நம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா?
365 லிங்கங்கள் நிறைந்த இந்தியாவின் மிகப்பெரிய தியாகராஜர் கோயில்தான் நம் நாட்டிலுள்ள கோயில்களில் மிகப் பெரிய கோயிலாகும்!
திருவாரூர் தியாகராஜர் கோயில் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய கோயில்களுள் ஒன்று. திருவாரூரில் இந்த கோவில் எப்போது தோன்றியது என்பதைக் கூற இயலாது என்று திருநாவுக்கரசர் வியந்து இத்தலத்தின் தொண்மை மற்றும் அதன் சிறப்பைப் பற்றி தனது பதிகத்தில் பாடியுள்ளார்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
தியாகராஜர் என்றால் கடவுள்களுக்கெல்லாம் ராஜா என்று பொருள். தியாகராஜர் கோயிலும் கோயில்களில் எல்லாம் முதன்மையானதாக விளங்குகிறது.
9 ராஜ கோபுரங்கள்,
80 விமானங்கள்,
12 பெரிய மதில்கள்,
13 மிகப்பெரிய மண்டபங்கள்,
15 தீர்த்தக்கிணறுகள்,
3 நந்தவனங்கள்,
3 பெரிய பிரகாரங்கள்,
365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
86 விநாயகர் சிலைகள்,
24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என பிரமாண்டமாக விளங்குகிறது....!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக