-ல் ஆண்டில்
முன் வந்தது. வழிப்பாட்டுத் தலத்திற்கு ஆங்கிலேயரால் சுட்டிக்காட்டப்பட்ட இடம் தெலுக்காயர்
தெலுக் ஆயர் சாலை (Telok Ayer Street) ஆனால், அவ்விடம் இந்து சமய ஆலய ஆகமங்களுக்கும்
சடங்குகளுக்கும் உரிய இடமாக அமையவில்லை. தினம் நடக்கும் அபிஷேகத்திற்கு நல்ல நீர்
கிடைக்காத இடமாதலால் அந்த இடம் தவிர்க்கப்பட்டது.

☄🚀அப்போது நகரத் திட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் நடந்து கொண்டிருந்தன. 1819 - 1823 காலக்
கட்டத்தில் சிங்கப்பூரின் பிரிட்டிஷாரின் பிரதிநிதியாக இருந்தவர் மேஜர். பார்குவார். கோயில் கட்ட
ஸ்டாம் போர்ட் கால்வாய் (Stamford Canel) அமைந்துள்ள பகுதியில் இந்துக்கோயில் கட்டுவதற்கு
நாராயணப்பிள்ளைக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்டது. அந்த இடமும் வழிபாட்டுக்கும், ஆலயத்திற்கும்
உகந்த இடமாக அமையவில்லை. இறுதியாக 1823-ல் இப்போதுள்ள மாரியம்மன் கோவில்
அமைந்துள்ள இடமான சவுத் பிரிட்ஜ் சாலையில் கோவில் கட்ட அனுமதி தரப்பட்டது.தமிழ் நாட்டின் கடலூரைச் சேர்ந்த ஒருவர் தம்முடன் எடுத்து வந்த *அம்மன் சிலையை மரப்பலகை,* கூரையுடன் கூடிய சிறு குடில் அமைத்து சின்ன அம்மன் என்ற பெயரில் பிரஷ்டை செய்து வழிபாடு தொடங்கப்பட்டது.
அந்த அம்மனே இன்று மகா மாரியம்மன் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இருக்கிறது.

☄🚀16 ஆண்டுகளுக்குப் பின் சிறு அளவிலிருந்த கோயில் 1862-ல் முழுமையான செங்கல் கட்டிடமாக மாற்றப்பட்டது. தற்போதுள்ள மூலவரான பெரிய அம்மன் எப்போது கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது என்பதற்கான ஆதாரம் இல்லை. அதன்பின் சுமார் 100 ஆண்டுகள் மாற்றமின்றி இருந்த ஆலயம்,1962–ல் இப்போதுள்ள நிலையில் மாற்றம் கண்டது. புதுப்பொலிவுடன் நவீன வசதிகளுடன் திருமண மண்டபம், அரங்கம் போன்றவையும் கட்டப்பட்டன. சிங்கப்பூர் அறக்கட்டளை வாரியத்தினால் இவ்வாலயம் தற்போது நிர்வகிக்கப்படுகிறது

☄🚀ஆரம்ப காலத்தில் அமைக்கப்பட்ட நான்கு நிலைக்கொண்ட
கோபுரமும்,அதனை ஒட்டி அமைக்கப்பட்ட வாயில் நிலையையும் மாறாமல் இருக்க, காலத்திற்கு
ஏற்ற உள்ளமைப்பு  மாற்றம் பெற்று அன்றும் இன்றும் தமிழர் சமுதாயத்திற்கு ஒரு முக்கிய
வழிபாட்டு தலமாகவும், சமூக சேவை நிலையமாகவும் இருந்து வருகிறது.

 ☄🌍ஜூன் 1936-ல் தான் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
அதன் பின்னர் 1949, 1977, 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்குகள் நடைபெற்றன. பிரித்தானிய ஆட்சிக் காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இங்கு வேலை தேடி வரும் தமிழர்க்கு உதவி நல்கிடும் அமைப்பாக இக்கோயில் இருந்துள்ளது. ஒரு நிலையான தொழில், வேலை கிடைக்கும் வரை கோவிலில் தங்கியிருக்க அனுமதி அளித்துள்ளார்கள்.

☄🌍இந்திய திருமணங்களைச் சட்டப்படி பதிவுசெய்து செய்யும் பதிவகமாகவும் மகா மாரியம்மன் ஆலயம் செயல்பட்டு வருகிறது. அதோடு மட்டுமின்றி திருமணச் சடங்கும் முறைப்படி நடைபெறுகிறது. தற்போது மருத்துவ முகாம், இந்து சமய நிகழ்ச்சிகள், சமய வகுப்புகள் ஆகியவற்றை நடத்துவதோடு பள்ளி குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஆதரவு நல்கி வருகிறது.

   ☄🚀இக்கோயில்  சீனர்கள் அதிகம் வாழும் பகுதியில் அமைந்திருக்கும் காரணத்தால் சுற்றுபுறத்திலிருக்கும் சீனர்களும் மாரியம்மன் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும் நடக்கும் தீமிதிப்பு விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள். கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கினார்கள். தஞ்சம் என்று வந்தோருக்கு,அந்தக்
காலத்தில் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வழங்கியோரில் பெரும்பாலோர் சீனர்களே என்று
தெரிகிறது.

☄🚀ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள்.
ஆயிரக்கணக்கான எலுமிச்சை பழங்களையும் இலவசமாக வழங்குகிறார்கள். கட்டுமான பணிகளுக்குநிதியுதவி வழங்கியவர்களில் பலர் சீனர்கள்பொதுவாக இந்து சமயத்திற்கும் சீன மதத்திற்கும் அதிக
வேறுபாடுகள் இல்லை. நமது இந்து சமயத்திலிருக்கும் விநாயகர், அம்மன், சரஸ்வதி, அனுமான்
போன்ற தெய்வங்கள் வேறு பெயருடன், சற்று வித்தியசமான அமைப்புடன் இருக்கும்.


☄🌍தங்களின் கருணைக் கடவுளுக்குச் சமமாக (குவான் இன்) மதித்தனர். ஆக, அம்பாள் அவர்களுடன்
ஐக்கியமாகிவிட்டாள். அவளை முழுமையாக நம்பியவர்களின் இடர்களை, துயர்களை, நோயினைத்
தீர்த்து வைத்திருக்கிறாள். இன்றும் பல சீனர்கள் இவ்வாலயம் வந்து பிராத்தனையும், வழிபாடும்
செய்வதைக் காணலாம். .ஆண்டுதோறும் நடக்கும் தீமிதி விழாவில் சீனர்கள் பெரும்வாரியாக பங்கு பெறுகிறார்கள்.

   ☄🚀டோபி காட் அருகே ஓடிய ஓடைக்கு அருகில் கரகம் கட்டி மாரியம்மன்
கோயிலுக்கு எடுத்துச் செல்லும் வழக்கமிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால் 1900 களின் தொடக்கத்தில்
மாரியம்மன் கோயிலும்,பெருமாள் கோயிலும் இந்து அறக்கட்டளை வாரியத்தின் கீழ் வந்தததை
தொடர்ந்து கரகத்தை பெருமாள் கோயிலிருந்து கட்டி எடுத்து வரும் வழக்கம் தொடங்கியது.
வழக்கமாக மாலையில் நடந்து வந்த தீமிதி 1999-ஆம் ஆண்டு முதல் அதிகாலையில் நடத்தப்படுகிறது.
அதன் மூலம் நீண்ட காலம் தடைப்பட்டிருந்த திரௌபதையின் இரத ஊர்வலத்தைத் தீமிதி
தினத்தன்று மீண்டும் நடத்த வழி ஏற்பட்டது.
 நவராத்திரி, 1008 சங்காபிஷேகம், மகா சத சண்டி யாகம், நவசக்தி அர்ச்சனை, திரௌபதை
உற்சவம் ஆகியவிழாக்கள் சிறப்பாக நடந்து வருகின்றன.

☄🚀(எல்லா) வெளி நாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்து ஆலயம் எப்படி இருக்கும்
என விளக்கும் ஆலயமாகவும் இப்போது திகழ்கிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக